Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

களனிப்பாலத்திற்கருகே எரிபொருள் கசிவு! விமான நிலையத்திற்கான எரிபொருள் வீண்விரயம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

transportation-oil-100x100.jpg

கொழும்பு துறைமுகத்திலிருந்து கொலன்னாவை எரிபொருள் களஞ்சியசாலைக்கு எரிபொருள்கொண்டு செல்லும் நிலக்கீழ் குழாயில் சேதம் ஏற்பட்டதால் விமானங்களுக்குப் பயன்படுத்தப்படும் பெருமளவு எரிபொருள் கசிந்துள்ளதாக பெற்றோலியத்துறை அமைச்சு அதிகாரிகள் தெரிவித்தனர்.

களனி பாலத்திற்கு அருகிலேயே இக்கசிவு ஏற்பட்டுள்ளது. சுமார் அரைமணித்தியாலம் இக்கசிவு இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தமிழ் மிரருக்குத் தெரிவித்தனர்.

நேற்று பிற்பகல் 3 மணியளவில் இக்கசிவு ஆரம்பித்தது. பெருமளவு எண்ணெய் கசிந்து நிலத்தில் வழிந்தோடியபோதிலும் இக்கசிவு ஏற்பட்ட சரியான இடத்தை நேற்றிரவு வரை கண்டறிய முடியவில்லை எனவும் அவ்வதிகாரிகள் தெரிவித்தனர்.

இக்கசிவினால் ஏற்பட்ட இழப்பின் அளவும் இன்னும் மதிப்பிடப்படவில்லை.

துறைமுகத்திலுள்ள கப்பல்களிலிருந்து கொலன்னாவைக்கு எரிபொருள் கொண்டுசெல்லும் பல குழாய்கள் உள்ளன. அவற்றில் ஒரு குழாயிலேயே இக்கசிவு இடம்பெற்றிருப்பதாக கருதப்படுகிறது.

இவற்றில் சில குழாய்கள் பல தசாப்தகாலம் பழைமை வாய்ந்தவையாகும். இவற்றுக்குமேல் கட்டிடங்கள் கட்டப்பட்டதால் அக்குழாய்கள் சேதமடைந்திருக்கலாம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேற்படி எரிபொருள் கப்பல் ஒன்றிலிருந்து இரு நாட்களாக குழாய் மூலம் கொலன்னாவை களஞ்சியசாலைக்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தது. இக்கசிவு கண்டறியப்பட்டபின் எரிபொருள் அனுப்பும் நடவடிக்கை நிறுத்தப்பட்டது. மற்றொரு குழாய் வழியாக இந்நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அமைச்சு அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

http://www.saritham.com/?p=46918

தயவு செய்து சிங்கள விமானச்சேவையை தவிருங்கள்,உங்கள் உயிருக்கு உத்தரவாதத்தை தேடுங்கள்.

ஏற்கனவே ஆடிப்போயுள்ள சிங்கள விமானச்சேவை இதனுடன் படுத்தாலும் படுத்துவிடும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேற்படி எரிபொருள் கப்பல் ஒன்றிலிருந்து இரு நாட்களாக குழாய் மூலம் கொலன்னாவை களஞ்சியசாலைக்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தது. இக்கசிவு கண்டறியப்பட்டபின் எரிபொருள் அனுப்பும் நடவடிக்கை நிறுத்தப்பட்டது. மற்றொரு குழாய் வழியாக இந்நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அமைச்சு அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

நல்லவேளை விபத்துக்கள் ஏற்பட்டு பல்லாயிரம் சிங்களவர் சாகவில்லை :o:rolleyes:

பேரிச்சம் பழத்துக்கு போடவேண்டிய விமானங்களைத்தான் சிறிலங்கன் ஏர்லயன்ஸ் பாவிக்கின்றது பயணிப்பவர்களே இன்சுரன்ஸ் போட்டுவிட்டு சிறிலங்கன் எர்லயன்சில் பயணிக்கலாம். :(

  • கருத்துக்கள உறவுகள்

ஒருநாள் விழுந்து துலைக்கப் போகுது..! :unsure:

பெரும் தொகையான பயணிகள் தமிழர் என்பதால் அவர்கள் விமானங்களை பழுதுபார்க்க மாட்டார்கள். இதுவும் வேண்டுமென்ற இன் அழிப்பு என்றுதான் கருதவேண்டும்.

transportation-oil-100x100.jpg

சுமார் அரைமணித்தியாலம் இக்கசிவு இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தமிழ் மிரருக்குத் தெரிவித்தனர்.

நேற்று பிற்பகல் 3 மணியளவில் இக்கசிவு ஆரம்பித்தது.

http://www.saritham.com/?p=46918

ஒரு நன்றி கூட போடாமல் செய்தியை திருடி தனது போல தருகின்றனர் சரிதம் இணையத்தினர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.