Jump to content

ஏவாளின் தோட்டமருகே புதிய உலகம்


Recommended Posts

1.jpg

Berlepsch's six-wired "lost" bird of paradise - சொர்க்கத்தின் பறவை.

Papua 'Eden' என்ற அழைக்கத்தக்க மனிதர்களின் நடமாட்டத்தைக் கொண்டிராத ஒரு காட்டுப் பிரதேசத்தை அமெரிக்க,அவுஸ்திரேலிய, இந்தோனிசிய விஞ்ஞானிகள் கூட்டாக இணைந்து செய்த ஆய்வின் பின்னர் கண்டறிந்துள்ளனர். வட - மேல் பப்புவா-நியுகினியா (இந்தோனிசியா) பகுதியில் அமைந்துள்ள Foja மலைப்பகுதியில் அமைந்துள்ள வனப்பகுதியிலையே அந்த இடம் கண்டறியப்பட்டுள்ளது. மனித தாக்கம் இன்றி இன்றும் இயற்கை வனப்போடு இருக்கும் அந்த வனப்பகுதியில் வாழும் பல புதிய இன பறவை மற்றும் விலங்குகளும் தாவரங்களும் கண்டறியப்பட்டுள்ளன.

தகவல் ஆதாரத்துக்கு - http://kuruvikal.blogspot.com/ - படம் பிபிசி.கொம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனிதர்களின் நடமாட்டத்தைக் கொண்டிராத

அற்றஸ் தரமுடியுமா..?? புண்ணியமாய்ப்போகும். :wink: :P

Link to comment
Share on other sites

அற்றஸ் தரமுடியுமா..?? புண்ணியமாய்ப்போகும். :wink: :P

அது தரமுடியாதுங்கோ..! மனிசாளை விடவே மாட்டம்..குருவிகள் சங்கம் தீர்மானம் இயற்றிட்டு..! :wink: :lol:

Link to comment
Share on other sites

அது தரமுடியாதுங்கோ..! மனிசாளை விடவே மாட்டம்..குருவிகள் சங்கம் தீர்மானம் இயற்றிட்டு..! :wink: :lol:

இப்ப போய் பார்த்தவர்கள் சும்மாவா இருக்கப்போகினம். அவைட்ட கேட்டா கிடைச்சிடும் அற்றஸ்.

Link to comment
Share on other sites

அற்றஸ் தரமுடியுமா..?? புண்ணியமாய்ப்போகும். :wink: :P

பிள்ளை அற்றஸ் கிடைச்சா என்னையும் கூட்டிக் கொண்டு போங்கோ பிளிஸ்...............

Link to comment
Share on other sites

தகவலுக்கு நன்றிகள் குருவிகள்.

அட இப்ப தானே கண்டுபிடிச்சிருக்கினம். இனி பறவைகளோ விலங்களோ அங்கு இருக்காது

Link to comment
Share on other sites

பிள்ளை அற்றஸ் கிடைச்சா என்னையும் கூட்டிக் கொண்டு போங்கோ பிளிஸ்...............

பொண்ணம்மாக்காட்ட வாங்கிக்கட்டியும் திருந்தல்ல.. காட்டுக்குப் போக.. கூட்டணி யாரோடை என்று...சுத்தம்..! :wink: :lol:

Link to comment
Share on other sites

இப்ப போய் பார்த்தவர்கள் சும்மாவா இருக்கப்போகினம். அவைட்ட கேட்டா கிடைச்சிடும் அற்றஸ்.

அவையே அற்றஸ் தெரியாம...கெலில போய் பாய்ஞ்சிருக்கினம்..! அங்க லேசில மனிசாள விடுறதா இல்லை...! :wink: :P :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முகம்ஸ்.. தாராளமாய் கூட்டிப்போகலாம்.. ஆனா நம்ம தோஸ்த் பொன்ஸ் கூட வரணும்.. பிறகு உங்கள எல்லாம் மிருகங்களுக்க எப்படியாம் தேடிறது..?? :wink: :P

பிள்ளை அற்றஸ் கிடைச்சா என்னையும் கூட்டிக் கொண்டு போங்கோ பிளிஸ்...............

Link to comment
Share on other sites

கண்டுபிடிக்கப்பட்டது பூலோக சொர்க்கம் - பெட்டகம்

இந்தோனேஷியாவின் பபுவா பிராந்தியத்திலுள்ள ஒரு ஒதுக்குப்புறமான காட்டில், மனிதர்கள் இதுவரை அறிந்திருக்காத விலங்குகளையும் தாவரங்களையும் டஜன் கணக்கில் கண்டுபிடித்துள்ளதாக சர்வதேச விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இதுவரை எவரும் பார்த்தில்லாத தேன் உண்ணும் பறவை இனம் ஒன்று, இருபது புதிய வகை தவளையினங்கள் என்று கண்டுபிடிப்புகளின் பட்டியல் நீளுகிறது. அழிந்துவிட்டதாக கடந்த நூறு ஆண்டுகளாக கருதப்பட்ட ஒரு பறவையினமும் படம்பிடிக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞானிகள் ஆய்வு நடத்திய இந்த அடர்வனமாது மிக மிக ஒதுக்குப் புறமான ஒரு இடம். ஒருவர் பின் ஒருவராக ஊர்ந்துதான் எங்கும் செல்ல முடியும் என்பதுபோன்ற காடு அது.

இந்தக் காடு முழுக்கவுமே மனித அரவம் என்பது கொஞ்சமும் இல்லை. ஆகவே மற்ற காடுகளைக் காட்டிலும் விலங்குகளின் விளைநிலங்களாக இந்த இடம் இருக்கிறது.

ஆனால் இப்படி ஒரு இடம் இருப்பது இப்போது தெரியவந்துவிட்டது. ஆட்களும் அதனுள்ளே சென்று பார்த்துவிட்டார்கள். இந்நிலையில் அந்த இடம் தொடர்ந்து அப்படியே இருக்க வாய்ப்பில்லை.

இது பற்றி எமதுசெய்தியாளர் ஸ்டெஃபனீ இர்வின் அனுப்பிய பெட்டகத்தின் தமிழ் வடிவத்தை நேயர்கள் கேட்கலாம்.

பிபிசி-தமிழ்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.