Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

13வது திருத்தத்துக்கும் மேலாகச் செல்வதற்கு ஜனாதிபதி இணக்கம்! - ஊடகவியலாளர் மாநாட்டில் கிருஷ்ணா

Featured Replies

13வது திருத்தத்துக்கும் மேலாகச் செல்வதற்கு ஜனாதிபதி இணக்கம்! - ஊடகவியலாளர் மாநாட்டில் கிருஷ்ணா

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்காக அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்துக்கும் மேலாகச் செல்வதற்கும் தான் தயாராக இருப்பதாக சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தம்மிடம் உறுதியளித்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா இன்று நண்பகல் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

'ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் தமிழ்ர்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பது தொடர்பாக நான் இன்று காலை உரையாடினேன். 13வது திருத்தத்துக்கு மேலாகச் செல்வது என்ற தன்னுடைய முன்னைய வாக்குறுதியில் தான் உறுதியாக இருப்பதாக அப்போது அவர் எனக்கு உறுதியளித்தார்' என சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கிருஷ்ணா கூறியுள்ளார். ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட கிருஷ்ணா மேலும் குறிப்பிட்டதாவது:

'அரசியலமைப்புக்கான 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் அடிப்படையில், அர்த்தபூர்வமான அதிகாரப் பரவலாக்கலை வழங்கி இன நெருக்கடிக்குத் தீர்வொன்றைக் காண்பதற்கான தமது பற்றுறுதியை பலதடவைகளில் சிறிலங்கா அரசாங்கம் எமக்குத் தெரிவித்திருந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தைகளில் இதற்கேற்றவாறான ஆக்கபூர்வமான முன்னேற்றத்தையும் அது விரைவுபடுத்தப்படுவதையும் நாம் எதிர்பார்க்கிறோம்.

நாடாளுமன்ற தெரிவுக்குழு மற்றும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் இடம்பெற்று வரும் பேச்சுவார்த்தையின் மூலம் அரசியல் தீர்வுஎ எட்டப்படும் என இந்தியா நம்புகின்றது.

பல சிறந்த முன்மொழிவுகளை கொண்டுள்ள உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டால் அது தேசிய நல்லிணக்கத்திற்கு சிறந்த முன்மாதிரியாகும்.

சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இன்று காலை இடம்பெற்ற சந்திப்பின் போது, இருதரப்பு உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.

அதேபோன்று சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பிரிஸுடனான சந்திப்பின் போது வர்த்தக, முதலீட்டு மற்றும அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் தற்போது ஐந்து பில்லியன் அமெரிக்க டொலரை அண்மித்துள்ளது. இலங்கையின் முதலீடு மற்றும் சுற்றுல்லா ஆகியவற்றில் இந்தியா முன்னிலையில் செயற்படுகின்றது.

சிறிலங்கா அரசாங்கம் மற்றும் பொதுமக்களின் முன்னுரிமைக்கு அமையவே இந்தியாவின் அபிவிருத்திக்கான உதவி திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இவற்றில் வீடமைப்பு, சுகாதராம், கல்வி மற்றும் போக்குவரத்து ஆகியவற்றிற்கு முன்னுரிமையளிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமான இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையில் புவியியல் மற்றும் கலாசார ரீதியாக நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. சிறிலங்கா அரசாங்கத்துடன் இந்தியா தொடர்ந்து செயற்பட்டு உதவி உள்ளிட்ட தேவையான அனைத்தையும் விடயங்களையும் வழங்கும்.

இதேவேளை, நாளை வட மாகாணத்திற்கான விஜயத்தை மேற்கொள்ளும் போது யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளேன்.

இதன்போது கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு வைத்திய உபகரணங்கள் கையளித்தல், பாடசாலையொன்றை மீளத் திறத்தல், உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 10,000 துவிச்சக்கர வண்டிகள் கையளித்தல் ஆகிய நிகழ்வுகளில் நான் கலந்து கொள்ளவுள்ளேன்.

இதற்கு மேலதிகமாக உள்நாட்டில் இடம்பெயந்த மக்களுக்காக இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் முதற்கட்டமாக நிர்மாணிக்கப்பட்ட 1,000 வீடுகள் கையளிப்பு நிகழ்விலும் நான் கலந்து கொள்ளவுள்ளேன்' என இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

இதனிடையில், இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இடம்பெற்று வரும் பேச்சுவார்த்தைகளை சிறிலங்கா அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளதாக தெரிய வருகின்றது.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் வகையில் நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளை நியமிக்கும் வரை அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தப் போவதில்லை என சிறிலங்கா அரசாங்கத்தரப்பில் பேச்சுவார்த்தைக் குழுவில் அங்கம் வகிககும் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன கூறியுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இதையடுத்து இன்று முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை நடைபெறவிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுமா என்பது குறித்து உறுதிப்படுத்த முடியவில்லை.

உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கை கொழும்புக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதனாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்த சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்ததாகவும் இவ்வூடகம் குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுவார்தைகளை மீளத் தொடங்குவதில் சிறிலங்கா அரசாங்கத் தரப்பில் இழுபறி நிலை இருப்பதைக் காணக்கூடியதாக இருப்பதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் Naatham-Tamil News Circle செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.

அத்துடன், பேச்சுவார்தைகள் குறித்தான எவ்வித விடயங்களும் சிறிலங்கா அரசாங்கத் தரப்பால் கூறப்படாத நிலையில், தாங்கள் பேச்சுவார்தைகளுக்கு காத்திருப்பதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

ஆயினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான இன்றைய பேச்சுவார்த்தைகளை சிறிலங்கா அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளமை குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

http://www.pongutham...8e-a5008f8f6211

Edited by akootha

வழமைபோல் இந்தியப் பிச்சைக்காரக் காட்டுமிராண்டிகள் மீண்டும் ஏமாந்துவிட்டுதுகள்!

  • கருத்துக்கள உறவுகள்

13வது திருத்தத்துக்கும் மேலாகச் செல்வதற்கு ஜனாதிபதி இணக்கம்!

தொடர்ந்து சிங்களவனின் தந்திரத்துக்கு முன் இந்தியா தோற்றுப்போகிறது

  • தொடங்கியவர்

ன்று ஆயுதப்பயிற்சிகளை கொடுத்து பின்னர் தமது மகுடிக்கு ஆடவில்லை என்றவுடன் அழித்தது கிந்தியா.

இன்றும் பேச்சுவார்த்தைகளை ( 13, 13 + , 13 -) தொடக்கி ஆடும் அபாயகரமான நாடகத்தில் இறுதியில் 'தமிழன் வாழ்ந்தான்' இல்லை 'கிந்தியா உடைந்தது' என முடியும். தெரிவு புது டெல்லியுடம் - இது கடைசி சந்தர்ப்பம்.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

நாடாளுமன்ற தெரிவுக்குழு மற்றும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் இடம்பெற்று வரும் பேச்சுவார்த்தையின் மூலம் அரசியல் தீர்வுஎ எட்டப்படும் என இந்தியா நம்புகின்றது.

...

சீனா விரைவில் கச்ச தீவை விட்டு கிளம்பிடும் என கிந்தியா நம்புகிறது (அதற்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கிறது)

சீனா ராமேஸ்வரத்தில் அமைத்திருக்கும் விண்வெளி ஆய்வு கழகத்தை விட்டு கிளம்பிடும் என கிந்தியா நம்புகிறது (அதற்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கிறது)

பாகிஸ்தான் தீவிரவாதிகளை கிந்தியாக்குள் அனுப்புவதை நிறுத்தும் என கிந்தியா நம்புகிறது(அது குறித்து பெரியதாதாவிடன் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது)

லாஜிக் தெரியவில்லை என்றால் கேளுங்கப்பா... :lol: :lol:

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்காக அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்துக்கும் மேலாகச் செல்வதற்கும் தான் தயாராக இருப்பதாக சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தம்மிடம் உறுதியளித்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா இன்று நண்பகல் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

'அரசியலமைப்புக்கான 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் அடிப்படையில், அர்த்தபூர்வமான அதிகாரப் பரவலாக்கலை வழங்கி இன நெருக்கடிக்குத் தீர்வொன்றைக் காண்பதற்கான தமது பற்றுறுதியை பலதடவைகளில் சிறிலங்கா அரசாங்கம் எமக்குத் தெரிவித்திருந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தைகளில் இதற்கேற்றவாறான ஆக்கபூர்வமான முன்னேற்றத்தையும் அது விரைவுபடுத்தப்படுவதையும் நாம் எதிர்பார்க்கிறோம்.

நாடாளுமன்ற தெரிவுக்குழு மற்றும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் இடம்பெற்று வரும் பேச்சுவார்த்தையின் மூலம் அரசியல் தீர்வுஎ எட்டப்படும் என இந்தியா நம்புகின்றது.

பல சிறந்த முன்மொழிவுகளை கொண்டுள்ள உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டால் அது தேசிய நல்லிணக்கத்திற்கு சிறந்த முன்மாதிரியாகும்.

எஸ். எம். கிருஸ்ணா இலங்கை வரும் போது இவர் யாருடைதாவது ஸ்கிரிப்ட்டை தான் மாறி எடுத்து படித்து விடப்போகிறார் என்றுதான் நாம் எல்லோரும் கிண்டல் செய்தோம். நம் எல்லோருக்கும் ஏமாற்றம்தான். அவர் இந்தமுறை பிழையே விடவில்லை. சரியாகவே ராஜபக்சா & கோ இவருக்காக எழுதிக்கொடுத்த ஸ்கிரிப்பை எங்குமே தொலத்துவிடாமல் வரிக்கு வரி வெற்றிகரமாகப்படித்து முடித்து விட்டார்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

13 வது திருத்தத்துக்கும் மேலாகச் செல்வதற்கு ஜனாதிபதி இணக்கம்!

தொடர்ந்து சிங்களவனின் தந்திரத்துக்கு முன் இந்தியா தோற்றுப்போகிறது

அப்படின்னு நினைச்சுக் கொண்டு.. நாங்க இருக்கிறம். ஆனால் உண்மையில் நாங்க தான் அவங்க இருவராலும் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறம். எங்களை வைச்சு அவங்க.. பிளே பண்ணிக்கிட்டு இருக்காங்க. நாங்க வெறும் வாய் பார்த்துக்கிட்டு இருக்கிறம். புலிகள் இருக்கேக்க.. நாங்க விளையாடினம்.. இந்தியாக்காரன் வாய் மட்டும் தான் பார்க்க முடிஞ்சுது..! அது அவனுக்குப் பொறுக்கல்ல.. புலியை அடிச்சுப் போட்டு.. இப்ப தான் விளையாடிக்கிட்டு இருக்கிறான். நாங்க இப்படியே வாயைப் பார்த்துக்கிட்டு இருக்க வேண்டியான்..! வேற வழி..! :o:(:unsure:

நீண்ட நாளைக்கு விளையாட முடியாது. சீனா இருவருக்கும் ஆப்பு வைக்கும், இந்த நாடகம் தொடர்ந்தால்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.