Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க சனாதிபதி தேர்தல் 2012

Featured Replies

  • தொடங்கியவர்

நேற்று நடந்த இந்த இடைத்தேர்ததல்களில் ரொம்னி ஏழு மாநில இடங்களை வென்றுள்ளார். ஆனால் முழுமையான வெற்றியை பெறவில்லை என கூறப்படுகின்றது.

ரொம்னி - வேர்ஜினியா

ரொம்னி - ஐடஹோ

ரொம்னி - மாசசூசெட்ஸ்

ரொம்னி - வேர்மொன்ட்

ரொம்னி - வயோமிங்

ரொம்னி - ஒகாயோ

ரொம்னி - அலாஸ்கா

சன்றோரம் - நோர்த் டக்கோடா

சன்றோரம் - ஒக்லகோமா

சன்றோரம் - ரெநிசி

கிங்க்றிச் - ஜோர்ஜியா

  • தொடங்கியவர்

நேற்று நடந்த இந்த இடைத்தேர்ததல்களில் ரொம்னி வயோமிங்கில் வென்றுள்ளார்.

ஆனால் சந்ரோரம் கன்சாசில்வென்றுள்ளார்.

  • தொடங்கியவர்

இரு தென் மாநிலங்களில், அலபாமா, மிசிசிப்பி, நேற்று நடந்த தேர்தல்களில் இரண்டாம் இடத்தில் உள்ள சந்ரோரம் வென்றார். இவர் தென் மாநிலத்தை சேர்ந்தவரான கிண்க்ரிச்சை வென்றதுடன் முழு அளவில் முன்னிலையில் உள்ள மிட் ரோம்னியை இந்த மாநிலங்களில் மூன்றாம் இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளார்.

http://www.theglobeandmail.com/news/world/americas/us-election/santorums-wins-in-deep-south-put-gingrich-candidacy-on-life-support/article2368593/

அலபாமாவிலும், மிசிசிப்பியிலும் தோற்றவர் உண்மையில் கிஞ்சிறிச்சே. இவை அவரின் போக்கில் போபவை. அவரின் தொகுதிக்கு அருகாமையில் இருப்பவை. ஜிஞ்சிறிச் இனி ஒதுக்குப்பட்டுவிடுவார். அலபாமாவில் 7 பிரதிநிதிகளும், மிசிசிப்பியில் 1 பிரதிநிதியும் சந்தோரம், ரோமினியை விட கூடப்பேறுகிறார். அலபாமாவில் 6ம், மிசிசிப்பியில் 2 ம் பொதுக்கூட்டத்தில் வைத்து வழங்கப்படும். பொதுக்கூட்டத்தில் பிரதிநிதிகள் வெல்பவர் பக்கம் சாருவதால் ரோமினி இந்த இருமானிலங்களிலும் படுதோல்வி அடையவில்லை. ஆனால் கவாயில் தெளிவான வெற்றியும் அமெரிக்கன் சமோவவை முழுமையாகவும் நேற்று பெற்றுவிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

சன்ரோரம் குடியரசுக் கட்சி வேட்பாளராக வரும் சாத்தியங்கள் தென் படுகின்றன. இது நிகழ்ந்தால் ஒபாமா இலகுவாக வென்று மீண்டும் ஜனாதிபதியாகும் வாய்ப்பு அதிகம். "கிறிஸ்தவத் தலிபான்" போல பேசிவரும் சன்ரோரத்திற்கு பெண்களின் வாக்கும், சிறு பான்மையினர், ஸ்பானியர்களின் வாக்குகளும் ஒரு போதும் கிடைக்காது!

  • தொடங்கியவர்

சன்ரோரம் குடியரசுக் கட்சி வேட்பாளராக வரும் சாத்தியங்கள் தென் படுகின்றன. இது நிகழ்ந்தால் ஒபாமா இலகுவாக வென்று மீண்டும் ஜனாதிபதியாகும் வாய்ப்பு அதிகம். "கிறிஸ்தவத் தலிபான்" போல பேசிவரும் சன்ரோரத்திற்கு பெண்களின் வாக்கும், சிறு பான்மையினர், ஸ்பானியர்களின் வாக்குகளும் ஒரு போதும் கிடைக்காது!

ஒபாமா மீண்டும் வருவது தமிழ் மக்களின் விடிவுக்கு கூடுதல் சாதகமா? பாதகமா?

ரோமினி வந்தாலும் பொதுத் தேர்தலில் ஒபாமா வரும் சாத்திய கூறுகள்தானிருகின்றன. 2008 ஒபாமா வரும்போது போரால் மக்கள் அலுத்துப்போயிருந்தார்கள். புஸ்சின் தோல்வியை குடியரசுக்கட்சி போரின் தோல்வியாக மறைக்க முயன்றது. ஆனால் பொருளாதாரம் அதளபாதளத்தில் விழுந்திருந்தது. கோறை போந்த மரம் மாதிரி தென்றலுக்கு இலைகளும் குழைகளும் வெளியே சிலுசிலுத்துக் காட்டிக்கொண்டிருந்தது. தேர்தலுடன் வீசிய புயலுக்கு மரம் அடியோடு சாய்ந்து விழுந்தது. 2009 ஆம் ஆண்டு (ஜூன் என்று நினைக்கிறேன்) DOW 6000 களுக்கு விழுந்தது. குடியரசுக்கட்சி அன்று தொடக்கம் அது ஒபாமாவின் கொள்கைகளால் வந்தது என்று வாதாட தொடங்கினார்கள். இந்த வாதாடத்தால் 2010 இடைத்தேர்தில் ஜயனநாயக கட்சிக்கு பாரிய தோல்வியையும் கொண்டு வந்தார்கள். ஓபாமாவின் அயல் நாட்டு கொள்கைகளைத்தாக்க பொதுத்தேர்தலைதான் எதிர் பார்த்தார்கள்.

ஆனால் அயல்நாட்டுக்கொள்கைகளில் ஓபாமா தொடந்து வெற்றிகளையே ஈட்டி வருகிறார். இவர்கள் இடைத்தேரத்லில் எடுத்த பொருளாதார ஆயுதம் இரண்டாம் தரம் அவ்வளவு கூராக இருக்கப் போவதில்லை. மேலும் ஐரோப்பிய நாடுகள் இன்னமும் தலை எடுக்க முடியாமலிருக்க அமெரிக்கா மேலே வந்துகொண்டிருக்கிறது. தேர்தல் நேரம் பொருளாதாரத்தை வைத்து ஒபாமாவை தாக்க முடியாது. நிச்சயமாக அது ஒரு நல்ல நிலையில் இருககும். இடைத்தேரதலில் ஜனநாயக கட்சியை பலமிழக்க செய்த சுகநலகாப்புறுத்தி சட்டம் இன்னமும் நிறைய பற்களுடன்தான் இருக்கிறது. ஆனால் ரோமினி வந்தால் இதனால் கடிக்க முடியாது. ஓபாமாவுக்கு இருக்கக்கூடிய பலவீனம், இனப்பாகுபாட்டுச் சச்சரவு. சந்தோரம் வந்தால் நிச்சயம் வெள்ளையர்கள் அங்கே திருமஸ்க்கூடிய சந்தர்ப்பம் இருக்கு. அதையேதான் ஜிஞ்சிரிச்சும், சந்தோரமும் தாங்கள் உண்மையான பழைபேண் வாதிகள் என்று தேரதல் களங்களில் திரும்ப திரும்ப சொல்வதின் மூலம் மக்களுக்கு தெரிய வைக்கமுயலும் செய்தி.

ஒருவேளை ஜனநாயகட்சி தோல்வியுற்று குடியசுக்கட்சி வந்தால், சந்தோரம் உடனேயே மத்திய கிழக்கில் திரும்ப தலையிடுகளில் தொடங்கிவிடுவார். இது சீனாவுடன் திரும்பவும் விட்டுக்கொடுப்பு போக்கில் தான் அமெரிக்காவை தள்ளும். இரண்டு களங்களையும் ஒரே நேரத்தில் திறந்து வைத்திருக்க முடியாது. அப்போது அது தமிழர்கள் விடையத்தில் வேதாளம் திரும்பவும் முர்ங்கை மரத்தின்மீதுதான். ரோமினி மத்திய கிழக்கில் திரும்ப கால் வைக்க அவசரப்பட மாட்டார். அவரிடம் தமிழர் பிரச்சனையை முன் தள்ளிப்பார்க்க முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒபாமா மீண்டும் வருவது தமிழ் மக்களின் விடிவுக்கு கூடுதல் சாதகமா? பாதகமா?

பழமை வாதிகளான குடிரயசுக் கட்சியினரின் ஆட்சி வந்தால் தமிழர் பிரச்சினை நன்கு பின்னுக்குத் தள்ளப் பட்டு விடும். அமெரிக்க ஜனாதிபதியாக வருபவரை விடவும் அவர் தனக்கு ஆலோசனை சொல்ல தேர்ந்தெடுக்கும் நபர்களின் கையில் தான் எங்களுடையது போன்றதொரு பிரச்சினையின் எதிர்காலம் தங்கியிருக்கிறது என நான் கருதுகிறேன். சின்ன புஷ் தொழிலதிபர்களையும் அரசியல் குள்ள நரிகளையும் ஆலோசகர்களாக வைத்திருந்தமை தான் ஈராக் போன்ற தவறுகளுக்குக் காரணம். மாறாக கல்விமான்களையும் துறை சார் நிபுணர்களையும் தன்னைச் சுற்றி வைத்திருப்பதால் தான் ஒபாமா ஈரானில் இன்னமும் இராணுவக் காலை முன் வைக்காமல் சமாளிக்கிறார். சுருங்கச் சொன்னால் ஒபாமா வருவதே தமிழர்களுக்கு நல்லது!

  • தொடங்கியவர்

பழமை வாதிகளான குடிரயசுக் கட்சியினரின் ஆட்சி வந்தால் தமிழர் பிரச்சினை நன்கு பின்னுக்குத் தள்ளப் பட்டு விடும். அமெரிக்க ஜனாதிபதியாக வருபவரை விடவும் அவர் தனக்கு ஆலோசனை சொல்ல தேர்ந்தெடுக்கும் நபர்களின் கையில் தான் எங்களுடையது போன்றதொரு பிரச்சினையின் எதிர்காலம் தங்கியிருக்கிறது என நான் கருதுகிறேன். சின்ன புஷ் தொழிலதிபர்களையும் அரசியல் குள்ள நரிகளையும் ஆலோசகர்களாக வைத்திருந்தமை தான் ஈராக் போன்ற தவறுகளுக்குக் காரணம். மாறாக கல்விமான்களையும் துறை சார் நிபுணர்களையும் தன்னைச் சுற்றி வைத்திருப்பதால் தான் ஒபாமா ஈரானில் இன்னமும் இராணுவக் காலை முன் வைக்காமல் சமாளிக்கிறார். சுருங்கச் சொன்னால் ஒபாமா வருவதே தமிழர்களுக்கு நல்லது!

நன்றி ஜஸ்டின்.

ஒபாமா மீண்டும் வென்றால், யார் இராஜாங்க செயலாளர் பதவிக்கு வருவார்கள் என்பதில் எமது தலைவிதி தங்கியுள்ளது. ஹிலாரி இந்த பதவிக்காலத்துடன் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார் (சிலவேளை மனம் மாறலாம்).

  • தொடங்கியவர்

போர்ட்டோ ரிக்கோவில் மிட் ரோமனி அமோக வெற்றி

Republican presidential hopeful Mitt Romney was sweeping to victory in his party's primary in Puerto Rico on Sunday, bolstering his position as front-runner in the race to determine who will face Democratic President Barack Obama in the November 6 election.

http://www.reuters.com/article/2012/03/19/us-usa-campaign-puertorico-idUSBRE82D16Z20120319

ஆனால் இந்த செவ்வாய்க்கிழமை இலநோய் மாநிலத்தில் நடக்க உள்ள போட்டியில் இரண்டாம் இடத்தில் உள்ள சந்ரோரம் வென்றால் போட்டி இறுக்கமானதாகவே இருக்கும்.

  • தொடங்கியவர்

லூசியானா மாநிலத்தில் ரொம்னியை இரண்டுக்கு ஒன்று என்ற வித்தியாசத்தில் சந்ரோரம் தோற்கடித்தார்:

சந்ரோரம் -49%

ரொம்னி -27%

மொத்தம் பிரதிநிகளை ஒபாமாவை எதிர்த்து போட்டியிடுபவர் 1144 பெற வேண்டும். இதுவரை

சந்ரோரம் - 251

ரொம்னி - 563

http://www.cnn.com/2....html?hpt=hp_t3

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

நேற்று மூன்று மாநிலங்களில் மிட் ரொம்னி வென்றார் .

விஸ்கொன்சின், மேரிலான்ட் , டிச்ற்றிக்ட் ஒப் கொலம்பியா ஆகிய மூன்று மாநிலங்களில் வென்றார். ஆனால், அடுத்து நடக்கவுள்ள பென்சிலவேனிய மாநிலமே உற்று நோக்கப்படுகின்றது. இது செனட்டர் சந்ரோரத்தின் மாநிலம் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.cnn.com/2012/04/04/politics/republican-primaries-web/index.html?hpt=hp_c1

  • தொடங்கியவர்

ரிக் சன்டோரம் தனது போட்டியை விலக்கி கொண்டார்

தனது குடும்பத்துடன் தோன்றிய குடியரசுக்கட்சி சனாதிபதி வேட்பாளர் ரிக் சன்டோரம் தான் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஆனால், ஒபாமாவை தோற்கடிக்கும் போட்டியில் தாம் தொடர்ந்தும் ஆதரவளிக்கப்போவதாக கூறினார்.

இதன் மூலம் மிட் ரொம்னி கார்த்திகை மாத சனாதிபதி தேர்தலில் ஒபாமாவை எதிர்க்கப்போவது உறுதியாகியுள்ளது.

http://www.theglobea...article2397244/

Edited by akootha

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒபாமாவின் கார்த்திகை விளக்கீடு யார்கையில்????? ஈரான் அல்லது சிரியா? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஒபாமாவை எதிர்த்து மிட்ரோம்னி போட்டி - சான்டோரம் விலகினார்!

mitt-romney-110412-150.jpg

குடியரசுக் கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட பிரச்சாரம் செய்து கொண்டிருந்த ரிக் சான்டோரம் திடீர் என்று விலகியுள்ளார். இதையடுத்து மிட் ரோம்னி அதிபர் ஒபாமாவை எதிர்த்து போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் மீண்டும் ஒபாமாவே போட்டியிடுகிறார்.

குடியரசு கட்சி சார்பில் போட்டியிட வேட்பாளர் தேர்வு நடைபெற்று வருகிறது. இக்கட்சி சார்பில் போட்டியிட விரும்புபவர்களின் செல்வாக்கை அறிய ஒவ்வொரு மாகாணத்திலும் உட்கட்சி தேர்தல் நடத்தப்படுகிறது. குடியரசு கட்சி சார்பில் மிட் ரோம்னி உள்பட 12க்கும் மேற்பட்டோர் போட்டியிடுகின்றனர்.

பல மாகாணங்களில் ரோம்னி தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார். மிட் ரோம்னி மாசசூசட்ஸ் மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ஆவார். சமீபத்தில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பிலும் கூட ஒபாமாவுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தக் கூடியவராக ரோம்னி இருப்பார் என்றே முடிவுகள் வெளியாகின.

இந்நிலையில் குடியரசுக் கட்சி வேட்பாளரான முன்னாள் பென்னிசில்வேனியா ஆளுநர் ரிக் சான்டோரம் தேர்தலில் இருந்து விலகுவதாக நேற்று அறிவி்த்தள்ளார். தனது இளைய மகள் பெல்லா (3) உடல் நிலை பாதிக்கப்பட்டதால் அவர் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.

குடியரசுக் கட்சியில் ரோம்னிக்கு அடுத்தபடியாக செல்வாக்குள்ள ஆளாக இருந்த ரிக் விலகியுள்ளதால் அதிபர் தேர்தலில் ஒபாமாவை எதிர்த்து ரோம்னி போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. ரிக் தேர்தலில் இருந்து விலகியது பற்றி அறிந்ததும் ரோம்னி அவரை வாழ்த்தியுள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=58480&category=WorldNews&language=tamil

  • தொடங்கியவர்

சந்தோரமுக்கு ஆதரவளித்த கட்சி உறுப்பினர்கள் பலரும் ரோம்னியை ஆதரிக்கவில்லை. காரணம், பலரும் மதம் சார்ந்து சந்தோரத்திற்கு ஆதரவு தந்தனர். அவர்கள் ரொம்னி பல விடயங்களில் மென்போக்கானவர் என கருதுகின்றனர்.

இதனால் ஒபாமாவுக்கு வெற்றி வாய்ப்பு கூடுதலாக இருக்கலாம்.

  • 1 month later...
  • தொடங்கியவர்

அமெரிக்க அதிபர் வேட்பாளர் தகுதியைப் பெற்றார் மிட் ரொம்னி

வரும் நவம்பர் மாதம் நடக்கவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய அதிபர் பராக் ஒபாமாவை எதிர்த்துப் போட்டியிடும் குடியரசுக் கட்சி வேட்பாளராக மிட் ரொம்னி தகுதி பெற்றுள்ளார்.

டெக்ஸாஸ் மாகாணத்தில் நடந்த குடியரசுக் கட்சி வேட்பாளர் தெரிவு தொடர்பான உட்கட்சித் தேர்தலில் வென்றதன் மூலம் அவரே அதிபர் வேட்பாளர் ஆகிறார் என்பது உறுதியானது.

அமெரிக்க சரித்திரத்தில் மோர்மோன் கிறிஸ்தவப் பிரிவிலிருந்து அதிபர் வேட்பாளராகின்ற முதல் நபர் மிட் ரொம்னிதான்.

வரும் ஆகஸ்ட் மாதம் ஃபுளோரிடாவில் நடக்கவுள்ள குடியரசுக் கட்சி மாநாட்டில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக மிட் ரொம்னி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளார்.

குடியரசுக் கட்சி சார்பில் அதிபராக வேட்பாளராக நிற்பதற்காக போட்டியிட்ட நான்கு பேரில் மற்றவர்கள் அனைவரையும் விட மிகப் பெரும்பான்மையான டெலிகேட்ஸின் ஆதரவை மிட் ரொம்னி பெற்றுள்ளார்.

1144 டெலிகேட்ஸ்களுடைய ஆதரவு கிடைப்பவரே அதிபர் வேட்பாளராக முடியும் என்ற நிலையில் 1183 பேருடைய ஆதரவை ரொம்னி வென்றுள்ளார்.

http://www.bbc.co.uk/tamil/global/2012/05/120530_romney.shtml

  • 1 month later...
  • தொடங்கியவர்
559336_10151938695975008_1636975949_n.jpg
  • 4 weeks later...
  • தொடங்கியவர்

[size=4]தேர்தல் அமெரிக்க குடியரசுக்கட்சியின் வேட்பாளர் மிட் ரொம்னி (வயது 65) தனது உப சனாதிபதி வேட்பாளராக போல் றையனை நியமித்துள்ளார். [/size]இவருக்கு வயது 42. [size=4]இவர் ஒபாமாவின் எல்லோருக்கும் மருத்துவ காப்புறுதி கொள்கையை பலமாக எதிர்ப்பவர். [/size]

http://www.theglobeandmail.com/news/world/us-election/mitt-romney-names-paul-ryan-as-running-mate/article4476334/

  • கருத்துக்கள உறவுகள்

மேலே உள்ள படத்தைப் பார்த்தால் ரோம்னி வெல்லுவார் போலை இருக்கு.. :huh: ஆனால் நேற்றைய செய்தியில் கருத்துக்கணிப்பில் ஒபாமா முன்னணி என்று சொன்னார்களே??!! :rolleyes:

வேலை இல்லாதோரின் தொகை 8.3% நிரந்தரமான நிலையாகிவிட்டதாக சந்தேகிக்கிறார்கள். அதில் உண்மை இருக்க முடியாது. உண்மையாய் இருந்தால் ஒபாமா சங்கடப்பட்டுத்தான் வருவார். வரும் மாதங்களில் அது இழகிக் கொடுத்தால் இலகுவாக வருவார். இந்த புதிய கூட்டு, குடியரசுக்கட்சியின் அடிதளங்களான தென் மாநிலங்களை உசுப்புமா என்ற வேள்வி இருக்கிறது. ரோமெனேயின் இழக்கம் குடியரசுக்கட்சியின் பலத்தில் போய் விழுகிறது. அது நல்ல சகுனம் இல்லை. உதாரணத்திற்கு ஒபாமா புளோரிடவை தட்டிசெல்ல இது உதவலாம். கிளின்ரனும்-கியூபா பிள்ளையும் கெடுபிடிக்குப் பின்னர் புளோரிடா ஜனநாயகட்சிக்கு பெரிய சவலாக இருந்து வருகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒபாமாவுக்கு இரண்டு துருப்புச்சீட்டு இருக்கு...ஒண்டு சிரியா மற்றது ஈரான்.....அதோடை ரஸ்சியாவும் மனம் வைச்சால் சிங்கனை அசைக்கேலாது.....எல்லாம் பணம் பொருள் அரசியலப்பா! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]இவர் ஒபாமாவின் எல்லோருக்கும் மருத்துவ காப்புறுதி கொள்கையை பலமாக எதிர்ப்பவர். [/size]

http://www.theglobea...article4476334/

இது ஒரு சிக்கலான நிலைமை; வெளியில் இருந்து பார்க்கும் போது ஒரு நல்ல திட்டம் போல் தெரிந்தாலும், அதை அமுல்படுத்துவதில் நிறைய இடர்பாடுகளை சந்திக்க வேண்டிவரும். இந்த திட்டத்தின் மூலம் இன்னும் குறிக்கபட்ட ஆட்களுக்கு மருத்துவ காப்புறுதி கிடைக்கும். இப்போது உள்ள திட்டத்தின் படி, - எனக்கு விளங்கின படி எழுதினால், Medi care எனப்படுகிற மருத்துவ காப்புறுதி, ஒரு வரும்படியும் இல்லாதவர்களுக்கே வரும். மற்றவர்கள் தனியார் மருத்துவ காப்புறுதி வைத்திருக்க வேண்டும். ஆனால் புதிய திட்டத்தின் படி, medicare பெறுவதற்குரிய நிபந்தனைகளை தளர்த்துவதால், இன்னும் அதிகம் பேருக்கு கிடைக்கும் 20 தோ 30 மில்லியன் ஆட்களுக்கு. அதே நேரத்தில் குறிக்கபட்ட சேவைக்கு ஒரு வைத்தியர் பெறும் கட்டணமும் கணிசமாக குறைக்கப்படவுள்ளது- படிப்படியாக குறைத்துக்கொண்டு வருகிறார்கள்- இதனால், OBAMA எதிபார்க்கிற, வருமுன் காப்பு, primary care மருத்துவ திட்டம் பெரியளவில் பதிக்கபட்டுள்ளது. 20 , 30 வருடங்கள் தனியாக, சிறு சிறு குழுவாக கிளினிக் நடத்தினவர்கள் எல்லாம், அதை விட்டு விட்டு, வைத்தியசாலைகளில் பணி புரிகிறார்கள். கனடாவில் உள்ளது போல் பாமிலி டாக்டர், UK உள்ளது போல் GP வேலைக்கு யாரும் போக விருப்பமில்லை. அவர்களுக்கு இந்தமாதிரி கிளினிக் நடத்துவது பெருளாதார ரீதியில் இயலாத காரியம். இனி வரும் காலத்தில் காச்சலுக்கும் தைலனோல் வாங்க ED போக வேண்டிய நிலை வந்தாலும் ஆச்சரியம் இல்லை. சனம் இதை விளங்க கொஞ்ச காலம் எடுக்கும், அதற்குள் OBAMA இன்னும் ஒருக்கா வந்தால் சரி.

  • தொடங்கியவர்

இது ஒரு சிக்கலான நிலைமை; வெளியில் இருந்து பார்க்கும் போது ஒரு நல்ல திட்டம் போல் தெரிந்தாலும், அதை அமுல்படுத்துவதில் நிறைய இடர்பாடுகளை சந்திக்க வேண்டிவரும். இந்த திட்டத்தின் மூலம் இன்னும் குறிக்கபட்ட ஆட்களுக்கு மருத்துவ காப்புறுதி கிடைக்கும். இப்போது உள்ள திட்டத்தின் படி, - எனக்கு விளங்கின படி எழுதினால், Medi care எனப்படுகிற மருத்துவ காப்புறுதி, ஒரு வரும்படியும் இல்லாதவர்களுக்கே வரும். மற்றவர்கள் தனியார் மருத்துவ காப்புறுதி வைத்திருக்க வேண்டும். ஆனால் புதிய திட்டத்தின் படி, medicare பெறுவதற்குரிய நிபந்தனைகளை தளர்த்துவதால், இன்னும் அதிகம் பேருக்கு கிடைக்கும் 20 தோ 30 மில்லியன் ஆட்களுக்கு. அதே நேரத்தில் குறிக்கபட்ட சேவைக்கு ஒரு வைத்தியர் பெறும் கட்டணமும் கணிசமாக குறைக்கப்படவுள்ளது- படிப்படியாக குறைத்துக்கொண்டு வருகிறார்கள்- இதனால், OBAMA எதிபார்க்கிற, வருமுன் காப்பு, primary care மருத்துவ திட்டம் பெரியளவில் பதிக்கபட்டுள்ளது. 20 , 30 வருடங்கள் தனியாக, சிறு சிறு குழுவாக கிளினிக் நடத்தினவர்கள் எல்லாம், அதை விட்டு விட்டு, வைத்தியசாலைகளில் பணி புரிகிறார்கள். கனடாவில் உள்ளது போல் பாமிலி டாக்டர், UK உள்ளது போல் GP வேலைக்கு யாரும் போக விருப்பமில்லை. அவர்களுக்கு இந்தமாதிரி கிளினிக் நடத்துவது பெருளாதார ரீதியில் இயலாத காரியம். இனி வரும் காலத்தில் காச்சலுக்கும் தைலனோல் வாங்க ED போக வேண்டிய நிலை வந்தாலும் ஆச்சரியம் இல்லை. சனம் இதை விளங்க கொஞ்ச காலம் எடுக்கும், அதற்குள் OBAMA இன்னும் ஒருக்கா வந்தால் சரி.

[size=4]மெடிக்கேயர் பற்றிய உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள். அவை சரி என்றே எண்ணுகின்றேன். [/size]

  • தொடங்கியவர்

[size=4]ரொம்னியின் உப சனாதிபதி வேட்பாளரின் கொள்கைகள் நடுத்தரவர்க்கத்தை பாதிக்கும் எனக்கூறப்படுகின்றது. இதனால் ஒபாமாவுக்கு ரொம்னி 'பெரும் சலுகையை' (வெற்றி வாய்ப்பை) தந்[/size][size=4]துள்ளார் என சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.[/size]

[size=6]Romney did Obama a huge favor[/size]

[size=3]http://www.cnn.com/2....html?hpt=hp_t1[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.