Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவின் முதல் கப்பல் படை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

http://a8.sphotos.ak..._36644748_n.jpg

Wall Photos

இந்தியாவின் முதல் கப்பல் படையை நிறுவி தெற்காசியா வரை தன் கொடியை நாட்டிய ராஜ ராஜா சோழனின் படை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய படகின் மாதிரி வடிவம் !.இந்திய தொல்பொருள் ஆய்வகத்தால் உருவாக்கப்பட்டது."திருநெல்வேலி" அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது !! .

உலகின் சிறப்பு வாய்ந்த இந்த ஆயிரம் வருட அற்புதமான கப்பல் படையை பற்றிய சில அற்புதமான தகவல்கள் உங்களுக்காக .இந்த கப்பல்களானது போர்க்கருவிகளை கொண்டு செல்வதற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டது .இந்த கப்பல் படையை நிறைய குழுக்களை கொண்டிருந்தது . அனைத்து குழுவிற்கும் தலைவர் "அரசர்". இதில் " கனம் " (நிறைய போர் வீரர்களை கொண்ட குழு ) என்பது தான் தலைமைப் பிரிவாக செயல்பட்டது ,இதை நிர்வகிப்பவர் " கனாதிபதி " . . "கன்னி" (போர் நேர / சிறப்பு பணிக்காக குழுமுதல்) ,இதை நிர்வகிப்பவர் உயரிய "கலபதி", "கன்னி" என்பது தமிழில் "பொறி" என்று கூட பொருள் படும் ,இந்த குழுவின் செயலானது எதிரிகளை ஒரு இடத்தில லாவகமாக வரவழைத்து ( எலி பொறியில் சிக்குவதைப்போல ) பின்பு அங்கு கூடி இருக்கும் தங்கள் நாட்டு பெரும் படையிடம் சிக்கவைத்ததும் இவர்கள் பணி முடிந்து விடும், மிச்சத்தை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் ! .அடுத்து "ஜதளம்" சுருக்கமாக "தளம்" (நிரந்தரப்போர் பிரிவு ) இதை நிர்வகிப்பவர் "ஜலதலதிபதி",இது ஒரு சிறிய மிக சக்திவாய்ந்த குழுவாக செயல்பட்டது. "மண்டலம்" (பாதி நிரந்தர போர்ப்பிரிவு ) இதை நிர்வகிப்பவர் "மண்டலாதிபதி" இந்த பிரிவிடம் 40 முதல் 50 கப்பல்கள் வரை இருக்கும் , இவர்கள் தனித்தனியாக மற்றும் குழுவாக சென்று போர் புரிவதில் வல்லவர்கள் ! ."கனம்" (நிரந்தர பிரிவு ) 100 முதல்150 கப்பல்கள் கொண்ட பிரிவு , மூன்று மண்டலங்களை உள்ளடக்கியது ஒரு கனம் ! பெரும் பாலும் பெரிய போர்களுக்கு மட்டுமே இந்த குழு செயல்பட்டது !."அணி" இதை நிர்வகிப்பவர் 'அணிபதி" மூன்று கனங்களை கொண்ட பிரிவு, அதாவது இந்த பிரிவில் சுமார் 300 முதல் 500 கப்பல்களை வரை இருந்தது ! மிக பெரிய பலமான ஒரு பிரிவாக இது செயல் பட்டது. "பிரிவு" மிக முக்கியமான பிரிவு இது , இதை நிர்வகிப்பவர் இளவரசர் அல்லது மன்னருக்கு மிகவும் வேண்டப்பட்டவர் இவர்களை திசைக்கு ஏற்றவாறு அழைப்பர் உதாரணத்திற்கு கிழக்கு திசையில் போர் நடந்தால் " கீழ்பிரிவு-அதிபதி / தேவர் " என்று அழைத்தனர் .இது தான் உச்சகட்ட அதிபயங்கர பிரிவாக செயப்பட்டது,உதாரணத்திற்கு இன்று நவீன ஆயுதங்களை வைத்து போர் புரிவது போன்று. இந்த கப்பல் பட்டையை வைத்து தான் "இலங்கை","இந்தோனேசியா","ஜாவா","மாலைதீவு",மலேசியா",சிங்கப்பூர் " போன்ற அனைத்து நாடுகளையும் நம் மன்னன் கைப்பற்றினான் ! .இவை அனைத்துமே ஆயிரம் வருடங்களுக்கு முன் ! .இன்றைக்கு இருக்கும் கப்பல் படையில் கூட இவ்வளவு பிரிவுகள் உள்ளனவா என்பது சந்தேகம் !! இன்னொரு ஆச்சர்யமான செய்தி, இன்று புழக்கத்தில் இருக்கும் " NAVY " என்ற ஆங்கில வார்த்தை "நாவாய்" என்ற நம் கப்பல் படையின் பெயரில் இருந்து வந்த வார்த்தையே ஆகும் !! இவ்வளவு பெருமைகளை கொண்ட நம் வரலாறு எத்தனை "தமிழர்களுக்கு" தெரிந்திருக்கும் ? நமக்கே இது தெரியாத போது உலகத்திற்கு எப்படி தெரியப்படுத்த முடியும் ? சிந்தியுங்கள் !! தேடல் தொடரும்....THANKS-FACE BOOK

Edited by புலவர்

இவ்வளவு பெருமைகளை கொண்ட நம் வரலாறு எத்தனை "தமிழர்களுக்கு" தெரிந்திருக்கும் ? நமக்கே இது தெரியாத போது உலகத்திற்கு எப்படி தெரியப்படுத்த முடியும் ? சிந்தியுங்கள் !!

இன்று தமிழனுக்கு தனது சரித்திரமும் பெருமையும் தெரியாமல் அகதிகளாக, உரிமைகள் மறுக்கப்பட்டவனாக அலைகின்றான். காரணம் தனக்கிருந்த நாடுகளை இழந்தமை.

மீண்டும் நாடு ஒன்றை அமைக்கவேண்டிய அவசியத்திற்கு இதுவும் ஒரு காரணமாக அமைகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

கச்ச தீவை, பிச்சை குடுத்த நாட்டுக்கு, கப்பல் படை தேவையோ....

தேவாங்கு கூட்டம், சினிமா வசனம் பேசுது.

42076636791048657044510.jpg

42440229051355767863810.jpg

இந்தியாவின் முதல் கப்பல் படையை நிறுவி தெற்காசியா வரை தன் கொடியை நாட்டிய ராஜ ராஜா சோழனின் படை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய படகின் மாதிரி வடிவம் !.இந்திய தொல்பொருள் ஆய்வகத்தால் உருவாக்கப்பட்டது."திருநெல்வேலி" அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது !! .

உலகின் சிறப்பு வாய்ந்த இந்த ஆயிரம் வருட அற்புதமான கப்பல் படையை பற்றிய சில அற்புதமான தகவல்கள் உங்களுக்காக .இந்த கப்பல்களானது போர்க்கருவிகளை கொண்டு செல்வதற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டது .இந்த கப்பல் படையை நிறைய குழுக்களை கொண்டிருந்தது . அனைத்து குழுவிற்கும் தலைவர் "அரசர்". இதில் " கனம் " (நிறைய போர் வீரர்களை கொண்ட குழு ) என்பது தான் தலைமைப் பிரிவாக செயல்பட்டது ,இதை நிர்வகிப்பவர் " கனாதிபதி " . . "கன்னி" (போர் நேர / சிறப்பு பணிக்காக குழுமுதல்) ,இதை நிர்வகிப்பவர் உயரிய "கலபதி", "கன்னி" என்பது தமிழில் "பொறி" என்று கூட பொருள் படும் ,இந்த குழுவின் செயலானது எதிரிகளை ஒரு இடத்தில லாவகமாக வரவழைத்து ( எலி பொறியில் சிக்குவதைப்போல ) பின்பு அங்கு கூடி இருக்கும் தங்கள் நாட்டு பெரும் படையிடம் சிக்கவைத்ததும் இவர்கள் பணி முடிந்து விடும், மிச்சத்தை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் ! .அடுத்து "ஜதளம்" சுருக்கமாக "தளம்" (நிரந்தரப்போர் பிரிவு ) இதை நிர்வகிப்பவர் "ஜலதலதிபதி",இது ஒரு சிறிய மிக சக்திவாய்ந்த குழுவாக செயல்பட்டது. "மண்டலம்" (பாதி நிரந்தர போர்ப்பிரிவு ) இதை நிர்வகிப்பவர் "மண்டலாதிபதி" இந்த பிரிவிடம் 40 முதல் 50 கப்பல்கள் வரை இருக்கும் , இவர்கள் தனித்தனியாக மற்றும் குழுவாக சென்று போர் புரிவதில் வல்லவர்கள் ! ."கனம்" (நிரந்தர பிரிவு ) 100 முதல்150 கப்பல்கள் கொண்ட பிரிவு , மூன்று மண்டலங்களை உள்ளடக்கியது ஒரு கனம் ! பெரும் பாலும் பெரிய போர்களுக்கு மட்டுமே இந்த குழு செயல்பட்டது !."அணி" இதை நிர்வகிப்பவர் 'அணிபதி" மூன்று கனங்களை கொண்ட பிரிவு, அதாவது இந்த பிரிவில் சுமார் 300 முதல் 500 கப்பல்களை வரை இருந்தது ! மிக பெரிய பலமான ஒரு பிரிவாக இது செயல் பட்டது. "பிரிவு" மிக முக்கியமான பிரிவு இது , இதை நிர்வகிப்பவர் இளவரசர் அல்லது மன்னருக்கு மிகவும் வேண்டப்பட்டவர் இவர்களை திசைக்கு ஏற்றவாறு அழைப்பர் உதாரணத்திற்கு கிழக்கு திசையில் போர் நடந்தால் " கீழ்பிரிவு-அதிபதி / தேவர் " என்று அழைத்தனர் .இது தான் உச்சகட்ட அதிபயங்கர பிரிவாக செயப்பட்டது,உதாரணத்திற்கு இன்று நவீன ஆயுதங்களை வைத்து போர் புரிவது போன்று. இந்த கப்பல் பட்டையை வைத்து தான் "இலங்கை","இந்தோனேசியா","ஜாவா","மாலைதீவு",மலேசியா",சிங்கப்பூர் " போன்ற அனைத்து நாடுகளையும் நம் மன்னன் கைப்பற்றினான் ! .இவை அனைத்துமே ஆயிரம் வருடங்களுக்கு முன் ! .இன்றைக்கு இருக்கும் கப்பல் படையில் கூட இவ்வளவு பிரிவுகள் உள்ளனவா என்பது சந்தேகம் !! இன்னொரு ஆச்சர்யமான செய்தி, இன்று புழக்கத்தில் இருக்கும் " NAVY " என்ற ஆங்கில வார்த்தை "நாவாய்" என்ற நம் கப்பல் படையின் பெயரில் இருந்து வந்த வார்த்தையே ஆகும் !! இவ்வளவு பெருமைகளை கொண்ட நம் வரலாறு எத்தனை "தமிழர்களுக்கு" தெரிந்திருக்கும் ? நமக்கே இது தெரியாத போது உலகத்திற்கு எப்படி தெரியப்படுத்த முடியும் ? சிந்தியுங்கள் !!

40780527598769913122410.jpg

1000 வருடமாக கம்பீரமாக நிற்கும் பெரியகோயிலை கட்டிய நம் பேரரசனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இது .இவனுக்கு 6*4 அடி சமாதி கட்ட கூட நாதி இல்லை .

ஒரு வயதான ஏழை விவசாயி வீட்டின் கொல்லைபுறம் இப்படி அனாதையாக உறங்கி வருகிறான்

......... நண்பர் ஒருவரின் முகப்புத்தகத்திலிருந்து ........

  • கருத்துக்கள உறவுகள்

கேடு கெட்ட.... தமிழன்.

இது இந்தியாவின் கப்பல் படை இல்லை . தமிழனின் கப்பல் படை . 300 வருடங்களுக்கு முன் இந்தியா என்ற ஒரு நாடே உலகத்தில் இருந்தது இல்லை .

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தமிழ்ச் சக்கரவர்த்தியின் சமாதியின் நிலையே, தமிழனின் இன்றைய நிலையைத் தெள்ளத் தெளிவாகக் கூறி நிற்கின்றது!

இந்தியாவின் முதற கப்பற்படை, நடத்திக் காட்டிய தமிழனுக்கு, இந்தியாவின் முதலாவது மட்டுமல்ல, உலகிலேயே முதலாவது வானரப் படையாக்கி (இராமாயணம்) நன்றிக் கடன் செலுத்தியவன் தான், வட இந்தியன்!!!

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில் இருந்த பண்டாரவன்னியன் சிலைக்கும், நிலை இதுவே....

தமிழனை யாரும் அழிக்கவில்லை. தன்னைத்தானே அழித்துக் கொண்டான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சோழனின் வலிமையான கப்பற்படையே பல நாடுகளை வெற்றி கொள்ள வைத்தது.அவனின் ஆட்சியில் சோமாலியரின் கடற் கொள்ளைகள் ஒடுக்கப்பட்டன.ஆங்கிலேயரின் வலிமையான கப்பற்படையே உலக நாடுகளை அடக்கி ஆள வைத்தது.1ம் ஆனனையிறவுச் சமர் தோல்வியில் முடிந்தது எமக்கு ஒரு வலிமையாக கடற்படை இல்லாததாலேயே ஆகும்.அதே ஆனையிறவு வீழ்த்தப்பட்டது நாம் ஒரு வலிமையான கடற்படையை கட்டமைத்துக் கொண்டதாலே ஆகும்.புலிகளின் கப்பல்கள் சூழ்ச்சிகரமாக அழிக்கப்பட்டு அவர்களின் கடற்படை முடக்கப்பட்டதாலேயே எமது போராட்டம் ஒடுக்கப்பட்டது.ஆக எமது பலம் கடல்.தமிழீழத்தின் பெரும் பகுதி கடல்.இந்தக் கடல் சூழ்ந்திருப்பதாலேயே எல்லா நாடுகளும் சிறிலங்காவுக்கு ஆதரவளிக்கின்றன.மீண்டும் சோழனின் காலம் வரும். எமது கட்டளை மையம் கடலிலே அமையட்டும்.அந்தக் கட்டளை மையமே எல்லா நாடுகளையும் கலங்க அடிக்கட்டும்.

இன்னொரு ஆச்சர்யமான செய்தி, இன்று புழக்கத்தில் இருக்கும் " NAVY " என்ற ஆங்கில வார்த்தை "நாவாய்" என்ற நம் கப்பல் படையின் பெயரில் இருந்து வந்த வார்த்தையே ஆகும் !!

ஜேர்மானியரின் கடற்படையை மரீன் என்று அழைப்பார்கள்.கட்டுமரம்-கட்டு மரான் ஆகி மரீன் ஆகி இருக்கிறது.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு ஆச்சர்யமான செய்தி, இன்று புழக்கத்தில் இருக்கும் " NAVY " என்ற ஆங்கில வார்த்தை "நாவாய்" என்ற நம் கப்பல் படையின் பெயரில் இருந்து வந்த வார்த்தையே ஆகும் !!

இதே போல காசு என்ற தமிழ்ச் சொல்லி இருந்து தான் cash  என்ற ஆங்கில வார்த்தை உருவாகியது. இதே போல கட்டுமரம் -Catamaran

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.