Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனீவா விவகாரம்; கூட்டமைப்பு எம்.பி.க்களின் சந்தேகத்தை தீர்த்து வைத்தார் சம்பந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனீவா விவகாரம்; கூட்டமைப்பு எம்.பி.க்களின் சந்தேகத்தை தீர்த்து வைத்தார் சம்பந்தன்

sambanthan.jpgஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் பிரசன்னமாவதில்லையென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவுக்கு அக்கட்சியின் பாராளுமன்றக் குழு ஏகமனதாக ஆதரவு தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு பம்பலப்பிட்டியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காரியாலயத்தில் முற்பகல் 11.30 மணி முதல் மாலை 6.30 மணிவரை நடைபெற்ற கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. கூட்டத்தொடரின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் ஜெனீவாவில் பிரசன்னமாகியிருப்பரென முதலில் முடிவெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு இரு நாட்களுக்கு முன் இந்தக் கூட்டத் தொடரில் பிரசன்னமாவதில்லையென பாராளுமன்றக் குழுத் தலைவர் ஆர்.சம்பந்தன் விடுத்த அறிக்கையை அடுத்து கட்சிக்குள் சிலர் எதிர்ப்புத் தெரிவிக்கவே தமிழ் மக்கள் மத்தியில் இது தொடர்பாக கருத்து மோதல்கள் ஏற்பட்டன.

இந்த நிலையில் இந்த விடயம் கட்சிக்குள் வேறுபட்ட கருத்துருவாக்கம் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக நேற்று பாராளுமன்றக் குழுக் கூட்டம் சம்பந்தன் தலைமையில் கூடி இது தொடர்பாக சுமார் ஏழு மணிநேரம் விரிவாக ஆராயப்பட்டது.

தமிழ்க் கூட்டமைப்பு ஜெனீவா தொடரில் பிரசன்னமாவதில்லையென்ற முடிவுக்கான காரணங்களை சம்பந்தன் இங்கு மிக விரிவாக விளக்கிக் கூறியதுடன், இது தொடர்பாக எம்.பி.க்களின் சந்தேகங்களையும் தீர்த்து வைத்தார்.

இதையடுத்து ஜெனீவாவுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் செல்வதில்லையென்ற முடிவை அனைத்து எம்.பி.க்களும் ஏற்றுக்கொண்டனர்.

அத்துடன் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் இலங்கைக்கு எதிரான பிரேரணை வெற்றிபெறுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டதோ அவற்றைத் தொடர்ந்தும் முன்னெடுக்குமெனவும் உறுதியாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த விடயத்தால் தமிழ் மக்கள் குழப்பமோ ஏமாற்றமோ அடையத் தேவையில்லையெனவும் தமிழ் மக்கள் ஒற்றுமையாகவும் ஒருமித்தும் செயற்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்க வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.

http://www.thinakkural.com/news/all-news/local/10684-2012-03-02-21-42-01.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதயனுக்கு அனுப்பி வைக்கபட்ட கடிதம் இமெயிலில் எனக்கு வந்தது.

ஐ நாவில் இந்த அமெரிக்காவின் பிரேரணை நிறைவேற்றப்படும் என்று நம்புவோமாக. நிறைவேற்றபட்டால் ஈழ தமிழர் அரசியல், உரிமை, பாதுகாப்பு மற்றும் வாழ்வு சம்பத்தபட்ட விடயங்களில் சர்வதேசத்தின் தலையீடு உருவாக்கப்படும்.

02-03-2012

முதன்மை ஆசிரியர்

உதயன்

வணக்கம். இந்த வார தலையங்கம் படித்தேன்.

ஒருமுறைக்கு இருமுறை அதைப் படித்த போது தமிழில் உள்ள ஒரு பழமொழி நினைவுக்கு வந்தது!

பாம்பும் சாகவேண்டும் தடியும் முறியக் கூடாது என்பதுதான் அந்தப் பழமொழி.

ஜெனிவாவில் பன்னாட்டு போர்க்குற்ற விசாரணை வரும் என்று சில தமிழர்கள் எதிர்பார்த்திருக்கலாம். அல்லது அவர்களது விருப்பமாக இருந்திருக்கலாம். ஆனால் அமெரிக்கா முதல் படியாக கற்றறிந்த பாடங்கள் நல்லிணக்கத்துக்கான ஆணையத்தின் (கபாமநஆ) பரிந்துரைகளை சிறிலங்கா அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் தவறினால் நாடு ஒரு பன்னாட்டு விசாரணை தேவை என்ற அழுத்தத்துக்கு ஆளாக வேண்டிவரும் என்று அமெரிக்கா சொல்கிறது.

கபாமநஆ இன் பரிந்துரைகள் பல உடன்பாடாக இருக்கின்றன. அவை நடைமுறைப்படுத்தப்பட்டால் தமிழர்களுக்கு சிறிதளவு நன்மை கிடைக்கும். எடுத்துக்காட்டாக படைகளை விலக்கி சிவில் நிருவாகத்தைக் கொண்டுவருதல்.

அய்யன்னா மனிதவுரிமை அவையில் அமெரிக்கா கொண்டுவர உள்ள தீர்மானமானது போர்க்குற்ற விசாரணை பற்றியது அல்ல. இது சிறிலங்கா அரசால் நியமிக்கப்பட்ட பபாந தனது அறிக்கையில் தெரிவித்துள்ள சில ஆக்கபூர்வமான பரிந்துரைகளை செயற்படுத்துமாறு கோரும் ஒரு தீர்மாமாகும். இந்த பபாநஆ அறிக்கையைத் ததேகூ நிராகரித்து விட்டது. இதுபற்றி 105 பக்க அறிக்கை மும்மொழிகளிலும் வெளிவந்தது.

அய்யன்னா மனிதவுரிமை அவையில் இரண்டு விதமான அமர்வுகள் நடைபெறுகின்றன. ஒன்று அரச பிரதிநிதிகளுக்கான அமர்வு. இதில் அரசாங்கப் பிரதிநிதிகள் மட்டுமே கலந்து கொள்வர். மற்றது அரச சார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கான அமர்வு. இதில் அரச சார்பற்ற அமைப்புச் சார்பாக வருபவர்கள் கலந்து கொள்வர். ததேகூ இந்த இரண்டு பிரிவிலும் அடங்காது.

அய்யன்னா மனிதவுரிமை அவையில் அரச பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் கூட்டமே முதன்மையானது. இதில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகள் தத்தம் நாட்டு அரசுகள் முன்கூட்டியே எடுக்கும் முடிவுகளுக்கு அமையவே பேசுவர். வாக்களிப்பர். அந்தந்த நாட்டு அரசுகளோடு பேசித்தான் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கேட்க வேண்டும். இந்தப் பணியை ததேகூ செவ்வனே செய்து வருகிறது. மேற்படி கூட்டத்தில் பங்கு கொள்ளும் 47 நாட்டுத் தூதர்களோடு தொடர்பு கொண்டு சிறிலங்காவில் தொடர்ந்தும் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களையும் தமிழர்களுக்கான பாதுகாப்பற்ற ஒரு நிலையும் எடுத்துச் சொல்லி வருகிறார்கள்.

போரினால் இடம்பெயர்ந்த 3 இலட்சம் மக்கள் இன்னமும் அவர்களது சொந்த இடங்களில் மீள் குடியமரும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. அண்மைய காலங்களிலும் கூடச் சிலர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். பலர் காணாமல் போயுள்ளனர். மக்களின் நாளாந்த வாழ்க்கையில் கூட இராணுவத்தின் தலையீடு அதிக அளவில் உள்ளது. தமிழர்கள் அதிகம் வாழும் வடக்குப் பகுதியில் நிர்வாகமும் சீர்கெட்டுப் போயுள்ளது. தனியாருக்குச் சொந்தமான நிலங்கள் அரசினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் மக்கள் மீண்டும் குடியேறிவரும் இடங்களிலும் அதிகப்படியான இராணுவ முகாம்களை அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது போன்ற விடயங்களிலிருந்தே சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்களின் சமூக மற்றும் அரசியல் சுதந்திரங்களில் நிலவும் ஒருதலைச் சார்பான நிலையை தெளிவாக அறிந்து கொள்ள முடியும். இராணுவத்தினால் பாதிக்கப்பட்டிருப்பவர்களில் அதிகப்படியானோர் பெண்களும் சிறார்களும் தான். போரினில் கணவனை இழந்த பெண்கள், உறவுகளை இழந்து ஏதிலிகள் ஆக்கப்பட்டவர்களை குறிவைத்தே வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. விடுதலைப்புலிகள் அமைப்பில் பணியாற்றிய பெண்கள் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்தப் பெண்கள் துணை இராணுவப் படையினரால் கற்பழிக்கபட்டும் பெரும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டும் வருகின்றனர். ஆட்கடத்தல், திட்டமிட்ட பரத்தமை போன்றவற்றிலும் இவர்கள் பயன்படுத்தப் படுகின்றனர்.

எமது பக்க நியாயங்களையும் தமிழ் மக்களது அவலங்களைகளையும் எடுத்துரைத்து தீர்மானத்துக்கு ஆதரவு திரட்டி வருகிறது. இது தொடர்பாக தமிழ்மக்கள் பக்க நியாயத்தை சொல்லும் ஒரு கடிதத்தை இந்த நாடுகளுக்கு ததேகூ இன் தலைவர் திரு சம்பந்தன் அனுப்பியுள்ளார்.

மே 2009 க்குப் பின்னர் நாம் புதிய இராசதந்திர உத்திகளைக் கையாள வேண்டியுள்ளது. இப்போது முதன்முறையாக எமது சிக்கல் அனைத்துலக மயப்படுத்தப்பட்டுள்ளது. போர்க்காலத்தில் எம்மை கைவிட்ட நாடுகள் இப்போது எமது உரிமைகளை பெற்றுத்தர முன்வந்துள்ள. இது ஒரு பெரிய மாற்றம். இப்போது பந்து (விளையாட்டு) சிறிலங்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நடைபெறுகிறது. இதில் நாம் பார்வையாளர்கள். ததேகூ ஜெனிவாவுக்கு வந்திருந்தால் பார்வையாளர்களாகவே வந்து போயிருப்பார்கள். எமக்கு சலசலப்புத் தேவையா? பணியாரம் தேவையா? என்பதுதான் கேள்வி.

இன்றைய உலக ஒழுங்கில் தமிழர் தரப்பு அனைத்துலக சமூகத்தை வெட்டி ஓடமுடியாது. ஒட்டித்தான் ஓட வேண்டும். எமது சிக்கல் அனைத்துலத்தின் தலையீடு இல்லாமல் தீர்த்துவைக்கக் கூடிய சாத்தியம் அறவே இல்லை. சிங்கள வுத் பேரினவாத அரசு தானாக முன்வந்து எதையும் தரப் போவதில்லை. வி.புலிகளின் பிடியில் இருந்து தமிழ்மக்களை விடுவிக்கப் போவதாகச் சொன்னது பொய்யுரை என்பது இப்போது தெரிந்து விட்டது. மக்கள் இப்போது சிங்கள இராணுவத்தின் பிடிக்குள் சிக்குண்டு தவிக்கிறார்கள். எனவே தமிழ் மக்கள் தரப்பு நகர்வுகள் இந்த அனைத்துலக சமூகத்துக்கு இசைவாக இருக்க வேண்டும். அது மட்டுமல்ல. எமது கோரிக்கைகள் நீதியாகவும் நியாயமானதாகவும் இருக்க வேண்டும்.

ப்படியான இராசதந்திர உத்திகளையே ததேகூ கையாள்கிறது.

ததேகூ ஜெனிவா போயிருந்தால் எல்லோர் மனதுக்கும் அது ஒரு தெம்பைக் கொடுத்திருக்கலாம். அதற்கு மேல் ஒன்றும் நடந்திருக்காது. இதனால் சிறிலங்கா அரசு எதிர்கொள்ளும்

அழுத்தம் கூடியிருக்க வாய்ப்பில்லை. ததேகூ நட்பு சக்திகளான நாகதஅ, பன்னாட்டு தமிழர் ஒன்றியம், கனடிய தமிழ் காங்கிரஸ் களத்தில் நின்று தங்களால் ஆன பணியைச் செய்கிறார்கள்.

2009 இல் மிக இலகுவாக கன்னடா கொண்டுவந்த தீர்மானத்தை சிறிலங்கா தோற்கடித்தது. தன்னைத் தானே பாராட்டும் தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேறியது. இன்று சிறிலங்கா 70 க்கும் மேற்பட்ட

அமைச்சர் பட்டாளத்தை ஜெனிவாவில் இறக்கியிருக்கிறது. வெளியறவு அமைச்சர் பீரீஸ் நாடு நாடாக பறந்து கொண்டிருக்கிறார். இது பெரிய மாற்றம். சிறிலங்கா அரசு கொஞ்சமும் எதிர்பாராத மாற்றம்.

அது சரி. காணி அதிகாரம் வேண்டாம், காவல்துறை அதிகாரம் தேவையில்லை, வட கிழக்கு இணைப்புத் தேவையில்லை என்று கூறிக் கொண்டு ஜெனிவாவுக்கு வந்திருக்கும் டக்லஸ் தேவானந்தாவைக் கண்டித்து

ஒரு வார்த்தை இல்லையே? ஏன்?

நாங்கள் ததேகூ இன் தலைமையில், குறிப்பாக திரு சம்பந்தரின் தலைமையில் நம்பிக்கை வைத்துள்ளோம்.

தேரான் தெளிவும், தெளிந்தான் கண் அய்யுறவும் தீரா இடும்பை தரும் என்பது வள்ளுவர் வாய்மொழி. அதில் எமக்கு நம்பிக்கையுண்டு.

முடிவாக மக்கள் ததேகூ ஒரு ஆணை வழங்கியுள்ளார்கள். அதன் அடிப்படையில் ததேகூ சிக்கல்களை எதிர்கொள்கிறது. அதில் தோல்வி கண்டால் மக்கள் ததேகூ யை தண்டிப்பார்கள்.

நக்கீரன்

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதில்..! இணைப்புக்கு நன்றிகள் குயீன்..! :rolleyes:

இதற்கும் உங்கள் பதில்களை எதிர்பார்க்கிறேன்..! :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

(மொழி பெயர்ப்பு சரியாக வரவில்லை மன்னிக்கவும், கீழே உள்ள லிங்க் இல் ஆங்கிலத்தில் வாசிக்கவும்)

ஐக்கிய அமெரிக்க இலங்கை எதிரி அல்ல என்ன ஜெனீவாவில், இரு நாடுகளும் ஐக்கிய அமெரிக்க தூதுவர் இலங்கை மற்றும் மாலத்தீவு பாட்ரிசியா Butenis பிரத்தியேகமாக கடைசியாக காலை இன்று இலங்கையில் கூறினார், ஐக்கிய அமெரிக்க தூதர் தனது அரசாங்கம் இலங்கை அரசு கமிஷன் பிறந்த சில நல்ல பரிந்துரைகளை அமல்படுத்துவது நோக்கி இலங்கை அரசு நகர்த்த ஒரு முயற்சியாக ஜெனீவாவில் UNHRC 19 அமர்வு வழங்கினார் வேண்டும் முன்மொழியப்பட்ட ஐக்கிய அமெரிக்க ஆதரவு தீர்மானத்தை கருதுகிறது என்று அவர் கூறினார். "LLRC சில சிறந்த பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, இலங்கை அரசு சொந்த கமிஷன் உள்ளது

http://www.ceylontod...my-butenis.html

Edited by Queen

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஹை டெக் காலமப்பு. பாம்பிற்கு உடையாமல் பிளாஸ்டிக் பைப் அல்லது இரும்பு போல் பாவிக்கலாம்.  

ஆனால் ஸ்ரீ லங்கா தமிழ் அரசியல்வாதிகள் எல்லாரும் காய்ஞ்ச சுள்ளிகள். 

டக்லஸ் நுளம்பை கூட விரட்டமுடியாது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூட்டமைப்பு ஜெனிவா வாராமல் விட்டது சரியே. இந்த கடிதம் விரிவாக விளக்குகிறது. அவர்கள் தாம் மனித உரிமை அமைப்பு கூட்டத்தி பங்கெடுக்க போகிறோம் என்று அறிக்கைகள் விடாமல் இருந்துருக்கலாம். ஆனாலும், சிங்களத்தை மிரட்டுவதற்காக கூட அறிக்கைகள் விடிருகலாம் என்று நாம் எனலாம். கூடமைப்பு அமெரிக்கா கனடா பிரித்தானியா உள்பட முக்கிய அதிகாரிகள் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து இருக்கிறார்கள். அதற்கே, சிங்களம் கூடமைபை தடை செய்யவேண்டும் என்று கூவியது. ஒருவேளை அவர்கள் வந்திருந்தால் அத்தனைபேருடைய பதவியுமே பறிக்கப்பட கூடிய சாத்தியம் வந்திருக்கலாம். ஜே ஆர் சிறிமாவின் குடியல் உரிமையை பறித்தது எமக்கு நினைவு இருக்கிறது.

Edited by Queen

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன், மகிந்தவுக்கு அடிக்கப் போக... மகிந்த பயப்படுறார்.

sampanthan-mahinda-colombo-telegraph1.jpg?w=750

  • கருத்துக்கள உறவுகள்

பெரிய்ய, மண்டை இடியாய் இருக்கு.

President%2BMahinda%2BRajapaksa%2B.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் தீர்வு காண்பதற்கு த.தே.கூட்டமைப்பு தூண்டுமாறு புலம்பெயர்தோர் அமைப்புகளிடம் அரசாங்கம் கோரிக்கை

(ஜெனீவாவிலிருந்து கெலும் பண்டார)

Sajin-Vass60(1).jpgதமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் நிகழும் பிளவுகளை ஒதுக்கிவிட்டு அரசியல் தீர்வொன்றை காண்பதற்கு அக்கட்சியை செயற்பட வலியுறுத்துமாறு புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகளிடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஜெனீவாவுக்குச் சென்றுள்ள இலங்கை அரசாங்கத்தின் தூதுக்குழுவினர், புலம்பெயர்ந்த தமிழர்கள், ஜெனீவாவிலுள்ள தூதரங்களின் தலைவர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் நேற்று ஜெனீவாவில் நடைபெற்றபோது இக்கோரிக்கை விடுக்கப்பட்டது.

அரசியல் தீர்வு செயன்முறை தொடர்பரில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவுகள் ஏற்பட்டுள்ளமை தென்படுவதாக வெளிவிவகார அமைச்சை கண்காணிப்பதற்குப் பொறுப்பான நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன தெரிவித்தார்.

'அரசியல் தீர்வு காண்பதற்கான த.தே.கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தைகளில் பங்குற்றும் அரசாங்கத் தூதுக்குழுவின் அங்கத்தவர்களில் ஒருவன் என்ற வகையில் அக்கட்சியில் பிளவுகள் உள்ளதை நான் அறிவேன். அரசியல் தீர்வு காண்பதற்காக செயற்படுவதில் ஒரு தரப்பு உண்மையான அக்கறை கொள்ளவில்லை. அத்தகைய தீர்வு தமது தேர்தல் நலன்களை பாதிக்கும் என அவர்கள் அஞ்சுகிறார்கள். இத்தகைய பேதங்களை ஒதுக்கிவிட தமிழ் தேசியக் கூட்டமைப்பை வலியுறுத்துமாறு நான் உங்களிடம் கோருகிறேன்' என சஜின் வாஸ் குணவர்தன கூறினார்.

உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதியொருவர் கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தையை அரசாங்கம் துண்டித்துக்கொண்டது ஏன் என உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதியான சுரேன் சுரேந்திரன் கேள்வி எழுப்பினார்.

அரசியல் தீர்வு தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது அங்கத்தவர்களை நியமித்தவுடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பதிலளித்தார். இவ்விடயம் தொடர்பாக, இலங்கையிலிருந்து புறப்படுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையுடன் தான் கலந்துரையாடியதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை தாம் வரவேற்பதாக உலக தமிழர் பேரவை தெரிவித்தது.

'நாம் அவ்வறிக்கையை வரவேற்கிறோம். அனைத்துவிடயத்திலும் உங்களை விமர்சிப்பதற்காக நாம் வரவில்லை. எனினும் நீங்கள் ஏன் அந்த இடைக்கால அறிக்கையின் சிபாரிகளை அமுல்படுத்தவில்லை?' என சுரேன் சுரேந்திரன் கேள்வி எழுப்பினார்.

அதேவேளை இக்கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த பிரசன்னமாகியிருப்பது குறித்து புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகளை சேர்ந்தோர் கவலை தெரிவித்தனர். அவர் துணை இராணுவக் குழுக்களை இயக்குவதாக அவர்கள் குற்றம் சுமத்தினர். தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரியின் புதல்வரும் கனேடிய தமிழ் காங்கிரஸை சேர்ந்தவருமான ஜெரி ஆனந்தசங்கரியும் இத்தகைய குற்றச்சாட்டுகளை சுமத்தியவர்களில் ஒருவராவார்.

எனினும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றும் நபர்கள் மீது அவதூறுகளை சுமத்தவேண்டாம் என இக்கலந்துரையாடலை நெறிப்படுத்திய அமைச்சர் மஹிந்த சமரசிங்க கோரிக்கை விடுத்தார்.

http://www.tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/36932-2012-03-02-19-53-31.html

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கும் உங்கள் பதில்களை எதிர்பார்க்கிறேன்..! :rolleyes:

முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் நேரடியாக ஜெனீவாவில் குரல் கொடுப்பது யார்..??! டக்கிளசும்.. கனகரத்தினமுமா..???!

தமிழ் தேசியக் கூட்டமைப்பு.. சலசலப்பு என்ற வகையில் நோக்குவது.. வன்னி மக்களுக்கு ஏமாற்றமாகவே இருக்கும். வன்னி மக்கள் தங்கள் கருத்துக்கள் ஜெனீவாவில் நேரடியாக ஒலிக்க விரும்பி இருப்பின் அதனை புலம்பெயர் அமைப்புக்கள் 100% செய்ய முடியாது. காரணம் வன்னி மக்களுடனான அந்த அமைப்புக்களுக்கு உள்ள தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தான் அந்த மக்களை நெருங்கி உள்ள நிலையில் அந்த மக்களின் பிரதிநிதிகளையாவது அந்த மக்களின் நிஜக் குரல்களோடு அங்கு அனுப்பி வைத்திருக்க வேண்டும். அது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரசன்னமாக அன்றி.. வன்னி மக்களின் பிரச்சன்னமாக நோக்கப்பட்டிருக்க வேண்டும்.

வன்னி மக்களை கட்டாய ஆர்ப்பாட்டத்துக்கு ஏன் சிங்கள அரசு தயார் செய்கிறது..??! 2006 - 2007 வரை போரின் போதும்.. பின்னரும்.. கிழக்கில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து பேசுவார் எவரும் இல்லை..??! பரராஜசிங்கம் படுகொலை உட்பட எவையும் நீதி விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை. இவ்வாறு பல விடயங்கள் மக்களின் மனதில் கிடக்க அவற்றை ஐநா வரை சர்வதேச அரங்கில் சொல்ல யாரும் இன்றி மக்கள் தவிக்கிறார்கள்.

டக்கிளசும்.. கருணாவும்.. பிள்ளையானும் மக்களின் கருத்தையா பிரதிபலிக்கிறார்கள். அவர்கள் தங்கள் இருப்புக்காக சிங்கள அரசின் தேவைக்களைப் பூர்த்தி செய்ய கருத்துச் சொல்லி வரும் நிலையில் தாயக மக்களின் குரலாக ஒலிக்க வேண்டிய கூட்டமைப்பு.. சும்மா சாக்குப் போக்குச் சொல்லி ஓடி ஒளிந்து கொண்டிருப்பதை எதைக் கொண்டும் நியாயப்படுத்த முடியாது.

கூட்டமைப்பு பிரதிநிதிகளாக அன்றி மக்கள் பிரதிநிதிகளாக.. குறைந்தது வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்களாவது மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களாவது ஜெனிவாவில் தங்கள் பகுதி மக்களின் நிலையை விளக்கிச் சொல்ல சென்றிருக்க வேண்டும். சிங்கள அரசு கொண்டு வந்திருக்கும் பிரதிநிதிகளின் நிலை குறித்து இராஜதந்திரிகளுக்கு விளக்கி இருக்க வேண்டும். இதனை புலம்பெயர் அமைப்புக்கள் செய்ய முடியாது. செய்தாலும் அதை இராஜதந்திரிகள் நிராகரிக்க வாய்ப்புள்ளது..! இந்த நிலையில் கூட்டமைப்பின் இந்த முடிவு.. குறித்து திருப்திப்பட வாய்ப்பில்லை..!

தூதரக மட்டத்தில் சொல்லப்படும் கருத்துக்கள் எல்லாம் அரசுகளை ஐநா பிரதிநிதிகளை.. சரியாக போய் சேரும் என்றால் எதற்கு சம்பந்தனும்.. கூட்டமைப்பினரும்.. இந்தியா அது இதென்று பறக்கிறார்கள். பேசாமல் இந்தியத் தூதருடன் பேசிவிட்டு.. வீட்டில் உட்கார்ந்திருக்கலாமே..???! :icon_idea:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.