Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பளபளப்பான கருப்பு நிற கவர்ச்சி பழம்! நாவல் பழம்!

Featured Replies

நகரத்தில் இருப்பவர்களுக்கு பெரும்பாலும் நாவல் பழங்கள் விற்பதை பார்த்து ஏதோ தேவையில்லாதை பார்பதுபோல் அலட்சியமாக பார்த்து செல்வார்கள் .ஆனால் கிராமங்களில் சர்வசாதாரணமாக நாவல் மரங்களை பார்க்கலாம். சாலை ஓரங்களிலும், குளக்கரை, ஆற்றங்கரைகளில் நாவல் மரங்கள் தன்னிச்சையாக வளர்ந்திருப்பதுண்டு சிறுவர்களின் விளையாட்டு தளமாக இருக்கிறது. நாவல் மரத்திற்கு ஆருகதம், நேரேடு, சுரபிபத்தினர் என்றும் பெயர்கள் இருக்கின்றன. ஆங்கிலத்தில் நாவல் மரத்தினை ((Eugenia Jambos) ஜம்பலம், பிளாக் பிளம் என்று பெயர்கள் உண்டு. ஜம்பு நாவல் என்றொரு ரகமும் உண்டு. இதன் பழங்கள் இனிப்பு கலந்த துவர்ப்பாக இருக்கும்.

நாவல் மரத்தின் இலைகள் கரும்பச்சையாக பளபளப்புடன் இருக்கும். ஜனவரி பிப்ரவரி மாதங்களில் இலைகளை உதிர்த்து நிர்வாணமாக வெட்கப்பட்டு நிற்க்கும் நாவல் மரம் சந்திரமுகியின் கண்களாக கருமை நாவல் பழங்களை கொத்துகொத்தாக தாங்கி வனப்புடன் ஜுலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் கவர்ச்சிகரமாக காட்சியளிக்கிறது.. கிராமங்களில் மரத்தில் ஏறி இதனை உதிர்த்து விற்பனைக்கு எடுத்து வருவார்கள். ஒரு மரத்திலிருந்து ஆண்டொன்றுக்கு 50 முதல் 80 கிலோ பழங்கள் கிடைக்கும்.

syzygium-cumini.jpg

பழத்தின் மருத்துவபண்புகள்

நாவல் பழத்தை சாப்பிட மூளை பலமாகும். நல்ல சீரண சக்தி கிடைக்கும். குறிப்பாக பழத்தை கசாயம் போல் தயாரித்து சாப்பிடும் போது வாயுத்தொல்லை நீங்கும். மண்ணீரல் வீக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள், தொடர்ந்து பல காலங்களாக கழிச்சல் நோய் உள்ளவர்கள் நாவல் பழத்தை சாப்பிட்டு வர குணமடையலாம். பழச்சாறுடன் தேன் கலந்து குடிக்கும் போது வெயிலால் உடம்பில் ஏற்படும் அனல் குறையும்.

பழம் உடலுக்கும், கண்ணுக்கும் குளிர்ச்சியை தரும். இரத்தத்தை சுத்தி செய்யும். இரத்தம் விருத்தி ஆகும். சிறுநீர்க்கழிவினைத் தூண்டுவதுடன், சிறுநீர்ச்சுருக்கை போக்கும். பழத்தை அதிகமாக உண்டால் சளி, காய்ச்சல் உண்டாக வாய்ப்புண்டு. பொதுவாக தரையில் விழுந்த பழங்களை சாப்பிடும் போது இது போன்று நடக்கிறது!

கருப்புதான் எனக்கு பிடித்த கலர் என பாடியபடி இந்த பழத்தின் பளபளப்பான கருமை நிறத்தில் மயங்கி சாப்பிடும் சிலருக்கு தொண்டைக்கட்டும் ஏற்படலாம். டோண்ட் ஒரி நாவல் பழத்தை உப்பில் போட்டு சாப்பிடுவதால் தொண்டைக்கட்டு உண்டாகாது.

பழுக்காத நாவல் காய்கள் இருந்தால் விரயம் செய்யாமல் நன்றாக உலர்த்தி பொடி செய்து ஒரு தேக்கரண்டி எடுத்து மோரில் கலந்து சாப்பிட்டால் வயிற்று போக்கு குணமாகும்.

விதையின் குணங்கள்

நாவல் பழத்தை சப்பித்தின்ற பிறகு( தான் சாப்பிட்டதைதான்) மிஞ்சும் கொட்டையை நன்றாக நிழலில் உலர்த்தி பொடி செய்து கொள்ள வேண்டும். இந்த பொடியை தினமும் 2 முதல் 4கிராம் வீதம் மூன்று வேளை தண்ணீரில் கலந்து அருந்தினால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும் என நம்பிக்கை உள்ளது. விதையை பொடித்து மாம்பருப்பு தூளுடன் சேர்த்து தர சிறுநீரை பெருக்கும். இந்த கொட்டை தூளை அதிக அளவில் உண்ண கூடாது. அது நஞ்சாகும்.

இலையின் குணம்

நாவல் கொழுந்து சாறு, மாவிலைச்சாறு ஆகிய இரண்டையும் கலந்து கடுக்காய் பொடியுடன் சேர்த்து ஆட்டுப்பாலில் கலக்கி குடித்தால், சீதக்கழிச்சல் என்ற வெப்பக்கழிச்சல் குணமடையும். நாவல் கொழுந்து, மாவிலைக் கொழுந்து ஆகிய இரண்டையும் சம அளவில் எடுத்து மை போல் அரைத்து மோரில் அல்லது தயிரில் கலக்கி சாப்பிட வயிற்று போக்கு, இரத்தத்துடன் காணப்படும் பேதி ஆகியவை குணமாகும்.

மரப்பட்டையின் குணம்

நாவல் மரம்பட்டையை சுவைத்தால் குரல் இனிமையாகும் என்று கூறுகிறார்கள். இது ஆஸ்துமா, தாகம், களைப்பு, இரத்த பேதி, இருமல் ஆகியவற்றை குணப்படுத்த நல்லது. நாக்கு, வாய், தொண்டைப்புண்களுக்கு இந்த மரத்தின் பட்டையை கொதிக்க வைத்து வாய் கொப்புளித்தால் குணம் காணலாம். மரப்பட்டையை இடித்து சலித்து எருமைத்தயிரில் கலந்து குடிக்க பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்த போக்கு கட்டுப்படும். ( ஏன் பெண்களுக்கு மட்டும் எருமை?)குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தம், ரத்தகழிச்சல் ஆகியவற்றுக்கு வெள்ளாட்டுபாலுடன் சேர்த்து நன்கு காய்ச்சி சங்கு அளவில் மூன்று முறை தரலாம். எதற்கும் பக்கத்தில் உள்ள பாட்டியை கேட்டுக்கொள்ளுங்கள் இந்த மரப்பட்டையின் கசாயத்தை கொண்டு புண்களை கழுவலாம். கிருமிநாசினி போல் செயல்படும் என்கிறார்கள்.

வேரின் குணம்

மரத்தின் வேரை ஒரு பாத்திரத்தில் ஊற வைத்து அந்த நீரை குடித்தால் சர்க்கரை வியாதிக்கு நல்லது. உடலுக்கு குளிர்ச்சியையும், ஆண்மையையும் தரும்.

நாவல் பழத்தில் உள்ள சத்துக்கள்

புரதம் 0.7 கிராம்

கொழுப்பு 0.3 கிராம்

மாவுப்பொருள் 0.9 கிராம்

கீழ்வருபவை எல்லாம் (மில்லி கிராம் அளவில்)

கால்சியம் 14.0 பாஸ்பரஸ் 15 இரும்பு 1.2 தயமின் 0.03 நியாசின் 0.2 வைட்டமின் சி 18 மெக்னீசியம் 35 சோடியம் 26.2 பொட்டாசியம் 55 தாமிரம் 0.23 கந்தகம் 13 குளோரின் 8 ஆக்சாலிக் அமிலம் 89 பைட்டின் பாஸ்பரஸ் 2 கோலின் 7 கரோட்டின் 48 இனி தெருவில் நாவல் பழத்தை பார்த்தால் வாங்கி ருசிப்பார்த்துவிடுங்களேன்! சீசன் முடியும் முன்!!

http://kaalnadaidoctor.blogspot.com/2011/08/blog-post_14.html

2557711461_42e63afc98.jpg

ஊரில் வீட்டு வளவுக்குள் பெரிய நாவல்பழ மரம் இருந்தது, நாவல் பழ சீசனுக்கு அக்கம் பக்க தோஸ்துகளையும் சேர்த்துக் கொண்டு மரத்தில் ஏற்றி நாவற் பழம் சாபிட்டது தான் ஞாபகம் வருகிறது... :wub:

  • கருத்துக்கள உறவுகள்

குட்டி நாவல் மரத்திற்கு பாம்பு வராதோ?...சின்ன வயசில் நாங்கள் யார் அதிகமாய் நாவல் பழம் சாப்பிட்டு நாக்கு நாவல் நிறத்திற்கு வருகிற்து என்டு பார்ப்பதற்காக போட்டிக்கு சாப்பிடுவோம்

குட்டி நாவல் மரத்திற்கு பாம்பு வராதோ?...சின்ன வயசில் நாங்கள் யார் அதிகமாய் நாவல் பழம் சாப்பிட்டு நாக்கு நாவல் நிறத்திற்கு வருகிற்து என்டு பார்ப்பதற்காக போட்டிக்கு சாப்பிடுவோம்

ஊரில எங்க தான் பாம்பு இல்லை? :blink: ஆனால் நாவல் மரத்தில நான் நிக்கேக்க நேரம் பாம்பைக் கண்டதில்லை ரதி :)

குட்டி நாவல் மரத்திற்கு பாம்பு வராதோ?...

வூட்டோட இருக்குற மரத்துக்கு வருமோ தெர்யாது...

ஆனா மணல் பிரதேசம் உள்ள இடங்களில் உள்ள நாவபழமரத்துக்கு பக்கத்துல,கட்டாயம்,ஒரு பெருமதிப்புக்குரிய நல்லபாம்பு தங்கபாலு ... , நம்மள வாட்ச் பண்ணிகிட்டே இருப்பாரு! ,

ஜாக்கிரதையா இருக்கணும்!

இல்லைனா போட்டு தள்ளிடுவாராம்!

சப்போஸ் அப்டி வந்தாதான் என்ன?

ரவுடி ரதியக்காவ பார்த்தா பாம்பு திரும்பி ஓடிடாதா என்ன? <_<

  • கருத்துக்கள உறவுகள்

ரவுடி ரதியக்காவ பார்த்தா பாம்பு திரும்பி ஓடிடாதா என்ன? <_<

பாம்பு படம் எடுக்கும்........

நாகர் கோவிலில் கனக்க நாவல் மரங்கள் இருக்க, பழங்கள் மிக ருசியானவை, ஆனால் பாம்புகள் அதிகம்

  • கருத்துக்கள உறவுகள்

வூட்டோட இருக்குற மரத்துக்கு வருமோ தெர்யாது...

ஆனா மணல் பிரதேசம் உள்ள இடங்களில் உள்ள நாவபழமரத்துக்கு பக்கத்துல,கட்டாயம்,ஒரு பெருமதிப்புக்குரிய நல்லபாம்பு தங்கபாலு ... , நம்மள வாட்ச் பண்ணிகிட்டே இருப்பாரு! ,

பாம்பு படம் எடுக்கும்........

நாகர் கோவிலில் கனக்க நாவல் மரங்கள் இருக்க, பழங்கள் மிக ருசியானவை, ஆனால் பாம்புகள் அதிகம்

பாம்பு நாவல்பழம் சாப்பிடுமா? அல்லது ஆட்களைப் படம் எடுக்க வாறதா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.