Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலத்தமிழர்கள் நாடு திரும்புவார்களா?

Featured Replies

அகிலன் நீர் கனவு கண்டாலும் அபிவிருத்தி அடைந்த நாடுகளுடன் இலங்கையை ஒப்பிட முடியாது. அதனால் இங்கு வெளிநாடுகளில் வாழுகிறவர்கள் இலங்கையில் நான் முன்னர் சொன்னது போல உறவுகளை பார்க்கவும், விடுமுறையிலும் சென்று வருவார்களே தவிர அங்கு யாரும் நிரந்தரமாக தங்கமாட்டர்கள். ஏனெனில் அவர்கள் வெளிநாட்டு சுக போகங்களிலும் வாழ்க்கை முறையிலும் பழகிவிட்டனர். இன்னும் சிலர் பெருந்தொகை முதலிட்டு சொந்த தொழில்கள் செய்கிறார்கள் இவர்கள் அங்கு போகவா இங்கு இப்படி முதலிட்டார்கள். ஏதோ நீங்கள் ஒட்டுமொத்த தமிழரிடம் வாக்கெடுப்பு எடுத்த மாதியல்லோ பேசுகிறீர். அங்கு ஊரில் வீட்டு அடுப்படியில் நாய் குறட்டையடிச்சு படுக்குது. இங்கு நீங்கள் உழைக்க வந்தால் உழைச்சு சுருட்ட கூடியதை சுருட்டுவதை விட்டு ஏதோ தேசபக்தர்கள் மாதிரி வேடம் போட்டுக்கொண்டு இருக்கிறீர்கள். பிறகேன் அகதி வேடம் போடுகிறீர்கள். இலங்கையோ ஒரு சாபக்கேடான தேசம் பசி, பட்டிணி, நோய்கள், யுத்தம் பத்தாக்குறைக்கு சுனாமி. எங்கு பார்த்தாலும் லஞ்சம். மற்றவனை பிடிச்சுதின்னிற குணம். எரிச்சல், பொறாமை பதவிஆசை, அதுக்குள் ஒரு பகட்டான வாழ்க்கை. இவர் அந்த சாதி, அவர் இந்த சாதி, இவர் வைத்தியர், அவர் சட்டதரணி, இவர் கோடீஸ்வரன், அவர் பிச்சைக்காரன்,என பலதரப்பட்டதரங்கள். பத்துச்சதத்துக்கு பிரயோசம் இல்லை அத்தோடு சரியான கல்வி அறிவும் இல்லை ஆனால் கோடிக்கணக்கில் சீதனம் வேண்டும். ஒரு கேள்வி கேட்கிறேன் இப்படி கோடிகணக்கில் ஏன் சீதனம் வாங்கி திருமணம் செய்யவேண்டும். ஏன் அந்த ஆண்பிள்ளை என்ன கையாலாகாதவரா? என்ன ஊனமுள்ளவரா அவரோடு இணைந்து வாழ வரும் பெண்ணை இவர் காப்பாற்றமாட்டாரா? முதலில் கட்டாக பனம் வேண்டும் அதன் பின் தான் அன்பு பாசம். அதன் பின்பு அவளை புரிந்துகொள்ளுதல் அவளுக்காகவே வாழ்கிறேன் என ஏதோ பெரிய நடிப்பு எல்லாம் நடிப்பார்கள். அதுக்கை வேறை அங்கு உணவகங்கள் சுத்தமும் இல்லை சுகாதாரமும் இல்லை. அடி முட்டள்கள் மாதிரி மூட நம்பிக்கை. ஆயிரத்தெட்டு கோயில்கள் அங்கு திருவிழா என்னும் பேரிலே களியாட்டுக்கள் தொடங்கினால் மனிதன் நிம்மதியாக நித்திரைகூட கொள்ளமுடியாது. ஏதோ எல்லாம் கடவுள் கடவுள் என்று நிற்பாங்கள். ஒரு கேள்வி ஒரு வருடம் வேலைக்கு போகாமல் நில்லுங்கள் அந்த கடவுள்கள் உங்களுக்கு சாப்படு போடுதோ என்று பார்ப்போம். விளங்குதல்லே சாப்படு தண்ணி இல்லமல் நாறிப்போய்விடுவீர்கள். இப்படிபட்ட பைத்தியகார நாட்டில் எவன் திரும்ப போய் குடியேறுவான்.

அப்ப நீங்கள் என்னை பார்த்து எரிச்சல் மிகுதியில் ஒரு கேள்வி கேட்கலாம் பின்னர் ஏன் காணும் நீர் அந்த பாழ்பட்ட நாட்டுக்கு வருடம் 3-4 தடவை ஓடி ஓடி போகிறீர் என்று.போனால் தானே மலிவில் விடுமுறையை கழிக்கலாம். என்ன செய்ய ஏன்னை பெற்றவர்கள் கூடபிறந்த சகோதரர்கள் இன்னும் அங்கு தான் இருப்பதனால் தான் அங்கு செல்லவேண்டியவனாய் இருக்கிறேன்.

:lol::):lol::(:lol: இதை வாசித்தவுடன் தேசபக்தர்களாகிய உங்களுக்கு காதுக்கலையும் கண்ணுக்காலையும் அப்படி புகையுமே. அப்படி புகைந்தால் கொஞ்சம் ஜன்னலை திறந்துபோட்டு நில்லுங்கள் குளிர்காலமாகையால் சடுதியாக அடங்கிவிடுவீர்கள் :P :P :P :P :P :P

என்னங்க...ஊமை என்னென்ன உளறினிங்க.. அதுங்க அல்லாம்.புலத்துக்கு இம்போர்ட் பண்ணிட்டீங்க இல்லைங்களா...ஏங்க 2 ,3 தடவை மெனக்கிட்டூங்க....அங்கிட்டு நீங்க போய்ட்டு வாறிங்க.....அதையும் மீறி அங்கிட்டு ஒண்ணு இருக்ககெல்லுங்களா... :)
  • Replies 165
  • Views 14.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இங்கும் வழமை போல நல்லதொரு கருத்து பரிமாற்றம் தனிநபர் தாக்குதல்களாக மாறி வருகிறது. ஆகவே மீண்டும் கருத்துப்பரிமாற்றத்துக்கு போகலாமா?

பொருளாதார அகதிகள்

அயர்லாந்தில் 1850 களில் ஏற்பட்ட பஞ்சத்தால் பெருமளவு ஐரிஷ் மக்கள் அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் பொருளாதார அகதிகளாக இடம்பெயர்ந்தார்கள். வழியில் கப்பலிலேயே பலர் பட்டினியால் இறந்து போனார்கள். இவர்களை இவர்களுக்கு முதலே அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் வணிக நோக்கத்துடன் வந்த மற்ற ஐரோப்பியர்கள் மிகவும் தாழ்வாக நடத்தினார்கள்.

இன்னுமொரு வகை பொருளாதார அகதிகள் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் வந்தார்கள். இவர்களும் ஐரோப்பியர்கள் தான். இவர்கள் பயணித்த கப்பல்கள் திசை மாறி உணவு தீர்ந்து அகதிகளாக இலங்கை இந்திய கரையை அடைந்த போர்த்துக்கேயர்கள் இவர்கள். இவர்களை மனிதர்களாக மதித்து உணவும் புகலிடமும் வழங்கிய மக்களுக்கு நடந்ததை நாமறிவோம்.

அரசியல் அகதிகள்

இலங்கைத்தமிழர் பட்டினியால் கரை ஒதுங்கியோ நாட்டைவிட்டு ஓடியோ புகலிடம் கோரவில்லை. பெருமளவு பணம் கொடுத்து ஏஜன்சிகள் மூலமாக போர்களத்தை விட்டு இடம்பெயர்ந்தவர்கள் இலங்கை தமிழர். இரண்டாம் உலக யுத்தத்தின் போது இடம்பெயர்ந்தவர்களும் இவ்வாறே இடம்பெயர்ந்தனர். இவர்கள் அரசியல் அகதிகள். இவர்களால் பெருமளவு பணத்தை திரட்ட முடிகிறது. அவ்வளவுக்கு பொருளாதார வசதி படைத்தவர்கள். அமைதியான நாடாக இருந்தால் இந்த பணத்தை முதலீடு செய்து சிறப்பாக வாழும் வசதி படைத்த மக்கள் இவர்கள்.

தேசியவாதிகள்

அரசியல் அகதிகள் எல்லோரும் தேசியவாதிகள் அல்ல. உண்மையில் தேசியவாதிகள் இவ்வாறாக அகதிகளாக இடம்பெயரும் பணவதி கொண்டிருந்தாலும், அதை விட்டு விட்டு தாம் நேசிக்கும் தேசத்தில் நின்று போராடிவருகிறார்கள். பெரும்பாலான அரசியல்அகதிகள் "யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்று எந்த நாடானாலும் அமைதியான வசதியான நாடானால் அங்கு மகிழ்வாக வாழ்ந்து வருகிறார்கள்.

இரண்டாம் உலக யுத்தத்தின் போது விஞ்ஞானி ஐயன்ஸ்ரைன் ஜேர்மனியில் இருந்து அகதியாக அமெரிக்காவுக்கு போனார். இசுரேல் உருவாக ஜூயிஷ் காங்கிரஸில் இணைந்து உதவினார். இசுரேல் உருவானவுடன் இவரை அரசில் சேருமாறு அழைத்தார்கள். ஐயன்ரைன் மறுத்துவிட்டார். இறுதிவரை நன்றியுடன் அமெரிக்கனாகவே வாழ்ந்தார். தொடர்ந்து அமெரிக்க - இசுரோல் நல்லுறவு வாழ பாடுபட்டார்.

கிறிஸ்துவை கொன்றதற்காக யுூதரை வெறுக்கும் கிறிஸ்தவர்களின் நாடான அமெரிக்கா, இன்று அதே யுூதர்களின் நாட்டை உருவாக்கி, காப்பாற்றி வருவதற்கு முக்கிய காரணங்களில், தமக்கு புகலிடம் அளித்த அமெரிக்காவை யுூத அகதிகள் நன்றியுடன் நேசித்து அதற்கு தம்மாலான பங்களிப்பை சிறப்பாக செய்துவருவதும் ஒன்றாகும்.

einstein.jpg

என்ன யூட் அண்ணா புல் அரிக்கிது உங்கள் கருந்தை பார்க்கும் போது.............

இங்க பாருங்கள் கைகளில் புண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்

தேசியவாதிகள்

அரசியல் அகதிகள் எல்லோரும் தேசியவாதிகள் அல்ல. உண்மையில் தேசியவாதிகள் இவ்வாறாக அகதிகளாக இடம்பெயரும் பணவதி கொண்டிருந்தாலும், அதை விட்டு விட்டு தாம் நேசிக்கும் தேசத்தில் நின்று போராடிவருகிறார்கள். பெரும்பாலான அரசியல்அகதிகள் "யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்று எந்த நாடானாலும் அமைதியான வசதியான நாடானால் அங்கு மகிழ்வாக வாழ்ந்து வருகிறார்கள்.

இரண்டாம் உலக யுத்தத்தின் போது விஞ்ஞானி ஐயன்ஸ்ரைன் ஜேர்மனியில் இருந்து அகதியாக அமெரிக்காவுக்கு போனார். இசுரேல் உருவாக ஜூயிஷ் காங்கிரஸில் இணைந்து உதவினார். இசுரேல் உருவானவுடன் இவரை அரசில் சேருமாறு அழைத்தார்கள். ஐயன்ரைன் மறுத்துவிட்டார். இறுதிவரை நன்றியுடன் அமெரிக்கனாகவே வாழ்ந்தார். தொடர்ந்து அமெரிக்க - இசுரோல் நல்லுறவு வாழ பாடுபட்டார்.

நீங்கள் தேசியவாதிகள் என்பதுக்கு யூதர்களை உதாரணம் காட்டியது தவறான உதாரணம். யூதர்கள் இஸ்றேலின் பிறப்புக்கு முன்னர் அங்கு வாழ்ந்த மக்கள் மட்டும் அல்ல. உலகெல்லாம் பரந்து வாழ்ந்த இனம். அங்கு நீங்கள் சொன்னது போல ஜேர்மனியிலும் பிரான்ஸ்சிலும் ரஸ்யா, (ஐரோப்பா எங்கும்) ஏன் அமெரிக்காவில் கூட வாழ்ந்த மக்கள். என்னதான் சொந்தமாக ஒரு நாடு கிடைத்தாலும் அவர்கள் அங்கு வாழப்போக வேண்டுமா.?

இதோடு வசதி வாய்ப்பு என்பது தேவையானது அது இருக்கும் இடத்துக்கு போவார்கள் என்பதை நான் மறுக்கவில்லை, அதேபோலதான் ஒரு தேசியவாதியாக என்னால் தமிழீழத்தை வசதியான வாய்ப்புக்கள் அதிகமான நாடக மாறாது என்பதை ஏற்க முடியாது.

அப்படி போகாமாட்டோம் என்பவர் யாரவது இங்கு தாங்கள் எதிர்கால தமிழீழத்தை சேர்ந்தவர் இல்லை வாழும் நாட்டின் குடிமக்கள் எண்று இனங்காட்ட முடியுமா.? எல்லாரும் முகமூடி போட்டு வாழ்கிறார்கள் எண்று நீங்களும் பொறுப்பில்லாமல் சொல்லாமல். அப்படிச் சொல்வதானால் அப்படி முகமூடி போடவேண்டியதின் அவசியம் என்ன எண்று சொல்லுங்கள். (இது நீங்கள் சொல்வீர்களானால் மட்டும், இல்லையானால் விட்டு விடுங்கள்)

தமிழீழத்தின் எதிர்கால வளர்ச்சி என்பது கனவு அல்ல என்பது உண்மை. !

அகிலன்:

இவ்வளவு கஷ்ரப்பட்டு தாயகப் பற்றைக் காட்டும் உம்மிடம் ஒரு கேள்வி நீர் வேறொரு பக்கத்தில் எனக்குப் பதில் கருத்தாக எழுதியுள்ளீர் நீர் பிரித்தானியாவிலிருந்து வெளியேறி ( அவர்கள் பிடித்தனுப்பியோ அல்லது நீராக வெளியேறியோ ) தற்போது வியாபார நிமித்தமாக இன்னொரு நாட்டில் தங்கியிருப்பதாக. அப்படியாயின் உமது வியாபாரத்தை தாயகத்திலேயே ஆரம்பித்திருக்கலாமே?? எல்லாம் வெறும் ஊருக்கு உபதேசமா??

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தேசியவாதியாக என்னால் தமிழீழத்தை வசதியான வாய்ப்புக்கள் அதிகமான நாடக மாறாது என்பதை ஏற்க முடியாது.

நீங்கள் மட்டுமல்ல மிகத் தீவிரமான சிங்கள இனவாதிகள் கூட அப்படி ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். படித்த சிங்கள இனவாதிகள் தமிழீழத்தை எதிர்ப்பதற்கான காரணங்களில் முக்கியமான ஒன்று தமிழீழம் சிங்கப்புூர் போல தீவிர வளர்ச்சி காணும் என்பதாகும்.

[*] அப்படி நடந்தால் சிங்கள மக்கள் தமிழீழத்துக்கு கூலி வேலை செய்ய வரவேண்டியிருக்கும்.

[*] சிறிலங்காவில் இருக்கும் பல வெளிநாட்டு நிறுவனங்களும் தொழிற்சாலைகளும் தமிழீழத்துக்கு இடம்பெயரும்.

[*] இதனால் சிறிலங்காவில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு அரசியல் குழப்பங்கள் உருவாகும்.

இவை பிரேமதாஸ காலத்தில் ஜனாதிபதி ஆலோசகராக இருந்த ஒருவர் சொன்ன விளக்கம். சிங்கள அறிஞர் பலர் இவ்வாறே சிந்திக்கின்றனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அகிலன்:

இவ்வளவு கஷ்ரப்பட்டு தாயகப் பற்றைக் காட்டும் உம்மிடம் ஒரு கேள்வி நீர் வேறொரு பக்கத்தில் எனக்குப் பதில் கருத்தாக எழுதியுள்ளீர் நீர் பிரித்தானியாவிலிருந்து வெளியேறி ( அவர்கள் பிடித்தனுப்பியோ அல்லது நீராக வெளியேறியோ ) தற்போது வியாபார நிமித்தமாக இன்னொரு நாட்டில் தங்கியிருப்பதாக. அப்படியாயின் உமது வியாபாரத்தை தாயகத்திலேயே ஆரம்பித்திருக்கலாமே?? எல்லாம் வெறும் ஊருக்கு உபதேசமா??

ஆகா வசம்பு...

அகிலன் சொன்னது சுகந்திர தமிழீழம் மலாந்த பின்.. :!:

நிதர்சன்

நீங்கள் சொல்வது போல் தலையங்கம் அது தான். ஆனால் அகிலன் வெளிநாட்டு வாழ்க்கையே கேவலம் என்பது போல் விமர்சித்துக் கொண்டு அதே வெளிநாட்டு வாழ்க்கையே வாழ்வதை எதில் சேர்க்கச் சொல்கின்றீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டிலிருக்கின்ற தமிழர்கள் புலிகள் இன்னும் பொறுமை காக்க கூடாது சண்டை தொடங்க வேண்டும் என்று கோஷம் போடும் போது தூயவன் நீங்கள் சொன்னது போலவே நினைக்க தோன்றுகிறது. தாயகத்தில் இருக்கின்ற மக்களை விட புலம் பெயர்ந்து உள்ள மக்கள் தான் அதிகம் சண்டை வேண்டும் என்கிறார்கள். ம்..

அதைத் தானே நானும் சொல்கின்றேன். சில சனங்கள் சண்டை தொடங்க வேண்டும் என்று ஆசைப்படுகினம். பிறகு இவே இங்கு செய்கின்ற கூத்துக்கு, இண்டைக்கோ, நாளைக்கோ பிடித்து அனுப்பி விடலாம் என்று பார்த்துக் கொண்டிருக்கின்றான். சண்டை தொடங்கினால் தானே தொடர்ந்தும் நிற்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா .... தூயவன் உங்களை நினைக்க பெருமையாய் இருக்கு. ஏனென்றால் உண்மையை சொல்கிறத்துக்கு யாருக்கு மனம் வரும். ஆனால் நீங்கள் உங்கள் அனுபவங்களை மறைக்காமல் உண்மையாய் சொல்கிறீர்கள். எண்டாலும் செருப்பால அடிவாங்கிய பின்னும் அவளை பார்த்து பல்லு இழிப்பது உங்களுக்கு பழைய ஞாபகங்களை மீட்டவில்லையா ? :lol::lol::lol: ஏன இந்த சின்ன வயசுலும் கள்ளடிக்கும் பழக்கமா நம்பவே முடியவில்லை. நம்ம ஊரில முன்னர் முஸ்லீம் நாடுகள்ள வேலை செய்யுறயை லீவுக்கு வரும் போது மொத்த சங்கிலியும் போட்டு வெள்ளையும் சுள்ளையுமாய் திரியிறமாதிரி இப்ப நீங்களும் திரியிறீர்களா? :P :P

எண்டாலும் அகதிகாசில இப்படி எல்லாம் நடப்பது கொஞ்சம் ஓவர் தான்.

இது புலம் பெயர்ந்து வாழும் சிலதுகளின் தேச பக்தி!! தாங்கள் மாதாமாதம் காசு கொடுக்கினமாம். ( அவை தான் சொல்லுகினம். ஆனால் ஒமந்தையில் அவையின் வண்டவாளம் தெரியும்) ஆனால் தமிழீழம் பெறுவதற்கு நாள் தேவையாம். ஏனென்டால் இப்ப தானே காட் அடிக்க பழகியிருக்கினம்!!

என்னுடைய ஆசை என்னவென்றால் முதலில் இங்களை நாடுகடத்த வேண்டும்.

ஊமை!!

நல்லாத்தான் சொன்னியள்? என்னவோ சாராயப் போத்தல் எப்படி இருக்கும் எண்டு விட்டால் என்னிடமே கேட்பியள் போல கிடக்குது!!

எண்டாலும் உங்கள் மனதிலிலே உண்மை என்று ஏற்றுக் கொள்ளும்பக்குவத்தை பாராட்டத்தான் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நிதர்சன் நான் அகதியாக வெளிநாடுவரவில்லை. நான் ஸ்பொன்சரில வந்தேன். இலங்கையில் இருந்து வரும்போதே ஜேர்மனிக்குரிய வதிவிட அனுமதியுடன் தான் வந்தேன். நான் ஒன்றும் திருட்டுதனமாக எல்லைகளுக்கூடாகவோ அல்லது திருட்டுதனமாக விமான நிலையத்தில் கடவுச்சீட்டுக்களை கிழித்துவிட்டோ அகதி அந்தஸ்து கோரவில்லை. அதனால் என்னை அப்படி அகதிகள் பட்டியலில் சேர்க்க வேண்டாம்.

அப்படியா ஊமை.

ஆனால் பிறகேன் தாயகத்துக்கு பிடிச்சு அனுப்பி போடுவாங்கள் என்றும், தாயகத்துக்கு போக வேண்டுமா என்றும் கூச்சல் போட்டீர்கள்!!

அப்படியே கொப்பியை மாத்திப் போட்டால் எப்படி கண்ணா!!

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக ஒரு விடயத்தை சுட்டிக் காட்ட விரும்புகின்றோம். சுதந்திர தமிழீழத்துக்காக போர் தொடுக்க வேண்டும் என்று நினைக்கும் மக்களையும், தங்கள் சுயநலத் தேவைகளுக்காக போர் வரவேண்டும் என்று நினைப்பவர்களையும் முதலில் வேறுபடுத்தி பார்க்க வேண்டும்.

முதலாவது உண்மையான நாட்டுப்பற்று!!

இரண்டாவது அப்பட்டமான சுயநலம்!!

இந்தப் பகுதிகளை வாசிச்சா பிறகு பல சந்தேகங்கள் வந்திட்டுது. ஊமை எனக்கு விமானச்சீட்டு போட்டுத்தாரும் ஊருக்கு போய் தமிழ்த் தேசியம் பற்றி பல சந்தேகங்கள் தீர்க்கலாம். கூடவே நீரும் வந்தீர் என்றா வசதியா இருக்கும்.

தயவுசெய்து புலியெதிர்ப்பு பற்றி இங்கு பேசாதீர்கள். தமித்தேசியம் பற்றி இங்கு விமர்சிக்காதீர்கள். ஏனெனில் இங்கு புலியாதரவாளர்களும், செந்தமிழர்களுமே உள்ளனர். புலியை எதிர்க்கவோ தமிழ்த்தேசியத்தைப் பற்றி விமர்சிக்கவோ யாருக்கும் அருகதையும் அத்தோடு உரிமையும் கிடையாது. உங்களுக்கு துணிவிருந்தால் எனது செலவில் விமான பயணச்சீட்டு பெற்று தருகிறேன். வன்னியில் போய் புகிகளின் முகத்தைப் பார்த்து இவற்றைக் கேளுங்கள். அப்போது உங்களுக்கு போதும் போதும் என நன்றாகவே பதில்கள் கிடைக்கும். அதைவிட்டு அகதிக்காசிலே வயிறுவளர்த்துக்கொண்டு புலிகளை விமர்சிக்கிறீர்களோ? ஒரு உயிரின் பெறுமதி தெரியுமா உங்களுக்கு? உம்மையும் என்னையும் போல் எல்லா ஆசைகளும் உள்ளவனே எமது நாட்டுக்காக போய் இறக்கிறான். நீர் தப்பிவந்திருந்துகொண்டு அவனை விமர்சிக்கிறீரோ? சீ............... வெட்கமாய் இல்லை?

http://www.yarl.com/forum/viewtopic.php?t=...r=asc&&start=15

நிதர்சன்

நீங்கள் சொல்வது போல் தலையங்கம் அது தான். ஆனால் அகிலன் வெளிநாட்டு வாழ்க்கையே கேவலம் என்பது போல் விமர்சித்துக் கொண்டு அதே வெளிநாட்டு வாழ்க்கையே வாழ்வதை எதில் சேர்க்கச் சொல்கின்றீர்கள்.

என்ன வசம்பு கனவா.? இங்கு நான் சொன்னதை திரிபு படுத்தாதையும். சுதந்திர தமிழீழத்தில் நாங்கள் வாழ வேண்டும் அங்கு தமிழர் போவார்கள், போக வேண்டும் என்பதுதான் என் கருத்து.

நான் கடல்கடந்து வியாபாரம் செய்வதற்காக போனது உண்மைதான். பொருள் சேர்த்து கரைசேர்வது தமிழன் வரலாற்றில புதிதாய் படவில்லை. ஆனால் போன இடத்தில் தங்குவதுதான் புதிது.

( மற்றது தனிப்பட்ட காரணத்துக்காக நான் இலங்கை குடியுரிமையுடன் இல்லை இங்கிலாந்து குடிதான். தமிழீழ கடவுச்சீட்டு கிடைத்தால் மாற்றலாம் எண்று இருக்கிறேன். )

  • கருத்துக்கள உறவுகள்

தம்பிமாரே,தங்கைச்சிமாரே அகதியாக வந்தால் இளக்காரம் என்று ஏன் நினைக்கிறீர்கள்.எங்கு சென்றாலும் நம்முடைய (நல்ல முத்திரையை) பதித்து வாழ பழக வேண்டும்.நாங்களே கருப்பன்,அகதி என்று எங்களை இளக்காரமாக நினைக்ககூடாது.உலகத்தில் பிறக்கிறவ ஒவ்வொருவரும் அகதி தான்.ஓருத்தரும் ஒன்றும் கொண்டு வாரதில்லை.உலகமே எங்களுடையது என்று நினைத்து வாழ பழகி கொள்ள வேண்டும்.

எங்களுக்கு ஒதுங்க ஒரு இடம் கிடைத்தது என சந்தோசப்படுங்கோ.நாங்கள் எங்கு சென்றாலும் ஒரு பிரச்சினையை தூக்கிகொள்வோம்.நாட்டில் சாதி,மொழி என்று நாட்டை குழப்பினோம்.

இப்ப வெள்ளை,அகதி,கறுப்பு என்று தூக்கி கொண்டு திரியிறோம்,இங்கு வரும் அடுத்த சந்ததியையும்

குழப்புகிறோம்.

இந்தப் பகுதிகளை வாசிச்சா பிறகு பல சந்தேகங்கள் வந்திட்டுது. ஊமை எனக்கு விமானச்சீட்டு போட்டுத்தாரும் ஊருக்கு போய் தமிழ்த் தேசியம் பற்றி பல சந்தேகங்கள் தீர்க்கலாம். கூடவே நீரும் வந்தீர் என்றா வசதியா இருக்கும்.

ஆம் குறுக்கால போவானே ஐரோப்பாவில் உள்ள மாற்றுக்கருத்தாளர் தங்கள் கேள்விகளுக்கு வன்னியில் சென்று கேட்டால் நல்ல பதில் கிடைக்கும் என்று தானே சொன்னேன். ஏன் அதிலும் தப்பு ஏதும் இருக்கா? சும்மா நெருப்பு தேனி றீபீசி என தெரு நாய்ய்கள் போல் வீடு வீடாய் அலையாமல் சம்பந்தபட்டவர்களை அணுகி உங்கள் கேள்விகளை கேட்டால் உங்களுக்கு பதில் கிடைக்கும். இந்த கோடைகால விடுமுறைக்கு நான் மீண்டும் இலங்கை சென்று யாழ் செல்லவிருக்கிறேன் வாருங்கள் அங்கு போய் வன்னியில் உங்கள் விருப்பத்துக்கமைய செய்யலாம். என்ன காக்கைவன்னியா இதெல்லாம் ஒரு பெரியவிடயமா`?

ஆம் குறுக்கால போவானே ஐரோப்பாவில் உள்ள மாற்றுக்கருத்தாளர் தங்கள் கேள்விகளுக்கு வன்னியில் சென்று கேட்டால் நல்ல பதில் கிடைக்கும் என்று தானே சொன்னேன். ஏன் அதிலும் தப்பு ஏதும் இருக்கா? சும்மா நெருப்பு தேனி றீபீசி என தெரு நாய்ய்கள் போல் வீடு வீடாய் அலையாமல் சம்பந்தபட்டவர்களை அணுகி உங்கள் கேள்விகளை கேட்டால் உங்களுக்கு பதில் கிடைக்கும். இந்த கோடைகால விடுமுறைக்கு நான் மீண்டும் இலங்கை சென்று யாழ் செல்லவிருக்கிறேன் வாருங்கள் அங்கு போய் வன்னியில் உங்கள் விருப்பத்துக்கமைய செய்யலாம். என்ன காக்கைவன்னியா இதெல்லாம் ஒரு பெரியவிடயமா`?

சொன்னமாதிரி என்னுடைய பயணச் செலவு எல்லாம் நீர் ஏற்பீர்தானே? நான் காக்கைவன்னியன் தான், அதுதான் கூடவே உம்மையும் வரச் சொல்லுறன்.

நான் வெளிநாடு வந்து 10 வருடங்களுக்கு மேல். 365x10 = 3650 GPB பங்களிப்பும் செய்ய வேணும் நீர். என்னட்டை பங்களிப்பு இலக்கம் இல்லை பாருங்கோ. :P

எனக்கு வெளிநாடுகளில் எம்பி மாரை தெரியாது நீர் தான் திரும்பிவாறதிலை சிக்கல் இருந்த தீரத்துவிடுவீர் என்ற உத்தரவாத்ததோடு வரலாம்.

ஆஹா அதுவா பிரச்சினை? அது அந்த நாட்களில் இருந்த சந்தர்ப்பம்(offer) இப்ப அது சரிவராது. :lol::lol::lol::lol: நானே பணத்துக்கு லாட்றி அடிக்கிறேன். கொடுக்கவேண்டிய 2000 யூரோவே இன்னும் கொடுக்கவில்லை அத்தோடு இருவரும் சென்றால் இரண்டு பேரும் வட்டுவாகலில் கம்பி எண்ண வேண்டியது தான். :D:D:D

அதுக்கும் ஒரு வழி இருக்கு பாருங்கோ. ஹொலண்டுல நிதி செலுத்துற ஆட்களின் அட்டையை பெற முடியும் என்றால் பெறுங்கோ உங்களுக்கு அவர்களின் பெயரில் ஹொலண்ட் கடவுச்சீட்டு சாரதி அனுமதிப்பத்திரம் அடையாள அட்டை எடுக்க வேண்டுமென்றால் நான் உதவி செய்கிறேன். கட்டுநாயக்கவரக்கும் உங்கள் கடவுச்சீட்டில் செல்லுங்கள் அதை கொழும்பிலே எங்காவது தெரிந்தவர்களிடம் வைத்துவிட்டு ஓமந்தையூடாக ஹொலண்ட் கடவுச்சீட்டோடு செல்லுங்கள் திரும்பி பயபடாமல் வரலாம். :P :P :P :P எப்படி ஐடியா?

ஓகோ கள்ள பெயர் விலாசம் கடவுச்சீட்டில் தாய்நாட்டுக்கு போறதுக்கு யோசனை சொல்லித்தாறியளோ?

தாய்நாட்டின் நிர்வாக கட்டமைப்பிற்கு நீங்கள் காட்டிற மரியாதை இதுவோ? இதுக்குள்ளை உங்கடை சகோதரங்கள் இந்த நாட்டை கட்டியெழுப்புவதில் பங்கெடுக்கினம் நீர் ஒவ்வொரு கார்த்திகையும் போய் மாவீரர் கல்லறைகளில் மலரஞ்சலி செலுத்துறீர். என்னய்யா படிக்கிறது சிவபுராணம் இடிக்கிறது சிவன்கோயிலா இருக்கு?

இந்த லட்சணத்திலை இங்கை மற்றவைக்கு போதனை களவா வந்தனி அகதி என்று.

7 மாதங்களுக்கு முன்னர் கனவான் மாதிரி அகதி காசிலை வயிறு வழக்கினம், சொந்தச் செலவில் ரிக்கற் போட்டுத்தாறன் போய் வன்னியிலை விளக்கம் கேட்டு வரச் சொன்னீர் இப்ப 2000 யூரோவுக்கு லாட்றி அடிக்கிறீரே? புசத்தலை விட்டுட்டு யேர்மனிக்கு வந்த வேலையை பாரும் காணும் :lol:

Vasampu எழுதியது:

நிதர்சன்

நீங்கள் சொல்வது போல் தலையங்கம் அது தான். ஆனால் அகிலன் வெளிநாட்டு வாழ்க்கையே கேவலம் என்பது போல் விமர்சித்துக் கொண்டு அதே வெளிநாட்டு வாழ்க்கையே வாழ்வதை எதில் சேர்க்கச் சொல்கின்றீர்கள்.

அகிலன் wrote:

என்ன வசம்பு கனவா.? இங்கு நான் சொன்னதை திரிபு படுத்தாதையும். சுதந்திர தமிழீழத்தில் நாங்கள் வாழ வேண்டும் அங்கு தமிழர் போவார்கள், போக வேண்டும் என்பதுதான் என் கருத்து.

நான் கடல்கடந்து வியாபாரம் செய்வதற்காக போனது உண்மைதான். பொருள் சேர்த்து கரைசேர்வது தமிழன் வரலாற்றில புதிதாய் படவில்லை. ஆனால் போன இடத்தில் தங்குவதுதான் புதிது. :wink: :lol:

( மற்றது தனிப்பட்ட காரணத்துக்காக நான் இலங்கை குடியுரிமையுடன் இல்லை இங்கிலாந்து குடிதான். தமிழீழ கடவுச்சீட்டு கிடைத்தால் மாற்றலாம் எண்று இருக்கிறேன். ) :cry: :cry:

அகிலன்

அபாரம் பலர் தங்கள் தேவைகளுக்காக இடைக்கிடை தான் முகமூடி அணிகின்றார்கள் என்றால் நீங்கள் முழுநேரமும் அதைப் பாவிக்கின்றீர்கள். நீங்கள் எழுதும் கருத்துக்களை ஒருபோதும் திருப்பி வாசித்துப் பார்ப்பதில்லையா??

பொருள் சேர்க்கத் தான் வெளிநாடு வந்தீர்கள் என்பதை இப்போது ஒத்துக் கொண்டு விட்டீர்கள். அதுபோல் வியாபாரத்திற்கு வெளிநாடு சென்று அப்படியே வெளிநாட்டுக் குடியுரிமையையும் ஓடித்தெரிந்து எடுத்தும் விட்டீர்கள். உங்கள் நாட்டுப்;பற்றைப் பார்க்க பார்க்க புல்லரிக்கின்றது. இதற்குள் மற்றவர்களுக்கு உபதேசம் வேறு. நன்று நன்று. தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் நாட்டுப்பற்றை மற்றவர்களும் புரிந்து கொள்ளட்டும்.

ஓகோ கள்ள பெயர் விலாசம் கடவுச்சீட்டில் தாய்நாட்டுக்கு போறதுக்கு யோசனை சொல்லித்தாறியளோ?

தாய்நாட்டின் நிர்வாக கட்டமைப்பிற்கு நீங்கள் காட்டிற மரியாதை இதுவோ? இதுக்குள்ளை உங்கடை சகோதரங்கள் இந்த நாட்டை கட்டியெழுப்புவதில் பங்கெடுக்கினம் நீர் ஒவ்வொரு கார்த்திகையும் போய் மாவீரர் கல்லறைகளில் மலரஞ்சலி செலுத்துறீர். என்னய்யா படிக்கிறது சிவபுராணம் இடிக்கிறது சிவன்கோயிலா இருக்கு?

இந்த லட்சணத்திலை இங்கை மற்றவைக்கு போதனை களவா வந்தனி அகதி என்று.

7 மாதங்களுக்கு முன்னர் கனவான் மாதிரி அகதி காசிலை வயிறு வழக்கினம், சொந்தச் செலவில் ரிக்கற் போட்டுத்தாறன் போய் வன்னியிலை விளக்கம் கேட்டு வரச் சொன்னீர் இப்ப 2000 யூரோவுக்கு லாட்றி அடிக்கிறீரே? புசத்தலை விட்டுட்டு யேர்மனிக்கு வந்த வேலையை பாரும் காணும் :lol:

குறுக்கலை போவான் நீர் தானே தாயகத்துக்கு போக உதவி கேட்ட்னீர் நாங்கள் பலவழிகளில் உதவி செய்ய தயாராக இருப்பதையே சுட்டிக்காட்டினேன். ஆனால் நாம் கள்ளப்பெயரில் போகவில்லையே. தாயகத்துக்கு பனம் கட்ட வழியிலாத/ முடியாத உங்களுக்கே இப்படியான உதவிகள்

7 மாதங்களுக்கு முன்னர் கனவான் மாதிரி அகதி காசிலை வயிறு வழக்கினம், சொந்தச் செலவில் ரிக்கற் போட்டுத்தாறன் போய் வன்னியிலை விளக்கம் கேட்டு வரச் சொன்னீர் இப்ப 2000 யூரோவுக்கு லாட்றி அடிக்கிறீரே?

ஆமாம் அப்ப இருந்தது இப்ப இல்லை.

நீர் தமிழீழ தொலைக்காட்சிக்கு நாமம் போட்ட மாதி இல்லை. நீங்கள் நாமம் போடலாம் ஏன் நாங்கள் போட்டால் போடுப்படாதோ?

உங்கள் நாமம்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் முதலில் ஏன் புலம் பெயர்ந்தார்கள்? ஒரு தீர்வு வந்தால் திரும்பிப் போவார்களா என்ற கேள்விகளுக்கான பதில்கள் இலகுவானவையல்ல. சிலர் சிந்தித்துப் பதில் எழுதுகின்றார்கள். சிலர் வழமைபோல் அலட்டுகின்றார்கள்.

அலட்டுபவர்களை விட்டுவிட்டு எனக்குப் பட்டதைச் சொல்லுகின்றேன்.

80களுக்குப் பின் நெருக்கடி நிலை தோன்றியபோது முதலில் இளைஞர்கள்தான் புலம் பெயர்ந்தனர். காரணங்கள்.

1. இராணுவத்தின் அடக்குமுறைகளிலிருந்து உயிருடன் தப்பிக்க

2. இயக்கத்தில் சேராமிருந்தாலும், இராணுவம் கொல்லும் என்ற பயம் காரணமாக

3. எதிர்காலம் சூனியம் என்றபடியால் எங்காவது போய் பிழைக்கலாம் என்று நம்பி

4. அகதிகளாகப் பல நாடுகள் ஏற்றுக் கொள்ளுகின்றார்கள் என்பதால், மேற்கு நாடுகளுக்கு வந்து குடும்பத்தைக் காப்பாற்ற (அத்துடன் உயிரையும் காப்பாற்ற)

5. மேற்படிப்புக்கு, வசதியான வாழ்வுக்கு (வந்தபின் உண்மை புரிந்திருக்கும்)

காரணங்கள் எதுவானாலும், தாய்மார்கள் பெற்ற பிள்ளைகளை பிரிந்து வாழும் துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். அத்துடன் கணவன்மாரைப் பிரிந்து குழந்தைகளுடன் தனித்து வாழும் நிலைக்குப் பல பெண்கள் ஆளானார்கள் என்பதையும் சிந்திக்கவேண்டும். அது மட்டுமா? புலத்தில் வந்து இறங்கியவர்கள் சொகுசாகவா வாழ்ந்தார்கள்?

இப்படி வந்தவர்கள் பலர், இங்கு உதவ யாரும் இல்லாததால் முகாம்களில் இருந்து கஸ்டப்பட்டு, குளிருக்குள் வேலை செய்து தங்கள் வாழ்வை ஒருமாதிரிக் கொண்டிழுத்தனர். தங்கள் தாய் தந்தையர், பிள்ளைகள் ஷெல்லுக்குள்ளும், விமானக் குண்டுக்குள்ளும் உயிர் தப்ப வேண்டும் என்று தினமும் பிரார்த்தித்துக் கொண்டிருந்தனர். பிள்ளைகளின் வளர்ச்சியைப் புகைப்படத்தில் பார்த்து வாழ்ந்த தகப்பன்மார் எத்தனை பேர். தகப்பன் பாடசாலைக்குக் கொண்டு சென்று சேர்ப்பதுதான் ஊர் வழக்கம். அது தற்போது தாயின் மேலே. தன் குழந்தைகளுக்குச் செய்ய வேண்டியவற்றைச் செய்ய முடியாமல் வாழ்ந்தவர்கள் எத்த்னை பேர்.

மரணங்கள் நேர்ந்தபோது இறுதிக்கடன் செய்யமுடியாமல் துன்பத்தை அழுது தீர்க்கமுடியாமல் இருந்தவர் எத்தனை பேர்? இயற்கை மரணத்தில் ஒருவர் போய்ச் சேர்ந்தால் ஓரளவுதான் துக்கம். அதுவே போர்மூலம் நிகழ்ந்த கோர மரணமாக இருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று யோசிக்கவேண்டும். தந்தையை, தாயை, சகோதரங்களை, பிள்ளைகளை இழந்து தவித்தவர்கள் இங்கு தற்போதும் உள்ளனர்தான். ஏன் இந்த அவல வாழ்வு இவர்களுக்கு. வசதிசைப் பெருக்க, சொகுசாக வாழ ஆசைப்பட்டவர்களுக்கா இவை நிகழ்ந்தன? பொருளாதார அகதியாகத் தான் எல்லோரும் வந்தார்கள் என்று புலப் பெயர்வை இலகுபடுத்த வேண்டாம்.

90 களின் பின் வந்தவர்களுக்கு, ஏற்கனவே தங்களை ஸ்திரப்படுத்தியவர்கள் உதவி செய்ததனால், ஆரம்பத்தில் வந்தவர்கள் அனுபவித்த கஸ்டங்கள் இருந்திருக்காது.

மேலும் ஸ்பொன்சரில் வந்தவர்களுக்கு புலத்து வாழ்வு இன்னும் வசதியாகத் தோன்றியிருக்கும். இதிலும், புலத்தில் வாழும் பெண் ஊரில் இருந்த ஒருவனைத் திருமணம் முடித்து ஸ்பொன்சரில் இங்கு அழைத்திருந்தால் சொல்லிக் கேட்கவேண்டுமா என்ன? ஊரில் மாமிச உணைவக் காண்பதே கிழமைக்கு ஒருதரம் அல்லது மாதத்தில் சில தரம். இப்படியானவர்களுக்கு இங்கு தடல் புடல் விருந்தும், இரவில் உடற்பசிக்கு குளிர்தேசத்தில் குளுகுளுவென்று வளர்ந்த பெண்ணின் உடலும் கிடைத்திருந்தால் புலத்து வாழ்வு சொர்க்கம்தான், மறுக்கவில்லை. தங்களைப் போல் மற்றவர்களுக்கும் வசதிகளும் வாய்ப்ப்புக்களும் இருந்திருக்கும் என்று தப்பபிப்ராயாம் கொள்ளாமல் இருந்தால் நல்லது.

ஆபிரிக்க, ஆசிய, கிழக்கைரோப்பிய ஏஜென்சிளின் ரூட்களில் பலமாதம் இழுபட்டு, கஸ்டப் பட்டு வந்தவர்களுக்கு ஏன் வந்தோம், என்ன செய்ய வேண்டும் என்பதில் கொஞ்சம் தெளிவு இருக்கும் என்றே நம்புகின்றேன்.

ஆமாம் அப்ப இருந்தது இப்ப இல்லை.

நீர் தமிழீழ தொலைக்காட்சிக்கு நாமம் போட்ட மாதி இல்லை. நீங்கள் நாமம் போடலாம் ஏன் நாங்கள் போட்டால் போடுப்படாதோ?

உங்கள் நாமம்

அய்யா ஊமை அவர்களே நான் தமிழ் தேசிய தொலைக்காட்சிக்கு என்ன தமிழ் தேசியத்திற்கு விடுதலைப்புலிகளுக்கும் நாம் போடுற காக்கைவன்னியன் என்று சொல்லிக் கொண்டுதான் எழுதுறன்.

ஆனா நீரும் அப்ப அதே கேஷ்டி என்றீரோ? இல்லாட்டி நான் நாமம் போடுற படியாலை நீரும் போடுறீரோ? நல்ல கொள்கை அய்ய உங்களுக்கு :lol::lol::lol:

குறுக்கலை போவான் நீர் தானே தாயகத்துக்கு போக உதவி கேட்ட்னீர் நாங்கள் பலவழிகளில் உதவி செய்ய தயாராக இருப்பதையே சுட்டிக்காட்டினேன். ஆனால் நாம் கள்ளப்பெயரில் போகவில்லையே. தாயகத்துக்கு பனம் கட்ட வழியிலாத/ முடியாத உங்களுக்கே இப்படியான உதவிகள்

நான் உதவி கேக்கவில்லை, நீர் 7 மாதங்களுக்கு முன்னர் இங்கு செய்த கொக்கரிப்புக்கு செயல்வடிவம் குடுக்கதயாரா என்று தான் கேட்டோன். நீர் லாட்றி அடிக்கிறன் என்று கைய்யவிரிக்கிறது பத்தாமல் தாயக நிர்வாக கட்டமைப்பை எப்படி கொச்சைப்படுத்துவது என்று உதவி செய்யுறீர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.