Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அம்மா ஊரில பிச்சை மகன் மதுரையில அன்னதானம் செய்வது சரியா?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

...

Edited by vengaayam

மனித குலத்துக்கு சேவை செய்வது என்பதை யார் வேண்டுமானாலும், எங்கிருந்தும் செய்யலாம்....

இதற்கு மொழி, இனம் என்ற எல்லைகள் இல்லை.....

குறுகிய கண்ணோட்டம் இது போன்ற விஷயங்களுக்கு தேவை தானா?

வெங்காயம் இது போல கேவலமான அடுத்தவரை கேலி செய்யும் செயல்களை நிற்த்தி கொண்டால் நன்றாக இருக்கும். தன்னால் முடிந்தால் செய்யலாம் , அடுத்தவரை குறை கூறும் குறுகிய கண்ணோட்டம் வேணாம்.

வெங்காயத்தின் கூற்றில் உண்மை இருக்கிறது. பெற்ற தாய் அந்த பெற்றவயிறே பசியால் கொதிக்கும் போது மகனோ தாய் நாட்டின் மீது மோகங்கொண்டவர் போல் மற்றவர்களுக்கு காண்பிக்க தாயகப்பற்றாளர் போல் நாடகம் ஆடுவார். ஏன் முன் ஒருகாலத்தில் நானும் அப்படிதான் இருந்தேன். இப்பொழுது திருந்திவிட்டேன். இதே பேர்வழிகள் எங்களில் நிறையவே இருக்கின்றனர். இவர்கள் மனம் மாறவேண்டும். தாயகத்தை எப்படி நாம் நேசிக்கின்றோமோ அதே போல் பெற்ற தாயையும் நேசிக்க வேண்டும். தனக்கடங்கித் தான் தானம் என்று நம் முன்னோர்கள் சொல்லிவிட்டுச் சென்றதில் எவ்வளவு உண்மை இருக்கின்றது.

அந்தத் தமிழர் தனக்கு கல்வி தந்து தன்னை ஆளாக்கிய நாட்டுக்கு ஏதாவது செய்ய நினைத்தால் அது தவறா?

இதற்குத் தான் சென்னையில் ஒரு பழமொழி சொல்வார்கள்.... தானும் படுக்க மாட்டான், தள்ளியும் படுக்க மாட்டான்.... என்று......

வெங்காயத்தார் அத தானேயப்பா தலைப்பிலேயே சொல்லீட்டீர்

பிறகென்ன கேள்வி ஓ சரியோ எண்டு கேக்கிறீரோ

சரியில்லைத்தான் என்னப்பா செய்யிறது நாங்கள் நாய் வால் நிமிறமாட்டம் முடிஞ்சா நிமித்துமோய்

:wink: :wink: :wink: :wink: :wink:

எல்லாம் இருக்கட்டும் ஓனியன் அவர் காசு சேத்து ஏதாவது செய்தவரே இவ்வளவு நாளும் இல்லை சேத்த காசில மதுரையில பங்களா வாங்கீட்டாரோ

ஓய் லுக்கு ஒருக்கா பாத்து சொல்லுமோய்

:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

அந்தத் தமிழர் தனக்கு கல்வி தந்து தன்னை ஆளாக்கிய நாட்டுக்கு ஏதாவது செய்ய நினைத்தால் அது தவறா?

இதற்குத் தான் சென்னையில் ஒரு பழமொழி சொல்வார்கள்.... தானும் படுக்க மாட்டான், தள்ளியும் படுக்க மாட்டான்.... என்று......

ஓய் யாரப்பா தப்பு எண்டு சொன்னது செய்யுங்கோ யார் வேண்டாம் எண்டது

ஓய் உமக்கு கேள்வி விளங்கினதா

சரியா??? தவறா ??

சரி எண்டா சரி எண்டு சொல்லும் தவறு எண்டா தவறு எண்டு சொல்லுமன்

சும்மா தள்ளி படுக்கமாட்டன் எண்டு அடம்பிடிக்கிறீர்

8) 8) 8) 8) 8) 8) 8) 8) 8)

நம்மை பொறுத்தமட்டடில அவர் செய்தா செய்து விட்டு போகட்டும்

****

:wink: :wink: :wink: :wink:

**** நீக்கப்பட்டுள்ளது - மோகன்

அப்பு பேரப்பிள்ளையள் சொல்லுற கதையளுக்கு ஏனணை மறுத்தான் விடுகிறாய் சும்மா இரு அப்பு. வெங்காயத்திடல் பணம் கேட்டவரிடம் நான் சொல்ல ஆசைப்படுவது என்னவென்றால் இன்னும் யாழ்ப்பாணத்தில் / வன்னியில் / கிழக்கு மாகானத்தில் எத்தனை குடும்பங்கள் ஒரு நேர சாப்பாட்டிற்கே அல்லாடுகிறார்கள். ஒரு தடவை இலங்கை சென்று நிலமையை நேரே சென்று பாருங்கள். இவர்களின் நிலையை வெறும் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. போரினால் கணவனை இழந்த விதவைகள், போரினால் பிள்ளைகளை இழந்த முதியோர்கள் எப்படி தவிக்கிறார்கள் என்பதை ஒரு தடவை நேரே சென்று பாருங்கள்.

இந்தியா அங்கு அகதியாய் இருக்கும் நம் மக்களுக்கு உதவி செய்யும்போது தனியொருவராய் தானும் இந்திய மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று அவர் நினைப்பதில் என்ன தவறு. அவரது நோக்கம் உண்மையானதெனில் பாராட்டப்பட வேண்டிய விடயமே.

சுயமரியாதை இல்லாதவர்களில் நடவடிக்கைகளும் உப்படித்தான்.

தங்கள் பூர்வீகத்தை வெறுக்கும் மனநோயாளிகள்.

மாற்றாக சிறுவழிகளிலாவது தன்னை இந்தியனாக காட்டிக் கொள்ளவதில் ஒருவகை திருப்த்தி அடைய முனைகிறார் போலும். அதற்கு உப்படியாக ஏதாவது செய்து இந்தியர்களின் பாராட்டை பெற்று அதன்மூலம் தானும் ஒரு இந்தியனாகிவிட்டார் என்று திருப்த்திப்பட முனைகிறார் போலும்.

இந்திய சம்பந்தப்பட்ட விடையங்களில் ஒரு சாதாரண இந்தியரைவிட அதிக கவனம் செலுத்துவார், விழுந்து இந்தியர்களை நண்பர்களாக சேர்த்துக் கொள்வதில் முன்னுக்கு நிப்பார். அதற்காக இந்தியர்களிற்கு கை கட்டி சேவகம் சேய்வது முதல் ...... எதுக்கும் பின்னுக்கு நிக்கமாட்டார்.

தமிழ்படங்களில் வடிவேலுக்கு அமெரிக்க போக ஆசை ஆனால் வழியில்லை வக்கில்லை, அந்த இயலாமையின் வெளிப்பாடாக நேரம் காலம் தெரியாமல் MTV பார்த்து Michael Jackson பாட்டுக்கு நடனம் ஆடி sunglass போட்டுக் கொண்டு தெரியிற மாதிரி ஒரு வியாதிதான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுயமரியாதை இல்லாதவர்களில் நடவடிக்கைகளும் உப்படித்தான்.

தங்கள் பூர்வீகத்தை வெறுக்கும் மனநோயாளிகள்.

மாற்றாக சிறுவழிகளிலாவது தன்னை இந்தியனாக காட்டிக் கொள்ளவதில் ஒருவகை திருப்த்தி அடைய முனைகிறார் போலும். அதற்கு உப்படியாக ஏதாவது செய்து இந்தியர்களின் பாராட்டை பெற்று அதன்மூலம் தானும் ஒரு இந்தியனாகிவிட்டார் என்று திருப்த்திப்பட முனைகிறார் போலும்.

இந்திய சம்பந்தப்பட்ட விடையங்களில் ஒரு சாதாரண இந்தியரைவிட அதிக கவனம் செலுத்துவார், விழுந்து இந்தியர்களை நண்பர்களாக சேர்த்துக் கொள்வதில் முன்னுக்கு நிப்பார். அதற்காக இந்தியர்களிற்கு கை கட்டி சேவகம் சேய்வது முதல் ...... எதுக்கும் பின்னுக்கு நிக்கமாட்டார்.

தமிழ்படங்களில் வடிவேலுக்கு அமெரிக்க போக ஆசை ஆனால் வழியில்லை வக்கில்லை, அந்த இயலாமையின் வெளிப்பாடாக நேரம் காலம் தெரியாமல் MTV பார்த்து Michael Jackson பாட்டுக்கு நடனம் ஆடி sunglass போட்டுக் கொண்டு தெரியிற மாதிரி ஒரு வியாதிதான்

.

குறுக்காலபோவான்! நானும் இதைத் தான் நினைத்தேன், எவ்வளவு அழகாகச் சொல்லி விட்டீர்கள். அவருக்கு இங்கு வக்காலத்து வாங்கும் இந்தியர்கள் கூட, ஒரு இந்தியர் இப்படிச் சொன்னாலோ, செய்தாலோ பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். இங்கு இரட்டை வேடம் போடுகிறார்கள்.

எங்களின் சொந்த மண்ணில் இவ்வளவு துன்பங்கள் மத்தியில் மக்கள் வாழும் போது, அவர்கள் தேவையில்லை (I don't want them), இந்தியாவைப் பற்றி மட்டும் தான் இங்கு கதைக்கலாம் என்று சொல்லுமளவிற்கு எந்தளவு சுய வெறுப்பிருக்க வேண்டும், அவர் இந்தியாவில் சேவை செய்யலாம் ஆனால் அதற்காக இந்தியாவிலுள்ள பிரச்சனை மட்டும் தான் கதைக்கலாம், காசைச் சேர்த்து அங்கு தான் செய்வேன் என்று அடம் பிடிப்பது, மானமுள்ள இலங்கைத் தமிழர்களனைவருக்கும் அவமானம்,

பெற்ற தாயிலும் தாய்நாடு சிறந்தது என்பார்கள், தாய் நாட்டை விடவா, படித்த நாடு முக்கியம். யாருக்கு என்ன பந்தம் பிடிக்க இந்த வேலையோ மதுரை மீனாட்சிக்குத் தான் வெளிச்சம்? :lol::lol:

என்னதான் காசு சேர்த்து அவர் ஊசி போட்டாலும், அவர் இந்திய விசாவுக்குப் போய் வரிசையில நிற்கேக்கை அங்குள்ள, அந்தக் குட்டையான, வட இந்தியன் பன்றியைக் கண்ட சோனகன் மாதிரி இவரைப் பார்த்துக் கொண்டு, இவரின் பாஸ்போட்டை வாங்கி வைத்துக் கொண்டு "Oh Srilankan origin" இன்று போய் இன்னும் 15 நாளில் வா என்று சொல்லி விடும் போது, அண்ணாச்சி வாயில் வழியப் போகும் அசடைக் காணக் கண்கோடி வேணும்

  • கருத்துக்கள உறவுகள்

உப்பிடித்தான், ஒஸ்ரெலியாவில் வாழும் ஈழத்தமிழர்களில் சிலர், மாவீரர் தினத்தில் கலந்து கொள்ளமாட்டினம்.கேட்டால், நாங்கள் ஒஸ்ரேலியன் என்பினம். ஏன் ஒஸ்ரேலியாவுக்கு வந்தனீர்கள்,ஊரிலை இருந்திருக்கலாமே என்று கேப்பினம். ஆனால் தங்கள் பிள்ளைகளினை இந்திய சுதந்திர தினத்தில் நடனம் ஆடவிடுவினம். அப்ப இந்தியா என்ன ஒஸ்ரேலியாவில் இருக்குதோ?.

இந்தியர்களுக்கு உதவி செய்யுங்கள். கட்டாயம் செய்யவேண்டும். ஆனால் ஈழத்தில் அவதியுரும் எம்மக்களுக்கு எம்மைவிட்டால் உதவிக்கு வேறு ஒருவரும் வராத நிலையில் ஈழமக்களுக்கு உதவி செய்யமால் இந்தியார்களுக்கு, பாகிஸ்தானியர்களுக்கு எவ்வாறு உதவி செய்யமுடியும்?.

அம்மா ஊரில் பிச்சை எடுக்காமல் சந்தோசமாக வாழ்ந்தால் மதுரை என்ன சிதம்பரத்திலேயே அன்னதானம் செய்யலாம்

அமெரிக்காவின், சுனாமி உதவிகளையே ஏற்கமறுத்த இந்தியாவிற்கு ஓர் ஈழத்தமிழர் உதவி செய்யப்போகின்றாராம்...???சிறிய ஆலம்விதையிலிருந்து பெரிய மரம் வழர்வதைப்போல தக்கதருணத்தில், நாம் ஒருவருக்குச்செய்யும் சிறு உதவி கூட பெரிய பயனைத்தரும் [உபயம்; நாலடியார்] அவர் தனகான காலத்தின் கடமையையும்தண்டி [மறந்து] ஏதோ ஓரு ஆத்ம திருப்திக்காக [அல்லது வேறுகாரணங்களுக்காக] செய்ய எண்ணுகிறார்போலும். உண்மையிலேயே நன்மை செய்ய நினைக்கிறார் என்றால் நாம் அதை விமர்சிப்பதைத்தவிர்த்தலே நாகரீகம். எனினும் வெங்காயத்தின் ஆதங்கம் நமக்குள்ளும் எளுவதைத்தவிர்க்க முடியவில்லை.

இந்தியாவுக்கு நன்றி கடன் பட்ட ஈழத்தமிழர்கள், இந்தியத் தமிழர்களுக்கு உதவி செய்ய நினைக்கிறார்கள்... இன்னமும் இங்கே செய்யப்பட வேண்டிய உதவிகள் நிறைய இருக்கின்றன.....

அதை அவர்கள் செய்வதில் இவர்களுக்கு என்ன பிரச்சினை?

இன்று வரைக்கும் ஈழத்தில் உலக நாடுகள் கொடுத்த உதவியைப் பாருங்கள். ஆனால் இந்தியா இவ்வளவு நாளில் போட்ட பொட்டலத்தை தவிர, வேறு என்ன செய்தது

தூயவன் உங்களை போன்ற சில பேரால் தான் இங்கு ஈழம் இந்திய தமிழ்ர்கள் மத்தியில் தேவை இல்லாத சண்டை ஏற்படுகிறது. இன்று கூட 10 பேர் ஈழதிலிருந்து ராமேஸ்வரம் வந்துள்ளனர். இவர்களூகு வாழ்வு கொடுப்பது யார்? நீரோ?? வாய்க்கு வந்தபடி பேச வேண்டாம்.இன்று கூட இங்கு கல்வி கற்க்கும் ஈழ தமிழ்ர்கள் பல்லாயிரம். இங்கு அமைதியாக எந்த வித பாகுபாடும் இன்றி வாழும் இந்த மக்கள் பத்தியும் கொன்சம் சிந்தியுன்க்கள்.செய்த உதவியை சொல்லி காட்டும் மோசமான குணம் தமிழ் நாட்டு தமிழ்ரக்கு இல்லை.செய நன்றி என்று எதோ சொல்வார்கள்.

ஒரு தன்னலமில்லா சேவையை இவ்வாறு குறை கூறுவது அநியாயம். இவ்வாறு இந்திய மக்களுக்கே சேவை செய்பவர் தன் மக்களுக்கும் கண்டிப்பக செய்வார்.கண்டிப்பாக செய்த்து கொண்டு இருப்பார். அதை பற்றி தெரியாமல் அவரை தாழ்த்தி பேசுவது முறை அல்ல.

இதில் ஏன் பிரித்துப்பார்க்க வேண்டும். எங்கு வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் உதவலாம். எங்கோ இருக்கிற வெளிநாட்டவர் சுனாமியால் பாதிக்கப்பட்ட இந்திய இலங்கை மக்களுக்கு உதவினார்கள். இப்போது கூட காஸ்மீரில் (பாக்கிஸ்தான் மற்றும் இந்தியா) இடம்பெற்ற நிலச்சரிவில் வீடுகளை இழந்து குளிரில் வாடும் மக்களுக்கு உதவுகிறார்கள்.

நான் இந்தியாவில் தான் படித்தேன் அங்கு வேலையும் செய்தேன். அங்கே எந்தப்பாகுபாடும் இல்லை. வீண் சண்டை வேண்டாம்

  • கருத்துக்கள உறவுகள்

இன்று கூட 10 பேர் ஈழதிலிருந்து ராமேஸ்வரம் வந்துள்ளனர். இவர்களூகு வாழ்வு கொடுப்பது யார்? நீரோ?? வாய்க்கு வந்தபடி பேச வேண்டாம்.இன்று கூட இங்கு கல்வி கற்க்கும் ஈழ தமிழ்ர்கள் பல்லாயிரம். இங்கு அமைதியாக எந்த வித பாகுபாடும் இன்றி வாழும் இந்த மக்கள் பத்தியும் கொன்சம் சிந்தியுன்க்கள்.செய்த உதவியை சொல்லி காட்டும் மோசமான குணம் தமிழ் நாட்டு தமிழ்ரக்கு இல்லை.செய நன்றி என்று எதோ சொல்வார்கள்.

இதற்கு நானும் வருந்துகின்றேன். பேசாமல் இவர்களை கியுூபாவின் வண்டனாமோ சிறைச்சாலைக்கு அனுப்பி வையுங்கள். அங்கே சந்தோசமாக இதை விட இருப்பார்கள். மெத்தப் பெரிய உபகாரமாகவும் இருக்கும்

நன்றி ஆதிபன்,

நன்றி மலர்ந்த சிலரின் மத்தியில் உம்மை சந்திக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.....

இலங்கை தமிழர் மட்டுமல்ல.... ஆப்பிரிக்காவைச் சார்ந்தவர்களும் கூட தமிழகத்தில் எங்களுக்கு சரிக்கு சமமாக நடத்தப்படுகிறார்கள்.... அதில் எஙளுக்கு மகிழ்ச்சியே.....

ஏனென்றால் நாங்கள் இருப்பது வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்.....

தம்பியவை மற்றவர்களை தாக்காமல் நியாத்தை கதையுங்கோவன்.. எங்கடை சனத்துக்கு தாய் பிச்சையெடுத்தாலும் பரவாயில்லை குசுப்புவுக்குசங்கிலிபோட என்று ஒரு கூட்டம் திரிந்தது. தெரியும்தானே? அவையள் திருந்தமாட்டினம்.

அப்புமாரே லக்கிலுக்கு ராஜாதிராஜா நீங்கள் வந்தாரை வாழவைக்கிறனீங்கள் எண்டு தெரியும்.. தம்பியவை நாங்கள் கொஞ்சம் திருந்தியிட்டமெண்டு நினைக்கிறன். நீங்களும் கொஞ்சம் உலகை புரிஞ்சுகொள்ள வேணுமெண்டு நான் ஆசைப்படுகிறன். உங்கடை சூப்பிற ஸ்டார் ஒருக்கா ஐரோப்பாவிலை இருக்கிற தமிழ்ச்சனங்களுக்கு பிலிம்காட்டி(நீங்கள் புரிஞ்சுகொள்ளுவியள்) அதிலை வாற காசை கொண்டுபோய் அநாதை குழந்தைகளுக்குகுடுக்கப்போ

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா அங்கு அகதியாய் இருக்கும் நம் மக்களுக்கு உதவி செய்யும்போது தனியொருவராய் தானும் இந்திய மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று அவர் நினைப்பதில் என்ன தவறு. அவரது நோக்கம் உண்மையானதெனில் பாராட்டப்பட வேண்டிய விடயமே.

"இந்தியாவில் சினிமாவினால்" சினிமா பகுதியில் லக்கிலுக் எழுதியது. (இதை தெரிந்துகொள்ளத்தான் அந்த பிரிவை ஆரம்பித்தேன்)

நல்ல கேள்வி.....

இப்போது இந்தியாவில், குறிப்பாக 1996க்கு பின் தனி நபர் வருமானம் பன்மடங்கு உயர்ந்திருக்கிறது.... எனவே வாழ்க்கைத்தரமும் அதனுடன் சேர்ந்தே உயர்ந்திருக்கிறது... பொழுது போக்குக்காக நிறைய செலவு செய்யப்படுகிறது.... என் தந்தை காலத்தில் எல்லாம் 10,000 ரூபாய் சம்பளம் என்பது எட்டாக் கனியாக இருந்தது.... கிடைத்த சம்பளத்தை வைத்து குடும்பத்தை ஓட்டுவதே அவர்களுக்கு எல்லாம் சவாலாக இருந்தது.... எனவே வருடத்துக்கு மூன்று அல்லது நான்கு படங்கள் தான் அவர் குடும்பத்துடன் பார்ப்பார்....

இப்போது அப்படி அல்ல.... எங்களுக்கெல்லாம் எடுத்தவுடனே 5 டிஜிட் சேலரி கிடைக்கிறது.... பொழுதுபோக்குகளுக்கு நிறைய செலவிட முடிகிறது.... வாரம் ஒரு சினிமா, தீம் பார்க் என்று செலவு செய்கிறோம்....

இப்போ இங்கே "பரமசிவன்" பட்டையை கிளப்ப ஆரம்பித்திருக்கிறது....

வசம்பரே, லக்கிலுக் சொன்னதை கேட்டீர் தானே? இந்தியாவில எப்படி மக்கள் முன்னேறிக்கொண்டு போறாங்க எண்டு? பிறகு எதுக்கு புலத்தில இருக்கிற ஈழத்தமிழரிட்ட காசு வேண்டி இந்திய நாட்டுக்கு உதவி செய்யப்போறாரம் அந்த மைசூர் மகாராஜா?

வசம்பரே உமக்கு தெரியுமோ இல்லையோ, சுனாமி ஆசியாவில அடிச்ச பொழுது இந்தியாவிலயும் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏழை மக்கள் இறந்தார்கள், ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகள் உதவி செய்யட்டுமா எண்டு இந்திய அரசை கேட்டபொழுது இந்திய அரசு சொன்ன பதில் தெரிந்து இருக்கும் உமக்கு, எங்களுக்கு உதவி தேவையில்லை, நாங்கள் அதை சமாளிப்பம் எண்டு,, இவர்களுக்கு அப்புறம் எதுக்கு உதவி செய்யனும்? எப்பவோ சுதந்திரம் கிடைச்சுட்டுது இந்தியாவுக்கு, அவங்களுக்கு தெரியும் தங்கட நாட்டை எப்படி பாதுகாக்கனும் எண்டு,,

அந்த இனையத்தளத்தை நடத்துற அட்மின் ஒரு உண்மையான ஈழத்தமிழர் (மனிதன்) எண்டால் அண்மையில் இராணுவத்தின் கெடுபிடிகளினால் வன்னிக்கு இடம்பெயரும் மக்களுக்கு தமிழர் புணர்வாழ்வுகழகம் உதவி செய்யுமாறு வேண்டுகோள்விடுத்திருந்தது, எங்க அதுக்கு உதவி செய்வாரா அந்த வசூல் ராஜா??

வசம்பரே ஒன்றை மாத்திரம் புரிஞ்சுகொள்ளும், யாழில இருக்கிற ஒரு சிலருக்கு நீர் ஜால்ரா போடுறதும், பதிலுக்கு அவங்கள் உங்களுக்கு சிங்க் சக் போடுறதும் நல்லதாப்படயில்லை,, யாழ் கருத்துக்களத்தையும் சில தமிழ் கருத்து புறம்போக்கு இனையத்தளங்கள் மாதிரி ஆக்கிப்போடாதையும்,, யாழில இருக்கிற ஒரு சிலரை நீர் நம்பி அவர்களுக்கு ஜால்ரா போடுறது நல்லாதாப்படல்லை,,

அவங்கட செயல்களுக்கு ஒரு சின்ன உதாரணம் ஒரு கருத்துக்களத்தில் இவ்வளவு நாளும் குப்பை கொட்டின அந்த சில பேர், புதிசா ஒரு இனையத்தளத்தை கண்ட உடன, பழைய இனையத்தளத்திற்கு நன்றிக்கடன் செலுத்திறமாதிரி, அந்த பழைய கருத்துக்களத்தில் செய்யக்கூடாத பல வேலைகள் செய்து ஒருத்தரையும் அந்த கருத்துக்களத்தைப்பார்க்கவி

நன்றி டண்

எனக்காக அக்கறை எடுத்து நீங்கள் எழுதிய பதிலிற்காக. ஆனால் நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் நான் எப்போதும் என்னிலையிலிருந்துதான் களத்தில் கருத்துக்களை எழுதி வருகின்றேன். எவரையும் நாடு இனம் மொழி என்று பார்க்காமல் மனிதனாக பார்த்துத்தான் எனது கருத்துக்களை வைக்கின்றேன். எவருக்கும் வக்காலத்தோ அல்லது ஜால்ராவோ போட வேண்டிய அவசியம் எனக்கில்லை. அதேபோல் களத்தில் எப்படியும் பிரைச்சினைகளை உண்டாக்குவதற்காக மற்றைய களங்களின் பிரைச்சினைகளை இங்கே கொண்டு வந்து போடுவதே சிலரின் வேலையாகவுள்ளது. என்னையும் வேறு ஒரு இணையத்தளத்துடன் சம்பந்தப் படுத்த முயற்சித்து தோல்வியடைந்ததையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் அப்படியான விடயங்கள் உங்களுக்கு தவறாகப் படவில்லையா?? மேலே குறிப்பிடப்பட்டவர் யார் என்றே எனக்குத் தெரியாது. ஆனால் அவரது நோக்கம் சரியாகப்பட்டதால் அது விடயமாக எனது கருத்தையும் வைத்தேன். இந்தியாவில் லக்கிலுக் போன்ற சிலரின் பொருளாதார நிலையைப் போன்றுதான் எல்லோரும் இருக்கமுடியுமா?? அமெரிக்காவின் உதவியை இந்தியா நிராகரித்தது உதவி என்ற போர்வையில் அமெரிக்கா வந்து என்ன செய்யும் என்பதை இந்தியா உணர்ந்துதான். இந்த விடயம் டண்ணுக்கும் புரியாததல்ல. இலங்கைத் தமிழ் மக்களுக்காக பல்லாயிரக் கணக்காக நம்மக்கள் உதவும்போது ஒரு தனியொருவர் இந்திய மக்களுக்கு உதவ நினைப்பதை விமர்சிக்க முனைவதுதான் தவறான விடயம். இதனால் அப்படி என்ன பாதிப்பு?? எது செய்தாலும் விமர்சிக்க வேண்டுமென்ற உள்நோக்கமான சிலரின் சிந்தனைகள் மாறுவது தான் எதிர்காலத்தில் எம்மவர்கள் பற்றிய ஏனையவர்களின் சிந்தனையிலும் மாற்றங்களை உண்டுபண்ணும்.

அமெரிக்காவின் உதவியை மட்டுமல்ல அனைத்து வெளிநாட்டு உதவிகளையும் மறுத்திருந்தது. அவரது நோக்கம் சரி என்கிறீர்களே எப்படி என்று சொன்னால் இன்னும் சிறப்பாய் இருக்கும். இன்னொரு உங்களின் கருத்துப்படி பார்த்தால் நீலன் திருச்செல்வம், கதிர்காமர் அனைவரையும் பாராட்டுவீர்கள் போல் உள்ளதே :roll:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.