Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அழிவின் எச்சங்களும் இராணுவ பிரசன்னமுமே யாழ்பாணத்தின் அடையாளமாக உள்ளது - புதியதலைமுறை தொலைகாட்சி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

puthiyalalaimurai.jpg

தமிழகத்தில் இருந்து ஒளிபரப்பாகிவரும் புதியதலைமுறை தொலைக்காட்சி குழுவினர் தற்போதைய உண்மைநிலையினை கண்டறிவதற்காக இலங்கைக்கு பயணமாகியிருந்தனர்.

அங்கு அவர்கள் நேரில் கண்டவற்றை "உண்மையைத்தேடி இலங்கையில் புதியதலைமுறை" என்ற நிகழ்சியை இன்று தொகுத்து வழங்கியுள்ளது. இரவு எட்டுமணிக்கு ஒளிபரப்பான நிகழ்ச்சியின் தொடர்ச்சி நாளையும் இடம்பெற உள்ளது.

சென்னையில் இருந்து கொழும்பு சென்ற புதியதலைமுறை செய்திக் குழுவினர் தமிழர் பகுதிகளிற்கு செல்ல சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சகத்தால் அனுமதி மறுக்கப்பட்டதாகவும் பின்னர் அனுமதி வழங்கப்படுவதும் மீண்டும் மறுக்கப்படுவதுமாக சில நிமிடங்களிலேயே இவ்வாறு பலதடவை வழங்கப்படுவதும் மறுக்கப்படுவதுமாக இருந்து பின்னர் ஒருவழியாக வடபகுதிக்கு செல்வதற்கு அனுமதிகிடைத்ததாக தெரிவித்துள்ளார்கள்.

கொழும்பில் இறங்கியதுமே நாகரிகமயமாக்கப்பட்ட நகரமாக தெரிந்த சமயத்தில் முழுமையாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததை காணக்கூடியதாக இருந்ததாக செய்திக்குழுவினர் தெரிவித்துள்ளனர். பின்னர் கொழும்பில் இருந்து யாழ்பாணம் பயணத்தை தொடர்ந்து செய்திக் குழுவினர் ஓமந்தை இராணுவச்சோதனைச்சாவடியில் அனுமதியினை தெரியப்படுத்தி யாழ்பாணம் சென்றதாகவும் அங்கு தங்குவதற்கு விடுதிகள் இன்றி இரண்டு மணிநேரத்திற்கு மேலாக அலைந்து திரிந்து தங்கியதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

யாழ்ப்பாணத்தின் அடையாளமாக இருந்த பனைமரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டு இருந்த சுவடே தெரியாமல் இருப்பதனை வீடியோ ஆதாரத்துடன் வெளிப்படுத்திய புதியதலைமுறை குழுவினர் தமிழர் பகுதிகளில் நீக்கமற நிறைந்துவிட்ட சிங்கள இராணுவத்தினரின் பிரசன்னத்தையும் வெட்டவெளிச்சமாக்கியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் பத்து தமிழர்களிற்கு ஒரு இராணுவவீரன் என்ற ரீதியில் சிங்கள இராணுவமயப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டடுள்ளார்கள். வீதிகளில் பயணிக்கும் போது திடீர் திடீர் என மக்களை மறித்து விசாரணை செய்வதும் சோதனை மேற்கொள்வதும் இயல்பாகிவிட்டதையும் சிங்களவர்கள் என்றால்கண்டுகொள்ளாமல் விடுவதையும் ஆதாரபூர்வமாக தெரிவித்துள்ளது புதியதலைமுறை செய்திக்குழு.

யாழ்ப்பாணத்தில் வெளிப்படையாக பார்க்கும் போது இயல்பான சூழல் ஏற்பட்டுள்ளதாக தோன்றினாலும் அங்குள்ள தமிழர்கள் ஒருவிதமான அச்சசூழலில் வாழ்ந்துவருகின்றதை படம்பிடித்துக்காட்டியுள்ளது புதியதலைமுறை தொலைக்காட்சி. வீதிகள் எங்கும் சிங்கள இராணுவத்தினர் ஆக்கிரமித்து நிற்பதநாலேயே இந்த அச்சுறுத்தலான சூழல் ஏற்பட்டுள்ளதையும் காண்பித்துள்ளது.

இவ்வாறு அச்சுறுத்தலான சூழல் நிலவுவதை அங்குள்ள மக்களைப்பார்க்கும் போது தெரிவதாக கூறியுள்ளார்கள். வீதிகளில் எதிர்படும் இருவர் சந்தித்து கதைத்துக் கொண்டிருக்கும் சூழலில் அவர்களை யாராவது கடந்துசெல்வது தெரிந்தால் கதையினை மாற்றி வேறுவிடையங்களை கதைப்பதை அவதானிக்க முடிந்ததாக யாழ்சென்று உண்மை நிலைகளை அறிந்துவந்த செய்திக்குழுவினர் தெரியப்படுத்தியுள்ளனர்.

வன்னியில் நடைபெற்ற யுத்தத்தில் இருந்து தப்பித்து செல்லும்போது கைவிட்டுச் சென்ற கால்நடைகளும் பயன்தரும் மரங்களும் அழிக்கப்பட்டு காணாமல்போயுள்ளதையும் பறிகொடுத்த மக்களது வாக்குமூலமாக பதிவுசெய்துள்ளது. சிறிலங்கா அரசாங்கத்தின் மீது தமக்கு நம்பிக்கை இல்லை என்றும் கடவுள்மீதுள்ள நம்பிக்கையாள்தான் மீண்டும சொந்த இடங்களிற்கு திரும்பியுள்ளதாகவும் ஈழத்தமிழர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மரணம் விளையாடிய மண்ணில் இப்போது விலைவாசி உயர்வால் தமிழர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத்திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ள தினமும் ஒரு டொலர் வருமானத்தில் ஒவ்வொரு தமிழர்களும் வாழ்க்கையினை நடாத்திவருவதாகவும் தெரிவத்துள்ளது.

போரினால் தமிழர்களது வாழ்வாதாரம் அழிக்கப்பட்டுவிட்ட போதும் அடுத்த தலைமுறை நம்பிக்கையுடன் கல்வியை ஊக்கமுடன் படித்துவருவதையும் தமது புகைப்படக் கருவிகளினூடாக வெளியுலகிற்கு காட்டியுள்ள புதியதலைமுறை தொலைக்காட்சியின் உண்மைதேடிய பயணம் நாளை கிளிநொச்சிக்கு பயணமாகின்றது.

ஈழதேசம் இணையத்தள தமிழக செய்திக்குழு.

http://www.eeladhesa...ndex.php?option

  • கருத்துக்கள உறவுகள்

அவலங்களைத் தமிழகம் காணட்டும்!

ஆனால், கண்ணீர் மட்டும் சிந்தக்கூடாது!

அதை நாங்கள் செய்து கொள்கின்றோம்!

உங்களால் முடிந்தால்,

அழிவுகளை நிகழ்த்திவிட்ட,

அந்தத் தலைமைகளைத் தூக்கி எறியுங்கள்!

அது மட்டும் போதும், எங்களுக்கு!!!

நன்றிகள், தமிழரசு!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு பண்டைய காலத்து இனத்தை அழிக்கவேண்டும் என்றால் அவர்களது வாழ்வாதார மரத்தை அழித்தாலே போதும்.

எங்கட கஷ்ட காலம் இமேல்டா சிங்களவனோட சுற்று பயணம் கிழம்பி பிசி,  ஆமைச்சர் பண்ணெய் பிசினெஸில் பிசி,  பல்கலை கழக அறிவு கொழுந்துகள் பதவி சண்டையில் பிசி.... எங்கட ஆக்கள் சீரியலோட பிசி.

சிங்களவனை எப்பவும் குறை சொல்ல கூடாது. 

இந்த புதிய தலைமுறை டிவி ரோவின் டிவியாகும்.அது பற்றி முக நூல் வழித் தெரிந்த செய்திகள்.

Thirumurugan Gandhi

புதிய தலைமுறையின் “உண்மையை தேடி” ஆவணப்படத்தினை பற்றிய எனது மதிப்பீடு. போரின் வடுக்களையும் வெற்றியின் சின்னங்களையும் பார்க்கமுடிந்ததாக பேசும் இந்த ஆவணப்படம், இலங்கை அரசு தமிழீழத்தின் கட்டுமானங்களை மீளச்செய்துகொண்டிருப்பதாக காட்சிப்படுத்துவதில் ஆவணப்படம் மெளனமாக பேசத்துவங்குகிறது. வசனங்களூடாகவும், காட்சிகளூடாகவும் தமிழீ...ழப்பகுதிகளில் இலங்கை அரசு செய்த வன்முறைகள், ஆக்கிரமிப்புகள், அழிப்புகள் என்று எதையும் காட்ட்த் துணியாது ஆவணப்படம் நெடுக தமிழீழ விடுதலை புலிகள் தங்களின் போருக்கு எதையும் செய்யத் தயாரானவர்கள் என்கிற தொனியை மிகக் கவனமாக வைக்கிறது. சாலைகள், கட்டுமான்ங்கள் என வளர்ந்து கொண்டு இருக்க்கூடிய ஒரு ஆசிய-ஆப்பிரிக்க நாடுகளைப்பற்றிய ஒரு வர்த்தக சாதகங்கங்கள் ஆவணப்படமாக –(பிசினஸ்- ஆப்பர்ச்சூனிட்டி) இந்த காணொளி நகர்வதாக நான் காண்கிறேன்.(போருக்கு பின்னான ஒரு அரசு தனது நாடு முதலீடுகளை ஈர்க்க செய்யும் யுக்தியானது தனது நாடு போரிலிருந்து மீள்கிறது, போராடியவர்களின் கோரிக்கை தற்போது மாறிவிட்டது, வளர்ச்சியும், உதவியுமே அவர்கள் தேவை என முன்வைக்கப்படுவது வாடிக்கை. மேலாக போராளிகளின் மீது குற்றசாட்டுகள் திருப்பப்படுவதும் இதற்காகத்தான்) மேலாக இலங்கை தமிழரின்( புதியதலைமுறையின் வாசகம்) வாழ்வியல் சூழலின் சீரழிவைப் பற்றி பேசுவதாக காண்பிக்கப்பட்டாலும் இதன் அடிநாதமாக விளங்குவது 1. தமிழர்களின் வாழ்வு மிகவும் பின் தங்கி உள்ளது: காரணம் – புலிகள் நடத்திய போரும் அதன் முறையும் 2. தமிழீழ பகுதியின் கட்டுமானங்கள் சிதைக்கப்பட்டுள்ளன. காரணம்- புலிகள் அதை போருக்கு பயன்படுத்தினார்கள் 3. தமிழர்கள் மனதளவில் பெரிதும் பாதிப்படைந்தனர் : காரணம் புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பு, குழந்தை போராளி சேர்ப்பு. 4. தற்போதய தேவை – a. அரசியல் கோரிக்கை – சிங்களவருக்கு இணையான சம உரிமை; அதாவது தமிழீழ கோரிக்கையல்ல, அதாவது விடுதலையல்ல. அதாவது ஒன்று பட்ட இலங்கைக்குள் தீர்வு. b. சமூக கோரிக்கை – வாழ்க்கையை மீளக்கட்டியமைத்தல். இதற்கு இந்தியா வீடுகள் கட்டி உதவுகிறது. தமிழ் இளைஞர்களுக்கு வழிகாட்டிகளில்லை, அதாவது கல்விச்சாலைகளும், வேலைவாய்ப்பு மனிதவள நிறுவனங்களும் ஆரம்பிக்கப்பட வேண்டும். ( அதாவது எஸ்-ஆர்-எம் பல்கலைகழகம் ஆரம்பிக்கப்படவேண்டும்) 5. தமிழர்கள் பாதிக்கப்பட்டதன் காரணம் – போர். ஆனால் எந்த இடத்திலும் தவறியும் இலங்கை அரசை, இராணுவத்தை, ராசபக்சேவை புதிய தலைமுறை கேள்வி கேட்கவில்லை, கேள்விக்குள்ளாக்கவும் இல்லை. 6. இனப்படுகொலை போன்ற வார்த்தைகள் தவிற்கப்பட்டன. மனித உரிமையாளர்களின் ‘போர்குற்றம்’ வாசகங்கள் கூட பயன்படுத்தப்படவில்லை. 7. மிகமுக்கியமான கேள்வி- இந்த ஆவணப்படம் தற்பொழுது ஏன்? ஐ. நாவின் மனித உரிமை ஆணையத்தின் முன்வரும் இலங்கை அரசின் மீதான விவாதத்தில் தமிழர்கள் யாரும் விடுதலையையோ, இனப்படுகொலை விசாரணையையோ, போர்குற்றத்தையோ முன்வைக்காமல் , மறுவாழ்வு, புலிகள் செய்த போர்குற்றங்கள் (கட்டாய ஆட்சேர்ப்பு, குழந்தை போராளிகள், முக்கியமாக பெண் குழந்தை போராளிகள், கண்ணிவெடிகள் இன்றும் அகற்றப்படாமை) ஆகியன கவனத்திற்கொண்டு வரப்படவேண்டும். 8. புலிகள் மக்கள் பயன்படுத்தும் தண்ணீர் தொட்டியை குண்டு தயாரிக்க பயன்படுத்தினர், தொலைதொடர்பு கம்பிகள்-மின்கம்பிகளை சிதைத்து மக்களின் சராசரி வாழ்வினை பின்னுக்குதள்ளி போர்புரிந்தார்கள். 9. தமிழர்கள் தங்கள் குடும்பத்தினர் புலிகளாக மாறி போராடுவதை வெறுத்தார்கள், மிகமுக்கியமாக புலிகளிடமிருந்து தங்கள் குழந்தைகளை மறைத்தார்கள். இதுவே தமிழர்களுக்கும் புலிகளுக்குமான உறவு. 10. முகாமில் இருந்த தமிழர்கள் ராணுவத்திற்கு தெரியாமல் கிட்ட்தட்ட 600க்கும் அதிகமானவர்கள் தப்பிவெளியேறி இருந்தார்கள். ஆகவே முகாமில் காணாமல் போன தமிழர்கள் இவ்வாறு தப்பியவர்களாகவே இருக்க முடியும். அவர்கள் இராணுவத்தாலோ, ஒட்டுகுழுக்களாலோ, உளவுபிரிவுகளாலோ கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள். ( நாளை நாங்கள் முகாமை திறக்கும் போது காணாமல் போனவர்களை பற்றி நீங்கள் எங்களை குறைசொல்லக்கூடாது ஏனெனில் அவர்கள் எங்களுக்கு தெரியாமல் தப்பியவர்கள்). எல்லாவற்றிற்கும் மேலாக மறைந்திருந்து எடுத்தது போன்றதொரு கேமிரா கோணம் வேறு காட்டப்படுகிறது.( காணொளி படங்கள் எடுக்கத்தெரிந்தவர்களுக்கு இது ஒரு நாடகம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக புரியும். ) 11. மறுவாழ்வு முகாமிலிருக்கும் பெண்புலிகள் வன்முறையாளர்களாக, மன நோயாளிகளாக மாறி இருக்கிறார்கள். அவர்களை நீங்கள் பார்க்க முடியாது. அவர்கள் மூலையில் குறுகி நின்று பின் தப்பிச்செல்லும் மனப்பாங்குடன் செயல்படுகிறார்கள். (அதாவது அத்தகய குரூரத்தை அவர்கள் புலிகளிடம் அனுபவித்திருந்தார்கள்.). மேலும் அவர்கள் புலிகளிடத்தில் இருந்த போது ஆக்ரோசத்துடன் இருக்க பழக்கப்படுத்தவிட்டதால் அவர்கள் அவ்வாறே இங்கும் பிறருடன் நடந்து கொள்கிறார்கள். அதாவது அவர்கள் புலிகளின் முகாமில் வெறியேற்றப்பட்டவர்களாக வளர்க்கப்பட்டனர். இவர்கள் இன்று, இலங்கை அரசின் கீழ், நன்முறையில் அக்கரையுடன் பராமரிக்கப்படுகிறார்கள். ஆனால் அவர்களை நீங்கள் பார்க்க முடியாது. 12. இவ்வாறாக இந்த காணொளியை பார்ப்பவர்கள் சேனல்4ன் கொடூரத்தை மறக்குமாறும், நச்சுவாயு குண்டுகள், ரசாயன குண்டுகள், கொத்துக்குண்டுகள் என்று நட்த்தப்பட்ட போரை மறந்து புலிகளால் கட்டாயமாக சேர்க்கப்பட்டவர்களையும், குழந்தைப் போராளிகளையும் வைத்துக் கொண்டு, மக்களின் அடிப்படை தேவைகளுக்கான பொருட்களை சிதைத்து உருவாக்கிய ஆயுதங்களையும் வைத்து நடத்தப்பட்ட போரினால் தமிழர்கள் தங்கள் வாழ்வை இழந்தார்கள் என்கிற செய்தி தமிழகத்தின் மூலை முடுக்கிற்கு கொண்டு சேர்க்கப்பட்டது. புலி எதிர்ப்பு-தமிழீழ எதிர்ப்பு செய்தி தமிழகத்தின் வரலாற்றில் இவ்வளவு தீர்க்கமாக , நுணுக்கமாக என்றுமே கொண்டு செல்லப்பட்டதில்லை. ஆவணப்படத்திலிருந்து :: நாகேஸ்வரி :: விடுதலைப்புலிகளின் குழந்தை போராளிகள் –. பிள்ளைகள் படிக்க வேண்டும். வேலை வேண்டும். போராட்டமல்ல. தர்மாராசா ராகினி :: விடுதலைபுலிகளின் படையில் கட்டாய ஆள்சேர்ப்பு. அதன் காரணமாக குழந்தை பருவத்தில் திருமணம் செய்து வைக்கப்படுதல். கணவனை இழத்தல். கிளிநொச்சி : தண்ணீர் தொட்டி வீழ்ந்து கிடத்தல் காட்சி- பின்னனியில் புலிகள் அதை வீழ்த்தி இரும்பை எடுத்து ஆயுதம் தயாரித்தது. . கருணாகரன் – பத்திரிக்கையாளர் – மக்கள் தரப்பு பகுதியில் யுத்தம் நடந்தது. இருதரப்பும் மக்களை பற்றிய அக்கரைகொண்டு இருக்கவில்லை. சின்னதுரை ராஜேந்திரன் - இந்திய உதவவில்லை.. துரோகம் இழைத்துவிட்டது. ஆனால் இந்தியா கட்டிகொடுத்த வீடுகள் காட்டப்படுகிறது. வவுனியா ::முன்பொருதடவை இலங்கை முழுவதும் ரயில்கள் ஓடின.. புலிகளுக்கு ஆயுதம் தேவைப்பட்ட்தால் ரயில் தண்டவாளங்கள் பயன்படுத்தபட்டன அதன் காரணத்தால் ரயில்கள் ஓட்டப்படமுடியவில்லை. மேலும் இலங்கை அரசின் தரப்பிலிருந்து விசாரிக்கப்படுபவர்கள் “டக்ளஸ் தேவானந்தா”. சிங்கள தரப்பு தன்னை பாதுகாக்கிறது. அதன் மீது கூர்மையான விமர்சனங்கள் வைக்கப்படவில்லை. தனது ஆவணப்படத்தின் நேர்மையற்ற தன்மையை நாளை ஈழ ஆதரவு இயக்கங்கள் விமர்சிக்க கூடாது என்பதற்காக தமிழீழ விடுதலையில் ஆர்வம் காட்டும் “ பெரியார் திராவிடகழகம்” “மதிமுக” போன்ற முன்னனி இயக்கங்களிடம் கருத்து கேட்கப்பட்டிருக்கிறது... வெளிப்படையாக எதிர்ப்பு பேசுபவனை விட மறைமுக எதிராளி ஆபத்தானவன்.. இதே தோரணையை தான் “ காலச்சுவடும்” “NDTV" யும் செய்து வருகின்றன. தற்போது தமிழில் தொலைக்காட்சியாக புதிய தலைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது. ”உண்மையை தேடி “… எந்த உண்மையை கண்டறிந்தார்கள்?. புலிகள் மக்களுக்காக போராடவில்லை எனும் உண்மையை கண்டறிந்திருக்கிறார்கள். புலிகள் நடத்திய போரினால் தமிழர்களின் வாழ்வு அழிந்திருக்கிறது என்கிற உண்மையை அறிந்திருக்கிறார்கள். இந்த உண்மையை (?) ப.சிதம்பரத்தின் மகன் கூட சென்னையின் மையத்தில் இருக்கும் பார்க் ஓட்டலின் பாரில் உட்கார்ந்து கொண்டே சொன்ன ’உண்மை’தானே. காங்கிரஸ் இத்தனைகாலம் புலம்பியதை முதிர்ச்சியற்ற காணொளிபதிவுகளின் மூலமாகவும், அட்வென்ச்சரிசம் (அரைவேக்காட்டு) என்னும் தோரணையிலும் காட்டப்பட்ட ஆவணப்படம். காங்கிரஸின் பொய்கள் எல்லாம் சேர்த்து - புதிய பானையில் வடிக்கப்பட்ட ”

ஆவணப்படத்துக்காக புதிய தலைமுறையினர் இலங்கை போயிருந்த போது உண்மைப் பின்னணி விசயம் தெரியாத இலங்கை ராணுவத் தளபதி ஒருவர் அவர்களை வெளியில் விட வேண்டாம் விடுதியிலேயே வைத்துத் திருப்பி அனுப்புமாறு சொல்ல அதைக் கேள்விப்பட்ட கோத்தாபாய ராஜபக்‌ஷ அந்த ர...ாணுவ தளபதியைக் கடிந்து கொண்டதுடன் படம் எடுப்பதற்கான எல்லாவசதிகளையும் உடனே செய்து கொடுக்குமாறு உத்தரவிட்டார் அத்துடன் அவர்களை இரவுணவுக்கும் அழைத்திருந்தார், அந்த விருந்தில் இலங்கையில் உள்ள இந்தியத்தூதரகத்தின் றோ வின் செயற்பாடுகளுக்கான கட்டளைத் தலைமை அதிகாரி திருமதி பிரபா மூர்த்தியும் கலந்து கொண்டார். அத்துடன் அதில் பேட்டி கொடுத்த பலரும் இப்போது யாருக்கு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது முக்கியமான விடயமாகும். இவ்வளவின் பின்னும் ஆவணப்படம் எப்படி உண்மையை உரைக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம்..?(நன்றி திருக்குமரன்)

‎//‘Puthiya Thalaimurai’ is headed by veteran journalist V Maalan and boasts of eminent guest columnists such as former President APJ Abdul Kalam, V Irai Anbu, and Ramesh Prabha, among others. //

//But grapevine has it...that the SRM management has made the channel to do a volte face in the matter of Koodankulam nuclear plant issue. The channel which was vociferous in its coverage and support to the agitators has done a somersault and is found actively canvassing FOR the nuclear plant which has agitated the anti-nuclear activists in the State.//

  • கருத்துக்கள உறவுகள்

இந்த புதிய தலைமுறை டிவி ரோவின் டிவியாகும்.அது பற்றி முக நூல் வழித் தெரிந்த செய்திகள்.

போகிற போக்கைப் பார்த்தால் புலம் பெயர்ந்த நாடுகளில் எம்மவர் வீடுகளில் இந்த தொலைகாட்சியும் வந்தாலும் வரலாம். எங்கட சனம் தமிழினப் படுகொலைக்கு உடந்தையாக இருந்த சோனியா அரசுக்கு துணைபோன சன், கலைஞர் தொலைக்காட்சிகளைத்தானே இப்ப விரும்பிப் பார்க்கினம்.

  • கருத்துக்கள உறவுகள்

போகிற போக்கைப் பார்த்தால் புலம் பெயர்ந்த நாடுகளில் எம்மவர் வீடுகளில் இந்த தொலைகாட்சியும் வந்தாலும் வரலாம். எங்கட சனம் தமிழினப் படுகொலைக்கு உடந்தையாக இருந்த சோனியா அரசுக்கு துணைபோன சன், கலைஞர் தொலைக்காட்சிகளைத்தானே இப்ப விரும்பிப் பார்க்கினம்.

எங்கன்ட சனம் (என்னையும் சேர்த்துதான்)நாளைக்கு கோத்தபாயாவுடன் பஜனை பாடினாலும் பாடுவினம்...கோத்தா சீரடி பாபாவின் பக்தனாம்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.