Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூத்த இராஜதந்திரியை கொழும்புக்குத் தூதுவராக அனுப்புகிறது அமெரிக்கா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Michele-J-Sison-100x90.jpg

சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புரெனிஸ் விரைவில், கொழும்பிலிருந்து மாற்றலாகிச் செல்லவுள்ளதாக உயர்மட்ட இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. விரைவில் சிறிலங்காவில் இருந்து மாற்றலாகிச் செல்லவுள்ள புரெனிசுக்குப் பதிலாக மைக்கல் ஜே.சிசன் [Michele J. Sison] கொழும்பில் பணிகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.

அமெரிக்க சிறிலங்கா உறவுகள் பலவீனமான கட்டத்தை அடைந்திருந்த சூழலில் பற்றிசியா புரெனிஸ் சிறிலங்காவில் தூதுவராகப் பணியாற்றியுள்ளார். சிறிலங்காவுடனான உறவுகள் தற்போது இறுக்கமான நிலையிலேயே இருப்பதாக அவர் சில நாட்களுக்கு முன்னதாக தகவல் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய தூதுவரை நியமிப்பதற்கான அதிகாரபூர்வ அறிவித்தலை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்கு அனுப்பியுள்ளது. இதனை சிறிலங்கா அரசாங்கம் அங்கீகரித்த பின்னர் சிசன் கொழும்புக்கான தூதுவராக நியமிக்கப்படுவார்.

அமெரிக்காவின் மூத்த இராஜதந்திரிகளில் ஒருவரான மைக்கல் ஜே சிசன் முன்னர் ஈராக் தலைநகர் பாக்தாதில் அமெரிக்க துணைத் தூதுவராகவும், லெபனான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் அமெரிக்கத் தூதுவராகவும் பணியாற்றியுள்ளார். அத்துடன் சென்னையில் 1996 தொடக்கம் 99 வரையிலும், இஸ்லாமாபாத்தில் 1999 தொடக்கம் 2000 வரையிலும் இவர் தூதரக பொறுப்பதிகாரியாக பணியாற்றியுள்ளார்.

அதைவிட ஐவரிகோஸ்ட், கெமரூன், பெனின், டோகோ, ஹெய்ற்றி ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதரகங்களிலும் பணியாற்றியுள்ளார். இவர் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஸ், சிறிலங்கா, இந்தியா ஆகிய நாடுகளுடனான உறவுகள் குறித்த கொள்கைகளை தீர்மானிக்கும் இராஜாங்கத் திணைக்களதின் தெற்காசிய விவகாரப் பிரிவில் முதன்மை பிரதி உதவிச் செயலராகவும் பணியாற்றியுள்ளார்.

சிறிலங்காவுடனான உறவுகள் நெருக்கடியான கட்டத்தை அடைந்துள்ள சூழலில், அமெரிக்கா தனது மூத்த இராஜதந்திரியும், முரண்பாட்டுச் சூழல் நிலவிய நாடுகளில் கடுமையான சவால்களை எதிர்கொண்டு பணியாற்றிய அனுபவம் மிக்க மைக்கல் ஜே சிசனை கொழும்புக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

http://www.saritham.com/?p=52629

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாட்ரீசியா தனது வேலையை புகழாமல்? உண்மையில் ஸ்ரீ லங்காவிற்கு ஏழரை சனி முத்திவிட்டது. 

அவரை அனுப்பி முறிந்து போன உறவை ஓட்ட வைக்கவாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

பற்றீசியா புரெனிஸுக்கு பிக்குகளின் குணம் நன்கு தெரியும்.

Michele J. Sison (born May 27, 1959 in Arlington, Virginia) is a United States Ambassador and a career member of the United States Senior Foreign Service, Class of Minister-Counselor. She earned her B.A. in Political Science from Wellesley College and also studied at theLondon School of Economics (LSE). Ambassador Sison has two daughters in college.[1]

Sison's overseas assignments include service as Deputy Chief of Mission and Chargé d'Affaires, i.e. at the U.S. Embassy in Islamabad, Pakistan (1999-2002) and as consul General at the U.S. Consulate General in Chennai, India (1996-1999). She also served at the U.S. Missions in Abidjan, Côte d'Ivoire (1993-1996); Douala, Cameroon (1991-1993); Cotonou, Benin (1988-1991); Lomé, Togo (1984-1988); andPort-au-Prince, Haiti (1982-1984), as well as in Washington. Ambassador Sison is the recipient of numerous U.S. Department of State awards for exceptional service.

She was confirmed by the U.S. Senate, as Ambassador to the United Arab Emirates, on May 6, 2004 and sworn in by Secretary of State Powell on July 12, 2004. Prior to her appointment to the UAE, she served as Principal Deputy Assistant Secretary in the Bureau of South Asian Affairs, charged with providing broad policy oversight of U.S. relations with Pakistan, Afghanistan, Bangladesh, India, Nepal, and Sri Lanka.[2]

http://en.wikipedia....ichele_J._Sison

Edited by akootha

புரேனிஸ் மூன்று ஆண்டுகளிலும் சற்றுக்கூடத்தான் இலங்கையிலிருந்திருபா. அமெரிக்காவின், தமிழர்கள் மீதான அபிப்பிராய மாற்றத்தற்கு ஆரம்ப விளக்காக இருந்தவ. கடந்த காலங்களில் புலிகளின் முன்முனை என்று அமெரிக்காவால் கழித்துவைக்கப்பட்டிருந்த கூட்டமைப்பு இன்று அமெரிக்காவுடன் பேசத்தக்க நிலைகளை தமிழருக்கு ஏற்படுத்தித்தந்தவ. அமெரிக்க தூதுவர்களால் சந்திக்க மறுக்கப்படிருந்த சம்பந்தர், அரசாங்க அமைச்சால் தமிழரின் திறமையான தலைவனாக புகழப்படத்தக்கதாக உண்மைகளை அமெரிக்க ராஜாங்க அமைச்சுக்கு அனுப்பி வைத்தவ. பற்றீசியா தமிழர்களின் நண்பியாக இவ்வளவு நாளும் இருந்தவ. அவவின் பிரிவு எமக்கு ஒரு இழப்பாகும்.

யாழில் ஒரு நல்ல கடிதத்தை வரைந்தால் நாம் எல்லோரும் அனுப்ப முடியும்.

பற்றிசியா புரெனிஸ் ஆரம்பத்தில் தடுமாறியிருந்தாலும், சில விடயங்களை கோட்டை விட்டிருந்தாலும், சில விடயங்களை உறுதியாக செய்து முடித்துள்ளார்.

அவர் பெண்ணாக இருந்ததால் சிங்கள பௌத்த விலைமாதுகளின் பாதிப்பிலிருந்து தப்பியிருந்தார்.

இவரைப் போலவே முன்னர் இருந்த ஆஸ்திரேலியா பெண் தூதுவரும் உறுதியாக சில வேலைகளை முன்னெடுத்திருந்தார். அவரும் தற்போதில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.