Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நல்லிணக்க ஆணைக்குழு கலைக்கப்பட்டது. அறிக்கை தயாரிக்க வேறு குழு நியமனம்

Featured Replies

மஹிந்தவினால் சர்வதேசத்தின் அழுத்தத்தினை தவிர்க்க அமைக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து அவ்வாணைக்குழு நேற்று செவ்வாய்க்கிழமை கலைக்கப்பட்டுள்ளது.

.

இந்த ஆணைக்குழுவின் அறிக்கை நவம்பர் 20 ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என தற்போது இயங்காதுள்ள மேற்படி ஆணைக்குழுவின் பேச்சாளர் லக்ஷ்மன் விக்கிரமசிங்க கூறினார். ஆணைக்குழு தனது பணியை நிறைவுசெய்துள்ள போதிலும் அறிக்கை தயாரிப்பதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகளில் சிறிய ஊழியர் குழுவொன்று ஈடுபட்டள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

.

.தேசிய சுவடிக்கூடத்திற்கு இந்த அறிக்கையை கையளிப்பதற்காக இன்னும் இரு மாதங்களுக்கு இந்த ஊழியர்குழு செயற்படும் எனவும் அவர் கூறினார்.இவ்வறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஜனாதிபதி தீர்மானிப்பார் எனவும் அவர் தெரிவித்தார்.

.

இந்தச்செயற்பாடானது ஆணைக்குழுவை கலைத்துவிட்டு அரசாங்கம் தான் விரும்பியவர்களை வைத்து அறிக்கையினைத் தொகுக்கும் ஒரு செயற்பாடாகவே காணப்படுகின்றது. ஆகவே இந்த அறிக்கை உண்மையில் ஆணைக்குழு அறிக்கையாக கூட பார்க்க முடியாது என்பதும் புலனாகின்றது.

.

தேசிய சுவடிகள் கூடத்திற்கும் அறிக்கை தயாரிப்பதற்கும் என்ன தொடர்பு என்பது அடுத்த கேள்வி. ஏற்கனவே ஆணைக்குழுவின் செயற்பாடுகளை விமர்சனம் செய்த அனைத்துலகம் இப்போ அறிக்கையின் இறுதி வடிவத்தினைக்கூட அவர்களால் தயாரிக்கக முடியாமல் போனதையிட்டு இது 100 விழுக்காடு நம்பிக்கையற்ற ஏற்றுக்கொள்ள முடியாத அறிக்கை என்பதனை வலியுறுத்துமா?

அடுத்ததாக மஹிந்தரின் இந்த ஆணைக்குழுவை நம்பிக்கொண்டு இருப்பதாக கூறும் அமெரிக்கா, இந்தியா, அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் இதுபற்றி என்னதான் கூறப்போகின்றன.

ஒருபக்கம் இந்த ஆணைக்குழுவை கலைத்தது நல்ல விடயம்தான் ஏனென்றால் இது இருந்தால்தான் மஹிந்தர் வெளி நாடுகளை ஏமாற்றிக்கொண்டிருப்பார் என்பது இன்னொரு வாதம். இதே நேரம் நல்லிணக்க ஆனைக்குழு அறிக்கையினை பகிரங்கப்படுத்தாமல் அதில் உள்ள விடயங்களுக்கு நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் மஹிந்தவின் செயலர் நேற்று முந்தினம் கூறி இருந்தார்.

நடவடிக்கை என்பது ஐக்கிய தேசியக்கட்சி காலத்தில் நடந்தவை, ஒட்டுக்குழுவினரால் மேற்கொள்ளப்பட்டவை, காணாமல் போன சம்பவங்கள் என இழுத்தடிப்பு நடக்கும் ஆனால் முள்ளிவாய்க்கால் சம்பவங்கள் எல்லாம் கடைக்கோடியில் ஒத்தி வைக்கப்படும். உலகிற்கு விசாரணை நடக்கின்றது என காட்டினால் போதுமானது என்பதே மஹிந்தவின் திட்டம்.

மூலம்

Edited by உமை

மகிந்தவின் இந்த போக்கு எமக்கு சாதகமே.

அடுத்த ஐ.நா. மனித உரிமை தொடரில் சிங்களம் மீதான பிரேரணையை கொண்டுவருவதற்கான அதன் ஆதரவு நாடுகள் கொடுத்துவரும் இறுதி தடையும் இதன் மூலம் நீக்கப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் கால இழுத்தடிப்பும், கண்துடைப்பும் தான்...

இலங்கையும் மேற்குலகமும் அரங்கேற்ற போகும் அடுத்த நாடகம் என்ன?

எந்தவொரு விடுதலைப்போரும் இரு பரிமாணங்களைக் கொண்டது. ஒன்று தளத்தில் நிகழும் போர், மற்றையது புலத்தில் நிகழும் போர். இங்கு புலத்தால் நிகழும் போர் எனக் குறிப்பிடுவது, சர்வதேசத்தில் மேற்கொள்ளப்படும் விடுதலைப் போருக்கு ஆதரவான பிரசாரங்கள் இலங்கை அரசின் பொய்ப் பிரசாரங்களை முறியடித்து அதற்கு எதிராக மேற்கொள்ளப்படும் எதிர்ப்பிரசாரங்கள். சர்வதேசத்தில் எமது விடுதலைப் போருக்காக திரட்டப்படும் ஆதரவுகள் சர்வதேச நாடுகள் எமது விடுதலைப் போரை நசுக்குவதற்கு எடுக்கும் முயற்சிகளை இனங்காணுதல் என ஏறத்தாழ களத்தில் நிகழ்ந்த போரின் வீச்சிற்கு இணையான வீச்சைக் கொண்டதுதான் சர்வதேசத்தில் மேற் கொள்ளப்படும் போராட்டங்கள்.

இந்தச் சமரை எதிர்கொள்ள எமக்குப் பலமான ஊடகத்துறையும் சர்வதேச ஊடகத்துறையுடனான சிநேகபூர்வ உறவுகளும் ஒருங்கிணைந்த செயற்பாடுகளும் அவசியம். ஆனால் 2009ஆம் ஆண்டு மிகப் பெரும் இனப்படுகொலையுடன் தமிழ்மக்களின் ஆயுதப் போரை நசுக்கிய இலங்கை அரசு தற்போது தனது கவனத்தை குவித்திருப்பது புலம்பெயர் தமிழ் மக்கள் வாழும் தேசங்களை நோக்கியே. பலமான ஊடுருவல்களுடன் இலங்கை அரசு தனது வளங்கள் அனைத்தையும் ஒன்றுதிரட்டி களமிறங்கியது. இலங்கை அரசின் இந்த நடவடிக்கைகளால் புலம்பெயர் தமிழ் சமூகம் பல பின்னடைவுகளைச் சந்தித்து வருகின்றது. ஆனாலும் அதனை முறியடித்து மீண்டும் முன்னோக்கி நகர வேண்டிய கடமையில் இருந்து நாம் தவறிவிட முடியாது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் படைத்தளபதிகள் மீது புலம் பெயர் தமிழ் அமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்ட வழக்குகள் அனைத்திலும் இருந்தும் இலங்கை அரசு தப்பிப்பிழைத்துள்ளது.

அதற்கு இலங்கை அரசுக்கு உறுதுணையாக இருந்தது இராஜதந்திர அந்தஸ்து என்ற ஆட்சி அதிகாரமே. தமிழ் மக்களின் அழுத்தங்களைச் சமாளிப்பதற்கு அனைத்துலக சமூகமும் அதனையே பயன்படுத்தி வருகின்றது. அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் அண்மையில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் கூட்டத்தில் கலந்துகொண்ட இலங்கையை அந்த அமைப்பில் இருந்து நீக்க வேண்டும் என தெரி விக்கப்பட்ட போதும், 54 நாடுகளை கொண்ட அமைப்பின் பெரும் பாலான நாடுகள் அதனை உதாசீனப் படுத்தியுள்ளன. இந்தியா வழமைபோல மெளனம் காத்துள்ளது. கனடாவும், பிரித்தானியாவும் இலங்கையில் 2013 ஆம் ஆண்டு நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்தபோதும், அதற்கு ஏனைய நாடுகளின் ஆதரவுகள் கிடைக்கவில்லை.

ஒரு அங்கத்துவ நாட்டை அமைப்பில் இருந்து இடைநிறுத்துவது நடைபெறாத ஒன்று அல்ல. முன்னர் பாகிஸ்தான் மற்றும் பிஜி ஆகிய நாடுகள் பொதுநலவாய அமைப்பில் இருந்து இடை நிறுத்தப்பட்டிருந்தன. 2007ஆம் ஆண்டு உகண்டாவின் தலைநகர் கம்போலாவில் இடம்பெற்ற கூட்டத் தொடரிலேயே பாகிஸ்தானை இடைநிறுத்தும் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பை வெளியிட்டதில் பிரித்தானியாவின் முன்னாள் வெளிவிவகாரச் செயலாளர் டேவிட் மில்லிபான்ட் முக்கிய பங்கு வகித்திருந்தார். பாகிஸ்தானில் ஜனநாயகத்தை நிலைநாட்டத் தவறியமை, அவசர காலச்சட்ட த்தை தொடர்ந்து நடை முறைப்ப டுத்தியமை, ஊடக ங்கள் மீதான அழுத்தங்களை மேற்கொண்டமை, மனித உரிமை மீறல்கள் தொடர்பான காரணங்களை முன்வைத்து பாகிஸ்தான் மீதான தீர்மானம் 2007ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொண்டு வரப்பட்டிருந்தது.

சுருக்கமாக கூறுவதானால் பொதுநலவாய நாடுகளின் அடிப்படை விதிமுறைகளை பாகிஸ்தான் மீறிவிட்டதாக டேவிட் மில்லிபான்ட் தெரிவித்திருந்தார். பொதுநலவாய நாடுகளின் இந்தத் தீர்மானத்தை பாகிஸ்தானின் நெருங்கிய நண்பனான இலங்கையும் மலேசியாவும் கடுமையாக எதிர்த்தபோதும் பாகிஸ்தான் இடை நிறுத்தப்பட்டிருந்தது. இதே போலவே சிம்பாவே மீதும் 2002 ஆம் ஆண்டு தீர்மானம் கொண்டுவரப்பட்டிருந்தது. பொதுநலவாய நாடுகளின் அமைப்பில் இருந்து முதலில் இடைநிறுத்தப்பட்ட சிம்பாவே பின்னர் முற்றாக நீக்கப்பட்டது. பாகிஸ்தான் மற்றும் சிம்பாவே ஆகிய நாடுகளில் இடம்பெற்ற வன் முறைகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் இடம்பெற்ற வன்முறைகள், இன அழிப்புக்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் படுகொலைகள் என்பன மிக அதிகம். அது தொடர்பாக பல ஆயிரம் ஆதாரங்களும் அனைத்துலக சமூகத்தின் முன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

எனினும் ஐக்கிய நாடுகள் சபையினாலோ, மனித உரிமை அமைப்பு க்களினாலோ அல்லது பிராந்திய அமைப்புக்களினாலேயோ எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியவில்லை. மறுவளமாக காலத்தை இழுத்தடித்து தனது ஆட்சியை தக்கவைத்து, சிங்களக் குடியேற்றங்கள், மொழி மற்றும் இனக்கலப்புக்கள் மூலம் தமிழர்க ளின் தாயகக் கோட்பாடுகளை சிதைத்துவிடும் இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்கியுள்ளது மேற்குலகம். இந்த நோக்க ங்களுக்காக இலங்கை அரசினால் அமைக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்களும், இன நல்லிணக்கமும் என்ற ஆணைக்குழுவின் அறிக்கைக்காக தாம் காத்திருப்பதாக கூறிவரும் மேற்குலகம் கட ந்த மே மாதம் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் ஜெனீவாவில் இடம் பெற்ற ஐ.நாவின் மனித உரிமை மாநாடுகளையும் இலங்கைக்கு எதிராக பயன்படுத்துவதை தவிர்த்திருந்தனர்.

கடந்த வாரம் கருத்து வெளியிட்ட அமெரிக்காவின் வெளிவிவகாரத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நியூலான்ட் கூட, தாம் மிகவும் அதிக எதிர்பார்ப்புடன் இந்த அறிக்கைக்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் இலங்கையின் ஆணைக்குழு சமர்ப்பிக்கும் அறிக்கை என்னவாக இருக்கும் என்பதை தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள். இலங்கையில் முன்னர் அமைக்கப்பட்ட ஒரு டசினுக்கு மேற்பட்ட ஆணைக்குழுக்கள் எந்த முடிபையும் எட்டாது காணாமல் போயிருந்தன. ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசுகளும் தமது பதவி க்காலம் முடியும்வரையிலும் சில ஆணைக்குழுக்களை அமைத்து அனைத்துலக சமூகத்தை ஏமாற்ற வந்திருந்தன என்பதே வரலாறு. 2006ஆம் ஆண்டு மூதுரில் படுகொலை செய்யப்பட்ட தொண்டர் நிறுவனத்தைச் சேர்ந்த 17 பணியாளர்களின் படுகொலைகள் தொடர்பில் அமைக்கப்பட்ட ஆணைக்குழுவின் தலைவராக இருந்தவரே அண்மையில் ஐ.நாவில் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் தலைவரான இந்தோனேசியாவைச் சேர்ந்த தருஸ்மர் என்பவர். ஆனால் இலங்கையில் அன்று அமைக்கப்பட்ட ஆணைக்குழுவின் விசாரணைகளை இலங்கை அரசு திட்டமிட்டே சிதைத்து வருவதாகவும் அரசியல் அழுத்தங்கள் மேற் கொள்ளப்படுவதாகவும் அது ஒரு சுயாதீன விசாரணைக்குழு அல்ல எனவும் தெரிவித்து தருஸ்மர் அதில் இருந்து விலகியிருந்தார்.

அந்த விசாரணைக்கு உறுதுணையாக அவுஸ்திரேலியாவில் இருந்து சாட்சியம் வழங்கிய ஒருவரைக் கூட வீதி விபத்து ஒன்றை ஏற்படுத்தி படுகொலை செய்வதற்கு இலங்கை ஜனாதிபதியின் சகோதரரும், அமைச்சருமான பசில் ராஜபக்ச­ திட்டமிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. எனவே அடுத்த வாரம் வெளியிடப்படும் முழுக்க முழுக்க இலங்கை அரசுக்கு சார்பான அதிகாரிகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை இலங்கை அரசை காப்பாற்றும் உத்திகள் கொண்டதாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் அதனை நம்பியிருப்பது போல நாடகமாடி வரும் மேற்குலக சமூகம் அதன் பின்னர் என்ன செய்யப் போகின்றது என்பது தான் தற்போதைய கேள்வி. தமிழ் மக்கள் தொடர்பில் மேற்குலகம் கொண்டுள்ள கொள்கைக்கான அமிலச் சோதனையே நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கை, வெளியிடப்பட்ட பின்னர் மேற்குலகம் எடுக்கும் நடவடிக்கைகளில் இருந்து அவர்களின் வேடம் அம்பலமாகிவிடும்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையானது, வேறு ஒரு குழுவைக் கூட பரிந்துரை செய்யலாம். அவ்வாறு மற்றுமொரு குழு பரிந்துரை செய்யப்பட்டால் அந்த குழுவும் தனது செயற்பாட்டுக்கு பல வருடங்களை எடுத்துக் கொள்ளலாம். வழமை போல அந்த குழுவின் அறிக்கைக்காக காத்திருப்பதாக மேற்குலகம் மற்றுமொரு நாடகத்தை ஆரம்பிக்கலாம். ஆனால் இந்த நாடகங்கள் எல்லாவற்றையும் முறியடித்து ஈழத்தமிழ் மக்கள் தமது உரிமை களை அடைய வேண்டும் என்றால் தமிழகத்தின் தூய்மையான தமிழ் அரசியல் தலைவர்களின் வலுவான பிணை ப்புக்கள் எமக்குத் தேவை. அதனை வலுப்படுத்த வேண்டிய காலத்தின் தேவை நமக்கு ள்ளது. அதன் மூலம் தான் மேற்குலகத்தின் தவறான அசைவுகளையும், ஏமாற்றுத்தனங்களையும் கட்டுப்படுத்த முடியும்.

மூலம்: வலம்புரி - கார்த்திகை 15, 2011

ஆக்கம்: வேல்சில் இருந்து அருஷ்

  • கருத்துக்கள உறவுகள்

tamilnadu_akathikal.JPG

இது ஒரு நல்ல கட்டுரை.. தின்றது செரிக்காமால் உக்கார்ந்து கொண்டு மெனக்கெட்டு நீ துரோகி நான் துரோகி

என வாய்சமால் விடும் சமூகத்திடம் இலங்கையரசின் பணம் பாதாளம் வரை பரவ வாய்ப்புள்ளது.

சமூகம் அல்லது மதம் அல்லது எதாவது ஒன்று குறைந்த பட்ச அடிப்படை கோட்பாடுகளை வரையறை செய்தல் வேண்டும். (முக்கியமானது எதை செய்யகூடாது என) தகாததை செய்தால் தள்ளி வைக்க வேண்டும் ஜிகாதிகள் தப்பா எழுதிய எழுத்தாளர்களுக்கெல்லாம் 1/2 கோடி அறிவிப்பார்கள்..

இங்கத்தான் அப்படி இல்லையே? பினாயில் குடித்ததை ரசித்து எழுதினால் அதற்கு ஒரு பாராட்ட ஒரு கும்பல்.நான் குடிக்க மாட்டேன் என்று சொன்னால் அதற்கும் ஒரு கூட்டம்.. வெட்டியாக உக்கார்ந்து கொண்டு ரஸ்யா உடைந்தது ஏன் என கூட்டம்.இங்கிருந்து ஆதரவு தர ராயகரன் கோஸ்டி தலைமையில் ஒரு புரியாணி கூட்டம். உயிர்கொடை தந்த மாவீரர்களுக்கு இருவேறு கொண்டாட்டம்.

ஈழம் - கண்ணீர்த் துளியாய் உறைந்து நிற்கும் கனவு! மண்ணை மீட்கவும் முடியாமல், உரிமைகொள்ளவும் இயலாமல், அந்நிய மண்ணில் கையேந்தி நிற்கும் அவலத்துக்கு இணையாக எதைச் சொல்வது?

முகாம்களில் ஒரு குடும்பத்துக்கு பத்துக்குப் பத்து அளவில் வீடு. பலர் முன்னும் பின்னும் இழுத்துக்கட்டி இருக்கிறார்கள். அடித்தட்டு மக்களும் முகஞ்சுளிக்கும் வாழ்க்கைத் தரத்தில்தான் பல முகாம்களின் நிலை அமைந்திருக்கிறது. ஆனால் அதற்கே, 'தமிழ்நாட்டு மக்கள் எங்கள் மீது வைத்திருக்கும் அன்புக்கு என்றைக்கும் நன்றிக்கடன் பட்டவர்கள்!’ என்று அவர்கள் நெகிழும்போது, குற்றவுணர்வு நம்மை ஆட்கொள்கிறது.

புழல் முகாமில் 'கொப்பி’ தந்து உபசரித்த ஒரு பெண் ''நான் படிச்சதெல்லாம் இங்கேதான். ஒன்பது வயசில் இங்கே வந்தேன். இப்போ நான் ஒரு கம்பெனி வேலைக்குப் போகுறன். இங்கேயே வளர்ந்ததால எனக்கு இங்க உள்ளவங்க மாதிரியே பாஷை மாறிடுச்சு!'' என்று சிரித்தார்.

மண்டபம் போன்ற சில முகாம்களில் இருக்கும் கான்கிரீட் வீடுகளும் 20 ஆண்டுகள் பழமையானவை. பல வீடுகளுக்கு ரப்பர் ஷீட்டுகள்தான் மேற்கூரை. சில இடங்களில் சொந்த செலவில் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டுகள் வேய்ந்திருக்கிறார்கள். கோடைக் கால வெப்ப அனல் அப்படியே தலைக்குள் இறங்குகிறது.

தமிழகம் மொத்தம் உள்ள 115 முகாம்களில் 70,374 அகதிகள் வசிக்கிறார்கள். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அகதிகள், முகாம்களுக்கு வெளியே வசிக்கிறார்கள். தமிழக அரசு உதவித்தொகையாக குடும்பத் தலைவருக்கு மாதம் ஒன்றுக்கு 400, குடும்பத் தலைவிக்கு 200, பிள்ளைகளுக்குத் தலா 144 வழங்குகிறது. அதாவது, குடும்பத் தலைவருக்கு வழங்கப்படும் அதிகபட்சத் தொகையின் ஒருநாள் சராசரி 13 தான். இதில் ஒரு பால் பாக்கெட் மட்டுமே வாங்க முடியும். (கவனிக்க: தமிழகக் காவல்துறையின் மோப்ப நாய் ஒன்றுக்கு நாளொன்றுக்கு ஒதுக்கப்படும் தொகை 60)

இந்த சொற்ப உதவித்தொகை ஆண்களைக் கூலி வேலைகளுக்குத் துரத்துகிறது. பெரும்பாலும், பெயின்டர் வேலைக்கும்,கல் உடைப்பதற்கும், சுமை தூக்குவதற்குமே அவர்கள் செல்கிறார்கள். அதிலும் புழல், கும்மிடிப்பூண்டி போல நகரங்களுக்கு அருகில் உள்ள முகாம்களில் வசிக்கும் அகதிகளுக்குத்தான் இந்த வாய்ப்பும் கிடைக்கிறது. ஊருக்கு ஒதுக்குப்புறமாக அமைந்திருக்கும் முகாம்களில் வசிப்பவர்களுக்கு அந்தக் கூலி வேலை கிடைப்பதிலும் சிக்கல்தான். பெண்களும் கிடைக்கும் வேலையைச் செய்கிறார்கள்.

http://tamilthesiyam...-post_6785.html

தன்னிலை சிறிது உயர்ந்துவிட்டால் 7 டிகிரி செல்சியஸ் கொண்டாட்டம். புலம்பெயர்ந்த அகதிகளை விட இங்கு வாழும் அகதிகள் எவ்வளோ தேவலாம்.நான் நினைக்கிறேன் அன்றாடம் உழைக்கும் மக்களுக்குத்தான் தாயகத்தின் அருமை பெருமை புரியும். வெட்டி பந்தா வாய்சாமால் கோஸ்டிகளுக்கு அது புரியாது..

இவர்களோடு ஒப்பீடும் போது தமிழ்நாட்டு தமிழர்கள் எவ்வளோ தேவலாம். ஊடங்களின் போதிய ஆதரவு இல்லாது இருப்பினும் தார்மீக ஆதரவை வழங்கியே வந்துள்ளனர். பேச்சு வழி கேட்டே சோனியா கோந்தி சாக வேண்டும் என குலதெய்வத்திடம் கிடா வெட்டியவர்கள் ஏராளம்.

டிஸ்கி:

சர்வெதேச அளவில் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு என வந்தால் அதை தமிழ்நாட்டு தமிழரையும் உறவாக கருதி வாக்கெடுப்புக்கு வலியுறுத்த வேணும். அப்போத்தான் 100க்கு 99.9வீதம் கணக்கு டேலி ஆகும் (இங்கிட்டு வாங்கிட்டு சொந்தமாக வாக்கு குத்தி போடுவார்கள் )வெளிநாட்டுகாரவுகளையெல்லாம் நம்ப முடியாதுப்பா..! <_< <_< :icon_mrgreen:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.