Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனீவா தீர்மானம் இலங்கை அரசின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு புத்துயிரளிக்கும்: ஹிலாரி

Featured Replies

ஜெனீவா தீர்மானம் இலங்கை அரசின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு புத்துயிரளிக்கும்: ஹிலாரி

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இன்று மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் 27 வருட யுத்தத்திற்கு பின்னர் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு புத்துயிரளிக்கும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி ஹிலின்டன் தெரிவித்தார்.

இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை ஒன்பது மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

இதனையடுத்து, அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி ஹிலின்டன் இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையொன்றை கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயம் வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது, அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"நிரந்த நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் ஊடாகவே மாத்திரம் இலங்கையில் நிரந்தர சமாதனத்தை ஏற்படுத்த முடியும். இதற்கான சமிஞ்சையை ஐக்கிய அமெரிக்கா சர்வதேச சமூகத்துடன் இணைந்து வழங்கியுள்ளது.

அத்துடன், வெளிநாட்டு சமூகம் உதவுதற்கு தயாரகவுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கை மிக தெளிவாகவுள்ளது. கற்றுக்ககொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட ஆக்கபூர்வமான சிபாரிசுகளை இலங்கை அரசாங்கம் அமுல்படுத்துவதுடன் பொறுப்புகூறலுக்கு தேவையான நடவடிக்கையையும் எடுக்க வேண்டும்.

இது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு சரியான இலக்கியை அடைவதற்கு உதவி செய்யவும் அமெரிக்கா தயாராகவுள்ளது. எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை விரைவில் சந்திக்கவுள்ளேன்.

இலங்கை அரசுடன் ஆக்கபூர்வமாக கலந்துரையாடல்களை மேற்கொள்ளவும் உறவினை தொடர்ந்து கட்டியொழுப்பவுள்ளோம். அத்துடன் இலங்கை மக்களுடனான எங்களின் பங்கினையும் பலப்படுத்தவுள்ளோம்" என்றார்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/38119-2012-03-22-15-14-25.html

  • தொடங்கியவர்

to: BlakeR2@state.gov

Hon. Robert Blake

Assistant Secretary,

SOUTH AND CENTRAL ASIAN AFFAIRS.

Subject: re: Hon. Clinton welcomes UN resolution on Sri Lanka

Dear Mr. Blake,

I would like to thanks Madam Clinton and all the members of US State Department on their very successful and much needed resolution on Sri Lanka. This would help the country and people to move towards reconciliation and justice that have been elusive for the past three years.

Thank You!

Sincerely,

அத்துடன், வெளிநாட்டு சமூகம் உதவுதற்கு தயாரகவுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கை மிக தெளிவாகவுள்ளது. கற்றுக்ககொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட ஆக்கபூர்வமான சிபாரிசுகளை இலங்கை அரசாங்கம் அமுல்படுத்துவதுடன் பொறுப்புகூறலுக்கு தேவையான நடவடிக்கையையும் எடுக்க வேண்டும்.

அடுத்த கட்ட நடவடிக்கை மிக தெளிவாகவுள்ளது.

ஆணைக்குழுவினால் { ஐ.நா நிபுணர் குழுவால் } முன்வைக்கப்பட்ட ஆக்கபூர்வமான சிபாரிசுகளை இலங்கை அரசாங்கம் அமுல்படுத்துவதுடன் பொறுப்புகூறலுக்கு தேவையான நடவடிக்கையையும் எடுக்க வேண்டும்.

  • தொடங்கியவர்

3 வருட காலங்களாக நல்லிணக்கம், பொறுப்பு கூறுதலுக்கு அவகாசம் வழங்கப்பட்டது: அமெரிக்கா

'இலங்கையில் நீண்ட காலமாக நடைபெற்ற, பெரும் அவலங்களை ஏற்படுத்திய யுத்தம் முடிவுக்கு வந்து கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. இந்த மூன்று வருட காலத்தின் போது நிலைத்திருக்கக்கூடிய தேசிய நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறுவதற்கான தனது சொந்த மார்க்கத்தை வகுத்துக்கொள்ள இலங்கைக்கு போதிய கால அவகாசமும் வாய்ப்பும் காணப்பட்டது' என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதுவர் எய்லின் சேம்பர்லின் கூறினார்.

இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்பு கூறுதலை ஊக்கப்படுத்துவது தொடர்பான தீர்மான வரைவு 1.2ஐ அறிமுகம் செய்து, ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையின் 19ஆவது அமர்வின் போது ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதுவர் எய்லின் சேம்பர்லின் ஆற்றிய உரை பின்வருமாறு,

'இலங்கையில் நீண்ட காலமாக நடைபெற்ற, பெரும் அவலங்களை ஏற்படுத்திய யுத்தம் முடிவுக்கு வந்து கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. இந்த மூன்று வருட காலங்களில் இலங்கை மக்களுக்கு சமாதானமான எதிர்காலத்தை கட்டியெழுப்ப தேவையான நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் அதியுயர்மட்ட அதிகாரம் உள்ளவர்களுடன் சேர்ந்து வேலை செய்வதற்கு ஒத்த சிந்தனைப் போக்குள்ள நாடுகளுடன் இணைந்தும், தனித்தும் எனது அரசாங்கம் முயன்று வந்தது.

இந்த மூன்று வருட காலத்தின் போது நிலைத்திருக்கக்கூடிய தேசிய நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறுவதற்கான தனது சொந்த மார்க்கத்தை வகுத்துக்கொள்ள இலங்கைக்கு போதிய கால அவகாசமும் வாய்ப்பும் காணப்பட்டது. மிக அண்மையில் கூட, இலங்கை அமைத்துக்கொண்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுக்கு அமைய நடவடிக்ழக எடுக்குமாறு இலங்கையை ஊக்கப்படுத்தினோம். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை செயற்படுத்துவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை இலங்கை முன்வைக்கும் என நாம் எண்ணியிருந்தோம்.

மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் வளங்களை சாதகமாகப் பயன்படுத்துவதற்கு நாம் தனித்தும் ஒரே சிந்தனைப் போக்குள்ள நாடுகளுடன் இணைந்தும் இலங்கையை ஊக்குவித்தோம். மனித உரிமைகள் பேரவையில் இணைந்து செயற்பட நாம் இலங்கைணை ஊக்குவித்தோம். மனித உரிமை கவுன்ஸிலில், யுத்தத்தின் பின் உண்டான நிலைமைகளை வெற்றிகரமாக கையாண்ட பல நாடுகள் அங்கத்தவர்களாக உள்ளன. இந்த நாடுகளின் பல்வகையான அனுபவங்களிலிருந்து இலங்கை நன்மையடைய ஊக்குவித்தோம்.

தலைவர் அவர்களே, மதிப்புமிக்க பிரதிநிதிகளே,

தேசிய நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறுதல் என்பவற்றை வளர்த்தெடுக்க அர்த்தபூர்வமான ஏற்பாடுகள் இல்லாமல், நிலைபேறான சமாதானத்தை அடைய முடியாது. தன் சொந்த நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் சிபாரிசுகளை செயற்படுத்துவதில் இலங்கையின் ஊக்கமின்மை மற்றும் ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்படாத, விளக்கமளிக்கும் பொறுப்பு தொடர்பான பிரச்சினையை கையாள அவசியமான மேலதிக ஏற்பாட்டின் தேவை என்பவற்றை கருத்தில் கொள்ளும் போது, இந்த மிதமான சமநிலைப்பட்ட தீர்மானத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவை கவனத்தில் கொண்டு நிறைவேற்றுவது பொருத்தமாக இருக்கும்.

இலங்கை தனது சொந்த நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை செயற்படுத்தவும், நிலைபேறான நல்லிணக்க முயற்சிக்கு அடித்தளமாக அமையக்கூடிய பொறுப்பு கூறும் கடப்பாட்டை நிறைவேற்ற தேவையான முயற்சிகளை மேற்கொள்ளவும் இலங்கையை ஊக்குவிப்பதாக இந்த தீர்மானம் உள்ளது.

இதற்கும் மேலாக இந்த தீர்மானம், மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகருடன் இணைந்து மனித உரிமைகள் தொடர்பில் செயற்படவும், இந்த பதவி வழியாக வரக்கூடிய நிபுணத்துவ சேவையால் நன்மை அடையவும் இலங்கையை ஊக்குவிக்கும். இந்த முன்மொழிவுகள் நியாயபூர்வமானவை. இவை ஆக்கபூர்வமானவை. நிலைமைக்கேற்ப கவனமானதாக பொருத்தமானதாக இந்த முன்மொழிவுகள் அமைந்துள்ளன.

மார்ச் 8இல் எமது முறைசாராத அமர்வின் போது எந்தவொரு பிரதிநிதி குழுவும் எழுத்துமூல திருத்தங்களை முன்மொழியவில்லை. முடிவாக, இந்த தீர்மானம், சமத்துவம், கௌரவம், நீதி, சுய மரியாதை என்பவற்றுடன் கூடிய நிலைபேறான சமவாய்ப்பு வழங்கும் சமாதானத்தை அடைய இலங்கை மக்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டது என்பதை நான் வலியுறுத்த விரும்புகின்றேன். நன்றி!

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/38117-3--------.html

  • கருத்துக்கள உறவுகள்

Clinton welcomes UN resolution on Sri Lanka

(AFP)

WASHINGTON — US Secretary of State Hillary Clinton on Thursday welcomed a UN resolution urging Sri Lanka to "credibly investigate" allegations of war crimes during its battle against Tamil Tiger separatists in 2009.

Thursday's Human Rights Council resolution in Geneva "encourages the government of Sri Lanka to continue on the path toward reconciliation following 27 years of civil war," the chief US diplomat said in a statement.

"The United States, together with the international community, sent a strong signal that Sri Lanka will only achieve lasting peace through real reconciliation and accountability," Clinton said.

"And the international community stands ready to help," she said.

Washington looks to the Sri Lankan government to "implement the constructive recommendations of the Lessons Learnt and Reconciliation Commission (LLRC) and take the necessary measures to address accountability," she said.

"We are committed to working with the Sri Lankan government to help realize this goal, and I look forward to discussing future actions with Foreign Minister (Gamini Lakshman) Peiris soon," Clinton said.

In tabling the resolution in Geneva, Washington said Colombo had been given three years to hold its own investigations into allegations of serious violations, but "given the lack of action... it is appropriate" that the 47-member state council pushed it to do so.

"An enduring peace will be unsustainable without meaningful steps to foster national reconciliation and accountability," said US envoy Eileen Donahoe.

"It is a resolution that encourages Sri Lanka to ... make concerted efforts at achieving the kind of meaningful accountability upon which lasting reconciliation efforts can be built."

Rights groups say up to 40,000 civilians died in the final months of Colombo's military campaign to crush the Tamil Tigers, who waged a bloody decades-long campaign for a separate homeland for minority Tamils.

The UN estimates some 100,000 people died during Sri Lanka's ethnic conflict between 1972 and 2009.

Sri Lankan authorities have rejected Thursday's resolution, saying the country must be given time to complete its own domestic investigations without interference from foreign powers.

Copyright © 2012 AFP. All rights reserved.

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனீவா தீர்மானம் இலங்கை அரசின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு புத்துயிரளிக்கும்: ஹிலாரி

இனி அவன் வேற உயிரை (தமிழர்கள்) எடுக்காதவரைக்கும் சந்தோசம் தான் அம்மணி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.