Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பூவுக்கும் பெயருண்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல வடிவான தாமரைப்பூ படம் போடுங்கோ.. எனக்குப் பிடித்தது..! :D

  • Replies 156
  • Views 50.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல வடிவான தாமரைப்பூ படம் போடுங்கோ.. எனக்குப் பிடித்தது..! :D

இது ஓகே யா மாமோய்...????? :rolleyes:

Lotus-Flower-1-XF7LS0BWBH-1024x768.jpg

  • தொடங்கியவர்

07 அல்லிப் பூ

11125508.jpg

40362910150457603313369.jpg

அல்லி அல்லது ஆம்பல் என்பது நீரில் வளரும் ஒரு கொடியும் , அதில் பூக்கும் மலரின் பெயரும் ஆகும். இக்கொடி குளம் , பொய்கை , நீர்ச்சுனைகள் , மெதுவாக ஓடும் ஆறுகள் போன்றவற்றில் பார்க்கலாம். அல்லி இனத்தில் சுமார் 50 வகையான கொடிகள் உள்ளன. 2000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த சங்க காலத்து இலக்கியங்களில் ஆம்பல் மலரைப்பற்றி பல குறிப்புகள் உள்ளன. அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும் (இதழ்கள் மூடும்). தாமரை காலையில் மலர்ந்து இரவில் குவியும்.எகிப்து நாட்டில் உள்ள நைல் நதியில் பூக்கும் நீல நிற அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும் என்றாலும், அதே ஆற்றில் பூக்கும் வெண்ணிற அல்லி காலையில் மலர்ந்து இரவில் குவியும். இந்தப் பூவிற்குக் குமுதம் என்ற பெயரும் உண்டு .

08 ஆரம் பூ

42478614.jpg

220px3.jpg

சந்தனம் மருத்துவப் பயன்பாடுடைய ஒரு மரமாகும் . இந்திய மரங்களில் மிகவும் விலையுயர்ந்த மரம் சந்தனமரமாகும். இந்த மரம் இந்தியாவின் கிழக்குப் பகுதி காடுகளில் மிகுந்து காணப்படும். சுமாரான உயரத்துடன் கூடிய மரம். வளர்ந்த மரம் வாசனை நிரம்பியது. மரத்தின் வைரம் பாய்ந்த கட்டைப் பகுதி எண்ணெய்ச் சத்து நிரம்பியது. இதிலிருந்து எடுக்கப்படும் ‘அகர்’ என்னும் எண்ணெய் மருத்துவப் பண்புகள் கொண்டவை. சருமத்திற்கு குளிர்ச்சியளிக்கக் கூடியவை.

சந்தன மரத்தின் வைரம் பாய்ந்த நடுப்பகுதியும், வேர்களும் மிகுந்த மணம் கொண்டவையாகும். சந்தன மரம் 12 முதல் 40 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. சந்தனமரம் தனித்து வளராது. வேறு மரத்திற்கு அருகில்தான் வளரும். மற்ற மரத்தின் வேரிலிருந்து தனக்கு வேண்டிய ஊட்டச் சத்துகளைப் பெற்றுக் கொள்கிறது.

சிறுபாணாற்றுப்படை, ஆசிரியர் – நல்லூர் நத்தத்தனார்

நறுவீ நாகமும் அகிலும் ஆரமும்

துறைஆடு மகளிர்க்குத் தோட்புணை ஆகிய

பொருபுனல் தரூஉம், போக்கறு மரபின்

தொல்மா இலங்கைக் கருவொரு பெயரிய

நல்மா இலங்கை மன்ன ருள்ளும்

மறுஇன்றி விளங்கிய வடுஇல் வாய்வாள்

உறுபுலித் துப்பின், ஓவியர் பெருமகன்

களிற்றுத் தழும்புஇருந்த கழல்தயங்கு திருந்துஅடி

பிடிக்கணம் சிதறும் பெயல்மழைத் தடக்கை

பல்இயக் கோடியர் புரவலன் பேர்இசை [116-125]

கருத்துரை :

மணம் வீசும் மலர்களையுடைய புன்னை, அகில் சந்தனம் ஆகிய மரங்களின் கட்டைகளை நீர்த் துறையிலே நீராடுகின்ற மகளிருக்குத் தெப்பமாக நீர்ப்பெருக்குக் கொணர்ந்து தருகின்ற குற்றமில்லாத பழமையான புகழினையுடைய, தொன்மையான பெரிய இலங்கையின் பெயரைத் தான் கருவிலே தோன்றிய போதே பெற்று, நல் இலங்கை நாட்டை ஆண்ட மன்னருள்ளும் குறையின்றி விளங்கிய குற்றமில்லாதவன். குறி தப்பாது வாளேந்தி வெற்றி பெற்ற வீரன். வலிமையில் புலியினைப் போன்றவன். ஓவியர் குடியிலே பிறந்தவன். பெருமைக்கு உரியவன். யானையைச் செலுத்தியதால் உண்டான தழும்புடைய வீரக்கழல் ஒளிவீசுகின்ற திருந்திய அடியினை உடையவன். பெண் யானைக் கூட்டங்களை இரவலருக்குப் பரிசாகக் கொடுத்த மழை போலும் கைகளை உடையவன். பல வாத்தியங்களை இசைக்கும் கூத்தர்களைப் பாதுகாப்பவன். பெரும் புகழினை உடையவன்.

http://treesinsangamtamil.wordpress.com/%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-sandalwood-tree/

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

மழலையின் நல்ல சிரிப்பு(பூ)போட்டு தொடங்கியிருக்கலாம். :) உங்கள் தொடர் தொடர வாழ்த்துக்கள்.

நல்ல ஆக்கம், தொடருங்கள்!+4

  • தொடங்கியவர்

09 ஆவாரைப் பூ

48737565.jpg

ஆவாரை (Cassia auriculata) ஒரு மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய ஒரு தாவரமாகும் . இந்தப் பூ இக்காலத்தில் ஆவாரம்பூ என வழங்கப்படுகிறது. தைப்பொங்கல் கொண்டாட்டத்தின்போது காப்புக் கட்டுவதற்கும், மாட்டுப்பொங்கலன்று மாடுகளுக்கு மாலை கட்டுவதற்கும், வீடுகளுக்குத் தோரணம் கட்டுவதற்கும் ஆவாரம்பூவை இக்காலத்திலும் பயன்படுத்துகின்றனர். சங்க காலத்தில் மடல்-மா ஏறி வருகையில் பயன்படுத்தப்பட்ட இந்தப் பூ தைப்பொங்கல் விழாவில் பயன்படுத்தப்படும் பூவாக மாறியுள்ளது.

22206390.jpg

10 இருள்நாறிப் பூ ( நள்ளிருள் நாறி )

83060916.jpg

இருள்நாறி என வழங்கப்பட்ட பூவைக் குறிஞ்சிப்பாட்டு நள்ளிருள்நாறி என விளக்குகிறது. மாலையில் மலரும் பூக்கள் இருளில் வண்டுகளை ஈர்ப்பதற்காக வெண்ணிறம் கொண்டிருக்கும். அவற்றுள் பெரிதும் மணந்து நாறுவது மரமல்லிகை. இக்காலத்தில் மரமல்லிகை என வழங்கப்படும் பூவைச் சங்க கால மக்கள் “நள்ளிருள்-நாறி” எனக் கொள்வது பொருத்தமானது. ”பீநாறி” என்னும் பெயர் கொண்ட மரம் ஒன்றும் உள்ளது.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

சரி பிழை

தெரிந்தது தெரியாதது இருக்கட்டும் கோ

ஒரு தொகுப்பை ஆரம்பிப்பவரிடமிருந்து இப்படி ஒரு பதில் வரலாமா?

ஒரு விடயத்தில் தெளிவின்மைக்கும் தேசியத்துக்கும் என்ன சம்பந்தம்?

அதிலும் இத்தனை கேள்விக்குறிகளுடன்???

இப்படித்தான் தேசியத்தை நேசிக்கவேண்டுமென்றால் எல்லாம் தெரிந்திருக்கணும்

எல்லாவற்றையும் துறந்திருக்கணும் என்ற எடுதுகோளால்தான் எவனும் இனி எமக்காக போராடப்போவதில்லை என்ற தேக்கநிலை.

நீங்களே இப்படிச் சொல்லலாமா விசுகண்ணை ? செய்வன திருந்தச் செய் என்று உங்களைப்போன்ற அனுபவம் உள்ள மூத்தோர்கள் , இளையவர்களாகிய எங்களுக்குச் சொல்கின்றீர்கள் . எங்களால் உங்களுக்கு வைக்கப்படும் உவப்பில்லாத கேள்விகளுக்கு கோபம் கொள்கின்றீர்கள் :(:o . எது எப்பிடியோ எனது கருத்துக்கள் உங்களை காயப்படுத்தினால் மன்னித்துக் கொள்ளுங்கோ . இனி காந்தள் பற்றிய எனது விளக்கம்..................................... :icon_idea: .

காந்தள் ஒற்றை விதையிலைத் தாவரங்களில் வெங்காயக் குடும்பமாகிய லில்லிஆசியே (Liliaceae) எனப்படும் வகையினைத் சேர்ந்ததாகும். காந்தள் என அழைக்கப்படும் கார்த்திகைத் திங்களில் முகிழ்விடும் இம்மலர்க் கொடி தமிழீழம் தவிர இந்தியா, சீனா, மலாக்கா தீபகற்பம், அயனமண்டல ஆபிரிக்கா முதலான பகுதிகளிலும் காணப்படும். இதன் தாவரவியற் பெயர்: லில்லி ஆசியே குளோரி லில்லி (Liliaceae Glory lily), இது வேலிகளிலும், பாதையோரங்களிலும், காட்டோரங்களிலும் படர்ந்து நிமிர்ந்து அழகிய விரல்கள் போலவும், சுடர்கள் போலவும் காட்சியளிக்கும். இதை மேலாண்மை பொருந்திய மலராகக் கருதுகிறார்கள்.

  • இதன் பூ தீக்கொழுந்து போலக் காணப்படுவதால், அக்கினிசலம் எனப்படும்.
  • இதன் கிழங்கு கலப்பை வடிவமானதாக இருப்பதால் கலப்பை எனவும், இலாங்கிலி எனவும் அழைக்கப்படும்.
  • இலைகளின் முனை சுருண்டு காணப்படுவதால் தலைச்சுருளி என்றும் அழைக்கப்படும்.
  • இது பற்றி ஏறுவதால் பற்றியென்றும் அழைக்கப்படும்.
  • வளைந்து பற்றுவதால் கோடல், கோடை என்றும் அழைக்கப்படும்.
  • கார்த்திகை மாதத்தில் மலர்வதால் கார்த்திகைப் பூ என்றும் அழைக்கப்படுகின்றது. மாரிகாலத்தில் முதலிலேயே வனப்பாய்த் தோன்றுவதால் தோன்றி என்றும் அழைக்கப்படும்.
  • நாட்டு மருத்துவத்திலே இதனை வெண்தோண்டி எனவும் அழைப்பர்.
  • பூவின் நிறம் இருவேறாக மாறுபடுவதால் இதனை வெண்காந்தள், செங்காந்தள் என்ற இரு வேறு வகைகளாக வருணிப்பார்கள்

செங்காந்தள் (English: Gloriosa (genus) ) அல்லது கார்திகைப்பூ ஜிம்பாவ்வே நாட்டின் தேசிய மலராகும். தமிழ்நாட்டின் மாநில மலராகவும் ஏற்கப்பட்டுள்ளது. தமிழீழத்தின் தேசிய மலராகவும் ஏற்கப்பட்டுள்ளது.

காந்தள் மூன்று வகையானது

01 செங்காந்தள் ( கார்த்திகைப் பூ )

slide3lv.jpg

02 காந்தள்

slide4yi.jpg

03 காந்தள்

slide5x.jpg

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

11 . இலவம் பூ

16621468.jpg

இலவு அல்லது இலவம் பஞ்சு மரம் செய்பா பெடண்ட்ரா என்னும் தாவரவியற் பெயரால் அறியப்படுகின்றது.

இது வெப்பவலயத்துக்குரிய ஒரு மரமாகும்.

இலவமரம் பூக்கும். காய்க்கும். பழுக்காது. காய் நெற்றாகிவிடும்

பழம் பழுக்கும், உண்ணலாம் எனக் காத்திருந்தால் கிளி ஏமாந்துபோகும்

இதனால் இலவு காத்த கிளி போல என்னும் மரபுத் தொடர் உருவாயிற்று.

நற்றிணை 105, முடத்திருமாறன் , பாலை திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது

முளி கொடி வலந்த முள் அரை இலவத்து

ஒளிர் சினை அதிர வீசி விளிபட

வெவ் வளி வழங்கும் வேய் பயில் மருங்கில்

கடு நடை யானை கன்றொடு வருந்த

நெடு நீர் அற்ற நிழல் இல் ஆங்கண்

அருஞ் சுரக் கவலைய என்னாய் நெடுஞ் சேண்

பட்டனை வாழிய நெஞ்சே குட்டுவன்

குட வரைச் சுனைய மா இதழ்க் குவளை

வண்டு படு வான் போது கமழும்

அம் சில் ஓதி அரும் படர் உறவே.

அகநானூறு 11, ஔவையார், பாலை திணை – தலைவி தோழியிடம் சொன்னது

வானம் ஊர்ந்த வயங்கொளி மண்டிலம்

நெருப்பெனச் சிவந்த உருப்பவிர் அங்காட்டு,

இலையில மலர்ந்த முகையில் இலவம்

கலிகொள் ஆயம் மலிபுதொகுபு எடுத்த

அஞ்சுடர் நெடுங்கொடி பொற்பத் தோன்றி,

கயந்துகள் ஆகிய பயம்தபு கானம்

எம்மொடு கழிந்தனர் ஆயின், கம்மென,

வம்புவிரித் தன்ன பொங்குமணற் கானயாற்றுப்,

படுசினை தாழ்ந்த பயிலிணர் எக்கர்,

மெய்புகுவு அன்ன கைகவர் முயக்கம்

அவரும் பெறுகுவர் மன்னே! நயவர,

நீர்வார் நிகர்மலர் கடுப்ப, ஓ மறந்து

அறுகுளம் நிறைக்குந போல, அல்கலும்

அழுதல் மேவல வாகிப்

பழிதீர் கண்ணும் படுகுவ மன்னே!

http://treesinsangamtamil.wordpress.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-silk-cotton-tree/

12 . ஈங்கைப் பூ

75007577.jpg

ஈங்கை என்னும் புதர்முட்செடியை இக்காலத்தில் “இண்டு” என்பர். இது பற்றி சங்க கால இலக்கியத்தில்ப் பல செய்திகளை நாம் காணமுடியும் . இளவேனில் காலத்தில் கோங்கம் பூக்கத் தொடங்கும்போது, ஈங்கை தளிர் விடுமாம்.

நௌவி-மான் குளம்பு அடி மண்ணில் பதிந்தது போல ஈங்கைப்பூ வெண்ணிறம் கொண்டதாம் . சங்க காலச் சிறுவர் விளையாடிய வட்டு நெல்லிக்காய் அளவு இருந்த்து. பிசிர் மயிர்களைக் கொண்ட ஈங்கைப் பூவும் வட்டு அளவு இருக்கும். ஈங்கை வயல் வேலியில் பூக்கும். ஈங்கைக்கு முள் உண்டு. இதனை மாமரத்துக்கு வேலியாகப் பயன்படுத்துவர். புதராக இருக்கும் ஈங்கைப் பூங்குழை தன்னை வருடிக்கொடுக்கும் இன்பத்தில் குருகு என்னும் பறவை பதுங்கியிருக்கும். ஈங்கை ஒரு வெண்மையான கொடி. பனி அரும்பும் கூதிர் காலத்தில் (கார்த்திகை மார்கழி மாதங்களில்) பகன்றையும், ஈங்கையும் பூக்கும்.ஈங்கை வெண்ணிறத்தில் பூக்கும்.

ஈங்கைத் தளிர் மாரிக் காலத்தில் மாந்தளிர் போல் இருக்கும். ஈங்கை முள் வளைவாக இருக்கும். ஈங்கைப் பூ மழை பொழியும்போது விழும் பனிக்கட்டி போல் இருக்கும்.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

13 உந்தூழ் பூ

49049902.jpg

உந்தூழ் என்பது உழுந்தைக் குறிக்க சங்க இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்ட சொல்.

உந்தூழ் என்பது வெடித்துச் சிதறி விதை பரப்பும் செடியினம். ஊழ் என்னும் சொல் முளையில் தோன்றும் கருமரபைக் குறிக்கும். “இணர் ஊழ்த்தும் நாறா மலர்” என வரும் திருக்குறளில் இச்சொல் அப்பொருள் தருவதை உணர்ந்துகொள்ளலாம்.

உந்துதல் என்பது எம்பிக் குதித்தல்.

உந்தூழ்ப் பூவைக் குறிஞ்சிப்பாட்டு “உரி நாறு அமிழ்து ஒத்து உந்தூழ்” என விளக்குகிறது. உரி நாறல் = தோல் வெடித்து நாற்று ஆதல் அமிழ்து ஒத்து = அமிழ்தம் ஒத்தது உழுந்து வெடித்துச் சிதறி விதை விழுந்து முளைக்கும். உணவுப் பயறு வகைகளில் உழுந்து அமிழ்தம் ஒத்தது. எனவே உந்தூழ் என்னும் உழுந்து மிகப் பொருத்தமான, தெளிவுபடுத்தும் திறன் கொண்ட அடைமொழியுடன் இங்குக் கூறப்பட்டுள்ளதை உணரமுடிகிறது.

14 எருவைப் பூ

77685219.jpg

எருவை என்பது செடியினத்தில் ஒருவகைப் புல். புல் என்பது உள்ளே துளை உடைய செடியினம். எருவை என்பது பெருநாணல். வேழம் என்பது சிறுநாணல். இருவகை நாணலையும் இக்காலத்தில் நாணல் என்றும், நாணாத்தட்டை என்றும், கொறுக்காந்தட்டை என்றும், பேக்கரும்பு என்றும் கூறுகின்றனர்.

நாணல் ஆற்றங்கரைகளில் செழித்து வளரும். கிளை இல்லாமல் செங்குத்தாக நேராக வளரும். மூங்கில் போலக் கணுக்கள் கொண்டது. இரண்டு-விரல் அளவு கூடப் பருக்கும். இதனை மூங்கில் போல் வளைக்க முடியாது. மூங்கில் அளவுக்குக் கெட்டித்தன்மை இல்லாதது. மிகவும் இலேசானது. எருவைப் பூ கரும்புப் பூப் போலவே இருக்கும்.

கோரை என்பது வேறு தாவரம். அது கணு இல்லாமல் நெல்லம்பயிர் போல வளரும். கோரை பாய் நெய்யப் பயன்படும்.

  • தொடங்கியவர்

15 . எறுழம் பூ

91577108.jpg

ஐங்குறுநூறு 308, ஓதலாந்தையார், பாலை திணை – தோழி தலைவனிடம் சொன்னது

பல் இருங் கூந்தல் மெல்லியலோள் வயின்

பிரியாய் ஆயினும் நன்றே விரி இணர்க்

கால் எறுழ் ஒள் வீ தாஅய

முருகு அமர் மா மலை பிரிந்தெனப் பிரிமே.

http://treesinsangamtamil.wordpress.com/%e0%ae%8e%e0%ae%b1%e0%af%81%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-alstonia-scholaris/

16 . குறு நறுங் கண்ணிப் பூ

61632678.jpg

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

17 கரந்தைப் பூ

22943139w.jpg

18 கருவிளைப் பூ

55399846.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் கோமகன், இப்போதான் இப் பதிவைப் பார்த்தேன் . மிகவும் பயனுள்ள பதிவு! :D :D

  • தொடங்கியவர்

வாழ்த்துகள் கோமகன், இப்போதான் இப் பதிவைப் பார்த்தேன் . மிகவும் பயனுள்ள பதிவு! :D :D

கருத்துச் சொன்ன சுவிக்கு நன்றிகள் :):) .

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து பகிருங்கள் கோமகன்

கோமகன் நீங்கள் எனக்கு ஒரு நன்றி கூட‌ சொல்லவில்லை :lol:<_<

  • தொடங்கியவர்

கோமகன் நீங்கள் எனக்கு ஒரு நன்றி கூட‌ சொல்லவில்லை :lol:<_<

சொல்லியாச்சு............. கொஞ்சம் வேலைகடுப்பு அக்கி . தம்பி சொல்லுறதிலை ஞாயம் இருக்குத்தான் ( பகிடிக்கு ) :lol::lol::icon_idea: .

  • தொடங்கியவர்

நல்ல பதிவுகள். பிரமிப்பாக இருக்கிறது உங்கள் ஆர்வம். பூக்களை மாலையாக்குங்கள் தங்கள் பதிவுகளால்.

எனக்கு ஊக்கமும் கருத்துஞ் சொன்ன கல்கிக்கு மிக்கநன்றிகள் :):):) .

  • தொடங்கியவர்

19 காஞ்சிப் பூ.

64773329.jpg

காஞ்சி-மரம் மிகுதியாக இருந்த ஊர் காஞ்சி. இதனைக் காஞ்சிபுரம், கச்சி என்றெல்லாம் வழங்குகின்றனர். சங்ககால மன்னன் தொண்டைமான் இளந்திரையன் கச்சியோன் எனப் பாராட்டப்பட்டுள்ளான்.

. காஞ்சி மரத்துக்குச் செம்மருது என்னும் பெயரும் உண்டு

  • காஞ்சிப் பூக்கள் அதன் நனை பருவத்தில் மீன் போலத் தோற்றமளிக்கும்
  • பூக்கள் மரத்தில் இருக்கும்போதே அதன் தாதுகள் கொட்டும்
  • காஞ்சிப்பூவின் மணத்தை வதுவை நாற்றம் என்றனர்
  • மணல் மலிந்த ற்றுத் துறைகளில் மருதும் காஞ்சியும் நெருங்கி வளரும்
  • காஞ்சிமரம் காமன் போல் அழகு மிக்கது.
  • மயில் மணிச்சிரல் என்னும் மீன்கொத்தி குயில் முதலான பறவைகள் காஞ்சி காஞ்சி மரத்தில் இருப்பிடம் கொள்வதை விரும்பும்

காஞ்சி இலைகளை ஆயர் தம் ஆடுமாடுகளுக்குத் தீனியாக அறுத்துப் போடுவர்

  • காஞ்சி தழைக்காக வெட்டப்படும்
  • மகளிர் குவித்து விளையாடிய 99 மலர்களில் காஞ்சியும் ஒன்று.
  • அமரும் இருக்கைகள் காஞ்சித் தழையில் செய்யப்படுவது உண்டு.
  • காஞ்சித் தளிர்களை ஆரமாகக் கட்டி அணிந்துகொள்வர்

குறுந்தொகை 10, ஓரம்போகியார், பாலை திணை – தோழி சொன்னது

யாயா கியளே விழவுமுத லாட்டி

பயறு போல் இணர பைந்தாது படீஇயர்

உழவர் வாங்கிய கமழ்பூ மென்சினைக்

காஞ்சி யூரன் கொடுமை

கரந்தனள் ஆகலின் நாணிய வருமே.

குறுந்தொகை 127. மருதம் திணை – -ஓரம் போகியார் – தோழி தலைவனிடம் சொன்னது

குருகுகொளக் குளித்த கெண்டை அயலது

உரு கெழு தாமரை வான்முகை வெரூஉம்

கழனியம் படப்பைக் காஞ்சி ஊர

ஒருநின் பாணன் பொய்ய னாக

உள்ள பாணர் எல்லாம்

கள்வர் போல்வர்நீ அகன்றிசி னோர்க்கே.

http://treesinsangamtamil.wordpress.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-portia-tree/

20 காந்தள் பூ.

காந்தள் பூ பற்றி இந்தப் பதிவின் முதலாவது பூவின் வரிசையில் சொல்லியுள்ளேன் .

21 காயா பூ .

82824117.jpg

kayagreenfruits3.jpg

முல்லைப்பாட்டு – ஆசிரியர் நப்பூதனார்

கார்ப்பருவத்தில் செழித்திருக்கும் முல்லைநிலம்

………………………………………….அயிர

செறிஇலைக் காயஅஞ்சனம் மலர

முறிஇணர்க் கொன்றை நன்பொன் கால,

கோடல் குவிமுகை அங்கை அவிழ,

தோடுஆர் தோன்றி குருதி பூப்ப,

கானம் நந்திய செந்நிலப் பெருவழி

வானம் வாய்த்த வாங்குகதிர் வரகின்,

திரிமருப்பு இரலையொடு மடமான் உகள,

எதிர்செல் வெண்மழை பொழியும் திங்களில் (92 – 100)

கருத்துரை:

முல்லைநிலத்து நுண்ணிய மணலில், நெருங்கிய இலைகளைக் கொண்டக் காயா மலர் மை போல் மலர்ந்திருக்கவும், தளிரையும் பூங்கொத்துக்களையும் உடைய கொன்றை, பொன் போன்ற மலர்களைச் சொரியவும், காந்தளின் குவிந்த மொட்டுகள் அழகிய கை போல பூத்திருக்கவும், மலர் இதழ் நிறைந்த செங்காந்தள் உதிரம் நிறத்தில் மலர்ந்திருக்கவும், காடு செழித்திருக்கும் முல்லை நிலத்தின் பெரிய வழியிலே, வானம் தப்பாமல் பெய்த மழையின் காரணமாக விளைந்த, வளைந்த கதிரினையுடைய வரகினூடே, திரிந்த கொம்புகளைக் கொண்ட ஆண்மானுடன் பெண் மான் துள்ளிக் குதித்து விளையாடும். இத்தகைய முல்லைநிலத்து,எதிரே செல்லும் மேகங்கள் மழையைப் பொழிகின்ற கார் காலத்தில்……………

kayapoo1.jpg

நற்றிணை 242 விழிக்கட்பேதைப் பெருங்கண்ணனார், முல்லை திணை - தலைவன் சொன்னது

இலை இல பிடவம் ஈர் மலர் அரும்ப

புதல் இவர் தளவம் பூங் கொடி அவிழ

பொன் எனக் கொன்றை மலர மணி எனப்

பல் மலர் காயாங் குறுஞ் சினை கஞல

கார் தொடங்கின்றே காலை வல் விரைந்து

செல்க பாக நின் தேரே! உவக்காண் !

கழிப் பெயர் களரில் போகிய மட மான்

விழிக் கட் பேதையடு இனன் இரிந்து ஓட

காமர் நெஞ்சமொடு அகலா

தேடூஉ நின்ற இரலை ஏறே

kayaripefruits1.jpg

குறுந்தொகை 183. முல்லை திணை - ஔவையார், தலைவி சொன்னது

சென்ற நாட்ட கொன்றையம் பசுவீ

நம்போல் பசக்குங் காலைத் தம்போற்

சிறு தலை பிணையின் தீர்ந்த கோட்டு

இரலை மானையுங் காண்பர்கொல் நமரே

புல்லென் காயாப் பூக்கெழு பெருஞ்சினை

மென்மயில் எருத்தில் தோன்றும்

கான வைப்பிற் புன்புலத் தானே.

kayatrees.jpg

http://treesinsangamtamil.wordpress.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%ae%be-ironwood-tree/

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

22 காழ்வைப் பூ.

95828127.jpg

காழ்வை என்னும் மலர் சங்க காலத்தில் மகளிர் குவித்து விளையாடிய மலர்களில் ஒன்று.

காழ் என்னும் சொல் தமிழில் வயிரத்தைக் குறிக்கும். வயிரம் என்பது ஓரரவுப் பயிரினத்தில் காணப்படும் கெட்டித் தன்மை.< அகக் காழ் கொண்டவற்றை மரம் என்றும், புறக் காழ் கொண்டவற்றைப் புல் என்றும் பழந்தமிழர் பாகுபடுத்துகின்றனர்.

பொதுவாகப் பூக்கள் மென்மையானவை. காழ்வை என்னும் பூவோ வன்மையானது. வளைந்துகொடுக்காதது. காழ்வை என்னும் சொல் அகில் கட்டையைக் குறிக்கும். மகளிர் குவித்து விளையாடியதாகக் கூறப்படும் குறிஞ்சிப்பாட்டு மலர்களில் பூ இல்லாத சந்தனமர இலையும் ஒன்றாவது போல அகில்-மர இலைக்கொம்புகளும் தொகுக்கப்பட்டுள்ளன.

சிறுபாணாற்றுப்படை, ஆசிரியர் – நல்லூர் நத்தத்தனார்

நல்லியக்கோடனின் புகழும் மாட்சியும்

……………………..மென்தோள்

துகில்அணி அல்குல் துளங்குஇயல் மகளிர்

அகில் உண விரித்த அம்மென் கூந்தலின்

மணிமயில் கலாபம் மஞ்சுஇடைப் பரப்பி

துணிமழை தவழும் துயல்கழை நெடுங்கோட்டு

எறிந்து உரும்இறந்து ஏற்றுஅருஞ் சென்னிக்

குறிஞ்சிக் கோமான், கொய்தளிர்க் கண்ணி

செல்இசை நிலைஇய பண்பின்,

நல்லியக்கோடனை நயந்தனிர் செலினே. [262-269]

கருத்துரை :

மென்மையான தோளும், ஆடையணிந்த இடையும் அசைந்தாடும் நடையுமுடைய மகளிர், அகில் புகை ஊட்டுவதற்காக விரித்துப் போட்டிருக்கும் கூந்தலைப் போன்று, நீலமணி போன்ற நிறமுடைய மயில் தனது தோகையை விரித்து ஆடுவதற்குக் காரணமான, மழை மேகங்கள், வெண்மேகங்களுக்கிடையே பரவித் தவழ்ந்து செல்லும். இம்மழை மேகங்கள் மூங்கில்கள் விளையும் உயர்ந்த சிகரங்களை முட்டி இடி இடித்து வீழ்ந்து ஏறிச் செல்லுகின்ற பெருமை பொருந்திய மலையுச்சியினையுடைய மலை நாட்டுக்குத் தலைவன். நல்லியக்கோடன் அப்போது பறித்த இளந்தளிரினால் கட்டப்பட்ட மாலையினை அணிந்தவன். புகழ் நிலைத்து நிற்றற்குரிய பண்புகளால் சிறந்தவன். இத்தகைய நல்லியக்கோடனை விரும்பி நீவீர் சென்றால், (அன்றெ பரிசில் கொடுத்து அனுப்பி வைப்பான்)

23 குடசம் பூ .

83243566.jpg

92676725.jpg

குடசம் என்னும் மலரைக் குறிஞ்சிப்பாட்டு வான்பூங் குடசம் என விளக்கிக் காட்டுகிறது.

சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களும் இதனைக் குறிப்பிடுகின்றன. குடை போன்று இருக்கும் பூ ‘குடசம்’. இதனை இக்காலத்தில் பூவரசம் பூ என்கின்றனர். பூவரச மரம் ஆற்றோரங்களில் மிகுதியாகக் காணப்படுவதால் இதனை ஆற்றுப்பூவரசு என்றும் வழங்குகின்றனர்.

சிறுவர்கள் பூவரச இலையைக் கூம்புபோல் சுருட்டி கூர்ப்பகுதியில் கொஞ்சம் கிள்ளிவிட்டு அதில் வாய் வைத்து ஊதி மகிழ்வர்.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

24 குரலி பூ ( சிறுசெங்குரலி )

71642756.jpg

25 குரவம் பூ ( பல்லிணர்க் குரவம் )

84165417.jpg

நற்றிணை 266, கச்சிப்பேட்டு இளந்தச்சனார், முல்லை திணை - தலைவி தலைவனிடம் சொன்னது

கொல்லைக் கோவலர் குறும்புனம் சேர்ந்த

குறுங் கால் குரவின் குவி இணர் வான் பூ

ஆடுடை இடைமகன் சூடப் பூக்கும்

அகலுள் ஆங்கண் சீறூரேமே

அதுவே சாலும் காமம் அன்றியும்

எம் விட்டு அகறிர்ஆயின் கொன் ஒன்று

கூறுவல் வாழியர் ஐய வேறுபட்டு

இரீஇய காலை இரியின்

பெரிய அல்லவோ பெரியவர் நிலையே.

http://treesinsangam...le-flower-tree/

நற்றிணை 224, பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலை திணை – தலைவி தோழியிடம் சொன்னது

அன்பினர் மன்னும் பெரியர் அதன்தலை

பின்பனி அமையம் வரும் என முன்பனிக்

கொழுந்து முந்துறீஇக் குரவு அரும்பினவே

புணர்ந்தீர் புணர்மினோ என்ன இணர்மிசைச்

செங் கண் இருங் குயில் எதிர் குரல் பயிற்றும்

இன்ப வேனிலும் வந்தன்று நம்வயின்

பிரியலம் என்று தெளிந்தோர் தேஎத்து

இனி எவன் மொழிகோ யானே கயன் அறக்

கண் அழிந்து உலறிய பல் மர நெடு நெறி

வில் மூசு கவலை விலங்கிய

வெம் முனை அருஞ் சுரம் முன்னியோர்க்கே.

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

கிராமிய வழக்கில் உள்ள பூவரசம்பூவுக்கு ...........மறுபெயர் குடசம் பூ...........

.பகிர்வுக்கு . ...மிகக் நன்றி

பூக்களின் தொகுப்பை விட வந்த கருத்துகள் அதிகமாக இருக்கிறது. சரியா பிழையா என சண்டை. பூக்களின் தொகுப்பில் தேசியமும் அடிவாங்குது. ம்.....ம்.....

  • தொடங்கியவர்

கிராமிய வழக்கில் உள்ள பூவரசம்பூவுக்கு ...........மறுபெயர் குடசம் பூ...........

.பகிர்வுக்கு . ...மிகக் நன்றி

எனக்கும் இப்பொழுது தான் தெரியவந்தது நிலாமதி அக்கா கருத்துச் சொன்னதிற்கு நன்றிகள் :):):) .

  • தொடங்கியவர்

பூக்களின் தொகுப்பை விட வந்த கருத்துகள் அதிகமாக இருக்கிறது. சரியா பிழையா என சண்டை. பூக்களின் தொகுப்பில் தேசியமும் அடிவாங்குது. ம்.....ம்.....

நன்றிகள் இளங்கதிர் ,உங்கள் கருத்துகளுக்கு . மேலும் , இது கருத்துக்களம் . ஒரு பதிவுக்கு பல்வேறுதரப்பட்ட கருத்துகள் வந்து படைப்பாளியைச் செம்மைப்படுத்தும் . இதை சண்டை என்று பொதுமைப்படுத்துவதை என்னால் எற்றுக்கொள்ள முடியவில்லை :):):) .

  • தொடங்கியவர்

26 குருகத்திப் பூ ( பைங் குருகத்தி ) .

15517620u.jpg

27 குருகு இலை .

74611335.jpg

  • கருத்துக்கள உறவுகள்

23 குடசம் பூ .

83243566.jpg

92676725.jpg

பூவரசம்பூவை கன ஆண்டுகளுக்குப் பின்னால பார்த்தது என்னவோ மாதிரி ஆகிவிட்டது..! :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.