Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜெனீவாவில் சிறீலங்காவை எதிர்ப்பது யார்? ஆதரிப்பது யார்?

Featured Replies

March 9th, 2012 அன்று வெளியிடப்பட்டது - கருத்துக்களேதுமில்லை

ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடர் என்றுமில்லாத எதிர்பார்ப்பை சிறீலங்கா தொடர்பாக இம்முறை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மக்கள் இன அழிப்புச் செய்யப்பட்டுக் கொண்டிருந்த போது அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு எந்தவித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் ஐ.நா. எடுக்கத் தவறிய நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் அவையின் முன்னால் தன்னையே தீயாக எரித்து முருகதாசன் அதன் கண்களைத் திறக்க முயன்றான்.

ஆனாலும், பாராமுகமாகவே இருந்த ஐ.நா. மனித உரிமைகள் அவை, அதன் பின்னர் டப்ளின் தீர்ப்பாயமும், ஐ.நா. நிபுணர் குழுவும் ஆதாரபூர்வமாக சிறீலங்காவின் போர்க் குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் நிரூபித்துவிட்ட நிலையிலும் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

சிரியாவில் பஷார் அல் ஆசாத்தின் படைகளின் மக்கள் மீதான தாக்குதல்கள் தொடங்கி ஓராண்டுக்கு உள்ளாகவே அந்நாட்டின் மீது பிரேரணையைக் கொண்டுவந்து நிறைவேற்றிவிட முடிந்த மனித உரிமைகள் சபையினால் சிறீலங்கா நடத்திய இன அழிப்பின் கொடூரத்தின் மூன்று ஆண்டுகளை எட்டும் நிலையிலும் இன்னும் தமிழர்கள் மீதான வன்முறைகளும், இனவிரோதப் போக்குகளும் தொடரும் நிலையிலும் எந்தவித நடவடிக்கையையும் எடுத்துவிட முடியவில்லை.

எனினும், இம்முறை சிறீலங்காவின் மீது காத்திரமான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் அழுத்தங்கள் சிறீலங்காவை குற்றவாளியாக்கும் காத்திரமான நடவடிக்கைக்கு வழி வகுக்கும் என்பதே பலரதும் எதிர்ப்பார்ப்பாக இருக்கின்றது.

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அமெரிக்கா கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படும் சிறீலங்காவிற்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவாக குறைந்தது 24 நாடுகளின் வாக்குகள் கிடைத்தாலே அந்தப் பிரேரணையை நிறைவேற்றமுடியும்.

கடந்த ஆண்டு கனடாவின் முயற்சி தோல்வியைத் தழுவிய நிலையில், இந்த ஆண்டு அமெரிக்காவின் முயற்சி எவ்வளவு தூரம் வெற்றியளிக்கும் என்ற கேள்வி எழாமலில்லை. ஜெனீவா மனித உரிமைகள் சபையில் 47 நாடுகள் வாக்களிக்கும் தகுதி பெற்றுள்ளன.

ஒவ்வொரு நாடுகளுக்கும் மூன்று ஆண்டுகள் வரையே அங்கத்துவம் என்பதால், இவ் அங்கத்துவ நாடுகளின் வரிசையில் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றம் ஏற்படும். தற்போது இருக்கும் அங்கத்தவ நாடுகள் 20.06.2011 முதல் 31.12.2012 வரை வாக்களிக்கும் தகுதி பெற்றவை.

இதில் லிபியாவில் நடைபெற்ற வன்முறைகளை அடுத்து வாக்களிக்கும் தகுதி அந்நாட்டுக்கு தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, எஞ்சியுள்ள 46 நாடுகளின் வாக்குகளே சிறீலங்காவின் மீதான நடவடிக்கையை தீர்மானிக்கும்.

இதில் வாக்களிக்கும் தகுதி பெற்ற நாடுகளாக… ஆபிரிக்கா, அங்கோலா, பெனன், பொஸ்வானா, பூர்க்கினா, கமரூன், கொங்கோ, டியூபுட்டி, லிபியா, மொரித்தானியா, மொரிசியஸ், நைஜீரியா, செனகல், உகண்டா.

தென் அமெரிக்காசிலி, கோஸ்தரிக்கா, கியூபா, ஈகுவடோர், கௌதமாலா, மெக்சிக்கோ, பெரு, உருகுவே.

ஆசியா, சவூதி அரேபியா, மலேசியா, தாய்லாந்து, பங்களாதேஷ், சீனா, இந்தியா, இந்தோனேசியா, ஜோர்டான், குவைத், கிரிகிஸ்தான், மாலைதீவு, பிலிப்பைன்ஸ், கட்டார்.

ஐரோப்பா (மேற்கு மற்றும் கிழக்கு) ஒஸ்ரியா, பெல்ஜியம், இத்தாலி, நோர்வே, ஸ்பெயின், சுவிச்சர்லாந்து, செக், கங்கேரி, போலந்து, மோல்ட்டோவா, ருமேனியா. மற்றும் அமெரிக்கா, ரஷ்யா ஆகியவவை இருக்கின்றன.

இதில் சிறீலங்காவிற்கு ஆதாரவாக வாக்களிக்கப்போவதாக ரஷ்யா, சீனா, இந்தியா, கட்டார், சவூதி அரேபியா, மலேசியா, தாய்லாந்து, கியூபா, பிலிப்பைன்ஸ், ஈக்குவடோர் ஆகிய 10 நாடுகள் உறுதியளித்துள்ளன.

பங்களாதேஷ், இந்தோனேசியா, கிரிகிஸ்தான், மாலைதீவு மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் மெக்சிக்கோ தவிர்ந்த வேறு சில நாடுகளும், ஆபிரிக்காவில் சில நாடுகளும் சிறீலங்காவிற்கு ஆதரவாக வாக்களிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 46 நாடுகளில் 24 நாடுகளின் வாக்குகளைப் பெற்றாலே அமெரிக்கா கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படும் பிரேரணையை ஐ.நா. மனித உரிமைகள் சபையில் சிறீலங்காவினால் தோற்றகடித்துவிட முடியும்.

தற்போது 10 நாடுகளின் ஆதரவை உறுதிப்படுத்தி, மேலும் 14 நாடுகளின் ஆதரவை திரட்டுவதற்காக சிறீலங்கா பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டுவருகின்றது. இந்த முயற்சிக்கு இந்தியாவும் பக்கபலமாக இருப்பதாக அறியவருகின்றது. இதேவேளை, அமெரிக்கா மற்றும் 11 ஐரோப்பிய நாடுகளே இப்போது பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கும் என்பது உறுதியாக உள்ளது.

எனினும், ஐரோப்பிய நாடுகளில் குறிப்பாக செக் குடியரசு, போலந்து போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் நிலை குறித்து கேள்விகளும் இருக்கின்றன. எனவே, சிறீலங்கா இந்தப் பிரேரணையை தோற்றகடித்துவிடும் சாத்தியங்கள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

எனினும், அமெரிக்காவுடன் முரண்படாமல் இருப்பதற்காக இப்பிரேரணைக்கு ஆசிய மற்றும் ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகள் சில வாக்களிப்பில் பங்குபற்றாமல் நடுநிலை வகித்தால் சிறீலங்காவிற்கு அது சிலவேளைகளில் பாதகமாக மாறிவிடலாம் என்று அச்சம் கொண்டுள்ள சிறீலங்கா, அவ்வாறான நாடுகளுடனும், அந்நாடுகளுக்கு ஆதரவான நாடுகளுடனும் தொடர்ந்து பேச்சுக்களை நடத்திவருகின்றது.

எனவே, அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணை சிறீலங்காவைக் சிக்கவைக்குமா, தப்பவைக்குமா என்பதை வாக்களிப்பின் பின்னரேயே உறுதிப்படுத்தமுடியும்.

நன்றி :ஈழமுரசு

http://www.saritham.com/?p=53318

சிறிலங்காவைப் போன்று மனித உரிமைகளை மதிக்காத நாடுகள் சிறிலங்காவுக்கு ஆதரவாக வாக்களிக்கும்.

மனித உரிமைகளை மதிக்கின்ற நாடுகள் எமக்கு ஆதரவாக வாக்களிக்கும்.

தமிழர் தரப்பும் இலக்கு நாடுகளை ஆராய்ந்து அந்தந்த நாட்டின் பலம் பலவீனங்களை அறிந்து அதற்கேற்ப திட்டங்களை போட்டு நகரவேண்டும். எல்லா நாடுகளுக்கும் ஒரே அணுகுமுறை பெரிய பலனை தராமல் போகலாம்.

அதேவேளை யார் புதிய நாடுகள் இந்த அவையில் இணையப்போகின்றன என்ற பட்டியலை எடுத்து இப்போதே வேலை செய்ய ஆரம்பிக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் சிறீலங்காவிற்கு ஆதாரவாக வாக்களிக்கப்போவதாக ரஷ்யா, சீனா, இந்தியா, கட்டார், சவூதி அரேபியா, மலேசியா, தாய்லாந்து, கியூபா, பிலிப்பைன்ஸ், ஈக்குவடோர் ஆகிய 10 நாடுகள் உறுதியளித்துள்ளன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

The Council’s Membership Seats are:

  1. African States: 13 seats
  2. Asian States: 13 seats
  3. Latin American and Caribbean States: 8 seats
  4. Western European and other States: 7 seats
  5. Eastern European States: 6 seats”

There are total of 34 non-western states and 13 European and North American states.

Current Membership of the Human Rights Council 20 June 2011 - 31 December 2012 by regional groups

AFRICAN STATES

Angola 2013

Benin 2014

Botswana 2014

Burkina Faso 2014

Cameroon 2012

Congo 2014

Djibouti 2012

Libya 2013

Mauritania 2013

Mauritius 2012

Nigeria 2012

Senegal 2012

Uganda 2013

LATIN AMERICAN & CARIBBEAN STATES

Chile 2014

Costa Rica 2014

Cuba 2012

Ecuador 2013

Guatemala 2013

Mexico 2012

Peru 2014

Uruguay 2012

ASIAN STATES

Bangladesh 2012

China 2012

India 2014

Indonesia 2014

Jordan 2012

Kuwait 2014

Kyrgyzstan 2012

Malaysia 2013

Maldives 2013

Philippines 2014

Qatar 2013

Saudi Arabia 2012

Thailand 2013

WESTERN EUROPE & OTHER STATES

Austria 2014

Belgium 2012

Italy 2014

Norway 2012

Spain 2013

Switzerland 2013

United States 2012

EASTERN EUROPEAN STATES

Czech Republic 2014

Hungary 2012

Poland 2013

Republic of Moldova 2013

Romania 2014

Russian Federation 2012

Most likely Yes votes (marked in italics) - 16

Most likely No votes (marked) - 20

Remaining African/other states - 11

Edited by Queen

இதில் சிறீலங்காவிற்கு ஆதாரவாக வாக்களிக்கப்போவதாக ரஷ்யா, சீனா, இந்தியா, கட்டார், சவூதி அரேபியா, மலேசியா, தாய்லாந்து, கியூபா, பிலிப்பைன்ஸ், ஈக்குவடோர் ஆகிய 10 நாடுகள் உறுதியளித்துள்ளன.

மனித உரிமைகள் கவுன்சில்: இந்தியாவின் நிலைப்பாடு எப்படி இருக்கும்?

இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்கா கொண்டுவந்திருக்கும் தீர்மானத்தின் மீது இந்தியா தமிழர்களின் நலனை மனதில் கொண்டு ஒரு நிலைப்பாட்டை எடுக்கும் என்று இந்தியப் பிரதமர் அலுவலகத் துணை அமைச்சர் வி.நாராயணசாமி தெரிவித்தார்.

இத்தீர்மானம் குறித்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் ஆகியோர் ஒருமித்த கருத்தையே வெளிப்படுத்தியிருப்பதாகத் தெரிவித்த நாராயணசாமி, தானும், அமைச்சர் ஜி.கே.வாசனும் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனனை சந்தித்து இந்தத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு வரும்போது, தமிழ் நாட்டின் உணர்வுகளை மனதில் கொண்டு , இந்தியா இலங்கைக்கு எதிராகவே வாக்களிக்கவேண்டும் என்று வலியுறுத்தியதாகத் தெரிவித்தார்.

அதேபோல இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கையும் தான் நேரில் சந்தித்து இதே நிலைப்பாட்டை வலியுறுத்தியதாகவும், பிரதமரும் அதைப் பரிவுடன் கவனிப்பதாகக் கூறியதாக அவர் தெரிவித்தார்.

இந்த தீர்மானத்தில் இந்திய அரசு திறந்தமனதுடன் இருப்பதாகவும், தமிழர்களின் நலனை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆனால் இலங்கை மீது பெரும் செல்வாக்கு இருப்பதாகக் கருதப்படும் இந்திய அரசு, போருக்கு பின்னர்,இலங்கையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வு காணும் விஷயத்திலோ அல்லது, போரினால் ஏற்பட்ட மனித நேயப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் விஷயத்திலோ, இலங்கை அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தவில்லை என்ற விமர்சனங்களை அமைச்சர் நாராயணசாமி மறுத்தார்.

இலங்கை அரசு ஒரு சுதந்திரமான நாடு, அதன் உள்விவகாரங்களில் ஒரு வரம்புக்குள்ளேயே இந்தியா தலையிட முடியும். தீர்வு காணுங்கள் என்று வலியுறுத்தலாமே தவிர வற்புறுத்தமுடியாது என்றார். ஆனால் மனித நேயப் பிரச்சினைகளில் தமிழர்களுக்கு ஆதரவாக இலங்கை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.