All Activity
- Past hour
-
நல்ல சமாரியன் (அல்லது) யூதன்
சார் இது ரொம்ப டூமச்😋 இங்கே சொல்ல வேண்டியதை அழகாக சொல்லிவிட்டீர்கள். இதற்குமேல் நான் சொல்ல என்ன இருக்கிறது?
-
கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
- கொழும்பில் இருந்து சவுதிஅரேபியா வழியாக ஒருநாள்
- லண்டனில் யூத அமைப்பிற்கு சொந்தமான 4 அம்பியூலன்ஸ்கள் தீக்கிரை!
2009 இல் நீங்களும், உங்கள் பரம்பரைகளும் பாதுகாப்பாக ஜேர்மனியில் இருந்தீர்கள் அல்லவா? ஜேர்மனியில் உள்ள இலங்கை தூதரகத்துக்கோ, அல்லது இலண்டனில் உள்ள விகாரைக்கோ வந்து ஒரு போத்தலில் பெற்றோலை நிரப்பி எரிய விட்டு ஏன் எறியவில்லை? ஒரு மேற்கு நாட்டில் இருக்கும், இன மத வேறுபாடின்றி மக்களின் உயிரை காக்கும் தன்னார்வ அமைப்பின் மீது தாக்குதலை நடத்ததாத இனமாக நாம் இருப்பதில் ஒரு தவறும் இல்லை. அப்படி ஏதேனும் மோட்டுதனமாக செய்திருப்பின் இன்றுவரை அது வெளிநாட்டில் எம்மை அடக்க ஒரு கருவியாக பயன் பட்டிருக்கும். இப்படியான முட்டாள் சிந்தனையாளர்கள் ஆலோசனை சொல்லும் இடத்தில் இருந்தபடியால்தான் நாமும், போராட்டமும் தலைமையும் தோற்றுப்போகும் படி ஆனது. பிகு இதை செய்தது ஈரானின் உளவு அமைப்பின் கீழ் இயங்கும் ஒரு இயக்கம். சாதாரண யூகே வாழ் முஸ்லிம்கள் அல்ல. இந்த பழியில் இருந்து தம்மை பாதுகாக்க யூகே முஸ்லிம்கள் படாத பாடு படுகிறார்கள். ஆனால் - இதைவைத்து ரிபோர்ம் கட்சி - முஸ்லிம் எதிர்ப்பை ஊதி வளர்கிறது. இப்படியா அடி முட்டாள்தனங்களை ஏன் செய்ய கூடாது, அவை இப்படி செய்தோர் சார் சமூகத்கை பாதிக்கும், இதை வரவேற்பது எவ்வளவு வடிகட்டிய முட்டாள்தனம் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணம். இந்த தன்னார்வ அமைப்பினரோடு எனக்கு ஏற்பட்ட அனுபவம் ஒரு படைப்பாக கீழே 👇- தம்பரும் , இரானும் யுத்த நிறுத்தத்திற்கு தயார்
அமெரிக்க படைகளுக்கு ஒரு ஓய்வு நிலை தேவைப்படுகிறது, ஆயுதங்கள் சேகரிக்க குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு சேர்க்க ஒரு நேரம் தேவையாகலாம், அல்லது நான் போர் நிறுத்தம் கோரினேன் இரான் மறுத்துவிட்டது எனும் ஒரு மாயையை ஏற்படுத்தி மற்றைய நாடுகளை போரில் இழுக்கும் தந்திரம், கச்சா எண்ணெய் விலை சரிவு, இதனால் தன் நிதி நிலையை ஸ்திர படுத்தல், ஈரானை பேச்சு என ஏமாற்றிக்கொண்டு மறு வழியில் போரை உக்கிரமாக தொடர்தல். ட்ரம்பே சொல்லிவிட்டார், எனது எண்ணம் அடிக்கடி மாறுமென. இவர் தெரியாமல் காலை வைத்து விட்டு இப்போ வெளியேற முடியாமல் வேறு வழியுமில்லாமல் தவிக்கிறார். இவ்வளவு தூரம் இந்த போர் தொடருமென அவர் நினைத்திருக்க மாட்டார், வெனிசுலா மாதிரி ஒரு இரவில் முடித்து விடலாமென நினைத்தே தொடங்கியிருப்பார். இவரது அழைப்பையே மற்றைய நாடுகள் உதாசீனம் செய்து விட்டன, இப்போ நெத்தன்யாகு ஈரானை அழிக்க உலக நாடுகளை ஒன்று சேரும்படி அழைக்கிறார். இவர்களால் முடியவில்லை உலக நாடுகள் வரவேண்டுமாம். ட்ரம்ப் சொல்வதுபோல் எந்தப்பேச்சு வார்த்தையும் நடைபெறவில்லை என்று இரான் அறிவிக்கிறது, ட்ரம்ப் ஒருதலைபட்சமாய் பேசுகிறாரே என்னவோ? இரான் விரும்பாத, எதிர்பாராத போரை தொடங்கியவர்கள் இவர்கள், இப்போ எதற்காக போர் நிறுத்த வேண்டுமென்கிறார் ட்ரம்ப்? ஈரான் அழிக்கப்படவேண்டிய நாடு, எங்களுக்கு அச்சுறுத்தலானது என்று கூறி சும்மா இருந்த ஈரானை வம்புக்கிழுத்தவர்கள் இவர்கள், அதே மாதிரி இரான் நினைப்பதில் தவறில்லையே, அவர்கள் கெட்டவர்களாகவே இருக்கட்டும், அவர்கள் தாங்கள் யாரென்பதை நிரூபிக்கவே செய்வார்கள். அதோடு இவர்களின் அச்சுறுத்தலை முறியடித்து தன்னை பாதுகாத்துக்கொள்வதில் தப்பில்லை. இல்லை, ஈரானின் நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும்.- நல்ல சமாரியன் (அல்லது) யூதன்
யாழில் உள்ள பலர் யூத வெறுப்பாளர்கள் என்பதை நான் அறிவேன். அதன் பின்னால் உள்ள காரணங்களையும் நான் புரிந்து கொள்கிறேன். முரண் நகையாக, அதே ஆட்களில் சிலர் இலங்கை முஸ்லிம்கள் மீது பொது பல சேன செய்த அட்டூழியங்களை நான் எதிர்த்த போது என்னை பழித்தவர்களாக இருந்தனர். மேலும் சிலர் யசீதிகள் மீது ஐசில் செய்த அட்டூழியங்களை கண்டும் காணதவராய் இருந்தனர். ஐம்பதை தொடப்போகும் எனக்கு, வாழ்க்கை கற்றுத்தந்த முக்கிய பாடங்களில் ஒன்று, இந்த உலகில் நாம் அறச்சீற்றம் கொள்வது கூட தேர்ந்த எம் நிலைப்பாடுகளின் அடிப்படையில் மட்டுமே என்பதே. நான் கூட 2009 மேயில் அடைந்த மன உளைச்சல் போல் வேறு எந்த போருக்கும், மனித அழிவுக்கும் அடையவில்லை. ஆனால் உயிருக்கு ஆபத்து என வரும் போது இனம், மதம், நிறம் பார்க்காமல் உதவும், அப்படி உதவுபவர்களை தடக்கி விழுத்தும் எண்ணம் தவறு என்ற புரிதல், மனித தன்மை இன்னும் தமிழர்களிடம் எஞ்சி உள்ளது. அல்லது உள்ளது என நான் நம்ப விரும்புகிறேன். நிற்க, அண்மையில் யூத தன்னார்வ நிறுவனம் ஒன்றின் 5 முதலுதவி வண்டிகள் இலண்டனில் விசமிகளால் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த தன்னார்வ அம்பூலனன்ஸ் சேவை யூதர்களால் நடத்தப்பட்டாலும் அது எல்லோருக்கும்மானது. சில வருடங்கள் முன் வட மேற்கு இலண்டனில்…வீதியால் போகும் போது நடைபாதையில் ஒரு நடுத்தர வயது ஆசிய பெண் தடுக்கி விழுந்தார், என் கண்முன்னே. அது பிரெக்சிற்ரால் இலண்டனில் ஓட்டுனர் தட்டுப்பாடு இருந்த காலம். 999 ஆம்புலன்ஸ்சுக்கு அடித்தால், வண்டி அனுப்ப 3 மணி நேரம் எடுக்கும் என்றார்கள். அந்த பெண் வலியால் கதறி கொண்டு இருக்கிறார். அவரை விழுந்த இடத்தில் இருந்து அரக்க கூடாது அது உடைவுகளை மேலும் சிக்கலாக்கும் என்பது எனக்கு முதலுதவி பயிற்சி சொல்லி தந்த பாடம். விழுந்த காலமோ குளிர் மைனசில் இருக்கும் காலம். தரையில் கிடப்பதும் ஐஸ் கட்டியில் கிடப்பதும் ஒன்றேதான். மேலும் 999 க்கு அழைப்பை எடுக்கிறேன். அவர்களுக்கும் விபரீதம் விளங்கினாலும் எதுவும் செய்ய முடியாத நிலை. அப்போது இன்னொரு வெள்ளை இன பெண் நாயோடு வந்தார். என்ன என என்னிடம் விபரங்களை கேட்டு விட்டு, பட பட என தன் போனில் இருந்து அம்பூலனசுக்கு போன் அடித்தார். 5 நிமிடத்தில் அம்பூலனஸ் வந்தது. வீழ்ந்து கிடந்த ஆசிய பெண்ணை தூக்கி கொண்டு ஆஸ்பத்திரிக்கு போனது. யார் இவர்கள் என கேட்டேன், தனியார் அம்பூலன்ஸ் எண்டால் செலவை யார் ஏற்பது என எண்ணியபடியே… இது ஒரு யூத தன்னார்வ அமைப்பு. மத, இன அடையாளம் இன்றி யார் உதவி என அழைத்தாலும் வருவார்கள் என சொல்லி சென்றார் அந்த பெண்மணி. அந்த 5 அம்பூலன்ஸ்தான் அண்மையில் இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகளால் தீக்கிரையானது. (எதுவும் கற்பனை அல்ல)- அமெரிக்காவுடனான பாதுகாப்பு உறவை கைவிட்டு ரஷ்யா அல்லது சீனாவுடன் வளைகுடா நாடுகள் கைகோர்க்குமா?
👍 ஓம் சரியாக சொல்லியிருக்கிறார்- அமெரிக்கா பின்வாங்கினாலும், ஈரானுக்கு எதிரான போரை நிறுத்தக்கூடாது - இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர்
பெரிய அழிவை பார்க்காமல் விடமாட்டர்கள் போலுள்ளது☹️- Today
- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்- டெக்சாஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய வெடிப்பு
ஏற்கனவே சீனாக்காரன் வேற அமெரிக்காவுக்கு மேலால பலூன் விட்டு நீளம் அகலம் பாத்திட்டான்....- உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: “முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்” – கம்மன்பில சவால்
2019 ம் ஆண்டு நடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல், அதன்பின் இரண்டு முறை ஆட்சி மாற்றம் நடந்துள்ளன, கள்ளனும் சேர்ந்து தேடுதல் நடத்துவதுபோல் ஒவ்வொரு அரசும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றி ஒப்புக்கு விசாரணை நடத்தின. அப்போதெல்லாம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரியை வெளிப்படுத்தாமல் ஏன் வரும் 31 ம் திகதிவரை காத்திருக்கிறார்? சரி, அனுரா இவரை கைது செய்யப்போகிறார் என்றால், இன்றைக்கே அந்த சூத்திர தாரியை அறிவிக்கலாமே, ஏன் காலம் தாழ்த்துகிறார் இந்த உளறுவாயன்? யாரையாவது கைது செய்தால், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றி விசாரித்தார்களா என்று ஏன் இவர் விசாரிக்கிறார், பதறுகிறார்? இவர், சானி அபயசேகர, ரவி செனவிரத்தின ஆகியோரை குற்றம் சாட்டிவிட்டால் உண்மையான குற்றவாளிகள் தப்பி விடலாமென நினைக்கிறார். அவர்களை ஏன் முந்தைய அரசுகள் விசாரித்திருக்கலாமே. இப்போ இவர் குற்றவாளியை வெளிப்படுத்த வேண்டும் அல்லது குற்றவாளியை மறைத்த குற்றத்திற்காக இவர் கைது செய்யப்படவேண்டும். நுணலும் தன் வாயால் கெடும். புலி புலி என்றவன் கதையாய் இவர் தன் வாயாலேயே மாட்டப்போகிறார்.- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
திருமாவுக்கு 8 சீட். படிந்தது பேரம்.- தம்பரும் , இரானும் யுத்த நிறுத்தத்திற்கு தயார்
49 வருசமாக, கருணா குரூப், நந்தி கடல் ஈரானில் சரி வரவில்லை. நீங்கள் சொல்வது போல் இன்னும் பிரச்சினையை தூண்டி, சமாதானம் பேசினோம் சரிவரவில்லை எனவே அழித்தொழிப்பதை தவிர வேறு வழியில்லை என அழிக்க திட்டமாக இருக்கலாம். அது அணுகுண்டா அல்லது ஏனைய நாடுகளை அணியில் சேர்க்கும் முயற்சியா தெரியவில்லை. ரஸ்யா ஈரானை பேச்சுக்கு போகுமாறு கேட்டுள்லதாம்.- தம்பரும் , இரானும் யுத்த நிறுத்தத்திற்கு தயார்
புரிந்தது புரியாதனவற்றிற்கு அப்பால் , உலக ஒழுங்குகளை கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும் ( பெயர் எப்படி இருந்தால் என்ன இலுமினாட்டியோ என்னவோ ) அவர்களுக்கு , கட்டுப்பாட்டு மையம் மாறிக்கொண்டிருக்கும் நிலைமை புரிந்து கொண்டிருக்கும் போலிருக்கு . 45 இல் அணுகுண்டு போட்டமாதிரி இப்பவும் செய்யாட்டி அது மாறத்தான் போகுது . எனவே கட்டுப்படுத்தப்பட்ட முறையில் போடத்தான் வேணும் . இவங்கள் முந்திக்கொண்டு விடுவாங்களோ எனும் நிலவரமும் இருக்கு . டோடல் சம் - இப்போதைக்கு ஜகா வாங்கி , "சமாதானப் பேச்சுவார்த்தை " போய் , சில "கருணா " & கொம்பனிசை உருவாக்கி , பின்னர் நந்திக்கடல் செல்வது . அது தான் பிளானா இருக்கும் . எல்லா இடமும் நந்திக்கடல் சரிவருமோ தெரியவில்லை பஸ்ஸுகளுக்குள்ள அவங்களே எத்தனை குண்டு வச்சாங்களோ , அவங்களுக்கு தான் தெரியும்- அமெரிக்காவுடனான பாதுகாப்பு உறவை கைவிட்டு ரஷ்யா அல்லது சீனாவுடன் வளைகுடா நாடுகள் கைகோர்க்குமா?
சீனாவை பற்றிய உங்கள் பார்வை சரியானதே. அதை விட மிக சரியானது உங்கள் “அமெரிக்காவே மேல்” என்ற கூற்று. இதை சொல்லப்போய்த்தான் யாழில் என்போன்றோருக்கு மேற்கின் அடி வருடி பட்டம் சூட்டப்பட்டது. உலக நியதி என்பது எப்போதும் வல்லான் வகுப்பதே சட்டம் என்பதே. குறிப்பாக அளவில், இராணுவ வல்லமையில் சிறிய ஆனால் வளத்தில் பெரிய யூ ஏ ஈ, கத்தார் போன்ற நாடுகள்… ஏதாவது ஒரு தூரத்தில் உள்ள வலிய நாட்டை நம்பி இருக்க வேண்டும், அல்லது ஈரான் போன்ற அருகில் இருக்கும், மதம் கலாச்சாரம், மொழியால் வேறுபட்ட நாட்டால் விழுங்கப்பட வேண்டும். 1945 ற்கு பின் இப்படியான சிறிய நாடுகள் அமெரிக்கா, ரஸ்யாவில் தங்கி இருந்தன…. 1990 க்கு பின் ரஸ்யாவில் தங்கி இருப்பது பயனற்றது என்றாகியது… 2026 இல் அமரிக்காவில் தங்கி இருப்பதும் அப்படியே என்ற நிலை வருகிறது… ஆகவே சிறிய நாடுகள் அடுத்த பாதுகாவலரை நாட வேண்டியதுதான். ரோமோ, இஸ்தான்புல்லோ, இலண்டனோ, மாஸ்கோவோ, வாசிங்டனோ, பேய்ஜிங்கோ…. உலகில் எப்போதும் ஒரு நாட்டாமை இருந்தே ஆகும். அந்த நாட்டாமைக்கு கப்பம் கட்டி விட்டு பிரதிபலனாக பாதுகாப்பை கோரும் சிறிய நாடுகளும் எப்போதும் இருக்கும். சந்தர்ப்பம் கிடைத்தால் இந்த சிறிய நாடுகளை விழுங்க துடிக்கும் அயல்நாடுகளும் இருக்கும். அதேபோல் இந்த அடிப்படை யதார்த்தம் புரியாமல், இப்போ மேற்கை எதிர்ப்பவர்கள் போல் அப்போ ரோமை, இஸ்தான்புல்லை, இலண்டனை எதிர்தவர்களும் இருந்தார்கள்.- இரசித்த.... புகைப்படங்கள்.
- கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 28 அகவை - சுய ஆக்கங்கள்எனக்கே இப்ப நினைக்கப் பயமாய்ததான் இருக்கு. 🤣- கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 28 அகவை - சுய ஆக்கங்கள்போர்ச் சூழல் என்பதானாலேயே முகவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. மாற்றப்படி அவர்களே எல்லாம் செய்து தருவார்கள். எல்லா நிறுவனங்களும் பணத்தை பயணர்களுக்கு மீளக் கொடுக்கும்போது உந்த ஏஜெண்டுகள் பெரும்பகுதியை தாம் எடுத்துக்கொண்டு மிகுதி சொற்ப தொகையையே எமக்குத் தருவார்கள். ஆனால் நாம் காப்புறுதி செய்திருந்தால் அதிலிருந்து பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். தேவை என்றால் கோட் என்ன கோட்டையையே மாற்றத்தான் வேண்டும்.😂- கருத்து படங்கள்
- கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 28 அகவை - சுய ஆக்கங்கள்நானும் சாதாரணமாக நேரடியாகத்தான் விமானச் சீட்டை வாங்குவது. இம்முறை அவர்களிடம் வாங்குவதைவிட ஏஜெண்ட்டிடம் மலிவாக இருந்ததனால் வாங்கியது. அத்தோடு ஏஜென்டிடம் வாங்கும்போது இருமடங்கு பொதிகள் கொண்டுசெல்லலாம்.- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நல்ல நல்ல ரொம்ப நல்ல நாடு ........ படம்: அல்லி பெற்ற பிள்ளை . ........ சீர்காழி கோவிந்தராஜன் ......! 😂- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ........! பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : பூஜைக்கு வந்த மலரே வா பூமிக்கு வந்த நிலவே வா பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த பொன் வண்ண மேனி சிலையே வா பெண் : மலர் கொள்ள வந்த தலைவா வா மனம் கொள்ள வந்த இறைவா வா கையோடு கொண்டு தோளோடு சேர்த்து கண் மூட வந்த கலையே வா ஆண் : கோடை காலத்தின் நிழலே நிழலே கொஞ்சம் கொஞ்சம் அருகில் வா ஆடை கட்டிய ரதமே ரதமே அருகில் அருகில் நான் வரவா பெண் : அருகில் வந்தது உருகி நின்றது உறவு தந்தது முதலிரவு இருவர் காணவும் ஒருவராகவும் இரவில் வந்தது வெண்ணிலவு பெண் : மலர் கொள்ள வந்த தலைவா வா மனம் கொள்ள வந்த இறைவா வா கையோடு கொண்டு தோளோடு சேர்த்து கண் மூட வந்த கலையே வா ஆண் : செக்கச் சிவந்த இதழோ இதழோ பவளம் பவளம் செம்பவளம் தேனில் ஊறிய மொழியில் மொழியில் மலரும் மலரும் பூமலரும் பெண் : எண்ணி வந்தது கண்ணில் நின்றது என்னை வென்றது உன் முகமே இன்ப பூமியில் அன்பு மேடையில் என்றும் காதலர் காவியமே ......! --- பூஜைக்கு வந்த மலரே வா ---- தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை கண்டித்து மட்டக்களப்பில் போராட்டம்.!
தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை கண்டித்து மட்டக்களப்பில் போராட்டம்.! Vhg மார்ச் 23, 2026 தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை கண்டித்து போராட்டம்.! வடகிழக்கில் தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை கண்டித்து நேற்று (23.03.2026)ஆம் திகதி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வடகிழக்கு பெண்கள் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்திபூங்காவில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு காந்திபூங்காவிலிருந்து ஊர்வலமாக வந்து படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபிக்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மக்கள் தேவைகளுக்கு குரல்கொடுப்பதை விடுத்து இனங்களிடையே இழிவுபடுத்தும் கருத்துகளை சமூக ஊடகங்களிலும், ஊடகங்களிலும் தமிழ் அரசியல்வாதிகள் வெளிப்படுத்துவதை நிறுத்தவேண்டும் என இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது. இதன்போது பல்வேறு கோசங்கள் எழுப்பப்பட்டதுடன் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பிரதமர், சபாநாயகர், நாடாளுமன்ற செயலாளர், பெண்கள் விவகார அமைச்சர், மனித உரிமை ஆணைக்குழு ஆகியவற்றிற்கு அனுப்பவதற்கான மகஜர் ஒன்றும் வாசிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டின் சமூக ஒற்றுமை, ஜனநாயக பண்புகள் மற்றும் மக்கள் பாதுகாப்பை நிலைநிறுத்த வேண்டிய பொறுப்பில் உள்ள அரசியல் பிரதிநிதிகள், சமீபத்தில் பொதுத் தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளியிட்ட கருத்துக்கள் குறித்து எங்களது ஆழ்ந்த கவலையையும் கடுமையான கண்டனத்தையும் வலியுறுத்துகிறோம். ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையில் மனித மரியாதைக்கு எதிரான சொற்கள் பயன்படுத்தப்படுவது எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இத்தகைய வெறுப்பு தூண்டும் பேச்சுக்கள் சமூகங்களுக்கிடையேயான நம்பிக்கையையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைப்பதோடு மட்டுமல்லாமல், பிரதேச மற்றும் இன அடிப்படையிலான பிளவுகளை தீவிரப்படுத்துகின்றன. இது நாட்டின் அமைதிக்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் நேரடி அச்சுறுத்தலாகும். மக்களின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், மக்களின் பிரச்சினைகளை பொறுப்புடன், நாகரிகத்துடன் முன்வைத்து தீர்வுகளை உருவாக்க வேண்டியவர்கள். ஆனால், அதற்கு பதிலாக வெறுப்பு, இழிவு மற்றும் பிரிவினை உணர்வுகளை தூண்டும் கருத்துக்களை வெளியிடுவது அரசியல் பொறுப்பின்மையின் வெளிப்பாடாகும். இத்தகைய செயல்கள் ஜனநாயக மரபுகளுக்கும் அரசியல் நாகரிகத்திற்கும் நேரடி அவமதிப்பாகும். மேலும், அரசியல்வாதிகள் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தும் போதெல்லாம் ஆதிக்க சிந்தனைகளை பிரதிபலிக்கும் வகையிலான மொழியையும் அணுகுமுறையையும் முற்றாக கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம். மக்கள் மத்தியில் சமத்துவம், மரியாதை மற்றும் பரஸ்பர புரிதலை வளர்க்கும் உரைகள் மட்டுமே அரசியல் உரையாடலின் அடிப்படையாக அமைய வேண்டும். இவ்வாறான பொறுப்பின்மை கொண்ட பேச்சுக்கள் தொடர்ந்தால், சமூகத்தில் இனவாதம், பிரதேசவாதம் மற்றும் பகைமை மனப்பான்மை ஆழப்படுத்தப்படும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு மட்டுமல்லாமல், குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகக் குழுக்கள் மனஅழுத்தத்திற்கும் அச்சத்திற்கும் உள்ளாகின்றனர். எனவே, அனைத்து அரசியல் தலைமைகளும் உடனடியாக தங்களது பொது உரைகளில் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். இன, பிரதேச, மொழி அடிப்படையிலான இழிவுபடுத்தல், அவதூறு மற்றும் வெறுப்பு பேச்சுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறோம். அத்துடன், இனம், பிரதேசம், மொழி, சாதியம் மற்றும் ஆணாதிக்க சிந்தனை ஆகியவற்றின் அடிப்படையில் உருவாகும் அவதூறான மற்றும் வெறுக்கத்தக்க நடத்தைகளை கண்காணிக்கவும், அவற்றைத் தடுக்கவும், தண்டிக்கவும் கூடிய தெளிவான மற்றும் வலுவான நாடாளுமன்ற நடைமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். மேலும், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் தங்களது உள்கட்டமைப்பு கொள்கைகள் மற்றும் ஒழுக்க விதிகளை உருவாக்கும் போது, இவ்வாறான வெறுப்பு பேச்சுக்களைத் தடுக்கும் உறுதியான வழிகாட்டுதல்களை இணைத்துக் கொள்ள வேண்டும். இத்தகைய கொள்கை மாற்றங்கள், நிலையான சமூக மாற்றத்திற்கும் நீடித்த சமூக அமைதிக்கும் அடித்தளமாக அமையும். https://www.battinatham.com/2026/03/blog-post_501.html- இரகுவரனும் இரவிக்கை நாடாவும் .
பக்கத்தில "வீதியோரம் " இருக்கு அங்கும் உங்கள் நடைப்பயிற்சியை கொஞ்சம் செய்யலாமே .........! 😘- பெண்களே அறிமுகமில்லாத வாகனங்களில் பயணிப்பதைத் தவிருங்கள் - கிழக்கு மாகாண பெருங்குற்றவியல் தடுப்புப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி
பெண்களே அறிமுகமில்லாத வாகனங்களில் பயணிப்பதைத் தவிருங்கள் - கிழக்கு மாகாண பெருங்குற்றவியல் தடுப்புப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி By Batticaloa கிழக்கு மாகாணத்தில் பெண்களின் பயணப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், கிழக்கு மாகாண பெருங்குற்றவியல் தடுப்புப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் பல முக்கிய விழிப்புணர்வு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார். அண்மையில் இலங்கையை உலுக்கிய பாழ்ங்கிணறு படுகொலைச் சம்பவங்களைத் தொடர்ந்து, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு அவர் இந்த ஆலோசனைகளை வழங்கியுள்ளார். பொறுப்பதிகாரி மேனன் விடுத்துள்ள அறிவுறுத்தலில் குறிப்பிட்டுள்ளதாவது - ஆபரணங்கள்: பெண்கள் பொது இடங்களுக்குச் செல்லும் போது, பெறுமதிமிக்க தங்க நகைகளை அநாவசியமாக வெளிப்படையாக அணிவதைத் தவிர்க்க வேண்டும். பயணம்: முன்பின் தெரியாத முச்சக்கர வண்டிகள் (Auto) உள்ளிட்ட அறிமுகமில்லாத வாகனங்களில் ஏறுவதைத் தவிர்க்க வேண்டும். முடிந்தவரை அறிமுகமான வாகனங்களைப் பயன்படுத்தவும். குழுவாகச் செல்லுதல்: பெண்கள் தனித்துப் பயணிப்பதைத் தவிர்த்து, குழுவாகவோ அல்லது உறவினர்களுடனோ பயணங்களை மேற்கொள்வது பாதுகாப்பானது. உங்களது பயண விபரங்களை நெருங்கிய உறவினர்களிடம் முன்கூட்டியே பகிர்ந்து கொள்ளுங்கள். உணவு மற்றும் பானங்கள்: அந்நியர்கள் வழங்கும் உணவுப் பொருட்கள் அல்லது பானங்களை எக்காரணம் கொண்டும் உட்கொள்ள வேண்டாம். மயக்கமருந்து கொடுத்து நகைகளைப் பறிக்கும் சம்பவங்கள் குறித்து அதிக அவதானத்துடன் இருக்க வேண்டும். அவசர உதவி: ஏதேனும் ஆபத்தான அல்லது சந்தேகத்திற்கிடமான சூழல் ஏற்பட்டால், உடனடியாக 119 எனும் பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்தைத் தொடர்பு கொள்ளவும். நெருக்கடி கால நடைமுறைகள்: தற்போதைய எரிபொருள் நெருக்கடி மற்றும் பொருளாதாரச் சூழலைக் கருத்திற்கொண்டு அவர் மேலும் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். தனிப்பட்ட வாகனங்களைத் தவிர்த்துப் பொதுப் போக்குவரத்துச் சேவைகளைப் பயன்படுத்துதல் சிறந்தது. ஒரே பயணத்தில் பல வேலைகளைத் திட்டமிட்டு முடிப்பதன் மூலமும், அத்தியாவசியப் பொருட்களை அருகிலுள்ள கடைகளில் கொள்வனவு செய்வதன் மூலமும் பயணங்களைக் குறைக்கலாம். முடிந்தவரை கல்வி வகுப்புகள் மற்றும் அலுவலகப் பணிகளை இணையதளம் (Online) வாயிலாக மேற்கொள்ள முயற்சிப்பது காலத்திற்குப் பொருத்தமானது. குறுகிய தூரங்களுக்கு நடைபயணம் அல்லது மிதிவண்டிகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதன் மூலம் நாட்டின் எரிபொருள் வளத்தைப் பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும். https://www.battinews.com/2026/03/blog-post_270.html
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.