Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ விடுதலைப்புலிகளிற்கொதிரான இறுதி யுத்தத்தில் கருணாவின் படைகள். காணொளி

Featured Replies

நாரதருக்கு ஏழு பச்சை ,

எனக்கு பெரும் குழப்பம்.போராட்டம் தேவை என்பதும் அதை தொடரவேண்டும் என்பது அன்று செல்வா சொன்னதும் இன்று சம்பந்தர் சொல்வதும் அதேதான் .

யாழில் எழுதுவது தான் நீங்கள் சொன்ன மூன்றாவது , அதைவிட மற்றவன் என்ன செய்தான்,செய்கின்றான் என்றது தெரியாமல் நாலு பேரை போடுவதுதான் செயற்பாடு என்று நம்புபவர்கள் தான் அதிகம் .

களம் இப்போ தான் தான் திறந்திருக்கு,அதற்கு ராஜபக்சாவிற்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் .மிச்சம் எல்லாம் நாம் எழுதி களைத்தவை.

இன்றாவது களம் திறந்திருக்கு என்று சொல்ல வந்ததற்கு நன்றி ,அதை விட்டு அகூதா மாதிரி எல்லோரும் சேர்ந்து எங்களுடன் வாருங்கள் என்பது போலில்லாமல் .

ஏகபோகம் ஏகபிரநிதித்துவம்,எங்களுக்கு பின்னால் வாங்கோ என்பதையெல்லாம் கை விடுங்கோ .நாங்ககளும் சிங்களத்திற்கு எதிராகத்தான் போராடுகின்றோம் ,அதே நேரம் எங்களுக்குள் இருக்கும் அடக்குமுறைக்கும் எதிராகவும் போராடுகின்றோம் .

புலிகளைக் கொல்ல நீங்கள் திரிந்த காலத்தில் இருந்து களம் திறந்து தான் இருந்தது, நீங்கள் தான் மக்களுக்கான விடுதலையை மறந்து போராட வந்தவர்களைப் போட்டுத் தள்ளும் போதையில் உங்களை மறந்து ஈடுபட்டு இருந்தீர்கள். ஏக பிரதினிதுவம் மக்கள் வழங்கியது அது மக்களுக்காகப் போராடியதற்கான அங்கீகரிப்பு.மக்கள் புலிகளின் போராட்டத்தின் பின்னால் திரளாமால் அவர்களால் போராடி இருக்க முடியாது. உங்களால் செய்ய முடிந்த ஒரே விடயம் அன்றும் இன்றும் போராடுபவனைப் பார்த்து வக்கணை பேசியது. அது குழாயடியில் இருந்து பொழுது போக்கற்று இருக்கும் கிழவிகள் பேசுவதைப் போன்றது.

புலிகள் அழிந்தால் எல்லாம் சரியாகி விடும் ,புலிகளால் தான் நாம் போராடாமல் இங்கிருக்கிறோம் என்று சொன்ன எவராவது இன்று களம் சென்று , தமது மக்கள் போராட்டத்தை நடாத்தி உள்ளார்களா? இரயாகரன் முதல் சோபாசக்தி வரை என்ன செய்கிறார்கள்? ஈழம் செல்லாமல் கனடாவில் அல்லவா குடித்து கும்மாளம் அடித்துக் கொண்டு இருகிறார்கள்.இவர்கள் தான் போராடப் போகிறார்களாம்? குறைந்த பட்ச்சம் போர்க்குற்றம் சார்ந்து இயங்குவதே , இங்குள்ள தமிழத் தேசியச் செயற்பாட்டாளர்கள் தான்.

  • Replies 134
  • Views 8.2k
  • Created
  • Last Reply

பல வருடங்களின் பின்னும் சுற்றிச் சுற்றி மீண்டும் சுப்பரின் கொல்லைக்குள் நுழையும் ஆனந்தசங்கரி ஐயா

பாசிசப் புலிகளின் அழிவிற்கு பரிந்துரை கூறியவர்களின் பார்வையில்........................

நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டிய காலம்

வி.ஆனந்தசங்கரி

முப்பது வருடகால யுத்தத்தில் மடிந்து போனவர்கள் ஒன்றும் பிச்சைக்காரர்கள் அல்ல என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வி.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். காணி அபகரிப்பு மற்றும் சிங்களக் குடியேற்றங்களுக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் நேற்று முன் தினம் வவுனியாவில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பு முதல் நந்திக் கடல் வரை சுமார் 8 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இந்த இடம் விமானப்படைக்குரியது என்று பலகை வைத்துள்ளார்கள். அதைப் பார்த்ததும் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அதனை விடவும் சிவசக்தி ஆனந்தன் சொன்ன விடயம் இன்னமும் எனது மன வேதனையை அதிகரித்து விட்டது. இத்தகைய அடாவடித்தனங்களைக் கண்ட பின்னரும் எனது உயிர் பிரியமாட்டேன் என்கிறதே என்று எனக்குக் கவலையாக உள்ளது. இன்னும் நான் ஏன் வாழ வேண்டும் என்று கேட்கத் தோன்றுகிறது என்றும் கூறினார்.

அப்போது மேலும் தெரிவித்ததாவது, இன்றைய உண்ணாவிரதம் என்னை 30 வருடங்கள் பின்னோக்கிப் பார்க்க வைக்கின்றது. முன்னாள் ஜனாதிபதி சிறிமாவோ அம்மையார் தனிச் சிங்கள சட்டத்தை அமுல்படுத்திய போது இதே வவுனியா நகரசபை மைதானத்திலே நாங்கள் உண்ணாவிரதம் இருந்தது எனது நினைவுகளுக்கு வருகின்றது. அன்றும் அரசுக்கு ஆதரவானவர்கள் எமது உண்ணாவிரதத்தைக் குழப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டார்கள். எம்மினத்துக்கு அரசாங்கத்துடன் சேர்ந்து எம்மினத்தவர்களே துரோகம் இழைத்த வரலாறுகள் எம்மிடம் நிறையவே உள்ளன. இன்றும் கூட இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த ஏராளமான மக்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

கடந்த 30 ஆண்டுகால வாழ்க்கையில் எமது மக்கள் இலட்சக்கணக்கில் மடிந்துள்ளனர். இறந்தவர்கள் ஒன்றும் பிச்சைக்காரர்கள் அல்ல. காணி பூமியுடன் வளமாக வாழ்ந்தவர்கள் அவர்களின் வாரிசுகளுக்கு தங்கள் காணி எங்கிருக்கின்றது என்பதே தெரியாது. அத்துடன் யுத்தத்தில் உயிரைக் கையில் பிடித்து ஓடியவர்கள் தங்களது காணி உறுதிகளைத் தொலைத்துள்ளனர். இந்தியாவிலிருந்து ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் வரவிருக்கின்றனர். அவர்களது காணிகளுக்கு என்ன பதில் சொல்லப்போகிறது இந்த அரசாங்கம்? இந்த நேரத்தில் இத்தகைய பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.

அரசாங்கம் துரிதகதியில் மேற்கொள்ளும் இத்தகைய செயல் தொடருமானால் எமது இனம் இல்லாமலேயே போய்விடும். இவைகளை எல்லாம் சிந்தித்துதான் நாங்கள் அனைவரும் எம்மிடமுள்ள சிறுசிறு வேற்றுமைகளை மறந்து ஓரணியாக அணிதிரண்டு எமது மக்களின் எதிர்ப்பை இன்று அரசாங்கத்திற்குக் காண்பித்திருக்கிறோம். இன்று எத்தகைய உயர்பீடத்திலும் தமிழர்கள் இல்லை. முன்பு ஓரளவிற்கு உயர் பதவிகளில் தமிழர்கள் இருந்தார்கள். இன்று இலங்கை பொது நிர்வாகத்திற்கான சோதனையில் ஒரு தமிழரும் சித்தியடையாத நிலை தோன்றியுள்ளது. இந்த நாட்டில் நாம் மனிதர்களாக வாழ்வோமா என்ற சந்தேகம் எனக்குத் தோன்றியுள்ளது.

இந்த நாட்டில் நாம் அனை வரும் ஒன்றுபட்டு நின்று தான் இத்தகைய செயலைத் தடுத்து நிறுத்த வேண்டும். எனவே இப்பொழுது நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் நிர்ப்பந்தம். அதனை நாம் திடசங்கற்பமாக ஏற்போம் என்று கூறினார்.

http://www.thenee.co...l/201011-4.html

You could not make it up

Edited by தப்பிலி

மூடிப்போன திரியை தூசி தட்டுகின்றிர்கள்.

சில விடயங்கள் இன்று சொல்லித்தான் ஆகவேண்டும்.பலர் இங்கு அரையும் குறையுமாக தான் பதிவிடுகின்றார்கள்.

சும்மா சகட்டுமேனிக்கு வார்த்தைகளை அள்ளி கொட்ட வேண்டாம் ,எதுவும் சொல்லுவதானால் சாட்சிகளுடன் சொல்லுங்கள்.

சுந்தரத்தை சுட்டது தனிப்பட்ட பிரச்சனை என்னும் போதே எனக்கு பட்டது ,சுந்தரம் என்ன பிரபாகரனுடன் சீட்டு கட்டினாரா,என்னை, உங்களை ,பிரபாவை ,உமாவை இணைத்து வைத்தது எமது அரசியல்தான் .

இந்திய அரசியல் ,ரோ வின் பங்கு ,தமிழ்நாட்டு அரசியல் ,இயக்கங்கங்களின் அரசியல் நிலைப்பாடு எல்லாம் சேர்ந்துதான் ஏகப்பிரநித்துவம் கிடைத்தது .ஒரு இயக்கத்திற்கு வந்த ஆயுதங்களை கொடுக்காமல் விட்டதும் மாற்ற இயக்கங்களுக்கு தாமே ஆயுதம் கொடுத்ததும் ஏன் ?தன்னால் யார் வடிவாக பாவிக்கப் படலாம் என்றுதான் ரோ பார்த்தது ,அதற்கு முதல் டெஸ்ட் தான் அனுராதபுர தாக்குதல் .எதையுமே கேட்காமல்ஆயுதம் சக பணம் என்பதற்காக செய்யப்பட்ட தாக்குதல் அது .ரோ முடிவெடுத்துவிட்டது இவர் தான் தனக்கு தேவை என்று ,ஆனால் பிரபா எடுப்பதை எடுத்து ரோ விற்கும் அல்வா கொடுக்க நினைத்தது நான் வழக்கத்தில் பாவிக்கும், வசனம் .

நடப்பது தெரியாமல் சாமிக்கு என்று பிரதட்டை பண்ணுபவர்களை நான் தடுக்க வரவில்லை ,சாமி தரிசனம் தான் இன்றும் தொடர்கின்றது .

இன்று கூடc.t.r. வானொலி கேட்டேன் ,அவுஸ்தேரியாவில் மகாநாடு சுரேன் இன்டர்வியு கொடுத்தார் ,கனக்க நல்லது செய்கின்றார்கள் ஏன் அங்கு "சூரியநாராயணா " வந்தார்.இவரை பற்றி யாழில் முன்னரே எழுதியிருந்தேன் .இவர்தான் எமக்கு சொன்னவர் "the man hold the gun his hand must be clean" என்று.

யாழுடன் உங்கள் பலர் வாழ்க்கை அதை விட தூரம் நாம் போவது.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அங்கு "சூரியநாராயணா " வந்தார்.இவரை பற்றி யாழில் முன்னரே எழுதியிருந்தேன் .இவர்தான் எமக்கு சொன்னவர் "the man hold the gun his hand must be clean" என்று.

யாழுடன் உங்கள் பலர் வாழ்க்கை அதை விட தூரம் நாம் போவது.

ஓம்.. இப்பிடி அரைகுறை இங்கிலீஸ் படிக்க யாழுக்கு வெளியால எல்லாரும் ஒருக்கால் போய்வர வேணும்..! :lol:

இது நான் சொல்லேல அவர் சொன்னது,இடையில் ஒரு கூ மிஸ்ஸிங

மூடிப்போன திரியை தூசி தட்டுகின்றிர்கள்.

சில விடயங்கள் இன்று சொல்லித்தான் ஆகவேண்டும்.பலர் இங்கு அரையும் குறையுமாக தான் பதிவிடுகின்றார்கள்.

சும்மா சகட்டுமேனிக்கு வார்த்தைகளை அள்ளி கொட்ட வேண்டாம் ,எதுவும் சொல்லுவதானால் சாட்சிகளுடன் சொல்லுங்கள்.

சுந்தரத்தை சுட்டது தனிப்பட்ட பிரச்சனை என்னும் போதே எனக்கு பட்டது ,சுந்தரம் என்ன பிரபாகரனுடன் சீட்டு கட்டினாரா,என்னை, உங்களை ,பிரபாவை ,உமாவை இணைத்து வைத்தது எமது அரசியல்தான் .

இந்திய அரசியல் ,ரோ வின் பங்கு ,தமிழ்நாட்டு அரசியல் ,இயக்கங்கங்களின் அரசியல் நிலைப்பாடு எல்லாம் சேர்ந்துதான் ஏகப்பிரநித்துவம் கிடைத்தது .ஒரு இயக்கத்திற்கு வந்த ஆயுதங்களை கொடுக்காமல் விட்டதும் மாற்ற இயக்கங்களுக்கு தாமே ஆயுதம் கொடுத்ததும் ஏன் ?தன்னால் யார் வடிவாக பாவிக்கப் படலாம் என்றுதான் ரோ பார்த்தது ,அதற்கு முதல் டெஸ்ட் தான் அனுராதபுர தாக்குதல் .எதையுமே கேட்காமல்ஆயுதம் சக பணம் என்பதற்காக செய்யப்பட்ட தாக்குதல் அது .ரோ முடிவெடுத்துவிட்டது இவர் தான் தனக்கு தேவை என்று ,ஆனால் பிரபா எடுப்பதை எடுத்து ரோ விற்கும் அல்வா கொடுக்க நினைத்தது நான் வழக்கத்தில் பாவிக்கும், வசனம் .

நடப்பது தெரியாமல் சாமிக்கு என்று பிரதட்டை பண்ணுபவர்களை நான் தடுக்க வரவில்லை ,சாமி தரிசனம் தான் இன்றும் தொடர்கின்றது .

இன்று கூடc.t.r. வானொலி கேட்டேன் ,அவுஸ்தேரியாவில் மகாநாடு சுரேன் இன்டர்வியு கொடுத்தார் ,கனக்க நல்லது செய்கின்றார்கள் ஏன் அங்கு "சூரியநாராயணா " வந்தார்.இவரை பற்றி யாழில் முன்னரே எழுதியிருந்தேன் .இவர்தான் எமக்கு சொன்னவர் "the man hold the gun his hand must be clean" என்று.

யாழுடன் உங்கள் பலர் வாழ்க்கை அதை விட தூரம் நாம் போவது.

முழு முட்டாள் தான் தான் உலகில் எல்லாம் அறிந்தவன் என்று கூவுவதைப் போல் தான் மேலுள்ளவற்றைப் படித்த போது எனக்குப் பட்டது.

//எதுவும் சொல்லுவதானால் சாட்சிகளுடன் சொல்லுங்கள்.

சுந்தரத்தை சுட்டது தனிப்பட்ட பிரச்சனை என்னும் போதே எனக்கு பட்டது ,சுந்தரம் என்ன பிரபாகரனுடன் சீட்டு கட்டினாரா,என்னை, உங்களை ,பிரபாவை ,உமாவை இணைத்து வைத்தது எமது அரசியல்தான் .//

அன்றைய விடயங்கள் அனைத்தும் அறிந்து இருக்கும் ஒரே சாட்சி `அய்யர்` அவரின் பதிவு தான் எனது சாட்சி.அய்யர் தெளிவாக தனது கட்டுரையில் சுந்தரம் , கோட்பாட்டு ரீதியாக அன்றி தனி நபர் காழ்ப்புணர்வின் நிமித்தமே பிரபாகரனைச் சதி நடவடிக்கைகள் மூலம் தநிமைப் படுதினார் என்று எழுதி உள்ளார்.ஏனெனில் அய்யர் முதலானோர் சுந்தரத்துக்கே முதலில் ஆதரவு கொடுத்தனர்.பின்னரே அவர்களுக்கு இவர்களின் சதி நடவடிக்கைகள் புலப்பட்டது.ப்ளொட் என்னும் சதி நாசகாரக் கும்பல் அதன் பிறப்பிலேயே இவ்வாறு தான் பிறந்தது.லண்டனில் இருந்து ப்லொட்டுக்கு சென்றதால், பிளொட் வரலாறு உமக்கு மட்டும் தான் தெரியும் என்பது மடமையிலும் மடமை. முன்னர் அல்டெனேட் என்று எழுதும் அஜீவனும் உம்மைப் போல் தான் வரலாற்றைத் தெரியாமல் எழுதி யாழ்க் களத்தில் வாங்கிக் கட்டிக் கொண்டு சென்று இப்போது மறு அவதாரம் எடுத்து வேறு பெயரில் ஒழிந்து இருந்து எழுதுகிறார்.உங்கள் புலிக் காச்சல் பார்வையால் பார்த்தால் இப்படித் தான் எல்லாம் கோணலாகத் தெரியும்

ரோவின் செல்லப் பிள்ளை சிறிசபாவின் டெலொவே. இரொசு முதல் புலிகள் வரை எல்லோருக்கும் ரோ ஆயுதம் கொடுத்தது.ஆனால் புலிகளே தமக்குத் தேவையானவற்றை பெறக் கூடிய வழி வகைகளைச் சுயாதீனமாக மேற்கொண்டனர்.ஏனெனில் வங்கம் தந்த பாடம் எழுதிய சந்ததிதையாரைப் பிலொட் போட்டுக் கொண்டிருந்த தருணத்தில் அதனை உணர்ந்து புலிகள் சுயாதீனமான பயிற்சிகள், ஆயுதக் சேகரிப்பு என்று ஈடுபட்டிருந்தனர். ஏனெனில் இந்திய மிகவும் பழமையான ஆயுதங்களையும் ,கள நிலமைக்கு ஒவ்வாத பயிற்ச்சிகளையுமே வழங்கியது.நீங்கள் சென்னையில் படம் பார்த்துக் கொண்டு ,கேள்வி கேட்டவனை சித்திரவதை செய்து படுகொலை செய்து கொண்டிருந்த போது புலிகள் களத்தில் போராடிக் கொண்டிருந்தனர்.

ரோவின் கட்டுப்பாட்டை மீறி புலிகள் வளர்ந்ததாலேயே அவர்களை அழிக்க இந்திய இராணுவம் முனைந்தது என்பது ஒரு குழந்தைக்குக் கூடத் தெரிந்த வரலாறு.இன்று சூரிய நாரயணன்கள் எமது வழிக்கு வருவது, சீனாவின் உள் வருகை.இதனைத் தான் நாம் காலம் காலமாக இந்தியாவுக்குச் சொல்லி வருகிறோம்.அவர்கள் தான் காலாம் காலமாக பிழையான கொள்கைகளை வகுத்து இந்திய பிராந்திய நலன்களுக்கு எதிராகச் செயற்பட்டுக் கொண்டிருகிறார்கள்.அது ரோவும் இந்தியாவும் விடும் தவறு நாம் விடும் தவறல்ல.இந்தியா எமது வழிக்கு வருமாகில் நாம் ஏன் அவர்களைப் பகைத்துக் கொள்கிறோம்?

  • கருத்துக்கள உறவுகள்

ஓம்.. இப்பிடி அரைகுறை இங்கிலீஸ் படிக்க யாழுக்கு வெளியால எல்லாரும் ஒருக்கால் போய்வர வேணும்..! :lol:

இப்படி அடுத்தவனை நக்கலும்,கேலியும் பண்ணியே அழிந்து போவோம்

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி அடுத்தவனை நக்கலும்,கேலியும் பண்ணியே அழிந்து போவோம்

ஹலோ..

எங்களை நக்கல் பண்ணினதுக்குத்தான் அது..! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

ஹலோ..

எங்களை நக்கல் பண்ணினதுக்குத்தான் அது..! :wub:

அப்படி என்டால் அவருக்கும்,உங்களுக்கும் என்ன வித்தியாசம்?

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி என்டால் அவருக்கும்,உங்களுக்கும் என்ன வித்தியாசம்?

என்ன வித்தியாசம்? ஒரு வித்தியாசமும் இல்லை.. அவரும் தமிழர்.. நாங்களும் தமிழர்..!! :icon_mrgreen:

அவர் எழுதியதன் சாராம்சம் இதுதான்.. இங்கே யாழில் எழுதிக்கொண்டிருப்பவர்கள் (நீங்களும் நானும் கூடத்தான்) வெளியில் சென்று நிலைமைகளைக் காண வேணும் என்பது.. யார் யார் இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதை ஒருவரின் எழுத்தைமட்டும் வைத்துக்கொண்டு அனுமானிக்கத் தக்கதல்ல.. :rolleyes:

அவ்வகையில் ஒட்டுமொத்தமாக எல்லோரையும் நக்கல் பண்ணியது தவிர்க்கப்பட வேண்டியது.. :wub:

எனது பதில்கூட அவரை நோக்கியதன்று... :rolleyes:

ஆகவே யுவர் ஆனர்.. நான் யாழ்கள உறவு எவரையும் நக்கல் செய்யவில்லை என்பதை இத்தால் அறியத்தருகிறேன்..! :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.