Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மன்மோகன் சிங்கின் அறிவிப்புக்கு திமுக வரவேற்பு, அதிமுக எதிர்ப்பு

Featured Replies

மன்மோகன் சிங்கின் அறிவிப்புக்கு திமுக வரவேற்பு, உண்ணாவிரதம் ரத்து: கருணாநிதி

இலங்கை தொடர்பான அமெரிக்க பிரேரணைக்கு இந்தியா ஆதரவளிக்க உத்தேசித்துள்ளதாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளதை திமுக தலைவர் கருணாநிதி வரவேற்றுள்ளதுடன் எதிர்வரும் 22 ஆம் திகதி தான்மேற்கொள்ளவிருந்த உண்ணாவிரதத்தையும் கைவிடத் தீர்மானித்துள்ளார்.

நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த திமுக உயர்மட்டக் கூட்டத்தையும் மன்மோகன் சிங்கின் அறிவிப்பையடுத்து கருணாநிதி ரத்துச்செய்துள்ளார்.

அதேவேளை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்திற்கான தனது ஆதரவை விலக்கிக்கொள்ளப் போவதாக தான்ஒருபோதும் எச்சரிக்கவில்லை எனவும் கருணாநிதி இன்று கூறினார்.

அமெரிக்கா தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்காவிட்டால் ஐ.மு.கூட்டணி அரசாங்தக்திற்கு தனித்தனி விவகாரங்களின் அடிப்படையில் ஆதரவளிப்பது குறித்து தனது கட்சி ஆராய்ந்ததாக அவர் கூறினார்.

http://www.tamilmirr...9-14-02-27.html

Edited by akootha

  • தொடங்கியவர்

பிரதமரின் அறிவிப்பு பயனற்ற மழுப்பல்: ஜெ.

இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தில் அமெரிக்காவால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்துக்கு ஆதரவளித்து வாக்களிக்கும் மனப்பாங்கில் இந்தியா உள்ளது என இந்தியப் பிரதமர் செய்துள்ள அறிவிப்பை விமர்சித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்தியப் பிரதமரின் அறிவிப்பில் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் பற்றி எதுவுமே குறிப்பிடப்படவில்லை, அவற்றுக்காக இலங்கை அரசை இந்தியா கண்டிக்கவும் இல்லை என ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் அறிவிப்பு "மழுப்பலான, பயனில்லாத பதில்" என்று ஜெயலலிதா விமர்சித்துள்ளார்.

இலங்கை தமிழர் விவகாரத்தில் திமுக மத்திய அரசுக்கு அழுத்தம் தருவதாக கருணாநிதி அரங்கேற்றும் நாடகத்துக்கு துணைபோகும் வகையில் பிரதமர் இந்த தெளிவற்ற அறிவிப்பைச் செய்துள்ளார் என ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

http://www.bbc.co.uk/tamil/india/2012/03/120319_jayaonpmstand.shtml

Jayalalithaa slams PM's statement on Sri Lankan war crimes

http://www.dnaindia.com/india/report_jayalalithaa-slams-pm-s-statement-on-sri-lankan-war-crimes_1664628

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்மா கூறியது உண்மை.  கடந்த எட்டு வருடமா சோனியாவிற்கு வாலாட்டிய விசுவாசம். 

  • தொடங்கியவர்

இலங்கை விவகாரத்தில் பொருத்தமான முடிவு காணப்படும்: கருணாநிதியிடம் சோனியா தெரிவிப்பு

இலங்கை விவகாரத்தில் விரைவில் பொருத்தமான முடிவொன்று காணப்படும் என திமுக தலைவர் கருணாநிதிக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

மு.கருணாநிதி மார்ச் 9 ஆம் திகதி எழுதிய கடிதத்திற்கு பதிலளிக்கும் முகமாக மார்ச் 15 ஆம் திகதியிட்டு சோனியா காந்தி எழுதிய கடிதத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இக்கடிதத்தின் பிரதிகளை ஊடகங்களுக்கு திமுக விநியோகித்தள்ளது.

இம்முக்கிய விவகாரங்கள் குறித்து அரசாங்கம் அறிந்துள்ளதாகவும் தீர்வொன்றை காண்பதற்கான முயற்சியில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டுள்ளதாகவும் எனக்கு தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக பிரதமர் உங்களுக்கு எழுதுவார் என நம்புகிறேன். விரைவில் பொருத்தமான தீர்வு காணப்படும் என நம்புகிறேன் என சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான அமெரிக்காவின் பிரேணைக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கக்கூடும் என இந்திய பிரதமர் மன்மோகன் சிங் நேற்று இந்திய நாடாளுமன்றத்தில் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/37949-2012-03-20-09-34-31.html

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தொடர்பான அமெரிக்க பிரேரணைக்கு இந்தியா ஆதரவளிக்க உத்தேசித்துள்ளதாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளதை திமுக தலைவர் கருணாநிதி வரவேற்றுள்ளதுடன் எதிர்வரும் 22 ஆம் திகதி தான்மேற்கொள்ளவிருந்த உண்ணாவிரதத்தையும் கைவிடத் தீர்மானித்துள்ளார்.

எண்டா ...... என்னுமா நீ திருந்தல்ல ........ இதிலுமா உன் அரசியல், கலைஞர் என்றாலே தமிழ் சமூகம் வெறுக்கும் அளவுக்கு செய்திட்டிங்கள் போதும் சாமி தமிழரை வாழவிடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எண்டா ...... என்னுமா நீ திருந்தல்ல ........ இதிலுமா உன் அரசியல், கலைஞர் என்றாலே தமிழ் சமூகம் வெறுக்கும் அளவுக்கு செய்திட்டிங்கள் போதும் சாமி தமிழரை வாழவிடுங்கள்.

:D

  • தொடங்கியவர்

ஜெயலலிதாவின் அறிக்கைக்கு கருணாநிதி பதிலடி

ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கெதிரான அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக்கூடும் என்ற பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருந்தது திமுக தலைவர் கருணாநிதியின் நாடகத்திற்கு துணை போகும் செயல் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்ததை கருணாநிதி பதிலுக்கு விமர்சித்துள்ளார்.

பிரதமரின் பேச்சின் போது தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் மேசையைத் தட்டி வரவேற்ற காட்சி, தொலைக்காட்சியில் காட்டப்பட்டுள்ளதையும் கருணாநிதி தானது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

திங்கட் கிழமையன்று பிரதமரின் அறிவிப்பிற்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய கருணாநதி, திமுக நடத்துவதாக இருந்த மாநிலம் தழுவிய உண்ணாவிரத ஆர்ப்பாட்டம் கைவிடப்படுவதாகவும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கவென கூடவிருந்த கட்சியின் உயர்நிலை செயல்திட்டக்குழுக் கூட்டமும் ரத்து செய்யப்படுவதாகவும் கூறிய கருணாநிதி, இந்தியா அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரிக்க முன்வராவிட்டால் மத்திய அமைச்சரவையிலிருந்தே வெளியேறி, கொள்கை அடிப்படையில் மத்திய அரசுக்கு ஆதரவளிக்கலாம் என்ற வகையில் நடவடிக்கைகளை உத்தேசித்திருந்ததாகவும் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் பிரதமரின் அறிவிப்பு திமுகவின் போராட்டங்களுக்குக் கிடைத்த வெற்றி எனவும் கூறிக்கொண்டிருந்தார்.

மழுப்பல்

முதல்வர் ஜெயலலிதாவோ, பிரதமரின் உரை மழுப்பலாகவே இருக்கிறது, போர்க்குற்றங்கள் தொடர்பாக இலங்கையை பன்னாட்டு விசாரணைக்குட்படுத்த வேண்டும் என்ற அக்கறை அவரிடம் இல்லை, இருந்தும் ஆர்ப்பாட்டங்களைக் கைவிடுவதாக கருணாநிதி அறிவித்திருப்பது 2009ல் அவர் நடத்திய மூன்று மணிநேர உண்ணாவிரத நாடகம்போல் தான் எனக்கூறியிருந்தார்.

போர் நிறுத்தம் கோரி உண்ணாவிரதம் அறிவித்த கருணாநிதி, கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்படமாட்டாது என்ற அறிவிப்பை சாக்காக வைத்துக்கொண்டு தனது எதிர்ப்பைக் கைவிட்டார் எனக்கூறியிருந்தார் ஜெயலலிதா.

அதற்கு மறுமொழியாக கருணாநிதி செவ்வாய்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், தான் அப்போது உண்ணாவிரதம் இருந்தது உண்மையான அக்கறையினால்தான் என்று கூறியிருக்கிறார்.

மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும், பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களும், சோனியா காந்தி அவர்களும் தலையிட்டு என்னிடம் இலங்கையிலே உள்ள நிலை குறித்து விளக்கி தன் உடல் நிலை கருதி உண்ணாவிரதத்தை நிறுத்திக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர் என நினைவு கூர்ந்திருக்கிறார்.

மக்கள் சாவது சகஜம்

வயது முதிர்ந்த நிலையில் தனது கோரிக்கையினை வலியுறுத்த ஏதோ சில மணி நேரங்களாவது தான் உண்ணாவிரதம் இருந்ததாகவும், அதைக்கூட இலங்கைத் தமிழர்களுக்காக ஜெயலலிதா செய்ய முன்வரவில்லை என்றும், “போர் என்றால் அப்பாவிப் பொது மக்கள் கொல்லப்படுவது சகஜம்தான் என்று ஒரு கட்டத்தில் கூறியது அவரே என்றும் கருணாநிதி கூறியிருக்கிறார்.

தவிரவும் கூடங்குளம் அணுமின் நிலையப் பணிகளை நிறுத்திவைக்குமாறு மத்திய அரசை கேட்டுக் கொண்டு தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதா, போராட்டக்காரர்களுக்கு ஊக்கமும் கொடுத்துவிட்டு இப்போது அவர்களை கைது செய்து வருவதற்குப் பெயர் தான் நாடகம் என்றும் கருணாநிதி குறை கூறியிருக்கிறார்.

http://www.bbc.co.uk...lastsjaya.shtml

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக கட்சிகளின் எந்த நாடகங்களும் இனி தமிழகத்தில் எடுபடாது.

அங்கு மக்கள் மயப்படுத்தப்பட்ட ஈழத்தமிழர் பிரச்சினையில் இனி எவரும் இலாபம் பெறமுடியாது. மக்களின் விருப்புகளுக்கு ஏற்ப இனி கட்சிகள் நடக்கவேண்டிய கட்டாயத்துக்குள் வந்தாச்சு. இதுவே நிலையானது. இதுவே எமக்கு வேண்டும். இதுவே பெரும் வெற்றி எமக்கு. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

'உண்ணாவிரத நாடகம்' : ஜெ. விமர்சனத்துக்கு கருணாநிதி பதில்

சென்னை: இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக 'உண்ணாவிரத நாடகம்' மேற்கொண்டவர் என்று தன் மீது விமர்சனம் செய்துள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு திமுக தலைவர் கருணாநிதி விரிவான பதில் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "அதிமுக தலைவி ஜெயலலிதா என்னதான் முதல்வர் பதவியிலே அமர்ந்திருந்தாலும், அவரது நினைவெல்லாம் நிறைந்திருப்பது திமுக மீதுதான்.

அது சங்கரன்கோவில் இடைத்தேர்தலாக இருந்தாலும், இலங்கைத் தமிழர் பிரச்னையாக இருந்தாலும் தி.மு.க. வையும், என்னையும் கடுமையாகத் தாக்கி, அதை "நாடகம்" என்று வர்ணிக்காமல் அவரால் இருக்க முடியாது.

அவருடைய அறிக்கைகளை அலட்சியப்படுத்தி விட்டு நாம் நமது பாதையில் செல்லலாம் என்று பார்த்தாலும், வலிய வந்து வம்பு வளர்ப்பதைப் போல நம் மீதே தொடர்ந்து பாய்ந்து சீண்டினால் நாம் என்ன தான் செய்வது? இலங்கை ராணுவத்தால் நமது இலங்கைத் தமிழர்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட போது - இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக - மத்திய அரசு அதிலே தாமதமின்றித் தலையிட்டு போர் நிறுத்தம் செய்திட வேண்டுமென்று கேட்டு நான் விடியற்காலை 5.45 மணியளவில் - கட்சிக்காரர்களோ, உதவியாளர்களோ கூட உடன் வராத நிலையில் - தனியாக அண்ணா நினைவிடம் சென்று உண்ணாவிரதம் தொடங்கியதை பின்னர் அங்கே வந்த செய்தியாளர்கள் எல்லாம் அறிவார்கள்.

நான் அங்கே உண்ணாவிரதம் இருக்கும் செய்தி வெளியே தெரிய ஆரம்பித்த பிறகுதான் அதிகாரிகளும், கழகத் தோழர்களும் அங்கே வந்தார்கள். அதன் பின்னர் தான் நான் உண்ணா விரதம் இருக்கும் செய்தி டெல்லி வரை சென்று, மத்திய அமைச்சர் ப. சிதம்பரமும், பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களும், சோனியா காந்தி அவர்களும் தலையிட்டு என்னிடம் இலங்கையிலே உள்ள நிலை குறித்து விளக்கி என் உடல் நிலை கருதி உண்ணாவிரதத்தை நிறுத்திக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர்.

அதன்பேரில் – இன்னும் சொல்லப் போனால், அப்போது வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி 27-4-2009 அன்று நான் உண்ணாவிரதம் இருந்த போது விடுத்த அறிக்கையில், "போர் நடவடிக்கைகள் முற்றுப்பெற்று விட்டதென்றும், கனரகத் துப்பாக்கிகள், போர் விமானங்கள், வான்வழித் தாக்கிடும் போர் ஆயுதங்கள் போன்றவை குடிமக்களை பெருமளவிற்கு கொல்லும் என்பதால் இலங்கை பாதுகாப்புப் படைகள், இவற்றைப் பயன்படுத்தக் கூடாது என்று ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இலங்கை அரசு அறிவித்துள்ளது.

குடிமக்களை மீட்பதற்கும் அவர்களைக் காப்பாற்றுவதற்கும் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதில் இலங்கைப் பாதுகாப்பு படைகள் இனி கவனம் செலுத்தும். போர் முனையில் சிக்கிக் கொண்டுள்ள தமிழ்க் குடிமக்கள் மற்றும் இடம் பெயர்ந்தோர் ஆகியோரின் பாதுகாப்பு பற்றிய பிரச்னைகளே முதன்மையானவையாகும்.

அவற்றைத் தீர்ப்பதற்கு இலங்கை அரசு இன்று செய்துள்ள அறிவிப்பு முக்கியமான முதல் படியாகும்" என்று தெரிவித்ததையொட்டித் தான் அன்று பிற்பகலில் எனது உண்ணாவிரதத்தைத் திரும்பப் பெற்றேன்.

இலங்கைத் தமிழர்களுக்காக அதைக் கூட செய்ய முன்வராத, "போர் என்றால் அப்பாவிப் பொது மக்கள் கொல்லப்படுவது சகஜம் தான்" என்று அறிக்கை விட்டு விட்டு, பிரதமருக்கு கடிதம் எழுதுவதையே வாடிக்கையாகக் கொண்டு திசை திருப்பும் ஜெயலலிதா, நான் ஏதோ மூன்று மணி நேர உண்ணாவிரத நாடகம் நடத்தியதாகத் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார்.

ஜெயலலிதா கூற்றுப்படியே நானாவது என்னுடைய இந்த வயதில் அந்த அளவிற்கு உண்ணாவிரதம் இருந்தேன்; இப்போதும் அமெரிக்க தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க முன் வரவில்லை என்றால், தி.மு. கழகத்தினர் மாநிலம் முழுவதும் உண்ணாவிரதம் இருப்பார்கள் என்றும், அதிலே நானும் பங்கேற்பேன் என்றும் அறிவித்தேன்.

மத்திய அமைச்சரவையிலிருந்தே தி.மு.கழக அமைச்சர்கள் விலகுவார்கள் என்றும் தீர்மானம் எழுதி உயர்நிலைச் செயல் திட்டக் குழுவிலே நிறைவேற்றுவதாக இருந்தேன். ஆனால் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியதைத் தவிர வேறு என்ன செய்தார்?

தி.மு. கழகம் ஆட்சி பொறுப்பிலே இருந்த போது, பிரதமருக்கு நான் கடிதம் எழுதினால் மட்டும் போதுமா? நேரிலே சென்று பிரதமரிடம் எடுத்துக் கூற வேண்டாமா என்று எத்தனை அறிக்கைகளிலே ஜெயலலிதா என் மீது தாக்குதல் தொடுத்தார்?

தற்போது முக்கியமான பிரச்னைகளிலே கூட முதலமைச்சர் என்ற முறையிலே ஏன் ஜெயலலிதா டெல்லி சென்று பிரதமரிடம் முறையிடவில்லை?

அதற்கு மாறாக பிரதமரே கருணாநிதியின் நாடகத்துக்கு துணை போகின்ற அளவிற்கு நடந்து கொள்கிறார் என்று அறிக்கை விடுகிறார் என்றால் அது நாடாளுமன்ற நடவடிக்கைகளையே அவமதிக்கின்ற செயலாகும்.

இலங்கைத் தமிழர்களுக்காக 1956 ஆம் ஆண்டிலிருந்து தி.மு. கழகம் எந்த அளவிற்குப் பாடுபட்டது என்பதைப் பற்றியெல்லாம் உயர்நிலை செயல் திட்டக் குழுவில் நிறைவேற்றவிருந்த தீர்மானத்திலேயே ஆண்டுவாரியாக, தேதி வாரியாக விரிவாக எழுதப்பட்டுள்ளது.

மேலும் பிரதமர் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தினை இந்திய அரசு ஆதரிக்கும் என்று நாடாளுமன்றத்தில் அறிவிப்பதற்கு முன்பாக; கழக உயர் நிலை செயல் திட்டக் குழு கூடும் என்பதும், மாநில அளவில் தி.மு. கழகம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடும் என்பதும்,

அதிலே நான் பங்கேற்பதும் செய்தியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டு விட்டது. ஆனால் தற்போது, பிரதமர் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்று கூறியதை வைத்து, உண்ணா விரதப் போராட்டத்தை நான் கை விட்டு விட்டேன் என்கிறார் ஜெயலலிதா.

பிரதமரின் பேச்சின் போது தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஏன் அ.தி.மு.க. வைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட வரவேற்று மேசையைத் தட்டியதை தொலைக் காட்சியிலேயே காட்டினார்கள். பழ. நெடுமாறன் போன்றவர்கள் தமிழகம் முழுவதும் 23ஆம் தேதி நடத்தவிருந்த வேலை நிறுத்தப் போராட்டம் கூட திரும்பப் பெறப்பட்டுள்ளது. ஆனால் ஜெயலலிதா மட்டும் பிரதமர் தெளிவற்ற பதிலைக் கூறியதாக அறிக்கை விடுத்துள்ளார்.

மேலும் ஜெயலலிதாவின் அறிக்கையிலேயே "தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும் மனப்பாங்கில் இந்திய அரசு உள்ளதாகவும் அது இலங்கைத் தமிழர்களுக்கு சுயமரியாதை, சமஅந்தஸ்து, கண்ணியம் இவற்றுடன் கூடிய எதிர்காலத்தை நிர்ணயிக்கவேண்டும் என்ற இந்தியாவின் குறிக்கோளுக்கு ஏற்றதாக இருக்கும்" என்று பிரதமர் பேசியதாகவும் கூறியிருக்கிறார்.

இந்த வார்த்தைகளை பிரதமரின் தெளிவற்ற பதில் என்று கூறி, அது வருத்தத்திற்குரியது என்று கூறியதோடு, தேவையில்லாமல் நான் ஏதோ துரோகம் இழைத்து விட்டதாகவும், நாடகத்தை அரங்கேற்றாமல் இருக்க வேண்டு மென்றும் ஜெயலலிதா சாடியிருப்பது எப்போதுமே அவருடைய சுபாவம் என்ற அளவில் நான் அதை அலட்சியப்படுத்த முனைந்தாலும் அவர் தமிழ் மக்களை ஏமாற்றி திசை திருப்ப முயற்சிப்பதை எடுத்துக்காட்டுவதற்காக இந்த விளக்கத்தைத் தர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்," என்று கருணாநிதி கூறியுள்ளார்.

- விகடன்

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் தமிழர்களுக்கு நிவாரணியல்ல-வைகோ

கோவை: இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம், தமிழர்களுக்கு நிவாரணியாக இருக்காது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

கோவையில் நிருபர்களிடம் அவர் பேசுகையில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தால் இலங்கைத் தமிழர்களுக்கு எவ்விதப் பயனும் கிடைக்கப் போவதில்லை.

உள்நாட்டுப் போர் குறித்து அந்நாடு அமைத்த விசாரணை ஆணையத்தின் (எல்.எல்.ஆர்.சி.) பரிந்துரைகளை அமல்படுத்துவது தான் தீர்மானத்தில் பிரதானமாக இருக்கிறது.

ஆனால் தமிழர்களின் மீது இலங்கை ராணுவம் நடத்திய இனவெறிப் படுகொலை, பாலியல் பலாத்காரம் குறித்து ஆணையத்தின் அறிக்கையில் இடம் பெறவில்லை. உலக நாடுகளின் எதிர்ப்பில் இருந்து தப்பிக்க அமைக்கப்பட்ட அந்த ஆணையத்தின் அறிக்கை போலியானது.

அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக பிரதமர் அறிவித்துள்ளார். இலங்கைத் தமிழர்களுக்கு இழைத்த துரோகத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என நினைத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம், தமிழர்களுக்கு நிவாரணியாக இருக்காது.

தமிழர்கள் வசிக்கும் பகுதியில் இருந்து இலங்கை ராணுவத்தையும், போலீசாரையும் வெளியேற்றி விட்டு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளைப் பூர்வீகமாகக் கொண்டு பல நாடுகளிலும் புலம்பெயர்ந்துள்ள தமிழர்கள் அந்தந்த நாடுகளில் வாக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது வாக்கெடுப்பின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்பதே சரியானதாக இருக்கும்.

இலங்கை அரசின் இனப்படுகொலை குறித்து ஒரு சுதந்திரமான விசாரணை அமைப்பைக் கொண்டு விசாரிக்க வேண்டும்.

உலக நாடுகளெல்லாம் அணு உலைகளை மூடி வருகின்றன. புகுஷிமா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த அணு உலை விபத்துகள் பல்வேறு படிப்பினைகளைக் கொடுத்துள்ள நிலையில், கூடங்குளம் பகுதி மக்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டியது அவசியமானது.

இந்தியாவின் மின் உற்பத்தியில் 2.7 சதவீதம் மட்டுமே அணு மின்சாரம். மின் பற்றாக்குறையை அணு மின் நிலையங்களால் மட்டுமே பூர்த்தி செய்ய முடியும் என்பது ஏற்புடையதல்ல. தங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காகப் போராடுவோரைக் கொச்சைப்படுத்தும் மத்திய அரசின் நடவடிக்கைகள் கண்டனத்துக்குரியவை என்றார்.

முன்னதாக திருமண விழாவில் பேசிய வைகோ கூறுகையில், இதுவரை இல்லாத அளவுக்கு சங்கரன்கோவிலில் இடைத்தேர்தலில் பணபலம் விளையாடியது. தேர்தல் பார்வையாளர்கள் ஆளும் கட்சிக்கு ஆதரவாக நடந்து கொண்டனர். ஜனநாயகத்துக்கும், பணநாயகத்துக்கும் நடந்துள்ள தேர்தலில், முடிவு எதுவாக இருந்தாலும் மதிமுக ஏற்றுக்கொள்ளும் என்றார்.

- தட்ஸ் டமில்

இலங்கை விவகாரம்: பிரதமர் ஏமாற்றப் பார்க்கிறார், உஷார் தமிழர்களே: சீமான்

சென்னை: ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிப்பது குறித்த பிரதமரின் பதில் பிரச்சனையை திசைதிருப்புவதாக உள்ளது என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

பிரதமர் ஆற்றிய உரையில், அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்குமா இல்லையா என்பது தொடர்பான உறுதியான நிலை தெளிவுபடுத்தப்படவில்லை. இலங்கை தமிழர்களுக்கு சம உரிமையும், கவுரவமான வாழ்க்கையும், நீதியும், சுயமரியாதையும் உறுதிப்படுத்தப்பட்ட எதிர்காலமே இந்திய அரசின் இலக்கு என்றும், அதனை உறுதிப்படுத்துவதாக அமெரிக்க தீர்மானம் இருக்குமானால் அதனை இந்தியா ஆதரிக்கும் சாத்தியமுள்ளது என்று தான் பிரதமர் தனது பதிலில் கூறியுள்ளார். இது பிரச்சனையை திட்டமிட்டு திசைதிருப்பும் வார்த்தைகளாகும்.

இலங்கையில் தமிழர்களுக்கு நல்வாழ்வு அளிக்கப்பட வேண்டும் என்பதை ராஜபக்சே அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தமிழர்கள் எவரும் எதிர்பார்க்கவில்லை. தமிழினத்தை கொன்ற ராஜபக்சே அரசை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும் என்பது தான் தமிழர்களின் கோரிக்கை. பிரதமர் மன்மோகன் சிங் தமிழர் பிரச்சினையில் எதிர்காலத்தைப் பற்றி பேசி ஏமாற்றப் பார்க்கிறார். இதில் தமிழர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வலியுறுத்தி திருச்சியில் நாளை (புதன்கிழமை) மாபெரும் தொடர்முழக்கப் பட்டினி போராட்டத்தை நடத்த நாம் தமிழர் கட்சி தீர்மானித்துள்ளது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

-தட்ஸ் தமிழ்

பிரதமரின் பதிலில் ஐயம் வருகிறது, தமிழர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்- திருமாவளவன்

டெல்லி: ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலில் நடைபெறவிருக்கும் வாக்கெடுப்பில் இந்தியா என்ன நிலை எடுக்கப் போகிறது என்பது இன்னும் கேள்விக் குறியாகவே இருக்கிறது. எனவே இந்திய அரசின் அணுகுமுறை குறித்துத் தமிழர்கள் விழிப்போடு இருக்கவேண்டிய நேரம் இது என்பதை மட்டும் எச்சரிக்கையோடு கூற விரும்புகிறோம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை:

பிரதமர் மன்மோகன் சிங் 19.03.2012 அன்று நாடாளுமன்றத்தில் குடியரசுத்தலைவரின் உரை மீதான விவாதத்துக்குப் பதிலளித்துப் பேசும்போது இலங்கை அரசைப் பற்றியும், தமிழர்களுக்கான அரசியல் உரிமைகள் வழங்கப்படவேண்டியதன் தேவை பற்றியும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

தமிழர்களுக்கு சமத்துவம், கௌரவம், நீதி மற்றும் சுய மரியாதையை உறுதிசெய்யும் விதமாக அமெரிக்கத் தீர்மானத்தின் இறுதி வடிவம் இருந்தால் அதை இந்தியா ஆதரிக்கும் என்ற பொருளில் அவரது உரை அமைந்திருக்கிறது.

ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்காவால் முன்மொழியப் பட்டிருக்கும் வரைவுத் தீர்மானம் உறுப்பு நாடுகளுக்கு சுற்றுக்கு விடப்பட்டிருப்பது மட்டுமல்லாமல் ஊடகங்களிலும் வெளியாகியிருக்கிறது. அது தற்போது பிரதமர் சொல்லியிருக்கும் கருத்துகளை உள்ளடக்கியதாக இல்லை என்பது அனைவரும் அறிந்ததே.

இலங்கை அரசு சர்வதேச சட்டங்களை மீறியிருக்கிறது என்று கூறப்பட்டிருப்பது தவிர வேறு நம்பிக்கை தரும் அம்சங்கள் அதில் இல்லை. ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் அமைத்த குழு இலங்கை அரசு போர்க் குற்றங்களை இழைத்திருக்கிறது எனத் தனது அறிக்கையில் உறுதிப்படுத்திய பிறகும்கூட அமெரிக்கா முன்மொழிந்திருக்கும் தீர்மானத்தில் 'போர்க்குற்றம்' என்ற சொல்லே இல்லாதது ஏமாற்றம்தான்.

எனினும் இப்போதுதான் சர்வதேசச் சமூகம் தமிழர் பிரச்சனை குறித்து அக்கறை காட்ட ஆரம்பித்திருக்கிறது. சர்வதேசச் சட்டங்கள் மீறப்பட்டிருக்கிறது என்ற ஒரு வாக்கியமாவது தீர்மானத்தில் இருக்கிறதே என்ற வகையில்தான் இந்தத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என நாம் வலியுறுத்தினோம்.

பிரதமர் மன்மோகன் சிங் தற்போது தெரிவித்திருக்கும் பதிலுரையில் இலங்கைப் பிரச்சனை குறித்து நான்கு பத்திகள் இருக்கின்றன. அதில் முதல் மூன்று பத்திகளில் இலங்கை அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளைப் பட்டியலிட்டு அந்த அரசின் மீது நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் பிரதமர்.

ஒரு சிறு குற்றச்சாட்டுகூட இலங்கை அரசு மீது சாட்டப்படவில்லை. அதுமட்டுமின்றி தீர்மானத்தை ஆதரிப்போம் என்று உறுதியாக அவர் தெரிவிக்கவும் இல்லை. பிரதமரின் பேச்சையும் இதுவரை வெளியுறவு அமைச்சர், நிதி அமைச்சர் ஆகியோர் பேசிவந்ததையும் ஒட்டுமொத்தமாக வைத்துப் பார்க்கும்போது இந்திய அரசு தமிழ் மக்களின் போராட்டங்களை திசைதிருப்புவதற்காக இப்படி நாடகம் ஆடுகிறதோ என்ற ஐயமே நமக்கு எழுகிறது.

தமிழர்கள் சமத்துவம், கௌரவம், நீதி மற்றும் சுய மரியாதையோடு வாழ்வதுதான் இந்தியாவின் நோக்கம் என்றால் அதற்கான திருத்தங்களைச் செய்யவேண்டும். அப்படிச் செய்தால் இந்தத் தீர்மானத்தை ஆதரிப்போம் என்றல்லவா முதலில் இந்திய அரசு கூறியிருக்க வேண்டும்? அதை விடுத்து எந்த நாட்டுக்கு எதிரான எந்தவொரு தீர்மானத்தையும் இந்தியா ஆதரிக்காது என ஏன் கூறவேண்டும்?

ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலில் நடைபெறவிருக்கும் வாக்கெடுப்பில் இந்தியா என்ன நிலை எடுக்கப் போகிறது என்பது இன்னும் கேள்விக் குறியாகவே இருக்கிறது. எனவே இந்திய அரசின் அணுகுமுறை குறித்துத் தமிழர்கள் விழிப்போடு இருக்கவேண்டிய நேரம் இது என்பதை மட்டும் எச்சரிக்கையோடு கூற விரும்புகிறோம்.

இருந்தபோதிலும், பிரதமர் மன்மோகன் சிங் கூற்றில் நல்லெண்ண அடிப்படையில், விடுதலைச் சிறுத்தைகள் நாளை (20 03 2012) நாடாளுமன்ற வளாகத்தில் நடத்தவிருந்த உண்ணாநிலை அறப்போராட்டத்தையும், நாளை மறுநாள் (21 03 2012) மாநிலம் முழுவதும் நடத்தவிருந்த உண்ணாநிலை அறப்போராட்டத்தையும் தற்காலிகமாகத் தள்ளிவைக்கிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் அவர்.

-தட்ஸ் தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.