Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனுக்கும் சம்பந்தனுக்கும் அரசியல் அறிவில்லையாம்! - விளாசித்தள்ளுகிறார் கிழக்கின் புத்திஜீவி சந்திரகாந்தன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Pillayan-Mahintharnews150.jpg

யார் என்ன சொன்னாலும் பிரபாகரனின் மரணத்தில் இந்தியாவின் பங்கு அதிகம் இருக்கிறது. அரசாங்கம் தாங்கள் கொன்றதாகச் சொன்னாலும் 75 வீதம் வெளிநாடுகளின் பங்கு இந்த மரணத்திலும் அழிவிலும் இருந்தது என்பதே உண்மையான விடயமாகும் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

துறைநீலாவணை சித்திவிநாயகர் வித்தியாலயத் திறப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். தமிழர்கள் விட்ட தவறுகளைப் பற்றிச் சிந்திக்காது நாம் அரசியல் செய்ய முடியாது. அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாரில்லை. பிரபாகரனும் அரசியல் அறிவில்லாதவராகவே இருந்தார். இல்லையானால் இந்தியா இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டிருப்பார் எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்:

பொறுப்புள்ள அரசியல் கட்சியைச் சேர்ந்த ஒருவர் கடிதம் எழுதினால் அதற்கு ஒரு பதிலையாவது அனுப்பியிருக்கும். நான் சம்பந்தன் ஐயாவுக்கு எழுதிய கடிதத்துக்கு தம்பி பிள்ளையான் கடிதம் கிடைத்தது. எதிர்காலத்தில் இது குறித்து யோசிப்போம் என்றாவது ஒரு பதில் கடிதத்தினை எழுதியிருக்கலாம். அதனைக் கூட அவர்கள் செய்யவில்லை. இதிலிருந்து தமிழரசுக் கட்சி ஒரு பொறுப்புள்ள அரசியல் கட்சி அல்ல என்பது தெரிகிறது.

இந்தியாவில் பிரதமருக்கு தாக்குதல் நடத்தியதும் (இந்தியாவுக்கு அடித்ததும்) புலிகள் இயக்கம் இரண்டாக உடைந்ததும் தான் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அழிவுக்குக் காரணம்.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தினை ஏற்றுக் கொண்டிருந்தால் சமஷ்டியை விடவும் அதிகமான எல்லோரும் கேட்கின்ற தமிழீழம் அளவிலான அரசாங்கமே கிடைத்திருக்க வாய்ப்பிருந்தது. அதனைப் பிரபாகரன் செய்யத் தவறிவிட்டார். ஒரு காலத்தில் ஏற்றுக் கொண்ட தலைவராக பிரபாகரன் இருந்தாலும் அவர் விட்ட தவறுகளைச் சுட்டிக்காட்ட வேண்டும்.

இந்தியாவின் பங்கு

யார் என்ன சொன்னாலும் பிரபாகரனின் மரணத்தில் இந்தியாவின் பங்கு அதிகம் இருக்கிறது. அரசாங்கம் தாங்கள் கொன்றதாகச் சொன்னாலும் 75 வீதம் வெளிநாடுகளின் பங்கு இந்த மரணத்திலும் அழிவிலும் இருந்தது என்பதே உண்மையான விடயம்.

வடக்கு, கிழக்கை இணைக்க வேண்டும் என்று சொல்வதில் நலன் சார்ந்த விடயங்களைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்திய இலங்கை ஒப்பந்தத்தினை ஏற்காது விட்டமை ஒரு சமூகத்தின் நலன் சார்ந்த விடயமாகவே இருந்தது. தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழரசுக் கட்சி செய்வது வெறும் கட்சி அரசியல்தான். அதில் தமிழ் மக்களின் நலன் சார்ந்தது ஒன்றுமில்லை.

பல முகங்கள்

தமிழரசுக் கட்சி இப்போது பல முகங்களைக் காட்ட வேண்டியிருக்கிறது. சிவில் சமூகம் என்கிறவர்களுக்கு ஒரு முகத்தினை காட்டுகிறார்கள். அதற்கு அவர்கள் தேர்தலில் குதித்து விடுவார்கள் என்ற பயம் இருக்கிறது. வெளிநாடுகளில் இருப்பவர்கள் தான் நிதி கொடுக்கிறார்கள். அதற்காக அவர்களுக்கு ஒரு முகம் அரசாங்கத்திற்கு ஒரு முகம் எனப் பல முகங்களை அவர்கள் காட்டுகிறார்கள். அந்த வகையில் பார்த்தால் தமிழரசுக் கட்சிக்கு ஒரு தெளிவான கொள்கை இல்லை.

வடக்கு கிழக்கு இணைப்பு என்பது நடைபெற்றால் முஸ்லிம்களின் தனி அலகை எவ்வாறு பிரித்துக் கொடுப்பார்கள் அந்தப் பிரச்சினையை எவ்வாறு தீர்த்து வைப்பார்கள் அதனை விடவும் கிழக்கிலுள்ள சிங்களவர்களுக்கு உரிய இருப்பு எப்படி இருக்கும் என்றார் சந்திரகாந்தன்.

http://www.seithy.co...&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இடையில விட்டுவிட்டு ஓடி கிழக்குக்கு வேறு நாடு கேட்டதை மறக்கிறதுதான் அரசியல் அறிவோ....???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காகிதத்தை தின்னும் கழுதை அதில் இருக்கும் கவிதைக்கு பொருள் சொல்லும் தகுதியைப் போன்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது பிறந்ததே ஒரு தவறு அதற்குள் தமிழரில் தவறு கண்டுபிடிக்குது தவைக்கை வாய்!

பொறுப்புள்ள அரசியல் கட்சியைச் சேர்ந்த ஒருவர் கடிதம் எழுதினால் அதற்கு ஒரு பதிலையாவது அனுப்பியிருக்கும். நான் சம்பந்தன் ஐயாவுக்கு எழுதிய கடிதத்துக்கு தம்பி பிள்ளையான் கடிதம் கிடைத்தது. எதிர்காலத்தில் இது குறித்து யோசிப்போம் என்றாவது ஒரு பதில் கடிதத்தினை எழுதியிருக்கலாம். அதனைக் கூட அவர்கள் செய்யவில்லை. இதிலிருந்து தமிழரசுக் கட்சி ஒரு பொறுப்புள்ள அரசியல் கட்சி அல்ல என்பது தெரிகிறது.

தலைப்பு பொறுப்புள்ள தலைப்பாக தெரியவில்லை!

பெரும்பாலும் கிழக்கில் காலத்தைக் களித்த சந்திகாந்தனுக்கு இந்தியப் பயங்கரவாதி ராஜீவின் கொலைபற்றி என்ன தெரியும்? அண்மையில் கேரளாவுக்கும், டெல்லிக்கும் போனபோது இந்தியக் காட்டுமிராண்டிகள் உளறியதை வைத்து உளறுவது சம்பந்தனுடன் செய்யும் அரசியல் ஆகிவிட்டது.

என்னைப் போல் உங்களால் குரைக்க முடியாது என்கிறார் கி மா மு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.