Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய முடியாது: மத்திய அரசு பதில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடந்த ஆண்டு அரசு முறை பயணமாக அந்த நாட்டு அதிபர் ராஜபக்சேவுடன் இந்தியாவுக்கு வந்தார். அப்போது அவரை உடனடியாக கைது செய்ய உத்தரவிடக்கோரி சிறை கைதிகள் உரிமைகள் அமைப்பின் ஒருங்கிணைப் பாளர் வக்கீல் புகழேந்தி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தனது மனுவில், ’’சென்னை சூளைமேட்டில் திருநாவுக்கரசு என்ற வாலிபர் 1986-ல் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் டக்ளஸ் தேவானந்தா மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் கைதான டக்ளஸ் தேவானந்தா ஜாமீனில் வெளிவந்தார். பின்னர் இலங்கைக்கு தப்பிச் சென்றார்.

இவர் மீதான வழக்கு சென்னை 6-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கில் 1994-ல் டக்ளசுக்கு எதிராக தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து வாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆகவே அவரை உடனடியாக கைது செய்யுமாறு சென்னை போலீசுக்கு உத்தரவிட வேண்டும்’’என்று கூறியிருந்தார்.

இந்த மனுவிற்கு மத்திய அரசு சார்பில் இலங்கைக்கான வெளியுறவு துறை சார்பு செயலாளர் கே.எம்.பி.சர்மா பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ‘’கைதிகள் பரிமாற்றம் தொடர்பாக இலங்கையுடன் இந்தியா எந்த உடன்படிக்கையும் செய்து கொள்ளவில்லை. இருப்பினும் கைதிகள் பரிமாற்றம் சட்டத்தின்கீழ் இரு நாடுகளுக்கு இடையே 1978-ல் கைதிகள் பரிமாற்றம் தொடர்பாக ஒரு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

டக்ளஸ் தேவானந்தா அந்நாட்டு அமைச்சராக உள்ளார். இந்தியாவுக்கு வருகை தந்தபோது அவரை கைது செய்ய முடியாது. அவரை கைது செய்வது என்பது இரு நாடுகளுக்கிடையேயான தூதரக உறவுக்கு எதிரானதாகும்.

ஆகவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’’என்று கூறப்பட்டு உள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நாகப்பன், சத்திய நாராயணன் ஆகியோர் அடுத்தக்கட்ட விசாரணையை 4 வார காலத்துக்கு தள்ளி வைத்தனர்.

http://www.nakkheera...ws.aspx?N=61777

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பேச்சுக்கு தலைவர் பிரபாகரன் சிறிலங்காவின் அமைச்சராக இருந்தால் ராஜீவ் கொலை வழக்கை மூடி விடுவார்களா?

ஒரு பேச்சுக்கு தலைவர் பிரபாகரன் சிறிலங்காவின் அமைச்சராக இருந்தால் ராஜீவ் கொலை வழக்கை மூடி விடுவார்களா?

.அவரு அமைச்சர் பதவிக்கு ஆசை பட்டிருந்தா ........ ராஜீவ் கொலை நடந்திருக்காது..அப்டி பேசிகிறாய்ங்க!

என்ன ...Kind of புலவர் நீங்க..?

மக்டொனால்ட்ல ஒரு பர்கர் வாங்கி தந்தாலே... இஸ்டம்போல பாடிடுவீங்கபோல இருக்கே! <_<

  • கருத்துக்கள உறவுகள்

அது தானே முன் ஜாக்கிரதையாக ஒரு பேச்சுக்குன்னு சொன்னேன் அறிவிலி!!!!!!!!!!!!!!!!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவன் அவ்வளவு துரோகம் தமிழர்களுக்கு செய்து டில்லி அதிகார வர்க்கத்தினதும் சிங்களத்தினதும் கையாள இருக்கும் வரையிலும் இவனை வீட்டில் வழக்கும் நாய் போல வைத்திருப்பார்கள் சிங்களவனும் டில்லி அதிகாரவர்க்கமும்.

  • கருத்துக்கள உறவுகள்

டக்ளஸ் கொன்றது ஒரு தமிழனை...

ஒன்று குறைந்தது என்ற கணக்கு அவர்களுக்கு

'டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய முடியாது: மத்திய அரசு பதில்'

நீதி கிடைக்க, மத்திய அரசில் மாற்றம் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கொலைகாரனை கைது செய்யச் சொல்லி.. இன்னொரு பெரிய கொலைகாரனிடம் கேட்டா.. அவன் என்ன செய்வான். இவங்களை எல்லாம் கேட்டு தண்டிக்க முடியாது.. நாங்களாப் பார்த்து தண்டனையைக் கொடுத்தாவே தவிர.. இதுகளை எல்லாம் தண்டிக்க சட்டமும் இல்ல.. அதை அமுலாக்க ஆளும் இல்ல.. இன்றைய அக்கிரமக்காரர்கள் ஆட்சி செய்யும் மனித உலகில்..!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.