Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கர்ணனின் உயிர் பிரிந்தது ஏன்?

Featured Replies

கர்ணனின் உயிர் பிரிந்தது ஏன்?

செஞ்சோற்றுக் கடன் தீர்த்த கர்ணன் போர்க் களத்தில் வீழ்ந்து கிடக்கின்றான். அவனின் உடல் முழுவதும் அம்புகளின் துளை. சில அம்புகள் அவன் மீது அன்பு கொண்டவை போல அகல மனமின்றி இருந்தன. போர்க் களத்தில் கிடக்கின்ற கர்ணனின் உயிர் பிரியவில்லை. அவன் செய்த கொடை -தர்மம் உயிரைக் காப்பாற்றுகிறது. கர்ணனைக் கொல்லாமல் எதுவும் சாத்திய மாகாது என்பதை உணர்ந்த கண்ணன் திட்டம் தீட்டுகின்றான். போர்க் களத்தில் ஆவி அகத்தோ, புறத்தோ என்று புரியாமல் கிடக்கின்ற கர்ணனிடம் நீ செய்த புண்ணியத்தைத் தா என்று மாயக் கண்ணன் கேட்க, கர்ணன் தன் உடலைத் தைத்துக் கொண்டிருக்கும் அம்பை எடுத்து அதன் வழியே பாயும் குருதியால் தன் புண்ணியத்தை கண்ணனிடம் கொடுக்க, அந்தக் கணமே கர்ணனின் உயிர் பிரிகின்றது.

புண்ணியத்தைக் கொடுத்தால் மேலும் புண்ணியம் சேர்ந்து அது இரட்டிப்பாகி கர்ணனின் உயிரைக் காப்பாற்றியல்லவா இருக்க வேண்டும் என்று வாதிடுவோரும் உள்ளனர். இது தொடர்பில் ஞானபூமி என்ற சஞ்சிகையில் நீண்டதொரு விவாதம் நடந்தது. இவ்விவாதத்தில் காஞ்சிப் பெரியவரும் கருத்துத் தெரிவித்தார். போர்க்களத்தில் வீழ்ந்து கிடக்கின்ற கர்ணனின் ஆத்மா முத்தி இன்பம் பெறுவதற்கு அவனின் புண்ணியம் போதாமல் இருந்தது. எனவேதான் கண்ண பரமாத்மா அவனுக்கு மோட்சம் கொடுக்க விரும்பி உயிர் பிரியும் காலை அவன் செய்த புண்ணியத்தை தானமாகப் பெற்று குறை நிலையில் இருந்த புண்ணியத்தை உயர்த்தி விட்டான். அந்தக் கணமே கர்ணனின் ஆத்மா முத்தி இன்பம் பெற்றது என்றார்.

இதனை மாணவர்களுக்குக் கூறிக்கொண்டிருந்த போது, ஒரு மாணவன் இடைமறித்து சேர், ஒரு சந்தேகம் என்றான். என்ன? என்றேன். இலங்கை செய்த போர்க் குற்றத்தை ஐ.நா. சபை விசாரணை செய்யாதற்கு காரணம் என்ன என்று கேட்டான். மாணவனின் கேள்வியால் அதிர்ந்து போனேன். ஆபத்தான கேள்வி என்பதால் மெளனம் சாதித்தேன். என்ன சேர், இது மிகவும் இலகுவானது. இலங்கைக்கு தண்டனை கிடைப்பதற்கு இன்னும் கொஞ்சப் பாவம் போதாமல் இருக்கிறது. அது விரைவில் கிடைத்ததும் விசாரணை ஆரம்பிக்கப்படும். அங்கு கர்ணனுக்கு புண்ணியம் போதாதது போல இங்கு இலங்கைக்கு கொஞ்சம் பாவம் போதாது.

கர்ணனின் விடயத்தை எப்படி கண்ணன் சமாளித்தானோ அது போல உரிய நேரத்தில் இலங்கைக்கும் உரியதைக் கொடுக்காமல் அந்தக் கண்ணன் விடான் என்றான் மாணவன். மாணவனின் இந்தப் பதிலால் சித்தம் கலங்கியது. ஓ! அதுதான் சங்கதியோ. பொறுத்திருந்து பார்ப்போம்.

http://www.valampuri...ws.php?ID=22837

Edited by akootha

  • தொடங்கியவர்

இலங்கைக்கு காத்திருக்கிறது ஆபத்து

வன்னி யுத்தத்தின் இறுதி நாட்களில் மேற்கொள்ளப்பட்ட யுத்த மீறல்கள் மற்றும் மனிததத்திற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து ஐ.நா.நிபுணர் குழுவால் கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட அறிக்கை, ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனால் தற்போது ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசை பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கிய இவ்வறிக்கை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்திற்கு உத்தியோக பூர்வமாக அனுப்பிவைக்கப்பட்டமை இலங்கை மீதான சர்வதேச விசாரணையை மேலும் சாத்தியமாக்கும் ஒரு நகர்வு என ஏ.எப்.சி. செய்தி நிறுவனம் தெரிவத்துள்ளது.

இலங்கையின் யுத்த மீறல்கள் குறித்து தன்னால் எதுவும் செய்ய முடியாதெனக் தெரிவித்த ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் இது தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் போன்ற அமைப்புக்களே நடவடிக்கை எடுக்க முடியும் என தெரிவித்தார். இந் நிலையில் இவ் நிபுணர்குழுவின் அறிக்கை தற்போது ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் மனித உரிமைகள் ஆணையாளருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. பேச்சாளர் மார்டீன் நேசேக்கி நேற்று முன்தினம் அறிவித்தார். இது தொடர்பாக இலங்கை அரசாங்கத்திற்கும் அறிவிக்கப்பட்டிருப்பதாக அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நிபுணர் குழுவின் அறிக்கை குறித்து தனது கருத்துக்களைத் தெரிவிக்குமாறு இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் அளிக்கப்பட்ட போதும் இலங்கைத்தரப்பு இவ் அறிக்கை குறித்து எவ்வித பதிலும் அளிக்கவில்லை. மாறாக வடக்கில் இடம் பெற்ற யுத்தம் குறித்து தனது சொந்த விசாரணை அறிக்கையொன்றை மட்டும் அனுப்பியிருந்தது. இலங்கையின் இந்த அறிக்கையும் தற்போது நிபுணர் குழுவின் அறிக்கையுடன் இணைந்து மனித உரிமை ஆணையகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஐ.நா. பேச்சாளர் மேலும் தெரிவித்தார். மனித உரிமைகள் ஆணையகத்திற்கு நிபுணர் குழுவின் அறிக்கை அனுப்பப்பட்டுள்ள போதும் இலங்கை அரசுமீது நடவடிக்கை எடுக்கும் படி கோரும் எவ்வித பரிந்துரைகளையும் செயலாளர் நாயகம் முன் வைக்கவில்லை.

இது தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து உறுப்பு நாடுகளில் தீர்மாணிக்க வேண்டும் என ஐ.நா. பேச்சாளர் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்துக்குத் தெரிவித்துள்ளார். ஐ.நா. செயலாளர் நாயகத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழு கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்ட தனது அறிக்கையில் போரில் ஈடுபட்ட இருபகுதியினரையும் யுத்தமீறல்கள் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கியபோதும் இலங்கை அரசு ஆயிரக்கணக்கில் படுகொலைகளிலும் மனித உரிமைமீறல்களிலும் சம்பந்தப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டியிருந்தது. அரச படைகளால் வன்னிப்பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட காட்டு மிராண்டித்தனமான தாக்குதல்கள் குறித்து இவ் அறிக்கை வெளிப்படுத்தியிருந்த விடயங்கள் இலங்கை அரசை கடும் சிக்கலுக்கும் கோபத்திற்கும் உள்ளாக்கியிருந்தது. இலங்கை அரச படைகள் வைத்தியசாலைகள், ஐ.நா. நிறுவன அமைப்புகள் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச்சங்க கப்பல்கள் போன்றவற்றின் மீது திட்டமிட்டத் தாக்குதல்களை மேற்கொண்டமை குறித்தும் சரணடைந்த விடுதலைப்புலிகள், உறுப்பினர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொண்றமைக் குறித்தும் பெண்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பாலியல் வல்லுறவு குறித்து ஐ.நா. அறிக்கை சுட்டிக்காட்டியிருந்தது.

அதேவேளை 3 இலட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களை மனித கேடயங்களாக பாவித்தமை, தப்பிச்செல்ல முயன்ற மக்கள் மீது தாக்குதல் நடத்தியமை போன்றக் குற்றக் குற்றச்சாட்டுக்களை விடுதலைப்புலிகள் மீதும் நிபுணர்குழு சுமத்தியிருந்தது. அரச படைகளின் தாக்குதல்களால் 2009 ஜனவரிமுதல் மே மாதம் வரையிலா காலப்பகுதியில் மட்டும் 10 ஆயிரம் வரையான மக்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும் பகுதியினர் யுத்தத்தின் இறுதி நாட்களில் இராணுவம் மேற்கொண்ட கனரக பீரங்கித் தாக்குதலால் வெளியுலகிற்கு தெரியாது கொல்லப்பட்டனர் என நிபுணர் குழு அறிக்கை தெரிவித்திருந்தது.

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை ஒரு தலைப்பட்சமானது எனத் தெரிவித்த இலங்கை அரசு இவ்வறிக்கைக்கு எதிராக தீவிரமான சர்வதேச பிரசாரத்தையும் மேற்கொண்டது. ஆனாலும் அமெரிக்க உள்ளிட்ட மேற்குலக நாடுகள் இலங்கை அரசு மீதான சர்வதேச விசாரணை குறித்து அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றன. மேற்குலகின் இந்த முயற்சிகள் காரணமாக அச்சமடைந்துள்ள இலங்கை தனக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் மேற்கொள்ளப்படக் கூடிய பிரேரணைகளை தடுப்பதற்கு தற்போது சீனா போன்ற தனது ஆசிய நண்பர்களை நாடியுள்ளது. வன்னியில் மக்கள் பெரும் தொகையில் கொல்லப்பட்ட காலத்தில் ஐ.நா. அழைப்பு செயற்பட்ட விதம் குறித்தும் நிபுணர் குழு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தது இக் காலப்பகுதியிலான ஐ.நாவின் செயற்பாடுகள் குறித்து தொரயா ஒபாய்ட் தலைமையிலான குழு தற்போது ஆராய்ந்து வருவதாக ஐ.நா. பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=22834

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அகூதா இணைப்பிற்கு, இன்னும் பல பாவங்கள் செய்ய அவனுக்கு தில் இருக்கு, ஆனா நம்ம மக்கள் இப்பவே நொந்து நூலாகி இருக்கிறார்கள், ஐ.நா இனியாவது விரைவாக செயல் பட்டு அவர்களை காப்பாற்றாதா???

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு நாடுகளின் சுயநலப்போக்கும் கண்துடைப்பும் தான் போர்க்குற்ற விசாரணை இழுபடுவதற்கான மிக முக்கிய காரணம்.3000 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டதற்கு அமெரிக்கர்களால் கொல்லப்பட்ட ஈராக்கியர்களும்,ஆப்பாகானித்தான் மக்களும் எண்ணிலடங்காது.50000 க்கும் மேற்பட்ட எம்மக்கள் சிறிலங்கா அரசால் கொல்லப்பட்டும் நடுநிலை ஐ.நா காலத்தை எவ்வளவுக்கு இழுக்க முடியுமோ அவ்வளவுக்கு இழுத்துக்கொண்டு இருக்கிறது.

துரியோதனனுக்கு உரித்துரிமையான நாடு, தந்தை குருடாகவிருந்துவிட்டதால், தம்மியிடம் நம்பிக்கை நிமித்தம் ஒப்படைக்கபட்டது. தம்பியின் மனைவி தான் வளர்ந்த நாட்டைக் கூட தன் நாடு என்று கூற உரிமையில்லாதவ்ள். அவள் ஒரு வளர்ப்பு மகள். செய்த தவறுகளினால், வாயும் வறுமாக இருக்கும்போது, தம்பியை ஏய்த்து திருமணம் செய்துவைக்கப்பட்டவள். அவளின் போறாதகாலமோ, தம்பியின் போறாதகாலமோ தம்பி ஒரு பேடி. அவள் பெத்தபிள்ளைகளும், சகலி பெத்தபிள்ளைகளும் பிறருக்கே. துரியோதனுடன் நாட்டின் இறமையை பங்கு போடதம்பியின் பக்கத்தில் யாரும் பிறக்கவில்லை. அப்படி ஒரு பங்கு கேட்க எந்தவகையிலும் ஒரு நியாயம் இருக்கவில்லை. பேடியான தம்பி கானகத்திற்கு ஆசை மனைவியுடன் சென்று, அங்கு கூட அவளை அனுபவிக்கமுடியாமல் மனம் வருந்தி தற்கொலை செய்து கொண்டான். (எனது கருத்தல்ல -Just one conspiracy theory) அந்த கணத்தில் ராச்சியத்தின் இறமை துரியோதனனிடம் எவ்வித தங்கு தடையுமின்றி சென்றுவிட்டது. இது பழய பாரதம்.

நமது பாரதமும் கருத்துக்களும்:

வெள்ளைக்காறன் தூசி தட்டி எழுந்தவுடன், நம்நிலம் எம்மிடம் வந்துவிட்டது.

கடவுளான கண்ணனுக்கே பாரதப்போரை நேர்மையாகவும், நீதியாகவும் கொண்டு நடத்தமுடியவில்லை. கண்ணனின் ஒரு பொய்யை மறைக்க யோகசீலர்கள ஒன்பது பொய் சொல்லி அவஸ்த்தை படுகிறார்கள். கேவலம், இந்த மானுடப்பிறப்புகள் அமைத்துவைத்திருக்கும் ஐ.நா எப்படி நீதியாகாவும் நேர்மையாகவும் செயல்படும்?

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

காஞ்சிப் பெரியவாள் கதை விடுகின்றார் போல உள்ளது!

என்னைப் பொறுத்த வரையில், கண்ணனுக்கும், அவர் பெயரைக் கடன் வாங்கியிருக்கும் நாராயணனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை!

நீதியற்ற முறையிலேயே 'மகாபாரத யுத்தம்' நடத்தி முடிக்கப் பட்டது!

அங்கே சொல்லப்பட்டது கவுரவர்கள் கெட்டவர்கள்!

ஆனால், இங்கே சொல்லப் பட்டது, புலிகள் பயங்கரவாதிகள்!

ஆனால், திருதராட்டினனுக்கே அரசுரிமை போயிருக்க வேண்டியது! அவன் குருடன் என்பதால், அவன் அந்தத் தகுதியை இழந்ததாகச் சொல்லப்பட்டது!

துரியோதனன், திருதராட்டினனின் இரத்த உறவு!

அவனுக்கு இல்லாத உரிமை, யாரோ, வேறு கிரகங்களுக்குப் பிறந்து விட்ட குந்தியின் மக்களுக்கு, எவ்வாறு செல்ல முடியும்?

பாண்டுவின் இரத்த உறவல்லவே அவர்கள்!

அந்தக் காலத்தில், அரசுரிமை ஆண் வழிமுறையில் தான் செல்வது, நாட்டு வழக்கு!

சிந்தித்துப் பாருங்கள், சிறிது நேரம்! :wub:

துரியோதனனுக்கு உரித்துரிமையான நாடு, தந்தை குருடாகவிருந்துவிட்டதால், தம்மியிடம் நம்பிக்கை நிமித்தம் ஒப்படைக்கபட்டது. தம்பியின் மனைவி தான் வளர்ந்த நாட்டைக் கூட தன் நாடு என்று கூற உரிமையில்லாதவ்ள். அவள் ஒரு வளர்ப்பு மகள். செய்த தவறுகளினால், வாயும் வறுமாக இருக்கும்போது, தம்பியை ஏய்த்து திருமணம் செய்துவைக்கப்பட்டவள். அவளின் போறாதகாலமோ, தம்பியின் போறாதகாலமோ தம்பி ஒரு பேடி. அவள் பெத்தபிள்ளைகளும், சகலி பெத்தபிள்ளைகளும் பிறருக்கே. துரியோதனுடன் நாட்டின் இறமையை பங்கு போடதம்பியின் பக்கத்தில் யாரும் பிறக்கவில்லை. அப்படி ஒரு பங்கு கேட்க எந்தவகையிலும் ஒரு நியாயம் இருக்கவில்லை. பேடியான தம்பி கானகத்திற்கு ஆசை மனைவியுடன் சென்று, அங்கு கூட அவளை அனுபவிக்கமுடியாமல் மனம் வருந்தி தற்கொலை செய்து கொண்டான். (எனது கருத்தல்ல -Just one conspiracy theory) அந்த கணத்தில் ராச்சியத்தின் இறமை துரியோதனனிடம் எவ்வித தங்கு தடையுமின்றி சென்றுவிட்டது. இது பழய பாரதம்.

உண்மையில் பாண்டு இதய நோயினால் அவஸ்த்தைப் பட்டதாகவும், அதனால்த்தான் குந்திதேவியுடன் தாம்பத்திய உறவில் சேரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டதாகவும் கடைசியில் மருத்துவ அறிவுரையை மீறியதால், இதயத்துடிப்பு அதிகரித்து, மாரடைப்பினால் இறந்து போனதுதான் சரியான தகவல். ஒருவேளை Bypass அறுவைச் சிகிச்சை செய்யப் பட்டிருந்தால் உயிரோடிருந்து ஏதாவது நல்லது செய்திருப்பார்.

“குருக்ஷேத்ரப் போர் நடந்துகொண்டு இருந்தது... துரோணாச்சாரியாரின் அம்பு மழைக்கு எவராலும் தாக்கு பிடிக்க இயலவில்லை. பாண்டவர் படையில் முக்கால் பலம் அழிந்துவிட்ட நிலை... துரோணர் ஒருவரே பாண்டவர்களுடைய படையில் பாதியைக் குறைத்துவிடுவார் என்ற கட்டம் தெரியவந்தது. கிருஷ்ணனுக்கு. இந்நிலை நீடித்தால் பாண்டவரின் தோல்வி உறுதி என்ற கட்டம். பொய் ப்ரயோகம் ஒன்றை உபயோகித்தால்தான் காரியம் நடக்கும் என்று தீர்மானித்தான் கிருஷ்ணன்.

பீமனை அழைத்தான்... பீமா நமது படைகளை "அசுவத்தாமன்" என்கிற கவுரவர்களுடைய யானை துவம்சம் செய்துகொண்டு இருக்கின்றது... உடன் அதன் தலையை உன் கதையால் அடித்துப் பிளந்துவிடு... என்று கட்டளை இட்டான். சொன்னதுதான் தாமதம்... நிறைவேற்றிக் காட்டினான் பீமன்.

கிருஷ்ணன் இப்போது தருமன் பக்கம் திரும்பினான். “தருமா... அஸ்வத்தாமன் இறந்தான் என்று உரக்கக் கூறும்...” என்று ஆக்ஞை பிறப்பித்தான்... பொய் ஒன்றைச் சொல்வதா என்று தயக்கம் காட்டினான் தருமன். அஸ்வத்தாமன் துரோணரின் புத்திரன் ஆயிற்றே எப்படி ஒரு பொய்யைச் சொல்வது... தடுமாற்றம் அடைந்த தருமனைப் பார்த்து கிருஷ்ணன் சொன்னான். “அஸ்வத்தாமன் என்ற யானை இறந்தது என்றுதானே சொல்லப்போகின்றீர்கள்... இதில் என்ன தயக்கம்... உரக்கக் கூறும்” மறுபடியும் ஆணையிட்டான்.

“கிருஷ்ணனின் பேச்சில் ஏதோ உள்ளர்த்தம் இருக்கும் என்று முடிவு கட்டியவராய் உண்மையை மறைத்து எப்படிச் சொல்வது என்று சற்று யோஜித்தார்... ‘அஸ்வத்தாமா ஹதம்...’ என்று கொஞ்சம் இடைவெளிவிட்டு ‘குஞ்சரஹ:’ என்று உரக்கக் கூறினான். அதே சமயம் சங்கநாதத்தை வேகமாக முழங்கினான் கிருஷ்ணன்... 'அஸ்வத்தாமன் ஹதம்' என்ற வார்த்தைகள் மட்டுமே துரோணரின் காதில் விழுந்தன. தருமன் சொன்னால் உண்மையாகத்தான் இருக்கும் என்று துரோணர் புரிந்துகொண்டார். நிலைகுலைந்து போனார்... போர் திசை மாறிப்போனது. கிருஷ்ணன் ஒரு பொய்யை எப்படி உண்மை போன்று அழகாக மறைத்துச் சொல்லச் சொன்னான் பார்த்தீர்களா... உண்மையில் பார்த்தால் கிருஷ்ணனும் பொய் சொல்லச் சொல்லவில்லை... தருமனும் பொய் சொல்லவில்லை... நல்ல காரியம் ஒன்று நடக்க உண்மை மறைத்துச் சொல்லப்பட்டது... ஒரு காரியம் நடக்காமல் இருப்பதற்கும் பொய் உதவுகின்றது.

http://www.brahmintoday.org/magazine/2010_issues/bt79-0916_false-truth.php

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி பார்க்கபோனால் பாண்டவர்கள் வேற்றுகிரக வாசிக்களா??

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி பார்க்கபோனால் பாண்டவர்கள் வேற்றுகிரக வாசிக்களா??

கர்ணனின் தகப்பன் -சூரியன்

யுதிஷ்டிரன் -தருமதேவதை

அர்ச்சுனன்-இந்திரன்

வீமன்-வாயுபகவான்

நகுல சகாதேவர்கள்- ராகுவும். கேதுவும்

மேலுள்ள ஒரு தகப்பன் மாறும், நிச்சயமாகப் பூவுலகவாசிகள் இல்லை!!!

  • தொடங்கியவர்

துரியோதனப் பண்பாடு வேண்டவே வேண்டாம்

பாரதப் போரில் கண்ணன் அருச்சுணனுக்கு சாரதியாக இருந்து தேர் ஓட்டினான். சாரதி சாமர்த்தியமானவன் என்றால் தாக்குதல் சுலபம். கண்ணனின் தேரோட்டும் சாமர்த்தியமே பாண்டவர்களின் வெற்றிக்கு மூல காரணம். அர்ச்சுணனுக்கு தேரோடும் அளவுக்கு கண்ணனுக்கு என்ன அவசியம் என்றால் எதுவுமே இல்லை. அப்படியாயின் ஏன் தேர் ஓட்டினான்? எல்லாம் துரியோதனின் இராஜதந்திரமற்ற செயல்தான். போரை நிறுத்துவதற்காக கண்ணன் தூதுவனாக துரியோதனிடம் செல்கின்றான். துரியோதனனோ அமைச்சர் மேர்வின் சில்வாவின் பாணியில் கண்ணனை அவமானப்படுத்துகிறார்.

இதனால் ஏற்பட்ட ஆத்திரமே கண்ணன் பார்த்தனுக்கு சாரதியாகக் காரணமாயிற்று. இது ஒரு புறம்இருக்க, அமெரிக்க நாட்டின் தூதுவர் ரொபேர்ட் ஓ பிளேக் நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார். யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த அவர் குடாநாட்டு நிலைவரங்களை அறியும் பொருட்டு யாழ். செயலகத்திற்குச் சென்றார். இவ்வாறு யாழ்.செயலகத்திற்குச் சென்ற ரொபேர்ட் ஓ பிளேகிற்கு எதுவித வரவேற்பும் அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டின் பின்னணியில் அதிகாரிகளைக் குறைகாண்பது எமது நோக்கமல்ல. மாறாக ரொபேர்ட் ஓ பிளேக் அமெரிக்க நாட்டுத் தூதராக - அமெரிக்க மக்களின் பிரதிநிதியாக - அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் தூதுவராக யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளார். எனவே அவரை வரவேற்பது அமெரிக்க நாட்டு மக்களுக்குக் கொடுக்கின்ற கெளரவமாகும்.

இங்கு தனிப்பட்ட பிளேக் பற்றிச் சிந்திப்பது பொருத்தமல்ல. இருந்தும் யாழ். செயலகத்தில் ரொபேர்ட் ஓ பிளேக்கிற்கு வரவேற்பு வழங்கப்படவில்லை என்பது தமிழ்மக்களுக்கு மிகுந்த வேதனையை கொடுத்துள்ளது. யாழ்ப்பாணத்து மக்களின் பண்பாட்டு விழுமியத்தின் சிகரம் என்பது வந்தாரை வரவேற்கும் பண்பாகும். இவ்விதம் வந்தாரை வரவேற்கும் பண்பாட்டை செய்யத் தவறிவிட்டோம் என்பதே வேதனைக்குக் காரணம். இதற்கு அப்பால் ஒரு நாட்டின் தூதுவர் வரும் போது அவர் எந்நோக்கத்துடன் தூதை மேற்கொள்கின்றார் என்று பாராமல் அவருக்கு உரிய மதிப்பை வழங்குவது உலகம் எங்கும் பரவியிருக்கும் பொதுப் பண்பாடாகும்.

நிலைமை இதுவாக இருக்கும் போது யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ரொபேர்ட் ஓ பிளேக், தமிழ் மக்களுக்கு உதவுவதற்காகவே வந்திருந்தார். அப்படியானால் யாழ்ப்பாணத்து மண்ணில் அவருக்கான வரவேற்பு மிகுதியாக இருந்திருக்க வேண்டும். என்ன செய்வது? தமிழ் அதிகாரிகள் பலர் கடுமையாகப் பயப்படுகிறார்கள். சிலர் பயப்படுவது போல நடிக்கிறார்கள். இன்னும் சிலரோ பயம் என்பதை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். தமிழ் அதிகாரிகளிடம் இருக்கக் கூடிய இந்த மூன்று தன்மையும் எங்கள் இனத்தின் விடியலுக்குத் தடையாகவே இருக்கின்றது. இதை உடைத்தெறிந்து தமிழ் அதிகாரிகள் தங்களுக்குள் ஒற்றுமையைப் பேணி, தமிழ் இனத்திற்கு உதவவேண்டும். ஒற்றுமை எங்களிடம் இருக்குமாயின் எவரும் எங்களை எதுவும் செய்துவிட முடியாது.

http://www.valampuri...ws.php?ID=22874

Edited by akootha

நம்ம வலம்புரி மாமா திரும்பவும் ஒருதடவை மலை வயிறு நொந்து..........

பாரதத்தை வைத்து ஒரு சக்கைப் போடு போட்டிருக்கிறார். இருந்தும் இன்னும் கொஞசம் கூடவாக பாரதத்தை படிச்சிருந்தால் நல்லாய் இருந்திருக்கும். கொஞசம் வரிக்கு வரி தெளிவாய் படிக்கவேண்டும் என்றால் நம்ம "சின்னகருத்து" இருக்கார். வடமொழி சுலோகங்களை நேரே வேதவியாசர் புத்கத்திலேயே இருந்து எடுத்து விளாசி பொருள் சொல்லிக் கொடுக்க வல்லவர். வலம்புரி மாமா இப்போதைக்கு நாம படிச்சமாதிரி மாதிரி யாராவது தெருக்கூத்துக்களிடம் பாரதம் படிச்சாலே மிச்சாமிச்சம்.

துரியோதனப் பண்பாடு வேண்டவே வேண்டாம்

பாரதப் போரில் கண்ணன் அருச்சுணனுக்கு சாரதியாக இருந்து தேர் ஓட்டினான். சாரதி சாமர்த்தியமானவன் என்றால் தாக்குதல் சுலபம். கண்ணனின் தேரோட்டும் சாமர்த்தியமே பாண்டவர்களின் வெற்றிக்கு மூல காரணம். அர்ச்சுணனுக்கு தேரோடும் அளவுக்கு கண்ணனுக்கு என்ன அவசியம் என்றால் எதுவுமே இல்லை. அப்படியாயின் ஏன் தேர் ஓட்டினான்?.

போக்கிரி கண்ணன் பண்பாடு வேண்டவே வேண்டாம்

கேள்விவரைக்கும் நல்லாத்தான் கொண்டுபோயிருக்கிறார் பாரதத்தை. பதில் வரேகுள்ளே தான் சோடை போகவிட்டுவிட்டார் கதையை.

மாமா தன் கதையில் அமெரிக்க நாட்டு ராசங்க அமைச்சின் துணைக் காரியதரிசி, நம்ம ரோபோட் பிளேக்கிக்கு, ஒழுங்காய் ப்ரமோசன் கொடுத்து கிருஸ்ண பரமாத்மா பதவிவரைக்கும் எடுத்து சென்றிருக்கிறார். ஆனால் இந்த நவநீத கிருஸ்ணனோ துரியோதனனை நண்பனாக மற்றிக்கொண்டு, சற்றலைட்டை வைச்சு பார்த்திட்டு, ரெமோட்கொண்றோலறாலை தேரையோட்டி, அரிச்சுனன் ஆண்ட பூமியிலை சின்ன ஒரு புல்லு கூடதப்பி பிழைக்காமல் சுட்டு பொசுக்கிச்சுவிட்டர்.

போரை நிறுத்துவதற்காக கண்ணன் தூதுவனாக துரியோதனிடம் செல்கின்றான். துரியோதனனோ அமைச்சர் மேர்வின் சில்வாவின் பாணியில் கண்ணனை அவமானப்படுத்துகிறார். இதனால் ஏற்பட்ட ஆத்திரமே கண்ணன் பார்த்தனுக்கு சாரதியாகக் காரணமாயிற்று.

Wrong again.

(துரியோதனன் மீது) ஆத்திரத்தால் கண்ணன் பார்த்தனுக்கு சாரதியாகவில்லை.

பாரதப்போரை நடத்த கண்ணன் செய்த பாதக கொலைகள் சில:

  1. மருகன் அபிமன்னுவை கர்ப்பத்தில் வைத்து கொன்றான்.
  2. கர்னன் சிசுவை கர்பத்திலிருந்து வந்தவுடன் ஆற்றிலேறிந்து கொன்றான்.
  3. அற்புத வீரன் அராவாணை களம் காண முதல் பலியெடுத்தான்.
  4. சின்ன பாண்டவர் ஒருவரையும் தப்பவிடாமல் கொலை செய்தான்.
  5. வீஷ்மர், துரோணர் போன்ற தியாக செம்மல்களை, சரித்திர புருஷ்சர்களை சேராத இடம் சேரவைத்து கேவலப்படுத்தி கொலை செய்தான்.
  6. குந்திக்கு தவறி ஒரு வாக்கு கொடுத்துவிட்டதால், பாணடவரை மட்டும் தப்பிப் போகவிட்டான். இதற்கும் துரியோதனன் மீதுவந்த கோபதிற்கும் என்ன முடிச்சு போடுகிறார் வலம்புரி மாமா.

கண்ணன் போரை தொடக்கி வைக்க துரியொதனனிடமும் குந்தியிடமும் ஒரே நாளில்த்தான் பயணம் சென்றான். துரியோதனனை சீண்டி, தொடக்கிவைத்துவிட்டு, குந்தியையும் அதற்குள் இழுத்து மாட்டிவிட்டு, சந்திரனை மூடி மறைத்துவிட்டு,

தான் நிச்சயித்த திகதிக்கு போர்தொடங்க ஆயத்தங்களை எல்லாவற்றையும் செய்து முடித்து விட்டு திரும்பி வந்த கண்ணா துரியோதனனிடம் சமாதானம் பேசப் போனான்.

இருந்தும், மேவின் சில்வா ரோபேட் பிளேக்கை வரவேற்ற நிகழ்ச்சிகளை மாமாவைத்தவிர யாரும் அறிந்ததில்லை. ஆனால் இலங்கை அரசு பிளேக்கை வர அனுமதிக்க மறுத்த ஒவ்வோருதடவையையும் மற்றவர்கள் எல்லோரும் அறிவர். ஏதோ கஸ்டபட்டு பெமிசன் வாங்கி வந்தபின், JVP, கோத்தபாயா, மகிந்தா, மற்றைய மந்திரிகள் அவரை நடத்திய விதங்களையும் எல்லோரும் அறிவர்.

கண்ணன் தான் போகுமிடத்தில் தனக்கு எத்தகைய வரவேற்பு இருக்குமென்று தெரிந்து கொண்டுதான் போனான். போன இடத்தில், மன்னனை இழுத்து காலடியில் விழுத்தி, வில்லங்கமாக மரியாதையை பிடுங்கி எடுத்து, நீ மன்னன் மட்டும்தான், ஆனால் நான் கடவுளும் கூட என்று தெரிந்து வைத்துக்கொள் என்று செய்துகாட்டிவிட்டுத்தான் போனான். பிளேக்கு தான் யார் என்று நிரூபித்து காட்ட எத்தனையோ சந்தர்ப்பம் வந்தும், தானே தான் துரியோதனனின் காலடியில் திரும்ப திரும்ப போய்விழுந்தார்.

அமெரிக்க நாட்டின் தூதுவர் ரொபேர்ட் ஓ பிளேக் நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார். யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த அவர் குடாநாட்டு நிலைவரங்களை அறியும் பொருட்டு யாழ். செயலகத்திற்குச் சென்றார். இவ்வாறு யாழ்.செயலகத்திற்குச் சென்ற ரொபேர்ட் ஓ பிளேகிற்கு எதுவித வரவேற்பும் அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ராசா, ராமனுக்கு நொண்டி குதிரையை கொடுத்தார். தனது குதிரையை பார்க்க விரும்பி, சுகமான ஒருநேரம், சௌகரியமாக ராச லாயத்திற்குச் சென்று எட்டிப் பார்த்தார். பட்டினியில் கிடந்த குதிரை பளிச்சென்று ராசாவின் தாடியை பிடுங்கியெடுத்து விட்டது.

தமிழர்கள் அல்ல பிளேக்கை தாடியில் பிடித்து இழுத்தது, இருந்தும் தமிழருக்கு வம்பைச் செய்து விட்டு எந்த முகத்தோடு நட்பை எதிர்பார்த்து தமிழீழம் சென்றவர் பிளேக்?. அமெரிக்க அரசு இப்படி ஒன்றும் தூதுவரை அனுப்பி தமிழரை சோதிக்க வேண்டியதேவையில்லை. அவர்கள் அமெரிக்கா தேடிவந்து “Obama, Obama You are our only Hope” என்று பாதுகை எழுதிப் பிடித்துகொண்டு வருடக்கணக்காக வெள்ளை மாளிகையின் முன் தவம் கிடந்தவர்கள்தான். Tamils for Obama வும், Tamils for Hilary யும், அமெரிக்க தேர்தலுக்கு பணம் சேர்த்து கொடுத்தபோது, இவரும், இலங்கை அரசும், இந்த பணம் சேர்ப்பவர்கள் பயங்கரவாதிகள் என்று, இவர்களை FBI விசாரிக்க வேண்டும் என்றுதான் கூக்குரலிட்டவர்கள்

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

"கண்ணனின் சாதனைகளை நாம் செய்ய முற்பட்டால் இந்தச் சமுதாயம் ஏற்றுக்கொள்ளுமா?

திருடுதல் சாதனையா? யாரோ ஒருவன் நம் வீட்டுப் பெண்களை கோபிகைகளாகக் கருதிச் சீண்டினால் நாம் பொறுத்துக்கொள்வோமா?

மகாபாரதத்தைப் பொறுத்தவரை கண்ணன் முரண்பாடுகளின் மொத்த உருவமாகத் தெரிகின்றான். தான் ஒருபக்கமும் தன் படை மறுபக்கமும் இருந்து போரிடுவது எங்ஙனம்? கீதையின் தான் கூறுபவற்றைக் கிஞ்சித்தேனும் தனது வாழ்வில் கடைபிடித்தேனாயின் இல்லை.

குருட்சேத்திர யுத்தம் என்று ஒன்று நிகழ்ந்ததா என்பதே சந்தேகத்திற்குரியது.

18 அக்குரோணிப் படைகள் நின்றதாகக் கூறப்படுகின்றது,

ஒரு அக்குரோணி (Akshauhini) என்பது

21,870 இரதங்கள்,

21,870 யானைகள்,

65,610 குதிரைவீரர்கள்

109,350 காலாட்படையினர்.

ஒரு இரதத்திற்கு இருவர் எனக்கொண்டால், 21,870 x 2 = 43,740 நபர்கள்

ஒரு யாணைக்கு இருவர் எனக் கொண்டால், 21,870 x 2 = 43,740 நபர்கள்

ஒரு குதிரைக்கு ஒரு வீரன் எனக் கொண்டால் 65,610 x 1 = 65,610 நபர்கள்

109,350 காலாட்படை நபர்கள், ஆக மொத்தம்,

43,740 + 43,740 + 65,610 + 109,350 = 262,440 நபர்கள்,

18 அக்குரோணி படைக்கு 262,440 x 18 = 4,723,920 நபர்கள்.

இவர்கள் யுத்தத்தில் பங்கெடுத்தவர்கள் மட்டுமே, இவர்களுக்கு உதவி செய்ய இன்னும் பலர் இருந்திருப்பர், யுத்தத்தில் பங்கெடுக்காதோரும் இருந்திருப்பர், பெண்கள் குழந்தைகளும் இருந்திருப்பர், நாட்டு மக்களும் இருந்திருப்பர் என்று கணக்கெடுத்துப் பார்த்தால் அக்காலத்தில், அதாவது மகாபாரதம் நிகழ்ந்ததாகக் கூறப்படும் காலத்தில் இவ்வளவு மக்கள் தொகை இருந்திருக்குமா?

குருட்சேத்திரம் என்பது இத்தனை நபர்களைக் கொண்ட படையணிகளை நிறுத்தும் அளவிற்குப் பெரிய திடலா?

கேள்விகள் நம் சிந்தனைக்கே....

அது என்ன சொல்லிவைத்தமாதிரி பெரும்பாலான ம(ட)த நூல்கள் எல்லாம் ஒரு விடயத்தைச் சொல்வதற்கு முன்பாகவே, இது உங்களுக்குப் புரியாது, அல்லது மிகுந்த அறிவிருந்தால் மட்டுமே புரியும், அல்லது கடவுள் மீது முழு நம்பிக்கை இருந்தால்தான் புரியும் என்று சொல்லுகின்றனவே....?

எனக்கு ஒரு திடைப்படக் காட்சி நினைவிற்கு வருகின்றது. தமிழின் நகைச்சுவை நடிகர் வடிவேலு அவர்கள் ஒரு திரைப்படத்தில், கடவுளைக் காட்டுவதாகக்கூறி ஊர்மக்களிடம் பணம் வசூலித்துவிடுவார். ஒரு மலையைக் காட்டி அதோ கடவுள் தெரிகிறார் என்றதும் ஊர் மக்கள் விழிப்பார்கள். எவனெவன் மனைவி பத்தினியோ அவன் கண்களுக்கு மட்டுமே கடவுள் தெரிவார் என்றும் கூறிவிடுவார். உடனே எல்லோரும் ஆம் எனக்கு கடவுள் தெரிகிறார் என்று கூவுவார்கள். வேறு வழி...?

கீதையைப் படியுங்கள் பின் பெருமை பேசுங்கள், படிக்காமல் பெருமை பேசுதல் வேண்டாமே. கண்ணனின் வாழ்க்கை வரலாறாகக் கூறப்படுவதை முழுமையாகப் படியுங்கள். பின்னர் அவன் பெருமை பேசலாம்.

அது என்ன தர்ப்பணம்? நாம் அந்தணர்க்கு கொடுக்கும் பண்டங்கள் நமது முன்னோர்களுக்குப் போய்ச்சேருவதாக அர்த்தமா? என் தாத்தா என்னைச் சிறுவயதில் நன்றாக அடிப்பார். இப்பொழுது நான் அவரை அடிக்க விரும்பினால் அந்தணர்களை அடித்தால் என் தாத்தாவிற்குப் போய்ச் சேருமா?

ஒரு கதாகாலட்சேபம், உன் சகோதரிக்குப் பிறக்கும் எட்டாவது குழந்தையால் உனக்கு மரணம் என கம்சனுக்கு அசரீரி ஒலித்ததாம், அதனால் தன் சகோதரியையும் அவளது கணவரையும் சிறையில் தள்ளி, அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளைக் கொன்றுவிட ஆணையிட்டான் கம்சன் என்று ஒருவர் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்.

அங்கிருந்த சிறுவன் ஒருவன் கேட்டானாம், ""அதுதான் எட்டாவது குழந்தையால் மரணம் என்று தெரிந்துவிட்டதே, பின்னும் ஏன் அவர்கள் இருவரையும் ஒன்றாகச் சிறையிலடைத்தான் கம்சன்?""

அவன் காதைத் திருகி, அதிகப்பிரசங்கி என்ற வசைமொழியோடு வீட்டிற்கு அனுப்பியிருப்பார்கள்.

அச்சிறுவன் கேட்டதுபோல் இன்று நாம் யாரும் கேட்பதில்லையே ஏன்?

"

நன்றி பாபு

www.thamilworld.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.