Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. அப்படி வந்தால்.... ரோபோவுக்கு லஞ்சம் கொடுத்தும், பொலிசார் தப்ப முடியாது. 😂
  3. ரோபோ பொலிசாரை கைது செய்யும் காலம் வெகுவிரைவில் வரும்😇
  4. வணக்கம் வாத்தியார் ........! இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆண் : { கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான் ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காக கொடுத்தான் } (2) ஆண் : ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காக கொடுத்தான் ஆண் : { மண்குடிசை வாசலென்றால் தென்றல் வர வெறுத்திடுமா } (2) ஆண் : மாலை நிலா ஏழையென்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா ஆண் : உனக்காக ஒன்று எனக்காக ஒன்று ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை ஆண் : படைத்தவன் மேல் பழியுமில்லை பசித்தவன் மேல் பாவம் இல்லை ஆண் : கிடைத்தவர்கள் பிரித்துக்கொண்டார் உழைத்தவர்கள் தெருவில் நின்றார் ஆண் : பலர் வாட வாட சிலர் வாழ வாழ ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை ஆண் : { இல்லை என்போர் இருக்கையிலே இருப்பவர்கள் இல்லை என்பார் } (2) மடி நிறைய பொருள் இருக்கும் மனம் நிறைய இருள் இருக்கும் ஆண் : எதுவந்த போதும் பொதுவென்று வைத்து வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம் .......! --- கொடுத்ததெல்லாம் கொடுத்தான் ---
  5. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  6. தென்னங்கீற்று ஊஞ்சலிலே ......... படம் : பாதை தெரியுது பார் . ......! 😍
  7. அப்பாடா .....நான் வாக்களித்து விட்டேன் ........! நான் ஒருபோதும் வாக்களிக்கத் தவறுவதில்லை........ அப்படி எப்போதாவது தவறியிருந்தால் அந்நேரம் நான் வேறிடத்தில் இருந்திருப்பேன் . .......! 😀
  8. Today
  9. கிருபன், கிரிதரன். குமரன், குயிலன், குமணன், குறளமுதன், குறளரசு, குழந்தை. கேசவன், கேதீசன், கேதீஸ், கேதீஸ்வரன். கூலன், கூடலமுதன், கூடலரசன், கூடற்கதிர்.
  10. அவர் தனக்கு தானே தீ வைக்கும் நோக்கத்தில் இருக்கவில்லை. மனநல பிரச்சனைகளில் ஏற்கனவே இவர் இருந்ததாக தெரியவருகிறது. பேருந்தில் இருந்த ஏனையவர்கள் ஏன் தப்பிச்செல்ல முடியாமல் இருந்தது என்பதற்கான விசாரணைகள் நடக்கின்றன. உள்ளே என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. ஆனால் இங்கே பேருந்து ஓடிக்கொண்டிருக்கும் பொழுது கதவு திறக்கப்படமாட்டாது. இந்த சம்பவமும் பேருந்து ஓடிக்கொண்டிருக்கும் பொழுது நடந்திருக்கிறது. யாரும் தப்ப முடியாததற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். மற்றும் அவர் பெட்ரோல் மூலம் பேருந்தை நனைப்பதற்கு சில வினாடிகளே பொதுமனாகாத இருந்திருக்கும். அதற்குள் தப்பி செல்வதற்கு போதிய அளவு நேரம் ஒருவருக்கும் இருந்திருக்காது.
  11. 😂 நீங்கள் நினைத்தது சரி விஜய் இரசிகையின் பேட்டி ஒன்று பார்த்தேன் ஏன் அவர் தான் முதலமைச்சராக வர வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு அவாவின் பதில் விஜய் அண்ணாவின் X படம் (எனக்கு பெயர் நினைவில்லை) பார்த்தேன் அதில் இருந்து அவர் முதலமைச்சரா வந்தால் தமிழ்நாட்டிற்கு நல்லது செய்வார் என்று முடிவு எடுத்தேன். உண்மை
  12. கிரிராஜன், கிரிதரன், கிஷோர், கிருத்திக், கிளிவளவன். கு: குணாளன், குமரவேல், குரு, குலசேகரன், குணசேகர், குமரேசன், குயிலன். கூ: கூத்தன், கூத்தபிரான், கூர்மன், கூத்தன், கூத்தவேல். கே: கேசவன், கேதாரீஸ்வரன், கேடயன், கேயன், கேசவன், கேதார். எனது நட்சத்திரத்தில் பையன் பிறந்தபடியால் நல்லாயிருப்பான்.
  13. திருவோணம் நட்சத்திரத்திற்குரிய கி, கூ, கே, கோ (Khi, Koo, Ke, Ko) ஆகிய எழுத்துக்களில் தொடங்கும் தூய தமிழ் பெயர்கள் Male Baby
  14. ஆரம்பத்தில் விஜயின் கட்சிக்கு 10% இற்கும் குறைவான வாக்குகளே வரலாம் என நினைத்தேன், விஜையின் கட்சி கொள்கை எதுவும் இருப்பது போல எனக்கு தெரியவில்லை (கட்சிக்கென ஏதாவது கொள்கை உண்டா என தெரிந்தவர்கள் கூறவும்), அதனால் மக்கள் கண்டு கொள்ளமாட்டார்கள் என நினைத்தேன், ஒரு காணொளியில் விஜையின் பெயரை கூறியது அரங்கிலிருந்த மக்கள் ஆர்ப்பரிப்பதனை பார்க்கும் போது விஜையிற்கு வாக்குகள் கணிசமாக கிடைக்கும் போல உள்ளது. ஆனால் அந்த கூட்டம் ஒரு இளையவர்கள் அதிகமாக உள்ள கூட்டம் .
  15. திமுகவை தோற்கடிப்பதற்கு அதிமுக பலமடைய வேண்டும். விஜை வரும்பேதே கூட்டணிக்கு தயாரக இருப்பதாகச் சொன்னார். ஆனால் அளவுக்கு மீறி ஆசைப்பட்டதால் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முடியவில்லை.தற்போதைய நிலையில் 25 தொகுதிகள் அவருக்குப் போதுமானது. எடுத்த எடுப்பிலேயே முதல்வர் பதவிக்கு ஆசைப்படலாமா? அவர் தனித்து நின்றால் திமுகவின் வெற்றி எளிதாக இருக்கும். சீமான் எப்போதும் தனித்தே நிற்பார். விஜையின் வருகையால் சீமானின் வக்கு வங்கிக்கு எந்தப்பாதிப்பும் இல்லை. சீமான் எதிராளிகளின் எதிர்பார்ப்புகளுக்கு மேலாக அவர் தன்னுடைய வாக்கு சத வீதத்தை உயர்த்துவார். விஜை தனித்து நின்றால் அவருக்கு இது கடைசித் தேர்தலில் சீமானின் தனித்து நின்று இப்போதிருக்கும் வாக்கு சதவீதத்தை தக்க வைத்தாலே எதரிர்காலத்தில் தவிர்க்க முடியாத அரசியல்சக்தியாகி விடுவார்.
  16. பனையாலை விழுந்தவனை மாடேறி மிதித்தது போல இன்று வட்டி விகிதத்தினை 0.25% ஆக உயர்த்தியுள்ளார்கள், பொருளாதார சரிவு வரும் போல உள்ளது (எனது கருத்து - பொருள்களின் விலை அதிகரிக்கிறது மக்கள் செலவு செய்ய தயாராக இல்லை) , ஆனாலும் வட்டி விகிதத்தினை உயர்த்தியுள்ளார்கள்.
  17. பிபி ட்ரம்பை மாட்டிவிட்டுட்டார் என கூறுகிறார்கள், கடந்த கால அமெரிக்க அதிபர்களது மேசையிலும் ஈரானிற்கெதிரான தாக்குதல் கோப்பு காணப்படுமாம், ஆனால் அவர்கள் மாட்டுப்படவில்லை, ட்ரம்ப் மாட்டுப்பட்டுவிட்டார் என கூறுகிறார்கள்.
  18. இங்கு 91 பெற்றோல் விலை முன்னர் 1.48 - 2.09 எனும் விலைக்குள் காணப்படும் ஆண்டு சராசரி விலை $1.72, இங்கிலாந்து பவுண்ஸில் 0.91(தற்போதய நாணய மாற்று), இங்கிலாந்து சராசரி பெற்றோல் விலை (91) பவுண்ஸில் 1.31 என இணையத்தில் கூறுகிறது அது அவுஸின் நாணயத்தில் $2.47, தற்போது பெற்றோல் விலை தொடர்ந்து இங்கு அதிகரித்து செல்கிறது இன்று $2.27 ($3 டொலர் வரை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது). ஒப்பீட்டளவில் இங்கிலாந்தில் பெற்றோல் விலை சாதாரணமாகவே அதிகமாக உள்ளது, அத்துடன் மூன்றாம் தரப்பு காப்புறுதி மிக அதிகமாக உள்ளது, வாகன வரி கிட்டத்தட்ட ஒரே அளவாக உள்ளது (5 வருடத்திற்கு குறைவான காரிற்கு குறைவாக இருக்கும்). பெற்றோல் மிகையாக உற்பத்தி செய்யும் நாடு என கூறியுள்ளீர்கள், ஏன் இங்கிலாந்தில் பெற்றோல் விலை அதிகமாக உள்ளது?
  19. பயங்கரவாத சதி வழக்கில் ஆறு உக்ரேனியர்களும், அமெரிக்க பிரஜையும் இந்தியாவில் கைது! இந்தியாவிற்கு எதிராகப் பயங்கரவாதச் செயல்களை மேற்கொள்ள சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் ஆறு உக்ரேனிய நாட்டினரும் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவரும் தேசிய புலனாய்வு முகமை (‍NIA) அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த வாரம் பல NIA குழுக்களால் ஒருங்கிணைந்த நடவடிக்கையில் மேற்கொள்ளப்பட்ட இந்த கைதுகள், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA) பிரிவு 18 இன் கீழ் மற்றும் பிற தொடர்புடைய பிரிவுகளின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை மாலை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த அந்த நபர் கொல்கத்தா விமான நிலையத்தில் குடிவரவுத் துறையினரால் தடுத்து வைக்கப்பட்டார். மேலும், ஆறு உக்ரேனியர்கள் லக்னோ மற்றும் டெல்லி விமான நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர் செல்லுபடியாகும் விசாக்களில் இந்தியாவிற்குள் நுழைந்ததாகவும், ஆனால் கட்டாய தடைசெய்யப்பட்ட பகுதி அனுமதி இல்லாமல் மிசோரமுக்குச் சென்றதாகவும் ஒரு வட்டாரம் தெரிவித்தது. அங்கு, இந்தியாவிற்கு விரோதமான இனக் குழுக்களை அவர்கள் சந்தித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், ஐரோப்பாவிலிருந்து வந்த பல ட்ரோன் சரக்குகளை அவர்கள் மிசோரம் மாநிலத்தில் கொண்டுவந்து சேர்த்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது என்றும் அந்த வட்டாரம் தெரிவித்தது. சந்தேக நபர்கள் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டு, சனிக்கிழமையன்று நீதிபதி முன் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அவர் அவர்களை மூன்று நாட்கள் நீதிமன்றக் காவலில் வைத்தார். சந்தேக நபர்களுக்கான தடுப்புக் காவல் திங்கட்கிழமையன்று மீண்டும் 11 நாட்கள் நீட்டிக்கப்பட்டு மார்ச் 27 வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர். அந்தக் குழு பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிட்டு வந்ததாகவும், அவர்களின் நடமாட்டம் எல்லை தாண்டிய அச்சுறுத்தல்கள் குறித்து கவலையை ஏற்படுத்தியதாகவும் NIA குற்றம் சாட்டியுள்ளது. https://athavannews.com/2026/1468779
  20. சீனாவில் மனித வடிவ ரோபோவை கைது செய்த பொலிசார். சீனாவின் மகாவ் நகரில் 70 வயதுடைய ஒரு பெண்மணியை பயமுறுத்தியதாக கூறப்படும் மனித வடிவ ரோபோவை பொலிஸார் கைது செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தகவல்களின் படி, வீதியில் நடந்து கொண்டிருந்த பெண் தனது கைபேசியை பார்க்கும்போது, பின்னால் ரோபோ வந்ததை கவனித்தார். ரோபோ அருகில் நின்றிருப்பதைப் பார்த்ததும் பெண் அதிர்ச்சியடைந்தார். இந்த ரோபோ மகாவ் நகரில் உள்ள ஒரு கல்வி மையத்திற்கு சொந்தமானது. சம்பவத்திற்கு பிறகு ரோபோ அதன் 50 வயதான உரிமையாளரிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. பொலிஸார் பொதுமக்கள் இருப்பிடங்களில் ரோபோக்களை அதிக எச்சரிக்கையுடன் பயன்படுத்தும்படி அறிவுறுத்தியுள்ளனர். கல்வி மையத்தின் பிரதிநிதி டோவின் மேக், ரோபோ சம்பவத்திற்குப் பின்னர் அந்த பகுதியை விட்டு வெளியேறிக் கொண்டிருந்ததாகவும், இதனால் இந்த சந்திப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். சம்பவத்திற்கு நேரில் சாட்சி பெற்ற சிலர் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். பின்னர் பெண் மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்றார், எந்தவித புகாரும் அளிக்க மாட்டேன் என தெரிவித்தார். சமூக ஊடகங்களில் இந்த சம்பவம் பரவியதைக் கண்ட பிறகு, பொலிஸார் ரோபோவை கைது செய்ததை நகைச்சுவையாகவும் பகிர்ந்து வருகின்றனர். https://athavannews.com/2026/1468772
  21. இலங்கை கடல் பகுதியில் அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் – ஈரான் உறுதி! இலங்கைக்கு அருகே இந்தியப் பெருங்கடலில் 100க்கும் மேற்பட்ட ஈரானிய மாலுமிகளைக் கொன்ற கொடூரமான கடற்படைத் தாக்குதலைத் தொடர்ந்து, ஈரானிய கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் ஷாராம் இரானி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த தாக்குதலுக்கு தீர்க்கமான மற்றும் எதிர்பாராத பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் சூளுரைத்துள்ளார். ஈரானிய செய்திச் சேவையான Press TV தகவலின்படி, தனது வீரர்களின் மரணங்களுக்குப் பதிலடி கொடுக்காமல் விடமாட்டோம் என்று அந்த மூத்த அதிகாரி அறிவித்ததோடு, அந்த தாக்குதல் சற்றும் எதிர்பாராத இடத்திலிருந்து வழங்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார். இந்த அறிக்கை, ஈரானின் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் அமீர் ஹதாமியின் முந்தைய கருத்துக்களைத் தொடர்ந்து வந்துள்ளது. அனர் முன்னதாக ஐரிஸ் தேனா போர்க்கப்பலின் மாலுமிகளின் மரணங்களுக்கு ஈரான் பதிலளிக்காமல் போகாது என்று எச்சரித்திருந்தார். அந்தக் கப்பல் ஒரு அமைதியான பணியை முடித்துவிட்டு, போரில் ஈடுபடாத நிலையிலும் ஈரானுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது தாக்கப்பட்டதாக ஹதாமி விளக்கினார். மாலுமிகளின் தியாகத்தை ஈரானின் கடற்படை வரலாற்றில் தைரியத்தின் நீடித்த சின்னமாக அவர் விவரித்தார். மார்ச் 4 அன்று, இலங்கையின் காலி கடற்கரையிலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில், ஈரானிய கடற்படையின் ‘தேனா’ என்ற போர்க்கப்பல், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட MK-48 ரக நீர்மூழ்கி ஏவுகணையால் தாக்கப்பட்டது. இந்தியாவில் நடைபெற்ற பன்னாட்டு கடற்படைப் பயிற்சியில் பங்கேற்றுத் திரும்பிக்கொண்டிருந்தபோது, சர்வதேச கடல் பகுதியில் இந்தக் கப்பல் குறிவைக்கப்பட்டது. இந்தத் தாக்குதலில் 104 மாலுமிகள் கொல்லப்பட்டதாகவும், 87 உடல்கள் மீட்கப்பட்டதாகவும், 32 மாலுமிகள் மீட்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. இந்திய கடற்படையின் அழைப்பின் பேரில் ஐரிஸ் தேனா கூட்டுப் பயிற்சியில் பங்கேற்றதால், இந்தத் தாக்குதல் குறிப்பாக சர்ச்சைக்குரியதாகியுள்ளது. அமெரிக்கப் போர்ச் செயலர் பீட் ஹெக்ஸெத் இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பரவலான சீற்றத்தையும் கண்டனத்தையும் தூண்டியுள்ளது. https://athavannews.com/2026/1468790
  22. கியூபாவை கைப்பற்றுவேன்! அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் அதிரடி சபதம்! கியூபா தீவைக் கொண்டு எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று கூறிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ‘அத்தீவை கைப்பற்றும் பெருமையை நான் பெறுவேன்’ என்றும் குறிப்பிட்டுள்ளார். ‘கியூபாவை விடுவித்தாலும் சரி, அல்லது கைப்பற்றினாலும் சரி, என்னால் அந்தத் தீவைக் கொண்டு எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று நினைக்கிறேன். கியூபா ஒரு அழகான தீவு. சிறந்த வானிலை கொண்டது. அதை வசப்படுத்திய பெருமை எனக்கு கிடைக்கும். கியூபாவை நட்பார்ந்த முறையில் கைப்பற்றுவது பற்றி அந்நாட்டு அதிகாரிகளுடன் நிர்வாகம் பேசி வருகிறது’ என ட்ரம்ப் தெரிவித்தார். கரீபியன் தீவு நாடான கியூபாவுக்கும் அமெரிக்காவும் இடையே நீண்ட கால பகை காணப்படுகிறது. கியூபாவுக்கு சென்றுகொண்டிருந்த வெனிசுவெலா நாட்டு எண்ணெய் விநியோகத்தை அமெரிக்கா நிறுத்திவிட்டது. இதனால் கியூபாவில் டீசல் மூலம் இயங்கும் அனல் மின் நிலையங்கள் எரிபொருள் இல்லாமல் முடங்கின. அதையடுத்து, மின் தடை ஏற்பட்டு அந்நாடு முழுவதும் இருளில் மூழ்கியது. அமெரிக்க எண்ணெய் தடை விதித்தமையால், கியூபா பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு நீண்ட நேர மின்வெட்டு, உணவுப் பொருட்களின் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் அவதிப்படுகின்றனர். இந்நிலையில், அங்கு அரசுக்கு எதிராக போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த சந்தர்ப்பத்திலேயே கியூபாவைக் கைப்பற்றும் தனது விருப்பினை இந்த சந்தர்ப்பத்திலேயே கியூபாவைக் கைப்பற்றும் தனது விருப்பினை ட்ரம்ப் வெளிப்படுத்தியிருக்கிறார். https://athavannews.com/2026/1468797
  23. உலக ஒழுங்கை மாற்ற முனைவதை வேடிக்கை பார்க்கலாமா? March 16, 2026 — சின்னத்தம்பி குருபரன் — அடிக்கடி குணமும் கொண்ட கொள்கையும் மாறும் அமெரிக்க சனாதிபதி ரொனால்ட் ட்ரம்புக்குக் கடிவாளம் போட்டுத் தடுத்து நிறுத்தாது உலக வல்லரசுகள் இனிமேலும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் அதன் பலனை உலக மக்கள் அனைவரும் அனுபவித்து ஆகவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாம். தற்பொழுது நடைபெறும் அமெரிக்க, இஸ்ரேல், ஈரான் யுத்தம் உலக ஒழுங்கை மாற்றி, மத்திய கிழக்கை அச்சுறுத்தி, அதனை நம்பி இருக்கின்ற உலக நாடுகள் அனைத்தையும் பாதித்துக் கொண்டிருக்கின்றன. மத்திய கிழக்கை அண்டிய பிரதேசங்களில் தரை, கடல், ஆகாய வழிப் போக்குவரத்துப் பாதைகள் அனைத்தையும் பாதித்திருக்கின்றன. அதனால் மசகு எண்ணெய், எரிவாயு, மருந்து மற்றும் ஏனைய பொருட்களின் ஏற்றுமதி இறக்குமதிகள் பாதிக்கப்பட்டதனால் மசகு எண்ணெங், எரிவாயு போன்றவற்றின் விலைகள் கிடுகிடுவென ஏறிக் கொண்டிருக்கின்றன. ட்ரம்ப், பெஞ்சமின் நெத்தன்யாகு ஆகியோரின் அடாவடித் தனங்களால் விளைந்த பலனை உலக மக்கள் யாவரும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். ‘வரவு எட்டணா செலவு பத்தணா..’ என்பது போல் வாழ்க்கைச் செலவு அதிகரித்து மத்திய, கீழ்தட்டு மக்களைப் பெருவாரியாகப் பாதிக்க ஆரம்பித்துவிட்டன. ஒரு சுதந்திர நாட்டின் இறைமை தன்னாதிக்கம் ஒருமைப்பாடு, ஆள்புலம் என்பவற்றைப் பாதுகாப்பதற்காக உலக நாடுகள் இணைந்து பல சட்டங்களை இயற்றி இருப்பதோடு பல உடன்படிக்கைகளும் செய்யப்பட்டிருக்கின்றன. நாடுகளின் இறைமை (Sovereignty), ஆள்புலம் (Territory) மற்றும் பாதுகாப்புத் தொடர்பான சர்வதேச சட்டங்கள், ஒப்பந்தங்கள் மிக நீண்ட வரலாற்றைக் கொண்டவை. 1648 வெஸ்ட்பாலியா அமைதி ஒப்பந்தமே (Peace of Westphalia) நவீன சர்வதேச அரசியலின் தந்தை எனப்படுகிறது. ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் மற்ற நாடுகள் தலையிடக்கூடாது என்ற “அரசு இறைமை” (State Sovereignty) என்ற கொள்கை முதன்முதலில் அங்கீகரிக்கப்பட்டது. 1783 பாரிஸ் உடன்படிக்கை அமெரிக்காவின் இறைமை, ஆள்புல எல்லைகளைப் பிரித்தானியா அங்கீகரித்த பிரதானஒப்பந்தமாகும். 1815 வியன்னா மாநாடு (Congress of Vienna) நெப்போலியனின் ஆக்கிரமிப்புப் போர்களுக்குப் பின்னர் ஐரோப்பிய நாடுகளின் எல்லைகளை மறுசீரமைக்கவும், நாடுகளுக்கு இடையிலான தூதரக உறவுகளை ஒழுங்குபடுத்தவும் இது வழிவகுத்தது. 1864 இல் முதலாவது ஜெனிவா உடன்படிக்கையின் மூலம் போர்க் காலங்களில் காயமடைந்த வீரர்களின் பாதுகாப்பு, மருத்துவப் பணியாளர்களின் மனிதாபிமான நடுநிலைத்தன்மை குறித்து முதன்முதலில் பேசப்பட்டுக் கைச்சாத்திடப்பட்டது. 1899 இல் கூடிய ஹேக் மாநாட்டின் (Hague Summit) சர்வதேச மோதல்களை அமைதியான முறையில் தீர்ப்பது, போர் விதிகளை (Laws of War) வரையறுப்பது இதன் நோக்கங்களாக அமைந்தன. வெர்சாய் ஒப்பந்தம் (1919, Treaty of Versailles) முதலாம் உலகப்போருக்குப் பின்னர் நாடுகளின் எல்லைகளை மாற்றியமைத்ததுடன், சர்வதேச சங்கத்தை (League of Nations) உருவாக்க வழிவகுத்தது. இரண்டாம் உலக மகா யுத்தத்தின் நிறைவில் 1945 இல் ஏற்படுத்தப்பட்ட ஐக்கிய நாடுகள் சாசனம் (UN Charter) நவீன உலகின் மிக முக்கியமான ஆவணமாக அமைந்தது. உறுப்புரை 2(4), ஒரு நாட்டின் ஆள்புல ஒருமைப்பாடு அல்லது அரசியல் சுதந்திரத்திற்கு எதிராக பிறிதொரு நாடு பலப் பிரயோகம் செய்வதைத் தடை செய்கிறது. உறுப்புரை 51, ஒரு நாடு தாக்கப்படும்போது தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் (Self-defence) உரிமையை வழங்குகிறது. 1949 இன் வட அட்லாண்டிக் ஒப்பந்தத்தின்(NATO) மூலம் கூட்டுப் பாதுகாப்பு (Collective Defense) கொள்கையின் கீழ் இராணுவக் கூட்டணி உருவாக்கப்பட்டது. 1961 இல் மேற்கொள்ளப்பட்ட ‘வியன்னா தூதரக உறவுகள் உடன்படிக்கை’ ஒரு நாட்டின் ஆள்புலத்திற்குள் இருக்கும் பிற நாட்டுத் தூதரகங்களின் பாதுகாப்பு உரிமைகளை அந்நாட்டுக்கு உரியவை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. 1982 கடல் பாதுகாப்புச் சட்டத்திற்கான ஐநா உடன்படிக்கை (UNCLOS) ஒரு நாட்டின் கடல் எல்லை (Territorial Sea), பிரத்தியேகப் பொருளாதார வலயம் (EEZ) ஆகியவற்றின் இறைமையை வரையறுத்தது. இந்த நூற்றாண்டில் (2001) ‘பொறுப்புடன் பாதுகாத்தல்’(Responsibility to Protect – R2P) என்ற கொள்கைப் பிரகடனத்தின்படி இறைமை என்பது வெறும் அதிகாரம் மட்டுமல்ல, அது குடிமக்களைப் பாதுகாக்கும் பொறுப்புக்கூறல் என்ற கருத்தாக்கம் உருவானது. 2014 புடாபெஸ்ட் குறிப்பாணை தொடர்பான விவாதங்கள் நாடுகளின் ஆள்புல ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்தும் பாதுகாப்பு உத்தரவாதங்கள் பற்றிய சர்வதேச சட்ட விவாதங்கள் தீவிரமடைந்தன. சட்ட ஏற்பாடுகளாக (Uti Possidetis Juris) ஒரு நாடு சுதந்திரம் அடையும் போது, அதன் முந்தைய நிர்வாக எல்லைகளே அந்த நாட்டின் ஆள்புல எல்லைகளாகக் கருதப்படும் என்பதும், Non-Intervention என்ற ஏற்பாடுகளின்படி ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் மற்ற நாடுகள் தலையிடக் கூடாது என்ற சட்டம் உருவாக்கப்பட்டது. இவற்றைவிட பிராந்திய ரீதியிலான அரசியல், பொருளாதார, பாதுகாப்புக் கூட்டு உடன்படிக்கைகள் எத்தனையோ செய்யப்பட்டு நடைமுறையில் இருக்கின்றன. இப்போது மக்களின் கேள்வி என்னவென்றால் “இத்தனையும் இருந்தும் என்ன பயன்” என்பதுதான். ஐக்கிய நாடுகள் சபை எதற்கு?, பிராந்திய, சர்வதேச ஒப்பந்தங்கள், சட்ட ஏற்பாடுகள் எதற்கு? எனப் பலரும் கேட்கின்றனர. அமெரிக்கா என்ற சட்டம்பிக்குப் பயந்த நிலையா?, அப்படியாயின் ஏன்? எதற்குப் பாதுகாப்பு ஒப்பந்தங்கள். இராணுவப் புரட்சி ஏற்பட்டு இராணுவம் நாட்டைக் கைப்பற்றுகிறது. தீவிரவாதிகள் நாட்டைக் கைப்பற்றுகின்றனர். இறைமை கொண்ட ஒரு நாட்டின் மீது இன்னொரு நாடு படை எடுக்கிறது. அமெரிக்கப் படை வெனிசுவெலா நாட்டின் ஆள்புல எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து அந்நாட்டின் சனாதிபதி நிக்கலஸ் மதுரோவையும் அவரின் மனைவியையும் கைது செய்து நியூயோர்க் சிறையில் வைத்திருக்கின்றனர். அமெரிக்க சனாதிபதி ரொனால்ட் ட்ரம்ப் தாம் நினைத்த மாத்திரத்தில் பொருளாதாரத் தடைகளையும் வரி விதிப்புக்களையும் மேற்கொள்கின்றார். யுத்தப் பிரகடனம் செய்கின்றார். படையை நகர்த்துகின்றர். பிற நாடுகளின் ஆள்புல எல்லைக்குள் புகுந்து மக்களையும் உடமைகளையும் அழித்து அரசியல்வாதிகளையும் கொலை செய்கின்றார். அவரின் அடாவடித்தனம் நீண்டு கொண்டே செல்கின்றன. தனது நாட்டின் சட்ட திட்டங்களையா, சர்வதேச சட்டங்களையோ, ஐக்கிய நாடுகள் சபை, பாதுகாப்புச் சபை, அமெரிக்கக் காங்கிரசினதோ, செனற் சபையினதோ, நேட்டோ அமைப்பினதோ எந்தவொரு அனுமதியும் பெறப்படாமல் அத்தனை சட்டங்கள் ஒப்பந்தங்களையும் மீறி ஈரானின் மீது யுத்தப் பிரகடனம் செய்து ஈரானின் 6000 இலக்குகள்மீது இஸ்ரேலுடன் இணைந்து குண்டு வீசித் தாக்கியதாக மார்தட்டி அறிக்கை விடுகின்றார். அங்கு வீசப்பட்ட குண்டுகளில் பெரும்பாலானவை அப்பாவி மக்களின் தலைகளிலும் உடமைகளிலும்தான் விழுந்திருக்கின்றன. வீசப்பட்ட குண்டுகள் குறித்த இலக்கை மாத்திரம் தாக்குவதற்கு அவற்றுக்குக் கண்கள்தான் உண்டா?. அப்படியாயின் ஈரானிய ஆன்மீகத் தலைவரைக் கொல்வதற்கு 40 அதிசக்திவாய்ந்த குண்டுவீச்சு விமாங்கள் எதற்கு? குறிபார்த்து வீசப்பட்ட குண்டு ஆன்மீகத் தலைவரைக் கொல்வதற்கு ஒரு ஓரிரு விமானங்கள்போதுமே. சர்வதேசச்சட்டங்கள் கடதாசியில் இருக்கத்தக்கதாக இறைமை கொண்ட ஒரு நாட்டின் ஆள்புல எல்லைக்குள் புகுந்து ஆன்மீகத் தலைவர் தாக்கப்பட்டதை உலகம் வேடிக்கை பார்ர்த்துக் கொண்டிருக்கின்றதா? இஸ்ரேல் காசாவில் வீசிய குண்டுகளும் ஏவுகணைகளும் பல வைத்தியசாலைகளையும் பாடசாலைகளையும் பதம் பார்த்தன. அண்மையில் அமெரிக்க விமானப் படை வீசிய குண்டு ஈரானிலுள்ள பாடசாலையில் விழுந்ததனால் 300 க்கு மேற்பட்ட சிறுவர்கள் கொல்லப்பட்டனர். இவ்வாறுதான் இலங்கை உள்நாட்டு யுத்த காலத்தில் ஆலயங்கள், வைத்தியசாலைகள், பாடசாலைகள், சிறுவர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள்மீதும் குண்டுமாரி பொழிந்ததனால் மக்கள் வகை தொகையின்றிக் கொல்லப்பட்டனர். சர்வதேச சட்டத்தின்படி ஆலயங்கள், வைத்தியசாலைகள், பாடசாலைகள், ஆதரவற்றோர் இல்லங்கள, மாற்றுத் திறனாளிகளின் இருப்பிடங்கள் மீது குண்டு வீசித் தாக்குவது சர்வதேச யுத்த மீறலாகும். என்பதிருக்க அமெரிக்கா, இஸ்ரேல், ரஷ்சியா போன்ற நாடுகள் இவற்றின்மீது குண்டு வீசிக் கொண்டிருக்கின்றன. இதனைத் தட்டிக் கேட்பதற்கு சர்வதேச சமூகம் முன்வரவில்லை என்பதே மக்களின் அங்கலாய்ப்பு. ரஷ்சியா 1984 க்கு முன்னர் தமது ஆள்புல எல்லைக்குள் இருந்து சுதந்திரம் பெற்றுச் சென்ற உக்ரெயின் மீது சில காரணங்களை முன்வைத்துத் தாக்குகிறது. இதுவும் போர்க் குற்றமே. ஆனால், அமெரிக்காவும் இஸ்ரேலும் அவ்வாறல்ல. அமெரிக்கா உகண்டா, ஈராக், லிபியா, வெனிசுவெலா போன்ற நாடுகளின் அரசுத் தலைவர்களை வெளியேற்றியும், சிறைப்படுத்தித் தூக்குத் தண்டனை விதித்தும் ஈரான் பிரதமர், ஆன்மீகத் தலைவரைத் தாக்கிக் கொலை செய்தும் அட்டகாசம் காட்டிக் கொண்டிருக்கிறது. அதேபோல், தனக்கு விசுவாசமாக இல்லாத பல நாடுகளின் ஆட்சியைக் கவிழத்தும் இருக்கின்றன. வியட்னாம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து ‘விழுந்தும் மீசையில் மண் ஒட்டாதது போல் தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் நாடுகளிலிருந்து விலகிச் சென்றனர். அமெரிக்கா உலக பொலிஸ்காரன்போல் ஏனைய நாடுகளின் அரசியல், பொருளாதாரம், வர்த்தகம், பாதுகாப்பு ஆகியன தனக்குச் சாதகமாக இல்லாதபோது தட்டிக் கேட்பதும், பொருளாதாரத் தடைகளை விதிப்பதும் குறித்த நாடுளை அச்சுறுத்தி அடிபணியச் செய்வதும், போர்ப் பிரகடனம் செய்து குண்டுவீசித் தாக்குவதும் வாடிக்கையாகிவிட்டன. இதனைத் தட்டிக் கேட்பதற்கு நாதியில்லாமல் ஐக்கிய நாடுகள் சபை, ஏனைய அமைப்புக்கள், நாடுகள் மௌனம் சாதிப்பது ரொனால்ட் ட்ரம்பை மேலும் உருவேற்றிக் கொண்டிருக்கின்றன. மத்திய கிழக்கில் நடைபெறும் யுத்தம் அப்பிராந்தியத்தை மட்டுமன்றி நேரடியாகவும் மறைமுகமாகவும் சகல நாடுகளையும் பாதித்துக் கொண்டிருக்கின்றன. பொருளாதார ரீதியாகப் பல நாடுகள் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. சர்வதேச சட்டத்தினால் தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டுகள், வெள்ளைக் கந்தகக் குண்டுகள், இரசாயனம், அமிலம் கலந்த குண்டுகள் வீசப்படுகின்றன. பெரும்பாலான யுத்த மீறல்கள், சட்ட மீறல்களை அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் சர்வசாதாரணமாக மேற்கொண்டு வருகின்றன. அமெரிக்கா தங்களைத் தாக்குகிறது அதனால் நாங்கள் மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்காவின் படைத் தளங்களைத் தாக்குகிறோம் என ஈரான் நியாயம் கற்பிக்கிறது. அத்தோடு உலகுக்கு 20 வீதமான மசகு எண்ணெய்களைக் கப்பல்கள் செல்லும் ஈரானின் கட்டுப்பாட்டிலுள்ள ஹோர்மூஷ் நீரிணை மூடப்பட்டதனால் மசகு எண்ணெய்த் தாங்கிக் கப்பல்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கின்றன. அதனால் உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 100 அமெரிக்க டொலரைத் தாண்டிவிட்டது. யுத்தம் நீடித்தால் 150 டொலரையும் தாண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பல நாடுகள் எரிபொருளின் விலையைக் கண்டபடி ஏற்றிஇருக்கின்றன. அதனால், ஏற்றி, இறக்கல் செலவு அதிகரித்துச்சகல நாட்டு மக்களினதும் வாழ்க்கைச் செலவை அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. அமெரிக்கா (5,117), இரசியா (5,459), சீனா (600), பிரித்தானியா (225), பிரான்ஸ் (290), இந்தியா (180), பாகிஸ்தான் (170), இஸ்ரயேல் (90), வடகொரியா (50), ஈரான்(35) ஆகிய நாடுகள் அணுவாயுதப் பரவல் தடை (NPT) ஒப்பந்தத்தையும் மீறி அணுவாயுதங்களை வைத்திருக்கின்றன. இதில் ரஷ்சியாவும், அமெரிக்காவும் 85 வீதமான அணுவாயுதங்களை வைத்திருக்கின்றன. அமெரிக்கா நேட்டோ நாடுகள் பலவற்றிலும், அமெரிக்கத் தளங்கள் உள்ள மத்திய கிழக்கு நாடுகளிலும் அணுவாயுதங்களை வைத்திருக்கின்றன. இது உலக நாடுகளுக்குப் பாரிய அச்சுறுத்தலாக இருக்கின்றது. இந்தியாவின் விசாகப் பட்டிணத்தில் போர்ப் பயிற்சி முடிந்து நாடு திரும்பிய ஈரானியப் போர்க் கப்பல் இந்து சமுத்திரப் பிராந்திய கடல் எல்லைக்குள், காலித் துறைமுகத்தில் இருந்து 40 கடல் மைல்களுக்கு அப்பால் வைத்து அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கப்பட்ட சம்பவம் அப்பிராந்திளத்தின் கடல் பாதுகாப்பினைக் கேள்விக் குறியாக்கி இருக்கின்றன. இச்சம்பவத்தால் இலங்கை பயந்து, நடுங்கி, ஒடுங்கி இருக்க, ரஷ்சியாவின் எண்ணெய்க் கப்பல்கள் இந்தியாவுக்குச் சுதந்திரமாக வந்து செல்வதற்கு அமெரிக்காவின் ஒத்துழைப்புத் தேவை என்பதனால் இந்திய மோடி அரசு ‘தனக்குப் பல் போனாலும் பரவாயில்லை. எண்ணெய்த் தாங்கிக் கப்பல்கள் தனது நாட்டுக்கு வரவேண்டும்’ என்பதற்காக மௌனித்து நிற்கிறது. மத்திய கிழக்கின் எண்ணெய் வளத்தைச் சுரண்டுவதற்கும் ஈரானின் கட்டுப்பாட்டிலுள்ள ஹோர்மூஸ் நீரிணையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதற்காகவும், அதற்குத் தடையாக இருக்கின்ற ஈரானின் ஆட்சி அதிகாரத்தைஅகற்றித் தனக்கு ஏற்ற தலையாட்டிப் பொம்மைகளை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்பதற்காக ஈரானுக்கு எதிரான யுத்தத்தை அமெரிக்கா நடத்துகிறது. இது தன்னுடைய சுயநலனுக்காக என்பதைத் தவிர வேறு எந்தக் காரணமும் இருக்க முடியாது. இதற்கு அமெரிக்கா எடுத்து வைத்திருக்கும் துருப்புச் சீட்டுத்தான் ஈரான் மேற்கொள்ளும் யுரேனியம் செறிவாக்கல் முயற்சிகளும், அணுவாயுதங்களும் உலகுக்கு அச்சுறுத்தலாக அமைகின்றன என்பதுதான். ரஷ்சியாவும் அமெரிக்காவும் திருப்பதி லட்டுக்கள் போல் அணுவாயுதங்களைத் தயாரித்து வைத்திருக்கின்றனவே, அது அச்சுறுத்தல் இல்லையா?. லிபியா, ஈராக் போன்ற நாடுகளில் அமெரிக்காவால் நிறுவப்பட்ட பொம்மை ஆட்சிகள் வெற்றி அளித்தனவா?. ஈராக்கின் 30 வீதத்தக்கு மேற்பட்ட நிலப்பரப்புப் பூரணமாக ஈரானின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டியது எண்ணெய் வள உற்பத்தியில் மூன்றாவது நான்காவது இடத்தில் இருக்கும் ஈரான், வெனிசுவெலா ஆகிய நாடுகளைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால் உலக ணெணெய் வளத்தைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தமைக்குச் சமமாகிவிடும் என அமெரிக்கா நினைப்பது. இதற்காகவே ட்ரம்ப் நடத்தும் யுத்தம். இந்த யுத்தத்தால் உலகின் பெரும்பாலான நாடுகள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது, ஹோர்மூஸ் நீரிணையைப் பாதுகாப்பதற்காக நாடுகளின் ஒத்துழைப்பைக் கோரி, யுத்தக் கப்பல்களைப் பாதுகாப்புக்கு அனுப்பமாறும் கேட்டிருக்கின்றமை. பெஞ்சமின் நெத்தன்னியாகுவின் யுத்த நோக்கம் வேறானது. மத்திய கிழக்கின் பலம்வாய்ந்த ஏக சக்தியாக இருப்பதற்கு ஈரான் அச்சுறுத்தலாக இருப்பதும், ஹமாஸ், ஹிஸபுல்லாஹ், ஹவுதி தீவிரவாத அமைப்புக்களுக்கு ஈரான் படைக்கல உதவியும் நிதி உதவியும் வழங்கிப் பாதுகாத்து வருவதனால் ஈரானைப் பூண்டோடு அழித்து விடுவது என இஸ்ரேல் கங்கணம் கட்டிக் கொண்டு யுத்த்ததில் இருப்பது தோல்வியில் முடியப் போகின்றது. அமெரிக்கா, ரஷ்சியா, சீனா, இந்தியா, இஸ்ரேல், ஈரான் (அயதொல்லா அலி கமெய்னி) ஆகிய நாடுகளின் தலைவர்கள் எல்லோரும் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள். தம்மை அதியுச்ச சக்தியாக (Supreme Power) வைத்துக் கொண்டிருக்க நினைப்பவர்கள். அதிலும் ட்ரம்ப் அடாவடித் தனங்கள் நிறைந்த அரசியல் கோமாளி போன்றவர். ட்ரம்ப், புட்டின், நெத்தன்னியாகு மூவரும் குற்றவாளிகள். புட்டின் 2036 வரையும் ஆட்சியில் இருப்பதற்கு ஏற்றவாறு அரசியல் யாப்பில் திருத்தங்களை மேற்கொண்டு சுகமாக ஆட்சியில் இருக்கப் போகின்றார். டரம்பும் நெத்தன்னியாகுவுக்கும் சந்தர்ப்பமே கிடையாது. இவர்கள் இருவரையும் தெரிவு செய்தமைக்கான பலனை இருநாட்டு மக்களும் ஆனுபவிக்கின்றனர். அனுபவிக்கப் போகின்றனர். இவர்களின் பிடிவாதமும் அடாவடித் தனங்களும் அவர்களின நாட்டோடு மாத்திரம்தானே இருக்க வேண்டும். ஏன் ஏனைய நாடுகள் பாதிப்படைய வேண்டும். ஈரான் மத்திய கிழக்கில் ஏனைய நாடுகளில் உள்ள அமெரிக்கப் படைத் தளங்களைத் தாக்கி தரை, ஆகாய, கடல்வழிப்போக்குவரத்தைத் தடை செய்திருக்கிறது. இது இஸ்ரேலைப் பாதுகாக்கவும், எண்ணெய் வளங்களைச் சுரண்டவும் அமெரிக்கா செய்த சதி. அமெரிக்காவின் சதி வேலை மத்திய கிழக்கில் உள்ள பல நாடுகளுக்கும் இறைமை, ஆள்புலத்துக்கு அச்சுறுத்தலாக அமைந்திருக்கின்றன. இதிலும் ஒரு வினைப்பயன் இருக்கிறது. அமெரிக்கா, ரஷ்சியா, இஸ்ரேல் செய்யும் அடாவடித் தனங்களைத் தட்டிக் கேட்காமல் இருப்பது நற்செயல் அல்லவே. அதனால்தான் மத்திய கிழக்கில் நடைபெறும் யுத்தத்தின் விளைவுகளை உலக நாடுகள் முழுவதும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றன. ட்ரம்ப் நெத்தன்யாகு ஆகிய இருவருக்கும் கடிவாளம் போடவில்லையாயின் லிபியா, ஈராக், வெனுசுவெலாவில் நடந்தது போலும் காஸா, ஈரான், லெபனான் போன்ற நாடுகளில் நடப்பது போல் தமது நாடுகளிலும் அவ்வாறு நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது. கனடா, மெக்சிக்கோ, கியூபா, வெனிசுவெலா போன்ற நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பது போல, கிறீன்லாந்தைக் கைப்பற்றப் போவதாக எச்சரிக்கை விட்டுக் கொண்டிருக்கின்றார். இன்று ஒரு பேச்சு, இன்று இரவு இன்னொரு அறிக்கை, நாளை ஒரு காரசாரமான எச்சரிக்கை என்றவாறு அரசியல் கோமாளி அடாவடித் தனத்தை தினமும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். இலாப, நட்டங்களைக் கணக்குப் பார்த்துத் திட்டம் போடும் வியாபாரி ஒருவர் இப்படித்தான் இருப்பார். ட்ரம்பும் ஒரு வியாபாரி என்பதும் குறிப்பிடத்தக்கதுது. ஒரு நாட்டின் ஆள்புல அதிகார எல்லைக்குள் (வெனிசுவெலா) அத்துமீறி நுழைந்து அந்நாட்டின் சனாதிபதியையும் அவர் மனைவியையும் சிறைப்பிடித்தமை, ஈரானின் ஆதியுச்ச ஆன்மீகத் தலைவர், பிரதமர் (திட்டமிட்ட விமான விபத்து) கொலை செய்தமை, நாடுகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கின்றமை, நாடுகளின் இறக்குமதிப் பொருட்கள்மீது கண்டபடி வரி விதிக்கின்றமை, பொருளாதாரத் தடைகள் விதிக்கின்றமை, ஈரான், பலஸ்தீனம் (காஸா), லெபனான், யெமன், கட்டார், துபாய், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய நாடுகள்மீது விமானம், ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்களை நடத்துகின்றமை, இந்து சமுத்திர தெற்காசியப் பிராந்திய ஆள்புல எல்லைக்குள் நுழைந்து ஈரானியக் கடற்படைப் போர்க் கப்பலைத் தாக்கியமை, போர்க் கப்பல்களைக் கொண்டுபொய் நிறுத்தி நாடுகளை அச்சுறுத்தியமை, சர்வதேச சட்டங்கள் உடன்படிக்கைகளை மீறியமை இன்னோரன்ன செயற்பாடுகள் உலக ஒழுங்கை மாற்றி, சர்வதேச அமைதியைக் கேள்விக் குறியாக்கிவிடும் என்பதை உலக நாடுகள் மறந்விடக்கூடாது. இன்று அவருக்கு நாளை நமக்கும் ஏற்படலாம் என்பதையும் கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும். இதனைத் தடுத்துச் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாத ஐக்கிய நாடுகள் சபை, பாதுகாப்புச் சபை, சர்வதேச நீதிமன்றம், மனித உரிமை அமைப்புக்கள், பிராந்திய நாடுகளின் கூட்டமைப்புக்கள், உடன்படிக்கைகள், சட்டங்கள், பாதுகாப்பு உடன்படிக்கைகள் ஆகியன இருந்தென்ன பயன் எனப்பலரும் கேட்கும் நிலை உருவாகிவிட்டது. உண்மையும் அதுதான். சிறிய நாடுகள், கிளர்ச்சிக் குழுக்களைக்கூட இவற்றையெல்லாம் மதிக்காது செயற்படும் சூழல் எப்பவோ உருவாகிவிட்டன. இவற்றையெல்லாம் மீறுவதற்கு வழிகாட்டி விட்டவை வீட்டொ அதிகாரம் கொண்ட நாடுகள் என்பதும் மறுப்பதற்கில்லை. இனிமேலும் தாமதிக்காது அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான், ரஷ்சியா, உக்கிரேன் ஆகிய நாடுகளைச் சமாதான வழிக்குத் திருப்பி உடன்படிக்கைக்குள் கொண்டுவராது விட்டால் விளைவு பாரதூரமாக அமைந்துவிடும் என்ன்பதையும் மறந்துவிடலாகாது. அமெரிக்கா, ரஷ்சியா, இஸ்ரேல், சீனா, வடகொரியா போன்ற நாடுகளுக்குக் கடிவாளம் போடத் தாமதிப்பதும் மூன்றாம் உலகமகா யுத்தத்துக்குக் காரணமாகிவிடும். இதற்கு ஏனைய வல்லரசு நாடுகளும், பிராந்திய நாடுகளும் ஒன்றிணைய வேண்டும். தமக்குள் பலமான அணியொன்றைக் கட்டியெழுப்ப வேண்டும். https://arangamnews.com/?p=12737

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.