Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர்களுக்குச் சுண்ணாம்பு, பலுசிஸ்தானியர்களுக்கு வெண்ணெய்-அமெரிக்காவின் கபட நாடகம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்குச் சுண்ணாம்பு, பலுசிஸ்தானியர்களுக்கு வெண்ணெய்-அமெரிக்காவின் கபட நாடகம்!

21-pakistan-map-300.jpg

இஸ்லாமாபாத்: பலுசிஸ்தான் மாகாண மக்களுக்கு பிரிந்து போய் தனிநாடு அமைத்துக் கொள்ளக் கூடிய "சுயநிர்ணய உரிமை" என்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தால் அலறிப் போய் கிடக்கிறது பாகிஸ்தான்.

அமெரிக்காவின் இந்த நிலைப்பாடு அதன் இரட்டை வேடத்தையும், கபட நாடகத்தையும் அம்பலப்படுத்துவதாக உள்ளது. ஈழத் தமிழர்களின் தனி நாடு கோரிக்கையை ஏற்காத அமெரிக்கா இப்போது சுயநல நோக்குடன் பலுசிஸ்தான் தனி நாடாகலாமே என்று சப்பை கட்டுவதாக கூறப்படுகிறது.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்காக பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதரை இருமுறை அழைத்து அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண சட்டப்பேரவையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டு அனைத்து ஊடகங்களும் இத்தகைய தீர்மானங்களின் பின்னணியில் இந்தியா இருப்பதாகக் குற்றம்சாட்டி, அப்படியானால் இந்தியாவில் உள்ள ஜம்மு காஷ்மீர் மக்களுக்கும் தனிநாடு அமைக்கும் சுயநிர்ணய உரிமை இல்லையா? என்று கேள்வி எழுப்பியிருக்கின்றன.

பலுசிஸ்தான் விவகாரம் என்ன?

ஈரான், ஆப்கானிஸ்தான், சீனா ஆகிய நாடுகளின் எல்லைகளைக் கொண்டது பாகிஸ்தானின் ஒரு மாகாணமாக இருக்கும் பலுசிஸ்தான்.

பலுசிஸ்தானியர்கள் பழங்குடி இன மக்கள். இவர்களது நலன்களை நீண்டகாலமாகவே பாகிஸ்தான் அரசுகள் புறக்கணித்து வருகின்றன என்பது குற்றச்சாட்டு.

இதனால் தங்களது மாகாணத்தை தனிநாடாக அறிவிக்கக் கோரி ஆயுதப் போராட்டத்தையும் நடத்திக் கொண்டிருக்கின்றனர் பலுசிஸ்தானியர்கள்.

பலுசிஸ்தான் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக அனைத்துவித மூர்க்கத்தனமான இனப்படுகொலைகளையும் பாகிஸ்தான் அரங்கேற்றி வருகிறது.

அண்மையில் பாகிஸ்தான் சென்றிருந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம், தமிழினப் படுகொலை நிகழ்த்தியதுபோல் நாங்கள் பலுசிஸ்தான் இனப் படுகொலை நடத்த வகுப்பு எடுக்குமாறு கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பலுசிஸ்தானின் முக்கியத்துவம்

பலுசிஸ்தான் ஒரு தனி மாகாணம் மட்டுமல்ல. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பூகோளப் பிரதேசமும் கூட.

பலுசிஸ்தான் மாகாணத்தின் கவ்தார் துறைமுகம் மிக முக்கியமான ஒன்று. இந்த அரபிக் கடல் துறைமுகம் இப்போது சீனாவின் வசம் உள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய்யை இந்த துறைமுகத்தில் இறக்கி வைத்து இங்கிருந்து எல்லை மாகாணங்களுக்கு ரயில் மூலம் கொண்டு செல்வதன் மூலம் ஆதாயம் அடையலாம் என்று கணக்குப் போட்டது சீனா.

ஏனெனில் அரபிக் கடல், இந்தியப் பெருங்கடல், வங்கக் கடல் மட்டுமின்றி மலாக்கா ஜலசந்தியைத் தாண்டி தங்கள் நாட்டுக்கு கொண்டுபோய் அங்கிருந்து மீண்டும் எல்லை மாகாணங்களுக்கு கச்சா எண்ணெய் அனுப்புவதற்கு பெரும் பொருட்செலவை செய்து வந்தது சீனா.

இந்த செலவுக்குப் பேசாமல் பாகிஸ்தானின் கவ்தார் துறைமுகத்தை தூர்வாரி சீரமைத்து விரிவாக்கி ஒரு ரயில் பாதையையும் போட்டுவிட்டாலே பாதி பணம் மிச்சம் என்று கணக்குப் போட்டு வெற்றியும் பெற்றுவிட்டது சீனா.

துறைமுகப் பணிகளை சீனா மேற்கொண்டபோதும் ரயில் பாதை பணிகளின் போதும் பலுசிஸ்தானியர்கள் சும்மா இருக்கவில்லை. இத்தகைய பணிகளில் பலுசிஸ்தானியர்களுக்கு முன்னுரிமை கோரினர். சீனாவும் பாகிஸ்தானும் காதில் போட்டுக் கொள்ளவில்லை.சீன நாட்டவரையே பயன்படுத்திக் கொண்டனர்.

இதனால் அவ்வப்போது சீனப் பொறியாளர்களை பலுசிஸ்தான் ஆயுதக் குழு கடத்திச் செல்வது வாடிக்கையாகிப் போனது.

அமெரிக்காவின் தலையீடு

அரபிக் கடலின் 'இங்கிட்டு' கவ்தார் 'அங்கிட்டு' சவூதி அரேபியா, அப்பால ஈரான், இப்பால ஆப்கானிஸ்தான்.. சீனா என ஒட்டுமொத்த எதிரிகள் கூடி கும்மியடிக்கும் இடமாக பலுசிஸ்தான் இருக்கிறதே என்ற கவலை அமெரிக்காவுக்கு.

ஈராக்கில் தொடங்கி ஆப்கானிஸ்தான் வரைக்கும் வந்து பாகிஸ்தானில் பின்லேடனை சாய்ச்சு எல்லாம் செஞ்சாச்சு..ஈரான்தான் பாக்கி... இஸ்ரேலைவிட்டு அடிச்சா சேதாரம் ரொம்ப அதிகம்... நாமளே அடிக்கலாம்.. எப்படி அடிக்கலாம்? என்ற யோசனைகளுக்கான விடைதான் அமெரிக்காவின் தற்போதைய தீர்மானம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

பாகிஸ்தானை துண்டாடிட்டு பலுசிஸ்தானை தனிநாடாக்க அனுமதித்தால் சீனாவுக்கும் நெருக்கடி,பாகிஸ்தானுக்கும் ஆப்பு. பலுசிஸ்தானில் ஊடுருவிவிட்டால் மத்திய கிழக்கு நாட்டிலும் கால்வெச்சமாதிரி, தெற்காசியாவிலும் கால்வெச்ச மாதிரி என்கிறது அமெரிக்க கணக்கு.

இந்தியா நிலை

பலுசிஸ்தானின் சுயநிர்ணய உரிமை விவகாரத்தில் இந்தியா மெளனமாகவே இருந்துவிடுவதற்கான வாய்ப்புகளே அதிகம். இந்தியா என்ற நாடே பல தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைகளை கபளீகரம் செய்தே உருவாக்கப்பட்டுள்ளது என்பதால் மூச்சேவிட வாய்ப்பில்லை.

இருப்பினும் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சிக்கல் என்பதால் மெளனமாக சிரித்தாலும் அடிவயிறு கலங்கியேத்தான் கிடக்கும். ஏனெனில் தெற்காசிய பிராந்தியத்தில் 30 ஆண்டுகாலத்துக்கும் மேலாக சுயநிர்ணய உரிமை கோரி போராடிய வெற்றிபெற்ற இயக்கமாக வலம்வந்தது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தனிநாடு அமைத்தால் தமிழ்நாட்டுத் தமிழர்களும் இணைந்து அகன்ற தமிழ்நாட்டை தென்னாசியாவில் உருவாக்கிவிடுவார்கள் என்ற அச்சமே முள்ளிவாய்க்காலில் லட்சக்கணக்கில் தமிழர்களை கொன்று புதைக்க கரம் கொடுத்தது.

இந்த அச்சம்தான் இன்றளவும் தமிழ்நாட்டு விவகாரங்களில் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் இந்திய அரசு இருக்கிறது என்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள்.

விடுதலைப் புலிகளும் அமெரிக்காவும்

தற்போது பலுசிஸ்தானின் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்கும் அமெரிக்கா, இதே உரிமை கோரி ஆயுதம் தரித்த தமிழீழ விடுதலைப் புலிகளை அழிக்க துணை நின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பலுசிஸ்தானத்தில் எப்படி ஒரு கவ்தாரோ அதுபோலத்தான் தமிழீழத்தின் தலைநகராக கருதப்படும் திருகோணமலை துறைமுகமும்.

திருகோணமலை துறைமுகத்தை யார் கையில் வைத்திருக்கிறார்களோ அவர்களே தென்னாசியாவையே கையில் வைத்திருப்பவர்கள் என்பது ராஜராஜசோழன் காலத்திலிருந்து தெற்காசிய பிராந்தியம் கண்டுவரும் உண்மை.

திருகோணமலைக்காக 1980களிலேயே அமெரிக்கா முயற்சித்தது. இலங்கையும் இடம் கொடுத்தது. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, இந்தியாவின் அனுமதியின்றி எந்த ஒருநாட்டுக்கும் இலங்கை அனுமதி கொடுக்கக் கூடாது என்று பகிரங்கமாக நாடாளுமன்றத்தில் எச்சரித்தார்.

1990களுக்குப் பிறகு நிலைமை தலைமைகீழ்.

சுயநிர்ணய உரிமை, தனிநாடு கோரிக்கையை கெட்டவார்த்தையாக நினைத்து சொந்த நாட்டு குடிமக்களின் உறவுகள் என்று கூட பார்க்காமல் தமிழர்களை விரோதிகளாகப் பார்த்து சீனாவுக்கு சிங்களவர்களோடு இணைந்து சிவப்புக் கம்பளம் விரித்தது.

இதில் சீனா,பாகிஸ்தான், இலங்கை, இந்தியா அத்தனை எதிரிகளும் ஓரணியில் வரிந்து கட்டி தமிழினத்தையே நிர்மூலமாக்கிவிட்டனர்.

இறுதி யுத்தகாலத்தில் குறிப்பாக 2002-ல் இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமான நார்வேயின் தலையீட்டில் உருவான அமைதி ஒப்பந்தத்திற்குப் பிறகு புலிகளுடன் திருகோணமலைக்காகவும் ஆப்கானிஸ்தானின் தலிபான்களுக்கு எதிரான போரில் பங்கேற்கவும் அமெரிக்கா பேரம் பேசியது.

prabhakaran_ltte_20090209.jpg

தலிபான் விவகாரத்தை முற்றாக நிராகரித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், தமது மாவீரர் நாள் உரையில் பிராந்திய வல்லரசுகள் மற்றும் மேற்குலக நாடுகள் தமிழீழப் பிரதேசத்தின் மீது அக்க்றை கொள்வதற்கான பின்புலமாக அவர்களது நலன்களும் இருக்கின்றன என்பதை பகிரங்கமாகச் சுட்டிக்காட்டி வந்தார்.

இந்தியாவின் தலையீட்டால் புலிகளை ஒழிக்க அமெரிக்கா இந்தியாவுக்கு கை கொடுத்தது. இதே அமெரிக்காதான் இப்போது தெற்காசிய நாடுகளுக்கு ஒட்டுமொத்தமாக செக் வைப்பது போல 'சுயநிர்ணய உரிமை" என்ற ஆயுதத்தை முன்வைக்கிறது.

எந்த சுயநிர்ணய உரிமை முழக்கத்தை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டோம் என்று இந்தியா நினைத்ததோ அது இப்போது டெல்லிக்கு ரொம்ப பக்கத்திலேயே கேட்கிறது என்பதுதான் முக்கியம்

http://tamil.oneindia.in/news/2012/02/21/world-us-congress-tables-resolution-on-baloch-aid0216.html

இது எங்களுக்கு ஒரு பாடமாக அமையாதா?

திருகோணமலை துறைமுகத்தை இப்ப என்ன தமிழர்களா ஆள்கிறார்கள்? சிங்களவன் தானே ஆள்கிறான்.

இதை அமெரிக்கா வேணுமெண்டால் கொடுக்க மாட்டமா? ஆனால் எண்களுக்கு எங்கள் ஈழம் வேண்டும்.

திருகோணமலை குத்தகைக்கு வேணுமெண்டால் எடுக்கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதிலிருந்து எடுக்கவேண்டிய செய்தி என்னவென்றால்.. :rolleyes:

ஆப்கன் போருக்கு முன்புவரை அமெரிக்க-பாகிஸ்தானியப் பிணைப்பு வலுவாகவே இருந்தது..! எப்போதிருந்து அல் கைடாவுக்கும், தலிபான்களுக்கும் ஆதரவு கொடுத்து பாகிஸ்தான் இரட்டைவேடம் போட்டதோ அன்றிலிருந்து பிரச்சினைதான்..! :D

எங்கள் ராஜபக்சாக்களும் இரட்டைவேடம் போடுவதில் தாங்கள் வல்லவர்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்..! :rolleyes:

சிலரை சிலநாள் ஏமாற்றலாம்.. ஆனால்

எல்லோரையும் எப்போதும் ஏமாற்றிக்கொண்டிருக்க முடியாது..! :rolleyes:

எண்ணெய் வளம் இருக்கும் நாடுகளாக பார்த்து குறிவைத்து, அந்த நாட்டின் மேல் எதாவது சொல்லி போர் தொடுத்து அந்த அரசை கைப்பற்றி பிறகு அமெரிக்காவிற்கு ஆமா சாமி போடும் அரசை அந்த நாட்டில் ஏற்படுத்திவிட்டு மறைமுகமாக அந்த நாட்டை கைப்பற்றுவதே அமெரிக்காவின் வேலை. ஈராக், லிபியா, இஸ்ரேல், எல்லாம் இதற்கு சான்று. ஈரான் மேல் கைவைத்தால் நிலைமை மிகவும் மோசமாகும், ரஷ்ய மற்றும் இந்தியாவின் மறைமுக ஆதரவு ஈரானுக்கு உள்ளது. மேலும் எண்ணெய் வளம் மிக்க மத்திய கிழக்கு

நாடுகளில் ஒற்றுமை இல்லாத அரசாட்சிகள் நடுவில் ஈரான் ஒரு ஜனநாயக நாடு, அமெரிக்க ஈரான் மேல் கைவைத்தால் ஈரான் அமெரிக்க அதரவு நாடுகளை கையாக படுத்தும், ஈராக், குவைத், பஹ்ரைன், கத்தார், UAE , ஓமன் போன்ற படைபலம் இல்லாத நாடுகளுக்கு ஆபத்து தான்.

மேலும் ஈழத்தில் எண்ணெய் வளம் எதுவும் இல்லை, இந்திய மலையாள கொள்கை வகுப்பளர்களிடம்

உலகம் முழுவதும் தமிழர்கள் மீது காழ்புணர்ச்சி உள்ளது தாங்கள் சுய நலம் கருதி ஒரு போதும் இதை செய்யமாட்டார்கள், எனவே மலையாளிகளுக்கு நிகராக நம் மக்கள் தகுதி, ஒற்றுமை, பொருளதரம் ஆகியவற்றை வளர்த்து கொள்ளவேண்டும்.. நமக்கு ஈழம் கிடைக்க வெகு துரம் உழைக்க வேண்டியுள்ளது .

இசையினதும் சூறாவளியினதும் கருத்துக்களுடன் உடன்படுகின்றேன். நாமும், மேலும் சிலதை இழந்து, உலக வல்லரசுகளின் நெளிவு சுளிவுகளுக்கு அமைய தேவைகளை முன்னெடுக்கவேண்டும்.

சிங்களத்தின் இரட்டை அணுகுமுறை முன்னெப்போதும் இல்லாதவைகையில் மேற்குலகத்தின் கைகளில் மாட்டுப்பட்டுப்போயுள்ளது. சீனாவும் இந்தியாவும் கூட காப்பாற்ற முடியாத நிலை உருவாகலாம். எனவே, அதற்குள் எமது இலக்கை நோக்கி நகரவேண்டும்.

செய்தியை இணைத்தவர்கள் வசதியாய் பலுசிஸ்தான் இனத்தவர்கள் யார் என்பதையும் அவர்களின் மொழி எந்த குடும்பத்தையும் சார்ந்தது என்பதையும் மறந்து விட்டார்களா அல்லது தேவையின்றி மீண்டும் ஒரு வில்லங்கத்திற்கு பிள்ளையார் சுழி போட வேண்டாம் என மறைத்து விட்டார்களா ??? எப்படியாயினும் செய்து வெளி வந்த இணையத்திலும் அவர்களை பற்றி காணவில்லை என்பது வேறு விஷயம். வரலாறு இலக்கியம் என பீற்றும் உலக மகா தமிழ் நாடு / தமிழ் ஈழ மற்றும் திராவிட தோழர்கள் மூச்சு விடாதது ஏனோ ???

அதுசரி பக்கத்தில் உள்ள ஈழ மக்களை காக்கவே திராணி இல்லாமல் சும்மா மலையாளியையும் கன்னடனையும் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு மட்டும் வம்புக்கிழுத்து பீலா விடும் உங்களுக்கு ஒடுக்கப்படும் அதுவும் எங்கேயோ இருக்கும் திராவிட இனத்தை பற்றி நினைக்க எங்கு நேரமிருக்க போகிறதோ ...........

பலுசிஸ்தான் மாகாண மக்களுக்கும் திராவிட இனத்திற்கும் மிக ஆழமான சம்மந்தம் உண்டு என்பதையும் இங்கு சொல்லி இருந்தால் எதோ எங்களை போல ஒன்றும் தெரியாதவர்கள் கற்று கொண்டது போல இருந்து இருக்குமே என ஒரு ஆதங்கம் மட்டுமே . மற்றபடி யாரையும் குறிப்பாக புரட்சி கர தமிழ் தேசியனை வம்புக்கு இழுக்க வேண்டும் என்ற குறிக்கோள் எல்லாம் நமக்கு இல்லை

டிஸ்கி - திராணி என்பது தற்போது மிக பிரபலமாக உள்ள ஒரு தமிழ் வார்த்தை ( வார்த்தை மீட்பு உபயம் - தமிழ் நாடு முதல்வர் )

http://en.wikipedia.org/wiki/Dravidian_languages

http://en.wikipedia.org/wiki/Dravidian_people

Edited by tamil paithiyam

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வந்துட்டாருப்பா யுவான் சுவாங்கு... ஆதரவு என்பது பரஸ்பரம் கொடுத்தல் பெற்று கொள்ளுதல் ஆகும் . வரலாற்று ரீதியாக உள்ள தொடர்பு பேண்டபடுத்தல் வேண்டும். என்னமோ அங்க இருக்கும் பாகிஸ்தான் காரன் திராவிட இனமாம் அவர்களுக்கும் ஆதரவு தர வேண்டுமாம்.

பொல்போட்டு கம்போடியாவில் போட்டு தள்ளியதற்கும்.. வியட்நாம் மீதான படையெடுப்புகளுக்கும் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை என நம்மட வரலாற்று ஆசிரியர் கேட்பார் போல உள்ளது

ஏன் என்றால் அங்கும் அடையாளத்தை தொலைத்தவர்கள் உள்ளார்கள்..

rajendra_map_new.png

எப்பா சாமி இப்பவே கண்ண கட்டுதே..!

சென்ற 17ந்திகதி இந்தத் தீர்மானம் அமெரிக்கப் பிரதிநிதிகள்சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. உரியமுறையில் அத்தீர்மானம் விவாதிக்கப்பட்டு

நிறைவேற்றப்பட்டாலேயே ஏதாவது தாக்கம் ஏற்படும். ஆனால் மேலாதிக்கசக்திகள் இப்படியாக தங்கள் பொருளாதார அரசியல் பூகோளநலன்களை

முன்னிறுத்தியே செயற்படுகின்றன. அதற்காக பல விளக்கங்கள் கொடுத்து உள்நுழைவார்கள். நாமும் இந்த நடைமுறை உண்மைகளை

உணர்ந்து விழிப்பாகவும் கட்டுக்கோப்பாகவும் ஒன்றுபட்டுச் செயற்படவேண்டும்.

http://www.tamilnet....=79&artid=34900 //

US Congress tables resolution on Baloch self-determination

Edited by மகம்

பலுசிஸ்தானின் சுயநிர்ணய உரிமையை ஆதரிப்பதால் அமெரிக்காவுக்கு ஈரான், ஆப்கானிஸ்த்தான், பாகிஸ்த்தான் என்ற மூன்று மாங்காயையும் ஒரு கல்லால் அடிக்கும் சந்தர்ப்பம் இருக்கிறது. எனவே அவ்வளவு கவனத்தை நமக்கு காட்டும் என்று எதிர்பார்த்துவிட்டு அமெரிக்கவை காய்வதால் ஒரு முன்னேற்றமும் வரமாட்டாது.

பலுசிஸ்தான் மாகாண மக்களுக்கும் திராவிட இனத்திற்கும் மிக ஆழமான சம்மந்தம் உண்டு என்பதையும் இங்கு சொல்லி இருந்தால் எதோ எங்களை போல ஒன்றும் தெரியாதவர்கள் கற்று கொண்டது போல இருந்து இருக்குமே என ஒரு ஆதங்கம் மட்டுமே .

கறுப்பு ஆபிரிக்கர் ஆங்கில அல்லது பிரெஞ் மொழியை தமது தாய் மொழியாக ஏற்றுக்கொண்டால் அவர்கள் ஐரோப்பியராக ஆகிவிடுவார்களா?. இந்த ப்ரகு பேசும் மக்களில் திராவிட இனம் காணப்படுகிறதா?, தமிழர் சுத்த திராவிடரான மலையாளிகளிடம் போய் நீங்கள் திராவிடர்கள்; நாங்கள் சொந்தம் கொண்டாட வந்திருக்கிறோம் என்றால் அல்லது சிங்களவரிடம் நீங்கள் 50% பாண்டியர் என்றால் நம்முடன் ஒத்து வந்துவிடுவார்களா? பலுஸ்த்தானின் 2 லட்சம் மக்கள் ப்ரகு பேசுவதால் என்ன விததில் அமெரிக்கா பலுஸ்த்தானை முதலில் ஆதரிப்பது சரியாகும்.

பார்த்தால் சங்ககாலத்து சுத்தத் தமிழ் பேசும் பொண்ணு மாதிரி தெரியுது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.