Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்மீதும் பாதுகாப்புச் செயல் மீதுமான தனிப்பட்ட தாக்குதல்:சவேந்திர சில்வா

Featured Replies

சனல் 4 புதிய வீடியோ என்மீதும் பாதுகாப்புச் செயல் மீதுமான தனிப்பட்ட தாக்குதல்:சவேந்திர சில்வா

பிரிட்டனின் சனல் 4 அலைவரிசை புதிதாக ஒளிபரப்பிய வீடியோவானது தன்மீதும் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ மீதுமான தனிப்பட்ட தாக்குதலாகும் என ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.

இலங்கையின் கொலைக்களங்கள் எனும் எனும் வீடியோவை ஒளிபரப்பியதன் மூலம் இலக்குகளை அடைய முடியாமல் போனதால் தம்மை பழிவாங்குவதற்கு இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தமிழ் மிரரின் சகோதர ஆங்கில ஊடகமான டெய்லி மிரருடன் நியூயோர்க்கிலிருந்து தொலைபேசி மூலம் பேசுகையிலேயே மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இவ்வாறு கூறினார்.

சரணடைந்தவர்களை சுட்டுக்கொல்லுமாறு பாதுகாப்புச் செயலர் எனக்கு உத்தரவிட்டதாக, இறுதியாக ஒளிபரப்பான வீடியோவில் பெர்னாண்டோ எனக் கூறப்படும் ஒரு நபர் தெரிவித்துள்ளார். 58 ஆவது படைப்பிரிவின் தளபதி என்ற வகையில் எனது படையணி தளபதிகளுக்கும் கட்டளைத் தளபதிகளுக்கும் என்னால் எத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் பெர்னாண்டோ என்ற ஒருவர் அங்கு இருக்கவில்லை. அத்துடன் யுத்தத்தின் இறுதியில் எனது படைப்பிரிவிலிருந்து எந்த உத்தியோகஸ்தரும் விலகியோடவும் இல்லை என மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா கூறினார்.

தலைகள் இல்லாத சடலங்களை தான் கண்டதாகவும் பெர்னாண்டோ கூறியுள்ளார். ஊடகங்கள் அங்கிருந்தன. சிப்பாய்கள் இருந்தனர். அவர்களில் ஒருவரும் மோதலின்போது அத்தகைய காட்சிகளை காணவில்லை என உறுதியளிக்கிறேன் எனவும் அவர் தெரிவித்தார்.

சனல் 4 ஊடகவியலாளர்களுடனான அனுபவம் குறித்து மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா கூறுகையில், தன்னை எதிர்கொள்வதற்காக சனல் 4 ஊடகவியலாளர்கள் நீண்டகாலமாக தன்னை பின்தொடர்ந்தாக கூறினார்.

நியூயோர்க்கில் அவர்கள் என்னை எதிர்கொண்டனர். என்னை ஒரு நிமிடம் செவ்வி காணப்போவதாக அவர்கள் தெரிவித்தனர். நான் அவர்களை 40 நிமிடங்கள் பேசியதுடன் எனது ஐ.நா. அலுவலகத்திற்கும் அழைத்துச்சென்றேன்.

எனது உத்தியோகஸ்தர்களும் நான் வழங்கிய நேர்காணலை பதிவுசெய்தனர். நான் அவற்றை உள்ளூர் ஊடகங்களுக்கும் வழங்கினேன். சனல் 4 வின் புதிய வீடியோவில் 80-90 சதவீமானவை இக்கொலைகளைளுக்கு என்னை குற்றம்சாட்டுவதாக உள்ளது.

முதலாவது வீடியோவை அவர்கள் ஒளிபரப்பியவுடன் நாம் பல அடிப்படைத் தவறுகளும் பக்கச்சார்பான கருத்துக்களும் இருப்பதாக சுட்டிக்காட்டியபின் அவர்கள் திரும்பி வரவில்லை.

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். நான் இப்போது ராஜதந்திரியாக உள்ளபோதிலும் இன்னும் இராணுவ சேவையில் இருக்கிறேன். எனவே பாதுகாப்புப் படையினரின் புகழுக்கு பங்களம் விளைவிப்பதற்காக இத்தகைய வீடியோக்களை ஒளிபரப்பும் சனல் 4 அலைவரிசையின் நம்பகத்தன்மையை அது கேள்விக்குரியாக்குகிறது என அவர் கூறினார்.

http://tamilmirror.lk/2010-07-14-09-13-23/25545--4-.html

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களமும், பான் கி மூனும் பாக்காத சனல் - 4 ஒளிபரப்பை,

சவேந்திர சில்வா திருட்டு வீடியோவில் பாத்தானா.....

இதுக்கே... இவனை, ஆறு மாசம் உள்ளை போடணும்.

  • கருத்துக்கள உறவுகள்

:lol: சாட்சியமளித்த ராணுவ வீரனின் பெயரை அப்படியே போட சனல் 4 ஒன்றும் முட்டாள்களில்லை. மாற்றப்பட்ட புனைபெயர்தான் இந்த "பெர்ணாண்டோ".இதுகூடத் தெரியாமல், "பெர்ணாண்டோ என்று யாருமே எனது படைப்பிரிவில் இருக்கவில்லை" என்று சொல்லும் இவனை என்னவென்பது ? அதுமட்டுமல்லாமல் தன்னிடம் வேலை செய்த எவருமே இன்னும் விலகி ஓடவில்லையாம். சண்டை முடிந்தபின்னர் அவர்கள் வெளியேறியிருக்கலாம்தானே?? அல்லது இவன் சொல்லுவது ஊன்மைதான் என்று நம்பவேண்டிய தேவை என்ன??

மூதேவிக்கு பயம் வந்துவிட்டது. இனி இப்படி ஆயிரம் கதைகள் வரும், பார்க்கலாம் !!!

சனல் 4 புதிய வீடியோ என்மீதும் பாதுகாப்புச் செயல் மீதுமான தனிப்பட்ட தாக்குதல்:சவேந்திர சில்வா

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். நான் இப்போது ராஜதந்திரியாக உள்ளபோதிலும் இன்னும் இராணுவ சேவையில் இருக்கிறேன். எனவே பாதுகாப்புப் படையினரின் புகழுக்கு பங்களம் விளைவிப்பதற்காக இத்தகைய வீடியோக்களை ஒளிபரப்பும் சனல் 4 அலைவரிசையின் நம்பகத்தன்மையை அது கேள்விக்குரியாக்குகிறது என அவர் கூறினார்.

http://tamilmirror.lk/2010-07-14-09-13-23/25545--4-.html

இவை பாதுகாப்பு படையினருக்கு களங்கம் விளைவிப்பன அல்ல, இவை உண்மையல்லாவிடில் சவேந்திர சில்வா மீது அவதூறு கூறும் அறிக்கைகள். இவர் ஏன் சன்ல்-4 கோட்டுக்கு இழுக்கிறாரில்லை. முதிகிலை புண்ணிருந்தால் வேலிக்குள்ளால் நுளைவது கஸ்டம் என்பதால் தானே.

  • கருத்துக்கள உறவுகள்

பத்துச் சிங்களவனை பிடிச்சு,

உனக்கு என்ன பெயர் என்று கேட்டால்....

அதில் ... ஒரு பெர்னான்டோ இருப்பான்.

மிச்சம் எல்லாம் அப்புஹாமிதான். :D:lol:

  • தொடங்கியவர்

சிங்களமும், பான் கி மூனும் பாக்காத சனல் - 4 ஒளிபரப்பை,

சவேந்திர சில்வா திருட்டு வீடியோவில் பாத்தானா.....

இதுக்கே... இவனை, ஆறு மாசம் உள்ளை போடணும்.

நியுயோர்க் நகரில் சனல் நாலு ஐ.நா.வில் காட்டப்பட்டபோது ஜோன் சினோ அவர்களும் சென்று இருந்தார். அங்கே அவர் இந்த போர்க்குற்றவாளியை வீதியில் கண்டு இந்த 'பெர்னாண்டோ' பற்றி கேட்டுள்ளார். அது அந்த ஒளிப்பதிவில் உள்ளது.

உலகம் பார்க்கமுன்னரே இவன் பார்த்துவிட்டான்.

நான் அந்த ஒளிப்பதிவை யாழ் களத்தில் தான் பார்த்தேன்.

திருட்டு முழியுடன் அக்கம், பக்கம் பார்த்து கதைக்கும் போதே....

இவன் , அவன் தான் என்று விளங்கிவிட்டது.

  • தொடங்கியவர்

இந்த பேட்டியில் உள்ள சில பொய்கள்

சனல் 4 புதிய வீடியோ என்மீதும் பாதுகாப்புச் செயல் மீதுமான தனிப்பட்ட தாக்குதல்:சவேந்திர சில்வா

சரணடைந்தவர்களை சுட்டுக்கொல்லுமாறு பாதுகாப்புச் செயலர் எனக்கு உத்தரவிட்டதாக, இறுதியாக ஒளிபரப்பான வீடியோவில் பெர்னாண்டோ எனக் கூறப்படும் ஒரு நபர் தெரிவித்துள்ளார். 58 ஆவது படைப்பிரிவின் தளபதி என்ற வகையில் எனது படையணி தளபதிகளுக்கும் கட்டளைத் தளபதிகளுக்கும் என்னால் எத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் பெர்னாண்டோ என்ற ஒருவர் அங்கு இருக்கவில்லை. அத்துடன் யுத்தத்தின் இறுதியில் எனது படைப்பிரிவிலிருந்து எந்த உத்தியோகஸ்தரும் விலகியோடவும் இல்லை என மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா கூறினார்.

தலைகள் இல்லாத சடலங்களை தான் கண்டதாகவும் பெர்னாண்டோ கூறியுள்ளார். ஊடகங்கள் அங்கிருந்தன. சிப்பாய்கள் இருந்தனர். அவர்களில் ஒருவரும் மோதலின்போது அத்தகைய காட்சிகளை காணவில்லை என உறுதியளிக்கிறேன் எனவும் அவர் தெரிவித்தார்.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

அவன் உளறத் தெடங்கியிருப்பது எல்லாம் எம் நன்மைகே

தலைகள் இல்லாத சடலங்களை தான் கண்டதாகவும் பெர்னாண்டோ கூறியுள்ளார். ஊடகங்கள் அங்கிருந்தன. சிப்பாய்கள் இருந்தனர். அவர்களில் ஒருவரும் மோதலின்போது அத்தகைய காட்சிகளை காணவில்லை என உறுதியளிக்கிறேன் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த சிங்கள ராணுவப் பயங்கரவாதி, சிங்களக் காட்டுமிராண்டிகள் இரத்தத்தில் பொய்யும் புரட்டுமே ஓடுகிறது என்பதை நிரூபித்திருக்கிறான்.

இங்கே காணொளிகளில் காட்டப்பட்டவை சிங்கள ராணுவப் பயங்கரவாதிகளின் மிக மிகச் சில ஈனச் செயல்களே. இதைப்போல் ஆயிரக்கணக்கான ஈனச்செயல்கள், சம்பவங்கள் வெளிவரவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.