Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர்கள் கொல்லப்பட்டனர் எனக்கூறிய \"சிறிலங்காவின் கொலைக்களம்\" போலி; நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் தெரிவிப்பு அலரி மாளிகையில் ஜனாதிபதியிடம் நேற்று கையளிப்பு

Featured Replies

போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கை இராணுவத்தினர், தாம் கைது செய்த போராளிகளை விசாரணை ஏதுமின்றிச் சுட்டுக் கொன்றார்கள் என்றும் பொதுமக்களின் இருப்பிடங்கள் மருத்துவமனைகள் என்பவற்றின் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தினார்கள் என்றும் குற்றஞ்சாட்டி "சனல்4" தொலைக்காட்சி வெளியிட்ட "சிறிலங்காவின் கொலைக்களம்" ஆவணப்படத்திலும் அதன் பின்னர் போராளிகள் சுட்டுக் கொல்லப்படுவதாக அது வெளியிட்ட மற்றொரு காணொளியும் முற்றிலும் போலியானவை என்று நல்லிணக்கத்துக்கான படிப்பினைகள் ஆணைக்குழு தனது இறுதி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நல்லிணக்கத்துக்கான படிப்பினைகள் ஆணைக்குழு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வந்த விசாரணைகளின் இறுதி அறிக்கையை நேற்று மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்தது. அலரி மாளிகையில் மாலையில் நடைபெற்ற நிகழ்வில் ஆணைக்குழுவின் தலைவரும் முன்னாள் நீதியரசருமான சி.ஆர்.டி.சில்வா அறிக்கையைக் கையளித்தார்.

அந்த அறிக்கையில், போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்றிருக்கக் கூடிய \ம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்துமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கொழும்பிலிருந்து வெளியாகும் "சண்டே ரைம்ஸ்" வாரஇதழின் அரசியல் ஆசிரியர் எழுதியுள்ளார்.

அறிக்கை பற்றி அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

ஆணைக்குழு பெற்ற தகவல்களை அடிப்படையில் விசாரணை நடத்துவதற்குத் தேவையான அடிப்படைச் சான்றுகள் இருப்பதால், இறுதிப் போரில் இடம்பெற்ற குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தப்படவேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் விசாரணை செய்யப்படவேண்டிய சம்பவங்கள் குறித்தோ, அவற்றுக்குப் பொறுப்பானவர்கள் யாõர் என்றோ எவரது பெயரையும் ஆணைக்குழு குறிப்பிடவில்லை.

400 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையில், இலங்கை இராணுவத்தினர் படுகொலைகளை மேற்கொண்டனர் என்று கூறும் "சனல்4" தொலைக்காட்சி வெளியிட்ட காணொலி முற்றிலும் போலியானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://184.107.230.170/~onlineut/News_More.php?id=53451656221204904

முன்னரும் பல அறிக்கைகள் ஆணைக்குழுக்களை கண்டு எதுவுமே நன்மை பெறாத எமதினம் இந்த இன்றைய நிலையில் எம்மை ஏமாற்றாத விதமாக அணுகி நன்மைகள் பெறவேண்டும்.

இந் நிலையில் நேற்று அலரிமாளிகைக்குச் சென்ற நல்லிணக்க ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் தமது அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்தனர். எனினும் அவ்வறிக்கை ஊடகங்களில் வெளிவராதவாறு பாதுகாக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டதாக விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதேவேளை நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை ஜனாதிபதி முழுமையாக வாசித்ததன் பின்பே அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=25404

இதன் மூலம் நல்லிணக்க ஆணைக் குழு உலகத்தின் நம்பகத் தன்மையை இழந்திருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இதன் மூலம் நல்லிணக்க ஆணைக் குழு உலகத்தின் நம்பகத் தன்மையை இழந்திருக்கிறது.

இதைத்தான் நானும் நினைத்தேன்..! :rolleyes: இது எமக்கு நன்மையே..!

  • கருத்துக்கள உறவுகள்

Most of the World's human rights organisations rejected this LLRC well before it has started its findings. So, no one should really care about this report. May be this is the work of USA and India.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.