Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குற்றம்புரிந்த சிறிலங்கா படையினர் மீது ஐ.நா நடவடிக்கை எடுக்காது – பான் கீ மூனின் பேச்சாளர் அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

united%20nations.jpg

ஹெய்டியில் சிறுமிகளைப் பாலியல் ரீதியாக துன்புறுத்திய சிறிலங்கா படையினர் மீது சிறிலங்கா அரசாங்கமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ.நா கூறியுள்ளது.

இதுதொடர்பாக நியுயோர்க்கில் கருத்து வெளியிட்ட ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் மார்ட்டின் நெஸ்ர்க்கி,

“நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஹெய்டியில் அமைதிகாப்புப் படையில் பணியாற்றிய சிறிலங்காப் படையினர் சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது மற்றும் பாலியல் ரீதியான சுரண்டலுக்கு உட்படுத்தியது பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டிய முழுப்பொறுப்பும் சிறிலங்கா அரசுக்கே உள்ளது.

இது அமைதிகாப்புப் படைக்கு படையினரை அனுப்பும் நாடுகளை சார்ந்த விவகாரம். இது அவர்களின் பிரச்சினை. இது அவர்களின் இறையாண்மைக்குட்பட்ட பொறுப்பு. அவர்களின் தேசிய சட்டங்களுக்குட்பட்டது.

அதற்காக இந்த விவகாரத்தில் ஐ.நா அக்கறைப்படவில்லை என்றோ இதன் தொடர்ச்சியைக் கவனிக்காமல் உள்ளதென்றோ அர்த்தமில்லை.

ஆனால் இது அந்த நாட்டின் தேசிய அதிகாரிகளின் நீதிமுறைக்குட்பட்டது.

குற்றச்சாட்டுகளில் சம்பந்தப்பட்டதாக இனங்காணப்படும் சிறிலங்காப் படையினர் கட்டாயம் அதற்காகத் தண்டிக்கப்பட வேண்டும்.“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

2007 நவம்பரில் ஹெய்டியில் அமைதிகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 950 சிறிலங்காப் படையினரில், 111 படையினரும் 3 அதிகாரிகளும் அந்த நாட்டு சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது மற்றும் சுரண்டலுக்குட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்ப்ப்பட்டிருந்தனர்.

சிறிலங்கா அரசினால் மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டிருந்த இந்த விவகாரம் அண்மையில் தான் வெளிச்சத்துக்கு வந்திருந்தது.

http://www.eeladhesa...ndex.php?option

குற்றவாளியே தனது குற்றத்தை விசாரிப்பதா??

இந்த செய்தியின் ஆங்கில இணைப்பு இருந்தால் இணைக்கவும்.

நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2007 நவம்பரில் ஹெய்டியில் அமைதிகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 950 சிறிலங்காப் படையினரில், 111 படையினரும் 3 அதிகாரிகளும் அந்த நாட்டு சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது மற்றும் சுரண்டலுக்குட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்ப்ப்பட்டிருந்தனர்.

ஹெய்டியில் குற்றமிழைத்த சிறிலங்கா இராணுவத்தை திருப்பி அனுப்பினால் உள்நாட்டில் அவர்கள் புரியும் குற்றத்துக்காக எங்குதான் அவர்களை அனுப்புவது ? :blink:

ஒப்ஷன் A

இராணுவத்தை போட்டு தள்ளி நரகத்துக்கு அனுப்புவது

ஒப்ஷன் B

இராணுவத்தை ஊனமாக்கி வாழ்க்கையே நரகமாக்குவது

உங்களின் கருத்துகள் கிழே பதியலாம் :lol::icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இது கேணத்தனமான அறிக்கை..!

போபாலில் விஷ்வாயு கசிந்து ஆயிரக்கணக்கில் செத்தார்கள்..! அது அமெரிக்க நிறுவனம்தானே..! பின்பு ஏன் இந்தியாவில் விசாரித்தார்களாம்? அமெரிக்காவுக்குத்தான் பொறுப்பு என்று விட்டிருக்கலாமே?? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

போபாலில் விஷ்வாயு கசிந்து ஆயிரக்கணக்கில் செத்தார்கள்..! அது அமெரிக்க நிறுவனம்தானே..! பின்பு ஏன் இந்தியாவில் விசாரித்தார்களாம்? அமெரிக்காவுக்குத்தான் பொறுப்பு என்று விட்டிருக்கலாமே?? :rolleyes:

என்னே உதாரணம் :wub::icon_idea: :icon_idea:

இரண்டும் ஆபத்தானது என்பதுடன் தண்டனையும் ஒரே மாதிரி இருக்கவேண்டும் என்ற எங்கள் இசைக்கு ஒரு பச்சை.

ஐ.நா.வுக்கு அழுத்தம் கொடுத்து, முதலாவது படியாக, மேற்கொண்டு சிங்கள படைகளை ஐ.நா.வுக்கு எடுப்பதை நிறுத்தவேண்டும். காரணம், இது சிங்களத்திற்கு அவமதிப்பையும், வெளிநாட்டு செல்வாவாணியையும் குறைக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐ. நா. விற்கு "பணி" புரிந்து ஹெய்தியன் குழந்தைகளை கற்பழித்த நூற்றி எட்டு ஸ்ரீ லங்கா வெறியன்களை இந்த பண்டி மூன் ஒன்றும் செய்யவில்லை.

பண்டி மூனுக்கு போற இடத்தில தண்ணி அடிச்சிட்டு சரக்குகளிண்ட மடியில உருண்டு திரியவே நேரம் இல்லை.

சிங்கள பயங்கரவாத ராணுவத்தை வைத்து ஐ. நா. அதிகாரிகளுக்கு பெண்களை சப்பளை செய்யப்போகிறாரோ பாண் கி மூன்?

மகிந்தா ஏன் விசாரிக்கப் போகிறார்? பான்-கி-மூனால் எப்படி மகிந்தாவை விசாரிக்கச் சொல்லிக் கேட்கமுடியும்? உலகிலேயே ஒருநாட்டுத்தலைவர் இந்தளவுக்கு தன் நாட்டைகாம லீலைகளில் தாழ்த்துகிறார் என்றால் அது மகிந்தாவாக மட்டுமாகத்தான் இருக்க முடியும்.

மகிந்தா ஆட்சிக்கு வந்த முதலிருந்தே பண்ணை வியாபாரத்தில் தான் இலங்கையை மேலே மேலே இட்டுச் செல்கிறார். அண்மைய புள்ளி விபரங்கள் இதைத்தான் கூறியிருந்தன. இந்திய மலையாளிகளும் மற்றும் உலகநாட்டு ராசதந்திரிகளும் இந்த வலையில் விழுந்துதான் 60 வருடமாக விடிவுதேடிய நடத்திய போராட்டத்தை குதறி எறிந்தார்கள். கருணாவுக்கு முந்தானை விரிக்க சிறுக்கிகளை அனுப்பி வைத்துத்தான் தான் உலகிலேயே கட்டுக்கோப்பாக இயங்கிய இயக்கத்தை உடைத்தார்கள். மனிதாபிமானப் போராட்டம் என்ற பேரில் வரலாறு காணாத அளவுக்கு தமிழ் பெண்களுக்கெதிரான வக்கிரகங்களை தானும் தம்பியுமாக ஆணையிட்டு நடத்தி முடித்தார்கள். அதைப்பார்க்க வந்த பான்-கி-மூனை தலதா மாளிகையில் வரவேற்றார்கள். வெளிநாட்டு பயணங்களிலும் தூதுவராலங்களிலும் குத்திகளை பாவித்து உலக அபிப்பிராயங்களையும், விசாரணை முன்னேடுப்புகளையும் அடக்கி விடுகிறார்கள். பிருத்தானிய மந்திரி சபைக்குள்ளேயே நுளைந்து பதவி விலகல் வரையும் இட்டு செல்கிறார்கள். டக்கிளஸ் என்ற ஒரு தனி மனிதனை குஷிபடுத்த நெடுந்தீவில் ஒட்டல் அமைத்து உல்லாசம் காட்டுகிறார்.

இந்த பூகோளத்தில் எதாவது சில நாடுகள் இலகுப் போக்குக்களை கடைப்பிடிக்கலாம். ஆகவே இதுவெல்லாம் என்ன பெரிய குற்றமா என்று யாராவது நினைக்க கூடும். புத்தமதம் துறவறத்தையும், ஒழுக்கங்களையும் போதிக்கும் மதமாக இருப்பதால் அதன் அறப்பண்புகளுக்கு உலகிலேயே ஒர் தனிபெயர் உண்டு. அந்த மதத்தை தழுவியர்கள் இந்த சிற்றின்ப போதையில் திளைப்பது என்பது நிச்சயமாக சீரழிந்து போன பண்பாடை மட்டும் காட்டாது, சீரழிந்து போய்விட்ட சட்டம், ஒழுங்கு ஆட்சி முறை என்பதயும் தான் எடுத்துக் காட்டுகிறது. எதிர்ப் பக்கத்திலிருப்போரை விழுத்த பாவிக்கும் ஆயுதமாக மட்டும் பாவிக்கமல் தங்களையே தாங்கள் ஊழலில் தோய்ப்பதற்கும் இதையேதான் பாவிக்கிறார்கள். அரசன் எவ்வழி அதிகாரிகள் அவ்வழி என்று நடந்து கொள்கிறார்கள்.

முதல் தடவை, இரணடாம் தடவை அவர்களை யாரவது குறை கூறினால் வன்முறைககளைப் பாவித்து இல்லாதொழிக்க பார்க்கிறார்கள். தப்பியிருந்து மூன்றாவது முறை, நான்காவது முறை குற்றம் சாட்டினால் சாட்டுபவரை பொய்யன் ஆக்கி விடுவார்கள். விட்டுக்கொடுக்காமல் ஐந்தாவது, ஆறாவது முறை குற்றம் சாட்டினால் நியாயத்தைக் கேட்கமுயல்வோரையும் இந்தச் சகதிக்குள் இழுத்து விழுத்துகிறார்கள். எந்த விதத்தாலும் கையாள முடியாமல் போய்விட்டோர் எழாவது, எட்டாவது முறை குற்றம் காட்டினால் எனக்கு குற்றச்சாட்டுகளைக் கேட்டுப் பழக்கம் நான் அவற்றைக்கண்டு பயந்து போவிடப்போவதில்லை என்கிறார் மகிந்த. பொழுபோகாதவர்கள் யாராவது இதற்கு மேலேயும் போய் ஒன்பதாவது, பத்தாவது முறை குற்றம் சாட்டினால் தைரியமாகத் தங்கள் வண்டவாளங்களை வெளியே இழுத்து விடுகிறார்கள்.

இல்லையேல் எந்த முகத்தோடு ஒருநாட்டின் ஜனாதிபதி தனது நாட்டு அதிகாரிகளின் பாலியல் சேஷ்டைகளைத் தானேதான் பட்டியல் போட்டுக் காட்ட முடியும்? இவர் கூறும் சபல புத்தி படைத்த சவேந்த்திர சில்வாவை இதுவரையும் எப்படி இவரால் அந்த குற்ற சாட்டுகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடிகிறது? ஜனாதிபதி அறிய சபல புத்திபடைத்த ஒருவர் எப்படி படைகளின் தலைமைப் பீடங்களில் இருந்திருக்க முடியும்? சபல புத்தி படைத்த ஒருவர் எப்படி நாட்டின் பாதுகாப்பு துறைகளில் சேவை செய்துவிட்டு வெளிநாடு சென்று ஐ.நா.வில் தூதுவராக இருக்க முடியும்? .சபல புத்தி படைத்த ஒருவருடன் எப்படி வலைவீசும் பழக்கமுடைய பெண்ணைத் தொழில் செய்ய அனுப்பிவைக்க முடியும்? ந்திரியின் காதலியின் கையில் ஒரு தொழில் துறையே சிக்கி அலைகின்றது என்று எப்படி ஒருநாட்டு ஜனாதிபதி சேஷ்டையாகக் கூறிவிட்டு வாளாவிருக்க முடியும?. எப்படி ஒரு ஜனநாயக நாட்டு ஜனாதிபதி தனது மந்திரியின் ஒழுக்கவீனங்களை பத்திரிகைகளில் வரவிடாமல் நான்தான் பத்திரிகைகளின் வாயை பூட்டுகிறேன் என்று பத்திரிகைகள் தெரியவரக் கூற முடியும்?

இலங்கை இராணுவத்தின் கற்பளிப்பு வழக்குகளை இலங்கைதான் விசாரிக்க வேண்டும் என்று கூறும் இந்த ஐ.நா அதிகாரி, இலங்கையில் நடப்பவைகளை உண்மையில் அறியாததால்த்தான் கூறுகிறாரா அல்லது நல்ல அனுபவம் உள்ளவர் என்பதால்த்தான் கூறுகிறாரா?

http://www.yarl.com/...showtopic=96681

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.