Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தலைவரின் சிந்தனையில் இருந்து........

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் பிரபாகரன் சிந்தனைகள்

42.jpg?w=135

“…நான் பேச்சுக்குத் தருவது குறைந்தளவு முக்கியத்துவமே: செயலால் வளர்ந்த பின்புதான் நாம் பேசத் தொடங்கவேண்டும்…”

bullet.gif இயற்கை எனது நண்பன்; வாழ்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.

bullet.gif பயம் என்பது பலவீனத்தின் வெளிப்பாடு. கோழைத்தனத்தின் தோழன். உறுதியின் எதிரி. மனித பயங்களுக்கெல்லாம் மூலமானது மரண பயம் இந்த மரணபயத்தைக்

கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்.

நாம் விருப்பினாலும் விரும்பாவிட்டாலும் போரட்டமே எமது வாழ்க்கையாகவும் வாழ்க்கையே எமது போரட்டமாகவும் மாறிவிட்டது.

மனிதர்களின் இருப்பைவிட மனிதர்களின் செயற்பாடே போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகின்றது.

ஒரு உயிர் உன்னதமானது என்பதை நானறிவேன். ஆனால் உயிரிலும் உன்னதமானது எமது உரிமை, எமது சுகந்திரம், எமது கௌரவம்.

நாம் அரசியல்வாதிகளல்லர். நாம் புரட்சிவாதிகள்

நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது

மாவீரர்களின் கனவை நனவாக்கும்.

சமாதானத்தை நான் ஆத்மபூர்வமாக விரும்புகின்றேன். எனது மக்கள் நிம்மதியாக, சமாதானமாக, கௌரவமாக வாழ வேண்டும் என்பதே எனது ஆன்மீக இலட்சியம்.

bullet.gif விடுதலைப் புலிகள் மக்களிலிருந்து வேறுபட்டவர்கள் அல்ல. விடுதலைப் புலிகள் ஒரு மக்கள் இயக்கம். மக்கள் தான் புலிகள்.

bullet.gif எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.

bullet.gif அரசியல் என்பது மக்கள் மீது ஆட்சியை நடாத்தும் அல்லது அதிகாரம் செலுத்தும் விவகாரம் அல்ல. அரசியல் என்பது மக்களுக்குச் சேவை புரியும் பணி. மக்களின் நல்வாழ்வுக்கு ஆற்றுப்படும் தொண்டு.

bullet.gif குட்டக்குட்டத் தலைகுனிந்து அடிமைகளாக அவமானத்துடன் வாழ்ந்த தமிழனைத் தலைநிமிர்த்தி தன்மானத்துடன் வாழவைத்த பெருமை எமது விடுதலை இயக்கத்தையே சாரும்.

bullet.gif உலகில் எல்லா விடுதலைப் போரட்டங்களிலும் ஒடுக்குமுறையின் நெரிப்பில் குளிப்பது பொதுசனங்களே.

bullet.gif உலகெங்கும் தமிழன் பரந்து வாழ்ந்தாலும் தமிழீழத்திலேதான் தேசிய ஆன்மா விழிப்புப் பெற்றிருக்கிறது. தமிழீழத்திலேதான் தேசிய ஆளுமை பிறந்திருக்கின்றது. தமிழீழத்திலேதான் தனியரசு உருவாகும் வரலாற்றுப் புறநிலை தோன்றியுள்ளது.

bullet.gif நாங்கள் எமது இலட்சியத்திற்கு எம்மை ஒப்படைத்திருக்கின்றோம் என்பதன் அடையாளச்சின்னம் தான் ‘சயனைட்” இந்த ‘சயனைட்” எங்கள் கழுத்தில் தொங்கும்வரை உலகில் எந்தச் சக்திக்கும் நாங்கள் அஞ்சமாட்டோம்.

bullet.gif பெண் விடுதலை என்ற இலட்சியப் போராட்டமானது எமது விடுதலை இயக்கத்தின் மடியில் பிறந்த அக்கினிக் குழந்தை.

bullet.gif ஒரு போரின் வெற்றியைத் தீர்மானிப்பது ஆட்பலமோ ஆயுதப் பலமோ அல்ல. அசைக்க முடியாத மனபுறுதியும், வீரமும் வீடுதலைப் பற்றுமே வெற்றியை நிர்ணயிக்கும் குணாம்சங்கள்.

bullet.gif நான் உயிருக்குயிராக நேசித்த தோழர்கள், என்னோடு தோளோடு தோள் நின்று போரடிய தளபதிகள் நான் பல்லாண்டு காலமாக வளர்த்தெடுத்த போரளிகள் களத்தில் வீழும் போதெல்லாம் எனது இதயம் வெடிக்கும். ஆயினும் சோகத்தால் நான் சோர்ந்து போவதில்லை. இந்த இழப்புக்கள் எனது இலட்சிய உறுதிக்கு மேலும் உரமூட்டியிருக்கின்றன.

எந்தப் பலத்திலும் ஒரு பலவீனம் இருக்கும். அதனைத் தேடிக் கண்டுபிடித்து அதற்கேற்ற விதத்தில் துணிகரமான நடவடிக்கைகளை மேற்கொள்வதில்தான் எங்களுடைய வெற்றியே தங்கியிருக்கின்றது. அசுர பலங்கொண்ட ‘கோலியாத்’தை ஒரு சிறுவன் வெற்றிகொண்டது இவ்விதம்தான்.

போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.

அறப்போரிலும் சரி ஆயுதப்போரிலும் சரி எமது விடுதலைப் போர் உலக சிகரத்தை எட்டியிருக்கின்றது.

இந்திய இராணுவம் எமது தாயக மண்ணில் காலடியெடுத்து வைத்த தினத்தையே எமது போரட்டத்தின் இருண்ட நாளாக நான் கருதுவேன். எமது போரட்டத்தில்

இந்திய இராணுவம் தலையீடு செய்தது ஒரு இருண்ட அத்தியாயம் என்றே சொல்லவேண்டும்.

எமது விடுதலைப் போராட்டத்தின் பளுவை அடுத்த பரம்பரை மீது சுமத்த நாம் விரும்பவில்லை. எமது கடின உழைப்பின் பயனை அவர்கள் அனுபவிக்கவேண்டும். எமது வாழ்நாளில் எமது இலட்சியம் நிறைவேறாது போகலாம். அப்படியாயின் அடுத்த தலைமுறைக்குப் போரட்டத்தைக் கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்குண்டு.

சுகந்திரத்தை வென்றெடுக்காமல் போனால் நாம் அடிமைகளாக வாழவேண்டும். தன்மானம் இழந்து தலைகுனிந்து வாழவேண்டும். பயந்து பயந்து பதற்றத்துடன் வாழவேண்டும். படிப்படியாக அழிந்துபோக வேண்டும். ஆகவே சுதந்திரத்திற்காகப் போராடுவதைத் தவிர எமக்கு வேறு வழி எதுவுமில்லை.

ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண் மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக் கொள்கின்றது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது.

சதந்திர எழுச்சியின் உந்துதலால்தான் மனித வரலாற்றுச் சக்கரம் சுழல்கின்றது.

தனது மனவுலக் ஆசைகளிலிருந்தும் அச்சங்களிலிருந்தும் தன்னை விடுதலை செய்து கொள்பவன்தான் உண்மையில் விடுதலை வீரன் என்ற தகைமையைப் பெறமுடியும்.

மக்களின் துன்ப துயரங்களில் பங்குகொண்டு அவர்களின் சுமைகளை நாமும் தாங்கி அவர்களின் கஷ்டங்களைப் போக்குவதற்குத் திட்டமிட்டுச செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை.

பூரண அரசியற் தெளிவும் விழிப்புணர்வும் ஒரு போராளிக்கு அவசியமானவை.

மனித ஆன்மாவின் ஆழமான அபிலாசையாகவே மனிதனிடம் சுதந்திர தாகம் பிறக்கிறது.

எமக்கு ஒரு நாடு வேண்டும், எமது மக்களுக்கும் விடுதலை வேண்டும், எமது இனம் சுதந்திரமாக வாழ வேண்டும், என்ற ஆக்ரோசமான இலட்சிய வேட்கையுடனேயே மாவீரர்கள் களத்தில் விழுகிறார்கள். எனவே எனது மாவீரர்கள் ஒவ்வொருவரது சாவும் எமது நாட்டின் விடுதலையை முரசறையும் வீர சுதந்திரப் பிரகடனமாகவே சம்பவிக்கின்றது.

விடுதலைப் போரட்டத்திலிருந்து கலைஞர்களும் அறிஞர்களும் அந்நியப்படுவது மக்களிலிருந்தும வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.

எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடுரத்தினை சிருஷ்டிகர்த்தாக்கள் சித்தரித்துக் காட்டவேண்டும்.

சத்தியத்திற்காகச் சாகத் துணிந்துவிட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரத்தைப் படைக்க முடியும் சுதந்திர சிற்பிகள். எமது மண்ணில் ஒரு மாபெரும் விடுதலை எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீர மறவர்கள்.

மக்களின் துன்பங்களில் நாம் பங்கெடுத்துக் கொள்ளும் போதுதான் மக்கள் எம்முடன் இணைந்து கொள்வார்கள்.

எமது எதிரியையும் அவனது நோக்கத்ததையும் இனங்கண்டு கொள்வது சுலபம். ஆனால் துரோகிகள் முகமூடி அணிந்து நடமாமுகிறார்கள். எதிரியின் கைப்பொம்மையாகச் செயற்படுகிறார்கள். தமது சுயுநலத்திற்காக சொந்த இனத்தையே காட்டிக் கொடுக்கத் தயங்காத இந்த ஆபத்தான பிற்போக்கு சக்திகள் மீது எமது மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்.

http://www.tamilnati...ages/bullet.gif மொழியும் கலையும் கலாசாரமும் வளம் பெற்று வளர்ச்சியும் உயர்ச்சியும் அடையும பொழுதேதேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது. பலம் பெறுகின்றது. மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றது. தேசிய நாகரிகம உன்னதம் பெறுகின்றது

இன்றைய உலக ஒழுங்கை பலம்தான் நிர்ணயிக்கிறது.

பொருளுலகத்தை எந்தெந்த வடிவங்களில் சீரமைத்தாலும் ஆண்களின் மனஉலகில் பெண்மை பற்றிய அவர்களின் கருத்துலகில் ஆழமான மாற்றங்கள் நிகழாமல் பெண் சமத்துவம் சாத்தியமாகப் போவதில்லை.

கரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்பு கவசங்கள் எமது போரட்டப் பாதையின் தடைநீக்கிகள் எதிரியின் படை பலத்தை மனபலத்தால் உடைத்தெறியும் நெருப்பு மனிதர்கள்.

சுதந்திரம் வேண்டிக் கிளர்ந்தெழும் ஓர் இனம் பொருளாதார வாழ்வில் தன் சொந்தக் கால்களில் நிற்கவேண்டும். அத்தகைய இனத்தால் தான் சுகந்திரத்தை அனுபவிக்க இயலுமென்பது நியதியாகும்.

ஓரு விடுதலை இயக்கம் தனித்து நின்று போராடி விடுதலையை வென்றெடுத்ததாக வரலாறு இல்லை. ஒரு விடுதலை இயக்கத்தின் பின்னால் மக்கள் சக்தி அணிதிரண்டு எழுச்சி கொள்ளும் பொழுதுதான், அது மக்கள் போரட்டமாக் தேசியப் போரட்டமாக முழுமையும் முதிர்ச்சியும் பெறுகின்றது. அப்பொழுதுதான் விடுதலையும் சாத்தியமாகின்றது.

மனித ஆளுமை பாலியல் வேறுபாட்டிற்கு அப்பாலானது. ஆண்மைக்கும் பெண்மைக்கும் அப்பால் மனிதம் இருக்கின்றது. அது மனிதப் பிறவிகளுக்கும் பொதுவானது.

எதிரியைவிட துரோகிகளே ஆபத்தானவர்கள்

இந்த உலகில் அநீதியும் அடிமைதனமும் இருக்கும் வரை சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை விடுதலைப் போரட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி.

இரத்தம் சிந்தி வியர்வை சிந்தி கண்ணீர் சிந்தி தாங்கொணாத் துன்பத்தின் பரிசாகப் பெறுவது தான் சுதந்திரம்.

இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள்.

கெரில்லாப் போர்முறையானது ஒரு வெகுசனப் போரட்ட வடிவம்.

இழப்புகளும் அழிவுகளும் ஒரு விடுதலைப் போரட்டத்தில் சர்வ சாதாரண நிகழ்வுகள். நாம் எத்தனையோ இழப்புக்களையும் அழிவுகளையும் சந்தித்துள்ளோம். சந்தித்தும் வருகின்றோம். ஆனால் இந்த இழப்புகளும் அழிவுகளும் எமது ஆன்ம உறுதிக்கு உரமாக அமைந்துவிட்டால் உலகத்தில் எந்த ஒரு சக்தியாலும் எம்மை அடக்கிவிட முடியாது.

தொடரான பூகோள நிலப்பரப்பையும் வரையறுக்கப்பட்ட எல்லைகளையும் கொண்ட வட-கிழக்கு மாகாணங்கள் அடங்கிய மாநிலத்தையே தமிழர் தாயகம் எனக் குறிப்பிடுகின்றோம். இந்த மாநிலம் வரலாற்று ரீதியாக அமையப்பெற்ற தமிழ்பேசும் மக்களின் குடிநிலமாகும். இதனைப் பிரித்துக் கூறுபோட முடியாது.

கலை இலக்கியப் படைப்புக்கள் மக்களைச் சிந்திக்கத் து}ண்டவோண்டும். பழமையிலும் பொய்மையிலும் பல்வேறு மாயைகளிலும் சிறைபட்டுக் கிடக்கும் மக்களது மனதில் புரட்சிகரப்பார்வையைத் தோற்றுவிக்க வேண்டும் மாறிவரும் சமூக விழிப்புணர்வை உருவாக்க வேண்டும்.

இந்திய இராணுவத்துடன் மோதுவதற்கு முடிவெடுத்த வேளையில், வெற்றி தோல்வி என்ற பிரச்சனைபற்றி நான் அலட்டிக்கொள்ளவில்லை. இந்த யுத்தத்தை எதிர் கொள்ளும் உறுதியும் துணிவும் எம்மிடம் உணட்டா என்பதுபற்றியே சிந்தித்தேன். தோல்வி ஏற்படலாம் என்ற அச்சத்தில் ஒரு மக்கள் இனம் தனது இலட்சியத்தையும் உரிமைளையும் விட்டுக்கொடுப்பதில்லை.

இந்திய-இலங்கை ஒப்பந்தம் இந்தியாவுக்கும் சிறீலங்காவுக்கும் இடையிலான ஓர் இராணுவ ஒப்பந்தம். தமிழரின் சுதந்திர இயக்கத்தையும் அதற்குத் தலைமைதாங்கும் முன்னணிப் படையான விடுதலைப் புலிகளையும் ஒழித்துக் கட்டுவதுதான் இந்த இராணுவ ஒப்பந்தத்தின் இலட்சியம்.

திலீபனின் தியாகம் இந்தியமாயையைக் கலைத்தது. தமிழீழதேசிய உணர்வைத் தட்டியெழுப்பியது. இந்தத் தேசிய எழுச்சியின் வெதுசன வடிவமாக அன்னை பூபதியின் அறப்போர் அமைந்தது.

நான் எனது மக்களுக்காகப் போராடும் ஒரு விடுதலைப் போராளி.

அன்னை பூபதி தனிமனிதப் பிறவியாகச் சாகவில்லை. தமிழீழத் தாய்க்குலத்தின் எழுச்சி வடிவமாக அவரது தியாகம் உன்னதம் அடைந்தது.

இராணுவ ஆதிக்கத்திற்கும் அழுத்தத்திற்கும் புலிகள் இயக்கம் என்றுமே விட்டுக் கொடுத்ததில்லை. கொண்ட கொள்கையில் நாம் என்றுமே வளைந்து கொடுத்ததில்லை.

நாம் ஒருவரையும் ஏமாற்றவும் இல்லை துரோகம் இழைக்கவும் இல்லை. ஆனால் எம்மை யாரும் ஏமாற்றினால் அல்லது எமக்குத் துரோகம் இழைத்தால் நாம் பதிலடி கொடுக்கத் தயங்கமாட்டோம்.

சொல்லுக்கு முன்னே எப்போதும் செயல் இருக்கவேண்டும். செயலால்தான் நாங்கள் செல்வாக்குப் பெற்றோம் செயல்தான் நமது நடவடிக்கைகளுக்கு அரசியல் வடிவம் தருகின்றது.

எமது தேசத்தின் எதிர்காலச் சிற்பிகளாக ஒரு புதிய இளம் பரம்பரை தோற்றங்கொள்ள வேண்டும். ஆற்றல் மிகுந்தவர்களாக, அறிவுஜீவிகளாக தேசப்பற்றானர்களாக போர்க்கலையில் வல்லுனர்களாக நேர்மையும் கண்ணியமும் மிக்கவர்களாக ஒரு புதிய புரட்சிகரமான பரம்பரை தோன்ற வேண்டும். இந்தப் பரம்பரையே எமது தேசத்தின் நிர்மாணிகளாக நிர்வாகிகளாக ஆட்சியாளர்களாக உருப்பெறவேண்டும்.

போர்க்குணம் மிக்க ஒரு புரட்சிகர சமுதாயமாக எமது தேசத்தை உருவாக்கம் செய்யவேண்டும்.

எமது போராட்டத்தின் வலிமை எமது போராளிகளின் நெஞ்சுரத்திலிருந்தே பிறக்கின்றது.

இன்றைய காலத்தின் தேவைக்கேற்ப வரலாற்று ஓட்டத்திற்கு அமைய கலை இலக்கிய கர்த்தாக்கள் புதுமையான புரட்கரமான படைப்புக்களை சிருஷ்டிக்க வேண்டும். சமூகப் புரட்சிக்கு வித்திடுவதாக அமையவேண்டும்.

விடுதலைப் போரட்டம் என்பது இரத்தம் சிந்தும் புரட்சிகர அரசியல்பாதை. விடுதலை உணர்வே மனித ஆன்மாவின் சாரமாக உயிர்மூச்சாக இயங்குகின்றது. மனித வரலாற்றை இயக்கும் மகத்தான சத்தியும் அதுவே.

சாவையும் அழிவையும் துன்பத்தையும் பரிசாகக் கொடுத்துத்தான் சுகந்திரம எனும் சுவர்க்கத்தை நாம் காணமுடியும்.

போரும் கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.

விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்பு உண்டு. ஒரு தேசிய இனமுமே பகிர்ந்து கொள்ளவேண்டும். இந்தத் தேசியச் சுமையை சமூகத்தின் அடிமட்டத்திலுள்ள ஏழைகள் மட்டும் தாங்கிக்கொள்ள அனுமதிப்பது நாம் எமது தேசத்திற்குப் புரியும் துரோகம் என்றே சொல்லவேண்டும்.

எனது மக்கள் பற்றியும் எனது தேசம் பற்றியும் எனது இயக்கம் பற்றியும் நான் பெருமிதம் கொள்கிறேன்.

சுதந்திரப் போராட்டங்களாகவே மனித வரலாறு அசைகின்றது.

எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞாகளும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.

சுதந்திரம் என்பது பேரம்பேசிப் பெற்றுக்கொள்ளும் ஒரு வியாபாரப்பண்டமல்ல. அது இரத்தம் சிந்தி வெற்றிகொள்ளப்படும் ஒரு புனிதமான உரிமை.

புவியல் ரீதியாக தமிழீழுத்தின் பாதுகாப்பு கடலோடு ஒன்றிப்போயுள்ளது. எனவே கடற்பரப்பிலும் நாம் பலம் பொருந்தியவர்களாகி எமது கடலில் எதிரி வைத்திருக்கும் கடலாதிக் கத்தைத் தகர்த்து எமது கடலில் எதிரி வைத்திருக்கும் கடலாதிக்கத்தைத் தகர்த்து எமது கடலில் நாம் பலம் பெறும்போதுதான் விடுவிக்கப்படும் நலப் பகுதியை நிரந்தரமாக் நிலை நிறுத்திதக் கொள்வதுடன் தமிழீழத்தின் நிலப்பகுதிகளில் இருக்கும் எதிரிப் படையையும் விரட்டியடிக்க முடியும்.

எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பபோல கல்வியும் எமது போராட்த்திற்குக் காப்பரணாக நிற்க வேண்டும்.

விழிப்புத்தான் விடுதலைக்கு முதற்படி.

உலக வரலாற்றில் எங்கும் எப்பொழுதும் நிகழாத அற்புதமான தியாகங்களும் அதிசயமான அர்ப்பணிப்புகளும் எமது தாயக மண்ணில் நிகழ்ந்திருக்கின்றன.

பெண்கள் சம உரிமை பெற்று சகல அடக்கு முறைகளிலிருந்தும் விடுதலைபெற்று ஆண்களுடன் சமத்துவமாக கௌரவமாக வாழக்கூடிய புரட்சிகர சமுதாயமாகத் தமிழீழம் அமைய வேண்டும் என்பதே எனது ஆவல்.

பெண் விடுதலை என்பது அரச அடக்குமுறைகளிலிருந்தும் சமூக ஒடுக்கமுறைகளிலிருந்தும் பொருளாதாரச் சுரண்டல் முறைகளிலிருந்து விடுதலை பெறுவாதாகும்.

நாம் தமிழீழப் பெண் சமூகம் மத்தியில் ஒரு பெரிய புரட்சியை நிகழ்த்தியிருக்கின்றோம். தமிழர் வரலாற்றிலேயே நடைபெறாத புரட்சி ஒன்று தமிழீழத்தில் நடைபெற்றிருக்கின்றது

http://eelavarkural....AE%A9%E0%AF%88/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ennankal.jpg

நிலத்தில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக் கற்களும் விடுதலையையே குறியீடு செய்து நிற்கின்றன. வீதிகளில், சந்துகளில், சுவர்களில் நாம் சந்திக்கும் மாவீரர்களது திருவுருவங்களும் விடுதலையின் சாட்சியங்களாகவே எமக்கு காட்சி தருகின்றன.

நாம் யாரையும் ஏமாற்றவும் இல்லை, துரோகம் இழைக்கவும் இல்லை. ஆனால் எம்மை யாரும் ஏமாற்றினால் அல்லது துரோகம் இழைத்தால் நாம் பதிலடி கொடுக்கத் தயங்கமாட்டோம்.

சத்தியத்திற்காய் சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரத்தைப் படைக்க முடியும்.

மற்றவர்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காகத் தன்னை இல்லாதொழிக்கத் துணிவது தெய்வீகத் துறவறம், அந்தத் தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள்.

விடுதலைப் போராட்டம் என்பது இரத்தம் சிந்தும் ஒரு ரணகளம்

பயிற்சி - தந்திரம் - துணிவு இந்த மூன்றும் ஒரு படையணிக்கு அமையப் பெறுமாயின் வெற்றி நிச்சயம்.

சுதந்திரம் இல்லாமல் மனித வாழ்வில் அர்த்தமே இல்லை.

நாம் துணிந்து போராடுவோம், சத்தியம் எமக்குச் சாட்சியாக நிற்கின்றது, வரலாறு எமக்கு வழிகாட்டியாக நிற்கின்றது.

கேணல் கிட்டு ஒரு தனிமனித சரித்திரம், ஓய்வில்லாத புயலாக வீசும் எமது விடுதலை வரலாற்றில் ஒரு காலத்தின் பதிவு

இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது.

மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு, அவர்களது கஸ்டங்களைப் போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை.

விழிப்புத்தான் விடுதலைக்கு முதல் படி.

விடுதலைப் போராட்டம் என்பது இரத்தம் சிந்தும் புரட்சிகர அரசியற்ப் பாதை.

இன்றைய காலத்தின் தேவைக்கேற்ப - வரலாற்று ஓட்டத்திற்கு அமைய கலை இலக்கிய கர்த்தாக்கள் புதுமையான, புரச்சிகரமான படைப்புக்களை உருவாக்க வேண்டும்.

எமது மொழியும், கலையும், பண்பாடும் எமது நீண்ட வரலாற்றின் விழுதுகளாக எமது மண்ணில் ஆழமாக வேரூன்றி நிற்பவை. எமது தேசிய வாழ்விற்கு ஆதாரமாய் நிற்பவை.

எமது போராட்டத்தின் வலிமை எமது போராளிகளின் நெஞ்சுரத்திலிருந்தே பிறக்கின்றது.

மனித ஆன்மாவின் ஆழமான அபிலாசையாகவே மனிதனிடம் சுதந்திர தாகம் பிறக்கின்றது.

சிங்களப் பேரினவாதமானது தமிழினத்தின் தேசிய அன்மாவில் விழுத்திய ஆழமான வடுக்கள் ஒருபோதும் மாறப்போதில்லை.

மலைபோல மக்கள் சக்தி எமக்கு பின்னால் இருக்கும் வரை, எந்தப் புதிய சவாலையும் நாம் சந்திக்கத் தயார்.

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை. அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்.

எமது மக்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. அதனின்றும் மக்களை விடுவித்து எமது மக்களின் சுதந்திரத்தையும், பாதுகாப்பiயும் நிலைநாட்டும் வரை, நாம் ஆயுதம் ஏந்திப் போராடுவதைக் கைவிடமாட்டோம்.

இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி.

உழைப்பவனே பொருளுலைகைப் படைக்கின்றான். மனித வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்தின்றான்.

நாம் தமிழீழப் பெண் சமூகத்தின் மத்தியில் ஒரு பெரிய புரட்சியை நிகழ்தியிருக்கின்றோம். தமிழர் வரலாற்றிலேயே நடைபெறாத புரட்சி ஒன்று தமிழீழத்தில் நடைபெற்றிருக்கின்றது.

சான்றோரைப் போற்றுவதும், கற்றோரைக் கௌரவிப்பதும் தமிழர்களாகிய எமது மரபு, எமது சீரிய பண்பாடு.

எமது சொந்தப் பலத்தில் நாம் வேரூன்றி நிலையாக நிற்பதால், மற்றவர்களின் அழுத்தங்களுக்குப் பணிந்து கொடாமல் தலை நிமிர்ந்து நிற்கமுடிகின்றது.

அனைத்துத் தமிழ் மக்களும் ஒரே இனம் என்ற தேசாபிமான உணர்வுடன் போராட்டத்தில் பங்கு கொண்டால் எமது விடுதலை இலட்சியம் வெற்றி பெறுவது நிச்சயம்

மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு, சாதாரண மரண நிகழ்வு அல்ல, எனது தேச விடுதலையின் ஆன்மீக அறை கூவலாகவே மாவீரர்களது மரணம் திகழ்கின்றது.

ஒரு உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன், ஆனால் உயிரிலும் உன்னதமானது எமது உரிமை, எமது சுதந்திரம், எமது கௌரவம்.

கரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்புக் கவசங்கள் - எமது போராட்டப் பாதையின் தடை நீக்கிகள் - எதிரியின் படைபலத்தை மனப் பலத்தால் உடைத்தெறியும் நெருப்பு மனிதர்கள்.

எமது மக்கள் சுதந்திரமாகவும், கௌரவமாகவும், பாதுகாப்பாகவும் வாழவேண்டும். இந்த இலட்சியம் நிறைவேறவேண்டுமாயின் நாம் போராடியே ஆகவேண்டும்.

நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே, எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரியது.

எமது விடுதலைப் போராட்டத்தின் பளுவை அடுத்த பரம்பரை மீ சுமத்த நாம் விரும்பவில்லை. எமது கடின உழைப்பின் பயனை அவர்கள் அனுபவிக்க வேண்டும்.

ஒரு விடுதலை வீரனின் சாவு, ஒரு சாதாரண மரண நிகழ்வல்ல அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு, ஓர் உன்னத இலட்சியம் உயிர்பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை, அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை.

தமிழீழ மண்ணில் ஆயுதப்புரட்சி இயக்கத்திற்கு அத்திவாரமிட்டவர்கள் நாம். தமிழனின் வீர மரபைச் சித்தரிக்கும் சின்னமாக உதித்த எமது இயக்கம், வீரவரலாறு படைக்கும் புரட்சிகர விடுதலைச் சக்தியாக விரிவடைந்து வளர்ந்திருக்கின்றது.

ஒடுக்கப்படும் மக்களே ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராட வேண்டும், அநீதிக்கு ஆளாகி நிற்பவர்களே அநீதியை ஒழித்துத்துக் கட்ட முன்வர வேண்டும்.

எந்த ஒரு விடுதலை இயக்கமும் தனியாக நின்று, மக்களுக்குப் புறம்பாக நின்று, விடுதலையை வென்றெடுத்ததாக வரலாறு இல்லை. அது நடைமுறைச் சாத்தியமான காரியமுமல்ல.

குட்டக் குட்டத் தலைகுனிந்து அடிமைகளாக, அவமானத்துடன் வாழ்ந்த தமிழரைத் தலை நிமிர்த்தி தன்மாத்துடன் வாழ வைத்த பெருமை எமது விடுதலை இயக்கத்தையே சாரும்.

தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காகவும், கௌரவத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் தமது இன்னுரை அர்பணித்துள்ள மாவீர்களான தியாகிகள், காலம் காலமாக எமது இதயக் கோவிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள்.

எதிரியால் ஆக்கிமிக்கபட்டிருக்கும் எமது மண்ணை முதலில் மீட்டெடுப்பது இன்றைய வரலாற்றின் தேவை. இந்த வரலற்று நிர்ப்பந்தத்தை நாம் அசட்டை செய்ய முடியாது.

தங்களது உயிர்களையும், உடமைகளையும் பாதுகாக்கும் சக்திவாய்ந்த ஒரு தேசியப் படையுடன் இணைந்து சுதந்திரத் தமிழீழத்தை நிறுவினாலெழிய, ஒரு போதும் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்கப் போவதில்லை.

விடுதலைப் போராட்டத்தில் மக்கள் வெறும் பார்வையாளராக இராது, நேரடிப் பங்காளிகளாக மாறவேண்டும்.

இது கரும்புலிகள் சகாப்தம், இடியும் மின்னலுமாகப் புலிகள் போர்க் கோலம் பூண்டு விட்ட காலம்

http://tamilseithekal.blogspot.com/2009/10/2.html

இந்த திரி இலகுவான திரி அல்ல; தலைவரின் நிழற்படங்களை தொகுப்பதை போன்று இலகு அல்ல; ஆனாலும் நுணாவாலும் ஏனைய யாழ் உறவுகளாலும் இதுவும் முடியும் என்ற நம்பிக்கை இருக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

http://www.flonnet.com/stories/19870822078.htm

‘We will fight for our political objective’

T.S. SUBRAMANIAN Interview with V. Prabhakaran

V. Prabakaran, the Liberation Tigers of Tamil Eelam (LTTE) leader, is a key player in the dramatic developments represented by the Indo-Sri Lanka agreement and its implementation. He was invited to New Delhi before the agreement was signed, raised apprehensions and objections, met Prime Minister Rajiv Gandhi for a frank discussion of the situation and the problems, and returned to Jaffna in early August. On August 4, Prabakaran made a speech that drew wide attention: in it, he analysed the situation from the LTTE’s standpoint, expressed his dissatisfaction with the agreement but also his closeness to India and said the LTTE would hand over arms basically because it “loves India” and did not want to clash with the Indian peace-keeping force. A week later, a Frontline team comprising writer T.S. Subramanian and photographer D. Krishnan met him for this session in Jaffna. Soon after this, fresh Indian assurances led to the LTTE deciding to go ahead with the handing over of arms.

For his first extended interview after returning to Jaffna from Tamil Nadu in January 1987, Velupillai Prabakaran, the Supreme Commander of the Liberation Tigers of Tamil Eelam, meets representatives ofFrontline and The Hindu in the second week of August in Jaffna. The interview, conducted in Tamil, lasts over an hour.

The LTTE leader looked cool and relaxed. He sets the ball rolling by suggesting that we should go to the Eastern province where the Sri Lankan soldiers, he alleges, are still harassing Tamil civilians.

There was a media story that when the Sri Lanka armed forces began their offensive against the Vadamarachchi region of the Jaffna peninsula on May 26, you were trapped in Velvettiturai and you managed to escape. Is this version true?

(Smiling): I moved to Jaffna on the night of May 25. They began the offensive the next day morning. They attacked Velvettiturai thinking that I was there.

What is your assessment of the Indo-Sri Lanka agreement? What are your apprehensions about it? You say there is a shortfall in relation to your expectations. What are the main areas of dissatisfaction?

As far as the agreement is concerned, they say that there will be a referendum in the Eastern Province even on the merger of the North and the East. Moreover, they say the referendum will be decided by a simple majority. It is not a question of the merger of the North and the East. It is our homeland. There is no question of any negotiation on this.

There are some further complications. It is an agreement between the Government of India and the Sri Lankan government, as far as we are concerned…. In 1983, there were only a few Sri Lankan army camps in the North and the East. But now there are some 200 camps. The Sinhalese settlements could not be removed or dissolved without removing these army camps and, in fact, the camps ‘legitimised’ the Sinhala settlements. An important aspect (in the agreement) is that there is no room at all for the removal of the camps. To stop such settlements and prevent atrocities, the Indian Army should stay there.

But a strange thing is that there are no Indian Army camps beyond the Elephant Pass or Jaffna peninsula. But today, Indian Army camps have been established at Kodikamam, Achuveli, Palai, Vannankerni, Yakkachi junction, Thalaiyadi coast, Pandatharippu and Kankesanthurai Light House. There is no need (for Indian Army camps) in these places, because there are no Sinhalese here. But the Indian Army has set up camps there.

We say the 200 (Sri Lankan) Army camps should be removed. But the Indian Army is establishing more camps. This itself has led to doubts and dissatisfaction among the people, at a beginning stage. There is no atmosphere of safety for the refugees to return. Security and surveillance zones have not been lifted yet. The Indian Army camps have been established. This has led to dissatisfaction among the people. They came to the LITE’S office to give petitions and we told them to give the petitions to them [the Indian peace-keeping forces].

You said the text of the Indo-Sri Lanka agreement was not given to you.

They took away the copy. Mr J.R. Jayewardene today says there will be a referendum. The Bill has not been moved in Parliament.

[At this point, Yogi, one of the political organisers of the LTTE, intervenes to say that there are “technical difficulties” in the passing of the Bill. The Sri Lankan government is not sure of getting the two-thirds majority required to pass it. “So, the changes in the Constitution cannot take place,” Yogi says.]

The question of cut-off points should be settled. The Government Agents say that people who had fled their places after 1983 could return. But people left their places even before 1983. There are two important aspects in this agreement. One is related to our homeland consisting of a unified North and East. The second is our land. Both are complicated problems, major complications. The agreement has not solved these two questions. This is the fundamental problem.

What is your attitude towards the Government of India and Prime Minister Rajiv Gandhi?

Attitude?

I mean your standpoint.

As they took into consideration their own interests and hurriedly arrived at the agreement, they have not looked after the grievances of the people who have been affected for so long.

How?

There are refugees in Mullaitivu. People are taking out processions. But before that, we have to lay down our arms. However, the people’s problems have not been solved. The problem is that people must return to their land. To facilitate that, the [sri Lankan] army camps should be removed. But the Indian Army is not prepared to remove the [sri Lankan] army camps and this will not bring about a solution. If this had been discussed before the agreement was arrived at, we would have laid down certain conditions. We would have said the Army camps should be removed. But this has not taken place. When we say the Army camps should go back to the position that obtained on May 25, then why do they establish more Indian Army camps in Kodikamam? People are not able to go back first; the refugees are unable to return. [At this point, Prabakaran asks his bodyguards to bring the Jaffna Tamil newspapers and says we should know the situation. He reads out the title of a local newspaper’s editorial, “Nobel prize is calling”.]

Addressing the public meeting on the Sudumalai Amman temple grounds on August 4, you said you had a heart-to-heart discussion with Rajiv Gandhi. You also mentioned that he gave you some assurances and then you relented. What are the assurances?

Mr Rajiv Gandhi gave the assurance that we, the Tamil people, will be protected in the North and East. But people are not able to return to the East.

The Indian Army has gone there but the Tamil people are not able to go there – because there is an increasing opposition from the Sinhalese Home Guards and the Sinhalese people. There are army camps there in individual houses, schools and cooperative stores. But the Indian Army has not been deployed in such places. The Ceylon Army has not been evacuated, the problem has not been solved. Another thing is the people’s lack of faith arising out of the non-removal of the Ceylon Army. Even if the Indian Army goes, occupies such places and later vacates, the Sinhala army will come back. Further, we wouldn’t have arms.

What did Rajiv Gandhi say about the removal of 200 army camps?

V. PRABAKARAN: "WE have not been properly respected."

We opposed the agreement on this point. Nobody was prepared to consider it.

In Delhi?

Yes, in Delhi [firmly].

In the future political set-up of the North and East, what is the role you envisage for the LTTE, once the laying down of arms is completed?

When we say political role, we have contacts with people at the organisational level and we are strengthening it. We are strengthening our organisation in the East also. We are already working with the people in Trincomalee and Batticaloa districts. This is not a difficult task.

Is the LTTE strong in the East?

In the East our people are active even in areas where there are Sinhalese. When the people hoisted the LTTE flag at Mudur, they were shot dead. The Indian Army and the Government Agent wanted the flag to be removed. To that extent, people are conscious of things.

Will you accept a multiparty, competitive political system? You said earlier that there should be a one-party democracy on the lines of Yugoslavia.

This is important and you should know our position. We have not achieved Tamil Eelam. I had expressed my views on a political set-up for Tamil Eelam. But there is no separate country now. This is an agreement imposed on us. In this [set-up] everyone is equal, everyone is the same. We will fight for our political objective. We will take the Eelam political objective in a sustained manner before our people.

What I said then was to be done after the establishment of our own state. But there cannot be any compatibility between one-party rule and what obtains now. What is taking place now is this. Sri Lanka and India have concluded an agreement. The Indian Army is here and is asking for our weapons. If we don’t do that, we will have to fight the Indian Army. To avert that, we accepted these arrangements, but we have not abandoned our political objective.

There are conflicting or varying reports on what you said during the press conference you held in Jaffna on August 5. While one report said that you would not allow the “anti-social” militant groups to contest the elections, other reports said you would allow other groups to contest. Which is true?

Everybody will be allowed to contest elections. We will place our views before the people.

What is the role you see for the TULF [Tamil United Liberation Front] as the elected representatives of the people?

You are aware of what they did before. What do they know but the job of fighting elections? They will go back to fighting elections. We don’t want power to pass into their hands – that is our intention and our stand. Let the people decide. They will contest elections. We will stand against them in the furtherance of our cause. The people will decide on whose side they will stand.

At the Sudumalai public meeting, you said the LTTE would take to different forms of struggle. What are they? Will it be a mass-based struggle, a revolutionary party, a non-violent struggle or will you take to armed struggle again?

We will resort to a mass-based struggle.

But isn’t LTTE a purely military organisation?

Today, the LTTE is a mass-based organisation. You would have noted our May Day rally. There is military rule here during the time of the rally. Military helicopters are firing from above. At the same time, the Sinhalese people in the South are not able to celebrate May Day. In this kind of dangerous situation, if we are able to mobilise 200,000 people and take out a rally in the burning sun, it does mean we are a mass-based organisation. We have built up such a strength. If ours had been merely a militant organisation, people would not have attended the May Day rally in such a massive way.

What is your attitude towards the Muslims in the East?

We don’t look upon the Muslims as a separate category; we consider them an integral part of the Tamils. It is a question of people united by language and differentiated by religion. [At this point, Yogi made a remark to the effect that it was the Sri Lankan government which separated the Muslims from the other Tamils.]

President Jayewardene has been appealing to the people in the East to vote against the merger in the referendum. What will you do if the Muslims vote against the merger?

We have not planned for that situation. It is something that is going to happen in the future. We can respond to the problem only at that stage.

In a system where there are going to be elections – a competitive political structure – what are the problems you foresee?

We have already met such political competition. We are no strangers to such competition. Let the people decide ultimately whom they want. Let them choose for themselves a proper leadership to free themselves from this confusion.

What will be the future of your cadre, estimated to number 5,000?

We will devise a proper plan for their future life. We will not abandon them. We will find a way out for them to continue their livelihood…. We will create job opportunities. Those who want to study will be allowed to study. We will arrange for them technical training. All of us will remain disciplined and create opportunities in a collective way.

What was the reaction of your cadre to the agreement and to the pro- position of handing over arms? Did they oppose the handing over of arms?

As far as the cadre are concerned, they have much faith in me personally. That is why they deferred to my word. But even today there is no protection. Dangers arise for us from the cadres of the other armed organisations and from the Sri Lankan Army.

Was there any opposition?

As regards opposition, I myself was not willing. Then, imagine the feelings of the cadre. There is no security. So many cadre have died.

What happens to the cyanide capsules that your men wear round their necks? Are they necessary when there are no arms?

I think the capsules are needed most, they are indispensable now. They are the only weapons for the cadre to protect themselves in the Eastern province from hoodlums, the rival groups and the Sinhala army. Not only that, they would continue to wear them in remembrance of those comrades who fought along with them and sacrificed their lives. [At this point, Prabakaran asks Yogi, one of the political organisers of the LTTE, whether he sports the cyanide capsule. Yogi pulls out the capsule tied to a string around his neck. It is made of white-and-black plastic. Prabakaran also pulls out his capsule from under the collar of his shirt and shows it to us. When we ask him whether we can photograph him at this moment, he politely declines the proposition.]

How do you feel when your fighters are killed? For example, you have named your son Charles Antony in memory of a loyal LTTE fighter who was killed in a clash with the Sri Lanka Army in July 1983.

As far as our feelings are concerned, we have been very deeply affected in our hearts. Having fought so much, having sacrificed so many lives and having lost 20,000 people… all this has been subordinated to India’s strategic interests. Not only that, we, the representatives of such martyrs, have not been properly respected. Hence in this kind of situation… during the interim arrangement… we feel that we want to demonstrate to the Government of India the support we have from the people. India has not given us our due. Without consulting us, they have arrived at an agreement. Hence, we would like to enter politics with the people’s support and with the goal of Tamil Eelam. That will be the fitting reply.

Today’s Tamil papers in Jaffna quote an LTTE representative as saying the organisation would not fully surrender arms.

Yes, we made the statement. It is better to fight and die than surrender the weapons in an insecure environment and die on a mass scale!

What are the shaping influences on your life?

Ra. Su. Nallaperumal’s serial Kallukkul Eeram (“It is wet inside the stone”) published in Kalki magazine. I have read it five times. It revolves round the Indian freedom struggle. Mr Nallaperumal balances the ahimsaic struggle and the armed struggle. Generally, I read anything on any freedom movement. I used to read books on Joan of Arc, Napoleon and so on. I was always interested in history. Shivaji was the first guerilla to have fought against Mughal rule. When I was young, I always had a picutre of Netaji Subhas Chandra Bose. I used to keep his picture on my table when I used to study. I had written on my table, “I will fight till the last drop of my blood for the liberation of my motherland.”

Thank you Mr Prabakaran.

  • கருத்துக்கள உறவுகள்

" நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல்

நாடு பெரிதென்று வாழுங்கள்,

நாடு நமக்குப் பெரிதானால்

நாம் எல்லோரும்

அதற்கு சிறியவர்களே,

எமது நிலையற்ற

வாழ்விலும் பார்க்க

நாட்டின் வாழ்வே

பெரியது!!!

தலைவரின் சிந்தனையிலிருந்து!

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள் நுணா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வே. பிரபாகரனின் மாவீரர் நாள் உரை, 2003

ஆக்கர்: வே. பிரபாகரன்

வெளியீடு: தமிழீழ விடுதலைப் புலிகள்

காலம்: நவம்பர் 27, 2003

பின்புலம்: 2003 ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனால், புலிகள் இயக்க போராளிகளின் நினைவு நாளான மாவீரர் நாள்அன்று ஆற்றப் பெற்ற உரை.

எனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே!

இன்று மாவீரர் நாள். இன்றைய நாள், வணக்கத்திற்குரிய புனித நாள். இன்று, தமிழீழ தேசம் சுதந்திர தாகம் கொண்டு எழுச்சி கொள்ளும் மகத்தான நாள். எமது மண்ணின் விடிவிற்காகவும் எமதுமக்களின் விடுதலைக்காகவும் தமது இன்னுயிரை ஈகஞ்செய்த எம்மினிய வீரர்களை எமதுஇதயக் கோவில்களில் நாம் நெஞ்சுருகிப் பூசிக்கும் திருநாள்.

அன்றைய தமிழர் இராச்சியம் வீழ்ச்சியடைந்து, பல நூறு ஆண்டுகள் அந்நியருக்கும்; அயலவருக்கும்; அடிமைப்பட்டு வாழ்ந்த தமிழீழ தேசம் இன்று தலைநிமிர்ந்து நிற்கிறது. இன்று எமது தாயகத்தின் பெருநிலப் பரப்பில் எமது தன்னாட்சி நடைபெறுகிறது. ஒரு நீண்ட, துயரமான, கொடூரமான வரலாற்று இடைவெளியின் பின்பு, மீண்டும் தமிழினத்தின் வீர எழுச்சிச்சின்னமாக, தமிழர் மண்ணிற் புலிக்கொடி பட்டொளிவீசிப் பறக்கிறது. இந்த மாபெரும் வரலாற்றுத் திருப்பத்தை ஏற்படுத்தித் தந்தவர்கள் எமது மாவீரர்கள் என்பதை நான் பெருமிதத்துடன் இன்று கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.

எமது தேசிய விடுதலைப் போராட்டம் என்றுமில்லாதவாறு இன்று உலகமயமாகியுள்ளது. பல தசாப்தங்களாகப் பாராமுகம் காட்டி வந்த உலகம் இன்று தனது முழுக் கவனத்தையும் எமது போராட்டத்தின் மீது திருப்பியுள்ளது. ஒரு பலம் வாய்ந்த விடுதலைப் போராட்ட சக்தியாக இன்று உலகரங்கில் நாம் முன்னணி வகித்து நிற்கின்றோம். தர்மத்தின் வழி தழுவி, ஒரு சத்திய இலட்சியத்திற்காகச் செய்யப்படும் தியாகங்கள் என்றுமே வீண்போவதில்லை. எமது தேசத்தின் விடுதலைக்கு நாம் கொடுத்த விலை ஒப்பற்றது. உலக விடுதலை வரலாற்றில் நிகரற்றது. இந்த அளப்பரிய ஈகத்தின் ஆன்மீக சக்தி இன்று உலகத்தின் மனச்சாட்சியை உலுப்பிவிட்டிருக்கிறது. எமது மாவீரர்களின் சுதந்திர தாகம் சாவுடன் தணிந்து போகவில்லை. அது எமது இனத்தின் வீர விடுதலைக் குரலாக உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

சாதி, மதம், வர்க்கம் என்ற வேறுபாடுகளுக்கப்பால், ஒரு விடுதலை இயக்கத்தின் கீழ், ஒரு விடுதலை இலட்சியத்தின் கீழ், ஒன்றுபட்ட சமூகமாக எமது மக்கள் இன்று அணிதிரண்டு நிற்கிறார்கள். வீரம் செறிந்த எமது விடுதலைப் போராட்டமும் அந்த விடுதலைப் போராட்டத்தில் எமது போராளிகள் ஈட்டிய அபாரமான சாதனைகளும் அவர்கள் புரிந்த அற்புதமான தியாகங்களுமே எமது மக்களை எழுச்சியூட்டி, உணர்வூட்டி ஒரே அணியில், ஒரே இனமாக, ஒரே தேசமாக ஒன்றுதிரள வைத்திருக்கின்றன. எமது மாவீரர்களின் மகத்தான தியாகங்களும் அர்ப்பணிப்புகளுமே எமது தேசத்தின் ஒருமைப்பாட்டிற்கு ஆதார சக்தியாக விளங்குகின்றன.

எனது அன்பான மக்களே!

சிங்கள தேசத்தில் இன்று அரசாங்கம் என்று கருதக்கூடிய ஓர் ஒழுங்கமைவான கட்டமைப்பு இயங்கவில்லை. அரச அதிகாரமானது, இரு பெரும் சிங்களக் கட்சிகளின் தலைமைகள் மத்தியிற் பிளவுபட்டுக் கிடக்கிறது. பாராளுமன்ற ஆட்சியும் சனாதிபதி ஆட்சியும் ஒன்றுக்கொன்று முரண்பட்டு மோதும் நிலையில் உள்ளன. பாதுகாப்பு, உள்துறை, ஊடக அமைச்சுகளை சந்திரிகா அம்மையார் திடீரெனப் பறித்துக் கொண்டதால் ரணில் விக்கிரமசிங்காவின் ஆட்சி பீடம் அதிகார வலுவிழந்து முடங்கிக் கிடக்கிறது.

இரு தலைவர்களுக்கும் மத்தியிலான இந்த அதிகார இழுபறியால் அரச கட்டுமானம் ஆட்டம் கண்டு உறுதிநிலை குலைந்துள்ளது. இந்த நெருக்கடி காரணமாகச் சமாதான முன்னெடுப்புகள் செயலிழந்து போயின. இந்தக் குழப்ப நிலையால் விரக்தியடைந்த நோர்வே அரசு தனது சமாதான முயற்சிகளை இடைநிறுத்தியுள்ளது. தென்னிலங்கையில் திடீரென உருவாகியுள்ள இத்தகைய நிலைமைகள் காரணமாக அமைதிச் சூழ்நிலைக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. சமாதான வழியிலான பேச்சுக்கும் சமரசத் தீர்வுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. இந் நெருக்கடி நிலைமை தமிழ் பேசும் மக்களுக்கு மட்டுமன்றி சமாதானத்தை விரும்பும் சர்வதேச நாடுகளுக்கும் கவலையையும் ஏமாற்றத்தையும் கொடுத்திருக்கிறது.

கொழும்பில், திடீரென இந்த அரசியற் பூகம்பம் ஏற்பட்டதன் காரணமென்ன? ஏற்கனவே இரு துருவங்களாக முரண்பட்டிருந்த அரச அதிகார மையத்தில் திடீரென விரிசல் விழுந்ததன் காரணமென்ன? போர் ஓய்வைப் பேணி அமைதியைக் காப்பதற்கு அத்தியாவசியமான பாதுகாப்பு, உள்துறை அமைச்சுகளைச் சந்திரிகா அம்மையார் திடீரெனப் பறித்துக்கொண்ட புறநிலைக் காரணி என்ன?

தனது தலையீட்டுக்கு இரண்டு காரணங்களை முன்வைக்கிறார் சந்திரிகா. ஒன்று, விடுதலைப் புலிகள் இயக்கம் தனது இராணுவக் கட்டமைப்பைப் பலப்படுத்திப் போருக்கான ஆயத்தங்களைச் செய்து வருவதால் இலங்கையின் பாதுகாப்புக்கும் இறைமைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்பது. அடுத்தது, ரணில் விக்கிரமசிங்காவின் அரசாங்கம் புலிகள் இயக்கத்திற்குப் பெரிய அளவிற் சலுகைகளை வழங்கி வருகிறது என்பதாகும். இந்த இரண்டு குற்றச் சாட்டுகளிலும் எவ்வித உண்மையுமில்லை என்பதை நான் இங்கு திட்டவட்டமாக எடுத்துரைக்க விரும்புகின்றேன். எமது விடுதலை இயக்கத்தைக் களங்கப்படுத்தும் குறிக்கோளுடனும் தற்போதைய சமாதானச் சூழ்நிலையைக் குழப்பிவிடும் நோக்கத்தோடும் கட்டவிழ்த்துவிடப்பட்ட புரளிகள் இவை.

எமது இயக்கமுஞ் சரி, மக்களுஞ் சரி போரை விரும்பவில்லை. வன்முறைப் பாதையைவிரும்பவில்லை. நாம் சமாதானத்தையே விரும்புகின்றோம். சமாதான வழியில் எமது பிரச்சினைக்குத் தீர்வு காணப்படுவதையே விரும்புகின்றோம். சமாதான வழிமுறையில் நாம்ஆழமான நம்பிக்கையும் பற்றுறுதியும் கொண்டிருக்கிறோம். இதன் காரணமாகவே அமைதிநிலைக்கு எவ்வித பங்கமும் ஏற்படாத வண்ணம் போர் நிறுத்தத்தை நாம் இறுக்கமாகவும்உறுதியாகவும் பேணி வருகின்றோம். இப் போர் நிறுத்தத்தை எமது இயக்கமே முதலில் ஒருதலைப்பட்சமாக அறிவித்தது. அத்துடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆயுதப் படைகளின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளையும் பொறுமையுடன் சகித்துக் கொண்டு நாம்அமைதி காத்து வருகின்றோம்.

நாம் பெருந்தொகையில் ஆட்சேர்ப்பு நிகழ்த்தி, ஆயுதங்களைத் தருவித்து, படையணிகளைப் பலப்படுத்தி, போருக்கான ஆயத்தங்களைச் செய்து வருகின்றோமென சந்திரிகா அம்மையார் குற்றம் சுமத்துவது அபாண்டமான பொய்யாகும். அமைதி காக்கும்பணியில் நாம் முழுமையாக ஈடுபட்டிருக்கிறோமே தவிர போருக்கான ஆயத்தங்கள் எதையும் செய்யவில்லை. எமது நிர்வாகக் கட்டமைப்புகளுக்கு ஆட்பலம் தேவை என்பதால் சிறிய அளவில் ஆட்சேர்ப்புச் செய்து வருகின்றோம் என்பது உண்மை. இதனைத் திரிவுபடுத்தி, பெரிதுபடுத்திப் போருக்கான முன்முயற்சியெனச் சிங்கள மக்களுக்குப் பூச்சாண்டி காட்டுகிறார் சந்திரிகா.

இப் போர்நிறுத்தத்தால் தமிழர் தாயகத்தில் முழுமையான அமைதி நிலை ஏற்படவில்லை. இயல்பு நிலையும் திரும்பவில்லை. அந்நிய இராணுவ ஆக்கிரமிப்புக்கு ஆளான அவல வாழ்க்கையே தொடர்கிறது. சிங்கள இராணுவம் போர் நிறுத்த விதிகளையும் கடப்பாடுகளையும் நிறைவு செய்ய மறுத்து வருகிறது. உயர் பாதுகாப்பு வலையங்கள் என்ற போர்வையிற் கணிசமான குடியிருப்பு நிலங்களில் இராணுவ ஆக்கிரமிப்புத் தொடர்வதால், இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் தமது சொந்தக் கிராமங்களுக்கும் வாழ்விடங்களுக்கும் திரும்ப முடியாது அவலப்பட்டு வருகின்றனர். இது ஒருபுறமிருக்க, ஆக்கிரமிப்பு இராணுவத்தின் அடாவடித்தனங்கள் அடிக்கடி தலைது}க்கி வருகின்றன. இதனால் தமிழ்ப் பொதுமக்கள் சதா துன்பத்திற்கும் இம்சைக்கும் ஆளாகி வருகின்றனர். போருக்கு ஓய்வு ஏற்பட்ட போதும் எமது மக்களுக்கு இன்னும் ஓய்வு கிட்டவில்லை. முழுமையான அமைதியையும் இயல்பான வாழ்வையும் எமது மக்கள் இன்னும் அனுபவிக்க முடியவில்லை.

அதேவேளை, போர் நிறுத்தத்தாற் சிங்கள தேசத்தில் முழுமையான அமைதியும் இயல்புநிலையும் நிலவுகிறது. பொருளாதார வாழ்வும் மேம்பட்டு வருகிறது. போர் நிறுத்தத்தின் ஆக்கபூர்வமான பயன்களைச் சிங்கள தேசமே அனுபவித்து வருகிறது. ஆனால் தமிழர்களின் அவல நிலை தொடர்கிறது. இதுதான் இன்றைய யதார்த்த மெய்நிலை.

இரண்டு ஆண்டுகளாக நீடிக்கும் போர்நிறுத்த காலத்தில், சந்திரிகா அம்மையார் குற்றம்சுமத்துவது போல, எமது இயக்கத்திற்குப் பெரும் சலுகைகள் வாரி வழங்கப்படவில்லை.மாறாக, இழப்புக்களையே நாம் சந்தித்திருக்கிறோம். போர்நிறுத்தக் காலத்தில் எமது இயக்கத்திற்குச் சொந்தமான இரு பெரும் வணிகக் கப்பல்கள் சர்வதேசக் கடற்பரப்பிற்கடற்படையினரால் தாக்கி அழிக்கப்பட்டன. எமது மீன்பிடிப் படகுகளும் நாசமாக்கப் பட்டிருக்கின்றன.

இச் சம்பவங்களின் விளைவாக, மூத்த உறுப்பினர் பலர்; உட்பட கடற்புலிப் போராளிகள் இருபத்தாறு பேரை நாம் இழந்தோம். பொறுமையின் எல்லைக்கு எம்மைத் தள்ளிய இந்த ஆத்திரமூட்டும் சம்பவங்களையும் சகித்துக் கொண்டு நாம் அமைதியைப் பேணி வந்தோமென்றால் அது சமாதானத்தில் எமக்குள்ள உறுதியையே எடுத்துக் காட்டுகிறது.

எமது விடுதலை இயக்கத்திற்கும் ரணில் விக்கிரமசிங்காவின் அரசுக்கும் மத்தியிற் சென்ற ஆண்டு செப்டெம்பர் மாதத்தில், தாய்லாந்தில் ஆரம்பித்த பேச்சுக்களில் உருப்படியான, ஆக்கபூர்வமான முன்னேற்றம் எதுவும் காணப்படவில்லை.

ஆறு மாத காலத்திற்குள் நிகழ்ந்த ஆறு சுற்றுப் பேச்சுக்களின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களும் முடிவுகளும் நிறைவேற்றப்படவில்லை. போர் நெருக்கடியைத் தணித்து, இயல்பு நிலையைக் கொண்டு வருவதற்கும் இடம்பெயர்ந்த மக்களுக்குப் புனர்வாழ்வு அளிப்பதற்கும் நிறுவப்பட்ட உப- குழுக்கள் செயலிழந்து போயின. அரசுடன் பேசி எமது மக்கள் எதிர்கொண்டு நின்ற பூதாகரமான வாழ்க்கைப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண நாம் எடுத்த முயற்சிகள் பயனற்றுப் போயின.

இராணுவ ஆக்கிரமிப்புக்கு உட்பட்ட தமிழர் தாயகத்தில் இயல்பு நிலையைத் தோற்றுவிப்பது, இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்துவது, போரால் அழிவுற்ற கட்டுமானங்களை மீளமைப்பது, அபிவிருத்தி வேலைகளை முன்னெடுப்பது போன்ற எமது மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளை உதாசீனம் செய்துவிட்டு, அரச தரப்பும் அனுசரணையாளர்களும் மனித விழுமியங்கள் பற்றியும் இறுதித் தீர்வுக்கான வழிமுறைகள், வரைபடங்கள் பற்றியுமே முக்கிய கவனம் செலுத்தினர். இதனாற் பேச்சுவார்த்தை, மக்களது பிரச்சினைகளுக்கும் அபிலாசைகளுக்கும் அப்பால் வேறு திசையில் நகர்ந்தது.

இது இவ்வாறிருக்க, சமாதானப் பேச்சுக்களை ஒரு கவர்ச்சிப் பொருளாகக் காட்டி, உலகநாடுகளிலிருந்து உதவியையும் கடனையும் பெற்று, போரினால் வீழ்ச்சி கண்ட பொருளாதாரத்தைக் கட்டி எழுப்புவதிலேயே ரணிலின் அரசு அதீத அக்கறை காட்டியது. அத்துடன் உலக நாடுகள் சிலவற்றின் உதவியுடன் ஒரு சர்வதேசப் பாதுகாப்பு வலையத்தை நிறுவி விடவும் அரசாங்கம் திட்டமிட்டுச் செயற்பட்டது. ரணில் அரசின் இத் தந்திரோபாயம் காரணமாகச் சமாதான முயற்சியிலும் பேச்சுக்களிலும் உலக நாடுகள் பலவற்றின் அக்கறையும் தலையீடும் அதிகரித்தன. தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்கு எத்தகைய வரையறைக்குள் தீர்வுகாணப்படவேண்டும் என்பதையும் சில நாடுகள் வலியுறுத்திக் கூறின. இவ்விதம் சர்வதேசத் தலையீடுகள் அதிகரித்ததன் எதிர்மறை விளைவாகச் சமாதானப் பேச்சு மேலும் சிக்கலடைந்தது.

இந்தச் சூழ்நிலையிற் சென்ற ஆண்டு ஏப்ரல் மாத நடுப் பகுதியில் எமது இயக்கத்தை ஓரம் கட்டிவிட்டு, இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் முக்கிய மாநாடு ஒன்று வாஷிங்டனிற் கூட்டப்பட்டது. பேச்சுவார்த்தையில் முக்கிய தரப்பாகவும் சம பங்காளி என்ற தகைமையுடனும் பங்குபற்றி வந்த எமது இயக்கம் இவ்விதம் சிறுமைப்படுத்தப்பட்டமை எமக்கு ஏமாற்றத்தையும் கவலையையும் தந்தது.

இப்படியான நிலைமைகள் காரணமாகவே பேச்சுக்களைத் தற்காலிகமாக இடைநிறுத்திவைத்துச் சமாதான வழிமுறையின் பல்வேறு பரிமாணங்களையும் மறு பரிசீலனை செய்ய நாம் தீர்மானித்தோம். தமிழரின் தேசிய இனப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு காண்பது என்பது உடனடியாக, குறுகிய காலத்திற் சாத்தியப்படப் போவதில்லை. அது நீண்ட காலம் பிடிக்கும். ஆனால் எமது மக்கள் எதிர்கொள்ளும் வாழ்க்கைப் பிரச்சினைகள் அவசரமானவை.

நீண்ட காலத்திற்குப் பின்போட முடியாதவை. அத்தியாவசியமான மனிதாபிமானத் தேவைகள் ஒரு புறமும் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, புனர்நிர்மாணம் போன்ற பிரச்சினைகள் மறுபுறமுமாக எமது மக்கள் எதிர்கொள்ளும் சிக்கலான, பாரிய இடர்களுக்கு உடனடியாகப் பரிகாரம் தேவை. இதுபற்றி ஆழமாகப் பரிசீலனை செய்து பார்த்தபொழுதுதான் வடகிழக்கில் ஓர் இடைக்கால அதிகார சபை நிறுவப்படுவது அவசியமென உணர்ந்தோம்.

போரினாற் பேரழிவுகளுக்கு இலக்காகி, ஆயுதப் படைகளின் ஆக்கிரமிப்புக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாகி நிற்கும் தமிழர் தாயகத்தில் இயல்பு நிலையை தோற்றுவிக்கவும் இடம்பெயர்ந்தோரைக் குடியேற்றவும் புனர்நிர்மாண அபிவிருத்தி வேலைகளைச் செம்மையாகவும் துரிதமாகவும் நிறைவேற்றக் கூடிய செயற்றிறன்மிக்கதாக இந்த இடைக்கால ஆட்சியதிகார சபை அமைய வேண்டுமெனக் கருதினோம். இதன் அடிப்படையிற் கணிசமான அதிகாரங்களைக் கொண்டதான ஓர் இடைக்கால அரசியல் நிர்வாக ஆட்சியமைப்பு உருவாக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி, அதற்கான ஒரு திட்ட வரைவை முன் வைக்குமாறு நாம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தோம். ஓர் உருப்படியான திட்டத்தை அரசாங்கம் முன்வைத்தால் அதனை அடிப்படையாகக் கொண்டு பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு நாம் தயாராகஇருப்பதாகவும் அறிவித்தோம்.

கடந்த மே மாதம் 15ம் திகதி நோர்வே வெளிவிவகார அமைச்சர் திரு. பீட்டர்சன் அவர்களை நான் சந்தித்தபோதும் உருப்படியான அதிகாரங்களைக் கொண்ட ஓர் இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பு உருவாக்கப்படுவதன் அவசியத்தை வலியுறுத்தினேன். இருபது ஆண்டு காலமாக நீடித்த போரினால் அழிந்து போன எமது தேசத்தையும் எமது மக்களின் சிதைந்து போன வாழ்க்கையையும் மீளக் கட்டியமைப்பதற்கு இத்தகையதொரு ஆட்சியமைப்புத் தேவையென்பதையும் விளக்கினேன்.

எமது கோரிக்கைக்கு இணங்க, இடைக்கால நிர்வாகம் சம்பந்தமாக, ஒன்றன் பின் ஒன்றாக, இரு திட்ட வரைவுகளை அரசாங்கம் எமக்கு அனுப்பி வைத்தது. இத் திட்ட வரைவுகளிற் குறிப்பிடப்பட்ட நிர்வாக சபை, நாம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க உருப்படியான அதிகாரங்களைக் கொண்டதாக அமையவில்லை. அத்துடன் எமது இயக்கத்தின் பங்கும் தெளிவானதாக வரையறுக்கப்படவில்லை. மிகவும் குறுகிய அதிகாரங்களுடன் அபிவிருத்தி வேலைகளை மட்டும் கையாளும் ஒரு நிர்வாக அமைப்பையே இவ் வரைவுகள் பரிந்துரைத்தன. இதனால் இத் திட்ட வரைவுகளை ஏற்க முடியாதென நாம் நிராகரித்தோம்.

இதனையடுத்து, இடைக்கால நிர்வாகஞ் சம்பந்தமாகப் புதிய யோசனைகள் அடங்கிய மூன்றாவது வரைவு ஒன்றை அரசாங்கம் எமது பரிசீலனைக்கு அனுப்பி வைத்தது. இத் திட்டம் எமக்குத் திருப்தி அளிக்காதபோதும் நாம் அதனை நிராகரித்துவிடவில்லை. எமது இயக்கம் எதிர்பார்த்தது போலவும் எமது மக்களின் அபிலாசைகளை நிறைவு செய்யும் வகையிலும் ஒரு திட்டவட்டமான இடைக்கால ஆட்சியமைப்பை முன்வைக்க அரசாங்கம் தயங்குகின்றது என்பது எமக்குத் தெளிவாகியது. ஆயினும், ரணிலின் ஆட்சிபீடம் ஏதோ புதியபுதிய யோசனைகளை முன்வைக்க விடுதலைப் புலிகள் இயக்கம் அவற்றைத் தொடர்ச்சியாக நிராகரித்து வருவது போன்ற ஒரு தப்பபிப்பிராயம் எழக்கூடுமென நினைத்தோம்.

ஆகவேதான், அரசாங்கத்தின் இறுதி வரைவை எடுத்த எடுப்பில் நிராகரிக்காமல், அதற்குமாற்றுத் திட்டமாக எமது யோசனைகள் அடங்கிய ஒரு திண்ணியமான, உருப்படியான இடைக்கால ஆட்சியதிகாரக் கட்டமைப்பை வரைந்து; அதனை அரசாங்கத்திடம் கையளிக்க நாம் முடிவெடுத்தோம். எமது திட்ட வரைவைத் தயாரிக்கும் விடயத்தில் நாம்அவசரப்படவில்லை. கால அவகாசம் ஏற்பட்டாலும் நாம் முதன்முதலாக எழுத்தில் வரைந்து கொடுக்கும் திட்;டம், ஒரு இடைக்கால ஒழுங்காக அமைந்தபோதும் அது செம்மையானதாக, புதுமையானதாக, நடைமுறைச் சாத்தியமானதாக இருக்க வேண்டுமென விரும்பினோம்.

அத்தோடு, பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட எமது மக்களின் சிக்கலான வாழ்க்கைப் பிரச்சினைகளுக்குத் தீர்வைத் தேடிக் கொடுக்கும் வழிமுறைகளைக் கொண்டதாகவும் அது அமையவேண்டும் எனவும் எண்ணினோம். ஆகவேதான், எமது திட்ட வரைவைப் பரந்த அளவில், பல்வேறு மட்டங்களிற் பல்வேறு தரப்பினரதும் ஆலோசனையைப் பெற்றுத் தயாரித்தோம். பரந்துபட்ட ரீதியில் தமிழீழ மக்களையும் வெளிநாடுகளில் வதியும் எமது சட்ட, யாப்பு அறிஞர்களையும் சர்வதேச நிபுணர்களையும் கலந்தாலோசித்தே இத் திட்ட வரைவு உருவாக்கப்பட்டது.

அரசாங்கத்திடம் நாம் சமர்ப்பித்துள்ள இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டம் பற்றி நான் இங்கு விபரமாக விளக்கிக் கூறுவது அவசியமில்லை. இத் திட்ட வரைவு ஏற்கனவே ஊடகங்கள் வாயிலாக எல்லோரதும் பார்வைக்கும் ஆய்வுக்குமாக வெளியிடப்பட்டுள்ளது. எமது திட்ட யோசனைகள் பலரகமான சர்ச்சையையும் குழப்பத்தையும் கிளப்பியபோதும் சமாதானத் தீர்வை நோக்கி நாம் எடுத்த முயற்சியை உலக நாடுகள் பல வரவேற்றுள்ளன. எமது யோசனைகளை விபரமாகவும் தெளிவாகவும் முதற் தடவையாக எழுத்தில் முன்வைத்ததையும் சில வெளிநாடுகள் வரவேற்றுள்ளன. ரணிலின் அரசு எமது திட்ட வரைவை நிராகரிக்காது, அதன் அடிப்படையில் பேசுவதற்கு இணக்கம் தெரிவித்தது.

அதே வேளை, எமது இடைக்கால நிர்வாக யோசனைகளுக்குச் சிங்கள இனவாத சக்திகளிடமிருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது. தனித் தமிழ் அரசுக்கு அத்திவாரமாக எமது திட்டம் அமைவதாகச் சிங்கள இனவாதக் கட்சிகளும் ஊடகங்களும் கண்டனக் குரல் எழுப்பி வருகின்றன. இந்திய ஊடக உலகத்திலிருந்தும் இந்திய அரசியல் ஆய்வாளர்களிடமிருந்தும் இதேபோன்று கண்டன விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கின்றன.

எதிர்க் கட்சிகளின் சார்பாகத் திரு. கதிர்காமர் விடுத்த நீண்ட அறிக்கையில் எமது திட்டவரைவைப் படுமோசமாக விமர்ச்சித்து, தனியரசு உருவாக்கத்திற்கான அம்சங்கள் அதிற்பொதிந்து இருப்பதால் இலங்கையின் இறைமைக்குப் பேராபத்து ஏற்பட்டிருப்பதாக எச்சரித்தார்.

எமக்கு ஒரு புறம் ஆச்சரியத்தையும் மறுபுறம் ஏமாற்றத்தையும் கொடுத்த விடயம் என்னவென்றால் எமது இடைக்கால நிர்வாகத் திட்ட வரைவு வெளியான சில தினங்களிலேயே சந்திரிகா அம்மையார் திடீரென ரணில் விக்கிரமசிங்காவின் ஆட்சியதிகாரத்தின் கீழிருந்த மூன்று முக்கிய அமைச்சுகளைப் பறித்தெடுத்தமையாகும். அவர் என்னதான் காரணங்களைக் கற்பித்தாலும் எமது திட்ட வரைவின் உடனடி எதிர்வினையாகவே இந்தப் பாரது}ரமான நடவடிக்கையை எடுத்தார் என்பது இன்று உலகறிந்த உண்மையாகிவிட்டது. சந்திரிகாவி;ன் இத் திடீர்த் தலையீட்டினால் ரணிலின் ஆட்சிபீடம் அதிகாரமிழந்து முடங்கிக் கிடப்பது மட்டுமன்றி சமாதான வழிமுறைக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.

எமது இயக்கம் முன்வைத்த இடைக்கால அதிகார சபை, தமிழீழத் தனியரசை உருவாக்கும் நோக்கம் கொண்டதாகவும் தனியரசுக்கான படிக் கற்களைக் கொண்டிருப்பதாகவும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் எவ்வித உண்மையும் இல்லை. நாம் தெரிவித்த யோசனைகள் எமது தேசியப் பிரச்சினையின் நிரந்தரத் தீர்வுக்கான இறுதித் திட்டமன்று. எமது திட்ட வரைவு ஓர் இடைக்கால ஒழுங்கு பற்றியது. நாம் பரிந்துரைத்த நிர்வாக சபை கணிசமான தன்னாட்சி அதிகாரங்களைக் கொண்டதென்பது உண்மை.

உருப்படியான நிர்வாக அதிகாரங்கள் இல்லாமற் போரினாற் பாதிக்கப்பட்ட பல லட்சம்மக்களுக்கு மறுவாழ்வளிக்கும் பாரிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவதும் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதும் சாத்தியமில்லை. அத்துடன் சட்டம் - ஒழுங்கு, நீதி நிர்வாகம், நிதி ஒதுக்கீடுகள், காணிப் பகிர்வுகள் போன்ற பிராந்திய நிர்வாகத்தையும் செம்மையாகச் செயற்படுத்த முடியாது. இங்கு இன்னொரு முக்கிய விடயத்தைக் கவனத்தில் எடுத்துக் கொள்வது அவசியம். அதாவது, வடகிழக்கிலுள்ள பெரும் பகுதி ஏற்கனவே எமது ஆட்சியதிகாரத்தின் கீழ் நேர்த்தியாக நிர்வகிக்கப்பட்டு வருகின்றது என்ற யதார்த்த உண்மையையும் நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

வடகிழக்கில் இன்று நிலவும் கொடூரமான யதார்த்தப் புறநிலைகள், தொடரும் இராணுவ ஆக்கிரமிப்பு, ஆயுதப் படைகளின் அனர்த்தங்கள், இயல்புநிலை தோன்றாத அவல நிலை, எமது மக்கள் எதிர்கொள்ளும் அவசர மனிதாபிமானத் தேவைகள் மற்றும் பல வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கும் நீதியான, நியாயமான, உடனடியான பரிகாரம் காணும் நோக்குடனேயே ஓர் உருப்படியான திட்டமாக எமது யோசனைகளை முன் வைத்தோம்.

இத் திட்டத்தில் முற்போக்கான, புதுமையான, ஆக்கபூர்வமான அம்சங்கள் பலவுண்டு. வடகிழக்கிற் பெரும்பான்மையினராக வாழும் தமிழரும்; மற்றும் முஸ்லிம், சிங்கள மக்களும் தமிழீழ மண்ணில் தமது அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார வாழ்வை மேம்படுத்தும் வகையில் தன்னாட்சி அதிகாரங்களைக் கொண்டதாக இத்திட்டம் அமைகிறது. இந்தச் சுயாட்சிக்கான அம்சங்களை மிகைப்படுத்தி, அவற்றைத் தனியரசுக்கான திட்டமாகத் திரிபுபடுத்தி எமது சமாதான முயற்சிக்குக் களங்கம் ஏற்படுத்தச் சில சக்திகள் முனைவது எமக்குக் கவலையைத் தருகிறது. இந்த இடைக்கால அதிகார சபைத் திட்டம் அரசாங்கத்தின் யோசனைகளுக்கு மாற்றீடாக, பேச்சுக்களுக்கு அடிப்படையாக முன்வைக்கப்பட்டதாகும்.

நேர்மையுடனும், சமாதான வழிமுறையில் உறுதியான பற்றுடனும் நாம் மேற்கொண்ட இம்முன்முயற்சி தென்னிலங்கையில் ஓர் அரசியற் புயலைக் கிளப்பியிருக்கிறது. சிங்கள இனவாத சக்திகள் எமக்கு எதிராகப் போர்க் கொடி உயர்த்தியுள்ளன. சிங்கள தேசத்தின் இரு பெரும் கட்சிகளுக்கும் அதன் தலைவர்களுக்கும் மத்தியில் எழுந்த அதிகாரப் போட்டியால் அரச கட்டமைப்பே ஆட்டம் கண்டு நிற்கிறது. காலங்காலமாகத் தமிழருக்கு உரிமையை மறுத்துவரும் சிங்கள இனவாதத்தின் முகமூடி கிழிந்து விட்டதால் அதன் உண்மையான, அசிங்கமான முகத்தை உலகம் காணக்கூடியதாக இருக்கிறது.

முடிவில்லாத ஒரு துன்பியல் நாடகமாகத் தமிழரின் இனப் பிரச்சினை தொடர்கிறது. எமது பிரச்சினைக்குத் தீர்வுகாண ஆளும்கட்சி முயற்சிப்பதும் எதிர்க்கட்சி எதிர்ப்பதும் பின்பு எதிர்க்கட்சி ஆளும் கட்சியாக மாறி மீண்டும் அதே முயற்சியும் அதே எதிர்ப்புமாக இந்தச் சிங்கள அரசியல் வரலாற்று நாடகம் தொடர்ச்சியாக ஒரே பாணியிற் கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக மேடையேறி வருகிறது. இலங்கையில் மாறிமாறி ஆட்சிபீடம் ஏறும் இரு பெரும் சிங்கள அரசியற் கட்சிகளுமே தமிழர்களுக்கு விரோதமான இந்த விபரீத நாடகத்தின் இயக்குனர்கள். இந்த இனவாத நாடகத்தின் கதாநாயகர்கள் காலத்திற்குக்காலம் மாறியபோதும் கதையின் கருப்பொருள் மாறவேயில்லை. தற்போது கொழும்பில் உருவாகியிருக்கும் அரசியல் நெருக்கடியும் இந்த அபத்த நாடகத்தின் அப்பட்டமான வெளிப்பாடுதான்.

தமிழர்களைப் பகடைக் காய்களாகப் பாவித்து ஆடப்படும் இந்த சதுரங்க விளையாட்டின் எதிர்விளைவாக எத்தனையோ சமரச முயற்சிகள் பாழடிக்கப்பட்டன. எத்தனையோ பேச்சுவார்த்தைகள் முறிந்து போயின. எத்தனையோ உடன்பாடுகள் கிழித்தெறியப்பட்டன. எத்தனையோ ஒப்பந்தங்கள் செயலிழந்து செத்துப் போயின. இதனால் தமிழரின் பிரச்சினை தீர்வின்றித் தொடர்கிறது. காலத்தால் மோசமாகித் தமிழரின் அவல வாழ்க்கை தொடர்கிறது.

சிங்களப் பேரினவாதத்தின் சிலந்தி வலைக்குட் சிக்கித் தமிழரின் வாழ்வும் வளமும் சிதைந்து போவதை நாம் இனியும் அனுமதிக்க முடியாது. வன்முறையைத் துறந்து, மென்முறைப் பாதையைத் தழுவி சமரசத்திற்கும் சமாதான முன்னெடுப்புகளுக்கும் எம்மால் முடிந்தளவு நாம் முயற்சித்து வருகின்றோம்.

இதனை உலக நாடுகளனைத்தும்; நன்கறியும். ஆனால், சிங்கள இனவாத ஆளும் வர்க்கம் தொடர்ந்தும் எமது மக்களின் உரிமைகளை மறுத்து, சமரசத் தீர்வுகளை எதிர்த்து, ஒடுக்குமுறையைத் தொடருமானால் எமது மக்களுக்கு உரித்தான சுயநிர்ணய உரிமையின் கீழ் நாம் பிரிந்து சென்று தனியரசைக் கட்டி எழுப்புவதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை. இப்படியான இறுதி மார்க்கத்திற்குத் தமிழர்களைத் தள்ளிவிடும் புறநிலையை உருவாக்கிவிடவேண்டாமென நாம் சிங்கள அரசியல் தலைமைகளுக்கு வேண்டுகோள் விடுக்கின்றோம்.

ஒடுக்குமுறையின் கொடுமைகளுக்கு ஆளாகி, இலட்சியத்தால் ஒன்றுபட்ட மக்களைஎந்தவொரு சத்தியாலும் அசைத்துவிட முடியாது. இந்த உண்மையை இன்றைய புனிதநாளில், தமிழீழத்திலும் உலகெங்கும் எமது தியாகிகளை நினைவுகூரும் இந் நன் நாளில்,எமது இதயங்களிற் பதித்து, விடுதலை என்ற எமது சத்திய இலட்சியத்தில் நாம்உறுதிகொள்வோமாக.

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வே. பிரபாகரனின் மாவீரர் நாள் உரை, 2004

ஆக்கர்: வே. பிரபாகரன்

வெளியீடு: தமிழீழ விடுதலைப் புலிகள்

காலம்: நவம்பர் 27, 2004

பின்புலம்: 2004 ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனால், புலிகள் இயக்க போராளிகளின் நினைவு நாளான மாவீரர் நாள்அன்று ஆற்றப் பெற்ற உரை.

எனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே!

இன்று ஒரு புனிதமான நாள். தமது உன்னதமான உயிருக்கும் மேலாக, தமது தேசத்தின் விடுதலையை அதியுன்னதமானதாக நேசித்து, அந்த உயரிய இலட்சியத்திற்காகச் சாவைத் தழுவிக்கொண்ட எமது மாவீரர்களை நாம் போற்றி வணங்கும் நன்னாள்.

எமது மாவீரர்களின் வீரஞ்செறிந்த போராட்ட வாழ்வையும் அவர்களது ஒப்பற்ற தியாகங்களையும் அற்புதமான அர்ப்பணிப்புகளையும் நெஞ்சில் நிறுத்தி நினைவுகூரும் இத் திருநாளில் ஒரு முக்கிய விடயத்தைக் கவனத்திற் கொள்ளுமாறு நான் உங்களை வேண்டிக் கொள்கிறேன்.

மூன்று தசாப்தங்களாகத் தொடர்ந்த எமது வீர விடுதலைப் போராட்டத்தில் எமது மாவீரர்கள் புரிந்த மகத்தான தியாகங்கள் காரணமாக ஒப்பற்ற போரியற் சாதனைகளை நாம் நிலைநாட்டினோம். உலகமே வியக்கும் வகையிற் போர் அரங்குகளில் எதிரிப் படைகளை விரட்டியடித்து வெற்றிகளை ஈட்டினோம். சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புக்கு ஆளாகியிருந்த எமது தாயக மண்ணின் பெரும்பகுதியை மீட்டெடுத்து அங்கெல்லாம் எமது நிர்வாக ஆட்சியதிகாரத்தை நிறுவினோம். உலக நாடுகளின் உதவியுடன் கட்டியெழுப்பப்பட்ட சிறீலங்கா அரசினது ஆயுதப் படைகளுக்கு ஈடாகப் படை வலுச் சமநிலையை நிலைநாட்டினோம். தமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தைச் சர்வதேசமயப்படுத்தி, உலகத்தின் கவனத்தை எம்மீது திருப்பினோம். எனினும் எமது மாவீரர் கண்ட இலட்சியக் கனவு இன்னும் நிறைவு பெறவில்லை. எமது தாயக மண் இன்னும் முழுமையாக விடுதலை பெறவில்லை. எமது மக்கள் இன்னும் பூரண சுதந்திரம் அடைந்துவிடவில்லை.

தமிழீழத்தின் தொன்மைவாய்ந்த, வரலாற்றுப் புகழ்மிக்க நகரங்களும் பட்டினங்களும் அங்கு வாழ்ந்து வரும் எமது மக்களும் இன்னும் சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புப் பிடியிலிருந்து விடுபடவில்லை. அவர்கள் திறந்த வெளிச் சிறைச்சாலைகளில் அடைபட்டு, நசிபட்டு, மிதிபட்டு வாழ்கிறார்கள். தமது சொந்த மண்ணிலிருந்து வேர் அறுபட்டு இடம்பெயர்ந்த பல்லாயிரக் கணக்கானோர், தாம் பிறந்து வாழ்ந்த நிலங்களுக்குத் திரும்பமுடியாது அகதி முகாம்களில் அல்லற் படுகிறார்கள். எமது மக்களின் துயரும் துன்பமும் தொடர்கிறது. தேச விடுதலை என்ற எமது இலட்சியம், எமது மாவீரர்கள் கனவுகண்ட அந்தச் சத்திய இலட்சியம் இன்னும் நிறைவுபெறவில்லை.

எனது அன்பான மக்களே,

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றிலேயே என்றுமில்லாதவாறு, ஒர் இக்கட்டான, சிக்கலான சூழ்நிலையை நாம் இன்று எதிர்கொண்டு நிற்கின்றோம். போருமின்றி, நிலையான சமாதானமுமின்றி, இயல்பு நிலையுமின்றி, இடைக்காலத் தீர்வுமின்றி, இனப் பிரச்சினைக்கு முடிவுமின்றி, நாம் ஒரு அரசியல் வெறுமைக்குள் வாழ்ந்து வருகின்றோம். இந்த அரசியற் சூனிய நிலை நீடித்தால், அது எமது இலட்சியப் போராட்டத்திற்குப் பெரும் பங்கத்தை ஏற்படுத்திவிடும் என்பது திண்ணம்.

மூன்று தசாப்தங்களாக முடிவின்றித் தொடர்ந்த ஆயுதப் போருக்கு நாம் ஓய்வுகொடுத்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. நாம் அமைதிகாத்த இக் கால விரிப்பில், சமாதான வழிமூலமாகத் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாண எம்மாலான சகல முயற்சிகளையும், நேர்மையுடனும் உறுதிப்பாட்டுடனும் நாம் மேற்கொண்டோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

நோர்வே நாட்டை நடுநிலையாளராக ஏற்று, அந் நாட்டின் அனுசரணையுடன் உலக நாடுகள் சிலவற்றின் தலைநகர்களில் நிகழ்ந்த சமாதானப் பேச்சுக்களில் எமது விடுதலை இயக்கம் பங்குபற்றியது. ஆறு மாதங்கள்வரை நீடித்த ஆறு சுற்றுப் பேச்சுக்களும் அர்த்தமற்றதாகப் பயனற்றுப் போயின. நெருக்கடி நிலையைத் தணித்து, இயல்பு நிலையைத் தோற்றுவித்து, இடம் பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்தவும் அவர்களுக்கு புனர்வாழ்வு வழங்கவும் போரினாற் பேரழிவுக்கு ஆளான கட்டுமாணங்களைப் புனர்நிர்மாணம் செய்யவும் நிறுவப்பட்ட உப-குழுக்கள் செயலிழந்து செத்துப்போயின. இவை ஒருபுறமிருக்க, சிறீலங்கா அரசானது எமது விடுதலை இயக்கத்தை ஓரங்கட்டிவிட்டு வாஷிங்டனில் நிகழ்ந்த உதவி வழங்கும் நாடுகளின் மாநாட்டிற் பங்குபற்றியது. இதனால், சமநிலைப் பங்காளி என்ற தகைமையிலிருந்து நாம் ஒதுக்கப்பட்டோம். இப்படியான புறநிலையிற்றான் பேச்சுக்களைத் தற்காலிகமாக இடைநிறுத்த எமது இயக்கம் முடிவெடுத்தது. எமது அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தவே நாம் இந்த முடிவை எடுத்தோம். பேச்சுக்களை ஒரேயடியாக முறித்து, சமாதான முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட நாம் விரும்பவில்லை. பேச்சுக்களை இடைநிறுத்தம் செய்த இடைவெளியில், ஒர் இடைக்கால நிர்வாகக் கட்டமைப்புக்கான திட்ட வரைவை முன்வைக்குமாறு ரணில் விக்கிரமசிங்காவின் அரசிடம் வேண்டுகோள் விடுத்தோம். நீண்ட காலப் போரினாலே பாதிக்கப்பட்ட எமது மக்களுக்குப் புனர்வாழ்வு பெற்றுக் கொடுக்கவும் சிதைந்துபோன தமிழர் தேசத்தை மீள்நிர்மாணம் செய்யவும் கணிசமான அதிகாரத்துடன் ஒர் இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பு அவசியமென்பதை வலியுறுத்தினோம்.

ஒன்றுக்குப் பின் ஒன்றாக ரணிலின் அரசு முன்வைத்த, இடைக்கால நிர்வாகம் பற்றிய மூன்று வரைவுகளும் எமக்குத் திருப்தியை அளிக்கவில்லை. மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களுடன் நிர்வாக வலுவற்றதாக இத்திட்ட வரைவுகள் அமையப் பெற்றதால் எம்மால் அவற்றை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இறுதியில், ஒர் இடைக்கால நிர்வாகத் திட்ட வரைவை நாமாகத் தயாரித்துக்கொடுக்க முடிவெடுத்தோம். பல மட்டங்களிலே தமிழீழ மக்களின் கருத்தைப் பெற்று, வெளிநாடுகளிற் புலம்பெயர்ந்து வாழும் அரசியல் அறிஞர்கள், சட்ட வல்லுனர்கள், அரசியலமைப்பு நிபுணர்கள் ஆகியோரின் கலந்தாலோசனையுடன் ஒர் இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தைத் தயாரித்தோம். இத் திட்டம் புதுமையானது. நடைமுறைச் சாத்தியமானது. எமது மக்களின் அவசரமான வாழ்நிலைத் தேவைகளைப் பூர்த்திசெய்யக்கூடிய வகையில் இதன் கட்டமைப்பு நெறிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழர் தாயகத்தில் மீள்குடியமர்வு, புனர்வாழ்வு, புனரமைப்பு, அபிவிருத்தி ஆகிய பணிகளைத் தாமதமின்றிச் செயற்றிறனுடன் நிறைவுசெய்ய வழிவகுக்கும் உருப்படியான அதிகாரங்களைக் கொண்டதாக இத்திட்டம் அமையப்பெற்றது.

இந்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தைச் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி நாம் ரணில் விக்கிரமசிங்காவின் அரசாங்கத்திடம் சமர்ப்பித்ததுடன், ஊடகங்கள் வாயிலாகப் பொதுசன அரங்கிலும் பகிரங்கப்படுத்தினோம்.

சர்வதேச நாடுகள் பல, எமது இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தை வரவேற்கத் தவறவில்லை. நீண்ட காலத்தின் பின்பு முதற்றடவையாக விடுதலைப் புலிகள் தமது அரசியற் சிந்தனைகளைத் தெளிவாகவும் விரிவாகவும் எழுத்தில் வடித்திருக்கின்றார்களென இந் நாடுகள் திருப்தி தெரிவித்தன.

நாம் முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தை ரணில் விக்கிரமசிங்காவின் அரசாங்கம் நிராகரிக்கவில்லை. தாம் சமர்ப்பித்த வரைவுகளைப் பார்க்கிலும் எமது திட்டம் வித்தியாசமானது என்று குறிப்பிட்ட அரசாங்கம், எமது யோசனைகளின் அடிப்படையிற் பேச்சுக்களை ஆரம்பிக்க இணங்கியது. ஆனால், அதே சமயம், எமது இடைக்கால நிர்வாகத் திட்டத்தைக் கடுமையாக விமர்சித்த சிறீலங்கா சுதந்திரக் கட்சி, அது தமிழீழத் தனியரசுக்கு இடப்பட்ட அத்திவாரமெனக் கண்டித்தது. சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவியும் ஜனாதிபதியுமான சந்திரிகா குமாரதுங்கா ஒருபடி மேலே சென்று அதிரடி நடவடிக்கையை எடுத்தார். எமது இடைக்கால நிர்வாகத் திட்டம் அறிவிக்கப்பட்ட நான்காவது நாளே சந்திரிகா அம்மையார் மேற்கொண்ட திடீர் நடவடிக்கை தென்னிலங்கை அரசியலைப் பெரும் நெருக்கடிக்குள்ளே தள்ளியது. பாதுகாப்பு அமைச்சு உட்பட மூன்று முக்கிய அமைச்சுகளை ஜனாதிபதி சந்திரிகா பறித்தெடுத்துக் கொண்டதால் ரணில் விக்கிரமசிங்காவின் ஆட்சிபீடம் அதிகார வலுவிழந்து ஆட்டம் கண்டது. இதனைத் தொடர்ந்து மூன்று மாதத்திற்குள் ஜனாதிபதி சந்திரிகாவினாற் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் விளைவாக ரணில் அரசாங்கம் கவிழ்ந்தது.

இவ்வாண்டு முற்பகுதியில் நிகழ்ந்த பொதுத் தேர்தல் சிங்கள, தமிழ்த் தேசங்கள் மத்தியிலான இன முரண்பாட்டினை மேலும் கூர்மையடையச் செய்தது. சமாதானத்திற்கும் இன இணக்கப்பாட்டிற்கும் விரோதமான சிங்களப்பௌத்த பேரினவாத சக்திகள், என்றுமில்லாதவாறு தென்னிலங்கை அரசியல் அரங்கில் மேலாண்மை வகிக்க இப் பொதுத் தேர்தல் வழிவகுத்தது. இனவாதமும் மதவாதமும் பழமைவாதக் கம்யூனிசமும் ஒன்றுகலந்த குளறுபடியான கருத்தியலில் ஊறித் திளைத்த, தமிழர் விரோதக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி) இத் தேர்தலில் கணிசமான ஆசனங்களைப்பெற்று மூன்றாவது பிரதான அரசியற் கட்சியாக வெற்றி பெற்றது. இந்த இனவாதக் கட்சியை முக்கிய தோழமைப் பங்காளியாக அரவணைத்து, ஒரு கூட்டணி அரசாங்கத்தை அமைத்தார் சந்திரிகா அம்மையார். தமிழரின் தேசியப் பிரச்சினை குறித்து மாறுபட்ட போக்கும் முரண்பட்ட கொள்கையுமுடைய அரசியல் இயக்கங்களின் ஒவ்வாத கூட்டாக இந்த அரசாங்கம் அமையப்பெற்றது.

பொதுசனத் தீர்ப்பின் வாயிலாக, தென்னிலங்கை அரசியலரங்கிற் சிங்களப்பௌத்த மேலாண்மைவாதம் வலுப்பெற்ற அதே சமயம், தமிழரின் தாயகமான வடகிழக்கில், ஒரே இலட்சியத்தில் ஒன்றுபட்ட சக்தியாகத் தமிழ்த் தேசியம் எழுச்சிபெற்றது. எமது விடுதலை இயக்கத்தின் அரசியல் இலட்சியத்திற்கு மக்கள் சக்தியின் ஏகோபித்த ஆதரவு கிட்டியது. தமிழீழ மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்ற வெகுசன அங்கீகாரமும் எமது விடுதலை இயக்கத்திற்கு வழங்கப்பட்டது. எமது இயக்கம் முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்திற்கு எமது மக்களின் மனுவும் கிடைத்தது. விடுதலைப் புலிகளின் இலட்சியக் குரலாக, அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சனநாயக சக்தியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருபத்திரெண்டு ஆசனங்களைப் பெற்று அமோக வெற்றியீட்டியது. இப் பொதுத் தேர்தலானது என்றுமில்லாதவாறு தமிழ், சிங்கள இனங்களை வேறுபட்ட இரு தேசங்களாகப் பிளவுபடுத்தியது. கருத்தாலும் உணர்வாலும் இலட்சியத்தாலும் வேறுபட்டு, மாறுபட்டு, முரண்பட்டு நிற்கும் இரு மக்கள் சமூகங்களாகப் பிரிவுறச் செய்தது.

தென்னிலங்கையில் ஆட்சிமாற்றம் நிகழ்ந்து, அரசியலதிகாரம் இனவாத சக்திகளிடம் சென்றடைந்தபோதும் நாம் தொடர்ந்தும் அமைதி பேணி, சமாதான முயற்சியை முன்னெடுக்க விரும்பினோம். இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தின் அடிப்படையிற் பேச்சுக்களை ஆரம்பிக்க நாம் தயாரென்பதை நோர்வே அனுசரணையாளர்கள் மூலமாகச் சந்திரிகாவின் கூட்டணி அரசாங்கத்திற்கு அறிவித்தோம். அவ்வேளைதான் அரச கூட்டணிக்குள் குழப்பமும் கொள்கை முரண்பாடும் தலைதூக்கின.

அரச கூட்டணிக்குள் ஆதிக்க வலுவுடைய கட்சியான ஜே.வி.பி, சமாதானப் பேச்சுக்கள் வாயிலாகத் தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமையும் ஆட்சியதிகாரமும் வழங்கப்படுவதைக் கடுமையாக எதிர்த்தது. மூன்றாந் தரப்பு நடுநிலையாளராகச் செயற்பட்ட நோர்வே அரசையும் வன்மையாகக் கண்டித்தது. நாம் முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தை முற்றுமுழுதாக நிராகரித்தது. எமது திட்டத்தின் அடிப்படையிற் பேச்சுக்கள் ஆரம்பமானால் அரச கூட்டணியிலிருந்து வெளியேறிவிடப் போவதாகவும் மிரட்டியது. சமாதானப் பேச்சுக்கும் சமரச முயற்சிக்கும் எதிரான ஜே.வி.பியினரின் தீவிரவாதக் கடும்போக்கு, சந்திரிகா அம்மையாருக்குப் பெரும் சவாலாக அமைந்தது. இந்நிலையே தொடர்ந்தும் நீடிக்கிறது.

சமாதான வழிமுறையைப் பேணி இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாணவேண்டுமென்ற சர்வதேச அழுத்தம் ஒருபுறமும், பேச்சுக்கள் ஆரம்பமாகி முன்னேற்றம் ஏற்படும்போதுதான் உதவி வழங்கும் நாடுகள் உறுதியளித்த பெருந்தொகைக் கடனுதவி கிடைக்குமென்ற நிர்ப்பந்தம் மறுபுறமும், பாதாளம் நோக்கிச் சரிந்து செல்லும் இலங்கையின் பொருளாதாரம் இன்னொரு புறமுமாக, சந்திரிகாவின் அரசு பலமுனைகளில் நெருக்கடியைச் சந்தித்து நிற்கிறது. இந்த நெருக்கடிக்கு முகம் கொடுப்பதாயின் விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களை நடத்தியே ஆகவேண்டும் என்ற நிர்ப்பந்தம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அரச கூட்டணிக்குள் நிலவும் உள்முரண்பாடும், அடிப்படையான கொள்கை வேறுபாடும் சமாதானப் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்குப் பெரும் இடையூறுகளாக எழுந்துள்ளன. தமிழரின் தேசிய இனப் பிரச்சினை குறித்து அரச கூட்டணிக்குள் அங்கம்வகிக்குங் கட்சிகள் மத்தியில் ஒரு தெளிவான கொள்கைத் திட்டமோ பொதுவான அணுகுமுறையோ இருக்கவில்லை. தமிழர் விரோத இனவாதத்திலும் போர்வெறி பிடித்த இராணுவ வாதத்திலும் சிங்களப்பௌத்த மேலாதிக்கத்திலும் ஊறித் திளைத்த தீவிரவாதச் சக்திகளுடன் அதிகாரக் கூட்டுறவு வைத்திருக்கும் சந்திரிகா அம்மையாரால் ஒரு தெளிவான கொள்கைத் திட்டத்தின் அடிப்படையிற் சமாதான முயற்சியை முன்னெடுக்க முடியவில்லை. இதுதான் தென்னிலங்கையில் நிலவும் உண்மையான அரசியல் யதார்த்த நிலை. அரச கூட்டணிக்குள் கருத்தொற்றுமையில்லையென்ற அரசியல் உண்மையானது மிகவும் சாதுரியமான முறையில், சர்வதேச சமூகத்திற்கு இருட்டடிப்புச் செய்யப்பட்டு வருகிறது.

ரணில் விக்கிரமசிங்கா அரசாங்கத்துடன் நாம் நிகழ்த்திய பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக, அதன் இறுதிக் கட்டத்திலேயே எமது இடைக்கால நிர்வாக யோசனைகளை முன்வைத்தோம். அந்த யோசனைகளை அடிப்படையாக வைத்து உடன் பேச்சுக்களைத் தொடங்கலாம் என்ற எமது நிலைப்பாட்டை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை ஆதரிக்கிறது. ஆனால் எமது நிலைப்பாட்டிற்கு மாறாக, சந்திரிகாவின் அரசு ஒரு நிபந்தனையை விதிக்கிறது. அதாவது, எந்த வகையான இடைக்கால நிர்வாக அமைப்பும் ஒரு நிரந்தரமான தீர்வுத் திட்டத்தின் இணைபிரியாத அங்கமாக அமையவேண்டும் என வலியுறுத்துகிறது. நாம் ஒர் இடைக்கால நிர்வாக ஒழுங்கை வேண்டி நிற்க, சந்திரிகாவின் அரசு இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுபற்றி பேச விரும்புகிறது.

கால தாமதமின்றி, இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பு தமிழர் தாயகத்தில் அமையப்பெற வேண்டுமென நாம் வலியுறுத்துவதற்கு முக்கியமான காரணங்கள் இருக்கின்றன. நீண்ட காலமாகத் தொடர்ந்த கொடிய போரினாற் பாதிக்கப்பட்ட எமது மக்கள் மிகவும் அவசரமான வாழ்நிலைத் தேவைகளையும் பாரிய மனிதாபிமானப் பிரச்சினைகளையும் எதிர்கொண்டு நிற்கின்றார்கள். பல்லாயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் அகதி முகாம்களில் அவல வாழ்க்கை வாழ்ந்துவருகிறார்கள். போரினாற் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமும் புனர்வாழ்வும் வழங்குவதற்கு உதவி வழங்கும் நாடுகள் பெருந்தொகையில் நிதி ஒதுக்கீடு செய்ய முன்வந்துள்ளன. துன்பப்படும் எமது மக்களுக்கு நிவாரணமும் புனர்வாழ்வும் வழங்கவும் அழிவுற்ற தமிழர் தேசத்தை மீளக் கட்டியமைக்கவும் தகுந்த அதிகாரங்களுடன் வடகிழக்கில் ஒர் இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பு நிறுவப்படுதல் அவசியம்.

போர்நிறுத்தம் செய்து, மூன்று ஆண்டு காலமாக அமைதி பேணி, ஆறு மாதங்கள்வரை பேச்சுக்களை நடத்தியபோதும் சமாதானத்தின் பலாபலன்கள் இன்னும் எமது மக்களைச் சென்றடையவில்லை. தாங்க முடியாத அளவிற்கு அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளின் சுமை எமது மக்களை நசுக்கி வருகிறது. முதலில், உடனடியாகத் தமது அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிட்டவேண்டுமென்பதையே எமது மக்கள் ஆவலாக எதிர்பார்த்து நிற்கின்றார்கள். எனவேதான், நாம் முன்வைத்த யோசனைகளின் அடிப்படையிற் பேச்சுக்களை ஆரம்பித்து வெகு சீக்கிரமாக இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பை நிறுவவேண்டுமென நாம் விரும்புகின்றோம். நாம் தெரிவித்த யோசனைகளிற் சில சர்ச்சைக்குரியனவாகத் தென்பட்டால் அவைபற்றிப் பேச்சுவார்த்தை மேசையில் விவாதித்துத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம். முதலில், இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பை நிறுவி, அது செம்மையாகச் செயற்படத் தொடங்குவதை அடுத்தே இனப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வுபற்றிப் பேச்சுக்களை நடத்தலாம் என்பதே எனது நிலைப்பாடு. எமது கோரிக்கை நியாயமானது. தமிழர் தாயகத்தில் நிலவும் வாழ்நிலை நிதர்சனத்தைக் கருத்திற்கொண்டே நாம் இக் கோரிக்கையை முன்வைக்கின்றோம்.

ஆனால், சந்திரிகா அம்மையாரோ இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதுபற்றிப் பேச வருமாறு எமக்கு அழைப்பை விடுத்து வருகிறார். எந்த வடிவத்திலான இடைக்கால நிர்வாகத் திட்டமும், முழுமையான நிரந்தரத் தீர்வுத் திட்டத்தின் அங்கமாக அமையவேண்டும் என்பது அவரது நிலைப்பாடு. தமிழரின் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என அவர் வலியுறுத்துவதற்குப் பல காரணங்களை நாம் சுட்டிக் காட்டலாம். முதலாவதாக, அரசுக் கூட்டணிக்குள் அங்கம்வகிக்கும் தீவிரவாத இனத் துவேசச் சக்திகளைத் திருப்திப்படுத்துவதற்காக இருக்கலாம். அதுவும் குறிப்பாக, நாம் முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தை வன்மையாக எதிர்த்து நிற்கும் ஜே.வி.பியினரைச் சமாதானப்படுத்தும் நோக்கமாக இருக்கலாம். இரண்டாவதாக, தமிழரின் தேசிய இனப் பிரச்சினையைத் தீர்ப்பதில் உண்மையான அக்கறை கொண்டவர் போன்று சர்வதேசச் சமூகத்திற்கு ஏமாற்றுவித்தை காட்டுவதற்காக இருக்கலாம். மூன்றாவதாக, தமிழரின் சிக்கலான இனப் பிரச்சினை பற்றி விவாதிப்பது என்ற சாக்கிற் பேச்சுக்களை முடிவின்றி இழுத்தடிப்பதற்காகவும் இருக்கலாம். இப்படிப் பல காரணங்களை நாம் சுட்டிக்காட்டலாம். எப்படியான காரணங்களாக இருந்தாலும் ஒன்றைமட்டும் நாம் திட்டவட்டமாகச் சொல்ல விரும்புகின்றோம். அதாவது, சந்திரிகா அம்மையாரின் முரண்பட்ட, ஒன்றுக்கொன்று மாறுபட்ட நிலைப்பாடுகளைப் பார்க்கும்பொழுது, அவரது அரசானது தமிழ் மக்களுக்கு ஒர் இடைக்காலத் தீர்வையோ நிரந்தரமான தீர்வையோ வழங்கப்போவதில்லை என்பது புலனாகும்.

தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வுவேண்டிக் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நாம் சிங்கள அரசியல் தலைமைகளுடன் பேச்சுக்களை நடத்திய கசப்பான வரலாறு பற்றி நான் இங்கு விபரிக்க விரும்பவில்லை. காலத்தாற் சாகாது, ஈழத் தமிழ் இனத்தின் கூட்டு அனுபவத்திற் புதைந்து கிடக்கும் அரசியல் உண்மை இது. மொழியுரிமை என்றும் சம உரிமை என்றும் பிரதேச சுயாட்சி என்றும் சமஷ்டிக் கூட்டாட்சி என்றும் காலங் காலமாக நாம் பேச்சுக்களை நடத்தி, உடன்பாடுகள் ஒப்பந்தங்கள் செய்து, ஏமாற்றப்பட்டு வஞ்சிக்கப்பட்ட வரலாற்றுப் பாதையில் மீளநடைபோட எமது விடுதலை இயக்கந் தயாராக இல்லை.

சிங்களப்பௌத்தப் பேரினவாதச் சகதிக்குட் புதைந்து கிடக்கும் அரசியல் அமைப்புகளும் அவற்றின் தலைமைகளும் தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளை ஒருபொழுதும் புரிந்துகொள்ளப் போவதில்லை. சிங்களத் தேசத்தின் பிரதான அரசியற் கட்சிகள் எவையுமே தமிழரின் தேசிய இனப் பிரச்சினையின் அடிப்படைகளைக்கூட அங்கீகரிக்கத் தயாராக இல்லை. வடகிழக்கு மாநிலமானது தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுத் தாயகம் என்பதையோ, தமிழர்கள் ஒரு தனித்துவமான தேசிய இனக் கட்டமைப்பைக்கொண்ட மக்கள் சமூகம் என்பதையோ தமிழீழ மக்களுக்குப் பிரிந்துசெல்லும் உரிமையுடனான சுயநிர்ணய உரிமையுண்டு என்பதையோ எந்தவொரு சிங்கள அரசியல் இயக்கமும் ஏற்றுக்கொள்ளத் தயாராகவில்லை. தமிழரின் தேசிய இனப் பிரச்சினையின் அடிப்படைகளைப் புரிந்து கொண்டு அவற்றை ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவமும் பெருந்தன்மையும் மதிநுட்பமும் இல்லாதது ஒருபுறமிருக்க, தென்னிலங்கை அரசியல் இயக்கங்கள் மத்தியில் ஒத்திசைவற்ற, ஒன்றுக்கொன்று மாறுபட்ட, முரண்பாடுகள் நிறைந்த கருத்துக்களையும் கொள்கைகளையுமே காணக்கூடியதாக இருக்கிறது. இப்படிக் குளறுபடியான கொள்கைகளை வரித்துக் கொண்டு, அப்பட்டமான இனவாதம் பேசும் கட்சிகளின் கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் சந்திரிகா அம்மையார், இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதுபற்றி அக்கறை காட்டுவது எமக்கு ஆச்சரியத்தைத் தருகிறது. ஜனாதிபதி சந்திரிகாவிடமும் அவர், கூட்டாட்சி அமைத்திருக்கும் கட்சிகளிடமும் எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியிடமும் எமது விடுதலை இயக்கம் ஒரு வேண்டுகோளை முன்வைக்க விரும்புகிறது. அதாவது, தமிழ் மக்களது இனப் பிரச்சினையின் அடிப்படைகள் குறித்து, அவர்களது மூலாதாரக் கோரிக்கைகளான தாயகம், தேசீயம், சுயநிர்ணய உரிமை குறித்து, உங்களது கட்சிகளின் கொள்கை நிலைப்பாட்டினை அதிகாரபூர்வமாகப் பகிரங்கப்படுத்துங்கள்.

தென்னிலங்கை அரசியலரங்கில் தமிழரின் அடிப்படை அரசியல் அபிலாசைகள் குறித்துத் தெளிந்த பார்வையும் நேரிய தரிசனமும் ஒத்திசைவான நிலைப்பாடும் நிலவுமானால் எமது மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வுபற்றிப் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமுண்டு. அல்லாதபட்சத்தில், நிரந்தரத் தீர்வு குறித்துப் பேசுவதில் அர்த்தமில்லை. தமிழர் பிரச்சினை குறித்துப் பிளவுபட்டு, முரண்பட்டுக் குழம்பி நிற்கும் சிங்கள அரசியல் தலைமைகளிடமிருந்து எமது மக்களுக்கு நியாயமான நிரந்தரத் தீர்வு கிடைக்கப்போவதில்லையென்ற உண்மையை உணர்ந்துதான் நாம் இடைக்காலத் தீர்வுத் திட்டம் ஒன்றை முன்வைத்தோம். எமது மக்களின் வாழ்க்கைத் தேவைகளுக்காவது நிவாரணம் பெற்றுக்கொடுக்கும் நோக்கத்துடனேயே நாம் இத் திட்டத்தை முன்வைத்து, பேச்சுகளை ஆரம்பிப்பதற்கு விருப்பம் தெரிவித்தோம். ஆனால் சந்திரிகாவின் அரசு எமது நியாயமான நிலைப்பாட்டை நிராகரித்து, நிரந்தரத் தீர்வு என்ற சாக்குச் சொல்லி, சமாதான முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டுவருகிறது. சமாதானத்தின் விரோதிகளையும் இனவாத சக்திகளையும் அவர்களது குளறுபடியான கொள்கைகளையுந் தனது கூட்டாட்சித் திரைக்குள் மூடிமறைத்து, விடுதலைப் புலிகள் மீது வீண்பழி சுமத்த முனைகிறார் சந்திரிகா அம்மையார். சமாதான முகமூடி அணிந்து நடிக்கும் சந்திரிகா அரசின் உண்மையான முகத்தைச் சர்வதேச சமூகம் அடையாளம் கண்டு கொள்ளும் என்ற நம்பிக்கை எமக்குண்டு.

இடைக்காலத் தீர்வுமின்றி, நிரந்தரத் தீர்வுமின்றி, நிலையான அமைதியுமின்றி, நிம்மதியான வாழ்வுமின்றி, நாம் அரசியல் வெறுமைக்குள் தொடர்ந்தும் சிறைபட்டுக் கிடக்க முடியாது. சிங்களத் தேசமானது தமிழினத்தை அரவணைத்து, இணைத்து வாழவும் விரும்பவில்லை. அதே சமயம், பிரிந்து சென்று தனித்து வாழவும் விடுவதாக இல்லை. இரண்டுங் கெட்டான் நிலையில் விடிவின்றி, விடுதலையின்றி, எதிர்காலச் சுபீட்சமின்றி சூனியமான அரசியல் இருட்டுக்குள் நாம் தொடர்ந்து வாழமுடியாது. பொறுமைக்கும் எதிர்பார்ப்புக்கும் எல்லைக்கோடுகளுள்ளன. அந்த எல்லைக் கோடுகளை நாம் அடைந்து விட்டோம். இந்த நெருக்கடியான சூழ்நிலையிற் சிறீலங்கா அரசுக்கு நாம் அவசரமான அழைப்பு ஒன்றை விடுக்க விரும்புகின்றோம். அதாவது, நாம் முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தின் அடிப்படையில், நிபந்தனையற்ற முறையில், காலந் தாமதிக்காது பேச்சுக்களை ஆரம்பிக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம். எமது இந்த அவசர வேண்டுகோளை நிராகரித்து, காலத்தை இழுத்தடித்து, எமது மக்களின் துயர வாழ்வை நீடித்துச் செல்ல சிங்கள அரசு முற்படுமானால், நாம் எமது தேசத்தின் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை. எமது இந்த இக்கட்டான நிலையை, தமிழரின் இனப்பிரச்சினையில் அக்கறையுடைய உலக நாடுகள் கருத்தில் எடுத்து, எமது நியாயமான நிலைப்பாட்டின் அடிப்படையிற் சமாதானப் பேச்சுக்களை ஆரம்பிக்கும்படி சிறீலங்கா அரசிற்கு அழுத்தம்கொடுக்குமாறு வேண்டிக்கொள்கிறோம்.

எமது மண்ணின் விடிவிற்காகவும் எமது மக்களின் விடுதலைக்காகவும் களமாடி வீழ்ந்த எமது மாவீரர்களை நினைவுகூரும் இப் புனித நாளில், தேச விடுதலை என்ற அவர்களது இலட்சியக்கனவை, எத்தகைய இடர்கள், சாவல்களை எதிர்கொண்ட போதும் நிறைவுசெய்வோமென நாம் உறுதி பூணுவோமாக.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

  • கருத்துக்கள உறவுகள்

நாம்.... என்ன ஆயுதத்தை பாவிக்க வேண்டும் என்று, எதிரி தான் தீர்மானிக்கின்றான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் நாள் உரை 2005

எனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே!

இன்று வணக்கதிக்கு உரிய நாள். சுயநல இன்பங்களைத் துறந்து பொதுநல இலட்சியத்திற்காகப் போராடி வாழ்ந்து, அந்தச் சத்திய இலட்சியத்திற்காகச் சாவைத் தழுவிய உத்தமர்களை நாம் நினைவு கூரும் புனித நாள்.

இன்றைய நன்னாளில், அந்த மகத்தான மனிதப் பிறவிகளின் நினைவாக நாம் ஏற்றும் தீபங்களில், அந்த அக்கினி நாக்குகளின் அபூர்வ நடனத்தில், எமது மாவீரர்களின் சுதந்திரத் தாகம் அணையாத சுடராக ஒளிவிட்டு எரிவதை நாம் எமது நெஞ்சில் நினைவு கொள்வோமாக.

சத்தியம் மீது கட்டப்பட்ட இலட்சியத்திற்காக மடிபவர்கள் என்றுமே சாவதில்லை. அவர்கள் ஒவ்வொருவருமே தனிமனித சரித்திரங்களாக என்றும் வாழ்வார்கள்.

மாவீரர்களே, உங்களது ஒப்பற்ற தியாக வரலாறுகளின் ஒன்றிணைப்பாகவே எமது தேசத்தின் வீர விடுதலைக் காவியம் படைக்கப்படுகிறது.

எமது விடுதலை இயக்கத்தின் முதலாவது மாவீரன், எனது பிரியமான தோழன் சத்தியநாதன் எனது மடியில் உயிர்நீத்து இன்றுடன் இருபத்துமூன்று ஆண்டுகளாகக் காலநதி ஓடிவிட்டது. இந்தக் கால நீட்சியிற் கட்டவிழ்ந்த போராட்ட வரலாற்றில் பதினேளாயிரத்துத் தொள்ளாயிரத்து மூன்று (17,903) மாவீரர் தேச விடுதலைக்காகக் களமாடி வீழ்ந்திருக்கிறார்கள். இந்தப் பெருந்தொகைப் போராளிகளைவிடப் பலமடங்கு தொகையில் பொதுமக்களும் எதிரியாற் கொன்றொழிக்கப்பட்டுள்ளார்கள். ஒட்டுமொத்தத்தில் எமது தேசத்தின் விடுதலைக்காக நாம் கொடுத்த உயிர்ப்பலி மிகப் பெரியது. அளப்பரியது.

தமிழீழத் தேசத்தின் விடுதலைக்காகத் தமிழ் மக்கள் புரிந்துள்ள மாபெரும் தியாகத்தை, அதன் ஆன்மீக மகத்துவத்தை, அதன் வரலாற்று முக்கியத்துவத்தைச் சிங்களத் தேசம் மட்டுமன்றிச் சர்வதேசச் சமூகமும் உணர்ந்து கொள்ளாதது எமக்கு ஏமாற்றத்தையும் வேதனையையும் தருகிறது.

அன்றும் சரி, இன்றும் சரி, தமிழரின் உணர்வுகளை, அவர்களது வாழ்நிலை அவலங்களை, அவர்களது தேசிய அபிலாசைகளைச் சிங்களப் பெரும்பான்மை இனம் புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொள்ள எத்தனிக்கவுமில்லை. புரிந்து கொள்ளும் ஆற்றலும் அறிவுத் திறனும் ஆன்ம பக்குவமும் அவர்களிடம் இருப்பதாகவும் தெரியவில்லை.

சிங்களத் தேசம் இன்னும் மகாவம்ச மனவுலகில், அந்தப் புராணக் கருத்துலகிற் புதைந்து போய்க் கிடக்கிறது. இலங்கைத் தீவானது தேரவாத பௌத்தத்தின் தெய்வீகக் கொடையென்றும் சிங்கள இனத்திற்கே உரித்தான சொத்துடைமை என்றும் மகாவம்சம் திரித்துவிட்ட புனைகதையிற் சிங்கள மக்கள் இன்னும் சிக்குண்டு கிடக்கிறார்கள்.

அடிமனதில் ஆழமாக உறைந்து, அசைவற்றதாக இறுகிப் போன இந்தப் புராணக் கருத்து நிலையிலிருந்து சிங்களத் தேசம் விடுபடப்போவதில்லை. இந்தக் கருத்தியற் குருட்டுத்தனத்தால் இலங்கைத் தீவின் உண்மை வரலாற்றையும் அங்கு நிலவும் சமுதாய மெய்ந்நிலைகளையும் சிங்கள மக்களாலும் அவர்களது அரசியல், மதத் தலைமைகளாலும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.

இலங்கைத் தீவின் வடகிழக்கு மாநிலத்தைத் தாயகத் தேசமாகக் கொண்டு, தமிழீழ மக்கள் என்ற வரலாற்றுத் தொன்மைமிக்க ஓர் இனம் இருப்பதையும் அவர்கள் ஒரு தனித்துவத் தேசமாக வாழ்ந்து வருவதையும் அவர்களுக்கு அடிப்படையான அரசியல் உரிமைகள், சுதந்திரங்கள் உள்ளன என்பதையும் சிங்களவராற் புரிந்துகொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடியவில்லை.

தமிழரது இருப்பு நிலைபற்றிய உண்மையைக் கிரகித்து, அவர்களது அரசியல் அபிலாசைகளைப் புரிந்துகொள்ளச் சிங்களத் தேசம் மறுத்து வருவதாலேயே தமிழ் மக்களது தேசிய இனப்பிரச்சினை தீர்வின்றி, முடிவின்றிச் சிக்கலடைந்து இழுபட்டு வருகிறது.

சிங்கள மக்களின் மகாவம்ச மனவமைப்பில், அவர்களது சமூகப் பிரக்ஞையில், அவர்களது அரசியற் கருத்துலகில் அடிப்படையான மாற்றம் நிகழுமென நாம் எதிர்பார்க்கவில்லை. சிங்கள – பௌத்த மேலாண்மைவாதத்தின் வீச்சும் வலுவும் தணிந்து போகவில்லை. மாறாக, அது புதிய, புதிய வடிவங்களை எடுத்துப் புத்துயிர்பெற்று வருகிறது.

தென்னிலங்கை அரசியற் களத்தில் அதன் ஆதிக்கம் மேலோங்கி வருகிறது. இப்படியான புறநிலையில், தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்குச் சிங்களத் தேசத்திலிருந்து ஒரு நீதியான, நியாயமான தீர்வு கிட்டுமென அன்றும் சரி, இன்றும் சரி, நாம் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. எமக்கே உரித்தான எமது அடிப்படை உரிமைகளை நாமாகவே போராடி வென்றெடுக்க வேண்டுமே தவிர, சிங்கள அரசியல்வாதிகளின் காருணியத்தில் பெற்றுக்கொள்ளலாம் என நாம் என்றுமே கருதியதில்லை. இதுவே, அன்றும் இன்றும் எமது விடுதலை இயக்கத்தின் உறுதியான இலட்சியமாக இருந்து வருகிறது.

சிங்கள அரசியல் தலைமைகளிடமிருந்து நீதி கிடைக்கப்போவதில்லை என்பதை நாம் தெளிவாகப் புரிந்து, எமது உரிமைகளை நாமாகவே போராடி வென்றெடுக்க வேண்டும் என உறுதிபூண்டிருந்தபோதும் தவிர்க்கமுடியாத வரலாற்றுச் சூழ்நிலைகள் காரணமாகச் சிங்கள அரசுடன் சமாதானப் பேச்சுக்களிற் பங்குபற்ற நாம் நிர்ப்பந்திக்கப்பட்டோம். பிரதேச வல்லரசான இந்தியாவின் தலையீடு ஒரு கால கட்டத்திலும், சர்வதேச நாடுகளின் அழுத்தம் இன்னொரு கட்டத்திலுமாகச் சமாதான முயற்சிகளில் எம்மை ஈடுபடச் செய்தன. அத்தோடு பேச்சுக்களில் நாம் பங்குபற்றியதற்கு வேறு காரணங்களும் இருக்கவே செய்தன.

தமிழீழ மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தேசிய விடுதலை இயக்கம் என்ற ரீதியில் எமது அமைப்புக்குச் சட்டரீதியான அங்கீகாரத்தைப் பெறுவதற்கும் பேச்சுவார்த்தை ஒரு சாதனமாக அமைந்தது. அதுமட்டுமன்றி, எமது தேசிய விடுதலைப் போராட்டத்தை உலகமயப்படுத்தி, சர்வதேசச் சமூகத்தின் அனுதாபத்தையும் ஆதரவையும் பெற்றுக்கொள்வதற்கும் இது அவசியமாக இருந்தது.

அடுத்ததாக நாம் ஆயுத வன்முறையிற் காதல்கொண்ட போர் வெறியர் அல்லர் என்பதையும் சமாதான மென்முறையில் நாம் பற்றுறுதி கொண்டவர்கள் என்பதையும் உலகுக்கு உணர்த்திக் காட்டவேண்டிய தேவையும் எழுந்தது. இறுதியாக, எல்லாவற்றிலும் முக்கியமாகத் தமிழீழ மக்களின் அடிப்படையான அரசியற் கோரிக்கைகளை ஏற்று ஒரு நியாயமான தீர்வுத் திட்டத்தைச் சிங்கள இனவாத ஆட்சியாளர் முன்வைக்கப் போவதில்லை என்ற உண்மையைச் சர்வதேச சமூகத்திற்கு நிரூபித்துக் காட்டுவதும் எமது நோக்கமாக இருந்தது. இப்படியான குறிக்கோள்களுடனேயே நாம் பேச்சுக்களிற் பங்குகொண்டோம்.

மூன்று தசாப்தங்களுக்கு மேலாகத் தொடரும் எமது தேச விடுதலைப் போராட்டத்தில், வௌவேறு கால கட்டங்களில், வௌவேறு வரலாற்றுச் சூழ்நிலைகளில், நாம் போருக்கு ஓய்வு கொடுத்துச் சமாதானப் பேச்சுக்களிற் பங்குபற்றினோம். எதிரியானவன் கபட நோக்கும் வஞ்சக நெஞ்சும் கொண்டவன் என்பது எமக்குத் தெரியும். அத்தோடு சமரசப் பேச்சுக்களால் பயன் எதுவும் கிட்டப் போவதில்லை என்பதும் எமக்குத் தெரியும்.

சமாதானப் பேச்சு என்பது எமது விடுதலைப் போராட்டப் பாதையில் வைக்கப்பட்ட பொறி என்பதையும் நாம் நன்கு அறிவோம். இத்தனையையும் தெரிந்தும் நாம் நேர்மையுடனும் நேரிய நோக்குடனும் சமாதானப் பாதையில் பயணித்தோம்.

ஆயினும் நாம் மிகவும் விழிப்புடனும் விவேகத்துடனும் செயற்பட்டோம். சமாதானப் பயணத்தின் போது – சமரசப் பேச்சுக்களின் போது சிக்கலான பல சவால்களையும் நெருக்குவாரங்களையும் நாம் எதிர்நோக்க நேரிட்டது. எமது விடுதலைப் போராட்டத்திற்குப் பங்கம் ஏற்படும் வகையிற் பொறிகள் வைக்கப்பட்டன.

சதிவலைகள் பின்னப்பட்டன. ஆனால் நாம் நிலைமையைப் புரிந்து சாதுரியமாகக் காய்களை நகர்த்தியதால் பொறிகளுக்குள் மாட்டிக் கொள்ளவுமில்லை சதிவலைப் பின்னல்களுக்குட் சிக்கிவிடவுமில்லை. சிங்கள ஆட்சியாளரும் அவர்களுக்கு முண்டுகொடுத்து நின்ற வல்லரசுகளும் எமது விடுதலைப் போராட்டத்திற்கும் எமது மக்களின் நலனுக்கும் விரோதமாகச் செயற்பட எத்தனித்த போதெல்லாம் எமது இயக்கம் அம்முயற்சிகளை வன்மையாக எதிர்த்து நின்றது.

இந்தியத் தலையீடு நிகழ்ந்த காலத்தில், எமது மக்களின் நலனுக்கும் எமது தேசச் சுதந்திரப் போராட்டத்திற்கும் அச்சுறுத்தல் எழுந்தபோது இந்திய வல்லரசையும் அதன் இராணுவ இயந்திரத்தையும் எதிர்த்துப் போராடவும் நாம் துணிந்தோம் என்பதை எமது மக்கள் அறிவார்கள்.

எமது விடுதலை இயக்கம், திம்புவில் தொடங்கிப் பல்வேறு கட்டங்களில், பல்வேறு சமாதான முயற்சிகளிற் பங்குபற்றியபோதும் இம்முறையே எமது போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு ஒரு நீண்ட கால இடைவெளியை – கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகால இடைவெளியைச் சமாதானத்திற்கு நாம் அர்ப்பணித்தோம். இந்த நீண்ட கால விசாலத்தில் எமது மக்களின் பிரச்சினைகளுக்குச் சமாதான வழியில் தீர்வுகாண நாம் அயராது மேற்கொண்ட முயற்சிகள் அனைத்துமே அர்த்தமற்றுப்போயின.

இம்முறை நிகழ்ந்த சமாதானப் பேச்சுக்கள் சாராம்சத்தில் வித்தியாசமானவை, முக்கியத்துவமானவை. மூன்றாம் தரப்பு உலக நாடொன்றின் அனுசரணையில், சர்வதேசச் சமூகத்தின் கண்காணிப்பில் இந்தப் பேச்சுக்கள் நிகழ்ந்தன. முதலில் ரணில் விக்கிரமசிங்காவின் அரசுடனும் பின்னர் சந்திரிகாவின் ஆட்சிபீடத்துடனும் நிகழ்ந்த பேச்சுக்களின்போது மேற்கொள்ளப்பட்ட முடிவுகள், தீர்மானங்கள், உடன்பாடுகள் எவையுமே செயல்வடிவம் பெறவில்லை. நாம் பொறுமையின் எல்லையைக் கடந்து சகிப்புத்தன்மையின் சிகரம்வரை சென்றோம். எத்தனையோ விடயங்களில் விட்டுக்கொடுத்து, சகல வாய்ப்புக்களையும் நாம் வழங்கியபோதும் சிங்களப் பேரினவாத ஆட்சிப்பீடங்கள் எமது மக்களுக்கு நீதி வழங்க மறுத்துவிட்டன.

2001ஆம் ஆண்டு, டிசம்பர் 24 ஆம் நாளன்று, நாமாகவே தன்னிச்சையாகப் போரை நிறுத்திச் சமாதானக் கதவுகளைத் திறந்துவிட்டோம். வன்னி மாநிலத்தை மீட்டெடுத்து, ஆனையிறவுப் படைத் தளத்தை துவம்சம் செய்து, படைவலுச் சமநிலையை எமக்குச் சாதகமாக நிலைநிறுத்தி, பலத்தின் அத்திவாரத்தில் நின்றவாறே சிங்களத் தேசத்திற்கு நாம் நேசக் கரம் நீட்டினோம். நோர்வே அரசு நடுநிலை வகிக்க ரணில் விக்கிரமசிங்காவின் அரசுடன் உலகத் தலைநகர்களில் நிகழ்ந்த பேச்சுக்கள் பற்றி நான் இங்கு விபரித்துக்கூறத் தேவையில்லை.

எமது மக்கள் எதிர்கொண்ட அவலமான வாழ்க்கைப் பிரச்சினைகளையும் அவசர மனிதாபிமானப் பிரச்சினைகளையுங்கூட ரணிலின் ஆட்சிபீடத்தால் தீர்த்துவைக்க முடியவில்லை. ரணிலின் அரசாங்கமானது பேச்சுக்களை இழுத்தடித்துக் காலத்தைக் கடத்தியதோடு, உலக வல்லரசு நாடுகளுடன் இரகசியக் கூட்டுச் சேர்ந்து எமது விடுதலை இயக்கத்திடமிருந்து ஆயுதங்களைக் களைந்துவிடும் ஒரு சூழ்ச்சிகரச் சதிவலையைப் பின்னுவதிலேயே முழுக் கவனத்தையும் செலுத்தியது.

இந்தச் சதித்திட்டத்தின் ஒரு முக்கிய ஏற்பாடாகவே 2003ஆம் ஆண்டு, ஜுன் மாதத்தில் டோக்கியோ மாநாடு அரங்கேறவிருந்தது. இதனை அறிந்து கொண்ட நாம் டோக்கியோ மாநாட்டைப் பகிஸ்கரித்ததுடன் பேச்சுக்களிலிருந்தும் விலகிக் கொண்டோம்.

சமாதான முயற்சியில் எதையுமே சாதிக்காது ரணிலின் ஆட்சி முடிவுக்கு வந்தது. இதனையடுத்து, சமாதானத்திற்கு விரோதமான இனவாத சக்திகளுடன் கூட்டுச்சேர்ந்து புதிய அரசை அமைத்தார் சந்திரிகா. நாம் ஏற்கெனவே முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டம்பற்றிப் பேசுவதற்கு எமது இயக்கம் இணக்கம் தெரிவித்தபோதும் சந்திரிகா அதற்கு இணங்காது காலத்தை இழுத்தடித்தார்.

இடைக்காலத் தீர்வுமின்றி, நிரந்தரத் தீர்வுமின்றி, அரசியல் வெறுமைக்குட் காலம் ஓடியது. இந்த அரசியற் சூனியத்திற்குள், இந்த நிச்சயமற்ற வெறுமைக்குள் எம்மைச் சிக்கவைத்து, எமது விடுதலைப் போராட்டத்தைத் திசை திருப்பி மழுங்கடிப்பதே சிங்கள ஆட்சியாளரின் வஞ்சக நோக்கம் என்பதை நாம் உணர்ந்து கொண்டோம். இனித் தொடர்ந்தும் சமாதான மாயைக்குள் செயலற்று இருப்பது அபத்தம் என எண்ணிய நாம் எமது தேச விடுதலைப் போராட்டத்தைக் காலதாமதமின்றி முன்னெடுக்கத் தீர்மானித்தோம். அதற்கான செய்திட்டத்தை நெறிப்படுத்திக் கொண்டிருந்த வேளையிலேயே, அதாவது சென்ற ஆண்டுக் கடைசியில், இயற்கையின் அந்தக் கோரத்தாண்டவம் நிகழ்ந்தது.

திடீரென எவருமே எதிர்பாராத் தருணத்தில் இந்தப் பேரவலம் நிகழ்ந்தது. எமது தாயகப் பூமியின் கிழக்குக் கரையோரக் கிராமங்கள், குடியிருப்புகள் மீது சுனாமிப் பேரலைகள் தாக்கி என்றுமில்லாத பேரழிவுகளை ஏற்படுத்தின. இயற்கையின் இரக்கமற்ற இந்த ஊழிக் கூத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் இருபதினாயிரம் பேர் கொன்றொழிக்கப்பட்டனர். மூன்று லட்சம் பேர்வரை வீடுகள், சொத்துக்களை இழந்து அகதிகளாக அல்லற்பட்டனர். ஏற்கெனவே யுத்தத்தினாற் சிதைந்து போயிருந்த தமிழர் தேசம்மீது இன்னொரு பேரழிவு ஏற்பட்டதால், சுமக்க முடியாத துன்பப் பளுவைச் சுமக்க எமது மக்கள் நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

உடனடியாகவே இப்பேரவலத்திற்கு முகங்கொடுக்க எமது விடுதலை இயக்கம் முடிவெடுத்தது. எமது இயக்கத்தின் படைத்துறைப் பிரிவுகளும் மற்றும் நிர்வாக, சமூக சேவைக் கட்டமைப்புகளும் களத்தில் இறங்கிப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர மனிதாபிமான, நிவாரணப் பணியில் ஈடுபட்டன.

ஆழிப்பேரலை அனர்த்தம் உலகத்தின் மனச்சாட்சியை உலுப்பிவிட்டதால், பாதிக்கப்பட்ட மக்களின் புனர்வாழ்வு, புனர்நிர்மாணத்திற்கெனப் பெரும் தொகையில் நிவாரண உதவிகளை வழங்குவதற்கு உலக நாடுகள் முன்வந்தன. அதேசமயம், எமது விடுதலை இயக்கத்துடன் கூட்டுச்சேர்ந்து, ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்கி நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்குச் சந்திரிகா அம்மையார் விருப்பம் தெரிவித்தார்.

பேரவலத்திற்கு ஆளாகி நிற்கும் தமிழ் பேசும் மக்களின் அவசர மனிதாபிமானப் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய தேவை அன்று எமக்கு எழுந்தது. இதனால் சந்திரிகா அரசாங்கத்துடன் பேசி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமும் புனர்வாழ்வும் பெற்றுக்கொடுக்க முடிவெடுத்தோம்.

நோர்வேயின் அனுசரணையுடன் இரு தரப்புச் சமாதானச் செயலகங்கள் மட்டத்திற் பேச்சுக்கள் நிகழ்ந்தன. முடிவின்றி, நீண்ட காலத்திற்கு இப்பேச்சுக்கள் இழுபட்டுச் செல்வதை நாம் விரும்பவில்லை. ஆகையால் நாம் மென்போக்கைக் கடைப்பிடித்து, சில முக்கிய விடயங்களில் நெகிழ்ந்து கொடுத்து, ஒரு நிர்வாகக் கட்டமைப்பை நிறுவுவதற்கு இணங்கினோம். இதற்கான உடன்பாடும் கைச்சாத்தாகியது.

சிறீலங்கா அரசும் விடுதலைப் புலிகளும் இணைந்து உருவாக்கிய இந்த நிவாரணக் கட்டமைப்புக்கு அனைத்துலக நாடுகளும் தமது நல்லாதரவை வழங்கின. முரண்பட்டு நின்ற இரு தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்படும் நல்லெண்ணச் சூழ்நிலை பிறந்துள்ளதாக நம்பிக்கை தெரிவித்தன. ஆயினும் இந்த நல்லெண்ணச் சூழ்நிலை உருவாகுவதையோ, தமிழருக்கு நிவாரண உதவிகள் கிடைப்பதையோ சிங்கள – பௌத்த இனவாதச் சக்திகளாற் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

சந்திரிகாவின் கூட்டணி அரசாங்கத்தில் அங்கம் வகித்த ஜே.வி.பி நிவாரணக் கட்டமைப்புக்குக் கடுமையான ஆட்சேபம் தெரிவித்து அரசிலிருந்து விலக்கிக்கொண்டது. ஜே.வி.பி, ஜாதிக ஹெல உறுமய போன்ற தீவிர இனவாதக் கட்சிகள் இந்த நிவாரண உடன்பாடு சிறீலங்கா அரசியலமைப்புக்கு விரோதமானதென உயர்நீதிமன்றத்தில் வழக்குகளையும் தாக்கல் செய்தன. சிங்கள இனவாதச் சக்திகளுக்குச் சார்பான முறையில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, சுனாமிக் கட்டமைப்பை முழுமையாக முடக்கிச் செயலிழக்கச் செய்தது.

சுனாமிக் கட்டமைப்புக்குச் சாவுமணி அடிக்கப்பட்டதுடன் தமிழ் மக்களுக்கு எஞ்சியிருந்த இறுதி நம்பிக்கையையும் சிங்களப் பௌத்தப் பேரினவாதம் சாகடித்துவிட்டது. சர்வ அதிகாரம் படைத்த ஜனாதிபதி சந்திரிகாவினாற்கூட, சிங்கள இனவாதச் சக்திகளை மீறித் தமிழ் மக்களுக்கு ஒரு நிவாரணத் திட்டத்தைத்தானும் நிறைவுசெய்ய முடியவில்லை. நிலைமை இப்படி இருக்கும்பொழுது பேரினவாதச் சகதியில் மூழ்கிக் கிடக்கும் சிங்கள அதிகார வர்க்கத்திடமிருந்து நீதியை எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.

சுனாமி நிர்வாகக் கட்டமைப்பானது எந்தவிதமான அரசியல் அதிகாரத்தையும் கொண்டிருக்கவில்லை. அத்துடன் அதற்கு உருப்படியான நிர்வாக வலுவும் இருக்கவில்லை. மிகவும் வரையறுக்கப்பட்ட செயற்பாடுகளைக் கொண்ட ஒரு தற்காலிக ஒழுங்கமைப்புக்கே தென்னிலங்கையில் இத்தகைய எதிர்ப்பு என்றால் தமிழர் தாயகத்தில் தன்னாட்சி அதிகாரமுடைய ஆட்சியமைப்பைச் சிங்கள அரசியல் தலைமைகளுடன் பேசிப் பெற்றுக்கொள்ளலாம் என்று எதிர்பார்ப்பது வெறும் பகற் கனவு. கடந்த நான்கு ஆண்டுகாலச் சமாதான முயற்சியின் பயனாக நாம் பட்டுணர்ந்துகொண்ட மெய்யுண்மை இது. இந்தச் சமாதான நாடகத்தை மிகவும் உன்னிப்பாக அவதானித்துவந்த உலக நாடுகளுக்கும் இந்த உண்மை தெளிவாகியிருக்கும் என்றே நாம் நம்புகிறோம்.

எனது அன்பான மக்களே,

சிங்கள ஆட்சியாளரின் நயவஞ்சக அரசியலுக்கு நல்லதொரு எடுத்துக் காட்டாக இன்னொரு பாரதூரமான விடயத்தையும் நான் இங்கு எடுத்துக்கூற விரும்புகிறேன். சமாதானத்தின் திரைக்குப் பின்னால், மறைமுகமாக, எமது இயக்கத்திற்கு எதிராக நிகழ்த்தப்படும் ஓர் இரகசிய யுத்தம் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். எமது விடுதலை இயக்கத்தைப் பலவீனப்படுத்தி, எமது போராட்டத்திற்குப் பங்கம் விளைவிக்கும் நோக்குடன் இந்த நாசகார நிழல் யுத்தம் ஏவிவிடப்பட்டது.

எமது இயக்கத்தின் மூத்த உறுப்பினர்கள், முக்கிய போராளிகள், ஆதரவாளர்கள் எமக்கு ஆதரவான அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், கல்விமான்கள் என்ற வகையில் பெருந்தொகையானோர் மிகவும் கோழைத்தனமாகக் கொன்றொழிக்கப்பட்டுள்ளனர். இந்த நிழல் யுத்தத்தின் உண்மையான சூத்திரதாரிகள் யார் என்பது எமக்கு நன்கு தெரியும். இராணுவப் புலனாய்வுத் துறையின் வழிநடத்தலில் இந்த வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றபோதும் இதன் பின்புலத்திற் சிங்கள இனவாத அரசியல்வாதிகளின் அரூப கரங்கள் செயற்படுவதையும் நாம் அறிவோம்.

அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில், அரச படையினரின் பாதுகாப்புக் கவசத்துடன் ஒட்டுப் படைகளான தமிழ் ஆயுதக் குழுக்களை கருவிகளாகக் கொண்டு இந்த மறைமுக யுத்தம் நடத்தப்படுகிறது. அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நிராயுதபாணிகளாக நின்று அரசியற் பணிகளில் ஈடுபட்ட எமது போராளிகள் கொலை செய்யப்படுவதையும், எமது அரசியற் செயலகங்கள் தாக்கியழிக்கப்படுவதையும் நாம் கடுமையாக ஆட்சேபித்தோம். ஆனால், சிங்கள அரசு எமது ஆட்சேபனைகளைப் பொருட்படுத்தவில்லை. இதனால் இறுதியில் எமது அரசியற் போராளிகளை எமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் மீள அழைக்க நாம் நிர்ப்பந்திக்கப்பட்டோம்.

போருக்கு ஓய்வு கொடுத்ததால் உருவாகிய சமாதானச் சூழலைச் சாதகமாகப் பயன்படுத்தி, ஒரு வித்தியாசமான மென் தீவிர யுத்தம் எம்மீது தொடுக்கப்பட்டிருக்கிறது. போர்நிறுத்த விதிகளுக்கு அமையத் தமிழ்க் கூலிப் படைகளின் ஆயுதங்களைக் களைய வேண்டியது அரசாங்கத்தின் கடப்பாடு. இந்த முக்கிய கடப்பாட்டை நிறைவுசெய்யத் தவறிய சிங்கள அரசு, இந்த ஆயுதக் குழுக்களையே கருவிகளாகப் பயன்படுத்தி எமது விடுதலை இயக்கத்திற்கு எதிராக வன்முறையை ஏவிவிட்டிருப்பது ஒரு பாரதூரமான போர்க் குற்றமாகும். ஒரு கையால் அரவணைப்பது போல நடித்து மறுகையாற் குத்தும் நம்பிக்கைத் துரோகச் செயலிது.

சமாதான முயற்சியிலும் சமரசத் தீர்விலும் சிங்கள ஆளும் வர்க்கத்திற்கு உண்மையான ஆர்வமும் அக்கறையும் இருக்கவில்லை என்பதையே இச்செயற்பாடு எடுத்துக்காட்டுகிறது. இராணுவ அணுகுமுறையை இவர்கள் இன்னும் கைவிட்டதாகத் தெரியவில்லை. சமாதானச் சூழலிலும் ஒரு புதிய வடிவிற் போரை உருமாற்றம் செய்து இராணுவப் பயங்கரவாதத்தைத் தொடர்கிறது சிங்கள அரசு. இந்த நிழல் யுத்தத்தின் நிஜ வடிவத்தையும் அதன் அசிங்கமான முகத்தையும் அந்தரங்க நோக்கத்தையும் சர்வதேச சமூகம் கண்டுகொள்ளும் என நாம் நம்புகிறோம்.

சமாதானம், போர்நிறுத்தம், பேச்சுவார்த்தை என்பன எல்லாம், தமிழ் மக்களைப் பொறுத்தவரை, அர்த்தமற்ற சொற்பதங்களாக, யதார்த்த மெய்ந்நிலைக்குப் பொருந்தாத வார்த்தைப் பிரயோகங்களாக மாறிவிட்டன. சமாதானச் சூழலில் நிகழ்த்தப்படும் மறைமுக யுத்தம், போர்நிறுத்த விதிகளுக்கு முரணாகத் தொடரும் இராணுவ ஆக்கிரமிப்பு, சமரசப் பேச்சுக்களைப் பயன்படுத்திப் பின்னப்படும் சர்வதேசச் சதிவலைப் பின்னல் – இப்படியாக அமைதி முயற்சி திரிவுபடுத்தப்பட்டுத் தவறான முறையிற் பயன்படுத்தப்படுகிறது. இதனால் எமது மக்களுக்கு எல்லாவற்றிலுமே நம்பிக்கை இழந்துவிட்டது.

நிலையான அமைதியையும் நிம்மதியான வாழ்வையும் பெற்றுத்தராத சமாதானத்தில், வாழ்விடங்களை ஆக்கிரமித்து நிற்கும் இராணுவத்தை அகற்ற முடியாத போர்நிறுத்தத்தில், தீராது தொடரும் பிரச்சினைகளுக்கு தீர்வு தேடித்தராத பேச்சுக்களில், எமது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்.

நிலையற்ற வாழ்வையும், நிச்சயமற்ற எதிர்காலத்தையும் இனியும் எமது மக்கள் பொறுத்துக்கொள்ளத் தயாராகவில்லை. பொறுத்துப் பொறுத்து பொறுமையிழந்த தமிழ் மக்களின் பொங்குணர்வாகவே அவர்களது அரசியல் அபிலாசைகளின் ஆவேச வெளிப்பாடாகவே தமிழீழத் தாயகமெங்கும் வெகுசனப் போராட்டங்கள் வெடித்து வருகின்றன. சமீப காலமாக, தமிழ் மாவட்டங்கள் தோறும் மாறி, மாறி அரங்கேறிவரும் தமிழ்த் தேசிய எழுச்சி நிகழ்வுகளிற் சமுத்திரமாக மக்கள் திரண்டெழுந்து உரிமை முழக்கம் செய்து வருகிறார்கள்.

சுயநிர்ணய உரிமைகோரி, தம்மைத் தாமே ஆட்சிபுரியும் அரசியற் சுதந்திரங்கோரி, தமிழீழ மக்கள் எழுப்பும் உரிமைக் குரலானது உலக மனச்சாட்சியின் கதவுகளைத் தட்டத் தொடங்கியுள்ளது. ஒரே இலட்சியத்தில் ஒன்றுபட்ட தேசமாக அணிதிரண்டு நிற்கும் தமிழினத்தின் உரிமைக் குரலைச் சர்வதேசச் சமூகம் இனியும் அசட்டை செய்யமுடியாது. தமது அரசியல் தகைமையைத் தாமாகவே நிர்ணயித்துக்கொள்ள எமது மக்கள் விரும்புகிறார்கள். காலங்காலமாக அரச ஒடுக்குமுறைக்கு ஆளாகிய ஒரு தேசிய மக்கள் சமுதாயம் என்ற ரீதியில், தமது அரசியல் அபிலாசைகளைச் சர்வதேசச் சமூகம் அங்கீகரிக்க வேண்டும் என்பதே எமது மக்களின் அறைகூவலாகும்.

எமது சுயநிர்ணயப் போராட்டப் பயணத்தில் நாம் இன்று ஒரு தீர்க்கமான வரலாற்றுத் திருப்புமுனையை அடைந்துள்ளோம். தென்னிலங்கை அரசியல் அதிகார வர்க்கம் தமிழரின் சுயநிர்ணய உரிமையை என்றுமே அங்கீகரிக்கப் போவதில்லை. சிங்களப் பௌத்தப் பெரும்பான்மை மக்களின் நலன்களைப் பேணிப் பாதுகாக்கும் அரசமைப்புச் சட்டத்திலும், அந்தச் சட்டத்தின் அத்திவாரத்தில் கட்டப்பட்டிருக்கும் ஆட்சியமைப்பிலும் தமிழினத்தின் சுயநிர்ணயத்திற்கு என்றுமே இடமிருக்கப் போவதில்லை. நாமாகவே போராடி, எமது சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை என்பதை எமது மக்கள் இன்று உணர்ந்து விட்டார்கள். சுயநிர்ணயம் என்பதே சுயமாக, சுதந்திரமாக, மற்றவர்களின் தலையீடின்றி, எமது அரசியல் வாழ்வை நாமாகத் தீர்மானிப்பதுதான். அந்தக் காலமும் சூழலும் இப்போது கனிந்துவிட்டது.

தமிழரின் தேசியத் தனித்துவத்தை அங்கீகரித்து, அவர்களுக்கு ஆட்சியதிகாரத்தைப் பகிர்ந்தளித்து, அவர்களை அரவணைத்து வாழச் சிங்களத் தேசம் மறுத்து வருகிறது. இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு, கடந்த 57 ஆண்டுகளாக இந்த அரசியற் புறக்கணிப்புத் தொடர்கிறது. வேண்டப்படாத இனத்தவராக, ஒதுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, புறந்தள்ளி வைக்கப்பட்ட மக்களாக வாழ்ந்து சலித்துப்போன தமிழர், சிங்கள ஆட்சியமைப்பையும் அதன் அதிகாரபீடத்தையும் ஒதுக்கிப் புறக்கணிக்கத் தீர்மானித்து விட்டனர். சிறீலங்காவின் அரச அதிபர் தேர்தலில், பெரும்பான்மையான தமிழ் மக்கள் வாக்களிக்காதமை இந்தப் புறக்கணிப்பின் காத்திரமான வெளிப்பாடாகும்.

சிங்களத்தின் அரச அதிபரைத் தீர்மானிக்கும் வாக்குப் பலம் இருந்தபோதும் அந்த வாய்ப்பினைப் பயன்படுத்த எமது மக்கள் விரும்பவில்லை. வேட்பாளர்கள் மீதான தனிப்பட்ட விருப்பு வெறுப்பாகவோ அவர்களது கட்சிகள், கொள்கைகள் மீதான தீர்ப்பாகவோ இதனைக் கருதுவது தவறு. ஒட்டுமொத்தமாகச் சிங்கள ஆட்சியமைப்பில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆழமான விரக்தியினதும் நம்பிக்கையீனத்தினதும் வெளிப்பாடாகவே இத்தேர்தற் புறக்கணிப்பு நிகழ்ந்துள்ளது. தமிழரின் அரசியற் போராட்ட வரலாற்றில் இதுவொரு பாரதூரமான திருப்பத்தை சுட்டிக்காட்டுகிறது. சிங்கள அரசியல் ஆட்சிமுறையில் நம்பிக்கையிழந்த தமிழீழ மக்கள், தனிவழி சென்று தமது அரசியல் தலைவிதியைத் தாமே நிர்ணயிக்கத் துணிந்துவிட்டனர் என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது.

சிங்களத் தேசமானது ஒரு புதிய தேசத் தலைவனைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. அந்தத் தலைவனின் கீழ் ஒரு புதிய ஆட்சிபீடம் பதவி ஏறியுள்ளது. இந்த ஆட்சியமைப்பானது பிரத்தியேகமாகச் சிங்களப் பெரும்பான்மை மக்களால், அவர்களது வாக்குப் பலத்தால் நிறுவப்பட்டிருக்கிறது. இந்த ஆட்சியமைப்பிற் சிறுபான்மைத் தேசிய இனத்தவரின் பங்களிப்பு இருக்கவில்லை.

இது முற்று முழுதாகவே ஒரு சிங்களப் பௌத்த ஆட்சிபீடமாகும். இதனால் மகிந்த ராஜபக்சா இலங்கை வாழ் மக்கள் சமூகங்கள் அனைத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. அவர் சிங்கள – பௌத்த மக்களின் நலனைப் பேணும் அரச அதிபராகவே ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கிறார். அரச அதிபர் மகிந்தாவின் சிந்தனைகளையும் கொள்கைகளையும் நாம் நன்கறிவோம். தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக அவரது அரசியல் தரிசனத்திற்கும் தமிழரின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்திற்கும் மத்தியிலான இசைவற்ற இடைவெளிகளையும் இணங்காத முரண்பாடுகளையும் நாம் அறிவோம். இவைபற்றி நான் இங்கு ஒப்பீட்டு மதிப்பாய்வு செய்ய விரும்பவில்லை.

சமீபத்திய அரச அதிபர் தேர்தலும் அதனை எமது மக்கள் புறக்கணித்ததால் ஏற்பட்ட ஆட்சிமாற்றமும் தமிழ், சிங்கள தேசங்கள் மத்தியில், அரசியல் ரீதியாக, ஆழமான ஒரு பிளவை ஏற்படுத்தியுள்ளன. தென்னிலங்கையில், சிங்கள – பௌத்தம் மேலாண்மை பெற்றுள்ள அதே சமயம், தமிழர் தாயகத்தில் தமிழ்த் தேசியம் நிலைப்பட்டு, பலப்பட்டு, எழுச்சிபெற்று வருகிறது. சிங்களத்தில் மகிந்த ராஜபக்சாவின் புதிய அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது. தமிழீழத்திலும் தமிழ்த் தேசிய எழுச்சியின் திண்ணிய வடிவமாக எமது விடுதலை இயக்கத்தின் ஆட்சியமைப்பு விரிவடைந்து, வலுவடைந்து இயங்கி வருகிறது.

சிங்கள இராணுவ ஆதிக்கத்திலிருந்து எமது தாயக நிலத்தின் பெரும் பகுதியை நாம் மீட்டெடுத்து, அங்கு தன்னாட்சி அதிகாரமுள்ள ஆட்சியமைப்பை நிறுவி, அதனை நேர்த்தியாக நிர்வகித்து வருகிறோம் என்பது இன்று உலகறிந்த உண்மை. பெருந்தொகை மக்கள் வாழும் நிர்வாகக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களையும் அதனைக் கட்டிக்காக்க பலம்பொருந்திய படைத் துறையையும் சட்டம் ஒழுங்கைப் பேணக் காவல்துறையையும் நீதித்துறையையும் அத்தோடு ஒரு நிழல் அரசாங்கத்திற்குரிய அடித்தளக் கட்டுமாணங்களையும் கொண்டதாக பிரமாண்டமான நிர்வாக அமைப்பை நாம் இயக்கி வருகிறோம்.

பெரும் தொகையான எமது மக்கள் இன்னும் சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வாழ்ந்த போதும், உணர்வாலும் இலட்சியத்தாலும் அவர்கள் எமது விடுதலை இலட்சியத்திற்குப் பின்னால் அணிதிரண்டு நிற்கிறார்கள். இந்தக் கள யதார்த்தத்தை, அரசியல் மெய்ம்மையைச் சிங்கள ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பதுடன், எமது விடுதலை இயக்கத்தை ஒரு ‘பயங்கரவாதக் குழு’என உலகத்திற்குச் சிறுமைப்படுத்திச் சித்திரித்துக்காட்ட முனைந்து வருகிறார்கள். இந்தப் பொய்யான பரப்புரைகளை நம்பி, உலக நாடுகள் சில எமது இயக்கத்தைப் பயங்கரவாதப் பட்டியலில் தொடர்ந்தும் வைத்திருப்பது எமக்கு வேதனையையும் ஏமாற்றத்தையும் தருகிறது.

சமாதான முயற்சியின் பாதுகாவலர் என உரிமை கோரி, இலங்கையின் இனப்பிரச்சினையில் ஆர்வமும் அக்கறையும் காட்டிய உலக வல்லாதிக்க நாடுகள், ஒரு தரப்பினரான எமது விடுதலை இயக்கத்தைப் பயங்கரவாதிகள் என ஓரங்கட்டி ஒதுக்கிவிட்டு, மறுதரப்பினரான சிறீலங்கா அரசின் நலன்களுக்குச் சார்பாக நிலைப்பாடு எடுத்தன. இது பேச்சுக்களிற் பங்கு கொண்டோரது சமநிலை உறவை வெகுவாகப் பாதித்தது.

அத்தோடு எமது அரசியல் தகைமையை நாமே தீர்மானிக்கும் சுதந்திரத்தையும் பாதித்தது. இந்நாடுகளின் ஒருதலைப்பட்சமான நிலைப்பாடும் குறுக்கீடும் சமாதானப் பேச்சுக்கள் முறிந்துபோவதற்கும் ஒரு காரணமாக அமைந்தன. பயங்கரவாதம் என்ற சொற்பதத்திற்கு ஒரு தெளிவான, தீர்க்கமான வரைவிலக்கணம் இல்லாததால் தர்மத்தின் வழிதழுவி நிகழும் நியாயமான அரசியற் போராட்டங்களும் பயங்கரவாதமாகத் திரிவுபடுத்தப்படுகின்றன.

இந்தவகையில் இனவாத ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து போராடும் சுதந்திர இயக்கங்களுக்கும் பயங்கரவாதச் சேறு பூசப்படுகிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான இன்றைய சர்வதேச எதிர்ப்பியக்கத்தில் அடக்குமுறை அரசுகளின் இராணுவப் பயங்கரவாதம் மூடிமறைக்கப்படுகிறது. ஆயினும் அந்த அரச பயங்கரவாதத்தை எதிர்த்து நிற்பவர்கள் மீதே பயங்கரவாத முத்திரை குத்தப்படுகிறது. இந்தத் துர்ப்பாக்கிய நிலைதான் எமது விடுதலை இயக்கத்திற்கும் ஏற்பட்டிருக்கிறது.

நோர்வே நாட்டின் அனுசரணையுடனும் சர்வதேச சமூகத்தின் ஆதரவுடனும் கடந்த நான்கு ஆண்டுக் காலம்வரை இழுபட்ட சமாதான முயற்சியின்போது சிங்கள அரச தரப்பினால் ஏற்பட்ட சிக்கல்கள், போடப்பட்ட முட்டுக்கட்டைகள், இழைக்கப்பட்ட நம்பிக்கைத் துரோகங்கள் எல்லாவற்றையுமே உலகம் நன்கறியும். எத்தனையோ இம்சைகள், ஆத்திரமூட்டல்கள் மத்தியிலும் நாம் பொறுமையை இழந்து, சமாதானக் கதவுகளை மூடிவிடவில்லை என்பதையும் சர்வதேசச் சமூகம் அறியும். நான்கு ஆண்டுக்கால அமைதிப் பயணத்திற் சமாதானத்தின் மீதான எமது பற்றுறுதியை நாம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துக் காட்டிவிட்டோம்.

எனது அன்பான மக்களே,

எமது போராட்ட இலட்சியத்தை அடையும் அணுகுமுறை குறித்து ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கவேண்டிய காலத்தை நாம் நெருங்கிவிட்டோம். இந்த வரலாற்றுத் திருப்புமுனையான கட்டத்தில், எமக்கு ஒரு புதிய சவாலாக, சிங்களத் தேசத்தில் ஒரு புதிய அரச அதிபரின் தலைமையில், ஒரு புதிய அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுள்ளது. இந்தப் புதிய அரசு எமக்கு நேசக் கரம் நீட்டுகிறது. எமது விடுதலை இயக்கத்துடன் பேசுவதற்கு விருப்பம் தெரிவிக்கிறது.

போர் நிறுத்தத்தைக் கடைப்பிடித்து அமைதி பேணப் போவதாகச் சொல்கிறது. தமிழ் மக்களின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதில் ஒரு புதிய அணுகுமுறையைக் கடைப்பிடிக்கப் போவதாக அறிவித்து வருகிறது. ஜனாதிபதி மகிந்தாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்ட சிந்தனைகளை ஆழமாக அலசிப் பார்க்கும் பொழுது தமிழ்த் தேசிய இனப் பிரச்சினையின் அடிப்படைகளையோ அதன் மூலக் கோட்பாடுகளையோ அவர் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை.

கொள்கை ரீதியாக எமக்கும் அவருக்கும் மத்தியிலான இடைவெளி மிகப்பெரிது. எனினும் அவர் நடைமுறை அரசியலில் நம்பிக்கை கொண்ட யதார்த்தவாதி என்று கருதப்படுவதால், சமாதான வழிமுறையை எவ்விதம் கையாளப் போகிறார் என்பதையும், தமிழ் மக்களுக்கு எவ்விதம் நீதி வழங்கப் போகின்றார் என்பதையும் முதலில் நாம் அறிந்து கொள்வது அவசியம். ஆகவே, ஜனாதிபதி ராஜபக்சாவின் நகர்வுகளை, அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளைச் சிறிது காலம் நாம் பொறுத்திருந்து பார்ப்பதென முடிவு செய்துள்ளோம்.

பொறுமையிழந்து, நம்பிக்கையிழந்து, விரக்தியின் விளிம்பை அடைந்துள்ள எமது மக்கள் இனியும் பொறுத்துப் பொறுத்துக் காத்திருக்கத் தயாராக இல்லை. ஆகவே, வரையறுக்கப்பட்ட ஒரு குறுகிய கால இடைவெளிக்குள், எமது மக்களின் அரசியல் அபிலாசைகளைத் திருப்தி செய்யும் வகையில், ஒரு நியாயமான தீர்வுத் திட்டத்தைப் புதிய அரசாங்கம் முன்வைக்க வேண்டும்.

இது எமது இறுதியான, உறுதியான, அவசர வேண்டுகோளாகும். எமது இந்த அவசர வேண்டுகோளை நிராகரித்து, கடும்போக்கைக் கடைப்பிடித்து, காலத்தை இழுத்தடிக்கப் புதிய அரசாங்கம் முற்படுமானால் நாம் எமது மக்களுடன் ஒன்றிணைந்து எமது சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை, எமது தாயகத்தில் தன்னாட்சியை நிறுவும் தேசச் சுதந்திரப் போராட்டத்தை அடுத்த ஆண்டில் தீவிரப்படுத்துவோம்.

எமது மாவீரர்களின் வீரம் செறிந்த போராட்ட வாழ்வையும், எமது மண்ணின் விடுதலைக்காக அவர்கள் புரிந்த மகத்தான தியாகங்களையும் நினைவுகூரும் இப்புனித நாளில், எத்தகைய இடர்களையும் எத்தகைய துன்பங்களையும் எத்தகைய சவால்களையும் எதிர்கொண்டு எமது தாயகத்தின் சுதந்திரத்தை வென்றெடுப்போமென உறுதிபூணுவோமாக.

சமாதான முயற்சியின் பாதுகாவலர் என உரிமை கோரி, இலங்கையின் இனப்பிரச்சினையில் ஆர்வமும் அக்கறையும் காட்டிய உலக வல்லாதிக்க நாடுகள், ஒரு தரப்பினரான எமது விடுதலை இயக்கத்தைப் ஷபயங்கரவாதிகள் என ஓரங்கட்டி ஒதுக்கிவிட்டு, மறுதரப்பினரான சிறீலங்கா அரசின் நலன்களுக்குச் சார்பாக நிலைப்பாடு எடுத்தன. இது பேச்சுக்களிற் பங்கு கொண்டோரது சமநிலை உறவை வெகுவாகப் பாதித்தது.

‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்கள் எழுதிய கவிதை

tamilmakkalkuralblogannanprabha.jpg?w=300

நாம் அணிவகுத்துள்ளோம்…

நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்!

நாம் அணிவகுத்துள்ளோம்

இழந்த எமது நாட்டை மீட்க

எதிரி நமது நாட்டை

வஞ்சகமாக அபகரித்துவிட்டான்!

அதைக் கண்டு நாம் அஞ்சவில்லை!

புயலெனச் சீறி

இழந்த நாட்டை மீட்க

நாம் அணிவகுத்துள்ளோம்

நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்!

எமது படையணி கடக்க வேண்டியது

நெருப்பாறென்பது எமக்குத் தெரியும்

ஆனால்…

அதைத் தாங்கக் கூடிய

மக்கள் ஆதரவென்னும்

கவசம் எம்மிடம் உண்டு!

எதிரியின் ஆயுதமோ பலம் பொருந்தியது!

எமதுஆத்ம பலமோ அதைவிட

வலிமை வாய்ந்தது!

எதிரியின் குண்டுகள் வெடிக்கும்…ஆனால்

எமது விடுதலை நெஞ்சங்கள்

எரிமலையென வெடிக்கும் சத்தத்தில்

அதன் சத்தம் அமுங்கிவிடும்!

நாம் அணிவகுத்துள்ளோம்…

நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்!

எமது அணிவகுப்பு

எமது தமிழ்ஈழ மக்களிடையே

அணிவகுத்துச் செல்கிறது!

நாம் செல்லும் இடமெல்லாம்…

எமது எதிரிகள் அஞ்சி ஓடுகிறார்கள்!

மக்களிடத்தில் உள்ள

பிரதேசம் சாதி

மதமென்னும் பேய்களும்

அலறி ஓடுகின்றன…

எமது படையணி விரைகிறது…

எம தேசத்தை மீட்க!

நாம் செல்லும் இடமெல்லாம்…

காடுகள் கழனிகள் ஆகின்றன!

வெட்டிப் பேச்சு வீரர்கள்

மிரண்டோடுகின்றனர்…!

உழைப்போர் முகங்களில்

உவகை தெரிகிறது

ஏழைகள் முகங்களில்

புன்னகை உதயமாகிறது.

ஆக்கியவர் :திரு. வே.பிரபாகரன்

பதிவு :கரும்புலிகள் உயிராயுதம்

(1981-ஆம் ஆண்டில் தமிழீழ தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்கள் எழுதிய கவிதை)

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பயம் என்பது பலவீனத்தின் வெளிப்பாடு. கோழைத்தனத்தின் தோழன். உறுதியின் எதிரி. மனித பயங்களுக்கெல்லாம் மூலமானது மரண பயம். இந்த மரணபயத்தைக் கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகிறான்-- தலைவர் மேதகு பிரபாகரன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Prabhakaran.jpg

"இந்த உலகில் அநீதியும் அடிமைதனமும் இருக்கும் வரை சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை விடுதலைப் போரட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி." - வே.பிரபாகரன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் 1980ம் ஆண்டு உண்ணா விரதத்தின் போது

"நாம் இனத்துவேஷிகள் அல்லர். போர் வெறிகொண்ட வன்முறையாளர்களும் அல்லர். நாம் சிங்கள மக்களை எதிரிகளாகவோ விரோதிகளாகவோ கருத வில்லை. சிங்கள பண்பாட்டை கெளரவிக்கின்றோம். சிங்கள மக்களின் தேசிய வாழ்வில், அவர்களது சுதந்திரத்தில் நாம் எவ்விதமும் தலையிட விரும்பவில்லை. நாம் எமது வரலாற்று தாயத்தில் ஒரு தேசிய மக்கள் இனம் என்ற அந்தஸ்துடன், நிம்மதியாக, சுதந்திரமாக, கெளரவத்துடன் வாழ விரும்புகிறோம்."

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

‘எமது இயக்கமும், எமது விடுதலைப் போராட்டமும் அனைத்துலக ரீதியாக அடைந்து வரும் பெயரையும், புகழையும் சகிக்க முடியாத சிங்களப் பேரினவாதம் எமக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் ஒரு விசமத்தனமான பரப்புரைப் போரை நடாத்தி வருகின்றது.

பொய்களையே ஆயுதமாகக் கொண்டு நடாத்தப்படுகின்ற சிங்களத்தின் விசமத்தனமான கருத்துப்போரை முறியடிப்பதே இன்று நாம் எதிர் கொள்கின்ற முக்கியமான சவாலாகும். எமது இயக்கத்தின் வெகுசன ஊடகங்களே இந்தப் பெரும்பணியைச் செய்ய வேண்டும்.’

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.