Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகை அச்சுறுத்தும் உயிர்க் கொல்லி நோய்

Featured Replies

உலகில் காணப்படும் ஆட்கொல்லி நோய்களில் நீரிழிவு நோயும் ஒன்றாகக் கருதப்படுகின்றது.

ஆரம்ப காலங்களில் இந்நோய் தொடர்பான விழிப்புணர்வு நம்மிடையே போதியளவு காணப்படாத போதிலும் தற்போது அந்நிலை மாற்றமடைந்து வருகின்றது.

நீரிழிவு நோய் தொடர்பிலும் அதன் வகை தொடர்பிலும் அதனை எவ்வாறு தடுக்கலாம் என்பது தொடர்பிலும் நாம் அறிவோம்.

இந்நிலையில் சர்வதேச நீரிழிவு ஸ்தாபனம் மற்றும் உலக சுகாதார ஸ்தாபனம் ஆகியவற்றினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் சிலவற்றைக் காணலாம்.

உலகம் பூராகவும் சுமார் 366 மில்லியன் பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச நீரிழிவு ஸ்தாபனம் தெரிவிக்கும் அதேவேளை 344 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிடுகின்றது.
வருடாந்தம் 4.6 மில்லியன் பேர் இதனால் உயிரிழக்கின்றனர்.அதாவது 7 செக்கனுக்கு ஒருவர் வீதம் இந் நோயினால் மரணிக்கின்றனர்.

வருடாந்தம் 465 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நீரிழிவு நோய் எதிர்ப்புக்காக செலவழிக்கப்படுகின்றது.

2004 ஆம் ஆண்டில் மாத்திரம் சுமார் 3.4 மில்லியன் பேர் நீரிழிவு நோயால் உயிரிழந்தனர்.

இந்நோயினால் ஏற்படும் உயிரிழப்புகளில் 80% குறைந்த மற்றும் நடுத்தர வருமானத்தைக் கொண்ட நாடுகளிலேயே ஏற்படுகின்றது.

நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள 50 சதவீதத்தினர் இதயம் சம்பந்தப்படட நோய்களாலும், பக்கவாதம் போன்ற நோய்களாலுமே இறப்பைத் தழுவ நேரிடுகின்றது.

நீரிழிவு நோயாளிகளில் 2 சதவீதமானவர்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டு 15 வருடங்களின் பின்னர் தமது பார்வையை இழப்பதுன், 10 % பார்வைக் குறைபாடுகளுக்கு முகங்கொடுக்கின்றனர்.

நீரிழிவு நோயாளர்களில் 10 - 20 சதவீதமானவர்கள் சிறுநீரக கோளாறினால் இறக்கின்றனர்.

இந்நோயானது தனி நபரை மட்டுமல்லாது அவரது குடும்பத்தினையும் பொருளாதார ரீதியாக பாதிக்கின்றது.

நாட்டின் சுகாதரத்துறைக்கும் நீரிழிவு நோயானது பாரிய சவால் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.virakesar...asp?key_c=33848

Edited by கோமகன்

எம்மவர் மத்தியில் இந்த நீரிழிவு உயிர்க்கொல்லி பற்றிய அறிவுரைகள்/ விழிப்புணர்வுகள் போதாது என்பது நிதர்சனம்.

இவை பற்றி ஊடகங்கள், எமது வைத்தியர்கள், சமூக ஆர்வலர்கள் இன்னும் கூடுதலாக அக்கறைகொள்ள வேண்டும்.

தகவலுக்கு நன்றி கோமகன், ஆசிய நாட்டவரில் அதிகமானோருக்கு இந்த நோய் உள்ளது.

இந்த இணைப்பில் நீரிழிவு நோயைப் பற்றிய தகவல்கள் பல உள்ளன...

What is Type 2 diabetes?

Diabetes is a condition where the amount of glucose in your blood is too high because your body can’t use it properly.

Glucose comes from digesting carbohydrates from various kinds of food and drink including starchy foods such as breads, potatoes and rice, fruit, some dairy products, sugar and other sweet foods. Your liver also produces glucose. Your pancreas produces insulin, which helps get the glucose into your body’s cells, where it is used for energy.

But in Type 2 diabetes, the amount of insulin produced is not enough or does not work properly and so glucose levels build up in your blood. Too much glucose in your blood can damage blood vessels, nerves and lead to blindness.

The main symptoms of diabetes include:

  • Passing urine frequently
  • Increased thirst
  • Extreme tiredness
  • (Sometimes) unexplained weight loss

  • Genital itching or recurrent episodes of thrush
  • Slow healing of wounds
  • Blurred vision

intro_screen.jpg

If you have any of these symptoms you should immediately see a doctor.

http://www.diabetes....CFW8JtAodi2TOPg

உங்களுக்கு இந்த நோய் உள்ளதா என்று அண்ணளவாக அறிய இங்கே சென்று பாருங்கள்...

http://www.diabetes....CFW8JtAodi2TOPg

  • தொடங்கியவர்

நன்றி குட்டி , அகோதா . எனக்கும் ஒருவருடத்திற்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது . உடனடியாக 25 கிலோ குறைந்தேன் , எல்லாவற்ரிலும் பூரண கட்டுப்பாடு இப்பொழுது . எனக்கு வந்தது ஒரவருக்கும் வரக்கூடாது என்ற அக்கறையினாலேயே இந்தப் பதிவைப் போட்டேன் . மேலும் , இங்கு எம்மவரிடையே கட்டுப்பாடற்ர உணவுப் பழக்க வளக்கங்களினாலேயே இதன் தாக்கம் அதிகம் என்பது எனது அபிப்பிராயம் .

பொதுவாக தேநீரில் நாம் கூடுதலாக சீனி சேர்ப்பதுண்டு. சீனியைப்போடாமல் ஒரு கிண்ணத்துக்குள் மேசையில் வைத்தல் அவரவர் தேவைக்கு ஏற்ப சேர்த்துக்கொள்ளலாம்.

(சிறிமா காலத்தில் கூப்பன் முறையில் தான் சீனி, அதை நக்கித்தான் பலரும் குடித்தனர். அதிலும் ஒரு 'சுகம்')

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக தேநீரில் நாம் கூடுதலாக சீனி சேர்ப்பதுண்டு. சீனியைப்போடாமல் ஒரு கிண்ணத்துக்குள் மேசையில் வைத்தல் அவரவர் தேவைக்கு ஏற்ப சேர்த்துக்கொள்ளலாம்.

(சிறிமா காலத்தில் கூப்பன் முறையில் தான் சீனி, அதை நக்கித்தான் பலரும் குடித்தனர். அதிலும் ஒரு 'சுகம்')

யாரும் வீட்டுக்கு போனால் தேனீர் ஊத்தித்தந்தால் குடிக்கவே முடியாமல் இருக்கும். சாயமும் இருக்காது ஓரே சீனியை அள்ளிப்போட்டு தருவினம்.

நன்றி குட்டி , அகோதா . எனக்கும் ஒருவருடத்திற்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது . உடனடியாக 25 கிலோ குறைந்தேன் , எல்லாவற்ரிலும் பூரண கட்டுப்பாடு இப்பொழுது . எனக்கு வந்தது ஒரவருக்கும் வரக்கூடாது என்ற அக்கறையினாலேயே இந்தப் பதிவைப் போட்டேன் . மேலும் , இங்கு எம்மவரிடையே கட்டுப்பாடற்ர உணவுப் பழக்க வளக்கங்களினாலேயே இதன் தாக்கம் அதிகம் என்பது எனது அபிப்பிராயம் .

குடும்பத்தினருக்கும் இந்த நோய் இருந்தது... குடும்பத்தில் ஒருவருக்கு வந்தால், அடுத்த சந்ததியினருக்கு வர வாய்ப்புக்கள் உள்ளதெனவும் இருப்பினும் உணவுக் கட்டுப்பாட்டால் இந்த நோய் வரும் வயதை பிற்போடலாம் என்றும் GP கூறி இருந்தார்...

உணவுக் கட்டுப்பாடு முக்கியம், அதில் முக்கியம் மது அருந்துவதை நிறுத்துவது!

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு உப்பு, இனிப்புப் பதார்த்தங்களைக் குறைபதோடு பாவற்காயை தினமும் உணவில் சேர்ப்பது மிகவும் நல்லது. (எண்ணெய் சேர்ப்பதை விட, பச்சையாக அல்லது அவித்து சாப்பிடுவது சிறந்தது)

  • தொடங்கியவர்

நான் மது அருந்துவதில்லை . எப்பொழுதும் டயறி பூட்டுகள் மற்ரும் சாமான்கள் வாங்கும்பொழுது கிளைசைட் அளவைப் பாத்துத் தான் வாங்கவேன் . எண்ணை எதிலும் ஒரு மேசக் கரண்டி தான் . கூடுதலாக 100கிறாம் சோறு , அதிகளவு அவித்த காய்கறிகள் தான் :)சாப்பாடு தினம் இரண்டு முறை கிளசட் அளவு பாத்துக்கொள்வேன் :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு இன்னும் இல்லை...ஆனால் வரும் வரலாம் என சொல்கிறார்கள். வாரத்தில் இருமுறையாவது நீரிழிவு நோய்க்கான யோகாசனங்கள் செய்து வருகின்றேன்.அதனால் அதற்கான மாத்திரைகள் இன்னும் இல்லை.வேலையிடத்தில் இறுகிய மனதை வீட்டில் மனைவி பிள்ளைகள் மற்றும் மனதிற்கு இதமான இசைகள் மூலம் மனதை தளர்த்திக்கொள்கிறேன்.

தனிப்பட்ட காப்புறுதி செய்யும்பொழுதும் கேட்கப்படும் ஒரு கேள்வி, ' உங்களுக்கு நீரிழிவு உள்ளதா?" .

ஆம் என்றால் மாதாந்த கட்டணம் கூடி விடுகின்றது :(

  • கருத்துக்கள உறவுகள்

குட்டி கூறியது போல இது ஒரு பரம்பரை வியாதி!

நானும் குமாரசாமி அண்ணை போலத் தான்!

வாழ்கையை,வாழ்க்கையாக வாழ விடாத ஒரு கேட்ட வியாதி!

இணைப்புக்கு நன்றிகள், கோமகன்!

'STRESS' இற்குத் தமிழ் தேடிக்கொண்டிரஐந்தேன் கு.சா!

'இறுகிய மனது' நன்றிகள்!

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனிப்பட்ட காப்புறுதி செய்யும்பொழுதும் கேட்கப்படும் ஒரு கேள்வி, ' உங்களுக்கு நீரிழிவு உள்ளதா?" .

ஆம் என்றால் மாதாந்த கட்டணம் கூடி விடுகின்றது :(

நெஞ்சுக்கை குத்துதண்டு டொக்டரிட்டை போனனீரோ??எண்டு கேள்விகேட்ட இடத்திலை ஓமெண்டு புள்ளடி போட்டாலும் எக்கச்சக்கமாய் வரும்....எல்லாத்துக்கும் வயது அடிப்படையும் இருக்கெல்லோ!!!!

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட ஐயாவுக்கு இருந்தது, எனக்கு இன்னும் வரவில்லை, கவனமாக இருக்கிறன் பார்ப்பம், எனக்கு பிடித்த மரக்கறிகள் பாவற்காய், அகத்தி, வாழைப் பூ,......

நன்றி கோமகன் பகிர்வுக்கு

  • 1 year later...
  • தொடங்கியவர்

கருத்துகளைப் பதிந்த அனைத்துக் கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் :) .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.