Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பங்குச்சந்தையில் நுழையும் முகநூல்

Featured Replies

அடுத்த வாரம் முகநூல் பங்குச்சந்தையில் நுழைய விண்ணப்பிக்கலாம் என பரவலாக நம்பப்படுகின்றது (ஆதாரம் - வால் ஸ்ட்ரீட் ஜேர்னல்). பங்குச்சந்தையில் நுழைவது மூலம் முகநூல் ஒரு பொது நிறுவனமாக மாறுகின்றது, அதாவது பங்குகளை வாங்குவதன் மூலம் நீங்களும் அதன் உரிமையாளராகலாம்.

முகநூலின் சில தரவுகள் :

வயது - எட்டு வருடம்

பாவனையாளர்கள் - எண்ணூறு மில்லியன்கள்

பங்கு சந்தை ஊடாக பெறக்கூடிய பணம் (எதிர்பார்க்கப்படுகின்றது) - பத்து பில்லியன்கள்

நிறுவனத்தின் பெறுமதி - (எதிர்பார்க்கப்படுகின்றது) 75-100 பில்லியன்கள்

http://online.wsj.com/article/SB10001424052970204573704577187062821038498.html

சற்று போசித்து இறங்க வேண்டிய விடயம் தான்.

இது பல வருடங்களாக உள்ள ஒரு வதந்தி. இந்தா வரும் அந்தா வரும் என்று பல முறை கசியவிடப்பட்டது.

இவர்களின் விற்பனை பொருள் என்று ஒன்றும் கிடையாது. இவர்கள் முதலீடு ஒரு சேவை (Sozialnetwork) மட்டுமே. இப்படி அழிந்த பல நிறுவனங்கள் இருக்கின்றன.

Yahoo நிறுவனமும் இப்படி பங்குசந்தைக்கு வந்தது தான். இன்று அடிமாட்டு விலைக்கு போகின்றது. Altavista என்று ஒரு தேடு இயந்திரம் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு காலத்தில் கொடிகட்டிப்பறந்தது. இன்று முகவரியே இல்லாமல் போய் விட்டது. இதற்க்கு இவர்கள் ஒரு குறுகிய வட்டத்திற்குள் நின்றதுவே காரணம்.

ஆனால் இதற்க்கு எல்லாம் விதிவிலக்காக Google உள்ளது என்பது எனது கருத்து. மிகச்சிறந்த நிர்வாகம். காலத்திற்கேற்றாற்போல் புதிய மாற்றங்கள். தமது முன்னோடிகள் செய்த தவறை தாமும் செய்துவிடாமல் இருக்க பல புதிய விஞ்ஞான யுக்திகளில் இங்கியுள்ளார்கள். இப்படி அடிக்கிக்கொண்டே போகலாம்.

ஆனால் இந்தத் திறமை Facebookகிடம் உள்ளதா என்பது சந்தேகமே.

இந்த பங்கு வங்குவதா இல்லையா என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் :D

Edited by கருத்து கந்தசாமி

  • தொடங்கியவர்

- இன்று முகநூல் பங்குச்சந்தையில் நுழைய அது சம்பந்தமான பத்திரங்களை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது

- இந்த வரவால் மீண்டும் ஒரு அளவுக்கு மீறிய வகையில் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் அதிகரித்து சென்று பின்னர் எல்லாம் ஒருநாள் வெடிக்கலாம் என கூறப்படுகின்றது

-அதேவேளை பலரின் காப்புரிமைகளை முகநூல் நிறுவனம் திருடி உள்ளதாகவும் அதனால் அதன் மீது (பணனம் உள்ளவர்கள் மீது வழமையாக நடப்பது) பல வழக்குகள் தாக்கல் செய்யப்படலாம் என நம்பப்டுகின்றது. இது பங்கின் விலை உயர்வை பாதிக்கும் எனவும் அஞ்சப்படுகின்றது. அது சம்பந்தமாக ஒரு கருத்துப்படம் :

facebook_JPG_1368928cl-8.jpg

An employee works on a computer at the new headquarters of Facebook in Menlo Park, California in this January 11, 2012 file photo. The attacks against Facebook signal that social media has become a new front in the Silicon Valley patent wars. Before 2010, online game developer Zynga, Web discount deals operator Groupon and professional social network operator LinkedIn had not faced a single patent lawsuit. Last year, the year those three companies went public, the lawsuits mounted.

  • கருத்துக்கள உறவுகள்

முக நூல் பாவனை கத்தியின் மேல் நடப்பது போன்றது.

சிறிது அக்கறை தவறினாலும் காயம் தான் ஏற்படும்.

அதே போலத் தான் இவர்களின் பங்குச்சந்தை வரவும்.

  • தொடங்கியவர்

முக நூல் பாவனை கத்தியின் மேல் நடப்பது போன்றது.

Pinterest.com

  • தொடங்கியவர்

பேஸ்புக்கின் அடுத்த பரிமாணம் இன்று ஆரம்பம்?

சமூகவலையமைப்புகளின் ஜாம்பவானான பேஸ்புக் பங்குச் சந்தையில் நுழையவுள்ளமை நாம் அறிந்ததே. இந்நிலையில் அதன் முதற்கட்டமாக பேஸ்புக் தனது ஆரம்ப பொது வழங்கலுக்கான (Initial public offering) முதற்கட்ட நடவடிக்கையை இன்று புதன்கிழமை ஆரம்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆரம்ப பொது வழங்கலுக்கான ஆவணங்களை பேஸ்புக் அமெரிக்க பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழுவிடம் (US Securities and Exchange Commission) சமர்ப்பிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவ் வழங்கலின் மூலம் முதற்கட்டமாக 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையிலான நிதியினை ஈட்டிக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பது முதற்கட்டத் தொகை எனவும் முதலீட்டாளர்களின் ஆர்வத்தைப்பொறுத்து இத்தொகை 10 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை செல்லலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை பேஸ்புக் பங்குகளை விநியோகிப்பது தொடர்பில் நஸ்டக் (Nasdaq stock market) மற்றும் நியூயோர்க் பங்குச் சந்தை (New York Stock Exchange) ஆகியவற்றின் இடையே தற்போது கடும் போட்டி நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் மே மாதம் முதலே பேஸ்புக் பங்கு வழங்கலில் ஈடுபடும் எனத் தெரிகின்றது. அதுவரை எத்தனை பங்குகள் வழங்கப்படும் எந்த விலையில் வழங்கப்படும், பேஸ்புக் நிறுவனத்தின் மொத்த மதிப்பீட்டுப் பெறுமதி போன்ற விடயங்கள் இப்போதைக்கு தெரியவரும் சாத்தியமில்லை.

எனினும் வழங்கல் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் பேஸ்புக்கின் பெறுமதி 75 - 100 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை கணிப்பிடப்படலாம் என நிதிச் சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2004 ஆம் ஆண்டு கூகுள் தனது ஆரம்ப பொது வழங்கலின் மூலம் 2 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் திரட்டியிருந்தது.

இதுவே இணைய நிறுவனமொன்று திரட்டிக்கொண்ட மிகப்பெரிய தொகையாக இருந்து வருகின்றதெனினும் பேஸ்புக் இதனை விரைவில் முந்தவுள்ளது.

பேஸ்புக் கடந்த வருடம் விளம்பரங்கள் மூலமாக 4.27 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்டியிருந்தது.

அமெரிக்க வரலாற்றில் பிரபல நிறுவனங்களான Visa 19 பில்லியன் அமெரிக்க டொலர்களையும், General Motors 18 பில்லியன் அமெரிக்க டொலர்களையும், AT&T Wireless Group 10.62 பில்லியன் அமெரிக்க டொலர்களையும், Kraft Foods 8.68 அமெரிக்க டொலர்களையும் ஆரம்ப பொது வழங்கலின் மூலம் ஈட்டிக்கொண்டுள்ளன.

தற்போது வோல்ஸ்ரீட்டில் பேஸ்புக் காய்ச்சல் தொற்றிக்கொண்டுள்ளதாக ஆய்வாளர்கள் நகைச்சுவையாகக் குறிப்பிடுகின்றனர்.

எது எவ்வாறாயினும் பேஸ்புக் அடுத்த கட்டத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளமை மறுக்கமுடியாத உண்மையாகும்.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=10940

  • தொடங்கியவர்

பல பில்லியனர்களையும் மில்லியனர்களையும் முகநூல் உருவாக்கப்போகின்றது

RICH-articleLarge.jpg

முகநூல் தலைமையகத்தில் படங்கள் வரைய அழைக்கப்பட்டவர் இவர். இவரின் வெகுமதி 200 மில்லியன்கள் டாலர்கள் வரை அமையலாம்.

http://www.nytimes.c...es.html?_r=1

Edited by akootha

முன்பு steve job செய்ததைத்தான் இன்று இவர்களும் செய்கிறார்கள் நிறுவனம் உச்சவளர்ச்சியில் இருக்கும் போது பங்குசந்தைக்குள் இறக்கி காசு பார்ப்பது. நட்டமடைந்தால் பாதிக்கப்படப்போகிறவர்கள் வாங்குபவர்கள் தான்.

முகநூலின் வளர்ச்சி இனி மட்டுப்படுத்தப்பட்டது அல்லது முன்போல் இராது

  • தொடங்கியவர்

முகநூல் வரும் பணத்தை வைத்து என்ன செய்யப்போகின்றது?

பலவழிகளிலும் தன்னை பலமாகக போகின்றது, குறிப்பாக கூகிளுக்கு தலைவலி கொடுக்கப்போகின்றது. இன்று கூகிள் தனது வருவாயில் பெரும்பகுதியை விளம்பரம் ஊடாக பெறுகின்றது. அதுவும் அதன் கிரீடமாக விளங்குவது அதன் 'தேடல்' வல்லமை.

இப்போது முகநூல் தானும் தனது பாவனையாளர்களுக்கு ( எண்ணூறு மில்லியன்கள் +) அவர்கள் சுவைக்கு ஏற்ற மாதிரி வடிவமைத்து விளம்பரங்களை அவர்கள் முகநூல் பக்கத்திற்கு அனுப்பும். இதன் மூலம் விளம்பரதாரர்களிடம் இருந்து வருவாயை கூட்டும்.

அத்துடன் இன்னும் பல வழிகளில் முகநூல் வளர சந்தர்ப்பம் உள்ளது.

  • தொடங்கியவர்
  • தொடங்கியவர்

எம்மால் கோடிஸ்வரராகும் ஷூக்கர் பேர்க்!?

பலரும் எதிர்பார்த்தைப் போல பேஸ்புக் தனது ஆரம்ப பொது வழங்கலுக்கான ஆவணங்களைப் பேஸ்புக் அமெரிக்க பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழுவிடம் (US Securities and Exchange Commission) சமர்ப்பித்தது.

இதன் மூலம் வெளியுலகுக்கு பல சுவாரஸ்யமான தகவல்கள் சிறிது சிறிதாகக் கசிந்த வண்ணம் உள்ளது.

இதேவேளை பேஸ்புக் ஸ்தாபகர் மார்க் ஷூக்கர்பேர்கின் பெறுமதி என்னவாக இருக்கலாம் அதாவது அவரின் சொத்து மதிப்பு எவ்வளவாக இருக்கலாம் என விவாதங்களும் நடைபெற்று வருகின்றன.

தொழில்நுட்ப உலகில் பேஸ்புக் எவ்வளவு பிரபலம் பெற்று விளங்குகின்றதோ அதே அளவிற்கு அதன் ஸ்தாபகர் ஷூக்கர்பேர்க்கும் புகழ்பெற்றுத்திகழ்கின்றார்.

பலரின் கணிப்பின் படி ஷூக்கர்பேர்கின் பெறுமதி சுமார் 28 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.

அதாவது ஆரம்பப் பொது வழங்கலுடன் பேஸ்புக் நிறுவனத்தின் மதிப்பு 100 பில்லியன் டொலர்களாகக் கணிக்கப்படுமாயின் அதில் 28மூ பங்கு ஷூக்கர் பேர்க்கின் உடையது .எனவே அவரின் பெறுமதியானது 28 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

இப் பெறுமதியின் படி போர்ப்ஸ் சஞ்சிகையின் உலக பணக்காரர்கள் பட்டியலில் இவருக்கு கிடைக்கும் இடம் 9 ஆகும்.

என்ன? கேட்கும் போதே தலை சுற்றுகின்றதா? எங்களை வைத்தே அதாவது எமது தரவுகளை வைத்தே ஷூக்கர் பேர்க் கோடிஸ்வரராகி விட்டார் என குற்றஞ்சாட்டுகின்றனர் இன்னொரு பகுதியினர்.

கடந்த வருடம் ஷூக்கர் பேர்க்கின் மொத்த சம்பளம் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள். (ஊக்குவிப்புக் கொடுப்பனவு உட்பட)

எனினும் அடுத்த வருடம் முதல் அப்பிளின் ஸ்டீவ் ஜொப்ஸைப் போல ஒரு டொலரை மட்டுமே ஊதியமாகப் பெறப்போவதாகவும் ஷுக்கர்பேர்க் அறிவித்துள்ளார்.

தனது நிதி திரட்டலுக்கான காரணம் சிறப்பான சேவைக்கே தவிர, பணம் பெறுவதற்காக அல்ல"we don’t build services to make money; we make money to build better services." எனவும் தெரிவித்துள்ளா.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=10965

  • 5 months later...
  • தொடங்கியவர்

[size=4]இன்று மிகநூல் நிறுவனம் தனது காலாண்டு வரவு - செலவை சமர்ப்பித்தது. [/size]

[size=1][size=4]அதன் வருமான வேக வளர்ச்சி எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்ற காரணத்தால் அதன் பங்கு விலை ஆரம்ப விலையை விட குறைந்தது. [/size][/size]

Unhappy with

Facebook ’s first financial report as a public company Thursday, investors fled the stock in droves even as Mark Zuckerberg, the company’s chief executive, extolled its growth prospects to industry analysts.

[size=5]Facebook’s stock lost 18 percent of its value Thursday. The first blow came during regular trading largely because of the [/size]

poor results [size=5]posted by Zynga, the social game company that uses Facebook as a platform.[/size]

[size=1][size=5]But the stock continued to plummet in after-hours trading after Facebook announced its own numbers, dipping below $24, a record low. Since going public two months ago at $38 a share, Facebook shares have lost 37 percent of their value.[/size][/size]

Edited by akootha

  • தொடங்கியவர்

[size=4]- இரண்டு நாட்களுக்கு முன்னர் இதுவரை ஏமாற்றாத 'ஆப்பிள்' நிறுவனம் நட்டத்தை அறிவித்தது[/size][size=1]

[size=4]- அத்துடன் ஐ போன் 5 இன் அறிமுகமும் தாமதமாகலாம் என்றார்கள் [/size][/size][size=1]

[size=4]- சாம்சங்குடனான காப்புரிமை வழக்கு செலவுகளும் நட்டத்திற்கு காரணம் [/size][/size]

  • தொடங்கியவர்

[size=1]

[size=4]ஒருவரின் தோல்வி இன்னொருவரின் வெற்றி. அந்த வகையில் தென் கொரியாவின் சாம்சங் தனது கலக்சி பொருட்கள் ஊடாக இந்த முதலாவது காலாண்டில் மிகப்பெரிய இலாபத்தி ஈட்டியுள்ளது: [/size][/size][size=1]

[size=4]- இலாபம் : 4,5 பில்லியன்கள் அமெரிக்க டாலர்கள் [/size][/size][size=1]

[size=4]- அதிகரிப்பு : 48%[/size][/size]

[size=1]

http://finance.yahoo.com/news/galaxy-phones-drive-samsung-record-004839926.html;_ylt=ArM5jGFORTGYl0UlxcDLA8iiuYdG;_ylu=X3oDMTNyNmhpNjdkBG1pdANGUCBUb3AgU3RvcnkgTGVmdARwa2cDYzlhYWZmNWMtNGY4ZS0zMjM0LThlZWUtOTVkNjk0ODVlZDc3BHBvcwMzBHNlYwN0b3Bfc3RvcnkEdmVyAzk0ZjAwOGIxLWQ3Y2EtMTFlMS1iMzdlLWE0NTVkMmVlOWYyNQ--;_ylg=X3oDMTFpNzk0NjhtBGludGwDdXMEbGFuZwNlbi11cwRwc3RhaWQDBHBzdGNhdANob21lBHB0A3NlY3Rpb25z;_ylv=3[/size]

  • தொடங்கியவர்

[size=4]நாற்பது, முப்பது டாலர்களில் இருந்த ஒரு பங்கு இன்று முதல் முறையாக இருபதிற்கு கீழே சென்றது. [/size]

Facebook shares fall below $20

http://www.theglobeandmail.com/technology/tech-news/facebook-shares-fall-below-20/article4458854/

[size=1]

[size=4]தான் ஒரு கைத்தொலைபேசியை வெளியிட உள்ளதாகவும் கூறியுள்ளது. [/size][/size]

[size=1]

[size=4]இதனால் பலகோடிகளை பலரும் இழந்துள்ளனர் [/size][/size]

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

[size=6]ஷூக்கர் பேர்க்கின் சரிவு![/size]

தொழில்நுட்ப உலகில் மார்க் ஷூக்கர் பேர்க்கை அறியாதவர் இல்லையெனலாம்.

[size=4]உலகில் மிகப் பிரபலமானதும் அதிக பாவனையாளர்களைக் கொண்ட சமூக வலையமைப்பின் ஸ்தாபகரே ஷூக்கர் பேர்க்.[/size]

[size=4]உலகின் இளம் கோடிஸ்வரர்களில் ஒருவராக அறியப்பட்ட இவர் தொழில்நுட்பத்துறையில் உள்ள முதல் 10 மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவராகவும் திகழ்ந்தார்.[/size]

[size=4]ஆனால் தற்போது தொழில்நுட்பத்துறையில் உள்ள முதல் 10 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து முதன்முறையாக வெளியேறியுள்ளார்.[/size]

[size=4]இதற்கான காரணம் பங்குச் சந்தையில் பேஸ்புக் பங்குகளின் விலை தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருகின்றமையாகும்.[/size]

[size=4]பேஸ்புக் கடந்த மே மாதம் தனது ஆரம்பப் பொது வழங்கலை ஆரம்பித்தது.[/size]

[size=4]நஸ்டக் பங்குச்சந்தை (Nasdaq stock market) மூலமாக பேஸ்புக் தனது பங்கு விற்பனையை ஆரம்பித்தது. [/size]

[size=4]பேஸ்புக்கின் பங்குச்சந்தைப் பிரவேசமானது உலக அளவில் பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது. [/size]

[size=4]ஆரம்பத்தில் நன்றாகப் போய்க்கொண்டிருந்த பேஸ்புக்கின் பங்கு வியாபாரம் பல காரணங்களுக்காகத் தொடர்ச்சியாகச் சரியத் தொடங்கியது.[/size]

facebook_balloon_1690175.jpg

[size=4]இதனையடுத்து அதன் ஸ்தாபகரும் பேஸ்புக்கின் அதிக பங்குகளைக் கொண்டுள்ளவருமான ஷூக்கர் பேர்க்கின் சொத்து மதிப்பும் சரியத் தொடங்கியது.[/size]

[size=4]இந்நிலையில் தற்போது பேஸ்புக் பங்கொன்றின் விலை 20.4 அமெரிக்க டொலர்களாகும்.[/size]

[size=4]ஆரம்பப் பொது வழங்கல் விலையான 38 அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடும் போது 47 % வீழ்ச்சியைக் காட்டுகின்றது.[/size]

[size=4]இதன்மூலம் அவரின் சொத்துமதிப்பு 423 மில்லியன் அமெரிக்க டொலர்களால் குறைந்துள்ளது.[/size]

[size=4]இதனால் தொழில்நுட்பத்துறையில் உள்ள முதல் 10 மிகப்பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இருந்து ஷூக்கர் பேர்க் வெளியேறியுள்ளார்.[/size]

[size=4]இப்பட்டியலில் முதலிடத்தில் பில்கேட்ஸ் உள்ளார். அவரின் சொத்து மதிப்பு 62 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.[/size]

http://www.virakesari.lk/article/technology.php?vid=19

  • தொடங்கியவர்

[size=4]பங்குகளை இலவசமாக பெற்றவர்களுக்கு இருந்த விற்பனை செய்யும் தடை காலி நீங்கியது.[/size][size=1]

[size=4]பலரும் தமது பங்குகளை விற்றனர். [/size][/size]

[size=1]

[size=4]அதனால் இன்று அதிகூடிய விலை குறைவை சந்தித்தது ` 20 USD[/size][/size]

[size=5]Facebook shares plunge to record low as insiders allowed to sell[/size]

http://www.thestar.com/business/sciencetech/article/1242559--facebook-shares-fall-in-pre-market-trading-as-insider-lock-up-ends

நல்ல விடயம் அகூதா....தொடர்ந்து எழுதுங்கள்....

பேஸ்புக்கை (பங்கை) நம்பியவர்கள் பேஸ்த் அடித்துப்போய் கிடக்கின்றார்கள்... இங்கு எமனை விஞ்சிய எமகண்டனுகள் இருக்கிறாங்கள்.... :o :o

  • தொடங்கியவர்

[size=4]பங்குச்சந்தை என்பது சுழிகள் உள்ள கடல். எப்ப அலை வரும் சுழி அடிக்கும் என கூறமுடியாது. [/size][size=1]

[size=4]ஆனால், நல்ல மாலுமிகள் உள்ளனர்:[/size][/size]

[size=5]1. http://en.wikipedia.org/wiki/Warren_Buffett[/size]

[size=5]2. http://en.wikipedia.org/wiki/John_Paulson[/size]

[size=5]3. http://en.wikipedia.org/wiki/George_Soros[/size]

  • தொடங்கியவர்

[size=5]புதிய உச்ச எல்லையை தொடும் - ஆப்பிள் : http://finance.yahoo.com/q?s=AAPL[/size]

[size=5]புதிய கீழ் மட்டத்தை தொடும் - பேஸ்புக் : http://finance.yahoo.com/q?s=fb [/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.