Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானம் - அமெரிக்கா விடுவதாகவில்லை: மனித உரிமைகள் தொடர்பிலான சமூக ஆர்வலர் ஜிம்மி கார்ட்டர் களத்தில்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Jimmy-carter-USA150news.jpg

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரவுள்ள பிரேரணையை நிறைவேற்றிக் கொள்வதற்காகக் முழுமூச்சுடன் செயற்படும் அமெரிக்கா - ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பு நாடுகளின் ஆதரவைப் பெறும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந் நடவடிக்கைக்காக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும், மனித உரிமைகள் தொடர்பிலான சமூக ஆர்வலருமான ஜிம்மி கார்ட்டரைக் களமிறக்கியுள்ளது அமெரிக்கா. இதற்கமைய தனது தனிப்பட்ட செல்வாக்கைப் பயன்படுத்தி அமெரிக்காவின் பிரேரணையை ஜெனிவாவில் நிறைவேற்ற ஜிம்மி கார்ட்டர் முழுவீச்சில் செயற்பட்டு வருகிறார் என இராஜதந்திர வட்டாரங்கள் நேற்றுத் தெரிவித்தன.

"எமது முன்னாள் ஜனாதிபதி கார்ட்டர் ஆபிரிக்க நாடுகள், லத்தீன் அமெரிக்க நாடுகளின் தலைவர்களுடன் நெருங்கிய நட்புறவைக் கொண்டவராவார். தனது செல்வாக்கைப் பயன்படுத்தியதால் இதுவரை பல நாடுகள் எமது பிரேரணையை ஆதரிப்பதாக உறுதியளித்துள்ளன.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் சமூக சேவைகளில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவராவார். உலகளாவியரீதியில் மனித உரிமைகள் தொடர்பான செயற்பாடுகளுக்கு அவர் பெரிதும் உதவிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக தென்னாபிரிக்காவின் விடுதலைப் போராளி என்று வர்ணிக்கப்படும் நெல்சன் மண்டேலாவை தலைமையாகக் கொண்ட "த எல்டர்ஸ்" அமைப்பு ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பு நாடுகள் ஆதரிக்க வேண்டுமென கடிதம் எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்பில் ஜிம்மி கார்ட்டரும் ஒரு முக்கியமான உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.seithy.co...&language=tamil

ஜிம்மி கார்ட்டர் 'த எல்டர்ஸ்' மூலம் களம் இறக்கப்பட்டது மிகுந்த நம்பிக்கை தருவதாக உள்ளது. தேஸ்மாந்து தூத்து (Desmond Tutu), நெல்சன் மண்டேலா ஆகியோருக்கு அவர்களின் கோரிக்கைகளுக்கு ஒரு மதிப்பும் மரியாதையும் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

ஜிம்மி கார்ட்டர் 'த எல்டர்ஸ்' மூலம் களம் இறக்கப்பட்டது மிகுந்த நம்பிக்கை தருவதாக உள்ளது. தேஸ்மாந்து தூத்து (Desmond Tutu), நெல்சன் மண்டேலா ஆகியோருக்கு அவர்களின் கோரிக்கைகளுக்கு ஒரு மதிப்பும் மரியாதையும் உண்டு.

ஆசியாவின் வங்குரோத்து நாடுகளில் இவர்களுக்கு மதிப்பிருக்கா? :D

ஆசியாவின் வங்குரோத்து நாடுகளில் இவர்களுக்கு மதிப்பிருக்கா? :D

ஆசிய நாடுகளில் மக்கள் மத்தியில் நிச்சயம் உள்ளது. ஆனால், இவர்கள் மூலம் ஆபிரிக்க நாடுகளின் ஆதரவே அதிகளவில் கிடைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் ஆட்சிகாலத்தில்தான் ஈரானின் பயணகைதிகள் நடவடிக்கை நடைபெற்றது......என நினைக்கிறேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலில் இந்த தீர்மானத்தை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும்

பின்னர் ஆலோசகர்கள் என்ற முறையில் அமெரிக்கா போகும், அமெரிக்கா புகுந்த நாடும் ஆமைபுகுந்த வீடும் என்றும் உருபட்டதா சரித்திரம் இல்லை. அமெரிக்க தோழமையோடு தமிழர் தம் நலனை அடைய வேண்டும்.

Edited by சித்தன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இந்த தீர்மானத்தை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும்

பின்னர் ஆலோசகர்கள் என்ற முறையில் அமெரிக்கா போகும், அமெரிக்கா புகுந்த நாடும் ஆமைபுகுந்த வீடும் என்றும் உருபட்டதா சரித்திரம் இல்லை. அமெரிக்க தோழமையோடு தமிழர் தம் நலனை அடைய வேண்டும்.

நிங்கள் சொல்வது சரியாகத்தான் உள்ளது ........

அமெரிக்காவின் உதவியுடன் கிடைப்பதை பெற்று கொள்வோம் இதை விட்டால் இப்போதைக்கு யாரும் எதையும் பெற்று தர கூட்டமைப்பு உட்பட யாரும் இல்லை .......

ஜிம்மி கார்ட்டர் தனக்கென ஒரு அமைப்பையே கொண்டுள்ளார், இதற்கு பல முன்னாள் அமெரிக்க தலைவர்களும் ஆதரவு தருவதுண்டு. மறைமுகத்தில் அமெரிக்க அரசும் கூட பயன்படுத்துவது வழமை. உதாரணத்திற்கு கடந்த புஸ் மகன் அசர்சில் ஒரு ஆபிரிக்க தலைவர் இவரை சந்திக்க இந்த அமைப்பு உதவியது. எனவே இது எமக்கு சார்பான நகர்வாக இருக்கட்டும்.

http://www.cartercenter.org/index.html

ஜிம்மி கார்ட்டரை இறக்குமளவிற்கு நிலைமை இருக்கிறது. ம்ம்ம்....

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு அமெரிக்கா உதவுவது போல் இருந்தாலும் அமெரிக்காவின் உள்நோக்கம் என்ன என்பதையும் தமிழர்கள் புரிந்து வைத்திருக்க வேண்டும்.

ஆசிய நாடுகளின் வாக்குகள் எப்படியும் அமெரிக்காவுக்கு கிடைக்காது.ஏனெனில் அவர்கள் இனப்படுகொலைகளில் சிறிலங்காவின் அண்ணன் தம்பிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.