Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சம்பந்தனை பாராட்டி எழுதுமாறு அரச பத்திரிகைகளுக்கு மகிந்த உத்தரவு!

Featured Replies

சம்பந்தனை பாராட்டி எழுதுமாறு அரச பத்திரிகைகளுக்கு மகிந்த உத்தரவு!

Published on March 4, 2012-1:19 am ·

sampanthan-and-mahinda.jpgதமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனை பாராட்டி எழுதுமாறும், அக்கட்சியில் உள்ள சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்றவர்களை தூற்றி எழுதுமாறும் அலரிமாளிகையிலிருந்து அரச பத்திரிகைகளுக்கு உத்தரவு வந்துள்ளதாக அரச பத்திரிகையில் பணியாற்றும் தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார்.

நேற்று லேக்கவுஸ் தலைவர் அந்நிறுவனத்தின் பத்திரிகை ஆசிரியர்களை அழைத்து அலரிமாளிகையின் உத்தரவை நடைமுறைப்படுத்துமாறு தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், சுமந்திரன் போன்றவர்களை பாராட்டியும், சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்றவர்களை தூற்றியும் எழுதுவதுடன் அவர்களுக்குள் பிளவு இருப்பதாக வெளிக்காட்டுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுக்கமைய அரச பத்திரிகையின் ஞாயிறு பதிப்பில் முன்பக்கத்தில் இனப்பற்றுக்கும் தாய் நாட்டு பற்றுக்கும் முன்னுரிமை அளித்த தலைவர் சம்பந்தன் என்றும், சுரேஷ் எம்.பி போன்றோரின் புளித்துப்போன கதைகளை கேட்க தமிழர் தயாரில்லை என்றும் செய்திகளை அப்பத்திரிகை வெளியிட்டுள்ளது.

இதேவேளை தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பதை நிரூபித்த சம்பந்தன் என்ற தலைப்பில் அரச பத்திரிகையான தினகரன் ஆசிரிய தலையங்கம் எழுதியுள்ளது. ஆடு நனைகிறது என ஓநாய் அழுத கதையாக அலரிமாளிகையும், அரச பத்திரிகைகளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை ஏன் இவ்வளவு தூரம் உச்சம் கொப்பில் ஏற்றி பாராட்டுகின்றன என்பது தமிழ் மக்களுக்கு தெரியும்.

தினகரன் வாரமஞ்சரி வெளியிட்ட ஆசிரிய தலையங்கங்கத்தை இங்கே தருகிறோம்.

தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பதை நிரூபித்த சம்பந்தன்! (ஆசிரிய தலையங்கம்)

‘தான் ஆடா விட்டாலும் தன் தசையாடும் என்பது போல தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஐயாவின் நாட்டுப்பற்றைப் பாராட்டாமல் இருக்கவே முடியாது. தனது தாய் நாட்டிற்கு ஒரு அவமானம் நேரிடப் போகிறது என்பதை அறிந் ததும் அதற்காக ஒருகணம் தன்னையே மறந்து தனது தாய் மண் மீதுள்ள பற்றை சம் பந்தன் அவர்கள் இந்த உலகிற்கே எடுத்துக்காட்டியுள்ளார்.

ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் சபையின் 19ஆவது மனித உரிமை கள் தொடர்பான மாநாட்டில் இலங்கை மீது உலக நாடுகள் சில வேண்டுமென்றே போலியான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி உலக அரங்கில் எமது நாட்டிற்கு அபகீர்த் தியை ஏற்படுத்தி எம்மைத் தனிமைப்படுத்தத் திட்டமிட்டுவருகின்றன.

பயங்கரவாதத்தை அழிப்பதற்கு உந்துசக்தியாக இருந்துவிட்டு இன்று அதில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களைக் கண்டுபிடித்து போர்க்குற்றவாளியாகச் சித்திரிக்க முனைந்துவரும் நாடுகளின் சுயநலப் போக்கினை, இன்று சம்பந்தன் ஐயா போன்ற எதி ராகக் குரல்கொடுத்து வந்த உள்நாட்டவர்கள் பலரும் உணர்ந்துள்ளனர்.

புலிகளை அழிக்க மேலைத்தேய நவீனரக ஆயுதங்களை வழங்கியவர்களே இன்று புலிகளை அழித்தவிதம் தவறு என்று வாதிட்டுவருவது வேடிக்கையான விடயமே எனி னும், இவர்களை இவ்வளவு தூரம் இயங்கவைத்துக் கொண்டிருக்கும் புலம்பெயர் நாடுக ளில் வாழுகின்ற தமிழ்ச் சமூகத்தினுள் ஊடுருவிக் காணப்படும் புலி ஆதரவாளர்களின் செயற்பாடுகளையும் நாம் கவனத்திற் கொள்ளவே வேண்டும்.

சர்வதேசத்தில் பலம் பெற்று விளங்கும் சில ஊடகங்களைத் தமது கைகளுக்குள் போட்டுக்கொண்டு உலகளாவிய ரீதியில் இவர்கள் செய்துவந்த, செய்துவரும் தீவிர எதி ர்ப்புப் பிரசாரமே இன்று இலங்கைக்கு இந்நிலை தோன்றுவதற்குப் பிரதான காரணமாக அமைந்துள்ளது.

முப்பது வருடகால பலம்கொண்ட புலிகள் அமைப்பை இந்தியப் படைகளே அழிக்க முடியாது தோல்வி கண்ட நிலையில் திரும்பிச் செய்கையில் அதனை முற்றாக அழித்து விட்ட சாதனை படைத்த இன்றைய அரசாங்கம், போரின் அழிவுகளுக்கும் பாதிக்கப்ப ட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கும் புனர்வாழ்வும் நிவாரணமும் வழங்கி அபிவிருத்தியி லும் மீள்கட்டுமானத்திலும் தனது கவனத்தைச் செலுத்திக் கொண்டிருக்கையில் இந்த இடைவெளிக்குள் புலம்பெயர் புலி ஆதரவு அமைப்புகள் தமது எதிர்ப்புப் பிரசாரத் தைக் கச்சிதமாகச் செய்துவிட்டன.

அபிவிருத்தி, புனர்வாழ்வு, மீள்கட்டுமானம் என்பவற்றுடன் அரசாங்கம் தமிழ் மக்க ளுக்கு அரசியல் ரீதியானதொரு தீர்வினையும் முன்வைத்திருந்தால் இன்று சற்றேனும் மனச்சஞ்சலம் ஏற்பட்டிருக்க வேண்டிய நிலை எழுந்திருக்காது. ஆனால் அரசாங்கத்தை தீர்வினை முன்வைக்க விடாது காலத்தை வெறுமனே கடத்தி வந்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் என்பது எல்லோருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

தான் செய்த சூழ்ச்சிதான் அரசாங்கம் இன்று உலக அரங்கில் தர்மசங்கடப்படும் நிலை க்கு தள்ளப்பட்டுள்ளமைக்குக் காரணம் என்பது இரா. சம்பந்தன் ஐயாவுக்கு நன்கு தெரியும். ஆனாலும் அவர் இறுதி யுத்தத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவே அதனை அவ்வாறு செய்திருந்தாலும் இன்று ஜெனீவா சென்று, அங்கு அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யும் புலம்பெயர் புலிகளுக்கு ஆதரவு வழங்காது தவிர்த்துக் கொண் டமையானது உள்நாட்டில் இந்த அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழருக்கு ஒரு தீர் வைப் பெற்றுக் கொள்வதை அவர் விரும்புவதையே உணர்த்தியுள்ளது.

இரா. சம்பந்தன் ஐயாவின் தீர்க்கதரிசனமான தீர்மானத்தை சமாதானத்தை விரும்பும் சகலரும் பாராட்டவே செய்வர். அவர் தனது பழுத்த அரசியல் முதுமைக்கு இலக்கண மாக, எடுத்துக்காட்டாக நடந்துள்ளார். நேற்றுப் பெய்த மழையில் முளைத்த காளான்கள் சில இன்றே தலைவராக வேண்டும் என்ற நினைப்பில் சம்பந்தன் ஐயாவின் தூரநோக் கிய முடிவை எதிர்த்து அறிக்கை விட்டுவருகின்றன. இவர்கள் அரசியலில் வெறும் கத் துக்குட்டிகள்.

தமிழ் மக்களிடம் தம்மை தக்க வைத்து பிரபல்யமாகி தலைவராகும் எண்ணத்துடன் எவ்விதமான அரசியல் விவேகமற்ற சிலர் மக்களைத் குழப்பும் முயற்சியில் ஈடுபட்டுள் ளனர். சம்பந்தன் ஜயாவின் தீர்மானத்தை தமிழ் மக்கள் அனைவருமே ஏற்றுக்கொண் டுள்ளனர். சிலர் இவர் சலுகைகளுக்குச்சோரம் போனதாகவும் ஏன் அச்சுறுத்தப்பட்டுள்ள தாகவும் கூட கற்பனை அறிக்கைகளை விட்டுவருகின்றனர்.

தலைவர் என்று ஏற்றுக்கொண்டால் அவர் எமது நலனுக்காகவே எதனையும் செய் வார் என்று நம்பிக்கை கொள்ள வேண்டும். ஒருவேளை சம்பந்தன் தனது தலைமையில் சுரேஷ், அரியநேத்திரன் போன்றவர்களை அழைத்துக் கொண்டு ஜெனீவா சென்று எமது நாட்டுக்கு எதிராகப் பிரசாரம் செய்து அது இங்கு தமிழினத்திற்கு ஒரு தலை குனிவை ஏற்படுத்தினால் அதற்கும் இந்தக் காளான்கள் சம்பந்தனைப் பார்த்துத்தான் வசை பாடியிருக்கும்.

எனவே நிலாவைப் பார்த்துக் குரைப்பவர்களை அதுவாக எண்ணி ஒருபுறம் தள்ளி விட்டு எமது அடுத்த கட்ட நகர்வு பற்றி யோசிக்க வேண்டும். அரசுடன் கீரியும் பாம்பு மாக இருந்த சம்பந்தன் ஐயாவின் தாய் நாட்டுப்பற்றை ஏனைய எதிர்க்கட்சிகளும் பின் பற்ற வேண்டும். எமக்குள் எதிரிகளாக நடந்து கொண்டாலும் மூன்றாம் உலகு முன்பாக நாம் இலங்கையராக, சகோதரர்களாக மாற வேண்டும்.

சம்பந்தன் ஐயாவின் முன்மாதிரி உண்மையில் நாட்டுப்பற்றுக்கு ஓர் எடுத்துக்காட்டு. இனியும் எமது நாட்டை விமர்சிக்கும் எம்மவர்கள் சம்பந்தனை ஒருகணம் மனதில் நிறுத்தி அவர் வழி நடக்க வேண்டும்

http://www.thinakkathir.com/?p=31824

1. இந்தியா பிரேரணையை ஆதரித்தும், இலங்கையை எதிர்த்தும் வாகளிக்கப் போகிறது என்ற பேச்சுக்கள் உண்மையாகிறது போலுள்ளது.

2. இலங்கை அரசு- கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகள் புதிய சூழ்நிலை ஒன்றைச் சந்திக்க போகின்றன.

கொழும்பில் உள்ள சுயாதீன பத்திரிகைகள் பீரிசுக்கும் சமரசிங்கவுக்கும் இடையிலான பிரச்சனைகளை எழுதியுள்ளன.

அத்துடன் மகிந்தர் எல்லோரிலும் கோபப்பட்டாராம்!

Rajapaksa did not stop at that. He was even angrier that both, bickering and in-fighting in Geneva among officials in the Sri Lanka delegation were at a high. He asked about the wisdom of having Kshenuka Seneviratne, Additional Secretary in the Ministry of External Affairs, in the entourage to Geneva. She had reportedly had differences with Tamara Kunanayakam, Sri Lanka's Permanent Representative at the UN in Geneva.

http://www.sundaytimes.lk/120304/Columns/political.html

கொழும்பில் உள்ள சுயாதீன பத்திரிகைகள் பீரிசுக்கும் சமரசிங்கவுக்கும் இடையிலான பிரச்சனைகளை எழுதியுள்ளன.

அத்துடன் மகிந்தர் எல்லோரிலும் கோபப்பட்டாராம்!

Rajapaksa did not stop at that. He was even angrier that both, bickering and in-fighting in Geneva among officials in the Sri Lanka delegation were at a high. He asked about the wisdom of having Kshenuka Seneviratne, Additional Secretary in the Ministry of External Affairs, in the entourage to Geneva. She had reportedly had differences with Tamara Kunanayakam, Sri Lanka's Permanent Representative at the UN in Geneva.

http://www.sundaytim.../political.html

பலமாங்காய்களுக்கான கல்லாகவும் இருக்கலாம். இன்னொரு மங்காய், பீரிசு போய் பொலோகம வருவதற்கான நாடகமாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சம்பந்தரிட்ட இருக்கிற எக்ஸ்ட்ரா தசைக்கு  பிரபுதேவா ஆட்டமே போடலாம். 

சம்பந்தர், முஸ்லீமாக பிறக்க வேண்டியவர்!!!! ஏதோ தட்டித்தடுமாறி தமிழராக பிறந்து விட்டார்!! :icon_mrgreen:

மேலெழுதிய வாக்கியம் சரியென படவில்லை!! ... ஏனெனில் முஸ்லீங்கள், அவர்களரது தலைவர்கள் எப்படித்தான் புரட்டினாலும் தம் இனத்துக்காகவே செய்வார்கள்! ஆனால் சம்பந்தசுமத்திரன்களோ ...?????????????

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

ச்சீ ..ச்சீ.. களம் கண்றாவியாக இருக்கிறது... கூத்தமைப்பு கிந்தியாக்காரனிடம் காசு வாங்கிட்டான் அல்லது அவர்கள் சொல்படி நடக்கிறார்கள் அதான் உண்மை... உலக வழக்குபடி அல்லது ஸ்கூல் வழக்கபடி ஒருமுறை அல்லது இருமுறை முறைப்பாடு செய்யலாம்... அப்பதான் அதற்கு மரியாதை உண்டு.. அதற்கான பெறுமதிகளை பல ஆயிரம் உயிர்க்ளை பலியிட்டு பெற்று கொள்ளபட்டுள்ளது... சும்மா அவன் சொல்றான்(கிந்தியாக்காரன்) இவன் சொல்றான் (அமெரிக்காகாரன்) என ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி போடாமல் நேர்மையாக நடக்க வேணும்.. தறுதலை மாதிரி இன்று ஒன்று நாளை ஒன்று என சொன்னால் ஸ்கூல் பிள்ளைகள் கணக்காக ஆகி போய்டும்....

டிஸ்கி:

கூத்தமைப்பு கிந்தியாக்காரனால் விடிவு வருமென்றால் நேரடியாக தெரிவிக்க வேண்டும்.. ரோஜதந்திரம் எல்லாம் அப்புறம் இருக்கட்டும்.. தோற்றால் மாற்றுவழியை தமிழீழ மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்... :icon_idea: :icon_idea:

கொஞ்சம் பொறுமை காப்போம்.

நாளை சிங்கள நாட்டிற்கு எதிராக ஐ.நா. மனித உரிமை தொடரில் ஒரு தீர்மானம் வந்தால், இந்தியா ஆதராவாக, எதிராக இல்லை நடுநிலமையாக வாக்களித்தது என்பது பல எதிர்வுகூறல்களை உண்மையாக்கும்.

.

எதற்கும்.. சம்பந்தன் அவர்களும் ஏனைய தமிழ் உறுப்பினர்களும் தங்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்துவது நல்லது. 40,000 பொதுமக்களை சில தினங்களில் கொன்றுகுவித்தவர்களுக்கு ஒரு சில உயிர்கள் ஒரு பொருட்டே அல்ல. பின் விளைவுகளைப் பற்றி அவர்கள் பயப்படவும் மாட்டார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.