Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இது தமிழ்நாடா அல்லது சுடுகாடா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இது தமிழ்நாடா அல்லது சுடுகாடா?

more_vegetable_shops.jpeg

கோ‌ஸ் ரூ.30

கேர‌ட் ரூ.25

பீ‌ட்ரூ‌ட் ரூ.20

ச‌வ்ச‌வ் ரூ.18

நூ‌க்கோ‌ல் ரூ.23

மு‌‌ள்ளங்‌கி ரூ.28

பீ‌ன்‌ஸ் ரூ.32

க‌த்‌திரி‌க்கா‌ய் ரூ.37

அவரை‌க்கா‌ய் ரூ.28

புடல‌ங்கா‌ய் ரூ.17

வெ‌ண்டை‌க்கா‌ய் ரூ.40

மிளகா‌ய் ரூ.09

குடை ‌மிளகா‌ய் ரூ.12

முரு‌ங்கைகா‌ய் ரூ.150

இ‌‌ஞ்‌சி ரூ.40

தே‌ங்கா‌ய் (ஒ‌ன்று) ரூ.10

சேனை‌க் ‌கிழ‌ங்கு ரூ.23

சேம்பு ரூ.10

உருளை‌க்‌கிழ‌ங்கு ரூ.24

கோவ‌க்கா‌ய் ரூ.27

சுர‌க்கா‌ய் ரூ.18

நா‌‌ட்டு த‌க்கா‌ளி ரூ.40

பெ‌‌ங்களூ‌ரு த‌க்கா‌ளி ரூ.36

பூச‌ணி ரூ.20

பெ‌ரிய வெ‌ங்கா‌ய‌ம் ரூ.55

சா‌‌ம்பா‌ர் வெ‌‌ங்காய‌ம் ‌ ரூ.50

ப‌ட்டா‌ணி ரூ.37

பா‌க‌‌ற்கா‌ய் ரூ.28

கா‌‌லி‌பிளவ‌ர் (ஒ‌ன்று) ரூ.23

ஓட்டல் நிலவரம்...

img1111107017_1_1.jpg

சிங்கிள் டீ= 7 ரூபா

கப்டீ =10 ரூபாய்

ஒரு செட் போண்டா= 24

ஒரு செட் இட்லி =20

ஒரு பூரி செட் =25

உப்புமா= 20

பொங்கல் =23

பிளைன் தோசை = 18

மசால் தோசை =20

செட் தோசை=25

புல் மீல்ஸ்=70

மினி மீல்ஸ்=40

குஸ்கா=40

பிரியாணி=80

டிஸ்கி:

இந்த விலை வாசி எல்லாம் குறையுமா ? அன்னிய வியாபாரிகளை சில்லரை வியாபாரத்தில் அனுமதிக்கும் பட்சத்தில் குறையுமா என உலக பொருளாதார நிபுணர் தோழர் அகூதா அவர்கள் விளக்கவேண்டும் :) :)

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விலை வாசி குறைவதற்கு வைப்பு உள்ளது.............

தமிழ் நாட்டை பொறுத்தவரை இப்போதும் இயற்கை பயிர்செய்கைதான் நடைமுறையில் உண்டு. விவசாயிகள் அதற்கான ஊட்ட சத்துக்களை பெரும் செலவிலே கொள்வனவு செய்கிறார்கள்.

இனி சிந்தேற்றிக் முறைக்கு மாற்றி விடுவார்கள் பண முதலைகள்.

அது ஒரு கத்தரிகாயை ஒரு கிலோ ஆக்கும். அதை உண்பவர்களையும் அதே போல குண்டாக்கும்.

அது மனித உடலுக்கு பெரும் ஆபத்தை உண்டுபண்ணினாலும் நடுத்தர ஏழைகளுக்கு வேறு வழியில்லை.

இப்போ மேலை நாடுகளில் ஓர்கானிக் காய்கறிகளுக்கு பெரும் கிராக்கி அனால் நடுத்தர வர்கத்திட்கு அது எட்டாத கனிதான்.

ஏழைகளின் வயிற்றில் இனிவரும் நாளில்தான் பெரும் அடி அடிக்க போகிறார்கள்.

2050 இல் சனத்தொகை ஒன்பது பில்லியனை கடந்திருக்கும் பயிர்செய்கை நிலங்கள் குடியிருப்பாக மாறும் ஆபாயம் உள்ளது. உணவை எப்படி உற்பத்தி செய்வது என்பது பெருத்த தலையிடியாக உள்ளது. தவிர உலக உஷ்ணம் கூடிவருவதால் மழை பற்றாக்குறை ஒருபுறமும் வெள்ள பெருக்கு மறுபுறமும் நடக்க அதீத சாத்தியம் உண்டு.

- அந்நிய சில்லறை நிறுவனங்கள் தங்களுக்கு கொழுத்த இலாபம் இருக்கும் என்றால் மட்டுமே வருவார்கள்.

- நாடுகள், தமக்கு, மக்களுக்கு இல்லபம் இருக்கின்றதா? எனப்பார்த்துதான் அனுமதிப்பது - இல்லை.

கட்டம் # 1 : சில்லறை வியாபாரத்தில் தமது போட்டியாளர்களை அழிப்பது. தேவையானால் குறைந்து (நட்டத்தில்) விற்று போட்டியை இல்லாமல் செய்வது

கட்டம் # 2: தமக்கு இலாபமான, நம்பிக்கையான உற்பத்தியாளர்களுடன், விநியோகத்தவர்களுடன் ஒப்பந்தங்களை செய்வது

கட்டம் #3 : படிப்படியாக விலையை கூட்டி இலாபம் பெறுவது

மொத்தத்தில் பெரும்பான்மையான மக்களுக்கு இந்த அந்நிய நிறுவனங்களால் பின்னடைவே ஏற்படும், விலைவாசி கூடும்.

ஒரு சிறுபான்மை மக்களுக்கு: ஒப்பீட்டளவில் நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும், சில உற்பத்தியாளர்களுக்கும் விநியோகத்தர்களுக்கும் இலாபம் கிட்டும்; பணம் உள்ளவர்களுக்கு தரமான பொருட்கள் கிடைக்கும்.

ஆனால் தமிழக அரசு/மத்திய அரசு, இந்த நிருவனங்கள் பெறும் இலாபத்தில் எத்தனை வீதம் வரி செலுத்த வேண்டும்? மற்றும் மொத்த விற்பனையில் எத்தனை வீதம் தமது மாநிலத்தில் முதலீடு செய்யவேண்டும் என நிர்ப்பந்திக்கலாம்.

இந்த நிருவனங்களில் முதலீடும் செய்யலாம் :D

இவ்வாறான நிறுவனங்கள் எல்லா ஊரிலும் தமது வியாபாரத்தை மேற்கொள்ள மாட்டார்கள். பெரிய நகரங்களில், உள்ள மக்களின் வருவாய்க்கு ஏற்ப தமது வியாபாரத்தை மேற்கொள்ளுவார்கள்.

எனவே, சிறிய நகரங்களில், கிராமங்களில் பாதிப்புக்கள் குறைவாக இருக்கும்.

விளை நிலங்களை வீடுகளாய் மாற்றியதும், அதீத இரசாயானம் பாவித்து மண்ணை மலடாக்கியதன் விளைவு.

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் போன்றவர்களின் அறிவுரையைக் கேட்கவில்லை. தோட்டத்தில் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை கொண்டு விற்கும் சிறுவியாபாரிகளை ஒதுக்கி, 'சுப்பர் மார்க்கட்' கலாச்சாரத்திற்குப் போனது.

இன்று மேற்குலகம் இயற்கை வேளாண்மையை நோக்கி விரைகிறது. அவர்கள் ஒதுக்கியதை மூன்றாம் உலக நாடுகளில் பரிசோதிக்கிறது. இது காலம் காலமாய் நடப்பது.

வேளாண்மையை கூட்ட, உரத்திற்காக அதிகம் பாவிக்கப்படும் பொற்றாசியம் நைத்திரேற்று (பொர்ராஸ்) சீன- இந்திய நாடுகளால் அதிகம் உலகச்சந்தையில் வேண்டப்படுகின்றது. மருதங்கேணி கூறியது போல, இந்த வகை பயிர்ச்செய்கை பல நோய்களை தருகிறது (including cancer).

அதனால் இயற்கை உணவுப்பொருட்களுக்கு (Organic) மவுசு கூடுகின்றது. ஆனால், மக்கள் தொகை அதிகரிப்பதால் (ஆனால் நிலம் அதிகரிப்பதில்லை) - உலகில் பசி, பட்டினி பிரச்சனையாக உருவெடுக்கின்றது.

எனவே அரசுகள் இக்கட்டான நிலைக்கு முகம் கொடுக்கவேண்டியவர்களாக உள்ளனர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு- 'வெளிநாடுகளில் உள்ள கறுப்பு பணத்தை வெள்ளையாக்கும் முயற்சி'

சென்னை: வெளிநாடுகளில் அரசியல்வாதிகள் பதுக்கி வைத்திருக்கும் கறுப்புப் பணத்தை, வெள்ளைப் பணமாக மாற்றும் முயற்சி தான் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவாகும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கூறியுள்ளது.

இந்த அமைப்பின் அவசரக் கூட்டம் அதன் தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நடந்தது. இக் கூட்டத்துக்குப் பின் நிருபர்ரளிடம் பேசிய அவர்,

பன்பொருள் சில்லறை வணிகத்தில் (multi brand retail) அன்னிய முதலீட்டை 51 சதவீதமும், ஒரு பொருளின் சில்லறை வணிகத்தில் (single brand retail) அன்னிய முதலீட்டை 100 சதவீதமும் அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவு கண்டனத்துக்குரியது. இதனால் சில்லறை வணிகம் முற்றிலும் அழிந்துவிடும். சில்லறை வியாபாரிகளின் வாழ்வாதாரம் பறிபோகும்.

7 கோடி சில்லறை வியாபாரிகள் உள்ளனர். அவர்களை நம்பி 20 கோடி பேர் இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் 20 லட்சம் வியாபாரிகள் உள்ளனர். ஒரு கோடி பேர் அவர்களை சார்ந்துள்ளனர்.

வணிகர்கள் ஒருபோதும் தங்கள் உரிமையை இழக்கமாட்டார்கள். வணிகத்தை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதையும் அனுமதிக்க மாட்டோம்.

மத்திய அரசின் இந்த நிலையை கண்டித்து முதல் கட்டமாக 6ம் தேதி சென்னை, காஞ்சீபுரம், வேலூர், தருமபுரி, திண்டுக்கல், கோவை, மதுரை, விழுப்புரம், திருச்சி, தஞ்சாவூர், தூத்துக்குடி ஆகிய 11 மாவட்டங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்.

அடுத்த கட்டமாக தெருமுனை பிரசாரம் நடத்துவோம். 3வது கட்டமாக கவர்னர் மாளிகை நோக்கி பேரணியும், டெல்லியில் பாராளுமன்றம் நோக்கி பேரணியும் நடைபெறும். 4வது கட்டமாக நாடுமுழுவதும் ஒருநாள் கடையடைப்பு நடைபெறும். இதற்கு தீர்வு கிடைக்காவிட்டால் அனைத்து வீடுகளிலும், வணிக நிறுவனங்களிலும் கறுப்பு கொடி ஏற்றுவோம்.

வெளிநாடுகளில் அரசியல்வாதிகள் பதுக்கி வைத்திருக்கும் கறுப்புப் பணத்தை, வெள்ளைப் பணமாக மாற்ற நடக்கும் மறைமுக முயற்சியே இது. அன்னிய முதலீட்டை தடுக்க சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும் ஆலோசித்து வருகிறோம்.

தமிழக முதல்வரையும் இது தொடர்பாக சந்தித்து பேசுவோம். சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றவும் வலியுறுத்துவோம் என்றார்.

http://tamil.oneindi...or-aid0090.html

டிஸ்கி:

கருத்துக்களை பகிர்ந்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி...

தோழர் இதுக்குள்ளையும் ஏதும் உள்குத்து இருக்கா.. ? அரசு விற்பனை கூடங்களுக்கு விற்பனை செய்வதற்கு பதில் நேரடி தரகர் (அதாவது அணில் அம்பானியின் இடைத்தரகர்) அவன் நேராக ரிலையன்ஸ் பிரஸ்( வால்மார்ட் போல) அங்கு கொண்டு சேர்த்துடுவான்..

reliance%20fresh.JPG

food-bazaar-level-3.jpg

__19301f.jpg

இவனுங்களை விட அவனுங்க காசு கூட தாராங்க.. ஆனால் நாங்கள் விற்பனை செய்தது மார்கெட்டில் கூடுதலா இருக்கு .. அதே பொருள் இவனுங்க சூப்பர் மார்கெட்டில் கம்மியா இருக்கு .. இடையில் என்ன நடக்கு..?என்ன வேறுபாடு??

இங்கிட்டு விவசாயத்தில் காய்கறிகளில் போட்ட முதலே வருகுது இல்லை.. இவனுங்கள் இப்போ அவனவன் வீட்டுக்கு தேவையான வெங்காயம் முள்ளங்கி பயிர் வைப்பதில்லை... எங்கிட்டோ போக வெள்ளையர் நாட்டில் சாப்பிடுவது என்று ஏதோ வித விதமாக கொடி வகை காய்களை சனம் பயிரிட்டு திரியுது..

(மாத்திரைக்காய் இது கோவைகாயின்ற மறு சேப்பில் இருக்கு)அதை எக்ஸ்போர்ட் பண்ண ஒரு கூட்டம் திரியுது... விவசாயிகளை மொத்தமாகவே ஒல் சேலில் வாங்கி விட்டார்கள் அதாவது பயிர் வைப்பதற்கான அனைத்து செலவுகளையும் ஏற்று கொள்கிறோம்.. அறுவடையின் போது கணக்கு பார்த்து செட்டில் செய்து விடுகிறோம் .. இதான் அவனுங்க விடுகிற டிஸ்கி...(வெள்ளையர்) அவனுங்களுக்கு தேவைபடுவதை இங்கிட்டு விளைய வைக்க வேணுமா?

வெளிநாட்டுக்காரன் நேரடியாக எங்கட வயலில் வந்து விலை பேசினால் என்ன நடக்கும்? தோழர்கள் விளக்கவேண்டும்.... :icon_idea: :icon_idea:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

சமீபத்தில் சிக்காகோவில் உள்ள ஒரு பல்கலைகழகம் ஒரு கட்டுரை வெளியிட்டு இருந்தது. அவர்களின் ஆய்வின் முடிவுகள் இதோ :

1. பெரும் வியாபாரிகள் மற்றவர்களை விட 10% குறைவான விலையையே விவசாயிகளுக்கு அளிக்கின்றனர்.

2. அவர்களின் விற்பனை விலையும் சற்று அதிகமாகவே உள்ளது.

3. பெரும் வியாபாரிகள் விரும்பும் பொருட்களை விவசாயிகள் விளைவிக்க சில இடங்களில் நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

4. விதைகள், உரங்களின் உபயோகம் வரை அவர்களின் ஆதிக்கம் விவசாயிகளின் மீது உள்ளது.

இதற்கு வியாபாரிகளின் பதிலை கேட்டால் வாயால் சிரிக்க மாட்டீர்கள்:

1. நாங்க விவசாயம் படித்தவர்களை வேலைக்கு வைத்துள்ளோம். — ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது கதையாக, இவர்களின் படிப்பு விவசாயிகளின் அறிவுக்கு கால் தூசுக்கு கூட ஈடாகாது. மேலும் மெத்த படித்த மேதாவிகளின் பேச்சை கேட்டு நாம் மண்ணையும், விளை பொருட்களையும் ஏற்கனவே நஞ்சாக்கிவிட்டோம். போதும் மெத்த படித்த மேதாவிகளின் அறிவுரைகள். இவர்கள் விவசாயம் படித்தவர்களை வேலைக்கு வைத்துள்ளதால் விவசாயிகளுக்கு என்ன லாபம்? எப்படியும் இவர்களின் அறிவுரைகள் கம்பெனிகளுக்கு சாதகமாகத்தான் இருக்கும்.

2. நாங்க தரமான electronic scales(எலக்ட்ரானிக் எடை மெஷின்கள்), உபயோகம் செய்து பொருட்களை அளக்கிறோம் – வியாபார பிண்னணி உள்ள குடும்பத்தில் இருந்து வந்த எனக்கு இது அடுத்த ஜல்லியாக தெரிகிறது. முன்னாடி எல்லாம் விவசாயிகளை சுலபமாக ஏமாற்றி வந்தனர் ஆனால் இப்பொழுது அவர்கள் கடைக்கு கொண்டு வருவதற்கு முன்னரே பொருட்களை எடை போட்டு எடுத்து வருகின்றனர், எடை ஏமாற்றுவது எல்லாம் இப்பொழுது முடியாத காரியம்.

3. நாங்க பொருட்களை வாங்கியவுடன் பணத்தை கொடுத்து விடுகிறோம் – எனக்கு தெரிந்த வரையில் சிறு வியாபாரிகள் கூட இதையே தான் செய்கின்றனர். விவசாயிகளிடம் எல்லாம் கடன் சொல்லி பொருட்களை வாங்க முடியாது. பொருளை எடை போட்ட உடன் காசு குடுத்து ஆக வேண்டும்.

4. விவசாயிகளின் இடங்களுக்கே சென்று பொருட்களை கொள்முதல் செய்கிறோம் – இது எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை, ஏனெனில் பெரிய விவசாயி என்றால் அவர்களின் இடத்துக்கு சென்று வாங்கலாம் சிறு விவசாயிகளிடமும் இவர்கள் இதை செய்கிறார்கள் என்று சொல்வது நம்பும்படியாக இல்லை. இந்த ஒரு காரணத்திற்காக 10% விலை குறைப்பு என்பது ஏற்றுக்கொள்ள முடியாது.

நான் கூட இங்கே ரிலையன்ஸ், சுபிக்ஷா, Spencer போன்ற கடைகளில் பொருட்களை வாங்கியவன் என்ற முறையில் சொல்கிறேன், இவர்கள் சொல்வது போல காய்கறி எல்லாம் அவ்வுளவு freshஆக இல்லை, விலையும் சற்று கூடுதல் தான்.அதே போல மெதுவாக இவர்கள் டின்னில் பதப்படுத்தப்பட்ட உணவுகளை ஊக்குவிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

http://santhose.word.../11/15/farmers/

முதலில் மலிவு விலை காய்கறி வியாபாரம் என்கிற முகமூடியோடு களத்தில் இறங்கிய ரிலையன்ஸ் ஃப்ரெஷ் நிறுவனம் இப்பொழுது சிறிது சிறிதாக ஏகபோக கொள்முதலில் ஈடுபட்டு காய்கறிகளை ஒட்டுமொத்தமாக விவசாயிகளிடமிருந்தே கொள்முதல் செய்கிறது. பின்னர் இது அந்த பகுதி குளி பதன களஞ்சியத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு 4 வகைகளாக பிரித்து கீழ்கண்ட முறையில் விற்பனை செய்கிறது.

முதல் வகை காய்கறி ஏற்றுமதி செய்யப்படுகிறது.(உள்ளூரில் கிடைக்கும் விலையை விட வெளிநாட்டில் விலை அதிகம் கிடைக்கின்றது. அதனால் உள்ளூரில் விலை ஏறினாலும் அவர்களுக்கும் அரசுக்கும் அதைபற்றிய கவலை எதுவுமில்லை)

இரண்டாம் வகை காய்கறி அந்த காய்கறி கிடைக்காத இந்திய மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.(இதனால் பிரதான உணவுப்பொருளாக அதை பயன்படுத்தும் உள்ளூரில் விலையேற்றம், வெளி மாநிலத்திலும் அதிக விலையில் விற்றுக்கொள்ளலாம்)

மூன்றாம் வகை காய்கறி உள்ளூர் ரிலையன்ஸ் ஃபிரஷ் அங்காடிகள் மூலம் விற்பனை(இது சந்தை விலையைவிட 1 ரூபாய் அல்லாது 2 ரூபாய் குறைவு என சொல்லப்படுகிறது. இவர்களின் ஏகபோக கொள்முதலால் சந்தையில் தேவைப்படு அதிகரித்து சந்தைவிலை ஏறிவிடுகிறது. பின்னர் என்ன ரிலையன்ஸ் அடிமாட்டு விலைக்கு விவசாயிகளிடமிருந்து ஏகபோக கொள்முதல் செய்து அதை குளிர் பதன களஞ்சியத்தில் சில நாட்களுக்கு பதுக்கிவைத்தி்ருந்து அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் சம்பாதிக்கிறது. இது உணவுப்பதுக்கல் சட்டப்படி குற்றம். ஆனால் நடவடிக்கை எடுக்கவேண்டிய அரசு இயந்திரம் கையூட்டுபெற்றுக்கொண்டு வேடிக்கை பார்க்கிறது.

http://pothuvudaimai.blogspot.com/2007/09/blog-post_05.html

Edited by akootha

http://pothuvudaimai...og-post_05.html

தோழர் .. சில்லரை வியாபாரம்

விவசாயி--> மொத்த வியாபாரி--> சில்லரை வியாபாரி--> வணிகர்..

3 கை ...இடையில் லாபம் பார்க்க வெளிக்கிடுது... :) :)

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

இங்கே வட அமெரிக்காவில், தங்கவிலை அதிகரித்துள்ள நிலையில், நேரடியாகவே மக்களிடம் இருந்து அஞ்சல் முறை மூலம் சில சில்லறை வர்த்தர்கள் பெறுகிறார்கள். ஒரு ஈழத்தமிழர் கூட இதை செய்கிறார்.

அதுபோன்று சில்லறை வர்த்தகர்கள் விவசாயிகளுடன் கூட்டு சேர்ந்து 'ஒற்றுமையாக' போராடினால் மட்டுமே, பெரிய வர்த்தகர்களை முறியடிக்க முடியும்.

எனக்கு நோகாம நொங்கு திங்கற கோஸ்டிகளின்(இடைதரகர்) மீது அவ்வளவு விருப்பம் கிடையாது .. இவனுங்களுக்கு லைசன்ஸ் தொகை இப்போ 15000 இருந்து 20000 ஏறி போச்சு... கேப்பில் செக்போஸ்டுக்கு மாமூல் குடுத்து ஆந்திரா கேரளா கர்நாடக என்று லோறி நிறைய லோடு கடத்தினாலும் இவனுங்க விட்டதையும் சேர்த்து இதில் தான் பிடிப்பார்களா? தோழர் விளக்கவேண்டும் :icon_idea:

டிஸ்கி:

உழவர் சந்தை மண்டையன் ஆரம்பிச்சது (விவசாயிகளே நேரடியாக தங்கள் பொருட்களை விற்பனை செய்யும் கூடம்) இது எந்த அளவுக்கு பயனளிக்கும்...?

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா.... பீலா விடாமல்,

தமிழக அரசியலில் சேர்ந்து.... கொள்ளை அடித்து விட்டு...

ஜெயிலில் இருங்கள். நல்ல சாப்பாடு கிடைக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சும்மா.... பீலா விடாமல்,

தமிழக அரசியலில் சேர்ந்து.... கொள்ளை அடித்து விட்டு...

ஜெயிலில் இருங்கள். நல்ல சாப்பாடு கிடைக்கும்.

ragi4.jpg

? ?

:icon_mrgreen: :icon_mrgreen:

ஊழலில்லாத நேர்மையான அரசியல்வாதிகள் இல்லாமல் நாட்டை பொருளாதார வழியில் வெற்றிகரமாக கட்டி எழுப்ப முடியாது. எனவே நல்ல சட்டமூலங்களும் அவற்றை அமுலாக்க கூடிய சிறப்பான நீதித்துறையும் இல்லாத நாடுகளில் வறிய மக்கள் பொருளாதார ரீதியில் முன்னேறுவது சவாலே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.