Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கச்சத்தீவில் இலங்கை அரசு நிரந்தர கடற்படை தளம் அமைத்துவிட்டதாக இலங்கை ஊடகங்கள் தகவல்

Featured Replies

கச்சத்தீவில் இலங்கை அரசு நிரந்தர கடற்படை தளம் அமைத்துவிட்டதாக இலங்கை ஊடகங்கள் தகவல்

சனிக்கிழமை, மார்ச் 17, 2012, 17:20[iST]

17-kachatheevu22-300.jpg

கச்சத்தீவு: தமிழகத்துக்குச் சொந்தமான கச்சத்தீவில் இலங்கை அரசு நிரந்தர கடற்படைத் தளத்தை அமைத்துள்ளதாக இலங்கையிலிருந்து வெளியாகும் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு வந்த 2009-ம் ஆண்டு முதலே கச்சத்தீவில் நிரந்தர கடற்படை தளம் அமைக்க இலங்கை அரசு முயற்சித்து வந்தது. ஆனால் தமிழகத்தில் இதற்குத் தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில் கச்சத்தீவின் மேற்குப் பகுதியில் மேட்டு நிலப்பரப்பில் நிரந்தர கடற்படை தளத்தை இலங்கை அரசு அமைத்துள்ளதாக வீரகேசரி நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

இத்தளமானது சீன அரசால் வழங்கப்பட்ட டெண்ட் கொட்டகைகளால் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் கச்சத்தீவு கடற்பரப்பில் நிரந்தரமாக 2 கடற்படைக் கப்பல்களை நிறுத்தியும் வைத்துள்ளது இலங்கை அரசு.

தமிழகத்துக்குச் சொந்தமான கச்சத்தீவை மீட்டே தீரவேண்டும் என்று தமிழகத்தில் ஒருமித்த குரல் எழும்பி வரும் நிலையில் நிரந்தர கடற்படை தளத்தை இலங்கை அரசு அமைத்துள்ளது மீனவர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

http://tamil.oneindia.in/news/2012/03/17/srilanka-sl-naval-base-katchatheevu-aid0216.html

இனி நாளாந்தம் தமிழ்க்கொலை நிகழும்.

டெல்லியோ 'நாம் கடும்போக்கை கைக்கொண்டால் சிங்களம் சீனா பக்கம் போய்விடும்' என்ற வழமையான பூச்சாண்டியை கூறிவிடும். தமிழக தலைவர்களும் கடிதம் மேல் மேல் கடிதம் போட்டுக்கொண்டு இருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே ராமேஸ்வரத்திலும் சிறிலங்கா கடற்படை முகாம் அமையுங்கோ...

சீனாக்காரனுக்கு கறுப்புப் பூசி விட்டிருக்கிறார்கள்.

கச்சதீவில் நிரந்தர கடற்படை தளத்தை அமைத்துள்ள இலங்கை!- கொழும்பு ஊடகம் தகவல்

katchativu_navycamp.jpgதமிழகத்துக்குச் சொந்தமான கச்சதீவில் இலங்கை அரசு நிரந்தர கடற்படைத் தளத்தை அமைத்துள்ளதாக இலங்கையிலிருந்து வெளியாகும் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு வந்த 2009-ம் ஆண்டு முதலே கச்சதீவில் நிரந்தர கடற்படை தளம் அமைக்க இலங்கை அரசு முயற்சித்து வந்தது. ஆனால் தமிழகத்தில் இதற்குத் தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில் கச்சதீவின் மேற்குப் பகுதியில் மேட்டு நிலப்பரப்பில் நிரந்தர கடற்படை தளத்தை இலங்கை அரசு அமைத்துள்ளதாக கொழும்பிலுள்ள தமிழ் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இத்தளமானது சீன அரசால் வழங்கப்பட்ட தறப்பாள் கொட்டகைகளால் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் கச்சதீவு கடற்பரப்பில் நிரந்தரமாக 2 கடற்படைக் கப்பல்களை நிறுத்தியும் வைத்துள்ளது இலங்கை அரசு.

தமிழகத்துக்குச் சொந்தமான கச்சதீவை மீட்டே தீரவேண்டும் என்று தமிழகத்தில் ஒருமித்த குரல் எழும்பி வரும் நிலையில் நிரந்தர கடற்படை தளத்தை இலங்கை அரசு அமைத்துள்ளது மீனவர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

SL_navy_Kachchatheevu_1.jpg

இரண்டாம் இணைப்பு

கச்சதீவில் நிரந்தரமாக கடற்படை முகாம் அமைப்பு

வடக்கு கடற்பரப்பு மீதான தனது கண்காணிப்பை கடற்படை முடுக்கியுள்ள நிலையில் கச்சதீவிலும் நிரந்தர கடற்படைத் தளங்களை அரசு அமைத்துக் கொண்டுள்ளது.

ஏற்கனவே கிளிநொச்சி மாவட்டத்திற்கான நிரந்தர பாரிய கடற்படை தளம் கடந்த வாரம் நாச்சிக்குடாவில் திறந்து வைக்கப்பட்டிருந்தது.

இதன் மூலம் மன்னார் முதல் காங்கேசன்துறை வரையான கடற்பரப்பு முற்று முழுதாக இலங்கை கடற்படையின் பூரண கண்காணிப்பினுள் கொண்டு வரப்பட்டுள்ளது.

கச்சதீவின் மேற்குப் பகுதியிலுள்ள மேட்டு நிலப்பரப்பினை உள்ளடக்கி இந் நிரந்தர கடற்படை தளம் அமைக்கப்பட்டுள்ளது.

முறிகண்டிப் பகுதி வழியில் படையினருக்கான குடியிருப்புக்களை அமைக்க சீன அரசு வழங்கிய பொருத்துக்களை கொண்டே இத்தளமும் நிறுவப்பட்டுள்ளது.

அத்துடன் இடம்பெயர்ந்த மக்களுக்கென வழங்கப்பட்ட சீன அரசின் "டென்ற்' கொட்டகைகளும் கடற்படை தள அமைப்பிற்கு பயன்படுத்தப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்திலிருந்து ஊடுருவல்களைத் தடுக்கவே இக்கடற்பரப்பின் கண்காணிப்பை கடற்படை முடுக்கி விட்டுள்ளது.

அதிலும் கச்சதீவில் நிரந்தர கடற்படைத் தளமொன்று அமைக்கப்பட்டுள்ளதுடன் கடற்படைக் கப்பல்கள் இரண்டு இக்கடற்பரப்பில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

SL_navy_Kachchatheevu_2.jpg

http://www.tamilwin.com/show-RUmqyDSbPdjoy.html

  • கருத்துக்கள உறவுகள்

அதே சமயம் இலங்கை இந்தியாவை தமக்கு சார்பாக ஜெனிவாவில் வாக்களிக்கும் படி வேண்டுகிறது.இது இலங்கை எனும் வல்லரசு சொல்வதை இந்தியா கேட்க வேண்டும் என்பது நிரூபணம் ஆகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனி நாளாந்தம் தமிழ்க்கொலை நிகழும்.

டெல்லியோ 'நாம் கடும்போக்கை கைக்கொண்டால் சிங்களம் சீனா பக்கம் போய்விடும்' என்ற வழமையான பூச்சாண்டியை கூறிவிடும். தமிழக தலைவர்களும் கடிதம் மேல் மேல் கடிதம் போட்டுக்கொண்டு இருப்பார்கள்.

டவல் தலையன் பதவிக்கு வந்தால் இந்த நாடு உருப்படாது என்று சொந்த மகளே அமெரிக்கா பக்கம் சாய்ந்துவிட்டாள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.