24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
புரியவில்லையே அண்ணா முதலில் நீங்கள் போய் கேட்க உங்களை சேர்த்துக் கொண்டவைக்கு இன்னொருத்தரோடும் கதைத்துள்ளேன் என்று கூட சொல்லவே இல்லை. வாசித்த எங்களுக்கே ஜீரணமாக கஸ்டமாக இருக்கிறது. உங்களைச் சேர்த்தவர்களுக்கும் அப்படி ஒரு எண்ணம் வந்திருக்கலாம்.
-
மீண்டும் எழுதப்படுமா எம்.ஜி.ஆர் வரலாறு?
தலைப்பே தவறு. அவ்வாறான ஒரு கனவில் தான் விஜய் இருக்கிறார். ஆனால் எம் ஜி ஆர் தன்னை மாபெரும் கொடை வள்ளல் என்று நிரூபித்த பின்னரே (படங்களில் மட்டுமல்ல) அரசியலுக்குள் நுழைந்தார். அவரது வீட்டின் கதவு ஏழைகளுக்கு எப்பொழுதும் திறந்தே இருந்தது. ஆனால் விஜய் பெரும் கஞ்சன். அங்கேயே எல்லாம் அடிபட்டு போய் விட்டது. இந்த நிலையிலும் விஜய்க்கு வாக்குகள் விழும் என்றால் அது தமிழகத்துக்கு மிகவும் ஆபத்தானதாக முடியும்.
- Today
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
“ஈரானுக்கு ரஷ்யா இப்போதும் விசுவாசமான நண்பன், நம்பகமான கூட்டாளி!” - புதின்
நீங்கள் எல்லோருடனும் நண்பேன் ,தம்பரும் உங்கன்ட கூட்டாளி என்பது எங்களுக்கு தெரியும்.... உங்களால் நான் பக்கத்து வீட்டு முஸ்தாபா,பின் வீட்டு அவுஸ்ரேலியன்,முன் வீட்டு சிங்களவ்ன் எல்லொருடனும் பகை...ஏன் யாழ் களத்திலயே முகம் தெரியாத உறவுகளுடனும் பகை...🤣 பெற்றொல் விலை வேற அதிகரித்து விட்டது அயலட்டைகளுடன் கார் புளுலிங் செய்ய முடியாமல் இருக்கு🤣
-
ஈரான் வழங்கிய மர்ம பரிசு! வியந்து போன ட்ரம்ப்!
இது ட்ரம்பின் ஒரு ஏமாற்றும் உளவியற் போர்த்தந்திரம்!
- Yesterday
-
தம்பரும் , இரானும் யுத்த நிறுத்தத்திற்கு தயார்
சமயங்களினால் உலகுக்கு நம்மைகளை விட தீமைகளே அதிகம், குறிப்பாக ஆபிரகாம் சமயங்கள் ( கிறிஸ்தவம், இஸ்லாம், யூதம் ) ஆல் தான் அநேக யுத்தங்கள வரலாற்றில் நடைபெற்றன. எப்போதுஅவைகள் அழிகின்றவனோ அப்பொழுது தான் உலகில் சாந்தியும், சமாதானமும் உருவாகும். இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு எந்தவிதத்திலும்குறைந்தவர்கள் அல்ல கிறிஸ்தவ, யூத அடிப்படைவாதிகள். யுத்தம் தொடரவேண்டும் என விரும்பும் எல்லா பக்கஅடிப்படைவாதிகளையும் பிடித்து, அவர்களுக்கு தேவையானஆயுதங்களை கொடுத்து, ஆக்கள் இல்லாத தனி தீவில் விடவேண்டும், அப்போது அவர்கள் தமக்கு தெரிந்த மொழியில் பேசிபிரச்சனைய் தீர்த்து கொள்வார்கள்.😜
-
“ஈரானுக்கு ரஷ்யா இப்போதும் விசுவாசமான நண்பன், நம்பகமான கூட்டாளி!” - புதின்
உண்மையிலேயே இந்த பம்மாத்து கதையை நீங்கள் நம்புவதாக சொல்வது எனக்கு நம்ப முடியாமல் உள்ளது. புட்டின் ஒரு அணு ஆயுத நாட்டின் தலைவர். புட்டினை அல்ல, கிம், பாகிஸ்தான் பிரதமரை கூட இப்படி கொல்ல அமெரிக்கா நினைக்காது. The stakes are too high. கூடவே ரஸ்யா கூட கிரெம்ளினை தாக்கியது உக்ரேன் அதற்கு யூ எஸ் சும் பொறுப்பு என்றே கூறியது. நேரடியாக யூ எஸ் தாக்கியது அல்லது சி ஐ ஏ திட்டமிட்டது என அல்ல. உக்ரேனின் டிரோன்கள் உண்மையில் கிரெம்ளினை தாக்கும் அளவுக்கு ரஸ்யா வான் பாதுகாப்பில் ஓட்டையா? அல்லது… இது ரஸ்யாவின் போலி கொடி நடவடிக்கையா என்பதே இங்கு கேள்வி.
-
இலங்கை எமது உற்ற நண்பன்; எந்நேரமும் உதவத் தயார்! - ஈரான் தூதுவர்
ஈராக் மீதான முதலாம் கட்ட,இரண்டாம் கட்ட போர்களுக்கு பின்னர் பல நாடுகளிகளில் பல அரசியல் கொலைகள்,பல அரசியல்வாதிகள் விபத்துகளில் காலமானார்கள். மேலதிக தகவல்கள் ஏதும் தரப்பட மாட்டாது.🤣
-
விடுமுறையில் வாங்கிய வில்லங்கமான நகை
நான் 2022 இல் கொழும்பில் நின்றபோது Odel இல் ஷொப்பிங் முடித்து முன்னால் நின்ற ஆட்டோவைப் பிடித்தேன். ஆட்டோக்காரன் தமிழன் அல்லது முஸ்லிம். ஆனால் ஆரம்பத்தில் சிங்களத்தில் கதைத்தான். எனக்கு கொழும்புக்குப் போனால் சிங்களவரோடும் திமிராக தமிழில்தான் கதைக்க விருப்பம்😄 நான் தமிழில் ஆட்டோவுக்கு பேரம்பேச அவனும் தமிழில் கதைத்தான். அப்ப இப்போது போல் பெற்றோலுக்கு QR கோட் பாவிக்கவேண்டும்! வெள்ளவத்தைக்குப் போக 300 ரூபாவுக்கு ஒத்துக்கொண்டான். ஆனால் ஒரு வேண்டுகோளை வைத்தான். அவன் சொல்கிற இரத்தினக்கல் எக்ஸிபிஷன் கடைக்குப் போய் எக்ஸிபிஷனைப் பார்த்தால் அவர்கள் பெற்றோல் அடிக்க QR கோட் தருவார்கள். தனக்கு உதவியாக இருக்கும் என்றான். எனக்கு இலவசமாக எவர் என்ன தந்தாலும் வாங்கும் பழக்கம் இல்லை. அத்தோடு இந்தியாவில் பெங்களூருக்குப் போனபோது எனக்கு வேலை நண்பர்கள் சொன்ன அட்வைஸும் ஞாபகத்தில் வந்தது. ஒருபோதும் ஓட்டோக்காரர், ரக்ஸிக்காரரிடம் உணவகம், ஷொப்பிங் கடைகளுக்கு எங்கே போகலாம் என்று கேட்கக்கூடாது. அவர்களுக்கு கட் அண்ட் ரைட்டாக எங்கே போகவேண்டும் என்று சொல்லிவிடவேண்டும் என்று சொல்லியிருந்தார்கள். என்றாலும் ஓட்டோக்காரனுக்கு பெற்றோலுக்கு உதவ இரத்தினக்கல் எக்ஸிபிஷனுக்கு போக ஒத்துக்கொண்டேன். அது கொள்ளுப்பிட்டியில்தான் இருந்தது. முஸ்லிம்களின் கடை என்று நினைக்கின்றேன். எக்ஸிபிஷன் ஹோல் என்று எதுவுமில்லை. நான் எச்சரிக்கையாகி உள்ளே போனேன். ஆனால் இலண்டன்காரன் ஆகி இங்கிலிஸீலில் மட்டும் கதைத்தேன். வாங்கும் ஆர்வம் இருக்கிறமாதிரி ஃபோனில் படங்கள் எல்லாம் எடுத்தேன். அவர்கள் ஆள் வாங்கப்போகின்றார் என்று உடைத்த குளிர்பானம் கொண்டுவந்தார்கள். ஆனால் மூடி எனக்கு முன்னால் உடைக்காவிட்டால் நான் தருவதைக் குடிப்பதேயில்லை. சும்மா கொஞ்ச நேரம் இரத்தினக்கல்லுகளைப் பற்றியும், விலைகளையும் கேட்ட பின்னர் வட்ஸப்பில் மனைவியுடன் வீடியோகோல் எடுத்து அவற்றைக் காட்டி அவருக்கு டிசைன் பிடிக்கவில்லை, அவர் வந்துபார்த்துத்தான் வாங்குவா என்று சொல்லி வெளியே வந்துவிட்டேன். ஓட்டோக்காரனுக்கு QR கோட் கிடைத்திருந்தது. அவன் தனது காரியத்தில் கெட்டிக்காரன் என்றும் தெரிந்தது! உங்கள் அனுபவத்தைப் பார்த்தால் நான் மனத்தை மாத்தாமல் இருந்தது ஏமாறாமல் காப்பாத்தி இருக்குதென்று தெரிகின்றது!
-
மீண்டும் எழுதப்படுமா எம்.ஜி.ஆர் வரலாறு?
விஜய்யை எம் ஜி ஆருடன் ஒப்பிடவே முடியாது. விஜயகாந்துடன் கூட ஒப்பிட முடியாது. மேற் சொன்ன இருவருக்கும் இருந்த தலைமைத்துவ பண்புகள், ஆளுமை, பேச்சுத் திறன், மக்களுடன் நெருங்கிப் பழகும் தன்மை, சுற்றியுள்ளவர்களின் தரம் என்பனவற்றுடன் விஜையை ஒப்பிட்டால் பெரும் இடைவெளி இருப்பதை உணர முடியும். ஒப்பிடவே முடியாத அளவுக்கு விஜைக்கு இவை எதுவுமே இல்லை என்பது தான் யதார்த்தம். கரூர் துயர சம்பவத்தினை கையாளுவதன் மூலம் விஜய்க்கு தன் ஆளுமையை, மக்கள் மீதான கரிசனையை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதன்போது அவர் ஓடி ஒழிந்ததன் மூலம் தன்னை எப்படியான கோழை என வெளிக்காட்டி விட்டார். இதே போன்ற ஒரு துயர் சம்பவத்தை எம் ஜி ஆரோ விஜயகாந்தோ எப்படி கையாண்டிருப்பர் என யோசித்தால் புரியும். விஜய் நடிகர் கார்த்திக் (பழைய கார்த்திக்) போன்ற ஒருவர். ஒரே வித்தியாசம் கார்த்திக்கு விஜய் அளவுக்கு ரசிகர்கள் கிடையாது. விஜய் கட்சியை ஆரம்பித்த போது அவர் ரசிகர்கள் மட்டுமல்ல கட்சி சாராத மாற்றத்தை விரும்பிய ஒரு பெரும் மக்கள கூட்டம் அவருக்கு ஆதரவழித்தது. ஆனால் அவர் தன்னை அதன் பின் வெளிப்படுத்திய விதத்தை பார்த்த பின் வெறும் தீவிர ரசிகர் கூட்டத்தின் ஆதரவு மட்டுமே மிஞ்சி உள்ளது. அந்தக் கூட்டத்தில் எத்தனை பேர் ஒழுங்காக தேர்தல் அன்று வாக்களிக்கும் நிலையம் சென்று சரியாக வாக்களிப்பர் என்பது பெரிய கேள்விக் குறி.
-
“யார் உங்கள் நண்பன் என்பதை தீர்மானியுங்கள்” – இந்தியாவிற்கான இஸ்ரேலிய தூதுவர் ரூவன் அசார் இலங்கைக்கு அறிவுறுத்தல்
இலங்கையில் நடந்த தமிழர் அழித்தொழிப்பு போரில், முக்கிய பங்காற்றியது இஸ்ரேல் என்பது ஈரான்மீதான தாக்குதலில் இஸ்ரேல் பயன்படுத்திய ஆயுதங்கள், தாக்குதல் நடத்திய இடங்கள், விதம், காட்டும் உக்கிரம் என்பவற்றை வைத்து பார்க்கும்போது தெளிவாகிறது. ராஜபக்சக்களின் ஆட்சியாக இருந்திருந்தால்; இஸ்ரேலின் நண்பர்கள் என்றே அறிவித்திருப்பார்கள், ஏனெனில் தமிழரை இல்லாதொழிப்பதே அவர்களின் அரசியல் இலக்கு. ஆனால் அனுரா, எல்லோரும் சமம் என்கிறார். அப்படியென்றால் உங்கள் அழிவுகர நட்பு இலங்கைக்கு தேவையில்லை என்றே நினைக்கிறன். இவர், இலங்கையை ஈரானோடு கோத்துவிடப்பார்க்கிறார்.
-
அமெரிக்கா - இரான் இடையே மத்தியஸ்தராக பாகிஸ்தான் உருவெடுக்கிறதா? புதிய தகவல்
என்னாது? போயும் போயும் பாக்கிஸ்தான் மத்தியஸ்தம் வகிக்க போகின்றதா? 😂 ஐயகோ.... இது நம்ம அயல் நாட்டான் கிந்திக்கு எரிச்சல் ஊட்டும் விசயமாச்சே? 😎
-
அமெரிக்கா பின்வாங்கினாலும், ஈரானுக்கு எதிரான போரை நிறுத்தக்கூடாது - இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர்
ஒன்று அமெரிக்கா, இஸ்ரேலுக்கு சொல்லியிருக்கலாம், நான் போர்நிறுத்தம், பேச்சுவார்த்தை என ஏமாற்றுகிறேன், நீ உனது அழிவை தொடர்ந்து செய்யென, அல்லது போர் நிறுத்தம் பேச்சுவார்த்தை என்று வந்தால், தான் தனித்துவிடுவேன், இரான் தன்னை பழிவாங்கும் என்கிற பயத்தினால் இந்தச்சந்தர்ப்பத்தை வைத்து ஈரானை துவம்சம் செய்துவிடலாமென நெதென்யாகு நினைத்து தொடரலாம். இதில், போரில் ஈடுபடாத மக்களும் நாடுகளும் துன்பத்தை எதிர்கொள்கின்றன. இவர்கள் இதை ஒரு உலக யுத்தமாக மாற்ற முனைப்பு காட்டுகின்றனர். இந்த இரு சாத்தான்களையும் கைது செய்யும் வரை அல்லது அழிக்கும்வரை இந்த தாக்குதல்கள் அழிவுகள் தொடரும். இது அமெரிக்காவின் மானப்பிரச்சனை, இஸ்ரேலின் பொறாமை பயத்தின் வெளிப்பாடு.
-
ரோஜா முள்.
இன்னும் வீக்கம் குறையவில்லையா?
-
விடுமுறையில் வாங்கிய வில்லங்கமான நகை
மிச்சம் வருமா?
-
என் பெயர் பூனா (Buna)!
என் பெயர் பூனா (Buna)! இலவசக் கொத்தனார் மார்ச் 22, 2026 காலை எழுந்தவுடன் படிப்பு என்றான் முண்டாசுக் கவி. ஆனால் அவன் இன்றைக்கு இருந்திருந்தால் நம்மை எல்லாம் பார்த்துக் காலை எழுந்தவுடன் காபி என்றுதான் பாடியிருப்பான். அந்த அளவு காபிக்கு அடிமையாகி இருக்கிறோம். ஆனால் காபியின் வரலாறு நமக்குத் தெரியுமா? அதைக் காபியே சொல்லிக் கேட்போம். என் பெயர் பூனா (Buna). எனது பூர்விகம் கிழக்கு ஆப்பிரிக்கா. நான் புதர் போன்ற அமைப்புடைய ஒரு செடி. எத்தனையோ யுகங்களாக நான் இந்தப் பகுதியில் வளர்ந்து வந்தாலும் மனிதர்கள் கண்ணில் பட்டது என்னவோ அவர்களின் காலக்கணக்கின்படி பொதுயுகம் ஒன்பதாம் நூற்றாண்டில், எத்தியோப்பியா என்று வழங்கப்படும் நாட்டில்தான். என்னைக் கண்டு கொண்டது பெரிய விஞ்ஞானியோ அறிவியலாளரோ இல்லை, ஒரு ஆடுமேய்ப்பவனால்தான் நான் இந்த உலகத்திற்குத் தெரிய வந்தேன். என்னுடைய சிவப்பு நிறப் பழங்களை உண்ட ஆடுகள் மற்றவற்றைக் காட்டிலும் உற்சாகமாக இருப்பதைப் பார்த்த அவன், சில பழங்களைப் பறித்து உண்டான். அதுவரை இல்லாத ஓர் உற்சாகம் அவனுக்கும் வர, என் பழங்களைப் பறித்து தன் மதத் தலைவர்களோடும் மற்றவர்களோடும் பகிர்ந்து கொண்டான். என் பழங்களை உண்பது அவர்களுக்குப் பழக்கமானது. என்னதான் உற்சாகம் தந்தாலும் என் பழங்களின் ருசி என்னவோ கசப்புதான். இதை எப்படிச் சமாளிக்க என்று பார்த்த எத்தியோப்பியர்களுக்கு ஒரு சமயம் உற்சாகம் தருவது பழங்கள் அல்ல, அவற்றின் கொட்டைகள்தாம் எனப் புரிந்தது. கொட்டையை எடுத்துக் காய வைத்து உண்பது, பொடி செய்து உண்பது என்று மெதுவாக உண்ணும் முறை மாறத் தொடங்கியது. எதோ ஒரு சமயம் தீயில் விழுந்த கொட்டைகளை எடுத்து உண்ண அதன் ருசி இன்னும் நன்றாக இருப்பதை உணர்ந்தார்கள். செங்கடலைத் தாண்டி யெமன் என்ற நாட்டுக்குச் சென்றேன். அங்கே கொட்டைகளை வறுத்துப் பொடி செய்து அப்பொடியின் மேல் வெந்நீரை ஊற்றி வரும் சாற்றினை குடிக்கக் கற்றுக் கொண்டார்கள். பொதுயுகம் பதினைந்தாம் நூற்றாண்டில் அங்கு என்னை இப்படிக் குடிப்பது பரவலாகி இருந்தது. அங்குள்ள சூபிகள் இரவு முழுவதும் விழித்திருக்க என்னைக் குடிக்கத் தொடங்கினர். மயக்கம் தரக்கூடிய பானங்களை அவர்கள் காவா என்பார்கள். அந்தப் பெயரையே எனக்கு வைத்து விட்டார்கள். யெமனில் இருந்து நான் சுற்றி இருக்கும் இஸ்லாமிய நாடுகளுக்குப் பரவினேன். மெக்கா, கெய்ரோ, இஸ்தான்புல் போன்ற நகரங்களில் எல்லாம் என்னைக் குடிப்பதற்கு என்றே கடைகள் தோன்றின. அங்கு அமர்ந்து என்னைக் குடித்துக் கொண்டே இலக்கியம், தத்துவம், அரசியல் பேசுவதும் ஆடுவதும் பாடுவதும் அவர்களின் பழக்கமாயின. பல நேரங்களில் என்னைக் குடிப்பது தடை செய்யப்பட்டது ஆனால் என்னைக் குடிக்காமல் அவர்களால் இருக்க முடியவில்லை. மறைவாகக் குடித்துக் கொண்டுதான் இருந்தார்கள். நான் மீண்டும் மீண்டும் துளிர்த்து எழுந்தேன். இந்நாடுகளில் இருந்து, குறிப்பாகத் துருக்கி வழியாக நான் ஐரோப்பாவை பதினேழாம் நூற்றாண்டில் அடைந்தேன். துருக்கியில் காவா என்ற என் பெயர் காவே என்றானது அங்கிருந்து இத்தாலிக்குச் சென்ற பொழுது என்னைக் காபே என்று அழைத்தனர். பின்னர் ஆங்கிலத்தில் நான் காபி என்று அழைக்கப்படலானேன். ஆமாம் இன்றைக்கு உலகம் முழுவதும் வியாபித்து இருக்கும் என் ஆதி வரலாறு இதுதான். முதலில் என்னைச் சந்தேகக் கண்களுடன் பார்த்த ஐரோப்பா விரைவிலேயே என்னை இரு கரம் கொண்டு அணைத்துக் கொண்டது. கொஞ்சம் கசப்பாகவே இருந்த என் ருசி அவர்களுக்குப் பிடிக்காமல் போனதால் என்னுடன் கொதிக்கும் பாலைச் சேர்த்துக்கொண்டு குடிக்கும் பழக்கத்தை அவர்கள் தொடங்கினர். அது போதது என்று சர்க்கரையையும் துணைக்குச் சேர்த்துக் கொண்டனர். உலகின் மற்ற பகுதிகளைத் தங்கள் காலனி ஆக்கிக் கொள்ளும் பொழுது இவர்கள் என்னையும் அவர்களுடன் எடுத்துச் சென்றனர். அப்படி இவர்கள் கொண்டு சென்ற நாடுகளான பிரேசில், வியட்நாம், கொலம்பியா, இந்தோனேசியா ஆகியவற்றில்தான் நான் இன்றைக்கு அதிகம் பயிர் செய்யப்படுகிறேன். இதே பதினேழாம் நூற்றாண்டில் நான் நுழைந்த மற்றொரு நாடு இந்தியா. மற்ற நாடுகளுக்கு என்னைக் கொண்டு செல்லக் கட்டுப்பாடுகள் இருந்த நேரம். பாபா புதன் (Baba Budan) என்ற துறவி தன்னுடன் ஏழே ஏழு விதைகளைக் கொண்டு வந்து சிக்மக்ளூர் குன்றுகளில் என்னை விதைத்ததாகச் சொல்கிறார்கள். இன்றைக்கு அந்தக் குன்றுகளைப் பாபா புதன் குன்றுகள் (Bababudangiri) என்றே அழைக்கின்றார்கள். இங்கிருந்து கூர்க், கேரளா, தமிழ்நாடு போன்ற பகுதிகளில் என்னைப் பயிரிடுவது பரவலானது. வடஇந்தியாவில் தேநீர் குடிப்பது அதிகம் என்றாலும் தென்னிந்தியாவில் என்னைக் குடிப்பவர்கள்தான் அதிகம். அதிலும் பில்டர் காபி என்றாலே தென்னிந்தியா என்று சொல்லும் அளவிற்கு இருக்கிறது. இரண்டாம் உலகப் போரின் பொழுது வறுத்து, பொடி செய்து, வெந்நீர் சேர்த்து வடிகட்டி என்று நிதானமாகக் காபி போட வழி இல்லாத பொழுது என்னை நேரடியாக வெந்நீரில் கலந்து குடிக்கும் படி ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள். அதுதான் இன்ஸ்டண்ட் காபி. அந்த சமயத்தில் நான் கிடைப்பதற்கு அரிதான பொழுது என்னுடன் சிக்கரி என்ற செடியின் வேரைக் காயவைத்துப் பொடி செய்து கலந்து காபியைத் தயாரித்தனர். அந்த சுவை பிடித்த மக்கள் இன்றைக்கும் சிக்கரி கலந்த காபியைத்தான் விரும்புகிறார்கள். இன்றைக்குக் கச்சா எண்ணெய்க்கு அடுத்தபடியாக அதிகம் வர்த்தகம் செய்யப்படும் பொருள் நான்தான். அராபிகா, ரொபஸ்டா என்று இரண்டு வகையில் என்னைப் பயிரிடுகிறார்கள். இந்த இரண்டு வகைகளையும் கலந்து காபி தயாரிப்பவர்களும் உண்டு. இவை இரண்டுதான் முக்கியமான வகைகள் என்றாலும் நான் நூற்றுக்கணக்கான வகைகளில் பயிரிடப்படுகிறேன். இந்தோனேசியாவில் வேறு ஒரு விந்தையான விஷயமும் உண்டு. அங்கு சிவெட் என்ற வகை பூனை போன்ற மிருகம் என் பழங்களை உண்ணும். ஆனால் அது பழத்தை உண்ணுமே தவிர என் விதைகளை அவை வெளியேற்றிவிடும். அப்படி வெளியேறிய விதைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் கோபி லுவக் (உவ்வேக் இல்லை, லுவக்) தனித்த சுவையோடு இருப்பதால் அதை யானை விலைக்கு விற்கிறார்கள். இதே போல யானைகளை உண்ணச் செய்து அவற்றின் கழிவுகளில் இருந்து எடுக்கப்படும் கொட்டைகளைக் கொண்டும் காபிப்பொடி தயாரிக்கிறார்கள். இதற்கும் யானை விலைதான் என்பதைச் சொல்ல வேண்டியதே இல்லை. என் பிரத்யேகமான மணத்திற்குக் காரணம் எண்ணூறுக்கும் மேற்பட்ட ரசாயனச் சேர்வை காரணமாம். எல்லாரும் முகர்ந்து பார்த்து, பின் அருந்தும் வொயினில் கூட இவ்வளவு ரசாயனச் சேர்வை கிடையாது என்பது ஆச்சரியகரமான தகவல். இன்றைக்கு இத்தாலியின் காபிக் கலாச்சாரம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஆனால் உலகிலேயே தனி நபர் பயனீட்டளவில் அதிகம் என்னைக் குடிப்பவர்கள் இத்தாலியர்கள் இல்லை, அந்தப் பெருமை பின்லாந்து நாட்டுக்குத்தான். என்னைக் குடிப்பதற்கு ஒவ்வொருவரும் அவர்களுக்கான தனித்தன்மையான வழியை வைத்திருக்கிறார்கள். எடுத்துக் காட்டாக, பிரபல இசையமைப்பாளர் பீத்தோவன் ஒரு முறை காபி அருந்த சரியாக அறுபது விதைகளை எண்ணி எடுத்துக் கொள்வாராம். எல்லாமே நல்லபடியாகத்தான் என்றில்லை. நான் விளைவிக்கப்பட தொழிலாளர்களின் உழைப்பு அதிகம் தேவை. ஆனால் அவர்களுக்குச் சரியான சம்பளம் தரப்படுவதில்லை, குழந்தைத் தொழிலாளர்கள் இத்தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர், இயற்கை வளங்களைப் பற்றிக் கவலைப்படாமல் காபித் தோட்டங்கள் உருவாக்கப்படுகின்றன எனப் பலக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப் படுகின்றன. இவை எல்லாம் இல்லாமல் வளம் குன்றா வளர்ச்சி (Sustainable Development), அறவழி பயிரிடுதல் (Ethical Farming) போன்ற வழிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவை குறித்த சான்றுகள் பெற்ற நிறுவனங்களின் தயாரிப்புகள் பெரிதும் வரவேற்கப்படுகின்றன. மேய்ப்பரால் கண்டுபிடிக்கப்பட்டு உலகத்தினரையே தன் கைப்பிடிக்குள் போட்டுக் கொண்டது மதம் மட்டுமல்ல, நானும் தான்! யார் எப்படிக் குடித்தால் என்ன காபி நம் வாழ்வில் ஓர் அங்கமாகி விட்டது. எல்லாருக்கும் மனத்தில் என்றோ எங்கேயோ குடித்த ஒரு வாய் காபி நினைவில் நிற்கிறது. அதன் வாசம் பழைய நினைவுகளைக் கிளப்பி விடுகிறது. உடன் குடித்தவர்கள் ஞாபகத்திற்கு வருகிறார்கள். அன்று இருந்த மகிழ்ச்சியோ துக்கமோ குழப்பமோ மீண்டும் நினைவுக்கு வருகிறது. எழுதத் தெரிந்தவர்கள் அதைக் குறித்து எழுதிவிடுகிறார்கள். இப்படி நனவிடை தோயாத எழுத்தாளர்கள் குறைவு. ஆனால் ஒவ்வொருவரும் எழுதும் கோணம் அவ்வளவு வித்தியாசமாக இருக்கும். அசோகமித்திரன் அவருடைய அனுபவங்களைக் குறித்து எழுதும் பொழுது காபியை அடிநாதமாக வைத்து அலுவலகப் பணிகளுக்கு நடுவே அருந்தும் காபி, அதைச் சுற்றி நடைபெறும் உரையாடல்கள் என்று நம்மை அந்தத் தருணத்திற்கே அழைத்துச் செல்வார். வேறு சில எழுத்தாளர்கள் காபிக் கடைகளில் உட்கார்ந்து அதன் வாசத்தைத் நுகர்ந்து கொண்டேதான் எழுதுவார்கள். ஹாரி பாட்டர் தொடரின் ஆரம்ப அத்தியாயங்களை எடின்ப்ரா நகரில் உள்ள ‘தி எலிபெண்ட் ஹௌஸ் காபே’ என்ற காபிக்கடையில் அமர்ந்துதான் ஜே.கே. ரௌலிங் எழுதினாராம். இதனால் புகழ் பெற்ற அந்தக் கடை சுற்றுப்பயணிகளால் மெய்க்கப்படுகிறதாம். எழுத்தாளர்கள் மட்டும் என்றில்லாமல் இன்றைக்கு வீட்டில் இருந்து வேலை செய்வது போல் அருகில் இருக்கும் காபிக்கடைகளுக்குச் சென்று அங்கிருந்து வேலை செய்யும் பழக்கம் பொதுவாகவே அதிகரித்து வருகிறது. வீட்டில் இருந்தால் தெரியும் தனிமை, இங்கு மற்றவர்களுக்கு இடையே அமர்ந்து வேலை பார்க்கும் பொழுது தெரிவதில்லை. உண்ண உணவும், குடிக்கப் பானங்களும், இலவச இணைய இணைப்பும் பலரையும் இந்தக் காபிக்கடைகளுக்கு வரச் செய்கின்றன. சுறுசுறுப்பாக வேலை செய்யவும் காபி வேண்டும். தொடர்ந்து வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது அதை சற்று நிறுத்தி ஓய்வெடுக்க நினைத்தாலும் ஒரு காபி குடிக்கத் தோன்றும். சிலருக்குக் கவனத்தைக் குவித்து யோசிக்கக் காபி வேண்டும். வேறு சிலருக்கோ, அதிகம் யோசித்துத் தலைவலிக்கிறது, ஒரு காபி குடித்தால்தான் சரியாகும் எனத் தோன்றும். இப்படி முரண்பட்டக் காரணங்களுக்காகக் காபி தேவைப்படுவது ஆச்சரியம்தான். உண்மையில் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகப் பல முறை காபி குடுத்து தூக்கத்தைக் கெடுத்துக் கொள்பவர்கள் அதிகம். காபியில் இருக்கும் கபெயின் (Caffeine) என்ற வேதிப்பொருள் நம் உடம்பு ஓய்வு வேண்டும் என மூளைக்கு அனுப்பும் செய்தியைத் தடுக்கும் வல்லமை கொண்டது. அதனால் நம் உடம்பு அயர்ந்தாலும் அது நமக்குத் தெரிவதில்லை. தூங்க வேண்டிய நேரத்தில் தூக்கத்தைத் தவிர்க்க காபி குடிப்பது, அதனால் தேவையான ஓய்வு கிடைக்காமல் போவது, ஓய்வினைத் தவிர்க்க மீண்டும் காபி என்ற சுழலில் நாம் மாட்டிக் கொள்கிறோம். தூங்குவதற்கு முன் கபெயின் இருக்கும் பொருட்களை உள்ளெடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. எனக்குக் காபி குடிக்கும் பழக்கம் உண்டு. ஆனால் என் காபி நான் நினைக்கும் ருசியில் இருக்க வேண்டுமென்பதால் நானே போட்டுக் குடித்தால்தான் எனக்குத் திருப்தி. வறுத்த கொட்டையை வாங்கி வைத்திருக்கிறேன். காலை எழுந்து கொட்டைகளைப் பொடி செய்யும் பொழுது வீடே மணக்கும். அந்தப் பொடியைப் பில்டரில் போட்டு, வெந்நீரை ஊற்றி, அது வடியும் வரை காத்திருக்கும் பொழுது அன்றைக்குச் செய்ய வேண்டிய வேலைகளை மனத்தில் பட்டியல் போட்டுக் கொள்வேன். காபிக் கோப்பையைக் கையில் எடுத்து, அதன் வாசத்தை நுகர்ந்து, முதல் சொட்டு நாக்கில் படும் பொழுது எழும் ருசியில்தான் அந்த நாள் தொடங்கும். “ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா” என்று கண்ணதாசன் எழுதியதைப் போல நம்மை இந்தக் காபி ஆட்டுவிக்கிறதே என்று ஒரு நாள் நினைக்கப் போக. கண்ணனையும் காபியையும் வைத்து எழுதிய சிலேடை வெண்பா https://solvanam.com/2026/03/22/என்-பெயர்-பூனா-buna/
-
கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
நல்ல துணிச்சலான பெண் தான் நீங்கள். நெடுங்காலத்தின் பின் கண்டது மகிழ்ச்சி.
-
ஈரான் வழங்கிய மர்ம பரிசு! வியந்து போன ட்ரம்ப்!
ஈரான் வழங்கிய மர்ம பரிசு! வியந்து போன ட்ரம்ப்! 25 March 2026 சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அமெரிக்காவிற்குப் பெரும் பணமதிப்புடைய ஒரு 'விலைமதிப்பற்ற பரிசை' ஈரான் வழங்கியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லமான ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ட்ரம்ப், ஈரானுடனான பேச்சுவார்த்தையில் எட்டப்பட்டுள்ள வியக்கத்தக்க முன்னேற்றம் குறித்து விபரித்தார். "ஈரான் பேச்சுவார்த்தையாளர்கள் நேற்று (24) ஒரு அற்புதமான காரியத்தைச் செய்தார்கள். அவர்கள் எங்களுக்கு ஒரு பெரிய பரிசை (Present) வழங்கியுள்ளனர். இதன் மதிப்பு மிகப்பரிசுத்தமானது," என்று டிரம்ப் உற்சாகத்துடன் தெரிவித்தார். ட்ரம்பின் கருத்துப்படி, இந்தப் பரிசு நேரடியாக எண்ணெய் மற்றும் எரிவாயு (Oil and Gas) வர்த்தகம் தொடர்பானது. குறிப்பாக, உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) பகுதியில் நிலவும் பதற்றங்களைக் குறைக்கும் அல்லது அங்குள்ள வளங்களைக் கையாளும் ஒரு முக்கிய நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. இருப்பினும், அந்தப் பரிசு என்ன என்பது குறித்த துல்லியமான விபரங்களை டிரம்ப் தற்போது வெளியிடவில்லை. "நாங்கள் சரியான நபர்களுடன் தான் டீல் (Deal) செய்கிறோம் என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது. ஈரான் எங்களுடன் ஒரு ஒப்பந்தத்தை செய்துகொள்ள மிகத் தீவிரமான ஆர்வத்துடன் இருக்கிறது," என்று ட்ரம்ப் குறிப்பிட்டார். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், டிரம்பின் இந்த அறிவிப்பு ஒரு முக்கிய சமாதானத் தூதாக அல்லது மிகப்பெரிய பொருளாதார மாற்றத்தின் அறிகுறியாக இருக்கலாம் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். https://hirunews.lk/tm/455553/trump-is-surprised-by-the-mysterious-gift-from-iran
-
அப்பிள்போன் வேணும் தம்பி….
சும்மா சொல்லக் கூடாது ஊர் இப்ப நல்ல முன்னேற்றம் . வெளிநாட்டுக் காசில நல்ல வசதி .. இங்கு குளிரில் விறைத்து வெயிலில் வாடி நின்ற நிலையில் வேலை செய்து அனுப்பினால் , காசின் அருமை பெருமை தெரிவதில்லை .அல்வாயனுக்கு நன்றி ..மேலும் தொடருங்க
-
கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
நீண்ட நாட்களின் பின் பயணக் கதையுடன் வந்திருக்கிறீர்கள் . நன்றி மூடடைப்பூச்சியும் நீங்களும் நல்ல நடபு போல ...எங்கு சென்றாலும் விடுவதில்லை . நல்ல தைரியமான பெண். தொடருங்கள். .
-
சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
Sumitha Panneerselvam கஞ்சியில... பென்சில் சீவின தூள் போட்டு பார்த்தால், அழி ரப்பர் வரும். ############### سدام حسين நாம் ஆட்சிக்கு வந்தால் wine shop மூடப்படும். ############### Pradhisha V முடிய வெட்டி, வாழை மரத்துக்கு கீழ மறைச்சு வச்சா... நிறைய வளரும். ############### Sam Santhakumar விழுந்த பல்லை வானத்துக்கு காட்டினால் திரும்ப முளைக்காது.. அந்த பல்லை சாணியில வைத்து கூரை மேல எறிஞ்சாதான் முளைக்கும். ############### Gowtham Balamurugan நீ இருக்க அழகுக்கு சீமையிலிருந்து தான் பொண்ணு வருவாள். தோள்ல கை போட்டால்... வளர மாட்டோம். ############### Pothigai Pugal வீட்டு தாழ்பாளை ஆட்டினால், சண்டை வரும். ############### ராஜ ராஜா அரிசி தின்றால், கல்யாணம் அன்று மழை வரும். ############### Mahi நீ நல்லவன் டா. உன் நல்ல குணத்துக்கு நல்ல பொண்ணா கிடைக்கும்டா. ############### Sankar Thala இலவசம் தருபவர்களுக்கு ஓட்டு போட்டால் நாடு முன்னேறும். ############### Saleem Saleem ரஜினி அரசியலுக்கு வர போறாரு...
-
“ஈரானுக்கு ரஷ்யா இப்போதும் விசுவாசமான நண்பன், நம்பகமான கூட்டாளி!” - புதின்
கடந்த வாரம் பிரித்தானியா பணமுறியின் யீல்ட் அமெரிக்க பணமுறியின் யீல்டினை விட அதிகரித்தற்கு காரணமாக பணமுறியினை முதலீட்டாளர்கள் விற்று வெளியேறுவது காரணம் என கூறுகிறார்கள். 2008 இல் இருந்ததனை போல அதிகமாக உள்ளதாக (அல்லது அதிகமா என நினைவில்லை) கூறுகிறார்கள். அந்த தாக்குதலுக்கு மூல காரணமாக CIA இனை இரஸ்சியர்கள் குற்றம் சாட்டினார்கள், CIA; உக்கிரேன் செய்யவில்லை என அதற்கு பதிலழித்திருந்ததாக நினைவுள்ளது, தற்போது அலி காமெனியினை பேச்சுவார்த்தை நடாத்திக்கொண்டிருக்கும் போதே கொன்றுள்ளார்கள், அதற்கு முன்னர் கடந்த வருடமும் பேச்சுவார்த்தை காலத்திலேயே அந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தது.
-
கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 28 அகவை - சுய ஆக்கங்கள்பயணம் போகும் நாளன்று காலையில் எழுந்து தோய்ந்துவிட்டு எட்டு மணிக்குப் பக்கத்தில் இருக்கும் இந்திய உணவகத்துக்குச் சென்று உணவருந்திவிட்டு மீண்டும் வந்து அறையுள் அடைகிறேன். சாதாரணமாக வெளியில் சென்று பார்ப்போமா என்று எண்ணிவிட்டு, பிறகும் வேண்டாம் என முடிவெடுக்கிறேன். ஏனெனில் பயணப் பொதிகளுள் இடம்தான் இல்லையே. வீணாக பணம் கொடுத்து வாங்கி கடந்த ஆண்டுபோல் எதற்காக விமான நிலையத்தில் விட்டுவிட்டு வரவேண்டும் என்று எண்ணிக்கொள்ள போன் ஒன்று வருகிறது. புதிய இலக்கமாக இருக்க யார் என்கிறேன். “மடம் நான் வரவேற்பில் இருந்து பேசுகிறேன், இன்னும் எத்தனைநாள் நிற்கப் போகிறீர்கள்” “நேற்றே இன்று ஒருமணிக்குப் போகவேண்டும் என்று சொன்னேனே” “உங்களுக்கு விமானநிலையம் போக வாகனம் வேண்டுமா” “எவ்வளவு எடுக்கிறீர்கள்” “12000 ரூபாய்கள்” “வேண்டாம். நானே ஒழுங்குசெய்துகொள்கிறேன். நன்றி” என்றுவிட்டு பிக்மீயில் பெரிய கார் போட 4500 ரூபாய்கள் என்று வருது. பக்கத்துக் கடையில் ஏதும் உணவு வாங்கிக்கொண்டு போவோமா என எண்ணிவிட்டு, வேண்டாம் விமான நிலையத்திலேயே வாங்கிக்கொள்வோம் என எண்ணி எதையும் வாங்கவில்லை. 12.45 இற்கு நான் கிளம்பவேண்டும். எனது பொதிகளைத் தூக்கிவர யாரையாவது அனுப்புகிறீர்களா என்றுவிட்டு சிறிய பொதியைத் தூக்கிக்கொண்டு வெளியே வர, இருவர் வாசலில் வந்து நிற்கின்றனர். கீழே சென்று திறப்பைக் கொடுத்தபின் பிக்மீக்குப் பதிய ஏழு நிமிடங்களின் பின் அந்தக் கார் வர, பொதிகள் மூன்றையும் ஏற்றிவிட்டபின் நானும் ஏறி அமர்கிறேன். விமான நிலையத்தில் பெரிதாகச் சனங்கள் இருக்கமாட்டார்கள் என்று எண்ணியிருக்க உள்ளே செல்லும் வாசலில் ஒரே சனம். பொதிகளைக் கொண்டு உள்ளே சென்று ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் பகுதியில் இரு பெரிய பொதிகளையும் ஒப்படைத்து போடிங்பாஸ் வாங்கியபின் “உங்கள் பொதிகள் ரியாத்துக்கு வராது. நேரடியாக யூகே சென்றுவிடும். நீங்கள் அங்கு சென்றபின் உங்கள் பொதிகளைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்றவுடன் நானும் சரி என்றுவிட்டு டியூட்டிஃப்ரீ யில் ஏதாவது வாங்கலாம் என்று பார்த்தால் எல்லாம் சரியான விலை. ஒரு உலர் தேயிலைப் பக்கற் மட்டும் வாங்கிக்கொண்டு போய் ஒரு இருக்கையில் அமர்கிறேன். விமான வாயிலுக்குச் செல்ல நேரம் இன்னும் நிறைய இருக்க, ஏதாவது உண்ணலாம் என்னும் எண்ணம் எழுகிறது. இரண்டு மூன்று கடைகளைப் பார்த்தால் எதுவும் பிடிக்கவில்லை. நான்காவது கடையில் ஓர் சிக்கன் சலாட் மற்றும் ஒரு கோப்பியும் ஓடர் செய்ய, 11 டாலர் வர BOC வங்கி அட்டை மூலம் பணம் செலுத்திவிட்டு வருகிறேன். விமானம் புறப்பட இன்னும் இரண்டரை மணிநேரம் இருக்க மெதுவாக சூட்கேசை இழுத்தபடி இலக்கம் 8 ஐத் தேடியபடி சென்றால் பெரிதாக யாரையும் காணவில்லை. போனை சார்ஜ் செய்ய வசதியாக ஒரு இருக்கையில் அமர்ந்து போனைப் பார்க்க நேரம் போனதே தெரியவில்லை. சாதாரணமாக ஒரு முக்கால் மணிநேரம் இருக்கும்போதுதான் அதற்குரிய மண்டபத்தைத் திறப்பார்கள். அன்று ஒன்றரை மணி நேரத்துக்கு முன்னரே திறந்துவிட நானும் இன்னும் சிலரும் மட்டும் உள்ளே சென்று அமர்கிறோம். போரின் பயத்தில் ஆட்கள் போகவில்லையோ என்று எண்ணியபடி போனில் மூழ்கியிருக்க, என் இருக்கைக்குப் பக்கத்தில் ஒருவர் வந்து அமர்வது தெரிகிறது. திரும்பிப் பார்க்க, ஒரு பெண் என்னைப் பார்த்து சிரித்தபடி இதில் அமரலாம்தானே என்கிறார். நான் தாராளமாக என்று கூறிச் சிரித்தபடி எந்த நாட்டுக்குச் செல்கிறாய் என்கிறேன். “நான் ரியாத்தில் வேலைக்காகச் செல்கிறேன்” “ஓ நீண்ட நாட்களாக அங்கு வேலை பார்க்கிறாயா? “14 ஆண்டுகளாகச் செய்கிறேன். ஆனால் இது புதிய வேலை” “பழைய வேலை என்னவாயிற்று” “இம்முறை நான் ஆறு மாதங்கள் நாட்டில் நின்றுவிட்டேன். தொடர்ந்து வேலை செய்வதில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருதடவை நாட்டுக்கு வந்து போகும்போது பழைய வேலை இல்லாமற் போய்விடும்” “உனக்கு எத்தனை குழந்தைகள்? “எனக்குக் குழந்தைகள் இல்லை. 53 வயதாகிறது” “உன் கணவர் வேலை செய்வதில்லையா? “அவர் செய்யும் வேலையில் நிறையப் பணம் வராது” “குழந்தைகள் இல்லாதபடியால் உனக்கு பெரிதாகச் செலவு இருக்காதுதானே. ஏன் உள் நாட்டிலேயே ஒரு வேலை தேடிக்கொள்ள முடியாதா? “எனக்கு சின்னதா ஒரு வீடு காட்டவேண்டும் என்று நீண்டநாள் ஆசை. முன்னர் பத்து இலட்சங்கள் சேர்த்து வைத்து ஒரு முகவர் நியூசீலாந்தில் வீடுகள் மலிவு, அங்கு நீ ஒரு வீடு வாங்கினால் அங்கு போவதற்கு விசாவும் கிடைக்கும் என்று சொல்லி ஏமாற்றிவிட்டார். இப்ப திரும்பவும் இலங்கையில் வீடுகட்டப் பணம் சேர்க்கிறேன்” “பணத்தை நீயே வைத்திருப்பாயா அல்லது...... “ “ என் கணவரின் வங்கி இலக்கத்துக்கு மாதாமாதம் அனுப்பிவிடுவேன்” “ கணவர் செலவழிக்காமல் பத்திரமாக வைத்திருப்பாரா” அதெலாம் வைத்திருப்பார். நான் அனுப்பும் பணத்தில் எதையும் வீணாக்குவதில்லை. ஆனால் உறவினர்கள் அயலவர்கள் எப்போதும் கடன் கேட்டபடிதான் இருப்பார்கள். இல்லை என்று சொன்னால் கதைக்கவும் மாட்டார்கள்” தமிழர்கள் என்றால் என்ன சிங்களவர் என்றால் என்ன. பண விடயத்தில் எல்லோரும் ஒரேமாதிரித்தான் போல. பாவம் இந்தப் பெண் என எண்ணியபடி கதைப்பதை நிறுத்திவிட்டு நிமிர்ந்து பார்த்தால் அரைவாசி இடங்கள் நிறைந்துவிட்டன. இன்னும் அரை மணி நேரம்தான் இருக்கு. நான் கணவருக்கும் ஊரில் இருப்பவர்களுக்கும் போன் செய்து இன்னும் அரை மணித்தியாலத்தில் கிளம்பிவிடுவேன் என்றதும் ரியாத் போய்ச் சேர்ந்த பிறகு போன் செய் என்றபடி முடிக்க, நான் அந்தப் பெண்ணைத் திரும்பிப் பார்த்தால் அவர் இன்னொருவருடன் கதைப்பது தெரிய சுற்றுமுற்றும் பார்க்க இரண்டுநாட்களின் முன் கட்டார் ஏயார்வேஸ் நிறுவனத்தின் முன்னால் கண்ட பல முகங்கள் தெரிகின்றன. விமானத்தில் ஏறி அமர்ந்தால் யன்னல் ஓரத்தில் ஒருவரும் மற்றப் பக்கம் நானும் நடுவில் ஒரு இருக்கை வெறுமையாகவும் இருக்க, கடவுளே ஒருவரும் எனக்குப் பக்கத்தில் வரக்கூடாது என்ற என் நேர்த்தியை சனீஸ்வரர் ஏற்றுக்கொள்கிறார். ஆனால் விமானம் முழுவதும் ஆட்களால் நிறைந்துவிட்டது. ஐந்தரை மணித்தியாலத்தின் பின் விமானம் தரையிறங்க விமான நிலையம் கண்ணில் படவில்லை. நாம் இறங்கியவுடன் பஸ்சில் ஏற்றிக்கொண்டு கிட்டத்தட்ட இரண்டு கிலோமீற்ரர் தொலைவில் உள்ள விமான நிலையத்தில் கொண்டுபோய் விட வேறு விமானங்களுக்கு மாறுபவர்களின் வரிசை சிறிதாகவும் அந்த நாட்டுக்குள் பிரவேசிப்பவர்கள் நீண்ட வரிசையிலும் காத்திருக்கிறார்கள். எமக்கு புதிய போடிங் பாஸ் அங்குதான் தரப்படுகிறது. எமக்கு இன்னும் ஆறு மணிநேரம் இருக்கிறது. ஏற்கனவே இரவானதால் குளிர். அதைவிட எல்லா இடத்திலும் ஏசி போட்டு நடுக்கம் வராத குறை. கணவர் பிள்ளைகளுக்கு இங்கு வந்து சேர்ந்ததைச் சொல்வோம் என்றால் நெட்வேர்க் வேலைசெய்யவில்லை. அவர்களின் Wi-Fi கூட சரியாக வேலை செய்யவில்லை. பலதடவை போன் செய்தும் நான் கதைப்பது கணவருக்குக் கேட்கவில்லை. அவர் கூறுவதும் எனக்குக் கேட்கவில்லை. சரி மெசேஜ் போட்டுவிடுவோம் போனால் போகட்டும் என எண்ணியபடி Wi-Fi ஐ நிறுத்திவிட்டு மெசேஜ் போட்டால் அது போய்விட்டது. போனை மூடி வைத்துவிட்டு ஒரு இரண்டு மணிநேரம் அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டு இருக்க எனக்குப் பசியெடுக்க ஆரம்பிக்கிறது. விசர் வேலை பார்த்தது. உண்பதற்கு ஏதும் வாங்கி வந்திருக்கலாம். விமானத்தில் முன்னர்போல் திருப்தியாக உண்பதற்கு உணவு தருவதில்லை. இன்னும் நான்கு மணிநேரம் பசியோடு இருக்க முடியாது என எண்ணிக்கொள்கிறேன். நான் இருந்த இருக்கையின் பக்கத்தில் ஒரு வயதான கணவன் மனைவி அமர்ந்திருக்க நீங்கள் எங்கு செல்கிறீர்கள் எனப் பேச்சுக்கொடுக்க தாமும் UK செல்வதாகக் கூறிவிட்டு மேற்கொண்டு எதுவும் பேசாமல் இருக்கின்றனர். என் இடத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள். நான் உணவு வாங்கிக்கொண்டு வருகிறேன் என்றபடி கழுத்துக்கு வைக்கும் தலையணையை நான் இருந்த இடத்தில் வைத்துவிட்டு எனது சூட்கேசைத் தள்ளியபடி ஒரு சிறிய உணவகத்துக்குச் செல்கிறேன். சாண்ட்விச், சலாட் மற்றும் ஹாட் சொக்ளற் என்று கூற 17 dollars என்கின்றார் அந்தப் பெண். நான் என் பாங்க் காட்டைக் கொடுக்க அந்தப் பெண் காட் ரீடரில் போட்டால் டிக்கிளைண்ட் என்று வருகிறது. அதில் போதிய பணம் இருக்கிறது மீண்டும் போடுங்கள் என்கிறேன். மீண்டும் போட அப்படியே வர அந்தப் பெண் பக்கத்தில் நின்ற ஒருவருடன் ஏதோ குசுகுசுக்க அவர் காட்டை வாங்கிப் பார்த்துவிட்டு உங்கள் காட் ஒரு மாதத்தின் முன்னரே முடிந்துவிட்டது என்றபடி காட்டை எனக்குத் தர, நான் நம்பாமல் வாங்கிப் பார்க்கிறேன். அவனமானம் ஒருபுறம் இந்த எளிய மனிசன் புதிய காட் வந்ததை எனக்குச் சொல்லவில்லை என்று மனிசன்மேல் கோபமும் வர, மன்னியுங்கள் நான் கவனிக்காமல் விட்டுவிட்டேன். பவுண்ட்ஸ் எடுப்பீர்கள் தானே என்கிறேன். அந்தப் பெண் நோ என்கிரா. எனக்கு சரியான பசி. மற்றைய நாடுகளில் UK பவுண்டஸ் எடுப்பார்கள். நீ ஏன் மாட்டேன் என்கிறாய் என்று கேட்க பக்கத்தில் நின்றவர் சரி எடுக்கிறேன். ஆனால் மிகுதி தரமாட்டோம் என்கிறார். நீ மிகுதி தரவேண்டாம். எனக்கு உணவைக் குடு என்கிறேன். இவ்வளவு உணவும் எத்தனை பவுண்ட்ஸ் வருகிறது என்று போனில் பார்த்தால் 12.70 பவுண்டஸ் என்று காட்ட, அட மிகுதி ஏழு பவுண்டஸ் வீணாகப் போகிறதே என எண்ணியபடி ஒரு கேக் மற்றும் யூஸ் எடுத்துவிட்டு 20 பவுண்ஸ் கொடுத்து உணவுகளை வாங்கிக்கொண்டு வர அந்தக் கணவனும் மனைவியும் பிஸ்கற் உண்டு கொண்டு இருக்கின்றனர். நான் என் உணவுகளை உண்டுவிட்டு கோப்பியைக் குடித்தபின் கேக்கையும் யூசையும் சூட்கேசுள் வைத்துப் பூட்டிவிட்டு சுற்றுமுற்றும் பார்க்க அங்கு பல இருக்கைகள் காலியாக இருக்கின்றன. சதுரமாக பெஞ்சுகளும் சிறிது தூரத்தில் போடப்பட்டிருக்க இரு பெண்கள் போர்வையால் போர்த்துக்கொண்டு படுத்திருக்க, எதுக்கும் நானும் படுப்போம் என எண்ணியபடி பக்கத்து முதியவர்களுக்கு நான் அந்த பெஞ்சில் போய் இருக்கப்போகிறேன். நீங்களும் வாருங்கள். இந்தக் கதிரையிலும் அது வசதியாக இருக்கும் என்று கூற அவர்களும் எழுந்து வருகின்றனர். அந்த முதியவர் போனைப் பார்த்துக்கொண்டிருக்க, அந்தப் பெண் அவரின் தோளில் சாய்ந்து தூங்க, நான் காலை மடக்கியபடி என் கைப்பையை தலைமாட்டில் வைத்து அதன் மேல் தலை வைத்தபடி சூட்கேசை ஒருகையால் பிடித்தபடி கோழித்தூக்கம் போடுகிறேன். ஆனாலும் ஒரு மணி நேரம் தூங்கியிருப்பேன் போல. என்னை யாரோ தட்ட திடுக்கிட்டு விழித்தால் அந்தப் பெண்மணி. எமது விமானம் வேறு இடத்தில் என்று அறிவித்தார்கள். அதுதான் எழுப்பினேன் என்று அவர் கூற நான் எழுந்து என் பொதியையும் கைப்பையையும் எடுத்துக்கொண்டு நேர அட்டவணை இருக்கும் இடத்திற்குச் சென்று பார்க்கிறேன். வேறு பலரும் எமக்கு அருகே வந்து நின்று பார்க்கின்றனர். எமது விமானம் இரண்டுமணி நேரம் இன்னும் பிந்தும் என்று போட்டுள்ளார்களே அன்றி வேறு எந்த விபரமும் இல்லை. இன்னும் மூன்று மணி நேரம் இருக்கே. பிறகுதான் போடுவார்கள். சும்மா இதில நின்று எந்தப் பிரயோசனமும் இல்லை. வாங்கோ போய் இருப்பம் என்றபடி நாம் இருந்த இடத்துக்குப் போக, இரு ஆண்கள் அங்கு நீட்டி நிமிர்ந்து படுத்திருக்க வேறு பக்கமாகச் சென்று அமர்கிறோம். விமானநிலையம் பெரும்பாலும் வெறிச்சோடிப்போய் இருக்கு. இன்னும் இரண்டு வயதானவர்களும் எம்மோடு வந்து அமர்கின்றனர். அவர்களும் UK தான் போகிறோம் என்கின்றனர். அவர்களுடன் பேசிக்கொண்டிருக்க நேரம் போவது தெரியவில்லை. அடிக்கடி எழுந்து சென்று நேர அட்டவணையில் ஏதும் போடுகிறார்களா என்று பார்த்தால் இரண்டு மணி நேரத்தின் பின்னரே நாம் நான்காம் இலக்க மண்டபத்துக்குப் போக வேண்டும் என்று எல்லோரும் விரைந்து அங்கே செல்கிறோம்.
-
மின்சார உட்கட்டமைப்புகள் தாக்கப்பட்டதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவிப்பு
- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
மாணவருக்கு சைக்கிள், லேப்டொப், அம்மா உணவகம், மகளிர் உதவித்தொகை, நூறுநாள் வேலை என்பன வரவேற்கப்பட வேண்டிய நலத்திட்டங்கள். டிவி, பிரிட்ஜ் எல்லாம் அவரவர் உழைத்து வாங்க வேண்டியவை - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.