Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கத்தின் குகைக்குள் சீறிப் பாய்ந்த தமிழர்.

Featured Replies

தீபாவளித் திருநாள் நரகாசுரனை ஆரியன் அழித்த நாளை உலகத் தமிழர் எல்லாருமே போற்றி கொண்டாடும் ஒரு பெருநாள். தமிழர் போராட்டத்தை அழித்ததாக சிங்களம் கொக்கரித்து நிற்கும் வேளை இந்த வருடத்து தமிழர் தீபத்திருநாளை சிங்கத்தின் குகைக்குள்ளேயே புகுந்து கொண்டாடி விடுவதென புலம் பெயர் நாடுகளில் சில தன்மானத் தமிழர்கள் முடிவெடுத்திருந்தனர்.

அதன்படி யெர்மனியிலும் இங்கிலாந்திலும் இந்த நிகழ்வானது பெருவெற்றியாக முடிந்திருக்கின்றது. இங்கிலாந்தில் இலங்கைத் தூதரகத்தில் நடந்த விழாவிற்கு தீரத் தமிழர்கள் என்னதான் செய்கிறார்கள் பார்க்கலாமென நானும் புகுந்திருந்தேன்.

வாசலில் வரவேற்றது கோலம். அது மாக் கோலமா பூக்கோலமா என அடையாளமே தெரியாதளவிற்கு மிகப்பெரும் அலங்கோலம் ஒன்றினை ஒரு அழகி வரைந்து கொண்டிருந்தார்.

20111129_LN1.jpg

அருகில் சென்று அவர் பெயரை கேக்கலாமென நினைத்த பொழுது அவசரமாய் உள்ளே போய்விட்டார். ஆளைப் பார்த்தால் நமீதா மாதிரியே இருந்தார் எனவே அவரிற்கு சிலோன் நமீதா என்றே பெயரை வைத்துவிட்டு. உள்ளே போனால் என்ன ஆச்சரியம். மகளிரில் மாணிக்கம். மாபெரும் பெண்ணியம். தீபம் தொலைக்காட்சி தீ(ய்ந்த)ந் தமிழ் செல்வி. குலக் குத்துவிளக்கு ஒரு குத்து விளக்கிற்கு அருகில் நின்றிருந்தார். இரண்டில் எது உண்மையான குத்துவிளக்கென்று ஒருகணம் நான் தடுமாறி நான் கொழுத்தி வைத்திருந்த குத்துவிளக்கிடம் வணக்கம் சொன்னதும். லக்கலக்க லக்க வென சிரித்தவர் என்ன தம்பி குத்து விளக்கோடை கதைக்கறீங்கள் எண்டார்.

20111129_LN3.jpg

ஒரு மாதிரி சுதாகரித்த நான் உங்களிற்கும் அதற்கும் வித்தியசமே தெரியெல்லை அதுதான் தடுமாறிவிட்டேன். எதற்கும் கொஞ்சம் தள்ளி நில்லுங்கள் யாராவது என்னைப் போல உங்களையும் குத்துவிளக்கென நினைத்து எண்ணெயை ஊற்றி வாயில் திரியை வைத்து கொழுத்தி விடப் போகிறார்கள் என்றுவிட்டு அங்கிருந்து எஸ்கேப்.

கொஞ்ச நேரத்தில் ஒரு மைக்கை பிடித்த ஒரு குருக்கள் பிரித்தாளும் சூழ்ச்சியை இதே இங்கிலாந்திடமிருந்து கற்று எம்மையும் பிரித்தாண்டு பிரித் ஓதிய சிங்கத்தின் குகைக்குள்ளேயே வந்து மந்திரம் ஓதியுள்ளேன் இது எமக்கு கிடைத்த பெரு வெற்றி என்று முழங்கிக் கொண்டிருக்க... அங்கு நின்ற கூட்டத்தை நோட்டம் விட்டேன்.

அட நம்ம அத்தியடி டக்கியின்ரை மச்சானிற்கு பக்கத்தில் மலர் மாக்கற் குணாளன். இலங்கை பொருட்களை புறக்கணிப்போம் என்று சொல்லி புலிகளின் அனைத்துலகத்தால் கடை வைத்து வைத்து கொடுத்ததில் இருந்து சிறீலங்கா பொருட்களை புறக்கணிக்கும் போர்வாள்.

20111129_LN10.jpg

கடைதான் பக்கத்தில் என்றால் போர்வாளுக்கு பக்கதில் உறைவாள்போல் சரஸ்வதி பவான் தயாளன். வெளியே மட்டும்தான் சிறீலங்கா பொருட்களை புறக்கணிப்பது அதை இலங்கை தூதரகத்தினினுள்ளேயே செய்வோம் என்று சொல்லி சிறீலங்கா குடிபானங்களை குடித்தே அழித்தபடி சிறீலங்கா அரசிற்கு பெரும் நட்டம் ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

வாழ்கையே ஒரு நாடகம் நாமெல்லாம் அதில் நடிகர்கள என்றபடி நாடகம் போட்டுக் கொண்டிருந்தார் தமிழ் அவைக்காற்று கலைகழகத்தின் வாசுதேவன்.

இப்படி பல மானமுள்ள தமிழர்களினால் சிறீலங்கா கோட்டைக்குள்ளேயே நடாத்தப்பட்ட தீபாவளி திருநாளை பார்த்து

தேடி சோறு நிதம் தின்று

பலசின்னஞ் சிறு கதைகள் பேசி

மனம்வாடி துன்பம் மிக உழன்று

பிறர்வாட பல செயல்கள் செய்து

நரைகூடி கிழப் பருவம் எய்தி -

கொடும்கூற்றுக்கு இரையென மாயும்

பலவேடிக்கை மனிதரை போலே

நான்வீழ்வேனென்று நினைத்தாயோ?

என்கிற பெருமையோடு அங்கிருந்து வெறியேறினேன்.

இப்படிக்கு தன்மானம்கெட்ட தமிழன்.

நன்றி ஒரு பேப்பர்

Edited by Saniyan

... வெறுப்பை ஒருபோதும் வெறுப்பினால் சாந்தப்படுத்த முடியாது. பகையை பகையினால் வெல்வது சாத்தியமில்லை என்பதெல்லாம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மனிதகுலம் அறிந்து கொண்டுவிட்டதுதான் என்றாலும், இன்னமும் வன்முறையை நியாயப்படுத்தக் கிடைக்கும் ஊகங்களையும் உணர்ச்சி வேகங்களையும் கொட்டி அழிவதிலேயே முனைப்பாயிருக்கிறோம் நாம்.

...

நம்மிடம் சரிகள் இருப்பது போலவே எதிர்த்தரப்பும் தன் சரிகளை வைத்துக் கொண்டுதானிருக்கும் என்ற எளிய உண்மையை மறந்துவிடுகிறோம். பிரச்சினை என்னவென்றால், இந்த சரிகளைப் பேசிக் கொண்டிருப்பதால் ஒருபோதும் சமாதானம் உருவாகி விடுவதில்லை. தங்கள் தங்கள் தவறுகள், குற்றங்கள் குறித்த உணர்வும் பரஸ்பர மன்னிப்புப் பரிமாறலுமே நம்மை சமாதானம் நோக்கிச் செலுத்துவதாக இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ளத் தவறுகிறோம்.

எதிர்த்தரப்பை இணங்க வைத்து வெல்வதற்குப் பதிலாகக் கோபப்படுத்துவதில் தற்திருப்தி அடைந்து கொள்கிறோம். குரலற்ற மக்கள் மீது துன்பங்களைச் சுமத்தியவாறே ‘ரோச அரசியலை’ தொடர்கிறோம். எதிரிக்கு வில்லங்கம் கொடுக்க முடியுமாக இருந்தால் நாம் மூக்கின்றி இருப்பது பற்றி என்ன கவலை?

Edited by மொட்டை மனிதன்

எமது தாயக மக்கள் பக்கம் உள்ள நியாயத்தை, அவர்களுக்கு மறுக்கப்படும் அடிப்படை அரசியல் மற்றும் மனித உரிமைகளை தொடர்ந்தும் அவர்களும் அவர்களுக்கு உதவியாக புலம்பெயர் மக்களும் சர்வதேசத்திடம் தொடர்ச்சியாக கூறுவோம், உரிமைகளை வெல்லும் வரை.

எமது நியாயமான போராட்டத்தை பயங்கரவாதம் என்று நிறுவி நம்மை அழித்த சர்வதேசத்தை இன்னமும் நம்புகிறீர்களா? இந்தியா முதல் இங்கிலாந்து வரை தனது சுயலாபத்தை வைத்தே தமது நிலைப்பாட்டை எடுக்கின்றன. இன்று இலங்கையை போர் குற்றங்களிலிருந்து கழுவி சுத்தப்படுத்தவே எல்.எல்.ஆர்.சி ரிப்போட்டை சாட்டி நிற்கிறார்கள். பேருக்கு சிலர் தண்டிக்கப்பட்டு இலங்கையுடன் சர்வதேசம் மீண்டும் உறவு கொள்ள நாம் குரங்கிடம் அப்பத்தை கொடுத்த பூனைகளாக நிற்போம்.

எமது அன்றைய இராணுவ பலத்தை அரசியராக்காது போனது போல இன்றைய இந்த மனித உரிமை குற்றங்களை நாம் முறையாக அரசியலாக்கி பேரம் பேசுவதே நமது பலம். ஆனால் சர்வதேசத்தை நம்பி நாம் இதையும் கைவிடுகிறோம். இலங்கைக்கு அழுத்தம் இல்லவிடின் இந்த தீபாவளி கொண்டாட்டமும் கிடையாது கிறிஸ்மசும் கிடையாத. போயா போயா என்று போயா மட்டும் தான் கொண்டாடப்படும்!

இதோ 2010, 2011 தீபாவளி படங்கள்..... இரண்டுக்கும் உள்ள வித்தியாசங்களை உன்னிப்பாக பாக்கவும்!

131110_depa_pic_003.jpg

2010

7-20-11-2011.jpg

2011

131110_depa_pic_005.jpg

2010

images-2011-November-28-4-20-11-2011-300x202.jpg

2011

131110_depa_pic_004.jpg

2010

8-20-11-2011.jpg

2011

Edited by மொட்டை மனிதன்

நல்லது எல்லாரும் இப்படியே போங்க. எங்களிட்ட மாத்திரம் தேசியம் சொல்லி காசு சேர்க்க வந்திடாதிங்க. இனி பலிக்காது. நீங்கள் காட்டி கொடுத்தாலும் ஒன்னுதான் அழித்தாலும் ஒன்னுதான்

இந்த படங்கள் யாழிலும் மற்றைய இணையத்தளங்களிலும் திரும்ப திரும்ப வர வேண்டும்.

60 ஆண்டுகளாக தமிழரசுக்கட்சிக்கு வாக்கு போடும் தாயக மக்கள் உண்மையை தெரிந்து கொண்டால் பிழைவிட மாட்டார்கள்.

அரோகரா .... :icon_mrgreen:

இதோ 2010, 2011 தீபாவளி படங்கள்..... இரண்டுக்கும் உள்ள வித்தியாசங்களை உன்னிப்பாக பாக்கவும்!

20111129_LN10.jpg

2010இல் மொட்டையை முன்னுக்கு காணோம் ... 2011இல் மொட்டை அன்ட் கேபிக்கள் முன்னுக்கு போஸ் கொடுக்கினம்!!

குணாளன் சொல்லிச்சுதாம் ... சத்தியமாக இவங்கள் (சிங்கள எம்பசிகாரர்) இப்படி படங்களையும், வீடியோவையும் வெளிவிடுவாங்கள் என்று நாங்கள் ஒருவரும் நினைச்சுப் பார்த்து இருக்கவில்லை! ... வாயுக்குள் வைத்து விட்டாங்கள்!!!!!!!............ :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த கூட்டத்தோடை எங்கடை மகளிர்சேவீஸ் ராஜேஸ் அக்கா ஆடினால் எப்பிடியிருக்கும்?

:D

தண்ணி சாப்பாடு இல்லாமல் எம்பசிக்கு பிச்சைக்கு போனவர்களுக்கு வேறு என்ன செய்ய முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

உந்த கூட்டத்தோடை எங்கடை மகளிர்சேவீஸ் ராஜேஸ் அக்கா ஆடினால் எப்பிடியிருக்கும்?

:D

உங்களுக்கு நல்ல கற்பனைதான் :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

... வெறுப்பை ஒருபோதும் வெறுப்பினால் சாந்தப்படுத்த முடியாது. பகையை பகையினால் வெல்வது சாத்தியமில்லை என்பதெல்லாம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மனிதகுலம் அறிந்து கொண்டுவிட்டதுதான் என்றாலும், இன்னமும் வன்முறையை நியாயப்படுத்தக் கிடைக்கும் ஊகங்களையும் உணர்ச்சி வேகங்களையும் கொட்டி அழிவதிலேயே முனைப்பாயிருக்கிறோம் நாம்.

...

நம்மிடம் சரிகள் இருப்பது போலவே எதிர்த்தரப்பும் தன் சரிகளை வைத்துக் கொண்டுதானிருக்கும் என்ற எளிய உண்மையை மறந்துவிடுகிறோம். பிரச்சினை என்னவென்றால், இந்த சரிகளைப் பேசிக் கொண்டிருப்பதால் ஒருபோதும் சமாதானம் உருவாகி விடுவதில்லை. தங்கள் தங்கள் தவறுகள், குற்றங்கள் குறித்த உணர்வும் பரஸ்பர மன்னிப்புப் பரிமாறலுமே நம்மை சமாதானம் நோக்கிச் செலுத்துவதாக இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ளத் தவறுகிறோம்.

எதிர்த்தரப்பை இணங்க வைத்து வெல்வதற்குப் பதிலாகக் கோபப்படுத்துவதில் தற்திருப்தி அடைந்து கொள்கிறோம். குரலற்ற மக்கள் மீது துன்பங்களைச் சுமத்தியவாறே ‘ரோச அரசியலை’ தொடர்கிறோம். எதிரிக்கு வில்லங்கம் கொடுக்க முடியுமாக இருந்தால் நாம் மூக்கின்றி இருப்பது பற்றி என்ன கவலை?

அது சரி.... எங்களுக்கு முதிர்ச்சி இல்லை...

ஸ்ரீ லங்கா காடேரிகள் எனது தங்கையை அமுக்கி பிடித்து நசுக்கும் போது... எனது தாயை கழுத்தில் சப்பாத்து கால் வைத்து பங்கர் அமைச்சரின் சீடன் நெரிக்கும் போது.....

நான் என்ன சொல்லவேண்டும் அல்லது செய்ய வேண்டும் என்று தெளிவு படுத்துகிறீர்களா?

எதோ ஓஷோ சீடிய பாத்து குழம்பி போய் இருக்கிறியள் போல கிடக்கு!

பகையை பகையால் வெல்ல முடியாதென்றால் ஏன் எல்லா நாடுகளும் ஆர்மிய வைச்சிருக்குது? உங்கட புத்த ஸ்ரீ லங்கா நண்பர் கூட வருமானத்திலும் கூட செலவை இராணுவத்திற்கு செலவளிப்பதேன்?

டாக்டர் சொன்னாரெண்டு உப்பை துண்டர விடாதிங்கோ...... ரோசம் இல்லையென்றால் இந்த முதலாளித்துவ உலகில் நாணல் புற்கள் எல்லாம் வைக்கோலாகிவிடும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லது எல்லாரும் இப்படியே போங்க. எங்களிட்ட மாத்திரம் தேசியம் சொல்லி காசு சேர்க்க வந்திடாதிங்க. இனி பலிக்காது. நீங்கள் காட்டி கொடுத்தாலும் ஒன்னுதான் அழித்தாலும் ஒன்னுதான்

சகோதரம்.... எனக்கென்னவோ இது நல்ல செய்தியா தான் படுது.

தமிழரை விட்டு சில தரித்திரங்கள் எதிரியின் வீட்டுக்குள் புகுந்துவிட்டார்கள்.

இது எங்களுக்கு நல்லது தானே? ஆக்கள் யாரெண்டும் இப்ப தெரியும்.

இங்க பெரிய கோட்டு சூட்டோட நிக்கினம் ஆனால் இவைண்ட கடையில அலிசேசன் நாய் சைஸ்ல பெருச்சாளிகள் ஓடித்திரியுது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.