Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் நாள் 2011 கனடா

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்

எம் இனத்திற்காகவும், எம் மண்ணுக்காகவும், தமிழீழ தேசியத்தின் விடிவிற்காகவும் தமது உயிர்களை ஈந்த எம் மாவீர செல்வங்களக்காக மாவீரர் நாள் பணிமணை திறப்பு விழா நிகழ்வு நவம்பர் 05ம் நாள் சனிக்கிழமை இடம் பெறும்.

இன் நிகழ்வு கனடிய அரசாங்கத்தின் அனுமதியுடன் நடைபெறவிருக்கும் மாவீரர் நாள் 2011 நிகழ்வு சம்பந்தமான தகவல்களையும் செயற்பாடுகளையும் முன்னெடுக்கும் மையமாக மாவீரர் நாள் பணிமனை திறந்து வைக்கப்படவுள்ளது.

இவ் திறப்பு விழாவிற்கு கனடாவில் வதியும் அனைத்து மாவீரர் குடும்பங்களையும், பொது மக்களையும் அன்புடன் அழைக்கின்றோம்.

இன் நிகழ்வினை கனடியத்தமிழர்களினாலும் மாவீரர் நாள் செயல்பாட்டுக் குழுவினரினாலும் மேற்படி ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நீங்களும் இந்த மாவீரர் நாள் செயல்பாட்டுக் குழுவில் இணைந்து செயல்பட விரும்பினால் கீழ்காணும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

காலம் 05-11-2011 சனிக்கிழமை அன்று

நேரம் மாலை 4 மணியளவில்

இடம் 2691 Markham Rd, Unit#9B, Scarborough, ON இல் அமையப்பெறவுள்ளது.

தொடர்புகளுக்கு:

647-857-0886 647-821-2990

Edited by jeyabalan

  • Replies 53
  • Views 5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடிய அரசாங்கத்தின் அனுமதியுடன் நடைபெறவிருக்கும் மாவீரர் நாள்-பணிமனையும் திறப்பு!

வியாழக்கிழமை, 03 கார்த்திகை 2011.

u1_Maaveerar-150x150.jpg

எம் இனத்திற்காகவும், எம் மண்ணுக்காகவும், தமிழீழ தேசியத்தின் விடிவிற்காகவும் தமது உயிர்களை ஈந்த எம் மாவீர செல்வங்களக்காக மாவீரர் நாள் பணிமணை திறப்பு விழா நிகழ்வு நவம்பர் 05ம் நாள் சனிக்கிழமை இடம்பெறும்.

இந் நிகழ்வு கனடிய அரசாங்கத்தின் அனுமதியுடன் நடைபெறவிருக்கும் மாவீரர் நாள் 2011 நிகழ்வு சம்பந்தமான தகவல்களையும் செயற்பாடுகளையும் முன்னெடுக்கும் மையமாக மாவீரர் நாள் பணிமனை திறந்து வைக்கப்படவுள்ளது.

இவ் திறப்பு விழாவிற்கு கனடாவில் வதியும் அனைத்து மாவீரர் குடும்பங்களையும், பொது மக்களையும் அன்புடன் அழைக்கின்றோம்.

இந் நிகழ்வினை கனடியத் தமிழர்களினாலும் மாவீரர் நாள் செயல்பாட்டுக் குழுவினரினாலும் மேற்படி ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நீங்களும் இந்த மாவீரர் நாள் செயல்பாட்டுக் குழுவில் இணைந்து செயல்பட விரும்பினால் கீழ்காணும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

காலம் 05-11-2011 சனிக்கிழமை அன்று

நேரம் மாலை 4 மணியளவில்

இடம் 2691 Markham Rd, Unit#9B, Scarborough, ON இல் அமையப்பெறவுள்ளது.

தொடர்புகளுக்கு: 647-857-0886 , 647-821-2990

.

u1_Maaveerar.jpg

ஒரே இடத்தில் ஒன்றாகக் கூடி மாவீரர்களை வணங்கித் துதிப்போம்

அன்பார்ந்த கனடாவாழ் தமிழீழ மக்களே!

எங்களுக்காய், தமிழீழ மண்ணுக்காய் தமிழீழத் தேசியத்துக்காய் தம் உயிர் ஈந்த மாவீரர்களின் வணக்க நிகழ்வான தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள், வழமை போல, தமிழ் தேசியச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் கனடியத் தமிழரின் கட்டமைப்புகளினால், நவம்பர் 27, 2011 அன்று, நான்கு நிகழ்வுகளாக ரொரன்ரோவிலும், மற்றும் மொன்றியலில் ஒரு நிகழ்வாகவும் இடம்பெறவுள்ளது.

கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம் (Canadian Tamils Rememberance Organization - CTRO), வழமை போல முன்னெடுக்கும் தமிழர் தேசிய நினைவெழுச்சி நாளானது கனடியத் தமிழர் தேசிய அவை (NCCT), தமிழ் இளையோர் அமைப்பு (TYO), கனடா தமிழ் மகளிர் அமைப்பு, கனடியத் தமிழர் விளையாட்டுத் துறை, தமிழர் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா ஆகிய கட்டமைப்புக்களின் ஒத்துழைப்புடன் எழுச்சியாக கனடா தமிழர் சமூகம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை அனவருக்கும் அறியத் தருகின்றோம்.

1989 ஆம் அண்டு முதல், மாவீரர் திலகங்களை வணங்கித்துதிக்கும் நவம்பர் 27 நினைவெழுச்சி நிகழ்வைப் பிளவுபடுத்தும் நோக்கத்துடன் ஒரு சிலரால் முன்னெடுக்கப்படுகின்ற போட்டி நிகழ்வுக்கான முயற்சியானது, சிறிலங்கா அரசின் தமிழரை பிரித்தாளும் செயற்பாடுகளுக்கு ஆதரவளிப்பதோடு, கனடாவாழ் தமிழர்களின் ஒற்றுமையைச் சிதைப்பதற்கான நடவடிக்கையாகவும் அமைகின்றது. போட்டிக்கு நடத்தப்படவுள்ள இவர்களின் நிகழ்வுக்கும் எமக்கும் எத்தகைய தொடர்பும் இல்லை என்பதைக் அறியத் தருகின்றோம்.

தாயகத்தில் திட்டமிட்டு மாவீரர் துயிலும் இல்லங்களை அழித்ததொழித்த சிறிலங்கா அரசின் செயற்பாடுகள், புலம்பெயர் மண்ணிலும் தொடர்வதற்குத் துணைநிற்கும் இத்தகைய செயற்பாடுகள் தமிழ் மக்களை மேலும் துயரத்தில் ஆழ்த்துகின்றது. இவ்வகையான திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்ற ஒற்றுமையைச் சிதைக்க எடுக்கப்படும் எந்த நடவடிக்கைகளுக்கும் தமிழ்த் தேசிய உணர்வுள்ள எவரும் துணைநிற்க மாட்டார்கள் என்பது உறுதி.

முன்னைய ஆண்டுகளின் நவம்பர் 27 இல் தேசிய நினைவெழுச்சி நாள் எவ்வகை உணர்வோடு இடம்பெற்றதோ, அத்தகைய உணர்வு கலந்த எழுச்சியோடு வணக்கத்துக்குரிய நிகழ்வாக இந்த ஆண்டும் நிகழும் என்பதை தெரியத் தருகின்றோம்.

கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம் (CTRO)

கனடியத் தமிழர் தேசிய அவை (NCCT)

தமிழ் இளையோர் அமைப்பு (TYO)

கனடா தமிழ் மகளிர் அமைப்பு

கனடியத் தமிழர் விளையாட்டுத் துறை

தமிழர் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் தேசிய அவையின் பிரித்தாலும் சிறிலங்கா அரசின் சூழ்ச்சி என்ற பதத்துக்கு பதில் தேவைப்படுகின்றது. மற்றய அமைப்பு தனித்துவமாக என்னுமொரு மாவீரர் தினம் கொண்டாடப் போவதாக சொன்ன விடயத்துக்கு இவர்களின் பங்களிப்பும் நிறையவே உண்டு. கனடாவில் உள்ள அனைத்து தமிழ் அமைப்புக்களும் சேர்ந்து நின்று மாவீரர் தினம் கொண்டாட ஒரு சந்திப்பினை ஒழுங்கு செய்தபோது அதை வழமை போல மறுத்தாக ஏற்கனவே செய்தி வந்திருந்தது. இரண்டாவது தமிழ் சமூகம் ஏதோ திருட்டு வேலை செய்வது போல ஒவ்வொரு தடவையும், கனடா அரசோடு ஒளித்துப் பிடித்து மாவீரர் தினம் செய்கின்ற வேலையும் அந்தத் தியாகிகளைக் கொச்சைப்படுத்துவதாக இல்லை?? ஏதோ களவு செய்வது போல நடந்து கொண்டால் உலகம் எப்படி எங்களை ஆதரிக்கும்??

இதற்காகப் புதிதாக உருவாகியிருக்கும் மாவீரர் பணிமனை மீதும் நல்ல அபிப்பிராயம் இல்லை. முதலில் மக்களுக்கு உதவ வேண்டும் எனில் அதற்குப் பிரிந்து நின்று போட்டி போடுங்கள். அல்லது சமூகத்தில் தேவையான வளர்ச்சியைக் கொண்டு வர பிரிந்து நின்றாவது போட்டி போடுங்கள். அது நன்று. அதில்லாமல் மாவீர் தினம் போன்ற உணர்வுள்ள, உணர்வுக்கு மதிப்பளிக்கும் விடயங்களில் ஏன் இவ்வாறான பிளவுகளை ஏற்படுத்த முயல்கின்றீர்கள்.

உண்மையில் சொல்லப் போனால், இது இரண்டு தரப்புக்கும் உள்ள போட்டியின் வெளிப்பாடே அன்றி உணர்வான விடயமாகத் தெரியவில்லை. இரு தரப்பும் மாவீரர்களைக் கொச்சைப்படுத்த முயல்கின்றார்கள். தங்களுக்குத் தமிழ்மக்களின் ஆதரவு இருப்பதைக் காட்டுவதற்காக உணர்வுபூர்வமான விடயங்களை எடுத்து அதை அசிங்கப்படுத்துகின்ற கேவலமான செயல்கள்.

ஒரு தரப்பு மற்றவர்களை விழுத்துவதற்காக எதிரான கருத்துக்கள், சிங்களக் கைக்கூலிகள் என்ற பதற்களை மற்றவர்கள் மீது தெளிப்பதும், மற்றவர்கள் பதிலுக்கு இவர்கள் மீது வாரி வீசுகின்ற அற்பப் பதர்கள்... சிங்கள அரசின் பங்களிப்பின்றி நமக்குள்ளேயே பிளவினை ஏற்படுத்தும் இச் செயலை எவ்வாறு ஆதரிப்பது??

கோவில்களின் திருவிழாவுக்காகவும், சுவாமி தூக்குவதற்காகவும் இரு கோஸ்டி மோதல்கள் நடப்பது போன்ற இரு மாறுபட்ட நிலைமையை கொண்டிருந்தது போல நிலவரமே இது..

நிச்சயம் இப்படியான இவர்களின் செயல்கள் நாளை மாவீரர் தினத்தையே பாதிக்கச் செய்து விடுமோ என அஞ்ச வேண்டியுள்ளது...

கடந்த வருடம் மாவீரர் தின உரை நவம்பர் 26ல் வெளி வந்தது. அதனைச் செய்தவர்கள் யார்? இச்செயற்பாடு ஒற்றுமையைச் சிதைக்க எடுத்த நடவடிக்கை இல்லையா? அதன் வெளிப்பாடுதான் இன்றைய பிரிவு. தயவுசெய்து மற்றவர்களைக் குறைகூறாமல் உங்கள் குறைகளைக் கழைந்து ஒற்றுமையாக ஒரே மாவீரர் தினத்தை நடாத்த வழி செய்யுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரே இடத்தில் ஒன்றாகக் கூடி மாவீரர்களை வணங்கித் துதிப்போம்

அன்பார்ந்த கனடாவாழ் தமிழீழ மக்களே!

எங்களுக்காய், தமிழீழ மண்ணுக்காய் தமிழீழத் தேசியத்துக்காய் தம் உயிர் ஈந்த மாவீரர்களின் வணக்க நிகழ்வான தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள், வழமை போல, தமிழ் தேசியச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் கனடியத் தமிழரின் கட்டமைப்புகளினால், நவம்பர் 27, 2011 அன்று, நான்கு நிகழ்வுகளாக ரொரன்ரோவிலும், மற்றும் மொன்றியலில் ஒரு நிகழ்வாகவும் இடம்பெறவுள்ளது.

கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம் (Canadian Tamils Rememberance Organization - CTRO), வழமை போல முன்னெடுக்கும் தமிழர் தேசிய நினைவெழுச்சி நாளானது கனடியத் தமிழர் தேசிய அவை (NCCT), தமிழ் இளையோர் அமைப்பு (TYO), கனடா தமிழ் மகளிர் அமைப்பு, கனடியத் தமிழர் விளையாட்டுத் துறை, தமிழர் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா ஆகிய கட்டமைப்புக்களின் ஒத்துழைப்புடன் எழுச்சியாக கனடா தமிழர் சமூகம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை அனவருக்கும் அறியத் தருகின்றோம்.

1989 ஆம் அண்டு முதல், மாவீரர் திலகங்களை வணங்கித்துதிக்கும் நவம்பர் 27 நினைவெழுச்சி நிகழ்வைப் பிளவுபடுத்தும் நோக்கத்துடன் ஒரு சிலரால் முன்னெடுக்கப்படுகின்ற போட்டி நிகழ்வுக்கான முயற்சியானது, சிறிலங்கா அரசின் தமிழரை பிரித்தாளும் செயற்பாடுகளுக்கு ஆதரவளிப்பதோடு, கனடாவாழ் தமிழர்களின் ஒற்றுமையைச் சிதைப்பதற்கான நடவடிக்கையாகவும் அமைகின்றது. போட்டிக்கு நடத்தப்படவுள்ள இவர்களின் நிகழ்வுக்கும் எமக்கும் எத்தகைய தொடர்பும் இல்லை என்பதைக் அறியத் தருகின்றோம்.

தாயகத்தில் திட்டமிட்டு மாவீரர் துயிலும் இல்லங்களை அழித்ததொழித்த சிறிலங்கா அரசின் செயற்பாடுகள், புலம்பெயர் மண்ணிலும் தொடர்வதற்குத் துணைநிற்கும் இத்தகைய செயற்பாடுகள் தமிழ் மக்களை மேலும் துயரத்தில் ஆழ்த்துகின்றது. இவ்வகையான திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்ற ஒற்றுமையைச் சிதைக்க எடுக்கப்படும் எந்த நடவடிக்கைகளுக்கும் தமிழ்த் தேசிய உணர்வுள்ள எவரும் துணைநிற்க மாட்டார்கள் என்பது உறுதி.

முன்னைய ஆண்டுகளின் நவம்பர் 27 இல் தேசிய நினைவெழுச்சி நாள் எவ்வகை உணர்வோடு இடம்பெற்றதோ, அத்தகைய உணர்வு கலந்த எழுச்சியோடு வணக்கத்துக்குரிய நிகழ்வாக இந்த ஆண்டும் நிகழும் என்பதை தெரியத் தருகின்றோம்.

கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம் (CTRO)

கனடியத் தமிழர் தேசிய அவை (NCCT)

தமிழ் இளையோர் அமைப்பு (TYO)

கனடா தமிழ் மகளிர் அமைப்பு

கனடியத் தமிழர் விளையாட்டுத் துறை

தமிழர் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா

புனிதர்களின் நினைவுகளைக் காப்போம் வாரீர்! –

மாவீரர் நினைவு இனவிடுதலைக்கு உந்துசக்தி தருவதேயன்றி,

சிலரின் இருப்பை காப்பதற்கானதன்று.

மாவீரர்கள் புனிதமானவர்கள். தமிழினம், தமிழ்மொழி, தாய்நிலம் வாழ தங்கள் இன்னுயிர்களை ஈகம்செய்த உன்னதமானவர்கள். மாசுமறுவற்ற மண்ணின் மைந்தர்கள். விடுதலை என்ற இலட்சியக் கனவோடு தாய்மடியில் வீரவிதையாய்ப் புதைந்திருப்பவர்கள்.

புனிதர்களின் நினைவுகளைக் காப்போம் வாரீர்.!

மாவீரர் நினைவு இனவிடுதலைக்கு உந்துசக்தி தருவதேயன்றி. சிலரின் இருப்பை காப்பதற்கானதன்று.

அவர்களின் நினைவுகள் புனிதமானவை. பரிசுத்தமானவை.

எமது தேசிய விடுதலைப் போராட்டத்தை, அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தும் உந்துசக்தியாக, தமிழர் மனங்களில் புத்தொளி பாய்ச்சி, புதுவிசை கொடுக்கும் ஆன்மசக்தியாக இருப்பது மாவீரர்களின் நினைவுகளே.

மாவீரர்நாள் என்பது, எந்த இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் தம் இன்னுயிர்களை ஈகம்செய்தார்களோ, அந்த இலட்சியத்தை முன்னெடுத்துச் செல்வோம் என்ற உறுதியை மனங்களில் நிறைத்துக்கொள்ளும் நாள்.

தாயகத்தில், சிங்கள இராணுவ அடக்குமுறைக்குள், மாவீரர்களின் நினைவெழுச்சி நிகழ்வுகளை நடாத்துவதற்குரிய சாத்தியம் தற்போது இல்லை.

புலத்திலேயே, மாவீரர்களை வணங்கி வழிபடும் தேசிய நினைவெழுச்சி நாளை, உணர்வுபூர்வமாகவும் மிகச் சிறப்பாகவும் நடாத்த, புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள் அனைவரும் அணிதிரளவேண்டும்.

முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்து முடிந்ததின் தொடர்ச்சியாக, ஒற்றுமைக்கு விரோதமாகவும், தான்தோன்றித்தனமாகவும், கட்டுப்பாடுகள் அற்றமுறையிலும், பொறுப்பற்ற போக்கிலும் மேற்கொள்ளப்படும் விரும்பத்தாக போக்குகள் தேசிய விடுதலைப் போராட்டம் குறித்த, அச்சமூட்டும் சந்தேகங்களை பொதுமக்கள் மத்தியில் விதைக்கவே செய்துள்ளன.

தேசியத் தலைவரால், சிறுகச் சிறுகக் கட்டிவளர்க்கப்பட்ட, பலம்வாய்ந்த தேசியத்தளம் அறிவிலித்தனமாக, ஈவிரக்கமற்ற முறையில் சிதைத்தழிக்கப்பட்டு வருகின்றமை எங்கள் கண்ணெதிரே நடக்கின்ற கொடுமை.

ஒரு மாபெரும் இயக்கத்தை, ஒரு சிறு குழுவாகச் சிறுக்கவைக்கின்ற முயற்சி வேகமாக நடந்து வருகின்றது. இது சதியா? அல்லது சம்பந்தப்பட்டவர்களின் அறிவுநிலைப்பட்ட முடிவா? என்ற சந்தேகம் பலமாக எழுகின்றது.

புலத்து மண்ணிலே, துரோகிகளாக்கப்பட்டவர்கள் அதிகமாக நிரம்பிப் போயுள்ளனர். சிங்கள அரசோடும், சிங்கள அரசுக்குத் துணை நிற்பவர்களோடும், இணைத்து வகைப்படுத்தி, தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்கள் துரோகிகளாக்கப்பட்டு வருகின்றனர்.

தமது போக்கிற்கு ஒத்துவராதவர்கள், தமது நலன்களுக்கு இடையூறாக நிற்பவர்கள் துரோகிகளாக முத்திரை குத்தப்படுகின்றனர். ஒதுக்கப்படுகின்றனர். அவமானப்படுத்தப்படுகின்றனர்.

உலகமே அண்ணாந்து பார்த்த மாபெரும் விடுதலைப் போராட்டத்தை, அரசியல் தெளிவும், சமூகப் பொறுப்புணர்வும், அற்ற ஒரு சிறுகூட்டம் கையகப்படுத்த முனைகின்றது.

எமக்காகப் போரிட்டு வீழ்ந்த எங்கள் மாவீரர்களின் குழந்தைகளை குடும்பங்களைப் பாதுகாக்கவோ, சிறைப்பட்டுள்ள போராளிகளினதும் அவர்களது குடும்பங்களினதும் நலன்களைக் கவனிக்கவோ, போரில் சிக்கிச் சீரழிந்து போயுள்ள எம் மக்களின் வாழ்வை மேப்படுத்தவோ ஒருதுளி முனைப்பும் இன்றி சும்மாயிருப்பவர்கள், மாவீரர் நாளிற்கு மட்டும் உரிமை கோருவது வேடிக்கையானதும், வெட்கக்கேடானதும், வேதனையானதுமாகும்.

ஆயிரம் ஆயிரம் மாவீரர்களின் கனவு, சிலரின் பொறுப்பற்ற போக்கால், சிதைந்தழிந்துபோக, விடுதலையின்பால் அக்கறை கொண்ட சமூகப் பொறுப்புள்ள மக்களால் அனுமதிக்கப்படவே முடியாது.

இந்தப்போராட்டத்தின் தாங்கு சக்தியாக நின்றவர்கள், இதனை வளர்த்தெடுத்தவர்கள், நேரடியாகப் பங்கெடுத்தவர்கள், ஆதரவாளர்கள், அனுதாபிகள், மாவீரச் செல்வங்களின் பெற்றார், உற்றார் உறவினர், நண்பர்கள் எல்லோருக்குமாக இந்த அழைப்பை விடுகின்றோம்.

மாவீரர்நாளை பணவேட்டைக்கான திருவிழாவாக நடாத்த சிலர் முனைகின்றனர். காலம் காலமாக என்ற சொல்லாடலை அவர்கள் தமக்கு வசதியாக பாவிக்க முனைகின்றனர்.

சாக்கடையில் தேக்கி, இந்தப் புனிதப் போராட்டத்தை நாற்றமெடுக்க வைக்க சிலர் முயற்சிக்கின்றனர். இந்தப் போராட்டம், வீரியத்துடன், அடுத்த இலக்கு நோக்கிப் பாயும் பேராறு. அதனைத் தடுக்க எடுக்கும் முனைப்பை முறியடிக்க வேண்டும்.

கடந்த மாவீரர் நாளில், ஒருசாரார் கட்டுப்பாடற்ற முறையில் செயற்படுவதை உணர்த்திய, காலத்திற்கு முந்திய இரண்டாவது மாவீரர் நாள் அறிக்கை, தேசிய விடுதலை இயக்கத்தின் மரபை உடைத்தெறிந்த நிகழ்வாகும்.

இதுபோன்ற நிகழ்வுகள், எதிர்காலத்தில் இடம்பெறாமல் தடுக்க, பொதுமக்களே முன்வரவேண்டும்.

தேசியத் தலைவரின் சிந்தனையைப் பிரதிபலிக்கும் தலைமைச் செயலகம், இயக்கத்தின் பொதுமையமாகும். அனைத்துத் துறைகளும், அனைத்துப் பிரிவுகளும். ஒருங்கிணைந்து, சிந்திக்கவும், செயற்படவும் தேசியத் தலைவரின் சிந்தனையால் வடிவமைக்கப்பட்ட தளமே தலைமைச் செயலகம்.

இயக்கத்தின் இந்தப் பொதுக்கட்டமைப்பை உடைத்துக்கொண்டு, புதிது புதிதாக, தாம் சார்ந்த துறைகளின் பேரில், ஒரு சிலர் தமது தனிப்பட்ட முடிவுகளுக்கும் தேவைகளுக்கும் அமைய, மாவீரர்நாள் அறிக்கை விடுவதும், தற்போதைய நெருக்கடியான குழப்பமான சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு இயக்க ஆதரவுத்தளத்தை தம்பால் இழுத்துச்செல்ல முனைவதும் விடுதலைக்கான செயற்பாடாகக் கொள்ளப்படமாட்டாது. இதனை மக்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

மாவீரர் நாள் என்பது, தமிழ்மக்கள் எல்லோருக்கும் பொதுவானது. மாவீரர்களை வணக்க எல்லோருக்கும் உரித்துண்டு. இந்தநாளை அதன் அர்த்தத்தில், உணர்வு கெடாமல், எந்த உள்நோக்கமும் இல்லாமல், நடாத்தவேண்டும் என்ற பொதுவான முடிவுக்கு அமைய, பிரான்சில் மாவீரர் நாள் நிகழ்வு ஏற்பாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

நீண்டகால தேசியச் செயற்பாட்டாளர்கள், சமூகப் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மாவீரர் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர்களை உள்ளடக்கியதாக இவை அமைக்கப்பட்டுள்ளன.

நிதி உட்பட அனைத்து விடயங்களிலும் வெளிப்படைத் தன்மையுடன், தெளிவான தேசியக் கொள்கையுடன் இக்குழு செயற்படும்.

புனிதமான மாவீரர் நாள் நிகழ்வுகளும், அவர் தாங்கிநின்ற தேசிய இலட்சியமும், பொறுப்பற்றவர்களின் கைகளில் சிக்கிவிடாமல் தவிர்க்க, புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் விழிப்புடனும், முனைப்புடனும் செயற்பட முன்வரவேண்டும்.

புனிதமான தேசிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிர்களை ஈகம்செய்த மாவீரர்களின் கனவு நனவாக எல்லோரும் இணைந்து உழைப்பதென உறுதிகொள்வோம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

மிகவும் நல்லதொரு விடயம். போன வருடமே இதனைச் செய்திருக்க வேண்டும். தாமதமாகச் செய்தாலும் நல்ல விடயத்தைத்தான் செய்கிறார்கள். மாவீரர் நாள் என்பது அனைத்துத் தமிழ் மக்களுக்கும் பொதுவான ஒரு விடயம். ஆனால், இங்கோ ஒரு குழுவினர் மட்டுமே குத்தகைக்கு எடுத்திருந்தார்கள். அதுமட்டுமின்றி, ஆரவாரமின்றி அமைதியாகச் செய்யவேண்டிய நிகழ்வை மிகவும் ஆடம்பரமாகத் தான் செய்து வந்தார்கள். இப்படி யாராவது கிளம்பினால்தான் இவர்களின் ஆட்டம் அடங்கும். இனிமேலாது திருந்துகிறார்களா என்று பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு மாவீரர் தினம் நடக்குமெனில், தமிழீழம் என்றோ ஒரு நாள் சாத்தியப்படலாம் என என் அடிமனதில் கொண்டிருந்த கொஞ்சநெஞ்ச நம்பிக்கையையும் கைவிடுகின்றேன். ஏன் எனில் வெளிப்படையாக 2 நடத்தினால் என்ன என்று தோன்றினாலும், இதனால் தமிழருக்குள் ஏற்படும் விளைவுகள் தமிழரின் ஒற்றுமையை மேலும் சிதைக்கவே உதவும்.

முதலாவது, இவ்வாறு 2 ஆகாக நடக்கும்போது நிச்சயம் யார் நிகழ்வுக்கு கூட மக்கள் வருகின்றார்கள் என்ற போட்டியுணர்வு இருக்கத் தான் போகின்றது. அது தொடர்ந்து வரும் காலங்களில் எல்லாவிடயத்திலும் பரவி குழப்பத்தையே மேலும் உண்டாக்கும்.

இரண்டு தினத்திலும், 3ம் நபர்கள் போய் நின்று குழப்பத்தை ஏதும் ஏற்படுத்தினாலும் மற்றய தரப்பு மீதே பழி விழும். பழி வாங்கும் எண்ணம் தூக்கும். ஏனென்றால் இரு தரப்புமே சுய சிந்தனையற்ற 1ம் அறிவு கொண்ட மடச் சாம்பிராணிகள். எதற்காக இந்த மாவீரர்களின் வீரச்சாவுகள், தலைவரின் நோக்கத்தை எப்படி நிறைவேற்றுவது என்று ஒரு சதத்துக்கும் தெரியாத அற்பப்பதர்கள்.

இதில் தங்களுக்குத் தான் கூட மக்கள் வந்தது, என்று கணக்குக் காட்டும் குழு, மற்றய குழுவைப் பற்றித் தங்களது இணையத்திலும், ஊடகத்திலும் எல்லவற்றையும் விட்டுவிட்டு கேவலமாக,முழுத் தொழிலாக செய்யும்.

இதை விட என்னென்ன அநியாயங்களைச் செய்யப் போகின்றார்கள் என்பதை வரலாறு சொல்லும்.

இப்படிப்பட்ட மூடர்களை வைத்துக் கொண்டு தமிழீழம் என்றைக்குமே சாத்தியமாகப் போவதில்லை. நிச்சயம் எங்களை மன்னித்து விடுங்கள் தலைவரே! மாவீரர்களே!

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு மாவீரர் தினம் நடக்குமெனில், தமிழீழம் என்றோ ஒரு நாள் சாத்தியப்படலாம் என என் அடிமனதில் கொண்டிருந்த கொஞ்சநெஞ்ச நம்பிக்கையையும் கைவிடுகின்றேன்.

இதுதான் சிங்களம் எதிர்பார்ப்பது.

இப்படியே ஒவ்வொருத்தராக ஒதுங்குங்கோ...

மாவீரர் நாளுக்கு பன்னிரண்டு நாட்கள் உள்ளன.

ஒரே நிகழ்வாக வைக்க காலம் இன்னும் கடந்துவிடவில்லை. உரியவர்கள் மக்களின் விருப்புக்களை அறிந்து, உணர்ந்து செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

இல்லை அதையும் மீறி இரண்டாக, இரு வேறு இடங்களில் நிகழ்ந்தால், இரண்டுக்கும் செல்வேன். அடுத்தடுத்த வருடங்களில் உண்மை நிலைக்கும், பொய்மை தோற்றுவிடும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடா உலகதமிழர் அமைப்பு ஒரு பெரும் விருட்சமாக வளர்ந்து, கிழைகள் பல அமைத்து, பல உப அமைப்புக்கள் அமைத்து , பல வருடங்களாக கனடா தமிழ் மக்களிற்கும் விடுதலை போரிற்கும் ஆதரவாக கடமையாற்றி வந்தது. இந்த அமைப்பை சிதைப்பதற்காக ஊடுருவிய உளவுத்துறைகள் (பல நாடுகள்?) உள்ளே பல குழப்பங்களை ஏற்படுத்தி சிறந்த செயர்ப்பாட்டாளர்களை வெளியேற்ற வைப்பதில் வெற்றியும் கண்டார்கள். எஞ்சி உள்ளே உள்ளவர்கள் பலர் இக்குளப்பத்திட்கு காரணமாக திகழ்ந்தவர்கள் (ஆதாரம்: பலமான கட்டமைப்புக்கள் எல்லாம் இழந்து , மக்களிடமிருந்து அன்னியப்பட்டு உள்ள தற்சமய நிலைப்பாடு). உண்மையான செயட்ப்பாட்டாலர்களை அகற்றியபின் தங்களின் கைகளில் இவ்வமைப்பை எடுத்துக்கொண்டு தமிழ்த்தேசியம் தங்களின் தனி உரிமையென சொல்லி கொள்கிறார்கள். மாவீரர் தின நிகழ்வை தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள் ஆக மாற்றி இவர்கள் நடாத்த உள்ளது, இவர்களின், மக்களை விடுதலை புலிகளிடமிருந்து சிறிது சிறிதாக பிரித்துசெல்லும் இவர்களின் எசமானர்களின் விருப்பையே காண்மிக்கிறது. என்னை பொருத்தமட்டில் இவர்களைபற்றி தெரியாத பல பொது மக்கள் இவர்களையே இன்னும் நம்பிக்கொண்டு இர்ருக்கிரார்கள். இது அனைத்தும் எனது தனிப்பட்ட கருத்துக்களே.

ஒவ்வொரு தமிழனுக்கும் தமிழச்சிக்கும் மாவீரர் தினத்தை கொண்டாட உரிமை உள்ளது, இதை தனிப்பட்ட முறையிலோ அல்லது குழுக்களாகவோ செய்யலாம் என்பதும் அவர்களை தடுப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. மேலும் உ . த . (NCCT , TYO etc ) இதை அடுத்தவர்களின் பிரித்தாளும் செயல் என்பது சிரிப்புக்குரியது.

மாவீரர் தினத்தை மாவீரர் தினமாக வேறு யார் அனுஷ்டித்தாலும் நான் ஒரு பொது மகனாக பங்கெடுப்பேன், இல்லையேல் தனியாக வீட்டில் வைத்து வணங்குவேன்.

மாவீரர் நாளுக்கு பன்னிரண்டு நாட்கள் உள்ளன.

ஒரே நிகழ்வாக வைக்க காலம் இன்னும் கடந்துவிடவில்லை. உரியவர்கள் மக்களின் விருப்புக்களை அறிந்து, உணர்ந்து செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

இல்லை அதையும் மீறி இரண்டாக, இரு வேறு இடங்களில் நிகழ்ந்தால், இரண்டுக்கும் செல்வேன். அடுத்தடுத்த வருடங்களில் உண்மை நிலைக்கும், பொய்மை தோற்றுவிடும்.

நானும் இதை ஆமோதிக்கிறேன். நன்றி அகூதா. :-)

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு மாவீரர் தினம் நடக்குமெனில், தமிழீழம் என்றோ ஒரு நாள் சாத்தியப்படலாம் என என் அடிமனதில் கொண்டிருந்த கொஞ்சநெஞ்ச நம்பிக்கையையும் கைவிடுகின்றேன். ஏன் எனில் வெளிப்படையாக 2 நடத்தினால் என்ன என்று தோன்றினாலும், இதனால் தமிழருக்குள் ஏற்படும் விளைவுகள் தமிழரின் ஒற்றுமையை மேலும் சிதைக்கவே உதவும்.

முதலாவது, இவ்வாறு 2 ஆகாக நடக்கும்போது நிச்சயம் யார் நிகழ்வுக்கு கூட மக்கள் வருகின்றார்கள் என்ற போட்டியுணர்வு இருக்கத் தான் போகின்றது. அது தொடர்ந்து வரும் காலங்களில் எல்லாவிடயத்திலும் பரவி குழப்பத்தையே மேலும் உண்டாக்கும்.

இரண்டு தினத்திலும், 3ம் நபர்கள் போய் நின்று குழப்பத்தை ஏதும் ஏற்படுத்தினாலும் மற்றய தரப்பு மீதே பழி விழும். பழி வாங்கும் எண்ணம் தூக்கும். ஏனென்றால் இரு தரப்புமே சுய சிந்தனையற்ற 1ம் அறிவு கொண்ட மடச் சாம்பிராணிகள். எதற்காக இந்த மாவீரர்களின் வீரச்சாவுகள், தலைவரின் நோக்கத்தை எப்படி நிறைவேற்றுவது என்று ஒரு சதத்துக்கும் தெரியாத அற்பப்பதர்கள்.

இதில் தங்களுக்குத் தான் கூட மக்கள் வந்தது, என்று கணக்குக் காட்டும் குழு, மற்றய குழுவைப் பற்றித் தங்களது இணையத்திலும், ஊடகத்திலும் எல்லவற்றையும் விட்டுவிட்டு கேவலமாக,முழுத் தொழிலாக செய்யும்.

இதை விட என்னென்ன அநியாயங்களைச் செய்யப் போகின்றார்கள் என்பதை வரலாறு சொல்லும்.

இப்படிப்பட்ட மூடர்களை வைத்துக் கொண்டு தமிழீழம் என்றைக்குமே சாத்தியமாகப் போவதில்லை. நிச்சயம் எங்களை மன்னித்து விடுங்கள் தலைவரே! மாவீரர்களே!

இங்கு இருவேறு பிரிவுகளாகச் செய்யவேண்டுமெனக் கோரவில்லை. மாவீரர் நாளை மக்கள் மயப்படுத்தி, வெளிப்படையாகச் செய்து அதற்கான கணக்கு வழக்குகளை மக்கள் முன் வையுங்கள் எனக் கோரப்பபட்டது. அதற்கு ஒத்து வராததால்தான் மக்களின் உதவியுடன் செய்வதற்கு முடிவெடுக்கப்பட்டது. இதில் குழப்புவது யார் என்பதை வாசகர்களே முடிவு செய்யட்டும்.

தாங்களும் பூனைக்கு மணி கட்ட மாட்டார்கள். மணி கட்ட நினைப்பவர்களையும் விமர்சனம் செய்வார்கள். என்னைப் பொறுத்தவரை இப்படியானவர்களால்தான் எமது போராட்டம் இந்தத் தேக்க நிலையை அடைந்தது. ராசி82 கூறியதுதான் எனது எண்ணமும். இவர்களை வளரவிட்டால் அந்தக் கடவுளே வந்தாலும் தமிழருக்கு விடிவு கிடைக்காது. ராசி குறிப்பிட்டதுபோல, அந்த அமைப்பு எந்த அமைப்பில் அல்லது எவரைத்தான் குழப்பாமல் விட்டார்கள். கனடாவில் எந்தவொரு விடயத்தையும் செய்ய முனைந்தால் அதைக் குழப்புவதற்கு முன்னிற்பது அவர்கள்தான். அவர்களுடைய முகமூடியைக் கிழித்தெறிவதும் மாவீரர்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலிதான் என்பதைக் காலம் உணர்த்தும்.

Edited by தமிழச்சி

இரண்டு மாவீரர் தின நிகழ்வு நடக்குமாயின் கனடா வாழ் மக்களே! இன் நிகழ்வுககளை பகிஸ்கரித்து எமது வீட்டிலேயே அஞ்சலி செலுத்துவோமாக,

Edited by BLUE BIRD

தமிழீழத்தின் விடியலை மாத்திரம் மனதில் கொண்டு, மாவீரர் நாள் தொடர்பாக பேச்சு வார்த்தையில் பங்குபற்றி நல்ல முடிவை எட்டுங்கள்.

12-11-2011

கனடா மக்களவைத் தலைவர் மதிப்பிற்குரிய மோகன் ராமகி​ருஷ்ணன்,

கனடா மாவீரர்பணிமனை நிர்வாக உறுப்பினர் மதிப்பிற்குரிய சத்தியநாதன் வேலுப்பிள்ளை,

ஆகிய உங்கள் இருவரிடமும் நாம் வணக்கத்துடன் வேண்டிக் கொள்வது

மாவீரர் தினம் தமிழ் மக்களின் புனிதமான நாள். எமக்காக, எமது மக்களுக்காக, ஆண்டாண்டு காலமாய் ஆக்கிரமிக்கப்பட்ட ஈழமண்ணின் விடுத்லைக்காய், தமது இன்னுயிரைத் தியாகம் செய்த புனிதர்களை எண்ணும் நாள். அவர்களது கனவை நனவாக்க திடசங்கற்பம் எடுக்கும் நாள்.

இந் நாளை நாம் அனைவரும் ஒற்றுமையாக நடாத்த வேண்டும் என்பதே மக்களது அவா. அது தான் எமது மாவீர்ர்களுக்கும் கெளரவமும்மாகும். பிளவு பட்ட சமுகமாக இல்லாமல் இந் நிகழ்வில் ஒன்றாகத் தலை நிமிர வேண்டும் என்பதும் மக்களது அவா

ஏற்கனவே இரண்டு வேறு மாவீர்ர் நிகழ்வுகள் நடைபெறப் போவதாக அறிவித்தல்கள் வந்திருக்கின்றன. இப்படி இரு வேறு நிகழ்வுகள் நடை பெறுவது மாவீர்ர்களுக்கும், அவர்களது தியாகங்கட்கும், பெரும் அவமதிப்பாகும். ஒரு தமிழீழத்தினை வென்றெடுக்கத் தான் அவர்கள் போராடினார்கள். என்பதை நாம் உணரவேண்டும்.

சர்வதேசம் ஈழத் தமிழ் மக்களின் அரசியல் தீர்வை நோக்கிய, அதுவும் ஒரு பெயரிடப்படாத தீர்வை நோக்கி காய்களை நகர்த்திக் கொள்கின்றது. அதை முகம் கொடுக்க்க் கூடியதாக புலம் பெயர் தமிழர்கள் ஒற்றுமையாக, வலுவான சக்தியாக, இல்லாத சூழல் சர்வதேசம் தான் நினைக்கும் தீர்வை எங்கள் மக்கள் மத்தியில், திணித்துவிட்டுப் போய்விடக் கூடிய அபாயம் எம் கண்முன் விரிந்து கிடக்கின்றது.

நோர்வேயின் சமாதான முயற்சிகளின் தோல்விக்கு காரணம் கூறும் அறிக்கையில் A report on Norway’s failed peace process in Sri Lanka, “Pawns of Peace: Evaluation of Norwegian Peace Efforts in Sri Lanka, 1997-2009” குறிப்பிடப்பட்ட விடயத்தினை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றோம். தமிழர்தரப்பு பலவீனமான நிலையில் இருந்து பேச்சு வார்த்தை நடாத்துவதாக இலங்கை அரசு எண்ணியது. இதனால் பேச்சு வார்த்தைகளில் தமிழ் மக்களுக்கு எதுவும் கொடுக்கவேண்டியது இல்லை என்றவாறு இலங்கை அரசு செயற்பட்டது. இது போன்ற நிலைப்பாட்டை சர்வதேசம் எடுத்துவிடக்கூடாது. தமிழர் நாங்கள் ஒன்றுபட்டு பெரும் வலுவாக நிமிரவேண்டிய காலம் இது

இச் சூழலில் மாவீர்ர் தினம் ஒற்றுமையாக நடைபெறுவது சர்வதேசத்திற்கும் சிங்கள அரசிற்கும் ஒரு செய்தியாக அமையவேண்டும். ஒன்றுபட்ட மாவீர்ர் தினம் நடைபெறுவதற்கு எங்களால் ஆன உதவிகளைச் செய்யத் நாம் தயாராய் இருக்கின்றோம்.

இதற்காக முரண்பட்டுள்ள இரண்டு பக்கங்களையும் பேச்சு வார்த்தையில் ஈடுபடுத்தி ஒன்றுபட்ட தமிழினமாக ஒரு மாவீர்ர் தினத்தினை நடாத்த சகல உதவிகளையும் தருவதற்கு நாங்கள் இதய சுத்தியுடன் தயாராயுள்ளோம்.

தமிழ் மக்களின் பிளவுகளைத் தவிர்த்த செயற்பாடாக, எமது மக்களின் விடுதலைக்காக மாவீர்ர்களின் உன்னத தியாகங்களுக்காக, அனைவரும் ஒன்று பட்ட மாவீர்ர் தினத்தினை செயல் வடிவமாக்க வேண்டும்.

மக்களவையும். ,மாவீர்ர் பணிமனை யினரும் ஒரு பேச்சுவார்த்தை மூலம் இந்த பிணக்கினைத் தீர்த்துக் கொண்டு, மீண்டும் எமது விடுதலப் பயணத்தில் நாம் ஒற்றுமையாக பயணிக்க வேண்டும்.

தமிழீழத்தின் விடியலை மாத்திரம் மனதில் கொண்டு, எங்கள் மத்தியட்சத்தை ஏற்று இப்பேச்சு வார்த்தையில் பங்குபற்றி நல்ல முடிபை எட்டுங்கள். காலத்தின் நெருக்கடி கருதி இன்று (13.11.2011) அல்லதது நாளை காலை ஒருசாதமான பதிலை எதிர்பார்க்கின்றேம். நாளை 14.11.2011 திங்கள் மாலை பேச்சுவார்த்தைக்கு எற்பாடு செய்வோம்.

இது போன்ற அழைப்பை மற்றத்தரப்பினர்க்கும் அநுப்பியுள்ளோம்

இப் பேச்சு வார்த்தைக்கு நாங்கள் அனுசரணையாக இருப்போமே அன்றி பேச்சு வார்த்தையில் நாங்கள் பங்கு கொள்ள மாட்டோம். உங்கள் சம்மத்தினை உடன் தெரியப் படுத்துங்கள். ஒற்றுமையாக எங்கள் மாவீர்ர்களினை நினைவு கொள்வோம்,

இதையே தான், தங்கள் உறவுகளை எமது மண்ணுக்காக தியாகம்செய்த மாவீரர் குடும்பத்தவர்களும் விரும்ம்புவார்கள்

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

--

இப்படிக்கு

பொன். பாலராஜன்

  • கருத்துக்கள உறவுகள்

பிளவுபட்டு இரு நிகழ்வாக நடாத்தப்படும் மாவீரர் நிகழ்வுக்கு நான் செல்வதில்லை என்று முடிவெடுத்துள்ளேன். என் வீட்டிலேயே மாவீரருக்கான தீபத்தை ஏற்றப்போகின்றேன்...

மாவீரர் நிகழ்வின் ஏற்பாட்டுக்குழுக்களே...... இம்முறை இருவேறு இடங்களில் மாவீரர் நிகழ்வை நீங்கள் நடாத்துவீர்களானால் இனி எப்போதுமே தமிழரின் ஒற்றுமையைப் பலத்தை காட்டமுடியாது...

பிளவுபட்ட இக்குழுக்களை நான் மிக மிக வெறுக்கின்றேன்.

இனிவரும் காலங்களில் உங்கள் இரு குழுக்களுக்கும் நானே முதல் எதிரி

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் ஒரே நாளில் ஒரே இடத்தில் தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள்

நவ 16, 2011

Font size:

font_decrease.gif font_enlarge.gif

தமிழீழ தேச விடுதலைக்காக தம்மை முழுமையாக ஈகம் செய்த மாவீர தெய்வங்களை நினைவு கூரும் நாளான ‘தமிழர் தேசிய நினைவெழுச்சி நாளை’ கனடாவில், நவம்பர் 27ம் திகதியன்று ஞாயிற்றுக்கிழமை வழமை போல ஒரே நாளில், ஒரே இடத்தில் நான்கு நிகழ்வுகளாக நடத்துவதென அனைத்துத் தமிழர் அமைப்புகளும் ஏகமனதாக தீர்மாணம் எடுத்துள்ளோம்.ஏமக்காக, எமது தேசத்துக்காக, எமது வாழ்வுக்காக, தம்முயிர் ஈந்து விதையாகி நிற்கும் எமது மாணிக்கங்களான மாவீரருக்குரிய நாளில் நாமெல்லாம் முன்னைய வருடங்களைப்போல இந்தவருடமும் இனி வருகின்ற வருடங்களிலும் ஒரே நாளில் ஒரேயொரு இடத்தில் மட்டும் ஒன்றாகக்கூடி நினைவுச்சுடர் ஏற்றுவோம்.

கனடியத் தமிழர் சமூகம், கனடியத் தமிழ் மாணவர் சமூகம் சார்பாக

கனடியத்தமிழர் நினைவெழுச்சி அகவம்

தொடர்புகளுக்கு: 416-450-9661

------------------சங்கதி------------

இதில் உள்ள அனைத்து தமிழ் அமைப்புக்களும்... என்பதின் உண்மைத்தன்மையான உள்பொருள் தெரியவில்லை. அனைத்து அமைப்புக்களும் என்று ஒரு குழப்பமான கருத்தை நம்ப வைக்க முயல்கின்றனரோ தெரியவில்லை.

ஆயினும் எம்மவர்களின் நம்பிக்கை, ஒற்றுமை, செயற்பாடு என்பது வெறுமனே மாவீர்ர தினத்தோடு மட்டும் தனித்து நின்று விடுவதா? ஒவ்வொரு செயற்பாட்டிலும், உண்மைத்தன்மையும், தெளிவான கண்ணோட்டமும் செய்பாடும் அவசியமானது. ஒரு செயல் செய்கின்றபோது, அது எவ்கையான வெற்றியை, தோல்வியை, பின்விளைவுகளைச் சந்திக்க இருக்கின்றது என்பது தொடர்பாக குறைந்தபட்ச சிந்தனையாவது இருந்தாக வேண்டும்.

பல தவறுகளைக் காலம்காலமாக விட்டிருக்கின்றோம். ஒரே நாளில் மரத்தை நட்டு, அன்றே பழம் புடுங்க வேண்டும் என்று நினைத்திருக்கின்றோம். 2009 லும் அதே நடந்தது. கடைசி நேரங்களில் செய்த ஆர்ப்பாட்டங்கள், அழுத்தங்களை குறைந்தது 5 வருடங்களுக்கு அல்லது 2006 ஆகஸ்டில் சம்பூர் தாக்குதலின் போது செய்யத் தொடங்கியிருந்தோமானால் கூட ஒரு அளவாவது ஏதாவது எம்மால் செய்திருக்க முடிந்திருக்கும்...

அவ்வாறே புலிகள் மீதான தடை. அதை வெறும் தும்பாக நினைத்து விட்டது எங்களின் தவறு. அன்றைக்கு உலகம் போட்ட தடைக்கு எதிராக எதுவும் செய்யவில்லை. அத்தடை எம்மக்களின் உணர்வினைக் கூட்டிப் பங்களிக்க ஏதாவது செய்யலாம் எனப் பலர் நினைத்துக் கொண்டிருந்தார்கள். அப்படித் தான் பேசியும் திரிந்தார்கள். ஆனால் அத்தடை என்பது கடைசி நேரத்தில் எம்மக்களைக் காப்பாற்ற கை கொடுக்காமல் போய்விட்டது. யாருமே உதவவில்லை. ஏனெனில் பயங்கரவாதிகள் என்ற முத்திரை தடுத்துக் கொண்டிருந்தது.

இந்தியா தடுத்தது, சீனா தடுத்தது என்பது எல்லாம் எங்களை நாமே ஏமாற்றுகின்ற செயல். எம்முடைய பக்கத்தை முழுமையாகச் சரி செய்த பின்னர், அவர்களைக் குற்றம் சாட்டலாம். ஆனால் எமக்குள் பல குறைபாடுகள் இருந்தன.

பழயதை ஏன் கதைக்க வேண்டும் என நினைக்கலாம். அன்று செய்த தவறுகளை வெளிப்படையாக மானம், மண்ணங்கட்டி பார்த்துக் கதைக்காமல் விட்டோமானால் தொடர்ந்து அந்தத் தவறுகளை செய்து கொண்டு தான் இருக்கப் போகின்றோம்.

எதிரி எங்களின் தவறுகளை சாதகமாப் பாவித்துக் கொண்டு வருகின்றான். உதாரணத்துக்கு 2006-2007 இல் சம்பூர் வைத்தியசாலை மீது தாக்குதல் நடத்தி 180-200 வரையிலான பொதுமக்கள் ஒரே தடவையில் கொல்லப்பட்டனர். அதுக்காக பெரியளவு எதிர்ப்பினை நாங்கள் காட்டவே இல்லை. தமிழ் ஊடகங்களுக்குள் எழுதினோம். அவ்வளவு தான்.அதற்கு முன்னர் நடந்த நவாலி, நாகர்கோவில் படுகொலைக்குக் காட்டிய உணர்வைக் கூட வெளிப்படுத்தவில்லை.

ஆனால் அதை நாங்கள் பேசாமல் விட்டதின் தொடர்ச்சி, கடைசி யுத்தம் வரை பல்லாயிரக்கணக்கான எம்மவர்கள் படுகொலை செய்யப்பட்டும், இன்று நடக்கின்ற அக்கிரமங்கள் வரை தொடர்கின்றது. நாங்களும் பேசவில்லை. அவனும் நாமும் தமிழனின் உயிர் குறித்துக் கவலைப்படுவதில்லை.

மாவீரர் தினத்தோடு மட்டுமே ஒற்றுமை என்ற எண்ணமாக மட்டும் இது நிற்று விடக் கூடாது. தொடர்ந்து ஒவ்வொரு பணிகளிலும் இந்த ஒற்றுமைக்கான தேவையை ஒவ்வொரு தமிழனும் வலியுறுத்த வேண்டும். மற்றவர்களின் அமைப்புக்கள் மீது கறை பூசுகின்ற வேலையைச் செய்பவர்களைக் கண்டிக்க வேண்டும். அவர்களின் முக்கியமான பணி அது அல்ல என்பதை வெளிபடுத்துங்கள்.

வெளிப்படைத்தன்மையோடு செய்ய வேண்டிய பல வேலைகளைக் கள்ளர்கள் போலவும், குற்றவாளிகள் போலவும் மறைத்து மறைத்து ஏன் செய்ய வேண்டும். அப்படி என்ன பிழையினை நாங்கள் செய்து விட்டோம். இப்படிப் பதுங்குவதால் தான், அவர்களும் எமக்குப் பின்னல் பதுங்குகின்றார்கள்.

Edited by தூயவன்

இன்னும் பேச்சுவார்த்தையே சரியாக ஆரம்பிக்கவில்லை. அதற்கான முயற்சிகள்தான் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், வானொலி, வெப் என எல்லா இடமும் ஒன்றாக மாவீரர் தினம் கடைப்பிடிக்கப்போவதாக "அந்த" அமைப்பினால் பிரச்சாரம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது.

:icon_idea: :icon_idea: :icon_idea: :icon_idea: :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஒற்றுமையாக நில்லுங்கள் பிறகு விளம்பரம் செய்யுங்கள்...

மாவீரர் நாளையும் விளம்பரப்படுத்தும் அளவுக்கு ஒரு கேடுகெட்ட இனமா இந்த இனம்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடந்தவை நன்றாகவே நடந்தன

நடப்பவையும் நன்றாகவே நடந்து கொண்டிருக்கின்றன

நடக்கப் போகின்றவையும் நன்றாக வே நடக்கும்

நம்புங்கள் நம் (மக்கள்) கனவு பலிக்கும்

ஆண்டவன் எமைக் கைவிட்டாலும்,

அவனும் வணங்கிடும் மாவீரர் தெய்வங்கள் எமைக் கைவிட மாட்டார்

ஏனெனில் அவர்கள் ஈழத் தாயின் வயிற்றிலுதித்தவர்கள்

மக்களுக்காய் வாழ்ந்தவர்கள் மக்கள் செய்வதையே விரும்புவபர்கள்

சொந்த தாய் தந்தையரின் அத்தியட்டிஅயை கூட் அண்ணன் தம்பி பிரிந்து நடத்தியததை வன்னில்யில் கண்கூடாக கண்டேன் இது ஊரார்வீட்டு பிள்ளை தானே என்று ஊரே பிரிந்து நின்று நடத்த போகிறார்களா?.

  • கருத்துக்கள உறவுகள்

புனிதர்கள் நாளைப் போட்டிக்குரிய நாளாக்கி கோதாவில் இறங்கியிருக்கும் விடுதலை வேணவா(????) கொண்ட குழுமங்களுக்கு வாழ்த்துக்கள்....தொடரும் நாட்களில் இந்த மாவீரர் நினைவு நாளில் மக்கள் மனங்களை(???!!!) ஜெயித்து முடிந்தவரை ஒரு பகுதி மறுபகுதியைத் தாக்கி... புலம் பெயர்ந்த தேசங்களில் எல்லாம் தமிழீழவிடுதலைப்புலிகளில் பெருமைகளை விலைபேசி... தாயகத்தில் வாழும் எமது மக்களுக்கு எல்லாமே சிங்கள அரசே எனும் வகைக்கு மென்மேலும் அவர்களை அடிமைகளாக்கி.. வெற்றிபெறும் குழு புலம்பெயர்தேசமெங்கும் அராஜகத்தால் திமிர் எடுக்க வாழ்த்துக்கள்.

Edited by valvaizagara

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.