Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா.வில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானம் இலக்குகளை எட்டுவதற்கான ஒரு கருவி - அமெரிக்கா

Featured Replies

ஐ.நா.வில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானம் இலக்குகளை எட்டுவதற்கான ஒரு கருவி - அமெரிக்கா

ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானம் மனிதவுரிமைகள் மற்றும் நல்லிணக்கம் ஆகிய விடயங்களில் இலக்குகளை எட்டுவதற்கான ஒரு கருவியாகப் பயன்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானம் தொடர்பில் நெதர்வாந்து வானொலி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், இவ்விகாரம் தொடர்பில் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவுக்கான அமெரிக்க பிரதிநிதிகள் குழுவின் பேச்சாளரான டேவிட் கென்னடியை நெதர்லாந்து வானொலி செவ்வி கண்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் சிறிலங்காவுக்கு எதிரான ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டால், அது இலங்கையில் எல்லாச் சமூகங்களையும் நல்லிணக்கத்தை நோக்கி நகர ஊக்குவிக்கும் என டேவிட் கென்னடி கூறியுள்ளார்.

அத்துடன், இதுவொரு முக்கியமான மனிதவுரிமைகள் சார்ந்த பிரச்சினை என்றும், இதற்கு சிறிலங்கா அரசாங்கம் பொறுப்புக் கூறவேண்டிய தேவை உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானமானது, அந்த இலக்குகளை அடைவதற்கான ஒரு கருவியாகப் பயன்படும் என நெதர்லாந்து வானொலிக்கு வழங்கிய செவ்வியில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, சிறிலங்கா அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட உண்மைகளைக் கணடறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழு இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறுவதற்கான சுயாதீனமான பொறிமுறையை பரிந்துரைக்கவில்லை என இலண்டனை தளமாகக் கொண்டியங்கும் மனிதவுரிமை செயற்பாட்டாளர் Fred Carverதெரிவித்துள்ளார்.

அத்துடன், இப்போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாது விட்டால், இலங்கையில் மீண்டும் போர் தொடங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்துக்கு அவர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான காத்திரமான நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளாத நிலையில், ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானம் அழுத்தங்களைப் பிரயோகிக்கும் என நெருக்கடிகளுக்கான சர்வதேச குழுவைச் சேர்ந்த அலன் கீனன் நெதர்லாந்து வானொலிக்கு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறப்பட வேண்டும் என அமெரிக்கா தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது.

இவ்விகாரம் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாது விட்டால், சுயாதீனமான சர்வதேச பொhறிமுறை ஒன்று உருவாக்கப்படுவது தவிர்க்க முடியாது என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தென்னாசியாவுக்கான பிரதிச் செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக் கடந்த வருடம் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானம் தொடர்பில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸூக்கு அமெரிக்க இராஜாங்க அமைச்சர் ஹில்லரி கிளின்டன் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=e8a8ee2d-49d6-4336-8aa7-d32a409d29f3

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா அடிக்கடி வலியுறுத்துகின்றது.

சிங்கள அரசும் அடிக்கடி மறுப்புத் தெரிவிக்கின்றது.

காலங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றது.

இவர்கள் முடிவெடுப்பதற்குள்

ஈழத் தமிழன் அழிந்து கொண்டிருக்கின்றான்.

  • தொடங்கியவர்

அமெரிக்காவாக ஒரு தீர்மானத்தை கொண்டுவந்தால், அது அவர்களுக்கே கூடுதல் நலன்களை தருவதாக இருக்கும்.

தமிழர் தரப்பும் அவர்களுடன் இணைந்து, ஆக்கபூரவமாகவும் ஒற்றுமையாகவும் செயல்பட்டால், எமது மக்களுக்கான நலன்களையும் வென்றெடுக்கலாம்.

எனவே கூட்டமைப்பு உட்பட அனைத்து தரப்புக்களும் உணர்ந்து பணியாற்றவேண்டும்.

Edited by akootha

சிரியப் புரட்சி

ஈரான்-இஸ்ரேல் புடுங்குப்பாடு

அமெரிக்க தேர்தலில் ஒபாமாவின்-கில்லரி மீள் வருகை.(கில்லரி திரும்ப ராசாங்க அமைச்சுக்கு வரும் சந்தர்ப்பம் மிக மிகக் குறைவு. இது தமிழர் பக்கத்தை- தமிழ் நாடு அடங்கலாக - உதைக்கும்)

இந்தியாவின் முட்டுக்கட்டை

இலங்கையின் எதிரியை ஏய்த்து இன்னொரு எதிரி மீது ஏவிவிடும் ஆற்றல்.

சீன, ரூசியா வீட்டோ

வரத்தக்க புதிய வட கொரிய பிரச்சனை(சாத்தியம் குறைவு).

இவற்றைக் கணக்கு பார்த்து நாம் எமது அசைவுகளை முன் எடுக்க வேண்டும். அமெரிக்க தேர்தலில் குடியரசுக்கட்சி வந்தால் தமிழர்கள் ஆதரவை இழக்கலாம். ஆனால் இலங்கை தனது அமெரிக்காவின் ஆதரவைத்திரும்ப பெறுமா என்பது நிச்சயமில்லை. கனடாவிலும், பிருத்தானியாவிலும், பிரான்சிலும் தமிழருக்கு ஆதரவில்லாதா கட்சிகள் இலங்கைக்கு எதிராகத்தொழில்ப் படுகின்றன.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க/கனேடிய/ஐரோப்பிய நாடுகளுடன் கூட்டமைப்பு தமிழர் தரப்பு நியாயங்களை அடித்துரைத்து எமது பக்கத்துக்கு வலுச்சேர்க்க வேண்டும்.புலம் பெயர் அமைப்புக்களும் தமது பங்கை ஆற்ற வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.