Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

G.C.E O/L பெறுபேறு வேம்படி மகளிர் முன்னிலை. யாழ் இந்து இரண்டாம் இடம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த ஆண்டு டிசம்பரில் சிறீலங்காவில் நடந்த க.பொ.த சாதாரண தர பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன.

சிறிலங்காவின் நிர்வாக அலகின் படி வட மாகாணத்தில்.. (தமிழீழ நிர்வாக அலகின் படி வட தமிழீழம்) .. உள்ள முன்னணி பாடசாலைகள் சிலவற்றின் உச்ச பெறுபேற்று விபரங்கள் வருமாறு..

=============================================================================================

கடந்த டிசெம்பர் மாதம் நடைபெற்ற ஜி.சீ.ஈ. சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று வெளியாகின. நேற்று மாலைவரை கிடைத்த முடிவுகளின்படி யாழ்.மாவட்டத்தில் யாழ்.வேம்படி மகளிர் கல்லூரி முன்னிலையில் இருந்தது. 18 மாணவிகள் 9 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர்.

யாழ்.இந்துக் கல்லூரியில் 15 பேர் "9ஏ' பெறுபேற்றைப் பெற்றுள்ளனர். சாவகச்சேரி இந்துக் கல்லூரி மற்றும் கொக்குவில் இந்துக் கல்லூரி ஆகிய பாட சாலைகளில் தலா மூன்றுபேர் "9ஏ' பெறு பேறு பெற்றுள்ளனர்.

இதேவேளை, வவுனியா இறம்பைக் குளம் மகா வித்தியாலயத்தில் 9 பேர் "9ஏ' பெறுபேறு பெற்றுச் சித்தியடைந்துள்ளனர். நேற்று உதயனுக்குக் கிடைத்த பெறுபேறு களின் விவரங்கள் வருமாறு:

யாழ்.வேம்படி மகளிர் கல்லூரியில் தமிழ் மொழி மூலமாகத் தோற்றி "9ஏ' பெற்றவர்கள்:

ரா.தாட்சாயினி, தி.கஜீபா, ப.கோபிகா, ம.மயூரவாணி, ஜெ. ஜனனி, லோ.லக்ஷனா, க.சுபேகா, கா.சௌஜா, அ.தனுஜா, தே. தேவிகா, ப.விசாகாஜா, சோ.அபிராமி, து.துவாரகா, த.வைஷ்ணவி.

ஆங்கில மொழி மூலமாகத் தோற்றி "9ஏ' பெற்றவர்கள்:

அ.அனோஷா

ச.திலக்சி

ச.சாரங்கா

ஜெ.சர்மிஜா.

தமிழ்மொழி மூலம் "8ஏ, பி' பெற்றவர்கள்:

கு.டிலானி

க.புவஸ்ரியா

கி.கௌதமி

ரா.ஜானகி

தி.நர்மதா

தி.பிரணவி

சி.சசிலா

ச.தர்சிகா

ஸ்ரீ.வைஷ்ணவி

வ.சங்கீதா.

ஆங்கிலமொழி மூலம் "8ஏ,பி' பெறுபேறு பெற்றவர்:

செ.காஞ்சனா.

"8 ஏ.சி.' பெறுபேறு பெற்ற வர்கள்:

த.செந்தாளன்

சி.சுஜீவன்

சி.அனுராஜ்.

கொக்குவில் இந்துக்கல்லூரியில் "9 ஏ.' பெறுபேறு பெற்றவர்கள்:

இ.சாலுஜா

லோ. வேணிகா

வி.தட்சாயினி.

"8 ஏ.பி.' பெறுபேறுகள் பெற்றவர்கள்:

க.கிர்சிகா

கு.மதுஷா

ம.மிரோசன்

பா.ஐங்கரன்.

ஆங்கில மொழி மூலமாக "8 ஏ.சி.' பெறுபேறுகள் பெற்றவர்:

சு.சிவானுஜன்.

தமிழ்மொழி மூலமாக "8 ஏ.எஸ்.' பெறுபேறுகள் பெற்றவர்கள்:

ரா.மோகன்ராஜ்

பி.சயந்தன்

அ.தயானந்தன்.

யாழ். இந்து மகளிர் கல்லூரி யில் "9 ஏ.' பெறுபேறுகள் பெற்றவர், ஆங்கில மொழி மூலமாக:

மு.ஆத்மிகா

தமிழ் மொழி மூலமாக: பா.கௌசனா.

தமிழ்மொழி மூலமாக "8 ஏ.பி.' பெறுபேறுகள் பெற்றவர்கள்:

ச.மதுசா

க.கிருஷிகா

இ.சுஜவாந்தி

செ.நிர்ஷிகா.

"8 ஏ.சி.' பெறுபேறுகள் பெற்றவர்: ஆ.மேர்சி ஞானரூபி.

நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் "9 ஏ' பெறு பேறுகள் பெற்றவர்:

கி.மாதங்கி.

"8 ஏ.பி.' பெறுபேறுகள் பெற்றவர்கள்:

கி.மாதுளா

நி.சாமந்தி

ஸ்ரீ.திவாகரன்.

வடமராட்சி ஹாட்லிக் கல்லூரியில் "9 ஏ.' பெறுபேறுகள் பெற்றவர் கபிலன், "8 ஏ.பி.' பெறுபேறுகள் பெற்றவர்:

கோகுலன்

"8ஏ.சி.' பெறுபேறுகள் பெற்வர்கள்:

வைகுந்தன்

மாலோசன்

"8 ஏ.டி.' பெறுபேறுகள் பெற்றவர்:

சிந்துஜன்.

தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் "9 ஏ.' பெறுபேறு பெற்றவர்:

கே.கௌசி கன்

"8 ஏ.சி.' பெறுபேறுகள் பெற்றவர்கள்:

இ.ஜனார்த்தனன்

து.மேதுஷா.

அளவெட்டி அருணோதயக் கல்லூரியில் "9 ஏ.' பெறுபேறுகள் பெற்றவர்: சி.சசிக்குமார்

"8 ஏ.பி.' பெறுபேறுகள் பெற்றவர்:

கி.கோபிதா.

தமிழ் மொழி மூலமாக "8 ஏ.எஸ்.' பெறுபேறுகள் பெற்றவர்:

பி.தினுஷா.

யாழ். இந்துக்கல்லூரியில் தமிழ் மொழி மூலமாக "9 ஏ.' பெறுபேறுகள் பெற்றவர்கள்: ஜே.ஆரூரன்

மு.அனுஜன்

எஸ்.கேதாரன்

ஜே.லோகபாணன்

எஸ்.சஞ்ஜீவன்

கே.சிதபரபாணன்

எஸ்.சிவசங்கர்

மி.துமிலன்

ந.நிறோஜன்

தி.ஜதுர்ஷன்

ப.பிரதீஸ்.

ஆங்கில மொழி மூலமாக: "9 ஏ.' பெறுபேறுகள் பெற்றவர்கள்:

சி.அச்சுதன்

பி.குணவரன்

கு.கௌசிகார்

பா.சங் கீர்த்தன்

இக்கல்லூரியில் 35 பேர் "8 ஏ.' பெறுபேறுகள் பெற்றுள்ளனர்.

சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் "9 ஏ.' பெறுபேறுகள் பெற்றவர்கள்:

ஞா.விதுசன்

உ.உமாசுதன்

பி.பிறேமிசா.

"8 ஏ.பி.' பெறுபேறுகள் பெற்றவர்கள்:

ஸ்ரீ.கிரீடி

பொ.கஸ்ரோ

பா.அஜீபன்

ஸ்ரீ.துளசிகரன்

ர.ஆராதனா.

நன்றி: உதயன்.கொம்

பரீட்சை அழுத்தங்களின் பெறுபேறு: ஒரு மாணவி தற்கொலை, மற்றொருவர் தற்கொலைக்கு முயற்சி

பரீட்சை சுமைகள் மற்றும் சிறார்கள் மீது அதிகரித்துவரும் அழுத்தங்களுக்கு மத்தியில், க.பொ.த. சாதாரணதர பரீட்சையில் சித்தியடையாத மாணவி ஒருவர் கழுத்தில் சுருக்கிடப்பட்ட நிலையில் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டதுடன் தான் விரும்பிய பெறுபேற்றை பெறத் தவறிய மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

நோர்வூட்டைச் சேர்ந்த அரசரத்னம் தயாளினி எனும் மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் அயலவர்களால் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டபோது அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. நோர்வூட் சென் ஜோன்ஸ் பாடசாலையைச் சேர்ந்த இம்மாணவி ஒரு 'பி' சித்தியையும் ஒரு 'சி' சித்தியையும் 3 சாதாரண சத்திகளையும் பெற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, களுத்துறையைச் சேர்ந்த 17 வயதான மாணவியொருவர் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் அவரின் குடும்பத்தினரால் காப்பற்றப்பட்டு நாகொடை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண இது தொடர்பாக கூறுகையில், 'பெரும்பாலானோர் பல தடவை முயற்சித்து வெற்றி பெற்றுள்ளனர். குறிப்பாக மாணவர்கள் தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனநிலையை கொண்டிருக்க வேண்டும். பெரிய பரீட்சைகளில் சித்தியடைவதற்கு அனைவருக்கும் அதிஷ்டம் கிடைப்பதில்லை' என்றார்.

பிள்ளைகளின் திறமைகளை பெற்றோர்கள் இனம்கண்டுஅத்திறமைகளை வளர்த்துக்கொள்வதற்கு அவர்களுக்கு உதவ வேண்டும் எனவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

யாழ் பரியோவான் (சென்.ஜோன்ஸ்) கல்லூரி மாணவர்களின் முடிவுகளை இங்கு காணவில்லையே ஏன்? கல்விநிலமை அவ்வளவிற்கு அங்கு மோசமாகிவிட்டதா? காலங்காலமாக சிறந்த பெறுபேறுகளைக்கண்ட கல்லூரியின் நிலமை எங்கே சென்றுவிட்டது?

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்து பாடசாலைகள் ஆங்கில மொழி மூலம் கற்பித்தல் ஆரம்பமாகி விட்டது.இது ஆரோக்கியமானாதா?...தமிழ் மொழி அழிவுக்கு வித்திடாதா? இப்படித் தான் தமிழகத்திலும் பாடசாலைகளில் ஆங்கில மொழியில் எல்லோருக்கும் படிப்பிக்க வெளிக்கிட்டு அங்கு தமிழ் முற்றாகவே அழியும் நிலைக்கு வந்து விட்டது...இன்னும் கொஞ்ச காலத்தில் அந்த நிலை ஈழத்திலும் வரப் போகின்றதை நினைக்க கவலையாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

தூய தமிழ் பேசும் ஈழத்து பெண்கள் மேலும் மேலும் வளர இந்த எளியவனின் வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

9A-1.jpg

9A-2.jpg

யாழ் இந்துவில் சாதாரண தரத்தில் (2011) 9 ஏ சித்தி பெற்றோர்.

வாழ்த்துக்கள் யாழ் இந்துவின் மைந்தர்களே. சாதாரண தரத்தில் தோற்றி வெற்றி பெற்ற எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.தோல்வி கண்டவர்கள் இருப்பின்.. அந்தத் தோல்விகளை இட்டு மனம் தளராமல் அவற்றை வெற்றிக்கு முதலீடாக்கி நல்ல முயற்சி செய்து அடுத்த முறை வெல்ல வாழ்த்துக்கள். வெற்றி பெற்றவர்கள்.. மேலும் மேலும் நல்ல ஒழுக்கமுள்ள சமூக முன் மாதிரிகளாக விளங்கி.. சிறப்பு வெற்றிகளை இந்து அன்னைக்கு ஈட்டிக் கொடுக்கவும் வாழ்த்துகின்றேன்.

இப்படிக்கு

இந்து அன்னையின் மடி தவழ்ந்த மைந்தன்- நெடுக்ஸ்.

படம்: நன்றி: http://www.jhc.lk/on...es/459#more-459

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்து பாடசாலைகள் ஆங்கில மொழி மூலம் கற்பித்தல் ஆரம்பமாகி விட்டது.இது ஆரோக்கியமானாதா?...தமிழ் மொழி அழிவுக்கு வித்திடாதா? இப்படித் தான் தமிழகத்திலும் பாடசாலைகளில் ஆங்கில மொழியில் எல்லோருக்கும் படிப்பிக்க வெளிக்கிட்டு அங்கு தமிழ் முற்றாகவே அழியும் நிலைக்கு வந்து விட்டது...இன்னும் கொஞ்ச காலத்தில் அந்த நிலை ஈழத்திலும் வரப் போகின்றதை நினைக்க கவலையாக இருக்கிறது.

உங்கட கவலை நியாயமானது தான் அக்கா. ஆனால் ஆங்கில மொழியில் பரீட்சைக்கு தோற்றுதல் பல ஆண்டுகளாகவே உள்ள ஒரு விடயம் தானே. அதுமட்டுமன்றி பிரித்தானிய Edexcel.. OCR iGCSE மற்றும் London O/L பரீட்சைகளையும் இலங்கையில் எழுத பல ஆண்டுகளாகவே வாய்ப்பு அளிக்கப்பட்டுத் தானே வருகின்றது. அவை எங்களைப் பாதிக்கவில்லையே. எதிர்கால சந்ததிக்கு ஆங்கிலமும் தமிழுக்கு நிகராக அல்லது அதற்கு மேலதிகமாக தேவைப்படுகிற ஒன்று தானே..!

ஆங்கில மொழியில் விஞ்ஞானம்.. கணிதம்.. வர்த்தகம்.. போன்ற பாடங்களைப் படிப்பது.. பல்கலைக்கழகத்தில் சிறந்து விளங்க உதவும். காரணம் பல்கலைக்கழக போதனா மொழியாக ஆங்கிலமே திகழ்கிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பற்றி தெரியாது. கொழும்பில் இதுதான் நடைமுறை..! ஆனால் அங்கும் பலர் முதல் ஆண்டில் சிங்களத்தில் படிக்கின்றனர். முதல் ஆண்டில் கூட.. தமிழில் அங்கு கற்பிப்பதில்லை. இப்போ என்னவோ தெரியாது. :icon_idea:

Edited by nedukkalapoovan

பகிர்வுக்கு நன்றி நெடுக்ஸ்.

யாழ் இந்துவின் மைந்தன் என்று பெருமை கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இந்து மாணவர்கள், இந்து மகளிர் மாணவிகளை சைட் அடித்து, நேரத்தை... வீணாக்காமல், வருகின்ற வருடம் வேம்படி மகளிர் கல்லூரி மாணவிகளை முந்த வேண்டும். :wub::D

நாங்கள் யாழ் இந்து மகளிர் கல்லூரி மாணவிகளை சைட் அடிப்பதில்லை. சகோதர பாடசாலையாக்கும். :D :D

வேம்படிப் பெட்டையளோட தான் எங்கள் விளையாட்டு. சுண்டிக்குளிப் பெட்டையளோட விளையாட வருப்பம் தான், ஆனால் அவர்கள் சென் ஜோன்ஸ் ஆட்களை தான் கவனிப்பார்கள். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் யாழ் இந்து மகளிர் கல்லூரி மாணவிகளை சைட் அடிப்பதில்லை. சகோதர பாடசாலையாக்கும். :D :D

வேம்படிப் பெட்டையளோட தான் எங்கள் விளையாட்டு. சுண்டிக்குளிப் பெட்டையளோட விளையாட வருப்பம் தான், ஆனால் அவர்கள் சென் ஜோன்ஸ் ஆட்களை தான் கவனிப்பார்கள். :lol:

ஊருக்குள் சைட் அடித்தால்... வீட்டுக்கு தெரிந்து விடும் என்று, நீங்கள் வேம்படி, சுண்டிக்குளி என்று அலைவதற்கு...

இந்து மகளிர் கல்லூரி சகோதரப் பாடசாலை என்று பொய்க் காரணம் சொல்ல வேண்டாம் ஈஸ். :D:lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

<p>

உங்கட கவலை நியாயமானது தான் அக்கா. ஆனால் ஆங்கில மொழியில் பரீட்சைக்கு தோற்றுதல் பல ஆண்டுகளாகவே உள்ள ஒரு விடயம் தானே. அதுமட்டுமன்றி பிரித்தானிய Edexcel.. OCR iGCSE மற்றும்  London O/L பரீட்சைகளையும் இலங்கையில் எழுத பல ஆண்டுகளாகவே வாய்ப்பு அளிக்கப்பட்டுத் தானே வருகின்றது. அவை எங்களைப் பாதிக்கவில்லையே. எதிர்கால சந்ததிக்கு ஆங்கிலமும் தமிழுக்கு நிகராக அல்லது அதற்கு மேலதிகமாக தேவைப்படுகிற ஒன்று தானே..!

ஆங்கில மொழியில் விஞ்ஞானம்.. கணிதம்.. வர்த்தகம்.. போன்ற பாடங்களைப் படிப்பது.. பல்கலைக்கழகத்தில் சிறந்து விளங்க உதவும். காரணம் பல்கலைக்கழக போதனா மொழியாக ஆங்கிலமே திகழ்கிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பற்றி தெரியாது. கொழும்பில் இதுதான் நடைமுறை..! ஆனால் அங்கும் பலர் முதல் ஆண்டில் சிங்களத்தில் படிக்கின்றனர். முதல் ஆண்டில் கூட.. தமிழில் அங்கு கற்பிப்பதில்லை. இப்போ என்னவோ தெரியாது.

பத்து,பதினைந்து வருத்திற்கு முன்பு 4,5 பேர் ஆங்கில மீடியத்தில் படித்தார்கள்...தற்போது 40,50 பேர் படிக்கிறார்கள்[ஒரு வகுப்பில்]இன்னும் 10,20 வருடத்தில் பாடசாலைகள் எல்லாமே ஆங்கில மீடியமாகப் போய் விடும்.இது ஒரு விதத்தின் நன்மையென்டாலும் இன்னொரு விதத்தில் ஆபத்து என்பது என் கருத்து

படங்களை பார்க்க மிகவும் பெருமையாக இருக்கின்றது .

ஆங்கிலத்தில் படிப்பதால் தமிழுக்கு ஏதும் பாதிப்பு வரும் என்று நான் நினைக்கவில்லை .நன்றாக படித்து ஏதோ ஒரு காலத்தில் நாட்டுக்கு கொஞ்சம் உதவினாலே புண்ணியம் .

சிறப்பான பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.

யாழ் ஹாட்லிக் கல்லூரியின் தரம் மீண்டும் வீழ்ச்சியடைகிறது போலுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.