Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுதந்திர தமிழீழத்தை நோக்கிய நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உலகளாவிய வேலை திட்டங்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[saturday, 2011-08-20 12:03:10]

Transitional_logo.gif

தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை எனும் தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசகைளை, சனநாயகபூர்வமாக உலக அரங்கில் பிரதிபலித்து நிற்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், சுதந்திர தமிழீழத்தை நோக்கிய, இன அழிப்பை - சுயநிர்ணய உரிமையை மையப்படுத்திய உலகளாவிய வேலைத் திட்டங்களை முன்வைத்துள்ளது.

தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கும், இனத்தின் உறுதியான இருப்பை நிலைநிறுத்தவும் வேண்டிய, எட்டு அடிப்படை குறிக்கோள்களை மையப்படுத்தி, உலகளாவிய வேலைத் திட்டங்களாக முன்வைக்கப்பட்டுள்ளது.

குறிக்கோள்களை மையபடுத்தி, அந்த குறிக்கோள்களை எட்டுவதற்குரிய அடிப்படை செயற்திட்டங்களுக்கு முன்மொழியப்பட்டுள்ளன.

நா.த.அரசாங்க பிரதமர் செயலகத்தினால் உலக தமிழர்களின் கவனத்துக்கு முன்வைக்கப்பட்டுள்ள இந்த உலகளாவிய வேலைத் திட்டங்களில் பங்கெடுத்து, சுநத்திர தமிழீழத்தையும் நோக்கியும், இனத்தின் இருப்பையும் உறுதியாக நிலைநிறுத்திக் கொள்ளவும், ஆர்வமுள்ள அனைவரையும் பங்கெடுக்குமாறு கோரப்படுள்ளது.

இது தொடர்பில், பிரதமர் செயலகத்தினால் வெளியிடப்பட்டுள் செய்திக்குறிப்பில், தாயகத்திலும் - புலத்திலும் உள்ள அனைத்து உலகத் தமிழ் மக்களும் இதில் பங்கெடுத்து கொள்ளலாம் என தெரிவிக்கபட்டுள்ளதோடு, தமிழர் உரிமைகளுக்காக பாடுபடுகின்ற அனைத்து அமைப்புக்களும், இந்த வேலைத் திட்டத்தில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* தலைமை தாங்கி, திட்டத்தை நடைமுறைப்படுத்தி, உயர்செயல் நிறைவேற்றத்தை தூண்டுதல்,

8 மிகச்சிறந்த செயல்கள் வழியே நிர்வாழு ஒழுங்கில் இலக்கை அடைதல்.

* குடிசார், அரசியல், பண்பாட்டு, பொருளாதார, சமூக, கூட்டு உரிமைகளை சுதந்திரமாக பயன்படுத்துதல்.

* அரசியல் அதிகாரத்தை சுதந்திரமாக தீர்வுசெய்தல்.

* பண்பாட்டை சுதந்திரமாக விருத்தி செய்தல்.

* சுற்றுப்புற தாக்கங்களை, பாதிப்புகளை மனதில் எடுத்து பொருளாதாரத்தை சுதந்திரமாக கட்டி எழுப்புதல்.

* சமூகத்தை சுதந்திரமாக மேம்படுத்துதல்.

* உள்ளக விவகாரங்களை காத்திரமாக முன்னேற்றுதல், செய்திகளை பரிமாறி பரப்புரைத்தல், செயற்திட்டங்களுக்கு உறுதுணை வருவாயை தோற்றுவித்தல்.

மேற்குறிப்பிட்டுள்ள எட்டு குறிக்கோள்கள் வெளியிடப்பட்டுள்ள வரைவில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்தக் குறிக்கோள்களை அடைவதற்கான 23 செய்திட்ட வழிகாட்டுதலும் இவ்வரையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய இவ்வேலைத் திட்டங்களில் பங்கெடுத்துக் கொள்ளவும், மேலதிக விபரங்களை பெற்றுக் கொள்ளவும் eelamtigga91@live.com இம்மின்னஞ்சல் வழியே தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக, அனைவரது கவனத்துக்கு கொண்டு செல்லும் முகமாக வெளியிடப்பட்டுள்ள உலகளாவிய இவ்வேலைத் திட்டங்கள் தொடர்பிலான, விரிவான விளக்கங்களையும், அனைவரது பங்கெடுப்பை உறுதி செயது கொள்ளவும், செப்ரெம்பர் 15-30 ஆகிய நாட்களுக்கு ஊடகங்கள் வழியே தொடர்பாடல் நிகழ்சிகள் முன்னெடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாதம் ஊடகசேவை

தகவல்துறை அமைச்சகம்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்.

http://www.seithy.co...&language=tamil

அரோகரா

போன மாதம் கனடாவில் யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவர்களால் ஒரு வார ஒன்றுகூடல் நடைபெற்றது.உலகெங்கும் இருந்து சுமார் இருநூறு பெயரளவில் வந்து கிரிகெட் மட்ச்,பிக்னிக்,டின்னர் என ஒரே கொண்டாட்டம்.

பிக்னிக் வேம்படியுடன் சேர்ந்து யூலை 23 நடந்தது.தமிழ்ஈழ பிரதமர் பற்றி ஒரு கதையுமில்லை.தனது பழையமானவர்களையே இணைக்க முடியாமல் இருக்கின்றார் போலிருக்கு.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள்

(1) அவ்வப்போது எந்தவொரு ஆதாரங்களையும் குறிப்பிடாமல் உப்புச்சப்பில்லாத அறிக்கைகள் வெளியிட்டது

(2) இரு பிரிவாக உடைந்து இழுபறிப்படுவது

(3) ஏதாவது அழைப்பிதழ் கிடைத்தால் (சூடன் போன்று) ஓடிச் சென்று கலந்துகொள்வது

(4) யாரவது தமிழர் போராடி அது வெற்றிபெற்றால் அதற்கு உரிமை கொண்டாட முயற்சிப்பது

(5) பிரித்தானியா புலிகளை பயங்கரவாத இயக்கமாக அறிவித்தபோது வாய்மூடி மௌனியாக இருந்தது

(6) அமெரிக்காவிலும் புலிகளை பயங்கரவாத இயக்கமாக அறிவித்தபோது வாய்மூடி மௌனியாக இருந்தது

குறிப்பு:

இவர்கள் விடும் அறிக்கைகளைவிட ஒரு 8 வகுப்பு மாணவன் பலமடங்கு சிறந்த, அரசியல் சாணாக்கியமுடைய அறிக்கையை செய்யும் வல்லமை உடையவன்

  • கருத்துக்கள உறவுகள்

அறிக்கைய 20 முறை வாசித்தாலும் ஒண்னும் பிரியல புரிகிறமாதிரி எழுதி பழகுங்கப்பா.. :mellow:

உண்மைகள் ஆசான் ... நானும் உந்த நா.க.த.க, ஏதோ மாஜாஜாலங்கள் செய்யப்போகிறார்கள் என விசிலடித்தவன்தான்!! ... பின்பு உதில் உள்ளதுகள் வலதுகுறைந்ததுகளோ என்று எண்ணினேன் ...

... ஆனால் அவைகளுக்கு மேல் உந்த நா.க.த.அ இல் உள்ள மான்புமிகு பிரதமரும், மான்புமிகு அமைச்சர்வால்களும் சுதந்திரமாக முடிபெடுத்து செயற்படுத்த முடியாத நிலையில் இருக்கிறார்களாம்???? ... இவர்களை இயக்கும் றிமோட் கொண்றோல்கள் இவர்களிடம் இல்லையாம்????? ... போன்ற குற்றச்சாட்டுக்கள் முன்பு சிலரால் சுமத்தப்பட்டும், இவர்கள் ஒன்றும் செய்யப்போவதில்லை என்றதுகள் உண்மையாக இருக்குமோ என்று நினைக்கத் தோன்றுகிறது!!!!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொறுமை இழக்குமளவுக்கு அளவுக்கு தமிழ் மக்களையிட்டு செல்லக் கூடாது எதுவானாலும் நம்பிக்கை தரும் வகையில் நடவடிக்கைகள் அமைய வேண்டும். அதற்காக செயற்பாடுகளை துரிதப்படுத்த வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.