அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3265 topics in this forum
-
. எந்த தொலைக்காட்சி வாங்கலாம்? உங்களின் ஆலோசனை தேவை.... நான் பன்னிரண்டு வருடமாக பாவித்த குழாய் தொலைக்காட்சி பென்சன் எடுக்கும் நிலைக்கு வந்துள்ளது. தற்போது வருட ஆரம்பம் என்ற படியால்.... ஒவ்வொரு கடைக்காரரும் அண்ணை வா, தம்பி வா...... என்று மின்சாரப் பொருட்களை மலிவாக கூவிக்கூவி விற்கிறார்கள். இந்தச் சந்தர்ப்பம் ஒரு சில நாட்களுக்கே இருக்கும். நான் நேற்று சில கடைகளில் பார்த்த போது.... எந்த தொலைக்காட்சிப் பெட்டியை வாங்குவது என்ற குழப்பத்தில் வீட்டிற்கு வந்து விட்டேன். நான் பார்த்த தெரிவில் ....... முதலாவது LG - 94 செ.மீ. / LED. 480 € இரண்டாவது Sony - 94 செ. மீ. /LCD 450 € மூன்றாவது Philips - 94 செ.மீ. / LCD 550€ …
-
- 69 replies
- 21.3k views
-
-
இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம் அடுத்த மாதம் பரந்து விரிந்த அண்டவெளியில் எண்ணிலடங்கா நட்சத்திரங்களும் கோடிக்கணக்கான கோள்களும் அமையப்டிபற்றுள்ளன. இதில் பல அரிய நிகழ்வுகள் அவ்வப்போது அரங்கேறிய வண்ணம் உள்ளன. அந்த வகையில் எதிர்வரும் ஜூலை மாதம் இருவேறு அபூர்வ நிகழ்வுகள் இந்த அண்டவெளியில் அரங்கேறவுள்ளது. அதாவது அடுத்த மாதம் 27ஆம் திகதி இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திரகிரகணம் இடம்பெறவுள்ளது. சூரியன், பூமி, சந்திரன் ஆகியவற்றின் சுற்று வட்டப்பாதையில், சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வரும்போது, பூமியின் நிழல் சந்திரனின் மீது படுகிறது. இதனால் முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் 31ம் திகதியன்று முழ…
-
- 0 replies
- 669 views
-
-
2018-ம் ஆண்டுக்கான ஏபெல் பரிசு ஏபெல் பரிசு: அறிவியல் உலகினைப் பற்றி அறிந்த அனைவருக்கும் நோபல் பரிசு பற்றித் தெரிந்திருக்கும். ஆல்பிரட் நோபல் என்ற ஸ்வீடன் நாட்டு வேதியலாளரின் நினைவாக 1895 முதல் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. அவர் தனது சொத்துக்களை இந்தப் பரிசுகளுக்காக உயில் எழுதி வைத்துவிட்டார். ஆனால் அந்த நோபல் பரிசு கணிதத்திற்குக் கிடையாது. ஏனென்றால் அவர் தனது உயிலில் கணிதத்திற்கு இப்பரிசினை வழங்கப் பரிந்துரைக்கவில்லை. ஃபீல்ட்ஸ் பதக்கம் (Fields Medal) என்ற பரிசு கணித உலகின் உயரிய கண்டுபிடிப்பாளர்களுக்குக் கிடைக்கக் கூடிய விருது ஆகும். அதற்கடுத்த படியாக மிகப்பெரிய கணித விருதென்பது ஏபெல் பரிசு(Abel Prize) ஆகும். இப்பரிசு நார்வே அரசால் 2003 முதல் நீல…
-
- 0 replies
- 519 views
-
-
நம்மூர் யானைகளுக்கு கரும்பு என்றால் உயிர். கரும்புத் தோட்டத்துக்குள் புகுந்தால் செமை கட்டு கட்டிவிடும். போலவே கென்ய நாட்டு யானைகளுக்கு அக்கேசியா என்கிற மரத்தின் மீது தீராப்பசி. எங்காவது அம்மரத்தைக் கண்டால் வளைத்து அப்படியே சாப்பிடும். பெண் ஆராய்ச்சியாளரான லூசிகிங்குக்கு ஒரு நாள் ஆச்சரியமான காட்சி ஒன்று காணக்கிடைத்தது. ஓங்குதாங்காக வளர்ந்திருந்த ஓர் அக்கேசியா மரத்தைக் கண்டும், நாலு நாட்கள் பட்டினியில் கிடந்த யானைக்கூட்டம் ஒன்று சட்டை செய்யாமல் விலகி நடந்ததைக் கண்டார். அந்த மரத்தில் ஏதோ மாயாஜாலம் நடக்கிறது என்பதை உணர்ந்தார். அருகில் சென்று மரத்தை ஆராய்ந்தார். மாயமும் இல்லை. மந்திரமும் இல்லை. அம்மரத்தில் ஏராளமான தேன்கூடுகள் இருந்தன. தேனீயைக் கண்டாலே யானைக்கு அலர்ஜி. ‘ங்கொய்…
-
- 2 replies
- 630 views
-
-
நன்றி ஸ்டீவ்! நடராஜன் வெங்கடசுப்ரமணியன் அதுவரை எனக்கு ஸ்டீவ் ஜாப்ஸ் யாரென்றே தெரியாது. ஆப்பிள் என்ற பெயரில் ஒரு நிறுவனம் இருப்பது தெரியும். மேக் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அது ஆப்பிளுடையது என்று தெரியாது. மேக்கைப் பற்றி தெரிந்த விஷயம் விண்டோஸில் இந்த பக்கம் இருக்கும் க்ளோஸ் பட்டன் மேக்கில் அந்தப் பக்கம் இருக்கும் அவ்வளவுதான். அப்போது எனக்கு ஐபாட் பற்றிக் கூட தெரியாது. யாரோ ஒருவர் ஸ்டீவ் ஜாப்ஸ், ஸ்டான்ஃபோர்ட் பல்கலையில் பேசிய உரையை எனக்கு தந்தார். கேட்டேன். பிடித்திருந்தது. அதன் பிறகு நானும் என்னுடைய நண்பர்கள் இரண்டு முன்று பேருடன் பகிர்ந்து கொண்டேன். இணையத்தில் அதிகம் சுற்றத் தொடங்கியபின் அந்த வீடியோ அடிக்கடி கண்ணில் படத் தொடங்கியது. மீண்டும் …
-
- 1 reply
- 840 views
-
-
சூரியனுக்கு அருகில் வந்து உருகிய பனிக்கட்டி மறுபடி உருவானதெப்படி ? அண்டவெளியில் சிறிய பந்தின் அளவில் இருந்து, சுமார் ஓர் உதைபந்தாட்ட மைதானமளவு பெரிய பனிக்கட்டிகள் வால் வெள்ளிகளாக வலம் வருவது தெரிந்ததே. இந்த பனிக்கட்டிகளின் அண்டவெளி நகர்வுகள் தொடர்பான சமீபத்தய அமெச்சூர் அவதானிப்பொன்று சற்று அதிசயமான முடிவை தந்திருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். சூரியன் வெப்பமானது, அதன் அருகில் செல்லும் பனிக்கட்டி அதன் வெப்பம் காரணமாக இயல்பாகவே உருகி மறைந்துவிட வேண்டும். ஆனால் பனிப்பாறையான வால்வெள்ளி சூரியனுக்கு அருகில் சென்றபோது அதன் வால்பகுதி உருகி மறைந்தது. அது அங்கிருந்து வெளியேறியதும் உருகிய அந்தப் பனிக்கட்டி இரண்டொரு மணி நேரத்தில் மறுபடியும் மீண்டும் அதைவிட பெரிய …
-
- 0 replies
- 826 views
-
-
படத்தின் காப்புரிமை mikiell / getty நிலவின் வளிமண்டலத்தில் 'ஆர்கான்' என்ற வாயுவின் சமதானியை சந்திரயான்-2இன் உட்கருவி ஒன்று கண்டறிந்துள்ளது. இந்தத் தகவலை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தற்போது நிலவில் கண்டுபிடிக்கட்டுள்ள ஆர்கான்-40 எனப்படுவது ஆர்கான் வாயுவின் சமதானியாகும் ஒரு தனிமத்தின் அணுக்கருக்களில் ஒரேயளவு எண்ணிக்கையான புரோட்டான்களையும், வேறுபட்ட எண்ணிக்கையில் நியூட்ரான்களையும் கொண்டிருந்தால் அது அந்தக் குறிப்பிட்ட தனிமத்தின் சமதானி ஆகும். நிலவை சுற்றியுள்ள மெல்லிய காற்று மண்டலத்தை 'நிலவின் புறவெளி மண்டலம்' (lunar exosphere) என விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அழைக்கின்றனர். இந்த காற்று மண்டல…
-
- 1 reply
- 461 views
-
-
3 லட்சம் மைல்களை கடந்து சாதனை புரிந்த கூகுள் தானியங்கி கார்! சோதனை ஓட்டத்தில் இதுவரை 3 லட்சம் மைல்களை(4,82,803கிமீ) விபத்து உள்ளிட்ட எந்த பிரச்னையும் இல்லாமல் வெற்றிகரமாக கடந்து சாதனை புரிந்திருக்கிறது டிரைவர் இல்லாமல் செல்லும் கூகுள் தானியங்கி கார். டிரைவர் இல்லாமல் இயங்கும் தொழில்நுட்பத்துடன் கூடிய தானியங்கி காரை கூகுள் சோதனை நடத்தி வருகிறது. செயற்கை கோள் தொடர்புடன் இயங்கும் இந்த காரை சுற்றிலும் சென்சார்கள் மற்றும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றை கம்ப்யூட்டர் உதவியுடன் கட்டுப்படுத்தி செல்லும் வகையில் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வரும் இந்த தானியங்கி கார் இதுவரை 300000 லட்சம் மைல்களை(4,82,803கிமீ) தூரத்தை கடந்…
-
- 0 replies
- 762 views
-
-
கொரோனா வைரஸ் முன்பு நினைத்ததை விட அதிக தூரம் பயணிக்கின்றது என்று ஒரு ஆய்வு கூறுகிறது. ----------------------------------------------------------------------------- கொரோனாவில் இருந்து தப்பவேண்டும் என்றால் வீட்டுக்குள் பூட்டிக்கொண்டு இருந்தால் மாத்திரமே சாத்தியம் போல் இருக்கின்றது. கொரோனா வைரஸ் குறைந்தது அரை மணி நேரம் காற்றில் உயிர்வாழும் என்றும் , சில மேற்பரப்புகளில் பல நாட்களுக்கு உயிர்வாழும் என்றும், கிட்டத்தட்ட 15 அடி தூரம் பயணம் செய்யக்கூடும் என்றும், ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது. COVID-19 தோற்றை தவிர்ப்பதற்காக பொது இடங்களில் 3 முதல் 6 அடி இடைவெளியில் “பாதுகாப்பான தூரம்” இருக்குமாறு பரிந்துரைத்த சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையை சீன அரசாங்க த…
-
- 0 replies
- 472 views
-
-
வரலாற்று சிறப்புமிக்க வெற்றி: விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தனர்! அமெரிக்காவில் உள்ள கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பால்கன்-9 ஏவூர்தி, 19 மணி நேரங்களுக்கு பின்னர் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்துள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்த அமெரிக்க விண்வெளி வீரர்களான டக் ஹர்லி மற்றும் பாப் பெஹன்கென் ஆகியோரை ஏற்கனவே அங்கு இருந்த ரஷ்ய மற்றும் அமெரிக்க குழுவினர் உற்சாகமாக வரவேற்றனர். இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியின் மூலம், பெருமிதம் கொள்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த வெற்றியின் மூலம், நாசா தனது விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப…
-
- 0 replies
- 355 views
-
-
-
- 1 reply
- 2.1k views
-
-
விஎல்சி 3.0-வில் என்ன அறிமுகமாகப்போகிறது தெரியுமா? #VLC3.0 விஎல்சி வீடியோ ப்ளேயரை அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். எந்த ஒரு கணினியிலும் அதன் இயங்குதளத்தில் தரப்பட்டிருக்கும் வீடியோ ப்ளேயரை தாண்டி இடம் பிடிப்பது விஎல்சி ப்ளேயராகத் தான் இருக்கும். பெரும்பாலான பயன்பாட்டாளர்களுக்கு பிடித்த இந்த ப்ளேயர் தனது புதிய வெர்ஷனான 3.0-வை இந்த ஆண்டின் இறுதியில் வெளியிடவுள்ளது. இந்த விஎல்சி வீடியோ ப்ளேயரில் புதிய அப்டேட் என்னவென்றால் இது முதல் முறையாக ஒரு விடியோ ப்ளேயர் ஆப்பில் 360 டிகிரி வீடியோ சேவை வழங்கப்படவுள்ளது. இதன் முன்னோட்ட வெர்ஷன் ஒரு சில விண்டோஸ் மற்றும் மேக் தளங்களில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் வெளியாக உள்ள இந்த வெ…
-
- 0 replies
- 403 views
-
-
சீரகம்=சீர்+அகம்..! "எட்டுத்திப்பிலி ஈரைந்து சீரகம் கட்டுத்தேனில் கலந்துண்ண விக்கலும் விட்டுப்போகுமே விடாவிடில் நான் தேரனும் அல்லவே" - ஆசான் தேரையர் தமிழ்ச்சித்தர்கள் எதையும் காரணப் பெயர் கொண்டே அழைப்பர். சிலவற்றைச் சூட்சமப் பெயர் (அவர்களுக்கே விளங்கும் குறிச்சொல்/ மறைபொருள்/ பரிபாசை) கொண்டும் அழைப்பர். இங்கே அகத்தைச் சீர் செய்வதால் தமிழ்ச்சித்தர்களால் சீரகம் என அழைக்கப்பட்டது. அகத்தைச் சீர்செய்யும் சீரகம் (Cuminum cyminum) ஒரு மருத்துவ மூலிகையாகும். இந்தியாவில் அதிகம் பயிர் செய்யப்படுகிறது. உலகம் முழுவதும் முக்கியமாக அரேபியாவில் மசாலா பொருள்களில் இது நீண்ட காலமாக உபயோகிக்கப்படுகிறது. குமின் என்ற வார்த்தையே அராபிய வார்த்தையாக கூறப்படுகிறது. சுமார் நான்காயிரம் ஆண்…
-
- 364 replies
- 679.6k views
-
-
Rimac எனும் நிறுவனம் ஒன்று மணிக்கு 65 கிலோமீற்றர் வேகத்தில் பயணம் செய்யக்கூடிய Greyp G12 எனும் சைக்கிளை உருவாக்கியுள்ளது. இந்த வேகத்தை எட்டுவதற்காக விசேட மோட்டார் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. இதில் காணப்படும் மின்கலமானது ஒரு முறை மின்னேற்றப்பட்ட பின்னர் 120 கிலோமீற்றர்கள் தூரம் பயணிக்கக்கூடிய சக்தியை வழங்குகின்றது. இந்த மின்கலமானது 220 Volt மின்னோட்டம் மூலம் 80 நிமிடங்களில் 100 சதவீதம் சார்ஜ் செய்யக்கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=92260&category=CommonNews&language=tamil
-
- 2 replies
- 675 views
-
-
அமெரிக்காவின் அப்பல்லோ விண்கலம் இறங்கிய இடத்தில் பெரிய வளையம்- கண்டுபிடித்த சந்திரயான்-1 வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2009, 10:54 பெங்களூர் : கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்பு நிலவில் அமெரிக்காவின் அப்பல்லோ 15 விண்கலம் இறங்கிய இடத்தைச் சுற்றி பெரிய வளையம் காணப்படுவதை சந்திரயான்-1 விண்கலம் புகைப்படம் எடுத்துள்ளது. சந்திரயான்-1 விண்கலத்தில் இருந்த டெரைன் மேப்பிங் கேமரா இந்த படத்தை எடுத்து அனுப்பி வைத்துள்ளது. இந்தப் பெரிய வளையத்திற்குக் காரணம், நிலவின் தரைத்தளத்தில் மனிதர்கள் நடமாடியதே காரணம் என்று விஞ்ஞாநிகள் கருதுகிறார்கள். ஏற்கனவே ஜப்பான் விண்வெளி நிறுவனம் தனது செலீன் விண்கலம் மூலம் அனுப்பப்பட்ட டெரைன் மேப்பிங் கேமராவும், இந்த வளையத்தைப் படம்…
-
- 0 replies
- 812 views
-
-
லேண்ட்சாட் 9 செயற்கைக் கோள்: பூமியை 49 ஆண்டுகளாக வட்டமிடும் ஜோனதன் அமோஸ் அறிவியல் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ULA படக்குறிப்பு, கலிஃபோர்னியாவிலிருந்து ஏவப்பட்ட லேண்ட்சாட் உலகின் மிக முக்கியமான செயற்கைக்கோள், கலிஃபோர்னியாவிலிருந்து நேற்று செப்டம்பர் 27ஆம் தேதி திங்கட்கிழமை ஏவப்பட்டது. லேண்ட்சாட்-9 என்பது சுமார் கடந்த 50 ஆண்டுகளாக பூமியை கண்காணித்து வரும் விண்கலன்களின் தொடர்ச்சியாக இருக்கிறது. வேறு எந்த ரிமோட் சென்சிங் அமைப்பும் நமது பூமியின் மாறி வரும் நிலை குறித்த நீண்ட, தொடர்ச்சியான பதிவை வைத்திருக்கவில்லை. …
-
- 0 replies
- 578 views
- 1 follower
-
-
வியாழன் கிரகத்தின் பனி நிறைந்த துணைக் கிரகமான யூரோப்பாவில் உயிர்கள் வாழ்வதற்கு ஏதுவான சூழ்நிலை இருப்பதற்கான மேலும் ஆதாரங்களை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். புவியின் சுற்றுவட்டப் பாதையில் இருக்கும் கண்ணாடி மூலம் பிரதிபலிக்கும் தொலைநோக்கி ஒன்றின் பிம்பங்களில் காணப்பட்ட, யூரோப்பாவின் படங்களில், அதன் மேற்பரப்பில் காணப்படுகின்ற தண்ணீர் தெறிப்புகள், அங்கு நுண்ணிய உயிரினங்கள் வாழ்வதற்கான சூழல் இருப்பதற்கான ஒரு சமிக்ஞையாகும். சான்பிரான்ஸிக்கோவின், ''அமெரிக்க ஜியோபிசிக்கல் யூனியனின்'' வருடாந்த மாநாட்டில் இந்தக் கண்டுபிடிப்பு குறித்த தகவல் அறிக்கையிடப்பட்டது. ஆகவே யூரோப்பாவுக்கு பயணித்து ஆராய்வதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார…
-
- 3 replies
- 761 views
-
-
அமெரிக்காவின் புதிய (ரோபோட்) போர்வீரர்கள் : ச.ச.முத்து டேர்மினேற்றர் திரைப்படத்தில் அந்த காட்சி அடிக்கடி அந்த நேரங்களில்(1984) ஆச்சர்யத்துடன் பார்க்கப்பட்டது. அந்த காட்சிக்காகவே அந்த படமும் மிகப்பெரிய வெற்றியையும் பெற்றது.என்னதான் சுட்டாலும், வெடிவைத்து தகர்த்தாலும்,எரியும் தீச்சுவாலைக்குள் வீழ்த்தினாலும் மீண்டும் அந்த உருவம் எழுந்து இயந்திரமனிதனாக,மனிதனாக மாறி எதிரிகளை வேட்டையாடும்.ஆர்னோல்ட் ஸ்வாஸ்நேகர் இந்த பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருப்பார். ரைற்றானிக்,அவ்தார் படங்களை எடுத்த ஜேம்ஸ்கமரூனின் அருமையான ஒரு பாத்திரப்படைப்புஅது. இதைப்போலவே, புதிய ரோபோ போர்வீரர்களை களங்களில் இறக்கும் ஒரு திட்டத்தை பென்ரகன் கொண்டிருப்பதாக அண்மையில் செய்தி ஒன்று வெளியாகி இருக…
-
- 1 reply
- 805 views
-
-
கூகுள் கொண்டாடிய இந்திய விஞ்ஞானி சத்தியேந்திரநாத் போஸ்: இவரது இமாலய சாதனை என்ன? அ.தா.பாலசுப்ரமணியன் பிபிசி தமிழ் 25 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GOOGLE படக்குறிப்பு, சத்தியேந்திரநாத் போஸ் பங்களிப்பை கொண்டாடும் வகையில் கூகுள் வெளியிட்ட டூடுள் கூகுள் தேடுபொறியை வழக்கமாகப் பயன்படுத்துகிறவர்கள் தேடு பட்டைக்கு மேல் இருக்கும் கூகுள் வணிகச் சின்னமாக அமைந்த அதன் பெயரைப் பார்த்திருப்பார்கள். ஆனால், சில நாள்களில் அந்த கூகுள் பெயருக்குப் பதில் யாரோ ஒருவரது உருவத்தைக் காட்டும் வரைகலை தோன்றும். ஒரு நபரையோ, நிகழ்வையோ கொண்டாடும் வகையில் அவ்வப்போது கூகுள் வெ…
-
- 0 replies
- 210 views
- 1 follower
-
-
தயவுசெய்து யாராவது இதை தமிழில் மொழிபெயர்த்து தரமுடியுமா? Direct Callback You can choose to make your VoipCheap calls via your regular phone with the Direct Callback feature. Just enter your home or mobile phone number in the Direct Callback field of the application. You can now decide with each call if you want to place it via the application OR take your call on your regular phone. With the Direct Callback feature checked, the application will first dial your regular phone number. As soon as you have picked it up, a connection with the number you want to call will be made. The big advantage is that you can make your cheap VoipCheap calls on your nor…
-
- 5 replies
- 2.9k views
-
-
அமெரிக்காவின் 'நாசா' விண்வெளி ஆய்வு நிலையம் 'கெப்லர்' என்ற விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. இதற்கு கே2 மிஷன் என பெயரிடப்பட்டுள்ளது. அது விண்வெளியில் பறந்து அண்டத்தில் உள்ள புதிய கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை கண்டுபிடித்து ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்த நிலையில் தற்போது 'கெப்லர்' விண்கலம் எடுத்து அனுப்பிய புதிய போட்டோக்கள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது. அதில் பூமியை போன்று மற்றொரு புதிய கிரகம் விண்வெளியில் இருப்பது தெரியவந்தது. இதற்கு எச்.ஐ.பி.116454பி என பெயரிடப்பட்டுள்ளது. இது பூமியை விட 2½ மடங்கு பெரியதாக உள்ளது. அதன் அருகே சூரியன் உள்ளது. இது பூமியின் சூரியனை விட சிறியதாகவும், குளிர்ச்சியாகவும் உள்ளது. இந்த சூரியன் மூலமே புதிய கிரகம் வெப்பம் அடைகிறது…
-
- 7 replies
- 1.2k views
-
-
வண்ணத்துபூச்சியின் நிறமற்ற வானவில் அருண் நரசிம்மன் உத்திரத்தில் ஆடும் ஹரிக்கேன் விளக்கு வெளிச்சத்திலும் பாட்டியின் அந்தக்கால நவரத்தின பெண்டண்ட்டில் மற்ற கற்களைக்காட்டிலும் வைடூர்யம் மட்டும் டாலடித்து ஜுவலிக்கிறதேன்? தோகை இளமயில் ஆடி வருகையில் வானில் மழைவராவிட்டாலும், தோகை நிறங்கள் அசாதாரணமாய் ஒளிருவதேன்? சாலையிலுள்ள மழைநீர்தேங்கிய குட்டைகளில் பெட்ரோல் டீஸல் ஒழுகிப் படர்ந்து, தாண்டிச்செல்கையில் நாம் பார்க்கும் கோணத்திற்கேற்ப பல நிறங்களில் தெரிவதேன்? கணினி மென்தகட்டை வெளிச்சத்தில் அப்டி இப்டி திருப்பினால் பல நிறங்களாய் தெரிவதேன்? அநேக வண்ணத்துபூச்சியின் இறகுகள் பளபளப்பதேன்? பதில், இரிடெஸன்ஸ். அப்படியெனில் என்ன, அதற்கும் நேனொடெக்னாலஜிக்கும் என்ன …
-
- 0 replies
- 1.2k views
-
-
சந்திரகிரகணம் பகுதியளவில் தென்படும் என அறிவிப்பு! சந்திரகிரகணம் நாளை(செவ்வாய்கிழமை) பகுதியளவில் தென்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்த வருடத்திற்கான இறுதி சந்திரகிரகணம் என்பதுடன், 2021 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதியே இலங்கையர்களுக்கு அடுத்த சந்திரகிரகணம் தென்படும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் ஆய்வுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. எதிர்வரும் 16 ஆம் திகதி நள்ளிரவிற்கு பின்னர், 17 ஆம் திகதி அதிகாலை 12.13 இற்கு சந்திரகிரகணம் ஆரம்பமாகவுள்ளது. 17ஆம் திகதி அதிகாலை 5.47 அளவில் சந்திர கிரகணம் நிறைவுபெறவுள்ளது. இலங்கை, அவுஸ்ரேலியா, ஆபிரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவின் சில நாடுகளில் இவ்வாறு சந்திர கிரகணம் தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள…
-
- 0 replies
- 394 views
-
-
பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, ஸ்பேடெக்ஸ் திட்டத்தில் இரண்டு சிறிய விண்கலங்கள் ஏவப்பட்ட உள்ளன இந்தியாவின் ஸ்பேடெக்ஸ் (SpaDeX) விண்கலன்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இந்திய நேரப்படி டிசம்பர் 30ஆம் தேதி இரவு 10:00 மணிக்கு விண்ணில் ஏவப்படுகின்றன. 'ஸ்பேடெக்ஸ்' என்பது Space Docking Experiment (விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் ஆய்வு பணி) என்பதன் சுருக்கம். ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் நோக்கம் விண்கலத்தை 'டாக்' (Dock- இணைப்பது) மற்றும் 'அன்டாக்' (Undock- இணைப்பைத் துண்டிப்பது) செய்வதற்குத் தேவையான தொழில்நுட்பத்தை உருவாக்கி அதை செயல்படுத்துவதாகும். இவை பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட் மூலம் விண்…
-
- 1 reply
- 325 views
- 1 follower
-
-
வாட்ஸ் அப்'பில் சுய விவரங்களை பாதுகாக்க சில வழிகள்...! இன்று வரை 700 மில்லியன் மக்கள் ஒரு மாதத்தில் 'வாட்ஸ் அப்' பயன்படுத்தி வருகின்றனர். அதில், ஒரு மாதத்தில் மட்டும் 30 பில்லியன் செய்திகள் பரிமாறப்படுகிறது. இந்த 'வாட்ஸ் அப்'பில் தான் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது சுய விவரங்களை பரிமாறிக் கொள்கின்றனர். இங்கு சாதாரணமாக பேசிக்கொள்வது மட்டுமின்றி புகைப்படம், வீடியோ, வங்கி கணக்கு விவரங்கள், தொடர்புகளும் தனிப்பட்ட வகையில் பரிமாறப்படுகின்றன. இங்கு பிரைவசி இல்லாததால், சமூக வலைத்தளங்களில் உலவும் தீய எண்ணமுடையவர்கள் அதை தவறாக பயன்படுத்த முடியும். அதனால் ESET நிறுவனம், தங்களது சுய விவரங்கள் தவறாக பயன்படுத்தப்படாதவாறு பாதுகாக்க சில முக்கிய குறிப்புகளை அளி…
-
- 0 replies
- 468 views
-