Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கனடா: தேடப்படும் போர் குற்றவாளிகள். இரு சிங்களவர்கள்.

Featured Replies

கனடா: தேடப்படும் இரு சிங்கள குற்றவாளிகள்

Wanted by the CBSA

These individuals are the subject of an active Canada-wide warrant for removal because they are inadmissible to Canada. It has been determined that they violated human or international rights under the Crimes Against Humanity and War Crimes Act or under international law.

Take no action to apprehend these persons yourself. Report any information to the Border Watch Line at 1 888 502-9060

http://www.cbsa-asfc.gc.ca/wc-cg/menu-eng.html

கனேடிய அரசால் இன்று வெளியிடப்பட்ட முப்பது பேர் கொண்ட பட்டியலில் இருவர் சிங்களவர்கள். இவர்கள் சர்வதேச குற்றங்களை புரிந்தவர்கள் என்றும் இவர்களை பற்றி அறிந்தவர்கள் அரசுக்கு அறிவிக்கவும் எனவும் வேண்ட்டப்படுகின்றனர்.

1. Name: FERNANDO, Jerome Alias:PUNCHA, Jerome (1963-09-30)

Gender: Male

Date of Birth: 1963-09-30

Place of Birth: Sri Lanka

Last Known Address: Toronto, Ontario

Identifying Features: Mark Mouth Mark Eyes Scar Cheek

புகைப்படம் : http://www.cbsa-asfc.gc.ca/wc-cg/images/c004-hr.jpg

2. Name: KULATUNGA, Illandaridevage

Alias: KULATUNGE, Asoka (1968-03-03) KULATUNGA, Kapila (1968-03-03) ASOKA, Kulatunge (1968-03-03)

Gender: Male

Date of Birth: 1968-03-03

Place of Birth: Sri Lanka

Last Known Address: Toronto, Ontario

Identifying Features: No information available

புகைப்படம் : http://www.cbsa-asfc.gc.ca/wc-cg/images/c022-hr.jpg

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல வேளை!

தமிழன் பெயர்கள் இதில் இல்லை!

மானம் காத்த கனடிய சொந்தங்களுக்கு நன்றிகள்! :wub:

Illandaridevage Kulatunga:

A sergeant in the Sri Lankan Army in the early 1990s. "Kapila" arrested innocent civilians, stood by while his comrades tortured and killed them, and helped bury the bodies to hide the evidence. He later travelled to Victoria, B.C., as a boxer on Sri Lanka's Commonwealth Games team. After losing his first fight, he fled to Toronto and filed a refugee claim. He has not been seen since 1997.

Source: http://www.laborlawtalk.com/showthread.php?t=64134&page=1

Jerome Fernando

There is a Jerome Fernando known to be a preacher but there is also a famous cricket player with the same name.

Whatever this Jerome Fernando’s occupation was he was last known to be hiding out in Toronto and is wanted for war crimes in Sri Lanka.

Source: http://m.torontosun.com/2011/07/21/boxer-horse-breeder-on-list-of-suspects?noimage

  • தொடங்கியவர்

நன்றி புதல்வன்.

ஒருவர், முதலாமவர், ஒரு போர்குற்றவாளி. இவரை கண்டிபிடித்து கைது செய்தால் அதன்மூலம் போர்குற்றங்களை வெளியே கொண்டுவர ஒரு வழக்கு தாக்கல் செய்யலாமா என ஆராயலாம்.

Illandaridevage Kulatunga:

A sergeant in the Sri Lankan Army in the early 1990s. "Kapila" arrested innocent civilians, stood by while his comrades tortured and killed them, and helped bury the bodies to hide the evidence. He later travelled to Victoria, B.C., as a boxer on Sri Lanka's Commonwealth Games team. After losing his first fight, he fled to Toronto and filed a refugee claim. He has not been seen since 1997.

Source: http://www.laborlawtalk.com/showthread.php?t=64134&page=1

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் குற்றவாளிகளான இலங்கையர் இருவர் உட்பட முப்பது பேர் கனடாவில் தலைமறைவு

[Friday, 2011-07-22 10:25:58]

யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் குற்றவாளிகளான இலங்கையர்கள் இருவர் உட்பட முப்பது பேர் கனடாவில் தலைமறைவாக வாழ்ந்து வருகின்றனா் என கனேடியப் பிரதமர் ஸ்டீபன் ஹர்பர் தெரிவித்துள்ளார்.

புஞ்சா என அழைக்கப்படும் ஜெரோம் பெனாண்டோ மற்றும் அசோகா குலத்துங்க இளந்தரிதேவகே ஆகிய இரண்டு இலங்கையர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.

கனேடிய எல்லைப் பாதுகாப்பு சேவை முகவர் இணையத்தில் சந்தேக நபர்கள் குறித்த பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை,சமூக பாதுகாப்பினை நிலை நிறுத்துவதற்கு பொதுமக்களின் உதவியை நாடுவதாக கனேடிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விக் டோவ்ஸ் தெரிவித்துள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=46920&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்குற்றவாளிகள் வெளியேற்றப்படுவர் - கனடா அறிவிப்பு

[ வெள்ளிக்கிழமை, 22 யூலை 2011, 09:59 GMT ] [ கனடா செய்தியாளர் ]

கனேடிய அரசாங்கமானது தனது நாட்டிற்குள் சட்ட ரீதியற்ற வகையில் உள்நுழைந்த யுத்தக் குற்றவாளிகள் எனச் சந்தேகிக்கப்படும் 30 பேரின் பெயர்களை வெளியிட்டுள்ளதுடன் அவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதில் தமக்கு உதவி செய்யுமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கனேடிய எல்லைப் பாதுகாப்பு சேவை முகவர் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள சந்தேக நபர்கள் குறித்த பெயர் பட்டியலில் புஞ்சா என அழைக்கப்படும் ஜெரோம் பெனாண்டோ மற்றும் அசோகா குலத்துங்க இளந்தரிதேவகே ஆகிய இரண்டு இலங்கையர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இச்சந்தேக நபர்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கான இணையத்தளமொன்றை கனேடிய அரசாங்கம் வியாழனன்று ஆரம்பித்து வைத்துள்ளது.

இவர்கள் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் இவ் இணையத்தளத்தின் ஊடாக செய்திகளை வழங்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்சந்தேக நபர்களின் பெயர்களையோ அல்லது ஒளிப்படங்களையோ CBC News செய்தி நிறுவனம் தற்போது வெளியிடவில்லை.

யுத்தத்துடன் தொடர்புடைய எவரேனும் கைதுசெய்யப்படும் பட்சத்தில் அவர்கள் உடனடியாக கனடாவை விட்டு நாடு வெளியேற்றப்படுவர் என இந்நாட்டின் குடிவரவு அமைச்சர் யசோன் கென்னி ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இந்நாட்டுக்குள் யுத்தக் குற்றவாளிகள் உள்நுழைவதைத் தடுப்பதற்கான இறுக்கமான பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் போலியான கடவுச்சீட்டுக்களைப் பயன்படுத்தி கனடாவில் குடியேறுபவர்களைக் குறிப்பாக அடையாளம் காண்பதென்பது மிகவும் கடினமான ஒரு பணியாகும எனவும் யசோன் கென்னி தெரிவித்துள்ளார்.

மனித உரிமை மீறல் மற்றும் அனைத்தலக சட்டங்களை மீறியோர் என அடையாளங் காணப்படும் கிட்டத்தட்ட 300 வரையிலானவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டிலும் கனடாவிற்குள் உள்நுழைவதற்கான அனுமதி மறுக்கப்படுவதாக கனேடிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் விக் ரோவ்ஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இணையத்தளம் மிகச் சிறப்பாகச் செயற்படும் பட்சத்தில் கனேடிய அரசாங்கம், வேறு சந்தேக நபர்களின் பெயர்களையும் வெளியிடலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.com/view.php?20110722104332

1. யாழ் இவர்களின் படங்களை கருதுகளதில் "PIN" பண்ண வேண்டும்.

2. இவர்களால் பட்திக்கப்பட்டோர் தனிபட்ட நட்ட ஈடு வழக்கை கனடாவில் தாக்கல் செய்தால் இவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பபடுவது தடுக்கபடும். இவர்கள் தேவையானவர்கள்.

  • தொடங்கியவர்

போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஒருவர் அல்பேர்ட்டாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிறிஸ்டோபல் கொன்சலாஸ் ராமிரீஸ் என்பவரே கைது செய்யப்பட்டதாக கனேடிய குடிவரவு அமைச்சர் ஜேசன் கென்னி தெரிவித்தார். போர்க் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 31 வெளிநாட்டுப் பிரஜைகள் தொடர்பான தகவல்கள் இணையத்தில் வெளியிடப்பட்டு 24 மணித்தியாலயத்தில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றவாளிகள் தொடர்பான தகவல்களுக்கு கனேடிய மக்கள் மதிப்பளித்து வருவதாக அமைச்சர் ஜேசன் கென்னி தெரிவித்தார். இந்தநிலையில் தலைமறைவாக வாழும் ஏனைய குற்றவாளிகளை கைது செய்வதற்கு மக்கள் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்தார்.

கொன்சலாஸ் ராமிரீஸ், ஹ_ண்டுராஸ் இராணுவத்தைச் சேர்ந்தவர் எனவும், போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 2006ம் ஆண்டில் கொன்சாலாஸ் கனடாவில் புகலிடம் கோரியிருந்தார், எனினும் அவரது புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் கைதுசெய்யப்பட்ட கொன்சலாஸ் ராமிரீஸ் விரைவில் அவர் நாடு கடத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு கனடாவில் இடமில்லை என அமைச்சர் ஜேசன் கென்னி சுட்டிக்காட்டினார்.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=8698

அட நாசமாக போக தென்னிலங்கை ஊடகக்ங்கள் ஏதோ தமிழர் மாதிரியல்லோ செய்தியினை சொன்னவங்கள்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

யுத்த குற்றவாளி இளந்தரி தேவஹே குலத்துங்க கனடாவில் இல்லை _

கனடாவில் தலைமறைவாகியுள்ள 30 யுத்த குற்றவாளிகளுள் பெயர் குறிப்பிடப்பட்ட இலங்கை குத்துச் சண்டை வீரர் கனாடாவில் இல்லை என கனேடிய எல்லை பாதுகாப்பு சேவை முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது.

கனடா விக்டோரியா பகுதியில் 1994ம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் குத்துச் சண்டை வீரர்களுக்கான போட்டியில் கலந்துகொள்ளச் சென்ற இளந்தரிதேவஹே குலத்துங்க அவரது முதல் போட்டியிலேயே தோல்வியுற்று தொடர் போட்டிகளில் பங்கு கொள்ளும் வாய்ப்பினை இழந்தார். இதனை அடுத்து அவர் கனடாவிலேயே தலைமறைவாகிவிட்டார்.

இதேவேளை இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தேடப்படும் குற்றவாளியாக கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் சபையினால் இவரது பெயர் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இளந்தரிதேவஹே குலத்துங்க கனடாவில் இல்லை என கனேடிய எல்லை பாதுகாப்பு சேவை முகவர் அமைப்பின் இணையத்தளத்தில் நேற்றைய தினம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 21ம் திகதி 30 யுத்த குற்றவாளிகள் கனடாவில் மறைந்திருப்பதாக கனேடிய எல்லை பாதுகாப்பு சேவை முகவர் அமைப்பு அறிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=33035

  • கருத்துக்கள உறவுகள்

இனைப்பிற்கு நன்றிகள், இவர்களில் பலர் பிடிபட்டு அவர்கள் மூலம் போர் குற்றங்கள் வெளி கொணரப்பட்டால் நன்றக இருக்கும்,

  • தொடங்கியவர்

தலைமறைவான இலங்கை யுத்தக் குற்றவாளி அமெரிக்காவில் சிறைப்பிடிப்பு!

சிறிலங்காவின் குத்துச்சண்டை வீரரும் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கனேடிய குடிவரவு அதிகார சபையினால் யுத்தக் குற்றவாளியாகத் தேடப்பட்டு வந்தவருமான இளந்தரி தேவஹே குலதுங்க அமெரிக்க மியாமி சிறைச்சாலையில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கனடாவில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ள வந்த வேளையில் கனடாவில் தலைமறைவான இளந்தரிதேவஹே குலதுங்க கனடா குடிவரவு அதிகாரிகளால் நீண்டகாலமாகத் தேடப்பட்டு வந்தார். எனினும் இவர் கனடாவில் இவரைக் கண்டுபிடிக்க முடியாததால் இவர் அமெரிக்காவுக்குத் தப்பிப் சென்றிருக்கலாம் என கனடா அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்ததுடன் அமெரிக்காவிற்கும் அறிவுறுத்தியிருந்தனர்.

இந்நிலையில் இக் குற்றவாளி ஏற்கனவே அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அவரை சிறிலங்காவிற்கு திருப்பி அனுப்ப அல்லது அவரை கனடாவிடம் ஒப்படைக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={7FD92A00-3C27-4D2C-BDA1-010165D2796D}

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.