Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தியப் படையினருக்கு இரத்த வெறி பிடித்து தமிழர்களைக் கொன்ற நாள் இன்று

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ipkf-150x150.jpg

இந்திய இராணுவத்திரால் 1987ம் ஆண்டு யாழ் போதனா வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், நோயாளர்கள் என 68ற்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்று 24வருடங்கள்.

இப் படுகொலையில் வைத்திய நிபுணர் அ.சிவபாதசுந்தரம், வைத்திய கலாநிதி கே. பரிமேலழகர், வைத்திய கலாநிதி கணேசரத்தினம் , திருமதி பா.வடிவேல், செல்வி இ. மங்கயற்கரசி, செல்வி மு. லீலாவதி, திரு கே.செல்வராசா, திரு கே. கிருஸ்ணராஜா, திரு மு. துரைராசா, திரு எம். சண்முகலிங்கம், திரு வி. வரதராசன், திரு கே. வேதாரணியம், திரு யோன்பீற்றர், திரு இசுகுமார், திரு க. சிவயோகநாதன், திரு கே. சிவராசா, திரு கோ. உரித்திரன், திரு க. மார்க்கண்டு, திரு இ. இரத்தினராசா. திரு க. நவரத்தினம் ஆகியோர் 1987ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ம், 22ம் திகதிகளில் இந்திய இராணுவத்தினருடைய மிலேச்சத்தனமான தாக்குதலில் பலியான போதனா வைத்தியசாலைப் பணியாளர்கள் இருபத்தொருவர்.

நோயாளிகளின் நலனுக்காக தம் உயிரைத் தியாகம் செய்த சுடர்களது 24வது ஆண்டு அஞ்சலி நிகழ்வு இன்று காலை யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி பவானி பசுபதிராஜா தலைமையில் நடைபெற்றது.இங்கு வைத்தியசாலையினர் படுகொலை செய்யப்பட்டவர்களது உறவினர்கள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

http://www.tamilthai.com/?p=28818

24 ஆண்டுகள் கடந்தோடிவிட்டாலும் தமிழர் நெஞ்சங்களில் ஆழமாக பதிந்த ஒரு இந்தியப்படுகொலை.

அந்த ஆத்மாக்கள் சாந்தியடைய பிரார்த்தனைகள்!!

அமைதி படை என்ற பெயருடன் வந்து அரங்கேற்றிய படுகொலைகள் இன்றும் மாறாத ரணமாக உள்ளது,

தமிழ் ஈழத்தை வேறேடுப்பதே இந்த ரணத்துககான மருந்து.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அமைதிப்படை வைத்தியசாலை ஊழியர்களைக் கொன்ற 24 ம் ஆண்டு நினைவு நாள்

October 21st, 2011 10:14 PM0 Comments

indian-miltery-kiilled-140x140.jpg

இன்றைய நாள் ஈழ வரலாற்றில் இந்திய ராணுவத்தால் கறை பிரட்டப்பட்ட மறக்க முடியாத நாளாகும்.

24வருடங்களின் முன் 1987ம் ஆண்டு யாழ் போதனா வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், நோயாளர்கள் என 68ற்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1987ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ம், 22ம் திகதிகளில் இந்திய இராணுவத்தினருடைய மிலேச்சத்தனமான தாக்குதலில் பலியான போதனா வைத்தியசாலைப் பணியாளர்கள் 21 பேர்களதும் விபரம் இதோ.

இப் படுகொலையில் வைத்திய நிபுணர் அ.சிவபாதசுந்தரம்,

வைத்திய கலாநிதி கே. பரிமேலழகர்,

வைத்திய கலாநிதி கணேசரத்தினம் ,

திருமதி பா.வடிவேல்,

செல்வி இ. மங்கயற்கரசி,

செல்வி மு. லீலாவதி,

திரு கே.செல்வராசா,

திரு கே. கிருஸ்ணராஜா,

திரு மு. துரைராசா,

திரு எம். சண்முகலிங்கம்,

திரு வி. வரதராசன்,

திரு கே. வேதாரணியம்,

திரு யோன்பீற்றர்,

திரு இசுகுமார்,

திரு க. சிவயோகநாதன்,

திரு கே. சிவராசா,

திரு கோ. உரித்திரன்,

திரு க. மார்க்கண்டு,

திரு இ. இரத்தினராசா.

திரு க. நவரத்தினம்

அஞ்சலி நிகழ்வு இன்று காலை யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி பவானி பசுபதிராஜா தலைமையில் நடைபெற்றது.இங்கு வைத்தியசாலையினர், படுகொலை செய்யப்பட்டவர்களது உறவினர்கள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

http://www.vanakkamnet.com/indian-miltery-kiilled/

அடுத்த வருடம் இதன் 25 ஆவது நினைவஞ்சலி வருடம். நிச்சயம் உலகெங்கும் இருக்கும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளும், புலம்பெயர் மனித உரிமை சார்பான நிறுவனங்களும் இதனை பெரியளவில் அனுட்டிக்க வேண்டும். ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம், இரத்த தானம் போன்ற மற்ற இனத்தவர்களுக்கும் உணர்த்தும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்

இருபத்தைந்து என்ன எத்தனை வருடமாயினும் அமைதிக்கு என்று வந்துவிட்டு தமிழர்களை அழித்தொழிப்பதில் ஈடுபட்ட 'காந்தி' நாட்டின் உண்மை முகத்தினை உலகின் மின் மீண்டும் மீண்டும் இனம் காட்டி மறக்க விடாமல் செய்ய வேண்டும். அத்துடன் எம் இளைய தலைமுறைக்கும் இந்தியாவின் கொடூரம் முகத்தை காட்ட ஒரு வாய்ப்பாகவும் அமையும்

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

mkgadhi_write.gif

இவரின், மரியாதையை கெடுத்த..... பாரத இந்தியா இந்த உலகின் வரை படத்தில் இல்லாது, அழிந்து போக வேண்டும்.

தமிழ் நாட்டில் தமிழ் வளர வேண்டும். முக்கியமாக.... திராவிடக் கட்சிகள் எல்லாவற்றையும்... சுனாமி அள்ள வேண்டும்.

எங்கும் தமிழ், எதிலும் தமிழ்... என்னும் நிலை வர வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் கேணல் டயர் நிகழ்த்திய 'ஜூலியன் வாலா' படுகொலைகளை நிகர்த்தது இது!

இப்போது இந்தியாவே இதை நிகழ்த்தி, தனது முகத்தில் சேறு பூசியுள்ளது!

நிழலி கூறியது போல, அடுத்த வருடத்தில் புலங்களில் இதைப் பெரிதாக அஞ்சலிப்பதன் மூலம், இந்தியாவின் தமிழருக்கெதிரான அடாவடித் தனங்கள், வெளிக்கொணரப் பட வேண்டும்!

வெறியன்களின் வெறிக்குப் பலியான அனைவருக்கும் என் அஞ்சலிகள்.

அடுத்த வருடம் இதன் 25 ஆவது நினைவஞ்சலி வருடம். நிச்சயம் உலகெங்கும் இருக்கும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளும், புலம்பெயர் மனித உரிமை சார்பான நிறுவனங்களும் இதனை பெரியளவில் அனுட்டிக்க வேண்டும். ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம், இரத்த தானம் போன்ற மற்ற இனத்தவர்களுக்கும் உணர்த்தும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்

இருபத்தைந்து என்ன எத்தனை வருடமாயினும் அமைதிக்கு என்று வந்துவிட்டு தமிழர்களை அழித்தொழிப்பதில் ஈடுபட்ட 'காந்தி' நாட்டின் உண்மை முகத்தினை உலகின் மின் மீண்டும் மீண்டும் இனம் காட்டி மறக்க விடாமல் செய்ய வேண்டும். அத்துடன் எம் இளைய தலைமுறைக்கும் இந்தியாவின் கொடூரம் முகத்தை காட்ட ஒரு வாய்ப்பாகவும் அமையும்

மிகவும் நல்லதொரு ஆலோசனை.

25 ஆவது நினைவஞ்சலி நிகழ்வுகளை அடுத்த வருடம் உலகம் முழுவதும் பெரிய அளவில், அந்தந்த நாட்டு சுகாதார அமைச்சர்கள், வைத்தியர்கள், மருத்துவக்கல்லூரி மாணவர்கள் முக்கிய அரச - எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், முதலியோர் பங்குபற்றும் விதத்தில் தமிழர்கள் நடாத்த வேண்டும்.

இந்தியக் காட்டுமிராண்டி ஜனநாயகவாதிகளின், தமிழினப் படுகொலை வெறியர்களின், ஜனநாயகப் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கி படுகொலையான அனைவருக்கும் அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்து மதமும் இந்திய திரைப்படமும் புலதமிழர்களை ஆட்சிசெய்யும்(அடிமைபடுத்தி) வரை இந்தியாவின் அட்டூழியங்கள் வெளியே வருவது மிகவும் கஸ்டம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.