Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டொராண்டோவில் இன்று

Featured Replies

  • தொடங்கியவர்

தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர்களுக்கான விருது, தமிழ் படைப்பிலக்கியத்திற்கான விருது கனடா வாழ் எழுத்தாளர் அகில்

 

2011ஆம் ஆண்டு வெளிவந்த நூல்களில் 28 வகைப்பாடுகளில் சிறந்த நூல்கள் தெரிவு செய்யப்பட்டு 28 நூல்களுக்கான ஆசிரியர்கள் மற்றும் அந்நூல்களை பதிப்பித்த 22 பதிப்பகத்தாரருக்கு பரிசுமற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 

 

இம்முறை அயலகத் தமிழ் படைப்பிலக்கியத்திற்கான விருது கனடா வாழ் ஈழத்து புலம்பெயர் எழுத்தாளர் அகில் (அகிலேஸ்வரன் சாம்பசிவம்) எழுதிய கூடுகள் சிதைந்தபோது என்ற சிறுகதைத்தொகுப்பிற்கு வழங்கப்படவுள்ளது. பரிசு பெறும் நூலாசிரியர்கள் விவரம் வருமாறு:-


மரபுக் கவிதை - முனைவர் மு.இளங்கண்ணன், புதுக்கவிதை - கவிஞர் நாவேந்தன்

 

புதினம் - அரு.மருததுரை, சிறுகதை - செல்வி பர்வின்பானு நாடகம் (உரைநடை, கவிதை) - கவிமுகில் நா. கோபாலகிருஷ்ணன் திறனாய்வு- பெ.அ. இளஞ்செழியன்


மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம் - முனைவர் ப.வேல்முருகன்

 

பிறமொழிகளிலிருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள் - புவியரசு நுண்கலைகள் (இசை, ஓவியம், நடனம், சிற்பம்) - முனைவர் கு.சேதுராமன் அகராதி, கலைக்களஞ்சியம்,கலைச்சொல்லாக்கம், ஆட்சித் தமிழ் - ஆரூர் தாஸ் பயண இலக்கியம் - ப.முத்துக்குமார சுவாமி


வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு - டி. பவா செல்லதுரை நாட்டு வரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும், அகழாய்வு - முனைவர் கி.கிரா.சங்கரன்

 

கணிதவியல், வானியல், இயற்பியல், வேதியியல் - இரா. சிவராமன்

பொறியியல், தொழில் நுட்பவியல் - கதிரவன் கிருஷ்ணமூர்த்தி

மானிடவியல், சமூகவியல், புவியியல், நிலவியல் -முனைவர் கி.அய்யப்பன்

சட்டவியல், அரசியல் - முனைவர் ஆ.ஜெகதீசன்

மருந்தியல், உடலியல், நலவியல் - டாக்டர் ஜெயம் கண்ணன்

தமிழ் மருத்துவ நூல்கள் (சித்தம், ஆயுர்வேதம்) - 1.டாக்டர் இல.மகாதேவன், 2. டாக்டர் ஒய். மகாதேவ ஐயர்ஸ்.

சமயம், ஆன்மிகம், அளவையியல் - இராமநாதன் பழனியப்பன்

கல்வியியல், உளவியல் - கவிஞர் சுடர் முருகையா

சுற்றுப்புறவியல்- வேணு சீனிவாசன்

நாட்டுப்புறவியல் - டாக்டர் சிவ. விவேகானந்தன்

வெளிநாட்டுத் தமிழ்ப் படைப்பிலக்கியம் - அகிலேஸ்வரன் சாம்பசிவம்

இதழியல், தகவல் தொடர்பு - மா.ரா.அரசு பிற சிறப்பு வெளியீடுகள் - வெ.நல்லதம்பி

தமிழர் வாழ்வியல் - முனைவர் பி.சேதுராமன்.

 

http://ekuruvi.com/award%20india%20writing

  • 4 weeks later...
  • Replies 427
  • Views 47.9k
  • Created
  • Last Reply

கடந்த ஒருவாரத்துக்கும் அதிகமான காலம் காணாமல் போயிருந்த ரிம் பொஸ்மா (Tim Bosma) வின் எரிந்த உடலின் பாகங்களை இன்று காலை கண்டுபிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

  • தனது ட்றக் ஒன்றினை விற்பதற்காக ஒன்லைனில் விளம்பரம் போட்டு இருந்தார்
  • அதனை வாங்க இருவர் வந்து பரீட்சார்த்தமாக ஓட்டிப் பார்க வேண்டும் எனச் சொல்லி இவரையும் ஏற்றிக் கொண்டு போயிருந்தனர். அவர்களுடன் போனவர் மீண்டும் வரவில்லை.
  • மனைவி "அது ஒரு வெறுமனே ட்றக். அதனை வைத்துக் கொண்டு என் கணவரை விட்டு விடுங்கள். எனக்கு என் கணவர் வேண்டும். அவர் மகளுக்கு அப்பா வேண்டும்" என்று கெஞ்சி யுரியூபின் ஊடாக கோரிக்கை விட்டு இருந்தார்.
  • இது தொடர்பாக வாட்ட்ர் லூ பகுதியினைச் சேர்ந்த ஒரு வாலிபர் கைதானார்.
  • கைது செய்யப்பட்டவர் மிகுந்த செல்வம் உள்ள, பாரம்பரிய குடும்பத்தினைச் சேர்ந்தவர் என்றும், பழகும் போது சாதனை கண்ட ஒரு சிறந்த  விமான ஓட்டி என்றும், எந்த விதமான குற்ற பதிவும் (Criminal records) இல்லாதவர் என்றும் சொல்லப்படுகின்றது.
  • காணாமல் போன ட்றக் இனை 3 தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டவரின் தாயின் வீட்டில் இருந்து மீட்டனர்.
  • நேற்றுடன் இவர் காணாமல் போய் ஒரு வாரம் முடிந்து இருந்தது.
  • இன்று இவரது எரிந்த உடலின் பாகங்களை  மீட்டுள்ளனர். ஒரு வாகனத்தினை விற்கப் போய் இறுதியில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

http://www.thestar.com/news/crime/2013/05/14/tim_bosma_missing_man_is_dead_body_burned_police_say.html

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

காசுக்கு ஆசைப்பட்டு கிஜிஜி, ஆட்டோட்ரேடர் போன்ற தளங்களில் விளம்பரப்படுத்தினால் வில்லங்கத்தையும் விலைகொடுத்து வாங்க நேரலாம்.. :unsure: நான் இவை எதற்குள்ளும் போவதில்லை.. இந்தக்காலத்தில் டீலர்களிடமே தள்ளிவிடலாம் வாகனங்களை.. ஆனால் விலை அதிகம் கிடைக்காது..

 

பொருட்கள் எதையும் கிஜிஜியில் போடுவதில்லை.. நேரா குப்பைதான்..

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.