Jump to content

உயிரின் அடுத்த நிலை என்ன..?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, suvy said:

உயிர் ஊசலாடுகின்றது அடுத்து கருவறையா அல்லது கல்லறையா என்று.... வந்து கவனியுங்கள் புரட்சி .....!  tw_blush: 

அட போங்கப்பூ..

எலிக்கும் பூனைக்குக்கும் என்னா விரோதம் ? ஒன்றுமே கிடையாது.. அது பிறப்பாலே விரோதம் .. கீரிக்கு பாம்பு..ஆட்டுக்கு குரங்கு.. இன்னும் பல இந்த விலங்கினங்கள் எல்லாம் ஏன் பிறந்ததில் இருந்தே ஒன்றுக்கு ஒன்று எதிராக செயல்படுகின்றன ..? நம்பிக்கை இல்லையென்றால் இன்று பிறந்த பூனை குட்டியை தூக்கி  கொண்டு போய் இன்று பிறந்த நாய் குட்டியிடம் போய் காட்டுங்கள் .. நம்முடைய பார்வையில் இரண்டும் குழந்தைகள்தான் ஆனால் இரண்டும் மீட் செய்யும் போது இரண்டும் ஒருவரை ஒருவர் பார்த்து உறுமும் .. யார் இந்த விரோதத்தை ஊட்டி விடுகிறார்கள் ..? மனிதர்களா ?ரெல்மீ ?  ஒன்றுமே கிடையாது.. ஆனால் கடவுள் மனிதருக்குள்ளும் இந்த குரோததத்தை வளர்த்துவிட்டு இருக்கிறான்... சிங்களன்  vs தமிழன் ..கன்னடன் vs  தமிழன் ..மலையாளி vs  தமிழன் vs தெலுங்கன் இதுல யார் யார்கிட்ட தமிழன் தன்னின்ட பகையை காமிச்சான் என்று தெரியல ..உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் சொல்லுங்க ..!!

நான் சொல்கிறேன் பூமின்யிற  ஆடிட்டருக்கு கணக்குதான் முக்கியம் .. சரியான எடையோட பூமிய தங்க வைக்க வேண்டும் அதில் சாகுறவன் தமிழனா அல்லது வேற எவனா என்று ஆடிட்டருக்கு தேவையும் கிடையாது..எவன் இளித்தவாயனோ அவனை போட்டு தாக்கிவிடுகிறார்கள்

டிஸ்கி:

இதற்கு தீர்வே இல்லையா  ? என்று கதைக்கின்ற்போது அத்தி பூத்தாற் போல சிலர் பூமிக்கு வருவார்கள் .. அவர்களை அரவணைத்து செல்ல வேண்டும் ..  அதைவிடுத்து இப்போ குத்துது குடையுது என்றால் மறுபடி எப்படி வருவார்கள் ..!! நல்லது சார்!!  நீங்க ஜனநாய்கம் பற்றி கதைக்கிறீங்கள் .. ஆனால் கீரி /பாம்பு போல அடிப்படையே தெரியாம உங்களுக்குள்ளே கதைத்து கதைத்து சாக போகிறீர்கள் !!! அதாவது பூனை எலியை உயிரோடு விட்டுவிடுவது போல..!

  • Replies 156
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இருப்பு நடப்பு -  மறுபிறவி ..ஜாதகம் சொல்வது என்ன ..?

அட நாம ஜாதகம் குறிக்க நம்மன்ட குழந்தையோட  பிறந்த நேரத்தை எடுத்து கொண்டு போவம். ஜோதிடர்  சனி திசை இருப்பு 1 வருடம் என்று குறித்து அனுப்புகிறார் .. என்று வைத்து கொள்வம் . உண்மையில் சனிதிசை 36 வருடம் ..சரி 1 வருடம் இருப்பு என்கிறார்.. அப்போ மீதி 1 வருடத்தில் தான் இந்த குழந்தை பிறந்திருக்கு.. மிகுதி 35 வருடம் அந்த ஆன்மா எங்கிட்டு திரிந்து கொண்டு இருந்தது ?? நாயா?? பேயாவா ?? கேட்டால் ஏதோ ஒரு லோகத்தில் இருந்து வந்திருக்கு என்பார்கள் .. அது என்ன மாய லோகமா ..? இது நம்ம சிற்றிவுக்கு எட்டாது .. முத்து காளை காமெடி போல செத்து செத்து பார்த்தால் தான் தெரியும் ..!!

டிஸ்கி :

12 ல் கேது இருந்தால் மோட்சம் கட்டாயம் என்று சொல்கிறார்களே !! இதைபற்றியும் விவாதிக்கவேண்டும் ..

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கடவுளில்களின் திருமணத்தை நேரில் கண்டால்..

http://www.hotstar.com/tv/hara-hara-mahadeva/10026/mahadeva-parvatis-wedding/1000157951

மறு பிறவி கிடையாது என்று சொல்லபடுகறது ....  அதனால் தான் பூமி பாரம் எடைக்கு எடை  தாங்க வேண்டும்   (வடக்கில் எல்லாரும் கூடிவிட்டர்களாம் ) என்பதற்காக அகத்தியரை தமிழ்நாட்டுக்கு அனுப்பிட்டதாகவும் உள்ளது.. எது எதுவாக இருந்தால் நமக்கு என்ன மோட்சத்திற்கு போங்க ..!!

 

 

 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கைலாசத்தில் இருக்கும் மண்டை தீவு..

http://www.hotstar.com/tv/hara-hara-mahadeva/10026/parvati-mahadeva-visit-kailasa/1000158569

 

டிஸ்கி :

காட்சியின் இறுதி பகுதியில் வரும் ஆன்மாக்கள் எல்லாம் முக்திக்காக பார்வதியிடம் கெஞ்சுகின்றன..

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

டிஸ்கி :

நாளைக்கு இல்லை என்றோ ஓரு நாள்.... எல்லோருமே சாக போறம் .. வந்து உங்களின்ட கருத்துகளை பகிர்ந்து கொள்ளுக .. பிளீஸ் !! tw_bawling:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

9:00ல் இருந்து 20:00 வரை பார்க்கவும்...! tw_blush:

  • 10 months later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 15/02/2017 at 2:30 AM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

டிஸ்கி :

நாளைக்கு இல்லை என்றோ ஓரு நாள்.... எல்லோருமே சாக போறம் .. வந்து உங்களின்ட கருத்துகளை பகிர்ந்து கொள்ளுக .. பிளீஸ் !! tw_bawling:

மனம் மறுபிறவி எடுக்கிறது என்பதை ஆன்மீக ரீதியில் விளக்கம் அளிக்கிறது இந்த ஒளி நாடா...

விஞ்ஞான ரீதியில் என்ன விளக்கம் தரமுடியும் என்றால், 

எனதணுக்களும் எனது குழந்தைக்குள் இருக்கும்... எனதான அணு எப்பொழுது எனது முன்னோர்களுடையதுமான அணுக்களுடன் சண்டை இட்டு வெற்றி பெற்று கருவாக மாறுகிறதோ அது மறுபிறவியாக கருதப் படுகிறது... 

அது அடுத்த தலைமுறையிலேயே கூட நடக்கலாம் பத்து தலைமுறைகளுக்கு பிறகும் நடக்கலாம்...

7ம் அறிவு படத்தில் சொல்வது போல் அமெரிக்காவே இந்த ஆராய்ச்சியில் தொடக்க நிலையில் இருக்கலாம்...

இநத பிறவியின் ஞாபகங்களே மண்டைய கடிக்கிது, இதில் போன பிறவி என்றால் என்னவாவது...

--கடவுள் இருக்கான் குமாரு...

  • 8 months later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

களதோழர்கள் மரணம் , உயிரின் அடுத்த நிலை , ஆன்மா, மறு பிறவி, முற்பிறவி பாவ/புண்ணிய கணக்கீடுக்கள் , மீண்டும் பிறவா நிலை ( மோட்சம் ) ? சோதிட ரீதியான கிரக ஆய்வு, இறைவனை அடைதல் பற்றி புராண/இதிகாசங்களின்/மதங்களின் பார்வை , ௐ காரத்தின் அம்சம் 
குறித்த தங்களின்ட எண்ணம் ..?

பதிவிட / இணைக்க அன்போடு கேட்டு கொள்கிறேன.?

டிஸ்கி:

என்றாவது ஒரு நாள் "மரணம்?"  நம்மை வந்தடையும் நிலையில் இது குறித்து ஆராய்வு செய்வது அவசியமாகிறது . ?

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மனித உடலில் ஆன்மா எப்படி சேர்கிறது ???

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மறுபிறவியின் ரகசியம்

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மரணத்தின் பின்  ஆன்மாவின் சூட்சும உடலும் .. அதன் பயணமும் .. 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுவாமி விவேகானந்தர் பார்வையில் ஆன்மா ..?

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆன்மா இறுதியில் எங்கே மோட்சமடைகிறது ?

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கர்ம வினைகளின் தொகுப்பு மறுபிறவி ?

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

திருவாசகம் - நான் யார் ?

திருவாசகத்தில் உள்ள மிக சிக்கலான பாடல்களில் ஒன்று

"நானார்என் உள்ளமார் ஞானங்களாரென்னை யாரறிவார்
வானோர் பிரானென்னை ஆண்டிலனேல் மதிமயங்கி
ஊனா ருடைதலையில் உண்பலிதேர் அம்பலவன்
தேனார் கமலமே சென்றூதாய் கோத்தும்பீ."

சீர் பிரித்த பின்

நான் யார் ? என் உள்ளம் யார் ? ஞானங்கள் யார் ? என்னை யார் அறிவார் ?
வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல் மதி மயங்கி
ஊனாரும் உடை தலையில் உண் பலி தேர் அம்பலவன்
தேனார் கமலமே சென்று ஊதாய் கோத்தும்பீ

நான் என்பது என்ன ? என் ஞாபங்கள், என் அறிவு  இதைத்  தவிர வேறு என்ன ? நான் அறிந்த அனைத்தும் மறந்து போனால் நான் என்ற நான் யார் ? என் பெயர், என் மனைவி/கணவன், என் பிள்ளைகள், பெற்றோர், நண்பர்கள், நான் கற்ற கல்வி எல்லாம் மறந்து போனால் நான் , நானாக இருப்பேனா ?

மாணிக்க வாசகருக்கு இது நிகழ்ந்தது.

இறைவன் அவரை ஆட்கொண்டான்.

நான் என்பது மறைந்து விட்டது ? நான் என்பது போன பின் உள்ளம் என்பது எது ?

ஞானம் இரண்டு வகைப்படும் - கற்ற அறிவு, அனுபவ அறிவு. பர ஞானம், அபர ஞானம் என்று சொல்வார்கள். நானும் போன பின், என் உள்ளமும் போன பின் என் ஞானம் என்பது என்ன ?

நான் போய் விட்டேன். நான் என்பது இல்லை

என் உள்ளம் போய் விட்டது.

என் ஞானங்கள் இல்லாமல் போனது.

இவை அனைத்தும் போன பின் என்னை யார் அறிவார் ?

அந்த இறைவன் என்னை ஆட்கொள்ளவில்லை என்றால் இதுவெல்லாம் என்னவாகி இருக்கும் ?

ஆட் கொண்டபின் என்ன ஆயிற்று ?

பொருள்

நான் யார் ? = நான் யார்

என் உள்ளம் யார் ? = என் உள்ளம் யார்

ஞானங்கள் யார் ? = ஞானங்கள் யார் அல்லது எது

என்னை யார் அறிவார் ? = என்னை யார் அறிவார் ?

வானோர் பிரான் = வானில் உள்ள பிரான்

என்னை ஆண்டிலனேல் = என்னைஆட் கொள்ளவில்லை என்றால்

மதி மயங்கி = மதி மயங்கி

ஊனாரும் உடை தலையில் உண் பலி தேர் அம்பலவன் = இறைச்சி இருந்த உடைந்த மண்டை ஓட்டில் பிச்சை எடுத்து உண்ணும் அம்பலத்தில் ஆடும் அவன்

தேனார் கமலமே = தேன் உள்ள தாமரை மலருக்கு

சென்று ஊதாய் கோத்தும்பீ = சென்று பாடுவாய் தும்பியே

http://interestingtamilpoems.blogspot.com/2013/06/blog-post_9768.html?m=1

டிஸ்கி :

 

ஒரு கட்டத்திற்கு மேல் நினைவுகளை பின் நோக்கி இழுக்க முடியவில்லை
(எ கா) முதலில் பார்த்த திரைப்படம், பள்ளியில் சேர்ந்த முதல் நாள் . ஆனால் சிறு வயதில் நாம் செய்த குறும்புகளை பெற்றோர் சொல்ல கேட்டு இருப்போம்

நான் என்பது உள்ளுணர்வு ஆகும் .பெயரை கூப்பிட்டால் திரும்பி பார்ப்பதில் இருந்து உள்ளுணர்வாக தொடங்குகிறது..

நான் என்பது அகந்தையை இருந்து பிறப்பதால் அகந்தை இறக்கும் போது நான் என்பதும் இல்லாமல் போகும்

கள உறவுகளும் தங்கள் மேலான கருத்துக்களை இணைக்கலாம்?

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஓங்காரம்

om.jpg

பிரபஞ்சம் முழுதும் பஞ்ச பூதமாகி, பல்லுயிராகி , பல்லுருவாகி, ஓம்  எனும் ஓர் அணுவுக்குள்
அகாரம்-அறிவு, உகாரம் -உயிர், மகாரம்- மனம்,
எனும் பிரணவத்தின் பொருளாகி, நாதமான பெண்ணாகி, ஜோதியான ஆணாகி, ஆணுக்குள் பெண்ணாகி, பெண்ணுக்குள் ஆணாகி, நிற்கும் பரம் பொருளை அடைவதே முக்தி.

அந்த பரம்பொருலான உயிரே நம்முருவாகி வந்துள்ளது.அதுவே உண்மை. உயிர் படைத்த உடலை வைத்துக் கொண்டு நான் என்று பிதற்றுவது தான் மாயை. அந்த மன மாயை நீக்கி நான் உயிர் என்று தியானித்து அழியாத உயிர் நிலை அடைதலே முக்தி.

உயிர் நிலை எனும் முக்தி எப்படி அடைவது?.

வெறும் பக்தியால் மட்டும் முக்தி அடைய இயலாது. ஞான மார்க்கமாக நாம் எப்படி பிரபஞ்சத்தில் இருந்து உயிராகி கருவாகி சரீரமாகி வந்தோமோ, அவ்வழியே சென்று இயற்கையோடு ஐக்கியமாதலே முக்தி.

உயிர்ஞான மார்க்கமாக உடலை உயிராக்குதலே முக்தியாகும். ஆதியானது உயிர். ஆதியான உயிர் நிலை அடைதலே சமாதி நிலை எனும் முக்தி நிலை. சித்தர்களின் முக்தி மார்க்கம் இப்படி எளிமையாக இருக்க உருவ வழிபாடும் பழைய புராணங்களும் எங்கே முக்திக்கும நோயற்ற வினைகளற்ற வாழ்வுக்கும் வழி சொல்கிறது?.

உயிரான கடவுள் நம்மை படைக்கும்போதே, அவனை அடையும் வழியையும் கொடுத்தே அனுப்பியுள்ளான். உயிர் பிரபஞ்சம் எங்கும் வியாபித்து இருந்தாலும் நம்மிடம் உள்ள நமக்கு சொந்தமான உடலை உயிரை கொண்டே உயிராக்கி விட்டால், உயிர் பரவெளியாகி விடும் இதுவே அழிவில்லாத வீடுபேறு.

சரீர நிலைக்கும் உயிர் நிலைக்கும் இடைப்பட்டது கவனம் தான்.கவனம் சரீரத்தில் இருப்பதை விடுத்து உயிரில் நிலைக்க செய்வதே உயர்ந்த உயிர் நிலை உயிர்கலை சரீரம் காலத்துக்கு உட்பட்டது ஆதலால் காலனால் வீழ்த்தபடுகிறது. உயிர் காலத்துக்கும் காலனுக்கும் அப்பாற்பட்டது, அழிவற்றது.

கவனத்தை அழிவற்ற உயிரில் வைக்க பழகி கொண்டால் நாம் உயிராகி போவோம். நம் கவனத்தில் எதுவாக இருக்கிறோமோ அதுவாகவே மாறிப் போவோம். மனதுக்குஅப்படி ஒரு அதீதசக்தி உண்டு. ஆகவே மனபலத்தை கொண்டு ஊன் தேகத்தை கவனத்தில் இருந்து விடுத்து உயிர் கவனத்தில் நிலைத்து அழிவில்லா உயிர் தேகமாக மாற்றிவிட்டால் பிணி மூப்பு சாக்காடு எனும் சரீர சாபங்களில் இருந்து நிரந்தரமாக விடுதலை பெறலாம்.

இதுவே முக்தியின் ரகசியம். நமக்கு சொந்தமான உயிரை கொண்டுமட்டும் தான் முக்தி அடைய இயலும். நமக்கு முக்திக்கான வழியைத்தான் குருமார்கள் காட்டுவார்கள். நம் முன்னேற்றத்துக்கு நாம் தான் முயல வேண்டும். உயிர்இன்றி எந்த குருவும் இல்லை, எந்த கடவுளும் இல்லை, உயிரே அனைத்துக்கும் மூலம்.ஆதியானதும் அனைத்துக்கும் மூலமானதும் உயிர் ஒன்றே.

இப்படி வெளிப்படையாக யாரும் உரைத்தது இல்லை. ஆதி நாத சித்தர்கள் காலம் கருதி முக்தி மார்க்கத்தை மிகவும் எளிமையாக்கி உள்ளனர்.

உயிரே கடவுள் ...

https://m.facebook.com/SSTSUA/posts/354912954632937

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பன்னெடுங்காலமாக நம் ரிஷிகளும், முனிபுங்கவர்களும், யோகிகளும், தவசிகளும் வனங்களிலும், குகைகளிலும், புலனடக்கி, மனமொடுக்கி கடும் முயற்சியின் பயனாக அடைந்திட்ட ஞானத்தையும், முக்தியையும் வெகு எளிதாகப் பெற்றுத்தருவதாகச் சிலர் சொல்லிக் கொள்கிறார்கள்.

பல ஜென்மங்களைக் கடந்தே நம் முன்னோர்களில் பல பேர் பலன்களை அடைந்திருக்கிறார்கள் என்று புராணங்கள் சொல்கின்றன. அதன் படி முக்தி அடைவது என்பது அவ்வளவு எளிதல்ல என்பதே உண்மை.

இதை மாற்றி அமைக்கவும், இந்தப் பிறவியிலேயே அதை அடைந்திடவும் தங்கள் அறிவின் தெளிவால் உபாயங்களைக் கண்டுபிடித்து, அவற்றைக் கடைபிடித்து சித்தி அடைந்தவர்கள் சித்தர்கள். இந்த சித்தி என்பது முக்தியின் ஒரு பிரிவாகும். அது என்ன பிரிவு ? முக்தி என்றால் இறைவனைக் கலந்து விடுவது தானே ? என்று கேட்கக் கூடும்.

அதாவது முக்தியை நான்கு விதமாகப் பிரித்து சொல்லியிருக்கிறார்கள்.

1. சாரூப்ய முக்தி - இறைவனைப் போன்ற உருவம் பெற்று விடுதல்.

2. சாமீப்ய முக்தி - இறைவனுக்கருகில் இடம் பெறுதல்.

3. சாலோக்ய முக்தி - இறைவனோடு கைலாசத்திலோ, வைகுண்டத்திலோ வசித்தல்.

4. சாயுஜ்ய முக்தி - இறைவனோடு ஒன்றறக் கலந்து விடுதல். இதில் முதல் முக்திப்படிப் பார்த்தால் உருவமே இல்லாத இறைவனின் உருவம் அடைதல் என்றால் அதுவும் இறைவனைக் கலத்தலே ஆகும்.

ஆக ஒன்றும் நான்கும் இறையாற்றலோடு கலந்து விடுவதே. இடையில் காணப்படும் இரண்டும், மூன்றுமே சித்தியாகும். அதாவது இறையாற்றலுக்கருகில் வசிப்பது என்றால், ஸ்தூல சரீரத்தைத் துறந்து சூக்கும சரீரத்தோடு பரவெளியில் ஸமாதியில் திளைத்திருப்பதாகும்.

எனவேதான் முக்தி அடைந்தவர்கள் வருவதில்லை என்று சொல்கிறார்கள்.

சித்தி அடைந்தவர்களை ஒரு மனதோடு தியானித்தால் வருவார்கள் என்றும் சொல்கிறார்கள். இதற்கு ஆதாரமாக குரு இராகவேந்திரரைச் சொல்லலாம். அவர் ஜீவ சமாதியில் புகும் போது இன்னும் 400 ஆண்டுகள் இந்த இடத்தில் நான் இருப்பேன். நீங்கள் அழைத்தால் வருவேன். அதற்குப் பிறகே முக்தி அடைவேன் என்று சொன்னதாக வரலாறு.

இந்த சித்தியோ, முக்தியோ அடைவதற்கு முன் யோகியானவர் அடையும் உண்மையை உணர்ந்த நிலையையே ஞானம் என்கிறோம். ஞானம் அடைந்தவரருக்கு அறியாமை என்னும் அஞ்ஞானம் நீங்கி விடுகிறது. ஏனென்றால் அவர் பிரபஞ்ச மனதோடு தன் மனதை இணைத்து விடுவதால் அவருக்குத் தெரியாமல் எதுவும் நடக்காது.

பார்க்கப்படும் பொருள் இன்றி பார்ப்பவர் மட்டுமே என்ற நித்தியானந்த நிலையை அடைகிறார். அலைகளற்ற கடலைப் போல சலனமற்ற சமநிலையில் அவர் மனம் இருக்கிறது.

பேதமற்ற நிலையில் அது, இது, நீ. நான் என்ற நிலையைக் கடந்து விடுகிறார். முப்பரிமாணங்களைக் கடந்து அடுத்த பரிணாமத்திற்குள் நுழைகிறார். அங்கே காலம் கிடையாது, உணர்வுகள் கிடையாது, முக்குண தோஷங்கள் கிடையாது, அது ஒரு பரப்பிரம்ம நிலை. எனினும் அவர் மனமானது நான் பிரம்மம் என்ற எண்ணத்தில் நிற்கிறது. இதைத்தான் ஈசனோடாயினும் ஆசை அறுமின் என்பார்கள்.

இந்த ஞானிகளை ஜீவன் முக்தர்கள் என்பார்கள். இந்த ஜீவன் முக்தர்களின் சாத்வீக அஹங்காரத் தரத்திற்கேற்ப அவர்களை நான்கு வகையாகச் சொல்வார்கள்.

1. பிரம்மவித்,

2. பிரம்மவித்வரன்,

3. பிரம்மவித்வரீயான்,

4. பிரம்மவித் வரிஷ்டர்

என்பதாகும். இந்த ஞானத்தின் நிலைகளை ஏழு பிரிவாகச் சொல்வார்கள். அவை சுபேச்சா, விசாரணை, தனுமாநஸி, ஸத்வாபத்தி, அசம்சக்தி, பதார்த்தபாவனை, துரீயம் என்பவைகளாகும். இந்த நிலைகளை பூமிகா என்பார்கள். முதல் மூன்று பூமிகாவில் அதாவது ஞானத்தின் நிலைகளில் செயல்படும் ஞானி முமுட்சு என்பார்கள். அதாவது புற உலகப் பொருள்களில் உதாசீனம், வைராக்யம், ஆத்ம ஞான நூல்களை வாசித்தல், பிரம்ம ஞானிகளின் தொடர்பு, கற்ற, கேட்ட விஷயங்களைப் பற்றிய விசாரணை, இடைவிடாத பயிற்சி இவற்றால் மனம் பிரம்மத்தில் லயிக்கிறது.

அது ஒரு மெல்லிய நூலைப் போல மாறி விடுகிறது. பிரம்மாகார விருத்தி ஏற்படுகிறது. இதுவே முமுட்சு.

நான்காவது பூமிகாவில் செயல்படும் ஞானியை பிரம்மவித் என்பார்கள். மேலே சொன்ன மூன்று நிலைப் பயிற்சியால் ஆசைகள் அறவே ஒழிந்து விடுகிறது. தத்துவ ஞானம் வளர்கிறது.

மனம் முழுவதும் சத்துவ குணத்தால் நிரம்பி வழிகிறது. ஐந்தாவது பூமிகாவில் செயல்படுபவர் பிரம்மவித்வரன் எனப்படுவார். நான்காவது நிலையில் மனம் சத்துவத்தால் நிரப்பப்படும் போது மனமானது படிப்படியாக பிரம்மத்தில் கரைகிறது. கர்மாக்கள், சம்ஸ்காரங்கள், சங்கல்பங்கள் யாவும் இல்லாமல் போய் விடுகின்றன.

இனி ஆறாவது பூமிகாவில் செயல்படும் ஞானி பிரம்மவித் வரீயான் என்றழைக்கப்பட்டுகின்றார்

. புற மற்றும் அகப் பொருள்களின் காட்சி அறவே இல்லாமல் போய்விடுகின்றது. அதையும் மீறி ஏதாவது காட்சி இருக்குமானால் அது மற்றவர்களின் வற்புறுத்தலினாலானதாகவே இருக்கும்.

ஏழாவது பூமிகாவில் வசிக்கும் ஞானியே பிரம்மவித் வரிஷ்டன். இதுவே துரீயம். இதில் பன்மை உணரர்வுகளேதும் இல்லை. திரிபுடி எதுவுமில்லை. இவர்களால் உலக ஷேமத்துக்காக எதுவும் செய்ய முடியாது. உணவே கூட மற்றவர்கள் தான் இவர்களுக்கு வலுக்கட்டாயமாக ஊட்டி விட வேண்டும்.

இவர்களே அவதூதர்களாக ஆடைகளைத் துறந்து நிர்வாணியாக இருப்பார்கள். இவர்கள் இருக்கும் இடம் சொர்க்கம். அந்த பிரதேஷமெங்கும் பிரகாசம் விளங்கும்.

ஆறு, ஏழு பூமிகாவில் இருப்பவர்கள் ஐந்து, நான்கு நிலைகளுக்கு இறங்கி வந்து லோக ஷேமத்திற்காக ஏதாவது செய்ய விரும்பினால் செய்யலாம். ஏழாவது பூமிகாவில் ஒரு ஞானி 14 நாட்களே உயிர் வாழ முடியும்.

அதாவது இந்த சரீரத்தில் இருக்க முடியும். ஏழாவது நிலை நீடிக்கும் போது துரீயாதீதம் மலர்கிறது. முக்தியோ, சித்தியோ அவர்கள் விரும்பியதை அடைவார்கள். ஏன் அவ்வாறென்றால் விருப்பம் உள்ளவர்களுக்கு அது ஒரு பற்றிருப்பதால் சித்தி. அந்த பற்றும் அறுத்தவர்களுக்கு முக்தி.

எனவே இடைவிடாத பலனைப் பற்றிய சிந்தனையில்லாதப் பயிற்சியும், வைராக்யமும், விடா முயற்சியும் இருந்தால் எந்த நொடியிலும், எப்போது வேண்டுமானாலும் ஞானமடைந்து முக்தியை அடையலாம்.

"பலன் குறித்தும் தன்னிலை குறித்தும் கவலை கொள்கிறவர்களுக்கு மேலும் காலதாமதமே ஏற்படும். "

இதைக் குறித்து சொல்லப்பட்ட வார்த்தையே ''கடமையைச் செய் பலனை எதிர் பாராதே என்பது''.

http://jayasekarjai.blogspot.com/2014/03/blog-post_6862.html?m=1

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மரணத்தை கணிக்க முடியுமா ? சிவபுராணம் ...?

 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

universe-backgrounds-11.jpg

ஆத்மா ஆனந்தமானது..

ஆத்மாவின் இயற்கை ஆனந்தமயமானது என்ற காரணத்தினால்தான் ஆத்மாக்களாகிய நாம் அனைவரும் ஆனந்தமாக இருக்க விரும்புகிறோம்.

இது ஆத்மாவின் இயற்கையான தன்மை. நாம் இந்த உடல் என்று நம்மை அடையாளம் கண்டு கொள்ளும்போது புலனின்பத்தை நாடுகின்றோம். ஆனால், ஆத்மா திருப்தியடையும்போதே உண்மையான ஆனந்தம் கிடைக்கும்.


ஆத்மா எங்கே இருக்கிறது?

ஆத்மா இதயத்தில் அமைந்துள்ளது என்று முண்டக உபநிடதம் கூறுகின்றது. பகவத் கீதை மற்றும் உபநிடத்துக்களில் ஆத்மாவைப் பற்றி மேலும் விளக்கப்பட்டுள்ளது. தெளிந்த புத்தியினால் மட்டுமே ஆத்மாவை அறிந்து கொள்ள முடியும், மழுங்கிய புத்தியினால் அல்ல.

நுண்நோக்கி மூலமாக ஆத்மாவைப் பார்க்க இயலுமா?

ஆத்மா மிகவும் சிறியது. ஆத்மாவின் அளவு பற்றி சுவேதாஷ்வதர உபநிடத்தில் (5.9) கூறப்பட்டிருக்கின்றது.

தலைமுடியின் நுனியை பத்தாயிரம் பங்காக வெட்டினால் எவ்வளவு சிறியதாக இருக்குமோ, அதுவே ஆத்மாவின் அளவு. ஆத்மாவைப் பார்ப்பதற்கு நுண்நோக்கியை உபயோகப்படுத்தலாமே ? என்று சில விஞ்ஞானிகள் பரிந்துரைக்கலாம்

ஆனால் ஆத்மாவின் அளவு இவ்வளவு என்றாலும், ஆத்மாவானது பௌதிக வஸ்து அல்ல என்பதால், பௌதிக கருவியினாலும் புலன்களாலும் அதனைப் பார்ப்பது இயலாது.


ஆத்மா உடல் மாறக்கூடியதா?

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் (2.13), ஒரு ஜீவன், ஓர் உடலினுள் இருக்கும்போது, குழந்தைப் பருவத்திலிருந்து இளமைக்கும் இளமையிலிருந்து முதுமைக்கும் மாறுவதுபோல, மரணத்தின்போது வேறு உடலுக்குச் செல்கிறான் என்று கூறுகிறார். இதை நாம் நமது நடைமுறை அனுபவத்திலும் உணர முடியும். நமது உடல் பல்வேறு மாறறங்களைக் கடந்து வந்துள்ளது.

ஆனால் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் “நான்” என்னும் அகந்தை உணர்வு மாறுவதில்லை. அதுபோலவே, மரணம் என்னும் மாற்றத்தை இந்த உடல் சந்திக்கும்போது, நாம் நமது தற்போதைய உடலை விட்டு மற்றோர் உடலை அடைவோம்.

http://tamilbtg.com/who-am-i/

Posted
On 9/27/2018 at 11:01 AM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

திருவாசகம் - நான் யார் ?

திருவாசகத்தில் உள்ள மிக சிக்கலான பாடல்களில் ஒன்று

"நானார்என் உள்ளமார் ஞானங்களாரென்னை யாரறிவார்
வானோர் பிரானென்னை ஆண்டிலனேல் மதிமயங்கி
ஊனா ருடைதலையில் உண்பலிதேர் அம்பலவன்
தேனார் கமலமே சென்றூதாய் கோத்தும்பீ."

சீர் பிரித்த பின்

நான் யார் ? என் உள்ளம் யார் ? ஞானங்கள் யார் ? என்னை யார் அறிவார் ?
வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல் மதி மயங்கி
ஊனாரும் உடை தலையில் உண் பலி தேர் அம்பலவன்
தேனார் கமலமே சென்று ஊதாய் கோத்தும்பீ

நான் என்பது என்ன ? என் ஞாபங்கள், என் அறிவு  இதைத்  தவிர வேறு என்ன ? நான் அறிந்த அனைத்தும் மறந்து போனால் நான் என்ற நான் யார் ? என் பெயர், என் மனைவி/கணவன், என் பிள்ளைகள், பெற்றோர், நண்பர்கள், நான் கற்ற கல்வி எல்லாம் மறந்து போனால் நான் , நானாக இருப்பேனா ?

மாணிக்க வாசகருக்கு இது நிகழ்ந்தது.

இறைவன் அவரை ஆட்கொண்டான்.

நான் என்பது மறைந்து விட்டது ? நான் என்பது போன பின் உள்ளம் என்பது எது ?

ஞானம் இரண்டு வகைப்படும் - கற்ற அறிவு, அனுபவ அறிவு. பர ஞானம், அபர ஞானம் என்று சொல்வார்கள். நானும் போன பின், என் உள்ளமும் போன பின் என் ஞானம் என்பது என்ன ?

நான் போய் விட்டேன். நான் என்பது இல்லை

என் உள்ளம் போய் விட்டது.

என் ஞானங்கள் இல்லாமல் போனது.

இவை அனைத்தும் போன பின் என்னை யார் அறிவார் ?

அந்த இறைவன் என்னை ஆட்கொள்ளவில்லை என்றால் இதுவெல்லாம் என்னவாகி இருக்கும் ?

ஆட் கொண்டபின் என்ன ஆயிற்று ?

பொருள்

நான் யார் ? = நான் யார்

என் உள்ளம் யார் ? = என் உள்ளம் யார்

ஞானங்கள் யார் ? = ஞானங்கள் யார் அல்லது எது

என்னை யார் அறிவார் ? = என்னை யார் அறிவார் ?

வானோர் பிரான் = வானில் உள்ள பிரான்

என்னை ஆண்டிலனேல் = என்னைஆட் கொள்ளவில்லை என்றால்

மதி மயங்கி = மதி மயங்கி

ஊனாரும் உடை தலையில் உண் பலி தேர் அம்பலவன் = இறைச்சி இருந்த உடைந்த மண்டை ஓட்டில் பிச்சை எடுத்து உண்ணும் அம்பலத்தில் ஆடும் அவன்

தேனார் கமலமே = தேன் உள்ள தாமரை மலருக்கு

சென்று ஊதாய் கோத்தும்பீ = சென்று பாடுவாய் தும்பியே

http://interestingtamilpoems.blogspot.com/2013/06/blog-post_9768.html?m=1

டிஸ்கி :

 

ஒரு கட்டத்திற்கு மேல் நினைவுகளை பின் நோக்கி இழுக்க முடியவில்லை
(எ கா) முதலில் பார்த்த திரைப்படம், பள்ளியில் சேர்ந்த முதல் நாள் . ஆனால் சிறு வயதில் நாம் செய்த குறும்புகளை பெற்றோர் சொல்ல கேட்டு இருப்போம்

நான் என்பது உள்ளுணர்வு ஆகும் .பெயரை கூப்பிட்டால் திரும்பி பார்ப்பதில் இருந்து உள்ளுணர்வாக தொடங்குகிறது..

நான் என்பது அகந்தையை இருந்து பிறப்பதால் அகந்தை இறக்கும் போது நான் என்பதும் இல்லாமல் போகும்

கள உறவுகளும் தங்கள் மேலான கருத்துக்களை இணைக்கலாம்?

 

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க 
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க 
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5 

வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க 
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க 
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க 
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க 
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10 

ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி 
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி 
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி 
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி 
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15 
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி 

சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால் 
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச் 
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை 
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். 20 

கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி 
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி 
விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய், விளங்கு ஒளியாய், 
எண் இறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர் 
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் 25 

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் 
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் 
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் 
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் 
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30 


எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான் 
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் 
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற 
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் 
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35 

வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா 
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி 
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே 
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே 
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40 

ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும் 
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் 
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின் 
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே 
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45 

கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் 
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று 
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் 
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த 
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50 

மறைந்திட மூடிய மாய இருளை 
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி 
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி, 
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை 
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55 

விலங்கு மனத்தால், விமலா உனக்கு 
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும் 
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி 
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி, 
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60 

தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே 
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே 
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரனே 
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே 
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65 

பேராது நின்ற பெருங்கருணைப் போராறே 
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே 
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே 
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே 
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70 

அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய் 
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே 
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே 
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே 
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் 75 

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே 
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே 
காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே 
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற 
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80 

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம் 
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள் 
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே 
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப 
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85 

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார் 
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே 
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே 
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே 
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90 

அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று 
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ் 
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் 
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் 
பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95 

திருச்சிற்றம்பலம் 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இறந்து போதல் என்றால் என்ன ?

ramanan.jpg

இளம் வயது ரமண மகரிஷி

மதுரை ஸ்ரீ ரமண மந்திரத்தின் மாடி அறையில் 1896 ஆம் ஆண்டு பகவானுக்கு மரண அனுபவம் ஏற்பட்ட போது நிகழ்ந்தவை. இந்த அறையை அன்பர்கள் இன்றும் தரிசிக்கலாம்.

அப்பாவை எப்படி தகனம் பண்ணியிருப்பார்கள், நெருப்பு மூட்டி எரித்தால் வலிக்காதா, ஏன் வலிக்காமல் போயிற்று, எது இருந்தால் வலி, எது இழந்தால் மரணம். எது இருந்தால் என்று தன்னைத்தானே உற்றுப் பார்த்தான். எது இருக்கிறது உள்ளே என்று மெல்ல தேடினான்.இறந்து போதல் என்றால் எது வெளியே போகவேண்டும் என்று மறுபடியும் ஆராய்ந்தான்.

இப்படி உட்கார்ந்து பார்த்தால் தெரியுமா, இறந்து போனால் தானே தெரியும். இறந்து போனது என்றால் நீட்டி படுக்க வேண்டும். அவன் சட்டென்று கால் நீட்டி படுத்துக் கொண்டான். உடம்பை விறைப்பாக்கினான். இப்ப உடம்பு செத்துவிட்டது. இந்த உடம்புக்கு மரணம் வந்துவிட்டது. நான் இறந்து விட்டேன். இப்பொழுது கொண்டு போய் தகனம் செய்ய போகிறார்கள்.

அண்ணா தான் மறுபடியும் நெருப்பு சட்டி தூக்கிக் கொண்டு போகவேண்டும். ஆடி ஆடி தூக்கிக் கொண்டு போய், சுடுகாட்டில் வைத்து விறகு அடுக்கி, கொளுத்தி விடுவார்கள். இந்த உடம்பு மெல்ல மெல்ல நெருப்புபட்டு சாம்பலாகிவிடும்.. ஒன்றுமே இருக்காது. உடம்பு காணாமல் போய்விடும். எது இருப்பதால் நான் இருக்கிறேன், எது இருப்பதால் நான் படுத்து இருக்கிறேன். எது இல்லாது போனால் நான் இறந்து விடுவேன்.

வேங்கடராமன் உற்று ஆழ்ந்து எது இருக்கிறது என்று பார்த்தான். வேங்கடராமனின் மூச்சில் மாறுதல் ஏற்பட்டது. மனம் அடங்க, முச்சும் அடங்கும், மூக்கில் இருந்து ஓரடி தூரம் வெளிவருகின்ற காற்று மெல்ல சுருங்கிற்று. மனதில் உள்ளுக்குள் ஆழ்ந்து எது இருக்கிறதோ என்று பார்க்க, மூச்சு விடுவது மூக்கின் எல்லைவரை இருந்தது.

இன்னும் ஆழ்ந்து எது இருக்கிறது, எது இழந்தால் மரணம் என்று உற்று பார்க்க மூச்சானது மேல்மூக்கு வரை நின்றது. அட இதோ, இந்த இடத்தில்தான், இந்த இடத்தில்தான் ஏதோ இருக்கிறது. அதனுடைய இருப்பால்தான் உடம்பினுடைய எல்லா விஷயங்களும் ஆடுகின்றன.

இன்னும் உற்று பார்க்க, மூச்சானது வெளியே போகாமல், தொண்டைக் குழியில் இருந்து நுரையீரலுக்கு போயிற்று. நுரையீரலிலிருந்து தொண்டைக்குழிக்கு வந்தது. தொண்டைக்குழியில் இருந்து நுரையீரலுக்கு போயிற்று .

இன்னும் உற்றுப் ஆழ்ந்து பார்க்க வேங்கடராமன் உடம்பு வேகமாக விறைத்தது. உடம்பினுள்ள மற்ற புலன்களுடைய ஆதிக்கங்கள் தானாய் இழந்தன. இரத்த ஓட்டம் வேறு மாதிரியான கதிக்கு போயிற்று. இறந்த போது உடம்பு விறைக்குமே, அந்த விறைப்புத்தன்மை உடம்பில் சட்டென்று ஏற்பட்டது.

அவன் அந்நியமாய் நின்று வேடிக்கை பார்த்தான். மூச்சானது இப்பொழுது மெல்ல நுரையீரலில் இருந்து சிறிது தூரம் வெளிப்பட்டு மறுபடியும் நுரையீரலுக்கு போயிற்று. மூக்கு அருகே, தொண்டை அருகே வராது, மூச்சு குழாய் அருகே கொஞ்சம் தூரம் போய்விட்டு மறுபடியும் பின் திரும்பியது.

மூச்சு இருந்தது. ஆனால் முழுவதுமாக இல்லாது, ஒரு காளை கொம்பு போல அதே அளவோடு சிறிது வளைவோடு மூச்சு எகிறி வெளியே போய் மறுபடியும் நுரையீரலுக்கு வந்தது. மனம் அடங்க, மூச்சும் அடங்கும். மூச்சு அடங்க, மனமும் அடங்கும். இரண்டு காளை கொம்புகளாய் மூச்சு அசைந்து கொண்டிருந்த பொழுது, சட்டென்று உள்ளுக்குள்ளே ஒரு பேரொளி தோன்றியது.

தாங்க முடியாத அதிர்ச்சி வந்தது. இரண்டு மூச்சுக்கு நடுவேயும், இரண்டு காளைக் கொம்புகளுக்கு நடுவேயும், ஏதோ ஒன்று பிரகாசமாக ஆடியும், ஆடாமலும், அசைந்தும், அசையாமலும் மிக பொலிவோடு நின்று கொண்டு இருந்தது. எண்ண ஓட்டங்கள் சில்லென்று நின்றன. அது, அந்த பேரொளி , எண்ணத்தை விழுங்கியது. எண்ணம் விழுங்கப்பட,  "நான் "என்ற அகந்தையும் உள்ளே விழுங்கப்பட்டது.

"நான்" என்கிற எண்ணம் காணாமற் போக , பேரொளியே தானாகி வேங்கடராமன் கிடந்தான். சகல உயிர்களையும் விழுங்கி நிற்பது என்பது தெரிந்தது. இதுவே நிரந்தரம். இதுவே முழுமை. இதுவே இங்கு இருப்பு. இதுவே இங்கு எல்லாமும். இதுவே முதன்மை, இதுவே சுதந்திரம், இதுவே பரமானந்தம், இதுவே பூமி, இதுவே பிரபஞ்சம், இதுவே அன்பு, இதுவே கருணை, இதுவே அறிவு. இதுவே ஆரோக்கியம். அனைத்து இடங்களிலும் நீக்கமற நிற்கின்ற அற்புதம் .

இதுவே எல்லா உயிர்களிலும் நீக்கமற நிறைந்து இருக்கிறது. மூடிய கண்களில் பெரிய வெளிச்சம், மூடாத காதுகளில் ரீங்காரம், உடம்பு முழுவதும் புல்லரிக்க வைக்கும் தகதகப்பு, புத்தியில் ஒரு திகைப்பு, உள்ளங்காலில் ஒரு சுகவேதனை, ஆசனவாய் இழுத்து சுருங்கி கொண்டு கழுத்து வரை ஒரு சக்தியை தள்ளி அனுப்புகிறது.

முதுகு தண்டில் ஒரு குடையல், நெஞ்சு துடிப்பு நிதானம், இருதயத்தில் அழுத்திய கனம், தொண்டையில் ஒரு சுழல், நெற்றியில் ஒரு குறு குறுப்பு, உச்சி மண்டையில் ஒரு அக்னி, ஆஹா ஆஹா எல்லா இடமும் நீக்கமற நிறைந்திருக்கிறதே.

அதுவே அதுவே, வேங்கடராமனின் மனம் மெல்ல விழித்து கொண்டு அலறியது. திரும்பி எழுந்திருக்க அரைமணி நேரம் ஆயிற்று. வேங்கடராமன் எழுந்து சம்மணமிட்டு உட்கார்ந்து கொண்டான்.

எதிரே இருந்த சுவர் பார்த்து வெறுமே அழுதான். பிறகு காரணமின்றி சிரித்தான். மீண்டும் அழுதான். எழுந்து நின்று சுவர் மூலையில் சாய்ந்து கொண்டான். தள்ளாடி வாசல் நோக்கி நகர்ந்தான்.

வேகமாக தாவி ஏறும் மாடிப்படி அன்று பார்க்க பயமாக இருந்தது. உருண்டு விழுந்து விடுவோமோ என்று தோன்றியது.  என்ன நடந்தது எனக்கு, என்ன நடந்தது எனக்குஒவ்வொரு படியாய் மெல்ல இறங்கி வந்தான்.

உள்ளே இருப்பது நான். அதுதான் நான் ஒருபடி இறங்கினான். இந்த உடம்பு நான் அல்ல, இந்த புத்தி நானல்ல, என் சக்தி நானல்ல, என் மனம் நானல்ல ஒவ்வொரு படி இறங்கும் போதும் அவனுக்குள் தெள்ளத்தெளிவாய் விஷயம் புரிந்தது. உள்ளே பேரொளியாய், சுடராய் இருந்து இருக்கிற அதுவே "நான்".

அதுவே எல்லாருள்ளும். எனக்குள் இருப்பதே எல்லா இடத்திலும் இருக்கிறது. நான் தான் அது, நான் தான் சித்தி, நான் தான் சித்தப்பா, நான் தான் அண்ணா, நான் தான் தெரு நாய், நான் தான் வண்டு, நான் தான் பசுமாடு, நான் தான் மாடப்புறா, நான் தான் எல்லாமும். ஒருமை எப்படி பன்மையாகும். இது மிகப் பெரிய தவறு.

"நான்" என்பது எல்லாவிதமாகவும் விளங்கியிருக்கிறபோது, எல்லாமுமாய் பிறந்து இருக்கிற போது, என்னிலும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம். என்ன வேறுபாடு. ஒருமை எப்படி பன்மையாகும் பத்தாவது படியில் இறங்கி நின்றான். மாடிப்படி திரும்பினான். சிரித்தான்.

இதை யாரிடம் போய் சொல்வது, இப்படி நடந்தால் என்ன அர்த்தம் என்று விளக்கம் கேட்பது, நான் சரியாக புரிந்து கொண்டு இருக்கிறேனா, எனக்கு ஏதோ நடந்தது, அது சரியாக நிகழ்ந்ததா, தூக்கமா, பிரமையா அல்லது உள்ளுக்குள் இருப்பது தான் வெளிப்பட்டதாஅவன் இறங்கி நடந்து கோயிலுக்குள் போனான். மதுரை சுந்தரரேஸ்வரரை பார்த்து கைகூப்பினான்.

அந்த கைகூப்பலில் நன்றி இருந்தது, நெகிழ்வு இருந்தது, சந்தோஷம் இருந்தது, அமைதி இருந்தது, அன்பு இருந்தது, ஒரு ஆனந்தம் பெருக்கெடுத்து ஓடிற்று. எல்லாம் கரைந்து மனம் முழுவதும் ஒன்றாகி அவன் மறுபடியும் சுவாமியை நமஸ்கரித்தான்.

மறுபடியும் போய் அவ்விதமே ஆழ்ந்து உட்கார்ந்து கொள்ள வேண்டும் அல்லது படுத்து அந்த அனுபவத்தை மறுபடியும் அனுபவிக்க வேண்டும் என்று தோன்றியது. மீண்டும் நீங்க வரணும் என்று மதுரை சுந்தரரேஸ்வரரை கைகூப்பி இறைஞ்சினான்.

ஊர் முழுவதும் சுற்றி விட்டு வீடு திரும்பும் போது ஒரு காலியான பாத்திரம் போல வேங்கடராமன் நடந்தான். அந்த பாத்திரத்தை நிரம்ப இறையருள் காத்திருந்தது. தன்னை சுத்தம் செய்து கொள்வது என்பது எல்லோருக்கும் நடப்பது இல்லை, வெகு சிலருக்கே நடக்கிறது.

அப்படி நடந்தவர்களுக்குத்தான் ஞானியர் என்றும், மகான் என்றும் பெயர். வேங்கடராமன் என்கிற அந்த பதினாறு வயது இளைஞன் பிற்பாடு ஸ்ரீ ரமண மகரிஷி என்று அழைக்கப்பட்டார். பகவான் என்று பலர் அவரை வணங்கினார்கள். வேங்கடராமன் பிறந்த ஊர் திருச்சுழி..

இராமனாதபுர சமஸ்தானத்திற்கு அடங்கிய சிறிய ஊர், சுற்றிலும் பொட்டல் காடு. மானம் பார்த்த பூமி. ஆனால் அங்கு அழகான சிவன் கோயில் இருந்தது. உலகில் பிரளயம் ஏற்பட்டபோது சிவன் சூலத்தால் ஒரு பள்ளம் ஏற்படுத்த பிரளயம் அழித்துக்கொண்டு அப்பள்ளத்தில் மறைந்தது. பிரளயம் அழிந்து மறைந்ததால் அது திருச்சுழி. வெகு காலத்திற்கு பிறகு அந்த சுழியிலிருந்து ஒரு பிரளயம் உண்டாயிற்று. பொங்கி எழுந்து உலகம் எல்லாம் நனைத்தது. ........

பாலகுமாரனின் எழுத்தில் சக்தி விகடனில் ...

https://m.facebook.com/sriramanamandiram/posts/1534718580112196:0

டிஸ்கி :

இவ்வாறான அனுபவங்கள் எவ்வளவு முயற்சித்தாலும் கிடைக்குது இல்லை .. கடைசி அனுபவம் (மரணம்) வரை நாமும் காத்து கிடைக்க வேண்டும் போல் உள்ளது ?

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தோழர்...நீங்கள் இந்தப் பகுதியில்...இணைக்கும்..ஆக்கங்களையும்...கருத்துக்களையும்..தவறாமல் வாசித்து வருபவர்களில்...நானும் ஒருவன்!

மேலும்...இது சம்பந்தமான...பல புத்தகங்களையும்...வாசித்து இருக்கிறேன்!

மரணத்தைப் பற்றிய..எனது ஓரளவான புரிதல்...பல...இடங்களில் எனக்கும் பிரச்சனையாக உருவெடுத்திருக்கின்றது!

அதனால்....இவற்றைப் பற்றிய மேலதிக...ஆய்வுகளைத் தற்காலிகமாக நிறுத்தியும் உள்ளேன்!

குறிப்பாக...பல...மரணவீடுகளில்....எனது சொந்தங்கள்...உறவுகள்..இயற்கையாக அழும்போது...என்னால் அழ முடிவதில்லை!

பலவந்தமாகப் பல தடவை முயன்றும்...கண்களில்...கண்ணீரை வரவழைக்க முயன்று...தோல்வியடைந்திருக்கிறேன்!

குறிப்பாக...பட்டினத்தார் பாடல்கள்,  மணிவாசகரின் பாடல்கள், கௌதம புத்தரின் மகாயான பௌத்த வரலாறு, தலாய் லாமாவின் நூல்கள், சுவாமி விவேகானந்தரின் நூல்கள்...என்பவற்றுக்குள்....இந்த உண்மைகள் பொதிந்திருக்கின்றன! பகவத் கீதையையும்...இவற்றினுள் அடக்கலாம் என நினைக்கிறேன்! எனினும்...கீதை...சில இடங்களில்...ஆரியத்தைத் தூக்கிப் பிடிக்கும் நூலாக மாறுகின்றது! இது பகவத் கீதையில் ...பிற்காலத்து ஆரியர்கள் செய்த ஊடுருவல்களின் விளைவாக இருக்கும் சாத்தியங்களே அதிகம் என்று நினைக்கிறேன்!

எனது வீட்டின் ஒரு படம் சுவரில் எப்போதும் தொங்கிக்கொண்டிருக்கும்!

அது நீண்ட காலத்தின் முன்னர்...நான்..லண்டனில் இருந்தபோது..ஒரு பஞ்சாபி...எனக்காக இந்தியாவில் இருந்து கொண்டு வந்த படம்!

ஒரு துணியில் வரையப்பட்ட....எல்லாரும் அறிந்த...கீதா உபதேசப் படம் தான்...அது!

அதை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும்....மரணத்தை எண்ணிக் கலங்கின்ற விஜயா....மரணத்தின் தன்மை சொல்வேன்! மானிட ஆன்மா...மரணம் எய்தாது....! மறுபடி....பிறந்திருக்கும்...! மேனியைக் கொல்வாய்....மேனியைக் கொல்வாய்....! நீ விட்டு விட்டாலும்...அவரது மேனி...வெந்து தான் தீரும்....ஒர் நாள்!

நியாயங்கள் எவை.....அநியாயங்கள் எவை....என்று யார் வரையறுப்பது?

ஆரியர்கள் சொல்வது தான் நியாயம் என்று நம்பி...இன்று எமதினம் அழிவை நோக்கிச் செல்கின்றது!  புலன்களின் வழி சென்று வாழ்வதே....வாழ்க்கை என்றாகி விட்ட உலகில்....அவற்றுக்கு அப்பாலும்....வாழ்க்கை என்று ஒன்று இருக்கின்றது என்ற வரையில்...மிகவும் மகிழ்ச்சியே!

ஆனால் ஒரு மட்டும் நிச்சயம்!

எமது பௌதீக உடலில் இருந்து நாம் விடைபெறும்போது...ஆணவத்தை மட்டுமே நாம் விட்டுச் செல்கிறோம்!

அந்த பௌதீக உடல் மூலம் நாம் வாழ்ந்த வாழ்வை...அதன் மூலம் பெற்ற பல அனுபவங்களை..ஆற்றல்களை..எம்முடனேயே நாம் எடுத்துச் செல்கிறோம்! நாளைய எமது...பௌதீக உடலினுள் நுழையும் போது....இந்த ஆற்றல்களும்...அனுபவங்களும்..எம்முடன் தொடர்ந்து பயணிக்கவே செய்யும்! கீதை...இதனைத் தான் .....கர்மா..என்கிறது! பௌத்தம் இதனை நிராகரிக்கின்றது! சைவமும்....சமணமும்.. சில இடங்களில்...கீதையும் கூட....மரணத் தருவாயில்....இருக்கும் மன நிலையே ..எம்முடன் பயணிக்கின்றது என்று கூறுகின்றன!

எது எப்படியிருப்பினும்....சிவா புராணத்தில் நுணா....சுட்டிக் காட்டிய வரிகளுக்குள்...பல உண்மைகள்   புதைந்திருக்கின்றன என்பது மட்டும் உண்மை! 

 புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் 
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் 
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் 
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் 
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்

 

அவர் அடுக்கியிருக்கும்...வரிசையைப் பாருங்கள்!

நான் கூறியவற்றின் பல அர்த்தங்கள்... அதனுள் புதைந்திருக்கின்றன!

பல தடவைகள் இந்தத் திரியில் பங்கெடுக்க வேண்டும் என்று...நினைத்துக் கடைசி நேரத்தில் விலகிப் போயிருக்கின்றேன்!

தொடர்ந்தும்....இணைப்புக்களைத் தாருங்கள்! நன்றி!

கற்றது கைமண்ணளவு....கல்லாதாது...உலகளவு!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தோழர் ,

1419526.large.jpg

1) இறைவன் ( ௐ ங்காரம் ) - பிரபஞ்சம்

|

2) ஆன்மா --- 3) மனம் -- 4) புலனின்பம் -- 5) பிறவி

சிவன் தாட்சாயினியின் மறைவுக்கு பின் இரண்டாவது பிறவியாகிய பார்வதியை மணமுடிக்க எண்ணி அவரின் தந்தை இமய வரம்பனிடம் பெண் கேட்க அவரோ உன்னுடைய பெற்றோரை அழைத்து வா .. அவர்கள் எங்கே ? என்று வினவ . . அப்போது எல்லோருக்கும் ௐ என்ற ஒலியே கேட்டது .

அப்படியானால் இந்த பிரபஞ்சத்தில் முதலில் தோன்றியது "ஒலியாகவே" இருக்க வாய்ப்பு உள்ளது . அதில் இருந்துதான் நாம் உட்பட அனைத்தும் வந்திருக்க வேண்டும்

போக நான் மேலே குறிப்பிட்டது போல நாம் எண் 5 இல் இருக்கிறோம் . எண் 5 இல் இருந்து 3 வரை மீண்டும் 3 இல் இருந்து 5 க்கு சுழன்று கொண்டே இருக்கிறோம் .

இதை ஊடறுத்து மேலே முன்னேற வேண்டும் . இது என்னுடைய தனிப்பட்ட அனுபூதி ( லோகீய பாடங்கள் அனுபவம் ; இறைநிலை அனுபவங்கள் அனுபூதி! )

இவ்வாறான தனிப்பட்ட அனுபூதிகள் நபருக்கு நபர் வேறுபடும் . அதை வெளியில் சொன்னாலும் யாருக்கும் புரியாது சிலர் சிரிக்கவும் செய்வார்கள் .. ?

தாங்கள் மேலும் பல காணொளியை , பதிவுகளை பிரபஞ்சம் , ஆன்மா, அடுத்த நிலை குறித்து இணைக்க கனிவுடன் வேண்டுகிறேன் .. ?

3 hours ago, புங்கையூரன் said:

பல தடவைகள் இந்தத் திரியில் பங்கெடுக்க வேண்டும் என்று...நினைத்துக் கடைசி நேரத்தில் விலகிப் போயிருக்கின்றேன்!

தொடர்ந்தும்....இணைப்புக்களைத் தாருங்கள்! நன்றி!

கற்றது கைமண்ணளவு....கல்லாதாது...உலகளவு!

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு முன்ஜென்மம் இருந்துள்ளது என்று அறிந்துகொள்ளுங்கள் ..!

gedg-1544177506.jpg

இந்து மதம் மட்டுமின்றி கிட்டதட்ட அனைத்து மதத்திலுமே நமது ஆத்மாக்கள் அழிவதில்லை என்றும் மீண்டும் மீண்டும் பிறக்கிறது என்றும் நம்பப்படுகிறது.

ஆன்மாக்களுக்கு அழிவு என்பதே இல்லை என்று கூறப்பட்டாலும் இறந்த பிறகு ஆன்மா என்னவாகிறது என்பது இன்றும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் ஒன்று.

இதனை பற்றிய பல கோட்பாடுகள் இருந்தாலும் அதற்கான சரியான விளக்கங்கள் இல்லை.பூமியில் வாழும் நம் வாழ்க்கையானது அன்பு, ஒழுக்கம், நேர்மை, பணிவு போன்றவற்றை கற்றுக்கொள்ளும் ஒரு பயிற்சி போன்றது.

நாம் இறந்தவுடன் நமது ஆன்மா திவ்ய நிலையை அடைந்து சிறிது காலத்திற்கு பின் மீண்டும் தன் பயிற்சியை பூமியில் வேறு உருவில் தொடங்கும் என்று நம்பப்படுகிறது. நீங்கள் இப்பொழுது வாழ்வது கூட உங்கள் ஆன்மாவின் மறுபிறப்பாக இருக்க வாய்ப்புள்ளது..!

நீங்கள் பூமியில் ஏற்கனவே வாழ்ந்துள்ளீர்களா என்பதை கண்டறிய பல வழிகள் உள்ளது.

சில அறிகுறிகள் நீங்கள் வாழ்வது மறுபிறவியா என்பதை உணர்த்தக்கூடும். அந்த அறிகுறிகள் என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம்.

ஒரே கனவு மீண்டும் மீணடும் வருவது

கனவுகள் என்பது உங்கள் வாழ்க்கையின் அனுபவங்களின் பிரதிபலிப்பாகும். ஒரே கனவு உங்களுக்கு மீண்டும் மீண்டும் ஒரே நேரத்தில் வருகிறதா? கனவுகளில் வரும் சூழ்நிலையும், மனிதர்களும் ஒரு குறிப்பிட்ட  கடந்த காலத்தை உணர்த்துகிறதா? அப்படியென்றால் அந்த கனவு உங்களுடைய கடந்த பிறவியின் நினைவலைகளை மீண்டும் கொண்டுவருகிறது.

அதீத உள்ளுணர்வு

நமது அறிவையும், ஆற்றலையும் அதிகரிக்கும் உள்ளுணர்வு நமக்கு தானாக வந்துவிடுவதில்லை என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். சில நேரங்களில் இந்த அறிவாற்றல் உங்களின் கடந்த கால வாழ்க்கையில் இருந்தும் வந்திருக்க வாய்ப்புள்ளது. நமது வயது சிறியதாக இருந்தாலும் நமது ஆன்மாவின் அனுபவம் அதிகமாக இருப்பதால் உங்களுக்கு இந்த ஞானம் கிடைக்க வாய்ப்புள்ளது.

வித்தியாசமான நினைவுகள்

சிறுவயதில் நம்மால் விவரிக்க முடியாத பல நினைவுகள் நமக்கு தோன்றும், பின்னாளில் மட்டுமே நம்மால் அதனை விவரிக்க இயலும். பெரியவர்களை விட குழந்தைகளிடம் ஆன்மாவை கடக்கும் புள்ளி அருகில் இருக்கும். அவர்கள் தங்கள் கடந்த கால வாழ்க்கையிலிருந்து நினைவுகளை எளிதில் பெற இயலும். நீங்கள் கடந்த காலத்தில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தீர்களோ அந்த அளவு இபிகா நினைவுகள் உங்களை தொடரும்.

தேஜா வூ உணர்வு

இந்த உணர்வு கிட்டதட்ட நம் அனைவரின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு தருணத்தில் இருந்திருக்கும். தற்பொழுது நடக்கும் ஒரு விஷயம் ஏற்கனவே நம் வாழ்க்கையில் நடந்தது போன்ற உணர்வு இருக்கும். பெரும்பாலும் தேஜா வூ தானாக வரும். ஆனால் சிலசமயம் இது வாசனை, பொருள், இடம் போன்றவற்றால் தூண்டப்படும். இது நரம்பியல் கோளாறுகள் என்று சிலர் கூறுகிறார்கள், சிலர் இது மற்ற பரிமாணங்களில் இருந்து ஏற்படுகிறது என்று நம்புகிறார்கள். ஆனால் இது உங்கள் முன்ஜென்மத்தின் அறிகுறியாக இருக்க நிறைய வாய்ப்புள்ளது.

மற்றவர்களின் உணர்வுகளை நீங்கள் உணர்வது .

முதிர்ச்சியடைந்த ஆன்மாக்கள் உணர்ச்சிகளை எளிதில் உறிஞ்சுக்கொள்ளும். அதன்படி சிலசமயம் மற்றவர்களின் மனா உணர்ச்சிகளை மட்டுமின்றி, உடல் உணர்ச்சிகளையும் உங்களால் புரிந்து கொள்ள இயலும். இப்படிப்பட்டவர்கள் பெரும்பாலும் கூட்டத்தை தவிர்ப்பார்கள், ஏனெனில் அவர்களால் கூட்டத்தில் உள்ளவர்களின் உணர்ச்சிகளை கிரகித்துக்கொள்ள இயலும். இது உங்களுக்கு முன்ஜென்மம் இருந்ததை உறுதி செய்யும்.

அதீத புத்திக்கூர்மை

சில குழந்தைகள் அவர்கள் வயதிற்கேற்றவாறு நடந்து கொள்ளமாட்டார்கள். இளைஞர்களுக்கு இணையாக அவர்களது செயல்களும், பேச்சும் இருக்கும். இந்த அனுபவத்தை சோல் ஏஜ் என்று கூறுவார்கள். அதாவது ஆன்மாவின் வயது என்று அழைப்பார்கள். நீங்கள் பூமிக்கு புதிய ஆன்மாவாக இருந்தால் உங்கள் செயல்கள் குழந்தைத்தனமாக இருக்கும். ஆனால் அனுபவம் வாய்ந்த ஆன்மாவாக இருக்கும் பட்சத்தில் செயல்களில் முதிர்ச்சி இருக்கும்.

வரலாறை விரும்புவீர்கள்

நீங்கள் குழந்தையாக இருந்த போது எதாவது ஒரு காலகட்டத்தை பற்றியோ அல்லது கலாச்சாரத்தை பற்றியோ அதிக ஆர்வத்துடன் கற்றிருக்கிறீர்களா?. அவ்வாறு இருந்தால் அதற்கான விளக்கம் இதுதான் உங்கள் ஆன்மா அந்த குறிப்பிட்ட காலகட்டத்திலோ, இடத்திலோ அல்லது கலாச்சாரத்திலோ வாழ்ந்திருக்கிறது.

விவரிக்க முடியாத அச்சங்கள்

இது உண்மைதான். இது பிரச்சினையின் ஒரு வடிவமாக இருந்தாலும் சில விவரிக்க முடியாத அச்சங்கள் உங்களுக்கு இருந்தால் அது உங்கள் கடந்த கால வாழ்க்கையிலிருந்து ஏற்பட்டதாகும். குறிப்பாக தண்ணீரில் மூழ்கும் போது பயம், குறிப்பிட்ட விலங்குகள், குறிப்பிட்ட சில இடங்கள், குறிப்பிட்ட எண்கள், நிறங்கள் போன்றவற்றிக்கு பயப்படுவது கடந்த ஜென்மத்தை உறுதிப்படுத்தும்.

கணித்தல்

ஒருவரை பார்த்ததுமே எடைபோட்டு விடுவீர்கள் ஒருவரை பார்த்து சில நிமிடங்கள் அவர்களுடன் பேசினாலே அவர்களுடைய குணநலன்கள், வாழ்க்கைமுறை போன்றவற்றை நீஙகள் கணித்துவிடுவீர்கள்.

அதாவது உங்கள் ஆன்ம பலம் மற்ற ஆன்மாக்கள் பற்றிய தகவல்களை எளிதில் அறிந்துகொள்ளும். அதன்காரணம் அப்படிப்பட்டவர்களை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஏற்கனவே பார்த்ததுதான்.

தனிமையை விரும்புவீர்கள்

நீங்கள் இந்த உலகத்திற்குள் முதல் முறையாக வந்துள்ளீர்கள் எனில் எப்படி மற்றவர்களுடன் விளையாடுவது, தனக்கான வாழ்க்கையை எப்படி வசதியாக அமைத்துக்கொள்வது என்று உங்கள் ஆன்மா சிந்திக்கும்.

ஆனால் உங்கள் ஆன்மா ஏற்கனவே பலமுறை இங்கு வாழ்ந்திருந்தால் நீங்கள் தெரிந்து விளையாட்டை மீண்டும் மீண்டும் விளையாட ஆர்வம் காட்டமாட்டீர்கள்.

திருப்தியான வாழ்க்கை

நீங்கள் ஏற்கனவே இங்கு வாழ்ந்திருந்தால் உங்களுக்கு முக்கிய குணங்களான பொறுமை, நேர்மை, சுய ஒழுக்கம் போன்ற்வற்றை பற்றி நன்கு தெரிந்திருக்கும். எனவே நீங்கள் அனைத்திலும் சரியாக இருக்க முயல்வீர்கள். உங்களுக்கு அதிக அனுபவம் இருப்பதால் மற்றவர்களுக்கு ஒரு பிரச்சினை ஏற்படும்போது அதனை தீர்க்க முதல் ஆளாக நிற்பீர்கள்.

அந்த பிரச்சினையால் அவர்களுக்கு என்ன நடக்க போகிறது என்பதை உங்களால் முன்கூட்டியே உணர இயலும். எனவே அவர்களுக்கு சரியான பாதையை காட்டுவீர்கள்.

ஏமாற மாட்டிர்கள்

நீங்கள் அப்பாவியாக இருக்க முடியாது. நீங்கள் ஏற்கனவே இங்கு வாழ்ந்தவராய் இருந்தால் மற்றவர்கள் ஆடும் மூளை விளையாட்டையும், ஏமாற்றும் வித்தையையும் நீங்கள் எளிதில் கண்டுபிடித்துவிடுவீர்கள். உங்களை ஏமாற்றும் நோக்கத்துடன் ஒருவர் பேசினால் அவர்களின் நோக்கத்தை முன் கூட்டியே நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.

https://tamil.boldsky.com/insync/pulse/2018/signs-this-is-not-your-first-life-on-earth/articlecontent-pf170263-023747.html

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புலிகள் குடும்பங்களை பிடித்து வைத்திருந்தார்கள் என்பதனை  நானும் கேள்விப்பட்டதில்லை, ஆனால் 1995 இறுதிக்காலப்பகுதியில் புலிகளின் 3 போராளிகள் இயக்கத்திலிருந்து விலகியிருந்தார்கள், அவர்களுக்கு 3 மாத தண்டனைக்காலத்தில் தண்டனையாக சமையலறை வேலை இருந்தது, அந்த காலப்பகுதி முடிவடைவதற்கு வெகு சில நாள்கள் மட்டும் இருந்த நிலையில் அவர்கள் இருந்த சமையலறை மேல் புக்கார வீசிய குண்டில் 3 போராளிகளும் உடல் சிதறி பலியாகியிருந்தனர். அதில் ஒரு போராளி சாகவச்சேரியினை சேர்ந்தவர், அந்த குண்டு வீச்சு யாழ் மாவட்டத்திற்குள் நிகழ்ந்தது, இருந்தும் அந்த போராளிகளின் உடல்களை புலிகள் தாமே தகனம் செய்துவிட்டனர், குடும்பத்தினரிடம் ஒப்படைக்கவில்லை, இறந்தவர்களுக்கு போராளிகள் எனும் அந்தஸ்தும் வழங்கப்படவில்லை, 5 பேருக்கும் குறைவானவர்களே அவர்களது இறுதி நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.
    • இவருக்கும் எனக்கும் கல்வியில் ஒரு கள்ளத் தொடர்புண்டு . ......!  😂
    • முதலில் செய்து விட்டு சொல்லுங்கடா வாயளையும்  வெடித்தது காணும் .
    • சரியாகச் சொன்னீர்கள் தேர்தல் வெற்றிக்காக மற்றய கட்சிகளும் செய்த ஏமாற்று வேலையை தான் இவர்களும் செய்கின்றனர் ஆனால்  இந்த ஏமாற்று வேலையால் சிங்கள மக்கள் அதிருப்தி அடைகின்றார்கள் ஆனால் முந்தநாள் அனுரகுமார திசநாயக்கவுக்கு மாறியோர் சங்கம்  பொறுமை பொறுமை காக்க வேண்டும் உடனே எல்லாம் செய்ய முடியாது அரசிடம் இப்படி செய்வதற்கு பணம் இல்லை முன்னைய ஆட்சிகளில் அதிக மின்கட்டணம் மக்கள் செலுத்தியவர்கள் தானே என்று பிரசாரம் செய்கின்றனர் இலங்கையில் இப்போது வந்த தேங்காய் தட்டுபாட்டுக்கு நாங்கள் வெளிநாட்டில் தேங்காய் இல்லாமல் சமைக்கின்றோம் இலங்கை மக்களும் தேங்காய் இல்லாமல் சமைக்க பழகட்டும் என்றார்களாம்
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.