Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. எப்போதும் குளிர்ச்சியாகவே இருக்கும் நட்சத்திரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதன் மேற்பகுதியானது பூமியின் கோடைகாலத்தைப் போன்று உள்ளது. இதன் பெயரானது WD 0806 – 661B ஆகும். இது ஒரு கோள் அல்ல, சிறிய நட்சத்திரம். இந்த நட்சத்திரம் 6 முதல் 9 தடவை பெரிய கோளான வியாழனை சுற்றி வருகிறது. பென் நாட்டை சேர்ந்த வானியல் வல்லுநரான கெவின் லுக்மன் குறிப்பிடுகையில், இது சிறிய நட்சத்திரம், இதன் வெப்பநிலை பூமியைக் காட்டிலும் குளிர்ச்சியாக இருக்கும் என்றார். வானியல் வல்லுநர்கள் நாசா ஸ்பிட்சர் விண்வெளி தொலைநோக்கி மூலம் இந்த குளிர் நட்சத்திரத்தை கண்டுபிடித்தனர். அகச்சிவப்பு கதிர்களால் செயல்படும் தொலைநோக்கி மூலம் இந்த நட்சத்திரத்தை பொருட்களின் மீது மின்னச் செய்யலாம். இந்த நட்சத்திரமானது பூ…

  2. சூரியன், வெள்ளி மற்றும் பூமி ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கும், அபூர்வ நிகழ்வு வரும், ஜூன் மாதம் 6 தேதி நடக்கவுள்ளது. சராசரியாக, 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை இது நிகழ்கிறது. இதை, வெள்ளி இடை மறிப்பு எனவும் கூறுகின்றனர். சூரிய கிரகணம்: பூமிக்கும், சூரியனுக்கும் இடையே நிலவு அமைந்தால், அது சூரிய கிரணம் அல்லது சூரிய மறைப்பு. சூரியனுக்கும், பூமிக்கும் இடையில் நிலவு மட்டுமல்லாமல் புதன் மற்றும் வெள்ளி ஆகிய, இரண்டு கோள்களும் வர இயலும். அவை உட்கோள்கள். சூரியனுக்கும், பூமிக்கும் ஒரே நேர்க்கோட்டில் அவை வரும்போது, கோள் மறைவு ஏற்படுகிறது. ஆனால், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகிய கோள்கள், பூமியின் சுற்றுப்பாதைக்கு வெளியே சுற்றி வருகின்றன. கோள் மறைவு: சூரியன…

  3. ஜப்பானிய கையடக்கத்தொலைபேசி ஜாம்பவானான என்.டி.டி. டொகோமோ கதிர்வீச்சு அளவினைக் கண்டறியக்கூடிய கையடக்கத் தொலைபேசியினை அறிமுகம் செய்யவுள்ளது. அண்மையில் அந்நாட்டின் புகுஷிமா அணு உலையிலிருந்து அணுக்கசிவு ஏற்பட்டதனைத் தொடர்ந்து அங்குள்ள மக்களிடையே தமது ஆரோக்கியம் தொடர்பில் நிலவும் அக்கறையை கருத்தில் கொண்டே இக் கையடக்கத்தொலைபேசியினை அந்நிறுவனம் உருவாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அடுத்தமாதம் ஜப்பானில் நடைபெறவுள்ள தொழில்நுட்பக் கண்காட்சியில் இதனை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. இக்கையடக்கத்தொலைபேசியின் வெளிப்பகுதிக் கவசத்தில் சமிக்ஞைகள் பொருத்தப்பட்டிருக்கும். இதுவே கதிர்வீச்சின் அளவினைக் கண்டறியுமென இதனை உருவாக்கியுள்ள நிறுவனம் தெரிவித்துள்ளது. …

  4. ஒரு உயிரினம் படிப்படியாக காலப்போக்கில் இன்னொரு உயிரினமாக மாறுகின்றது (gradualism) என்ற கோட்பாட்டை டார்வின் முன்வைத்தார். அதாவது, '1' என்ற உயிரினம் '2' என்ற உயிரினமாக மாறுகின்றது என்றால் அது 1.1, 1.2, 1.3, 1.4 etc போன்ற நிலைகளுக்கு காலப்போக்கில் மாறி பின்னர் தான் '2' என்ற உயிரினமாக மாறும். மற்றுமொரு எளிய உதாரணம் மூலம் மேலே கூறிய கருத்தை பார்ப்போம். ஒரு எலி, புலியாக மாறுகின்றது என்று வைத்துக்கொள்வோம். முதலில் அந்த எலி கொஞ்ச கொஞ்சமாக மாற ஆரம்பிக்கும். காலப்போக்கில் 'பாதி எலி பாதி புலி' போன்ற உயிரினமாக மாறும். பின்னர் கடைசியாக புலியாக மாறிவிடும். இப்போது டார்வினின் கோட்பாட்டில் உள்ள பிரச்சனை என்னவென்றால், உயிரினப்படிமங்கள் மூலமாக நமக்கு கிடைக்கும் தகவலின்ப…

  5. இயற்கையைப் பார்த்து அதன் அடிப்படையில் இயக்கத்தை வடிவமைத்துக்கொள்வது பயானிக்ஸ் இயற்கையைப் பார்த்து அதன் அடிப்படையில் இயக்கத்தை வடிவமைத்துக்கொள்வது பயானிக்ஸ் துறை. சுருக்கமாகச் சொன்னால், கண்ணதாசன் பாடிய, ‘பறவையைக் கண்டான், விமானம் படைத்தான்’ ரகம். தமிழில் இதை உயிர் மின்னணுவியல் என்கிறார்கள். எறும்புகளின் உடல் இயக்கத்தை மாதிரியாகக் கொண்டு பயானிக் எறும்புகளின் தொகுதி அண்மையில் ஜெர்மனியில் உருவாகியிருக்கிறது. எறும்புகள்போல விரைவாக நகர, ஆறு கால்கள் கொண்ட உடலமைப்பு இது. ஒவ்வொரு எறும்பின் தலைப் பகுதியில் கேமராவும், என்ன மாதிரியான தரை என்று உணர உணரியும் (சென்சார்) உண்டு. பயானிக் எறும்பு செயல்பட வழி செய்யும் லித்தியம் மின்கலங்களை சார்ஜ் செய்யவும் இந்த அமைப்பு வழி செய்யும். அசல…

    • 4 replies
    • 917 views
  6. நவீன தகவல் தொழில்நுட்பத்தில் வித்தகர்களாக விளங்கும் பல இளைஞர்களின் கனவான பேஸ்புக் நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப் (வேலை உறுதியாவதற்கு முன்பான நிலை) கிடைத்தும் கூட அது கையை விட்டுப் போகும் நிலையை சந்தித்துள்ளார். அமெரிக்காவின் ஹார்வர்டு பல்க்லைக்கழகத்தில் ஒரு இந்திய வம்சாவளி மாணவர். அவர் செய்த ஒரு நல்லகாரியம்தான்(?) இந்த நிலைக்குக் காரணம்.. அந்த நல்ல காரியம்.. பேஸ்புக்கில் உள்ள ஒரு பாதுகாப்பு குறைபாட்டை சுட்டிக் காட்டியதுதான். மரூடர்ஸ் மேப் ‘Marauder’s Map’ என்ற அப்ளிகேஷனை அரன் கண்ணா உருவாக்கினார். இதை பயன்படுத்தி பேஸ்புக் மெசஞ்சரில் இணையும்போது, நமக்கு மெசேஜ் அனுப்புவோர் எங்கிருந்து அனுப்புகிறார்கள் என்பதை அறிய முடியும். இது மிகப் பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலாகும். அதாவது, …

    • 0 replies
    • 917 views
  7. “It’s not the actual programming that’s interesting. But it’s what you can accomplish with the end results that are important.” - Dennis Ritchie (in an interview to ‘Investor’s Business Daily’) சமீபத்தைய ஏராள ஸ்டீவ் ஜாப்ஸ் அஞ்சலிக்குறிப்புகள் படித்த அயர்ச்சியிலிருந்த எனக்கு அத்தகையதோர் கட்டுரையை விரைவில் நானே எழுதப் போகிறேன் என்று யாரேனும் சொல்லியிருந்தால் எதன்பொருட்டும் அதனை நம்பியிருக்க மாட்டேன். இன்று டென்னிஸ் ரிட்ச்சிக்காக அதைச் செய்யவேண்டியிருக்கிறது. இதை எழுதிக்கொண்டிருப்பது ஓர் எழுத்தாளனாக அல்ல; ஒரு மாணவனாக‌. மென்பொருள் தர உத்திரவாதப் பொறியாளனாக நிரல் எழுதுவது என்பது சற்றே அந்நியப்பட்டுப்போயிருந்தாலும் அவ்வப்போதான தேவைக்கென்று தொடுப்பு வைத்திருப்பது …

  8. மலேரியா தாக்கத்தை அதிகளவில் எதிர்கொள்ளும் சூழலைச் சந்திக்கும் ஆபிரிக்கக் கண்டத்தைச் சார்ந்த மக்களை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இருந்து மலேரியாவை எதிர்க்க என்று கூர்ப்படைந்த "DARC" மரபணுவைக் கொண்டவர்களிடத்தில் அதே நோய்க்கு எதிராக கூர்ப்படையாத "DARC" மரபணுவைக் கொண்டவர்களைக் காட்டினும் சுமார் 40% அதிகரித்த அளவில் எயிட்ஸ் தாக்கம் ஏற்படுவதாக அமெரிக்க மற்றும் பிரித்தானிய விஞ்ஞானிகள் இனங்கண்டுள்ளனர். மலேரியாவுக்கு எதிராக கூர்ப்படையாத "DARC" மரபணு உடலில் chemokines எனும் இரசாயனத்தின் அளவில் செல்வாக்குச் செய்து, எயிட்ஸ் நோய்க்கான வைரசின் தாக்கத்தை குறைக்கும் வகையில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி போராட வசதி அளிப்பதாகக் கண்டறிந்துள்ள விஞ்ஞானிகள்.. மலேரியாவின் பெ…

  9. முயல்களையும், எலிகளையும் வேட்டையாடும் அருகி வரும் விலங்கினமான ஃபெர்ரெட்டை, அதேபோன்ற ஒரு விலங்கின் மரபணுவைப் பயன்படுத்தி குளோனிங் (படியெடுத்தல்) முறையின் மூலம் உருவாக்கி அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். 1988-ம் ஆண்டு முதல் உறைந்த நிலையில் பாதுகாக்கப்பட்டு வரும் ஃபெர்ரெட்டை ஒத்திருக்கும் விலங்கின் மரபணுக்களை கொண்டே புதிய ஃபெர்ரெட்டை குளோனிங் செய்திருக்கிறார்கள். புதிதாகப் பிறந்திருக்கும் ஃபெர்ரெட்டுக்கு எலிசபெத் ஆன் எனப் பெயரிடப்பட்டிருக்கிறது என அமெரிக்காவின் மீன் மற்றும் வனவிலங்கு சேவைத் துறை அறிவித்துள்ளது. அமெரிக்காவில் அருகிவரும் விலங்கினங்களை குளோனிங் செய்தது இதுவே முதல் முறை. ஒருகட்டத்தில் முற்றிலும் அழிந்துவிட்டதாக கருதப…

  10. குவாண்டம் எனும் பொய்மான் கரடு. spooky action குவாண்டம் எனும் பொய்மான் கரடு. ================================================= ருத்ரா இ பரமசிவன். குவாண்டம் என்பதை கையில் பிடிக்க முடியுமா? மேலே கண்ட தலைப்பு வேடிக்கையாய் இல்லை? நுண் உயிர் எதனையும் நாம் கையில் பிடித்த தில்லை.ஆனால் அவை நம் உடம்பில் உள்ளது.நுண் உயிரியையும் விட நுண்மையான அதாவது அணுக்கருப்பொருள் துகள்களான ஒரு எலக்ட்ரானை நம் கையில் பிடிக்க முடியுமா? என்ற கேள்வியே அங்கு வேறு விதமாக கேட்க பட்டுள்ளது.ஆற்றல் வடிவம் அலை வடிவமா? துகள் வடிவமா? என்ற கேள்வியே இங்கு இன்னும் ஊசி முனையாய் நம்மை உறுத்துகிறது.ஆனால் இந்த ஊசி முனையில் தான் இந்த பிரபஞ்சமே இயங்கிவருகிறது என்றால் அது எவ்வளவு ஆச்சரியம்…

  11. கால்பந்து விளையாட்டு. கீழே கிடக்கும் பந்தை பார்க்க வேண்டும், எதிர் அணியினரிடம் இருந்து இலாவகமாக தட்டிச் செல்ல வேண்டும், பந்தை துரத்திச் சென்று கோல் அடிக்க வேண்டும். இவை அத்தனையும் கால்பந்து வீரருக்கு இயலக்கூடிய காரியம்தான். ஆனால் இவற்றை செய்ய வேண்டியது கால்பந்து வீரர் இல்லை. ஒரு இயந்திரம். தேசிய அளவில் கல்லூரிகளுக்கிடையேயான ரோபோ போட்டிக்கான அறிவிப்பு வந்திருந்தது. ஒவ்வொரு கல்லூரியும் கால்பந்து விளையாடக் கூடிய மூன்று அல்லது நான்கு ரோபோக்களை வடிவமைக்க வேண்டும். அந்த ரோபோக்கள் தங்களை வடிவமைத்த கல்லூரிக்காக கால்பந்து விளையாட வேண்டும். இதுதான் போட்டியின் விதி. இந்தப் போட்டியில் எங்கள் கல்லூரியும் கலந்து கொள்ள வேண்டும் என பேராசிரியர் விரும்பினார். கால்பந்து விளையாடக்கூடிய ரோ…

  12. ஐன்ஸ்டினின் கடவுள் பற்றிய கடிதம் வணக்கம் நண்பர்களே, சென்றிடுவீர் எட்டுத் திக்கும் -கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்! என்னும் மகாகவியாரின் சொற்களை உண்மையாக்க எங்கும் செல்லாமல் இணையத்தில் மட்டுமே எட்டுத் திக்கும் தேடினால் போதும் என்று சூழலில் வாழ்கிறோம். எனினும் இணையத்திலும் தமிழ் மொழிக்கு பிற நாட்டு நல்லறிஞர் சா(சூ)த்திரங்கள் தமிழாக்கம் செய்து அளிப்பது தமிழர்களின் கடமை.அப்போது மட்டுமே தமிழில் தேடும் தமிழர்களுக்கு பயன் தரும். அந்த வகையில் அறிவியலாளர் திரு ஐன்ஸ்டின் அய்யா அவர்களின் ஒரு கடிதம் 4 மில்லியன் டாலருக்கு ஏலம் போனது என்ற செய்தியைப் படித்தவுடம் அக்கடிதத்தில் என்ன உள்ளது ,அத்னை தமிழாக்கம் செய்து நம் சொந்தங்களுடன் பகிர்ந்தால் என்ன என தோன்றி…

    • 0 replies
    • 913 views
  13. சர்வதேச அளவில் எதிர்பார்க்கப்பட்டு வரும் நோக்கியா லுமியா-920 ஸ்மார்ட்போனை, அமெரிக்க தொலை தொடர்பு சேவை நிறுவனமான ஏடி&டி வருகிற நவம்பர் மாதம் அறிமுகம் செய்கிறது. விண்டோஸ்-8 இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன்கள், போட்டி போட்டு கொண்டு மொபைல் சந்தைகளில் விற்பனை செய்யயப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆப்பிள் ஐபோன்-5 ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் லுமியா-920 ஸ்மார்ட்போன், வரும் நவம்பரில் விற்பனைக்கு வருவதாக தெரிவித்திருக்கிறது அமெரிக்க ஏடி&டி நிறுவனம். லுமியா-920 ஸ்மார்ட்போன் மட்டும் அல்லாது, குறைந்த விலையில் லுமியா-820 ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. ஏடி&டி நிறுவனம் லுமியா வரிசை ஸ்மார்ட்போன்க…

  14. இதயத்தின் மொழிகள் புரிந்து விடில்...! - பகுதி - 1 பொறுப்புத் தவிர்த்தல் (அதான்பா disclaimer!): எனது முதல் தகுதி மாட்டு வைத்தியராகவும் மேலதிக தகுதி கல/மூலக்கூற்று உயிரியலாளராகவும் இருப்பதால் இந்தக் கட்டுரைத் தொடரை மருத்துவ ஆலோசனையாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று வாசகர்களிடம் கேட்டுக் கொள்கிறேன். உயிரியல் சார்ந்த துறைகளில் நான் இன்னும் தேடுதல் செய்யும் மாணவனாக மட்டுமே இந்தத் தகவல்களை சக வாசகர்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். மாரடைப்பு: உலகின் முன்னேறிய நாடுகளில் பெரும்பாலும் மரணங்களை ஏற்படுத்தும் முதற் காரணமாக இருக்கும் ஒரு நோய் நிலைமை! நோயியல் பாசையில் மாரடைப்பு என்பது இதயத்திற்கான இரத்த ஓட்டம் சில நிமிட நேரங்களுக்குத் தடைப்படுவதால் (ischemia) இதயத்தின் சில குறிப்ப…

    • 3 replies
    • 913 views
  15. வெடிகுண்டுகளை முகர்ந்து பார்க்கும் எலக்ட்ரானிக் மூக்கு இப்போதெல்லாம் வெடிகுண்டுகள் செய்வதென்பது குடிசைத் தொழிலாக போய்விட்டிருக்கிறது. அதிகரித்து வரும் தீவிரவாத அச்சுறுத்தலிலிருந்து தற்காத்துக் கொள்ள ஒரு கருவியைக் கண்டுபிடித்துள்ளனர். மிகச்சிறிய நாணயத்தின் அளவிலான உணர்வுக்கருவி இது. ஒரு "சில்"லில் இரண்டு உலோக படலங்கள். உலோக படலங்களுக்கிடையே வெடிகுண்டு செய்ய பயன்படும் ஹைட்ரஜன் பெராக்சைடின் வாசனை இருந்தால் போதும். இந்த எலக்ரானிக் மூக்கு வேலை செய்ய ஆரம்பித்துவிடும். செம்பு மற்றும் கோபால்ட் தாலோசையனைன் படலங்களுக்கிடையே எந்த வாயு இருந்தாலும் இரண்டு படலங்களும் ஒரே அளவிலான மின்சாரத்தைக் கடத்தும். ஆனால் வாயுக்களில் ஹைட்ரஜன் பெராக்சைடைச் சேருங்கள்... செம்பு…

  16. ஒரு வெற்றியாளரின் கதை ... ஆப்பிள் நிறுவனத்தின் மறைந்த தலைவர் ஸ்டீவ் ஜொப்ஸ் ஸ்டான்போர்ட் பல்கலைகழகத்தில் ஆற்றிய உரையின் மொழி பெயர்ப்பு ... உலகிலே மிக சிறந்த பல்கலைகழகம் ஒன்றில்உங்களோடு இருப்பதை பெருமையாகநினைக்கிறன். உண்மைகள் சொல்ல படவேண்டும். நான் ஒருபோதும்பல்கலைகழகங்களில் பட்டம் பெறவில்லை.பட்டமளிப்பு விழா ஒன்றுக்கு அருகில் வருவதுஇதுதான் முதல் தடவை. நான் இன்று உங்களுக்குஎனது வாழ்கையில் இருந்து மூன்று கதைகளைசொல்ல விரும்புகிறேன். அவ்வலவு தான்.பெரிதாக ஒன்றுமில்லை. மூன்றே மூன்றுகதைகல்தான். முதல்கதை புள்ளிகளை தொடுப்பதுபற்றியது. ரீட் கல்லூரியில் பட்டப்படிப்பிற்கு சேர்ந்து ஆறு மாதங்களில் எனது பட்ட படிப்பைகைவிட்டேன்.நான் ஏன் அவ்…

    • 0 replies
    • 912 views
  17. விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி.சி47 ரொக்கெட் இந்தியாவின் காா்டோசாட் செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்காவின் 13 சிறிய ரக செயற்கைக்கோள்களைச் சுமந்தபடி, பி.எஸ்.எல்.வி.சி47 ரொக்கெட் நாளை (புதன்கிழமை) விண்ணில் செலுத்தப்படவுள்ளது. புவி கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு கண்காணிப்புக்கு இந்த காா்டோசாட்-3 செயற்கைக்கோள் உதவவுள்ளது. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து, நாளை காலை 9.28 மணிக்கு ரொக்கெட் விண்ணில் ஏவப்படவுள்ளது. மேலும் 1,625 கிலோ எடை கொண்ட இந்த மூன்றாம் தலைமுறை அதிநவீன காா்டோசாட்-3 செயற்கைக்கோள், புவியிலிருந்து 509 கி.மீ. தொலைவிலான சுற்றுவட்டப் பாதையில் 97.5 கோணத்தில் நிலைநிறுத்தப்படவுள்ளது. …

  18. இளம் வயது கார்ல் மார்க்ஸ் கார்ல் மார்க்ஸ் பிறந்த நாள்: மே- 5 கார்ல் மார்க்ஸ் (5 மே 1818 14 மார்ச் 1883) ஜெர்மனியில் பிறந்தவர். அவருடைய அப்பா ஒரு வழக்கறிஞர். தன்னைப் போலவே மகனும் ஒரு வழக்கறிஞராக வர வேண்டும் என அவர் விரும்பினார். ஆனாலும், அவர் கட்டாயப்படுத்தவில்லை. மார்க்ஸ் சட்டம் படித்தாலும் தத்துவத்தில் ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பித்து டாக்டர் பட்டம் பெற்றார். அடக்குமுறை படித்து முடித்ததும் ஒரு பத்திரிகைக்கு ஆசிரியர் ஆனார். அப்போது மன்னராட்சி முறையில்தான் அவரது நாட்டில் ஆட்சி நடந்தது. அவரது பத்திரிகை மன்னராட்சியை எதிர்த்தது. மக்களின் பிரச்சினைகளை ஆதரித்தது. அதனால் மன்னரின் அடக்குமுறையைச் சந்தித்தது. இறுதியில் மூடப்பட்டது. ஜெர்மனியிலிருந்து இங்கிலாந்து சென்று குட…

    • 0 replies
    • 911 views
  19. Started by akootha,

    [size=1] [size=6]பதிலைத்தேடி[/size][/size][size=1] [size=4]புலம்பெயர் நாடுகளில் வாழும் நாம் எவ்வளவுதான் கடினமாக வேலைசெய்தாலும், படித்தாலும் ஓரளவிற்கு மேலே வளர்ச்சிகாண்பது பலருக்கும் கடினமானது. பொதுவாக வெற்றிகரமாக சொந்த தொழில்முயற்சியில் ஈடுபடுபவர்கள் வெற்றிகாணுகின்றனர். இதற்கு பலருக்கும் நல்ல 'ஐடியாக்கள்' இருந்தாலும் அதை நடைமுறைப்படுத்த பணம், சட்டம் என சிக்கல்கள் உள்ளதால் அவர்கள் அதில் கவனம் எடுப்பதில்லை. [/size][/size] [size=1] [size=4]ஆனால், சமூகத்தில் உள்ள பணக்காரர்கள் இல்லை முதலீட்டலர்களை இல்லை அந்த துறை சம்பந்தப்பட்டவர்களிடம் இது பற்றி 'விவேகமாக' ஆராய்ந்து உங்கள் தீர்வுகளை சமர்ப்பிக்கலாம். [/size][/size] [size=1] [size=4]பதிலைத்தேடி #1[/size][/size][size=…

  20. ஆளில்லா போர் வானூர்திகள் இப்போது படைத் துறையில் பிரபலமாகிவிட்டன. இனி இந்தத் தொழில் நுட்பம் பயணிகள் வானூர்தியிலும் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. அதாவது வானோடி இல்லாமல் வானூர்தி இயங்கப்போகிறது இரட்டை இயந்திரம் கொண்ட பயணிகள் வானூர்தி ஒன்று பிரித்தானியாவில் பரீட்சித்துப் பார்க்கப்படுகிறது. இது தரையில் இருந்து தொலைக் கட்டுப்பாட்டு மையம் (Remote Control), வானூர்தியில் அதிசக்தி வாய்ந்த உள்ள கணனிகள் மற்றும் காணொளிப் பதிவுக் கருவிகள் அத்துடன் செய்மதி தொலைத் தொடர்பு அமைப்பு (satellite communications) போன்றவற்றின் மூலம் பறக்க வைக்கப்பட இருக்கிறது. பிரித்தானிய அரசும் ஏழு வானூர்தி நிறுவனங்களும் இணைந்து 62 மில்லியன் ஸ்ரேலிங் பவுண் செலவில் இத்திட்டத்தை செயற்படுத்துகின்றன. இத்திட்டம…

    • 0 replies
    • 908 views
  21. அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்? கே.ஆர். ஸ்ரீதர் – இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் கே.ஆர். ஸ்ரீதர் – இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொன்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே. அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்? : திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முட…

  22. கிழக்கில் இரண்டு,மேற்கில் இரண்டு கிரகங்களைக் காணலாம் நமக்கு நன்கு பரிச்சயமான நான்கு கிரகங்களை வெறும் கண்ணால் பார்க்க இது ஏற்ற சமயமாகும். இவற்றில் வெள்ளி, புதன் ஆகிய இரண்டு கிரகங்களை சூரிய உதயத்துக்கு முன்னர் கிழக்கு வானில் காணலாம். செவ்வாய், சனி ஆகிய இரண்டு கிரகங்களையும் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு மேற்கு வானில் காணலாம். வானில் நம்மால் மொத்தம் ஐந்து கிரகங்களை மட்டுமே வெறும் கண்ணால் பார்க்க முடியும். மேலே கூறியபடி நான்கு கிரகங்களை மட்டுமே இப்போது நம்மால் காண இயலும். ஐந்தாவதான வியாழன் கிரகம் இப்போது பகலில் சூரியனுக்கு அருகே அமைந்திருப்பதால் அதைக் காண இயலாது. அதிகாலையில் கிழக்கு வானை நோக்கினால் வெள்ளி கிரகம் கண்ணில் படாமல் போகாது. அது வைர மூக்குப் பொட்டு போல ஜொல…

  23. ஏப்ரல் மாதம்-29 ஆம் திகதி பூமியை விண்கல் தாக்கினால் பாரிய அழிவு ஏற்படும்.! மிகப்பெரிய விண்கல் ஒன்று பூமியை நோக்கி பயணிப்பதாகவும், இந்த விண்கல் பூமியை தாக்கினால் மிகப்பெரிய அழிவு ஏற்படும் எனவும் நாசா அறிவித்துள்ளது. விண்கல் என்பது விண்வெளியில் இருந்து வளி மண்டலத்தை கடந்து பூமியை அடையும் பொருளாகும். சூரிய மண்டலத்தில் பில்லியன் கணக்கில் சிறு கற்களும், உலோகப் பாறைகளும் நீந்திக் கொண்டிருக்கின்றன. இந்த விண்கற்கள் சில பூமியை நோக்கி வருமாயின் அது மேற்புறத்தில் இருந்து ஈர்ப்பு விசை காரணமாக அதி வேகத்தில் வந்தடையும். எரிகல் அல்லது எரி நட்சத்திரம் வளிமண்டலத்தின் உராய்வு வெப்பத்தினால் எரிந்து, ஒளிந்தபடியான பாதையை ஏற்படுத்துகின்றன. அப்பொழுது இவை எரிகல் அல்லது எரி நட…

  24. எவர் “க்ரீன்” எலெக்ட்ரிக்! உலகின் நம்பர் -1 எலெக்ட்ரிக் கார்! ர.ராஜா ராம மூர்த்தி மின்சார கார்களா? அதெல்லாம் ஓட்ட நல்லாவும் இருக்காது; ஸ்பீடாகவும் போகாது. என்ன இருந்தாலும் பெட்ரோல் இன்ஜின் ஃபீல் இருக்காது’ என சிலர் சொன்னாலும், காலம் மாறிவிட்டது நண்பர்களே! இனி, மின்சார கார்களைத் தவிர்க்க முடியாது. பாரம்பரியமிக்க கார் நிறுவனங்களே மின்சார கார் தயாரிப்பிலும், ஆராய்ச்சியிலும் சொதப்பிக்கொண்டிருக்கின்றன. ஒரு மின்சார காராக மட்டுமில்லாமல், உலக ஆட்டோமொபைல் துறைக்கே பாடம் சொல்லிக் கொடுத்திருக்கிறது, டெஸ்லா மாடல் S காரின் வெற்றி. 2009-ல் அமெரிக்க அரசின் எரிசக்தித் துறையிடம் இருந்து வாங்கிய 465 மில்லியன் டாலர் கடனில்தான் துவங்குகிறது, டெஸ்லா மாடல் S காரின் வரலாறு. புகழ்பெற்ற டி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.