Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக சட்ட சபை தேர்தல்.

Featured Replies

தமிழக சட்ட சபை தேர்தலில் மொத்தம்மாக எத்தனை ஆசனங்கள்? விபரங்கள் அறியத்தரவும்.

  • Replies 129
  • Views 20.5k
  • Created
  • Last Reply

தமிழக சட்ட சபை தேர்தலில் மொத்தம்மாக எத்தனை ஆசனங்கள்? விபரங்கள் அறியத்தரவும்.

234? நான் 131ல் போடி போடுகிறேன் உங்கள் ஆதரவு இருந்தால் எப்படியும் 130 வெற்றி பெறுவேன் :P

234? நான் 131ல் போடி போடுகிறேன் உங்கள் ஆதரவு இருந்தால் எப்படியும் 130 வெற்றி பெறுவேன் :P

ஏன் மோனை...ஒனறிலை தோக்கிறாய். :( ..ஆருக்கும் விட்டுகொடுக்கிறியே...அவவுக்
ஏன் மோனை...ஒனறிலை தோக்கிறாய். ..ஆருக்கும் விட்டுகொடுக்கிறியே...அவவுக்
  • தொடங்கியவர்

திருத்த முடியாத கழுதை கட்சியும் (தி.மு.க), அனைவராலும் திருத்த முடியாத கழுதை கட்சியுமாகிய (அ.தி.மு.க) இவற்றில் ஒரு கழுதை ஆட்சி அமைக்கப்போகின்றது. மொத்தத்தில் 234 தொகுதிகள். பெரும்பான்மை 118 ஆசனங்கள் பெறவேண்டும். இவற்றை இவ் கழுதைகள் பெறும்மா? அல்லது உண்மையாக மக்களுக்கு உழைக்கும் சிறு கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி புரியும்மா?

  • கருத்துக்கள உறவுகள்

என்னைபொறுத்தவரை வைகோ ஜெயாவோட இனைந்ததில் தவறு இல்லை,, கறூனா சா கருனாநிதியோடு இருந்து எதையும் வைகோவால் சாதிக்கமுடியாது அதற்கு கறுனா நிதி சம்மதிக்கவும் மாட்டார்,, பாடையில போகக்கை முதலைமச்சரா இருக்கனும் எண்டு கறூனா நிதி நினைக்கிறார் போல,, கட்சிக்காக இவ்வளவு கஸ்ரப்பட்ட வைகோவுக்கு 25 இடங்கள் ஒதுக்கிகுடுக்கமுடியாத கறுனாநிதியோடு இருப்பதைவிட 30க்கு மேற்பட்ட ஆசனங்களை ஒதுக்கி குடுத்த ஜெயா மேல்,,, இரட்டை வேசம் போடுற துரோகியைவிட வெட்டு ஒண்டு துண்டு இரண்டு எண்டு செயற்படுற எதிரி எவ்வளவோ மேல்,,, :idea:

அதைவிட சன்ரிவி சினிமா நிகழ்ச்சியில் காட்டுற பாரபட்சத்தை வைகோ மீது காட்டினதும் கறுனாநிதியின் தூண்டுதலில்த்தான்,, வைகோவை வளரவிடாது ஸ்டாலினை அடுத்த தலைவர் ஆக்கனும் எண்ட என்னத்தில்த்தான் அப்படி கறுனா நிதி செய்தார் என்பதுதமிழகத்தில் இருக்கும் சிறுகுழந்தைக்கு கூடதெரியும்,,, :idea: :evil:

டண் இப்படி சொல்லக்கூடாது. :x

நான் சொல்வது போல ஜெயா அம்மா வந்தாலும் பறவாய் இல்லை. பாரபட்ச்சமாக கட்ச்சிக்காறர்களை நடாத்தும் கட்ச்சி ஆட்ச்சிக்கு வரக்கூடாது. இது ஈழதமிழருக்கு மட்டும் அல்ல, தமிழக மக்களுக்கும் நன்மை பயற்காது.! இப்படி சொல்லணும். :wink: :P

  • 1 month later...
  • தொடங்கியவர்

இப்போது தேர்தல் நடந்தால் எந்தக் கட்சிக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு அதிமுகவுக்கு ஆதரவாக 38.5 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். திமுகவுக்கு 36.8 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். விஜயகாந்த்தின் தே.மு.தி.க.வுக்கு 12.3 சதவீதம் பேர்ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதிமுக, திமுகவுக்கு அடுத்து வாக்காளர்கள் மனதில் விஜயகாந்த் கட்சிக்கு பெரும் ஆதரவு இருப்பது இதில் கவனிக்கத்தக்கது.

சபாஷ் விஜயகாந், குள்ள நரிகளையும், மாபியா கூட்டத்தையும் ஓட ஓட விரட்டிவிடு.

விஜயகாந்தின் வெற்றியால், தமிழ் நாடு தேறத்தான் போகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

விஜய காந்துக்கு 5 சதவீத ஆதரவில் இருந்து 12 சதவீதமாக அதிகரித்ததில் தி.மு.க, அ.தி.மு.க அணிகள் குழப்பம் அடைந்துள்ளன. விஜயகாந்தின் தே.மு.தி.க தேர்தலில் ஆசனங்கள் குறைவாகக் கிடைக்கும் என்று எதிர்பார்த்தாலும் அ.தி.மு.க,தி.மு.கவின் வாக்குகளினைக் குறைக்கும். பாண்டிருட்டி ராமச்சந்திரன் போட்டியிடும் தொகுதியிலும், விருத்தச்சலம் தொகுதியில் போட்டியிடும் விஜயகாந்த தொகுதியிலும் தே.மு.தி.க வெல்வதற்கு சாதகமாக உள்ளது. ஜெயலலிதா வெற்றி பெறக்கூடிய தொகுதியான ஆண்டிப்பட்டி,பாரூர் தொகுதிகளிலே போட்டியிட்டு வந்தவர். கலைஜர் வெற்றி பெறக்கூடிய துரைமுகம் மற்றும் வடசென்னைத்தொகுதியிலே போட்டியிட்டு வருகிறார். ஆனால் மதுரையில் போட்டியிடுவார் என எதிர்பாக்கப்பட்ட விஜயகாந்த் வன்னியர் அதிகமுள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஆதரவான தொகுதியில் போட்டியிடுவது ஆச்சரியமாக இருக்கிறது. விருத்தாச்சலம் தொகுதியில் விஜயகாந்துக்கு அவரது ஆதரவாளர்கள் வீடு வீடாக சென்று மற்றைய கட்சியினை விட அதிகளவில் பிரச்சாரம் செய்கிறாரர்கள். மற்றைய கட்சியினர் விஜயகாந்துக்கு எதிராக 3 விஜயகாந்த் பெயருள்ள சுயேட்சை வேட்பாளர்களினை மக்களுக்கு குழப்பம் விளைவிக்க நிறுத்தியுள்ளார்கள். விஜயகாந்துக்கு எதிராக பாட்டாளிமக்களுக்கு ஆதரவாக சீமான், அறிவுமதி, தங்கர்பச்சான் போன்ற தமிழ் பாதுகாப்பினர் பிரச்சாரம் செய்கிறார்கள். தமிழன் தங்கர் பச்சானுக்கு மன்னிப்புச் செய்யச் சொன்ன விஜயகாந்த் முஸ்லிம் வடனாட்டு குஸ்புவுக்கு எதிராக ஒன்றும் செய்யாது இருந்தவர் என்று பிரச்சாரம் செய்கிறார்கள். இதில் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவனும் கலந்து கொண்டது ஆச்சரியம். அ.தி.மு.க கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் தி.மு.க கூட்டணியில் உள்ள பாட்டாளிமக்கள் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தது உண்மையில் ஆச்சரியம் தான். உண்மையில் எதிர் எதிர் கூட்டணியில் இருந்தாலும் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் விடுதலைச் சிறுத்தை அணிகளும், விடுதலைச் சிறுத்தை போட்டியிடும் தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சியும் எதிர் எதிர் கூட்டணியில் இருந்தாலும் மறைமுகமாக ஆதரவு தெரிவிக்கிறார்கள். ஒரு தொகுதி மட்டுமே இரண்டு கட்சிகளும் நேரடியாகப் போட்டியிடுகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

கார்த்திக்கின் பார்வட் பிளக் கட்சியினர் வெற்றி பெறுவது கடினம் என்றாலும் தேவர்களின் வாக்குகள் இக்கட்சிக்கே அதிகம் கிடைப்பதாகவும் கருதப்படுகிறது.

ஈழ ஆதரவான வை.கோ, திருமாவளவன் போன்றவர்களின் கட்சிகள் அ.தி.மு.கவுக்கு ஆதரவு அளித்தாலும், ஈழ விரோதிகளான பாப்பண விசு,சோ,எஸ்.வி.சேகர் அ.தி.மு.கவுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். மைலாப்பூர் தொகுதியில் எஸ்.வி.சேகர் அ.தி.மு.க சார்பாகவும், நடிகர் நெப்போலியன் தி.மு.க சார்பாகவும், ஜனதாக் கட்சி ஈழவிரோதி சுப்பிரமணியம் சுவாமியின் கட்சியினைச் சேர்ந்த மரகதம் சந்திரசேகரும் போட்டியிடுகிறார்கள். மைலாப்பூர் தொகுதியில் அதிகளவு பிராமணர்கள் வசிக்கிறார்கள். விசு சன் தொலைக்காட்சிக்கு எதிராகவும், தி.மு.கவுக்கு எதிராகவும் அறிக்கைவிடுகிறார். அரட்டை அரங்கம் நிகழ்ச்சி இனி மேல் சன் தொலைக்காட்சியில் வரமாட்டுது. ஜெயாத் தொலைக்காட்சிக்கு செல்லும் என்று எதிர்பாக்கப்படுகிறது. ராதிகா, சரத்குமாரும் அ.தி.மு.கவுக்குச் சென்றுவிட்டார். சரத்குமார் முன்பு அ.தி.மு.கவில் இருந்து தி.மு.கவுக்கு சென்றது தெரிந்ததே.

தற்பொழுது தி.மு.ககூட்டணியா அல்லது அ.தி.மு.கக்கூட்டணியா வெல்லும் என்று சொல்லமுடியாத நிலையில் இரு கூட்டணிக்கும் ஆதரவு உள்ளது. வட தமிழ் நாட்டில் தி.மு.க கூட்டணி அதிக தொகுதிகளிலும், கிராமப்புறங்களிலும் தென் தமிழகத்தில் அ.தி.மு.க அதிக தொகுதிகளிலும் வெல்லும் நிலையில் உள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டு தேர்தல் பிரசாரங்களில் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து எவருமே பேசுகிறாரில்லை'

இலங்கையின் சமாதான முயற்சிகளில் இந்தியா விலகிநிற்பது தெனாலி இராமன் பூனை வளர்த்த கதையை நினைவுபடுத்துகிறது. இந்தியா தலையிடாமல் இருந்தால் இலங்கை அரசாங்கத்துக்கு இந்தியா மீதான பயம் இல்லாமல் போய்விடும். தனது காத்திரமான பங்களிப்பு இருக்கும் என்பதை இந்தியா உணர்த்த வேண்டும். எந்த அளவில் தலையிட வேண்டும் என்பதை இந்தியாவே தீர்மானிக்கவேண்டும்.`

தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை குறித்து அக்கறையற்ற- இலங்கை தமிழர் விரோதக் கட்சி. திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞர் மு. கருணாநிதியைப் பொறுத்தவரை அவருக்கு அரசியல் ரீதியாக இலாபம் இருக்குமென்றால் மாத்திரமே இலங்கைத் தமிழர் பிரச்சினையைப் பயன்படுத்துவார். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோ போன்றவர்கள் உணர்ச்சிபூர்வமானவர்களாகக் காணப்படுகின்றனர். மேடைப் பேச்சு என்ற எல்லைக்கு அப்பால் போகமாட்டார்கள். பயங்கரவாதத் தடைச் சட்டங்களும் அவர்களைக் கட்டுப்படுத்துகின்றன. தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் ஆரம்பத்திலிருந்தே பேசிக்கொண்டிருக்கிறார். இப்போதும் பேசிக் கொண்டிருக்கிறார்.

"தமிழக சட்டசபைத் தேர்தல் பிரசாரங்களின்போது இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து எவருமே பேசுவதைக் காணமுடியவில்லை. தமிழகத்தில் வாழுகின்ற இலங்கைத் தமிழர்களுக்கு வாக்குரிமை இருக்குமானால் தமிழகக் கட்சிகள் அவர்களுடைய பிரச்சினையில் அக்கறை காட்டக்கூடும். ஜெயலலிதா ஆட்சியில் இலங்கைத் தமிழர்கள் பயங்கரவாதிகளாகச் சித்திரிக்கப்பட்டனர். ஜெயலலிதா இலங்கைத் தமிழர் பிரச்சினையை வேறு விதமாகத் திருப்பிவிட்டார். இதை எதிர்கொள்ளக் கூடிய திராணி கருணாநிதிக்கு இல்லை. இலங்கைத் தமிழர்களுக்காக பகிரங்கமாகக் குரல் கொடுக்கக் கூடிய துணிச்சல் கருணாநிதியிடம் இல்லை. வைகோவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனும் ஜெயலலிதா பக்கம் போய்விட்டார்கள். தேர்தலின்போது கூட இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்துப் பேசக்கூடிய சூழ்நிலை இல்லை. இலாப நஷ்டம் பார்க்கிறார்கள்.

`இலங்கைத் தமிழர் விவகாரத்தில் எதிர்மறையான கருத்துக்களை உருவாக்குவதில் `இந்து' பத்திரிகை தீவிர அக்கறை காட்டுகிறது. இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான கருத்தை இந்தியாவில் உருவாக்குவதில் இரு உளவுத்துறை அமைப்புகளும் முக்கிய பங்காற்றுகின்றன. தமிழ் நாட்டு மக்கள் இதனை நம்பி இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான கருத்துக்களை உருவாக்கிக் கொண்டனர்.

`இந்திய இடதுசாரிகள் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் சர்வதேச பார்வையைக் கொண்டுள்ளனர். இதைத் தவறு என்று சொல்ல முடியாது. ஆனால், அதை நடைமுறைப்படுத்தும் விதத்தில் தவறுகள் இழைக்கப்பட்டுள்ளன. இந்திய இடதுசாரிகள் இலங்கை இடதுசாரிகளின் கருத்துக்களைச் செவிமடுக்கும்போது எச்சரிக்கையாக இருக்கவேண்டும்'

இவ்வாறு கூறுகிறார் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சி.பி.எம்.)கட்சியின் முக்கியஸ்தரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலத் தலைவருமான ச.செந்தில்நாதன்.

மார்க்சிய வெளிச்சத்தில் இலக்கியத்தை நோக்கும் தலைசிறந்த விமர்சகரான அவர் ஒரு வழக்கறிஞரும்கூட, சில தினங்களுக்கு முன்னர் கொழும்புக்கு வருகை தந்திருந்த செந்தில்நாதனை மேதினத்தன்று காலை அவர் சென்னை புறப்படுவதற்கு முன்னதாக`தினக்குரலு'க்காக சந்தித்துப் பேசக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது. தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்திருக்கும் சூழ்நிலையில் தமிழக அரசியல் நிலைவரங்கள் குறித்தும் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழகக் கட்சிகளின் சமகாலப் போக்குகள் குறித்தும் அவரிடம் வினவியபோது மனந்திறந்து கருத்துக்களை வெளியிட்டார்.

இலங்கை இனப்பிரச்சினை குறித்து இந்திய இடதுசாரிகளின் அணுகுமுறை மாறுவதற்கு தமிழ் மக்களை தனியான தேசிய இனமாக அவர்கள் பார்க்கத் தொடங்குவது அவசியம்.

இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் எதிர்மறையான கருத்துக்கள் உருவாவதில் `இந்து' பத்திரிகை தீவிர அக்கறை காட்டுகிறது.

ஆரம்பத்தில் இந்தியாவின் பிரதான தேசிய கட்சிகளான காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்றவை இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையை இலங்கையின் உள்நாட்டு பிரச்சினையாக பார்த்தன.

திராவிட முன்னேற்றக் கழகம் இலங்கைத் தமிழர் விடயத்தில் அக்கறை காட்டியபோதிலும், அவர்களது பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு அக்கறை காட்டவில்லை. அவர்கள் தமிழர்கள், தமிழ் மொழி பேசுபவர்கள் என்ற அடிப்படையில் ஒரே பண்பாட்டினை பின்பற்றுபவர்கள் என்ற வகையில் ஒரு வித சகோதர பார்வை காணப்பட்டது. உணர்வுபூர்வமாகவே அவர்கள் இதனை அணுகினார்கள்.

இலங்கையில் தமிழர்கள் மத்தியில் போராட்ட இயக்கங்கள் உருவாக ஆரம்பித்தபோது, முதன் முறையாக இந்திய தமிழர்களின் கவனம் இலங்கைத் தமிழர்கள் பக்கம் திரும்பியது.

ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஜனாதிபதியாக இருந்தபோது இடம்பெற்ற சம்பவங்கள் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தின. அவரை சகல கட்சிகளும் எதிர்த்தன. இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. இப்போதைய காங்கிரஸ் கட்சியிடம் இந்த அணுகுமுறை இல்லை.

இலங்கைக்கு இந்திய அமைதிப்படை அனுப்பப்பட்டதுபற்றி இருவேறு கருத்துக்கள் காணப்பட்டதால் அமைதிப் படையை ஆதரிக்க வேண்டுமா என்ற கேள்வி காணப்பட்டது.

இரண்டு அரசாங்கங்கள் மாத்திரம் ஒப்பந்தம் செய்தது சரியா என்ற கருத்தும் காணப்பட்டது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையுடன் தமிழ் நாட்டில் நிலைமை மாறியது. அதன் பின்னர் இடம்பெற்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி நிலை பாதிக்கப்பட்டது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார். இதனை இந்தியாவில் பலர் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.

தனி ஈழம் அமைந்தால் இந்தியாவிலும், பிரிவினை கோரிக்கைகள் எழும். தமிழ் நாட்டில் அதன் தாக்கம் காணப்படும். இதனால் இந்தியா இதற்கு இடமளிக்கக் கூடாது என்ற கருத்துக்கள் உருவாகின.

இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான கருத்தை உருவாக்குவதில் இரண்டு உளவுத்துறையினர் முக்கிய பங்காற்றினர். தவறான செய்திகள் தமிழ் மக்களை சென்றடைந்தன.

இலங்கைத் தமிழர்கள் கொள்ளை, குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் என்ற செய்திகள் பரப்பப்பட்டன.

மக்கள் மத்தியில் இவ்வாறான செய்தியினை பரப்புவதன் மூலம் தமிழ்நாட்டு மக்களிடமிருந்து ஈழத் தமிழர்களை பிரிக்கும் சதியினை செய்தனர்.

இரண்டு வருட பத்திரிகைகளை எடுத்துப் பார்த்தால் 365 நாளும் இலங்கைத் தமிழர்கள் ஏதாவது குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக செய்தி வருவதை காணலாம். இதனடிப்படையில் பார்த்தால் நீதிமன்றங்களில் 1000 வழக்குகளாவது இருக்கவேண்டும். ஆனால், உண்மையில் அப்படி இல்லை. 95 வீதமான குற்றங்கள் அவர்கள் செய்யாதவை. பத்திரிகைகளில் மாத்திரம் செய்தியாக வெளிவந்தவை.

தமிழ்நாட்டு மக்கள் இதனை நம்பி இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான கருத்துக்களை உருவாக்கிக் கொள்கின்றனர். கருத்துக்கள் தவறாகக் கொடுக்கப்படுகின்றன.

திராவிட கட்சிகள் இலங்கைத் தமிழர் விடயத்தில் சரியாக செயற்படவில்லை. திராவிட முன்னேற்றக் கழகம் அரசியல் ரீதியாக ஒதுங்கிக் கொண்டது. வைகோ போன்றவர்கள் உணர்வு ரீதியானவர்களாகக் காணப்படுகின்றனர். பேச்சு என்ற எல்லைக்கு மேல் போகமாட்டார்கள். பயங்கரவாதச் சட்டங்களும் அவர்களை கட்டுப்படுத்தியுள்ளன.

நெடுமாறன் ஆரம்பத்திலிருந்தே பேசிக்கொண்டிருக்கிறார். இப்போதும் பேசிக்கொண்டிருக்கிறார். தமிழ் நாட்டில் உள்ள மக்களுக்கு சரியான தகவல்கள் போய்ச் சேரவில்லை.`இந்து' பத்திரிகையில் வருவது எல்லாம் சரியென்று நம்புபவர்கள் தமிழ் நாட்டு மக்கள்.

இலங்கைத் தமிழ்ப் போராளிகள் தவறுகள் செய்யலாம். ஆனால், இவர்கள் இல்லாமல் தீர்வு வராது. சிங்கள அரசியல்வாதிகளால் தீர்வு கிடைக்கும் என கருதுவது தவறு. சிங்களத் தலைவர்களால் தீர்வு கிட்டும் என்ற வகையான எதிர்மறையான கருத்தை `இந்து' கொடுக்கின்றது.

விடுதலைப் புலிகளை விமர்சனம் செய்யலாம். அது தவறல்ல. தோழமையுடன், நட்புடன் உரிமையுடன், கருத்துக்களைச் சொல்லலாம். குரோத எண்ணத்துடன் அந்தக் கருத்துக்களைப் பரப்புவதுதான் தவறு. கருணாவை பெரிய கதாநாயகனாக சித்திரிப்பது இடம்பெறுகின்றது.

இந்திய இடதுசாரிக் கட்சிகள் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் சர்வதேச பார்வையை கொண்டுள்ளன. இது தவறு எனச் சொல்ல முடியாது. ஆனால், அதை நடைமுறைப்படுத்தும் விதத்தில் தவறுகள் இழைக்கப்பட்டுள்ளன.

இலங்கை இரண்டாகப் போனால் அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகள் உள்ளே வரலாம். அது இந்தியாவின் நலனுக்கு உகந்ததல்ல என அவை கருதுகின்றன.

ஆனால், சிக்கல் என்னவென்றால் ஒன்றுபட்ட இலங்கைக்குள் கூட அமெரிக்க ஏகாதிபத்தியம் காலூன்றக்கூடிய நிலைமையுள்ளது. சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பின்னர் அமெரிக்கா தட்டிக்கேட்க ஆளில்லாமல் செயற்படுகின்றது.

தனிநாடு வேண்டுமா இல்லையா? நாம் தீர்மானிக்க முடியாது

இலங்கைத் தமிழர்கள் தனியான தேசிய இனம் அவர்களுடைய விருப்பம் முக்கியம். தனி ஈழம் வேண்டுமா இல்லையா என்பதை நாம் தீர்மானிக்க முடியாது கருத்தைச் சொல்லலாம். ஆனால்,முடிவெடுக்க முடியாது.

இலங்கைத் தமிழர்களை ஒரு தேசிய இனமாக இடதுசாரிகள் பார்த்தால் அவர்கள் அணுகுமுறை மாறலாம். இந்திய இடதுசாரிகள் தமிழ் மக்களுக்கு ஆதரவாகவுள்ளனர். ஆனால், பிரச்சினைக்கு தீர்வு குறித்த அணுகுமுறை பிழையாகவுள்ளது. மேலும் அவர்கள் இந்தப் பிரச்சினையில் இன்னும் அதிக அக்கறை காட்ட வேண்டும். முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தங்களை இது குறித்த தீவிர விவாதத்திற்கு உட்படுத்த வேண்டும்.

புதிய இடதுசாரி தலைமுறை உருவாகி வருகின்றது. அவர்களது பார்வை சற்று மாறும் அதற்கு வாய்ப்புண்டு. இந்திய இடதுசாரிகள், ஈழத்து இடதுசாரிகளின் கருத்துக்களை செவிமடுக்கும்போது எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

இடதுசாரி அமைப்புகளுக்கு யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கு இருந்தது. இன்று சிந்தனையாளர்கள், அறிவு ஜீவிகள் மத்தியில் இடதுசாரி கொள்கைகளுக்கு ஆதரவு உள்ளது மக்கள் மத்தியில் இல்லை.

சிங்கள பகுதியில் இருக்கின்ற இடதுசாரிகள் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஜே.வி.பி.சிங்கள பேரினவாதத்திற்கு பலியாகிவிட்டது.

இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து சுயமான ஒரு முடிவிற்கு இந்திய இடதுசாரிகள் வந்தால் அது சரியான தீர்விற்கு வழிவகுக்கும். இலங்கையிலுள்ள இடதுசாரிகள் எவ்வளவு தூரம் உண்மையைச் சொல்கின்றார்கள் என்பது தெரியாது.

தமிழ் நாட்டில் இடதுசாரிக் கட்சிகள் இன்னமும் தொழிற்சங்க கட்சிகளாக உள்ளன. எனினும், அது மாறத் தொடங்கியுள்ளது. வெகுஜன தன்மை தென்படுகின்றது. இப்படிப்பட்ட மாற்றங்களும் காலப்போக்கில் புதிய இளம் தலைமுறை வருவதும் மாற்றங்களை உண்டுபண்ணலாம்.

முற்போக்கு எழுத்தாளர் கூட்டங்களில் காசியின் பாடல்கள்

காசி ஆனந்தனை கண்டுகொள்ளத் தொடங்கியுள்ளனர். முற்போக்கு எழுத்தாளர் சங்க கூட்டங்களில் காசி ஆனந்தனின் பாடல்கள் பாடப்படுகின்றன. இந்து பத்திரிகை போல இடசாரிகள் காழ்ப்புணர்ச்சியால் தவறு செய்ய முடியாது.

தேர்தலில் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து எவரும் பேசுவதைக் காணமுடியவில்லை. இலங்கைத் தமிழர்களுக்கு வாக்குரிமை இருந்தாலே இவர்கள் அவர்களுடைய பிரச்சினையில் அக்கறை காட்டுவார்கள். ஜெயலலிதா ஆட்சியில் இவர்கள் பயங்கரவாதிகளாக சித்திரிக்கப்பட்டனர். அ.தி.மு.க. ஒரு பாமரர் கட்சி, இந்த பிரச்சினையில் அதற்கு அக்கறையில்லை.

ஜெயலலிதா இந்த விவகாரத்தை வேறு மாதிரி திருப்பிவிட்டார்.

கருணாநிதிக்கு இதனை எதிர்கொள்ளும் திராணியில்லை. அனைத்து திராவிட கட்சிகளும் நீர்த்துப் போய்விட்டன. அண்ணாவும், பெரியாரும் பெயருக்குத்தான்.

திராவிட கட்சிகள் நீர்த்துப் போய்விட்டன என்பதற்கு அ.தி.மு.க.விற்கு ஜெயலலிதா தலைவராக உள்ளது சிறந்த உதாரணம். இதைவிட பெரிய அவமானம் என்ன இருக்க முடியும்.

இதனை எதிர்க்க கூடிய துணிவு கலைஞருக்கு இல்லை. பகிரங்கமாக ஈழத் தமிழர்களுக்காக பேசக்கூடிய திராணி அவரிடம் இல்லை.

வைகோவும், திருமாவளவனும் அங்கு போய் விட்டார்கள், தேர்தலின்போதுகூட இலங்கை தமிழர்களின் நிலை குறித்து பேசக்கூடிய சூழலில்லை. இலாப நஷ்டம் பார்க்கிறார்கள்.

இலங்கையின் சமாதான முயற்சியில் இந்தியா விலகி நிற்பது தெனாலி இராமன் பூனை வளர்த்த கதையை நினைவூட்டுகின்றது. அமைதிப்படை அனுபவத்தினால் தலையிட பின்னிற்கிறார்கள். கொள்கை ரீதியாக பின்னிற்கிறார்கள். இந்தியா ஆகக்கூடிய அளவில் தலையிட வேண்டும்.

இலங்கைத் தமிழர்கள் அவர்கள் இந்தியாவை தமிழ் நாட்டை நேசிப்பவர்கள், பாரம்பரிய உறவுடைய மக்கள் தலையிடும்போத

-தினக்குரல்

Now for the biggest irony: None of Tamil Nadu’s big lights are Tamil by origin. If Jayalalithaa is Kannadiga, Karunanidhi, Vaiko and Vijaykanth come from Telugu backgrounds. MGR was a Malayali. Social reformist E.V.R. Naicker, better known as ‘Periyar’, was a Kannadiga from Erode. Yet, they all swear by the Tamil cause. தமிழ் நாட்டு அரசியல் தலைகள்....ஒருதரும்....தமிழர் இல்லையாம்.........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிச்சை வேண்டாம் நாயைப்பிடி!! உந்த இந்தியாக்காறன் வந்தா பிறகு நாங்கள் திரும்பவும் 87ம் ஆண்டு மாதிரி திரும்பியும் ஆனாவில இருந்து துவங்கேலாது. அதைவிட உவன் உப்பிடியே பட்டும் படாமல் இருக்கிறதுதான் நல்லது.

http://www.ibnlive.com/videos/fullbvideo.php?id=9528 தமிழ்வலை பதிவு களில் blog தமிழ் நாட்டு தேர்தலை பற்றி எழுதுபவர்களை பற்றிய cnn-ibn இன் வீடியோ செய்தியை பார்க்கலாம்...

தமிழக சட்டசபைத் தேர்தலில் பற்றிய யாழ்கள் உறுப்பினர்களின் போட்டிகளில் நீங்களும் பங்குபெற்ற இங்கே பார்க்கவும். http://72.22.81.139/forum3/viewtopic.php?t=10740

  • கருத்துக்கள உறவுகள்

234? நான் 131ல் போடி போடுகிறேன் உங்கள் ஆதரவு இருந்தால் எப்படியும் 130 வெற்றி பெறுவேன் :P

பொடி போட்டால் தும்மும் ராசா!! :wink: :P

http://www.eci.gov.in/TAMILMay2006/index_st.htm? தமிழ் நாட்டு தேர்தல் முடிவு விபரங்களை....உடனுக்குடன்...அறிய.

..

தமிழகத்தில் தேர்தல் முடிந்தது65% வாக்கு பதிவு

மே 08, 2006

சென்னை:

அடுத்து ஆட்சி அமைக்கப் போகும் கட்சியை முடிவு செய்து விட்டு தமிழக வாக்காளர்கள் ஓய்ந்துள்ளனர். இன்று நடந்த சட்டசபைத் தேர்தலில் 65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழகத்தில் உள்ள 234 சட்டசபைத் தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.

பல இடங்களில் காலை 6 மணிக்கே வாக்குச் சாவடிகளுக்கு வந்துவிட்ட மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆண்டிப்பட்டி, திமுக தலைவர் கருணாநிதி போட்டியிடும் சேப்பாக்கம், ஸ்டாலின் போட்டியிடும் ஆயிரம் விளக்கு, நடிகர் விஜயகாந்த் போட்டியிடும் விருத்தாச்சலம் ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு மிகவும் விறுவிறுப்பாக இருந்தது.

அனைத்து வாக்குச் சாவடிகளிலும் ஆண்கள், பெண்களுக்கென தனித்தனியாக வரிசைகள் அமைக்கப்பட்டிருந்தன.

ஊனமுற்ற வாக்காளர்களுக்கு வசதியாக சாய்வான தளங்கள் அமைக்கப்பட்டன. மேலும், வெயில் கொடுமையிலிருந்து வாக்காளர்களைக் காப்பதற்காக வாக்குச் சாவடிகளுக்கு முன் பந்தல், ஷாமியானா உள்ளிட்டவையும் போடப்பட்டிருந்தன.

பொதுவாக அமைதியாகவே தேர்தல் நடந்து முடிந்தது. ஆண்டிப்பட்டி தொகுதியில், திமுக வேட்பாளர் சீமானுடன் அதிமுக பூத் ஏஜென்டுகளுடன் தகராறு செய்ததும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை சீமான் சேதப்படுத்தியதும் தான் முக்கியமான அசம்பாவித சம்பவமாகும்.

இத் தேர்தலில் மொத்தம் 4.63 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். மொத்தம் 2,586 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களில் 1,222 பேர் சுயேச்சைகள், 160 பேர் பெண்கள்.

அதிகபட்சமாக ஆயிரம் விளக்குத் தொகுதியில், 26 வேட்பாளர்களும், குறைந்த அளவாக ஒரத்தநாடு தொகுதியில் 4 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

வாக்குப்பதிவையொட்டி மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. 20,000 துணை ராணுவப் படையினர், 1 லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தேர்தல் பணிகளில் 3 லட்சம் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் ஈடுபட்டனர். மொத்தம் 51,543 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

வாக்களிப்போருக்கு இடது கை ஆள்காட்டி நகத்தின் மேல் பகுதியிலிருந்து நீளமாக கோடு போல அழியாத மை வைக்கப்பட்டது.

தமிழகத்திலேயே கோவை, புதுக்கோட்டை, திருச்சி, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில்தான் அதிக அளவில் வாக்குப் பதிவு நடந்துள்ளது. இதேபோல கிராமப்புற வாக்காளர்கள் அதிக அளவில் ஆர்வத்துடன் வாக்குகளை செலுத்தினர்.

வாக்களிக்க வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை கண்டிப்பாக உடன் எடுத்துச் செல்ல வேண்டும். அது இல்லாதவர்கள் மாற்று ஆவணங்களான 13 ஆவணங்களில் ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது.

வாக்குச் சாவடிகளுக்கு 100 மீட்டர் தொலைவிலேயே அரசியல் கட்சியினர் தடுத்து நிறுத்தப்பட்டுவிட்டனர். மேலும் சாவடிகளுக்கு 200 மீட்டர் தொலைவுக்கு அருகே வாகனங்கள் வரவும் தடை விதிக்கப்பட்டது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலிங்கப்பட்டியிலும், இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் செயலாளர் நல்லகண்ணு, தேசியச் செயலாளர் டி.ராஜா ஆகியோர் தி.நகரிலும்,

பாஜக அகில இந்திய துணைத் தலைவர் இல.கணேசன் தி.நகர் இந்தி பிரசார சபாவிலும், மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் ஆழ்வார்ப்பேட்டையிலும், காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி மயிலாப்பூரிலும் வாக்களித்தனர்.

பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிகளில் ரகசிய கேமராக்கள் மறைவாக வைக்கப்பட்டு வாக்குப் பதிவு கண்காணிக்கப்பட்டது.

சென்னையில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் 15,000 போலீசார் தவிர மத்தியப் படையினரும், 165 நடமாடும் காவல் படைகளும் ஈடுபடுத்தப்பட்டன.

உதவி கமிஷ்னர்கள் தலைமையிலான ஸ்டிரைகிங் போர்ஸ், இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான ஸ்டிரைகிங் போர்ஸ், யெல்லோ பிரிகேட், புளு பிரிகேட் என பல்வேறு பிரிவு அதிரடிப் படைகளும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டன.

தமிழகத்தின் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் ஆயுதம் தாங்கிய போலீசார் தவிர ஆயுதம் தாங்கிய மத்தியப் படை வீரர்களும் நிறுத்தப்பட்டிருந்தனர்.

பாண்டிச்சேரியிலும்:

புதுவையிலும் வாக்குப் பதிவு தொடங்கி நடந்து வருகிறது. மாநிலம் முழுவதும் 27 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப் பதிவு நடந்தது.

அங்கு 81 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தெரிகிறது.

11ம் தேதி வாக்கு எண்ணிக்கை:

தமிழக, பாண்டிச்சேரி தேர்தலுக்கான வாக்குப் பதிவு வரும் 11ம் தேதி நடக்கிறது. இன்று வாக்குப் பதிவு முடிந்தவுடன் மின்னணு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.

இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் அதிகபட்ச பாதுகாப்பு கொடுக்கப்படவுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீஸார் இரவு பகலாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

அங்கு 11ம் தேதி காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடக்கும். பிற்பகலுக்குள்ளேயே எல்லா முடிவுகள் வெளியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி தற்ஸ்தமிழ்

நீங்களும் தமிழக தேர்தல் கருத்துக் கணிப்பை கீழேயுள்ள இணைப்பை அழுத்தி உடன் வழங்குங்கள். இன்று தான் இறுதி நாள்.

:arrow: http://72.22.81.139/forum3/viewtopic.php?t...r=asc&&start=30

திமுக கூட்டணி வெல்லும்-ஸ்டார் எக்சிட் போல்

மே 08, 2006

சென்னை:

சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு 175 தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என ஸ்டார் நியூஸ் தொலைக்காட்சி நடத்திய 'எக்ஸிட் போல்' தெரிவிக்கிறது.

தமிழக சட்டசபையின் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடைந்தது.

ஓட்டு போட்டு விட்டு வெளியே வந்த வாக்காளர்களிடம் ஸ்டார் நியூஸ் தொலைக்காட்சி நடத்திய எக்ஸிட் போல் முடிவுகளை அந்த தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

அதன்படி திமுக அணிக்கு 48.5 சதவீத வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். அதிமுக அணிக்கு 37.5 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.

இதன்படி திமுக அணிக்கு 175 தொகுதிகள் வரை கிடைக்கும் என்றும் திமுகவுக்கு தனிப் பெரும்பான்மை பலம் (118 இடங்கள் வரை) கிடைக்கும் என்றும் ஸ்டார் நியூஸ் தொலைக்காட்சி தெரிவிக்கிறது.

நன்றி தற்ஸ்தமிழ்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்நாட்டில் `இலவசங்களின் பிரளயம்'

`ஆனை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே' என்பது பழமொழி. `தேர்தல் வரும் பின்னே, இலவசங்கள் முன்னே' என்பது நம் காலப் புதுமொழி.

வணிக உலகம் கையாண்ட ஒரு தந்திர உத்தி அரசியல்வாதிகளின் வகையில் அட்சய பாத்திரமாகிவிட்டது. சரியாகச் சொன்னால் அட்சய பாத்திரத்துக்குப் பசி தணிப்பது தவிர வேறு எதிர்பார்ப்பு இல்லை. ஆனால், தேர்தல் வாக்குறுதிகளின் பின் வாக்கு அறுவடை அமோகமாகக் கிடைக்கும் என்ற பேராசை ததும்பி நிற்கிறது.

உலகமயமாதலில் அடுத்த கட்டத்தில் இலவசங்கள் அறவே அழித்தொழிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனைகள் கடுமையாகிக் கொண்டிருக்கும்போது, இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் மயிலிராவணன் தலைபோல் மறுபடியும் மறுபடியும் அவை முளைத்துத் தழைத்துத் தேர்தல் தோரணங்களாகக் கெக்கலி கொட்டுகின்றன. குறுகிய கால, நெடுங்கால மக்கள் நலன் திட்டங்களை வாரிக் குப்பையில் போட்டுவிட்டு முன்வரிசையில் முகம் காட்டி நகைக்கின்றன இலவசங்கள்.

ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை, சிறிதளவு நிலம், பஞ்சகாலத்திலங் பண உதவி, இயற்கைப் பேரழிவு நேர்ந்தால் தக்க நிவாரணம், விளைச்சல், தவறும்போது கடன்கள் ரத்து என்பவைதான் பொதுவாக அரசு வழங்கும் இலவச உதவிகளாகப் பல ஆண்டுகள் முன் கருதப்பட்டன. ஒரு நல்லரசின் பொறுப்புகள் அவை என்பதில் ஐயமில்லை.

வேளாண்துறையின் சிக்கல்களுக்கு உதவி புரியும் வகையில் நீர் வளம் பெருக்க, வீரிய விதைகளை அறிமுகம் செய்ய, கட்டுபடியாகும் விலை தர, புதிய கருவிகளைக் குறைந்த விலைக்கு வழங்க அரசு முன் வருவது இயற்கை. தொழில்துறை செழிக்க மின் உற்பத்தி பெருக்க, ஏற்றுமதிக்கு உறுதுணை புரிய, தடையற்ற நிர்வாக உதவி தர, வல்லுநர்களைக் கொண்டு புதிய முயற்சிகளை ஊக்குவிக்க அரசு கைகொடுப்பது அவசியம். கல்வி, வணிகம், கைத்தொழில்கள், சிறுதொழில்கள் ஆகியவை வளம்பெறவும், மருத்துவம் செழிக்கவும் அரசு திட்டங்கள் வகுப்பது கடமை.

தன்னம்பிக்கை மிக்க இளைஞர்கள் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்புக்களைப் பெற ஆவன செய்வதும் அரசின் பொறுப்பு. ஆனால், ஓடி ஓடி இலவசங்களைப் பெறும் அடிமைகளாக மக்களை மாற்றுவது என்ன வகை நியாயம்?

பேருந்து நிலையத்தில் போலித் துணி வியாபாரம் செய்பவர்கள் முதலில் ஏலம் கோருபவருக்கு இலவச சீப்புக் கொடுப்பார்கள். அவையெல்லாம் வியாபார தந்திரங்கள். அரசியல் அப்படி வியாபாரம் ஆவது வளர்ச்சியின் அடையாளம் அல்லவே அல்ல.

மீனைச் சாப்பிடக் கொடுப்பதை விடத் தூண்டிலைக் கொடுத்து மீன்பிடிக்கக் கற்றுக்கொடுப்பது விவேகம் என்று சொல்லுவார்கள். அரசியல், பொருளாதார, சமூகத் தளங்களில் உழைப்பை முன்வைத்துச் செழிப்பை உருவாக்குவதே வளம் பெருக்கும் வாழ்வியல்.

தமிழகத்தைப் பொறுத்தவரை திராவிட இயக்கம் ஆட்சியைக் கைப்பற்ற முன்வைத்த சாகசமான வாக்குறுதி; `ஒரு படி நிச்சயம் - மூன்று படி லட்சியம்' அரசியல் அரிசியியல் ஆனதின் தொடக்கம் அது.

அரிசிப் பஞ்சம் காமராசர் ஆட்சிக்குப் பின் உருவாயிற்று. அப்போது இந்த வாக்குறதி வாக்குகளை உறுதியாக்கிற்று. அதன் பிறகு அந்த வாக்குதி நின்றதுபோல் நின்று நெடுந்தூரம் சென்று மறைந்துவிட்டது. அதைக் குறித்து மறந்தே போனோம். அதற்குக் காரணம் அண்ணா என்ற உயர்ந்த மனிதர் ஆட்சிப் பொறப்பில் இருந்தார் என்பதுதான். வாக்குறுதி தந்தவரின் நல்லெண்ணம் தோற்றதாய்ச் சமாதானம் பூண்டோம்.

ஆனால், இன்றைய சூழ்நிலை வேறு, அரிசிப் பஞ்சங்களின் காலம் கடந்து வேளாண்மையில் தன்னிறைவு பெற்றுவிட்டதற்குக் காரணமான பசுமைப் புரட்சியின் அடுத்த கட்டம் இது மக்களின் பெரும்பான்மையோருக்குப் பங்கீட்டு அரிசி கட்டாயத் தேவையும் அல்ல.

இந்த நிலையில் இலவசங்களின் பட்டியலில் முதலிடம் பெறுகிறது அரிசி. மானியங்கள் மூலம் இலவச மின்சாரம் அளிப்பதைப்போல, பங்கீட்டு அரிசியும் பெருமளவு மானியம் தந்து குறைந்த விலைக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இலவசங்களின் பிரளயத்தை இந்தத் தேர்தலில் தொடக்கிவைத்த பெருமை கலையுலகிலிருந்து அரசியலைத் திடீரென்று தாக்கிய ஒரு கட்சியையே சாரும்.

பதினைந்து கிலோ அரிசிப் பங்கீட்டுக்குக் கடைக்கே போகாமல் வீட்டுக்கே இலவசமாக வந்து கதவைத் தட்டும் என்ற அறிவிப்பு மேகமில்லாத வானத்திலிருந்து விழுந்த கிடியாக மற்ற கட்சிகளைத் தாக்கியது. அத்துடன் வேறு பல இலவசங்களும் கூட்டணி அமைத்துக் கொண்டதால் அந்தக் கட்சி `கூட்டு ஒருவரையும் வேண்டாக் கொற்றவ'னாகத் தோற்றம் தந்தது.

அந்த இலவச அலையின் ஓசை அடங்கியபோது, ஆளுங்கட்சி மிக நிதானமான, ஏற்கெனவே வகுக்கப்பட்ட மக்கள் நலன் திட்டங்கள், புதிய கொள்கை அறிவிப்புகள், வேலை வாய்ப்புகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. சாதனைகளைச் சொல்லியும், சாதிக்க உள்ளவற்றை விளக்கியும் வாக்குக் கேட்ட அறிக்கை பாராட்டுக்குரியதாகவே இருந்தது.

ஆனால், முற்போக்குக் கூட்டணியின் முதன்மையான எதிர்க்கட்சி கொதிக்கக் கொதிக்க வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் புத்துயிர் கொண்டன.

இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, இரண்டு ஏக்கர் நிலம் என இலவசங்கள் அணி வகுந்தன.

முடியுமா என்ற வினாவுக்கு முடியாதது அந்தக் கட்சியின் அகராதியில் இல்லாதது என்ற கம்பீரமான அறிவிப்பு மெய்க்காப்பாளனாக இலவசத்துடன் வலம் வரத் தொடங்கியது.

இதனிடையே கருத்துக் கணிப்புகள் வேறு கலந்துகொள்ள இலவசங்களின் அறிவிப்பில் அழுத்தமும், ஆவேசமும் கூடலாயிற்று. தேர்தல் களம். இலக்குகளை விட்டுவிட்டு இலவசங்கள் பற்றி பரபரப்பில் மூழ்கியது.

மக்கள் மனதில் மாற்றங்கள் விளைந்ததாகத் தெரியவில்லை. ஆயினும், இலவசங்களின் ஓட்டப்பந்தயத்தில் இப்போது ஆளுங்கட்சியும், கச்சை கட்டிக்கொண்டு இறங்கிவிட்டது. எதிரிதான் போர் முறையை நிர்ணயிக்கின்றான் என்று அரசியல் வித்தகர்கள் கூறுவது வழக்கம். எதிர்க்கட்சிகளின் இலவசம் போர்முறை ஆளுங்கட்சியையும் அதே ஆயுதத்தோடு களமிறக்கி இருப்பது வருத்தம் தருகிறது.

மாதம் தோறும் பங்கீட்டு அரிசியில் பத்து கிலோ இலவசமாக வழங்கப்படும் என ஆளுங்கட்சி மிகத் தெளிவாக அறிவித்திருக்கிறது. ஒரு நாடு அணுவாயுத வல்லரசாக மாறினால் இன்னொரு நாடு இன்னொரு அணு ஆயுதப் பேரரசாக மாற வரிந்து கட்டுகிறது. இதன் விளைவை உலக அரங்கில் பார்க்கிறோம்.

இலவசங்களின் அறிவிப்புகளும் அந்த அபாயகரமான விளையாட்டில் இறங்கி விட்டன. வார்த்தைக்கு வார்த்தை, பேச்சுக்குப் பேச்சு என்ற எல்லை கடந்து ஏட்டிக்குப் போட்டியாக இலவச அறிவிப்புகள் வானமே எல்லையாக வளர்ந்து கொண்டிருக்கின்றன.

சாதனைகளைச் சொல்லி வாக்குக் கேட்கத் தொடங்கிய தேர்தல் பிரசாரத்தின் நல்ல தொடக்கம் எவ்வாறோ திசைமாறிப் போயிருக்கிறது.

இலவசங்களுக்கு முடிவு ஏது? வலது காலணி வாங்கினால் இடது காலணி இலவசம் என்று தொடங்கி, கால்கள் இருந்தால் காலணி இலவசம் என்று வளர்ந்து, காலணிகளோடு கால் உறையும் இலவசம் என்று தொடர்ந்தால் முடிவு ஏது?

இலவசம் இன்றைய பரவசமாக இருக்கலாம். ஆனால், நாளைய அரசாங்கத்தின் தலைவலி அது. இந்த விஷ வட்டம் பொருளாதார நட்டத்தில் போய் முடியலாம்.

உடனடியாக இரண்டு விளைவுகளைப் புதிய அரசு எதிர்பார்க்கலாம். மானியங்களாலும், இலவசங்களாலும் இன்றியமையாத நலன் திட்டங்களுக்கு உரிய நிதி குறைந்துபோகும் என்பது ஒன்று. அதை ஈடுசெய்ய, கடுமையாக வரிகளை விதிக்க நேரிடும் என்பதும் மற்றொன்று.

அனுபவம் மிக்க அரசியல் தலைவர்கள் இதனை அறியாதவர்கள் அல்ல. பொறி பறக்கும் தேர்தல் களம் அறிவைப் பகடையாக்கிப் பழிதீர்க்க முனைகிறது.

-தினமணி.

  • கருத்துக்கள உறவுகள்

எனது கணிப்பின் படி, திமுக வெற்றி பெற்றால் ஸ்ராலின் தான் முதலமைச்சராக வரக்கூடும் என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன். கொஞ்சக்காலம் கலைஜர் இருந்திட்டு பிறகு ஸ்ராலினுக்கு வழங்குவார் என்று. மாறனின் பிள்ளைகளுக்கும் பதவி ஆசை என்று எதிரணியினர் பிரச்சாரம் செய்தார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அதனால் தான் சொல்கின்றேன். வெற்றி பெற்றவுடன் ஸ்ராலினை போட்டால் எதிர்ப்பு இருக்காது. காலம் சென்ற பின்பு பதவியில் அமர்த்த வெற்றியின் வீரியம் குறைவால் எதிர்ப்புக்கள் கட்சியில் வரலாம்.

இப்போதே நியமித்தால் ஸ்ராலின் ஆட்சியை நடத்தத் தகுதியுள்ளவராக மக்களிடம் அடையாளப்படுத்தவும் முடியும்.

கலைஞர் முதல்வராகத்தான் தமிழக மக்கள் ஓட்டு போட்டார்கள்.... மக்களின் நம்பிக்கையைக் காக்க கலைஞரே முதல்வர் பதவியில் அமர்வது தான் அழகு.....

யார் வந்தாலும் தமிழீழம் அமைய உதவி செய்தால் போதும். நாங்கள் போராடுவோம். வெல்லும்போது மத்திய அரசை வெருட்டி தமிழீழத்தை அங்கீகரிக்க உதவி செய்தால் போதும். எனென்றால் இந்த நாலுவருட ஆட்சிக்காலத்துக்குள் தமிழீழ மக்கள் ஒரு முடிவு எடுத்துவிடுவார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.