Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விழாமல் இருப்பதற்காக வர்த்தகக் கடனை எதிர்பார்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

Featured Replies

விழாமல் இருப்பதற்காக வர்த்தகக் கடனை எதிர்பார்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

பெரும் பணத்தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வெளிவாரி மூலகங்களிலிருந்து 175 மில்லியன் அமெரிக்க டொலரை வர்த்தகக் கடனாகப் பெறவுள்ளதாக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் 2.6 பில்லியன் ரூபா நட்டமடைந்த இந்த விமானப் போக்குவரத்து நிறுவனத்திற்காக சிவில் விமான போக்குவரத்து அமைச்சு மூன்று வருட காலத்தில் வரவு, செலவுத்திட்டங்களூடாக 500 மில்லியன் அமெரிக்க டொலரை ஒதுக்குமாறு அரசாங்கத்தை கேட்டிருந்தது.

இதேவேளை ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து 7 பில்லியன் ரூபா நட்டத்தையடைந்துள்ள மிஹின் லங்கா விமான நிறுவனத்துக்கு வருடத்திற்கு 20 மில்லியன் டொலர் வீதம் மூன்று வருடங்களுக்கு நிதி வழங்குமாறு இந்த அமைச்சு கோரியது.

இவ்வளவு பெருந்தொகையான பணத்தை ஒதுக்கமுடியாத நிலையில் அரசாங்கம் உள்ளதால் வர்த்தகக் கடன் மூலம் 175 மில்லியன் டொலரை திரட்ட வேண்டியுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் பிரதான நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன டெய்லிமிரருக்கு கூறினார்.

இப்போது எம்மிடம் 20 விமானங்களே உள்ளன. இதனை 30ஆக அதிகரிப்பதற்கான திட்டங்களை நாம் வகுத்துள்ளோம் என அவர் கூறினார். 21 அமைச்சுகளுக்கான நிதியொதுக்கீடு பற்றி ஆராய நியமிக்கப்பட்ட தெரிவுக்குழுவின் அங்கத்தவரான ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, இந்த கடன் நாட்டின் கடன் சுமையை மேலும் அதிகரிக்குமென கூறினார்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/31617-2011-11-28-07-52-45.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஹஹஹா.... பிச்சைக்கார சிறி லண்கன்ஸ். பெருமையா வெளிநாடுகளில் ஸ்ரீ லங்கா கொடியுடன் திரியும் குப்பத்தானுகளை பார்த்தால் சிரிப்பா வரும்.

  • தொடங்கியவர்

புறக்கணியுங்கள் சிங்கள விமான சேவையை!

உல்லாச பிரயாணத்துறை பல இலட்சம் பேரை வேலையில் வைத்துள்ளது. எனவே, சிங்களம் நட்டத்தில் ஓடும் விமானத்துறைக்கு பணத்தை தனது உதவும்.

நாமோ, அந்த நட்டத்தை மேலும் பெரிதாக்க உதவவேண்டும், புறக்கணியுங்கள் சிங்கள விமான சேவையை. வேற்று நாட்டு சேவைகளை பயன்படுத்துங்கள்.

  • தொடங்கியவர்

அமெரிக்காவின் விமான நிறுவனங்களில் ஒன்றான 'அமெரிக்கன் எயர்லைன்ஸ்' தனது கடன்காரர்களைடம் இருந்து தன்னை பாதுகாக்க நீதிமன்றத்தில் உரிமை கோரியது. அதாவது, கடன்காரர்களுக்கு அவர்களின் பணத்தை செலுத்தாமல், அவர்களுடன் பேசவும் அதேவேளை தனது சேவையை தொடரவும் இந்த கோரிக்கை உதவும்.

இந்த நிறுவனத்தில் பங்குகளை வைத்திருந்தவர்கள் அதன் பெறுமதியை முழுமையாக இழக்கும் வாய்ப்புள்ளது.

American Airlines Parent AMR Files for Chapter 11 Protection

The parent of American Airlines filed for bankruptcy protection Tuesday and pledged to emerge as a stronger carrier in a move that could prompt another bout of industry consolidation and present a stern test for regulators. http://online.wsj.co...=googlenews_wsj

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.