செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7096 topics in this forum
-
இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனுக்கு, சச்சின் டெண்டுல்கர் கையெழுத்திட்டு கொடுத்த கிரிக்கெட் பேட் 3400 பவுண்ட்ஸ்சுக்கு ஏலம் போனது.கடந்த 2010ம் ஆண்டில், இங்கிலாந்து பிரதமர் கேமரூன், இந்தியா வந்தபோது, சச்சின் அவருக்கு தான் பயன்படுத்திய கிரிக்கெட் பேட்டை கையெழுத்திட்டு பரிசாக வழங்கினார். இதுவரை அதை பத்திரமாக பாதுகாத்து வந்த கேமரூன், ருவாண்டாவில் கிரிக்கெட் ஸ்டேடியம் ஒன்று கட்டும் பணிக்கு நிதி திரட்டுவதற்காக சச்சின் வழங்கிய பேட்டை நன்கொடையாக வழங்கினார். கேமரூன் தொகுதியின் தலைவராக இருந்த கிறிஸ்டோபர் ஷாலேயின் முதலாமாண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டது. அதை முன்னிட்டு லார்ட்ஸில் உள்ள லாங் ரூமில் சச்சின் பேட் ஏலம் விடப்பட்டது. அதில், பேட் 3400 பவுண்ட்ஸ்சுக்கு ஏலம் …
-
- 1 reply
- 653 views
-
-
சர்ச்சையை கிளப்பியுள்ள பின்லாந்து பிரதமரின் படப்பிடிப்பு பின்லாந்தின் பிரதமர் சன்ன மரினின் புகைப்படம் அந்நாட்டில் விவாதா பொருளாக மாறியுள்ளது. கடந்த ஆண்டு 34 வயதில் பதவியேற்ற உலகின் இளம் பிரதமரான சன்ன மரின், பிரபல பத்திரிக்கைக்கு பிளேஸரின் கீழே சட்டை எதுவும் அணியாமல் போஸ் கொடுத்துள்ளார். இந்த பத்திரிகை ஒக்டோபர் 9 ஆம் திகதி வெளியான உடனேயே சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஒரு ஹேஷ்டேக்கை உருவாக்கி சன்னா மரினை ஆதரித்து ஏராளமான பெண்கள் அதே போல் ஆடையை அணிந்து படங்களை வெளியிட்டுள்ளனர். பிரபல பத்திரிகைக்கு போஸ் கொடுத்த சன்ன மரீன் அணிந்த பிளேசர் அவர் வகிக்கும் பதவிக்கு தகுதியானதல்ல என்று ஆட்…
-
- 3 replies
- 653 views
-
-
இலங்கை குறித்து ஐக்கிய நாடுகள் செயற்குழு கூடி ஆராயவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் முகவர் நிறுவனங்கள், நிதியங்கள் மற்றும் தணை நிறுவனங்களின் பொறுப்பதிகாரிகள் இவ்வாறு கூடத் தீர்மானித்துள்ளனர். ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட பெட்ரீ குழுவின் மீளாய்வு அறிக்கை தொடர்பில் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட உள்ளது. எதிர்வரும் ஆண்டின் நடுப்பகுதியளவில் இந்த மீளாய்வு தொடர்பான பரிந்துரைகளை முன்வைக்க முடியம் என எதிர்பார்க்கப்படுகிறது. http://www.globaltamilnews.net
-
- 2 replies
- 653 views
-
-
உலக நாடுகளில் முதல் பத்து மகிழ்வான நாடுகள்: 1. Denmark > Life satisfaction score: 7.8 > Employment rate: 73% (6th highest) > Self-reported good health: 71% (17th highest) > Employees working long hours: 1.92% (4th lowest) > Disposable income: $23,213 (15th lowest) > Educational attainment: 76% (18th lowest) > Life expectancy: 79.3 (11th lowest) 2. Norway > Life satisfaction score: 7.6 > Employment rate: 75% (4th highest) > Self-reported good health: 80% (8th highest) > Employees working long hours: 2.66% (5th lowest) > Disposable income: $30,465 (3rd highest) > Educational attainment: 81% (t…
-
- 1 reply
- 653 views
-
-
ஆதித் ‘தொழிலு’க்கும் வந்தது ஆபத்து! ஜேர்மனியில், உலகின் முதலாவது பாலியல் பொம்மைகளின் ‘விபச்சார விடுதி’ ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எவலின் ஸ்க்வார்ஸ் (29) என்ற பெண் ‘போர்டோல்’ என்ற பெயரில் இந்த விபச்சார விடுதியை டோர்ட்மண்டில் ஆரம்பித்திருக்கிறார். விபச்சார விடுதியொன்றை அமைக்க எண்ணிய எவலின், முதலில் உண்மையான பெண்களைப் பயன்படுத்தவே திட்டமிட்டிருந்தார். எனினும், பாலியல் பொம்மைகளுக்கு ஐரோப்பாவில் வரவேற்பு கூடிவருவதை உணர்ந்த அவர், பெண்களுக்குப் பதிலாக பொம்மைகளைப் பயன்படுத்தத் திட்டமிட்டார். அதன்படி, வெவ்வேறு உயரம், தோற்றம், மார்பளவு மற்றும் எடை கொண்ட பதினொரு பாலியல் பொம்மைகளை எவலின் வாங்கியுள்ளார். இந்த பொம்மைகள் ஒவ்வொன்றும் இரண்டாயிரம் பவு…
-
- 6 replies
- 652 views
-
-
கோவா: ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் சிஇஓ பெண் ஒருவர் கோவாவாவில் தனது நான்கு வயது மகனை கொலை செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெற்ற மகனை கொலை செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட பெண்ணின் பெயர் சுசனா சேத். 39 வயதாகும் இவர் பெங்களூருவில் இயங்கிவரும் செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட்-அப் நிறுவனமான மைண்ட்ஃபுல் AI ஆய்வகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO). இவர் கடந்த சனிக்கிழமை (ஜன.6) அன்று வடக்கு கோவாவின் கண்டோலிமில் உள்ள சோல் பன்யன் கிராண்டே என்ற ஹோட்டலுக்கு தனது நான்கு வயது மகனுடன் சென்றுள்ளார். திங்கள்கிழமை சுசனா சேத், பெங்களூரு செல்ல டாக்ஸியை ஒன்றை முன்பதிவு செய்யுமாறு ஹோட்டல் ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார். ஹோட்டல…
-
- 1 reply
- 652 views
- 1 follower
-
-
தனியாக உலகை சுற்றிவந்த 17 வயது விமானி By Vishnu 26 Aug, 2022 | 10:26 AM 17 வயதான மெக் ரதர்போர்ட், உலகை தனியாக விமானத்தில் சுற்றிவந்த மிக இளம் விமானி எனும் சாதனையைப் படைத்துள்ளார். பெல்ஜிய, பிரித்தானியரான மெக் ரதர் போர்ட். சிறிய விமானமொன்றில் 5 மாதங்களில் உலகை சுற்றிவந்துள்ளார். இப்பயணத்தை கடந்த மார்ச் 23 ஆம் திகதி பல்கேரியாவிலிருந்து மெக் ரதர்போர்ட் ஆரம்பித்தார். நேற்றுமுன்தினம் (24) பல்கேரியாவின் சோபியா நகரை அவர் வந்தடைதன் மூலம் தனது பயணத்தை பூர்த்தி செய்தார். இப்பயணத்தின்போது 5 கண்டங்களைச் சே…
-
- 0 replies
- 652 views
-
-
நோபல் பரிசைப் பெற்ற அலய்ஸ் மன்ரோ அம்மையார் யார் என அறிவீர்களா. கனேடிய பெண் சிறுகதை எழுத்தாளரான 82 வயதான அலய்ஸ் மன்ரோ 2013-ம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசை பெற்றுள்ளார். நவீன சிறுகதைகளின் மேதை என்றழைக்கப்படும் அலய்ஸ் மன்ரோவின் எழுத்துக்கு நோபல் பரிசே மிகவும் குறைவானதே எனலாம். அவ்வளவு ஆழமான நுண்ணிய மனித உணர்வுகளால் பின்னப்பட்ட கதை மாந்தர்களையும் கதை அம்சங்களையும் உள்ளடக்கியது இவரது சிறு கதைகள். தன்னை பெண்ணியவாதி எனக் கூறிக் கொள்வதில் உடன்பாடில்லாத அவரது பெரும்பாலான பாத்திரங்கள் பெண்களின் உலகைச் சார்ந்தே இருந்தது. தமிழ் மற்றும் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட பன்னாட்டுச் சிறுகதைகள் சிலவற்றை வாசித்துள்ளேன். அலய்ஸ் மன்ரோவின் எழுத்துக்களை நான் வெகு…
-
- 4 replies
- 652 views
-
-
-
- 0 replies
- 652 views
-
-
இங்கிலாந்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் யாஹூ நிறுவனத்திற்கு தான் கண்டுபிடித்த சம்லி என்னும் அப்ளிகேஷனை பல கோடி ரூபாய்க்கு விற்றுள்ளார். இவரது திறமையை பார்த்து, பள்ளி படிப்பு முடியும் முன்னே இச்சிறுவனுக்கு யாஹூ நிறுவனம் வேலையும் அளித்துள்ளது. லண்டனைச் சேர்ந்தவர் நிக் டிஅலோய்சியோ (17). உயர் நிலைப் பள்ளி மாணவர். மொபைல் அப்ளிகேஷன்களை தயாரிப்பதில் அதீத ஆர்வமுடைய இச்சிறுவன், சிறுவயது முதலே இதற்கான திறன்களை வளர்த்துக்கொண்டுள்ளார். இவருக்கு கோடிக்கணக்கான ரூபாயை அள்ளி தந்தது இவரின் சம்லி என்னும் மொபைல் அப்ளிகேஷன்.பெரிய கட்டுரைகளில் உள்ள தகவல்களை மொபைலில் பார்க்க ஏற்றவாறு சிறிய பத்திகளாக மாற்றியமைக்கும் இந்த அப்ளிகேஷன் வெளியான 4 மாதங்களில் யாஹூவிற்கு விற்கப்பட்டது. …
-
- 0 replies
- 652 views
-
-
வாழைச்சேனை பிரதேசத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் வலையில் புதிய வகையான மீன் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை (22) அகப்பட்டுள்ளது. வாழைச்சேனையைச் சேர்ந்த முஹைதீன் பாவா நிஸார் என்பவரது படகில் சென்ற மீனவர்களின் வலையிலேயே இந்த மீன் அகப்பட்டுள்ளது. கறுப்பு மற்றும் சாம்பல் நிறமும் கொண்ட இந்த மீன் 07.5 கிலோகிராம் எடையும் 04 அடி நீளமும் உடையதாகக் காணப்படுகின்றதென படகு உரிமையாளர் முஹைதீன் பாவா நிஸார் தெரிவித்தார். இப்புதிய வகை மீன் தொடர்பில் பிரதேச கடற்றொழில் பரிசோதகருக்கு தெரியப்படுத்தியதாகவும் அவர் கூறினார். (எம்.எம்.அனாம்) http://tamil.dailymirror.lk/--main/119082-2014-07-22-08-45-00.html
-
- 2 replies
- 652 views
-
-
ஜவஹர்லால் நேரு விருதுக்காக ஜெர்மன் நாட்டுப் பிரதமர் ஏஞ்சலா தேர்வு ஜவஹர்லால் நேரு விருதுக்காக ஜெர்மன் நாட்டுப் பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2009-ம் ஆண்டிற்கான இந்த விருதுக்கு தகுதியானவரை தேர்வு செய்ய துணை குடியரசுத் தலைவர் முகமது ஹமீது அன்சாரி தலைமையிலான குழு தில்லியில் கூடியது. இக்குழுவின் முடிவில் ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கெலைத் தேர்ந்தெடுத்துள்ளதாக வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதில் ரூ.1 கோடி ரொக்கம், கேடயம் மற்றும் பாராட்டுப் பத்திரமும் அடங்கும். www.newsonnews.com
-
- 0 replies
- 652 views
-
-
சர்ச்சைக்குள்ளாகியுள்ள ஒபாமாவின் ஆசை முத்தம்! By Kavinthan Shanmugarajah 2012-11-20 11:36:29 மியன்மாருக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அந்நாட்டின் ஜனநாயக ஆர்வலரான ஆங் சான் சூ கிக்கு வழங்கிய முத்தமானது பரப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்வாதிகார ஆட்சியிலிருந்து தற்போது சிறிது சிறிதாக ஜனநாயக நீரோட்டத்தினுள் நுழைந்து வரும் மியன்மாருக்கு ஒபாமா வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இதன் ஓர் அங்கமாக ஆங் சான் சூ கி 15 வருடங்களாக காவலில் வைக்கப்பட்டிருந்த அவரின் வீட்டுக்கு ஒபாமா விஜயம் மேற்கொண்டுள்ளார். இங்கு உரையாற்றிய ஒபாமா அந்நாட்டுக்கு தனது ஆதரவை தெரிவித்தார். மேலும் அவரது விஜயத்தின் முக்கியமாக அமைந்தது ஆங் ச…
-
- 1 reply
- 652 views
-
-
24 பெண்களை திருமணம் செய்தவருக்கு நேர்ந்த கதி கனடாவில் 24 பெண்களை திருமணம் செய்து 149 குழந்தைகளை பெற்றெடுத்த கிறிஸ்துவ மத தலைவரை வீட்டுக்காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கனடாவில் பலதார திருமணங்களுக்கு தடைவுள்ளது. ஆனால் இதை மீறி பல பெண்களை திருமணம் செய்து கொள்வது வழக்கமாக உள்ளது. வின்ஸ்டென்ட் பிளாக்மோர் என்ற 61 வயதான நபரே 24 பெண்களை திருமணம் செய்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. குறித்த நபர் கிறிஸ்தவ அமைப்பு ஒன்றின் ஆலய மத தலைவராவார். குறித்த நபர் இளம் வயதில் இருந்தே திருமணம் செய்துகொள்ள தொடங்கி சமீபகாலம் வரை தொடர்ந்து திருமணம் செய்துள்ளார். குறித்த நபர் திருமணம் செய்தவர்களில…
-
- 0 replies
- 652 views
-
-
[size=5]லண்டன் ஒலிம்பிக் தீபம் அணைக்கப்பட்டு இடமாற்றம்[/size] [size=3][size=4][/size][/size] [size=3][size=4]லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கான தொடக்க விழா கடந்த 27ம் திகதி கோலாகலமாக நடந்தது. வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள், வாணவேடிக்கைகள் என ஒலிம்பிக் மைதானம் களைகட்டியது.[/size][/size] [size=3][size=4]தொடக்கவிழா நிகழ்ச்சிகளை பிரபல ஹாலிவுட் இயக்குனர் டேனி பாய்ல் வடிவமைத்திருந்தார். உலக அளவில் ரசிகர்களை பிரமிக்க வைத்த தொடக்க விழாவுக்குப் பின்பு, தடகள போட்டிகளுக்காக மைதானத்தை தயார் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.[/size][/size] [size=3][size=4]இதன் ஒரு பகுதியாக ஒலிம்பிக் சுடர் விளக்கு மைதானத்தின் வேறு பகுதிக்கு மாற்றப்பட்டது. இதையொட்டி, சுடர் தற்காலிகமாக அணைக்கப்பட்டு கிரேன…
-
- 3 replies
- 652 views
-
-
புதுடில்லி:முன் பின் சந்தித்திராத இளம் ஜோடி, ரயிலில் சந்தித்து பேசிய, இரண்டு மணி நேரத்திலேயே, ஒருவரை ஒருவர் பிடித்துப் போய், திருமணமும் செய்து கொண்ட சம்பவம், டில்லி ரயிலில் நடந்துள்ளது. "ஆயிரம் காலத்து பயிர்' என, வர்ணிக்கப்படும் திருமண உறவில், இரு உள்ளங்களை இணைக்க, ஜாதி, மதம், ஜாதகம், பொருத்தம் என, பலவும் பார்க்கப்படுகின்றன. ஆனால், பார்த்த சில மணி நேரத்திலேயே, இரு மனமும் ஒன்றாகி, திருமண பந்தம் வரை சென்றுள்ளது, உண்மையில் ஆச்சர்யமானது தான்.முன்னெப்போதும் இது போன்ற சம்பவம் நடந்திராது என்று கூறும் அளவிற்கான சம்பவம், டில்லி ரயிலில் நடந்துள்ளது. கடந்த செவ்வாய் கிழமை மதியம், டில்லி, நிஜாமுதீன் ரயில் நிலையத்திலிருந்து, ரயில் ஒன்று புறப்பட்டது. இருக்கை வசதி கொண்ட அந்த ரயில…
-
- 1 reply
- 652 views
-
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் புலிகள் கைதாம்…? இராணுவம். June 02, 20151:22 pm அண்மைக்காலமாக மத்தியகிழக்கு நாடுகளில் இருந்து நாடு திரும்பிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ள கிழக்கு மாகாண தமிழ் இளைஞர்கள், விடுதலைப் புலிகளால் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் இராணுவம் இதனைத் தெரிவித்துள்ளது. இதன் காரணமாகவே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இராணுவத்தினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இதுவரையில் 16 இளைஞர்கள் வரையில் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து திரும்பிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை அம்பாறை பகுதியைச் சேர்ந்த ஒருவரும், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிட…
-
- 2 replies
- 651 views
-
-
இது எக்ஸிட் போலா அல்லது புல்ஷிட் போலா? முடிவுகள் நாளை மாலை தெரிந்துவிடும். Source: Dinamalar.
-
- 6 replies
- 651 views
-
-
நீண்ட கால நண்பியை மணமுடிக்க துறவறத்தைத் துறந்த திபெத்திய லாமா! திபெத்தின் பிரபலமிக்க லாமா தலைவர், தனது நீண்ட கால நண்பியைத் திருமணம் செய்துகொண்டு துறவறத்தைத் துறந்தமை திபெத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாயே டோர்ஜே (33) என்ற இந்த லாமா சிறு வயது முதலே துறவறத்தைக் கடைப்பிடித்து வந்தவர். திபெத்தின் மிக முக்கியமான பௌத்த பாடசாலையை ஆரம்பித்த கர்மபா லாமாவின் மறு அவதாரம் என்றும் தாயே டோர்ஜேவை திபெத்தியர்கள் குறிப்பிடுவர். இந்த நிலையில், இவ்வளவு சிறப்புக்கள் கொண்ட டோர்ஜே, தனது நீண்ட கால நண்பியான ரின்ச்சென் யேங்சம் (36) என்ற பூட்டானியப் பெண்ணை கடந்த 25ஆம் திகதி திருமணம் செய்துகொண்டதாகவும், இதற்காக டோர்ஜே துறவறத்தைத் துறந்துவிட்டதாகவும…
-
- 16 replies
- 651 views
-
-
காணிமற்றும் காவல்துறை அதிகாரங்களை கோருவதென கிழக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கிழக்குமாகாணசபையின் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் உள்ளிட்டஉறுப்பினர்கள் ஏகமனதாக இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர். இந்தத்தீர்மானத்தின் பிரதியொன்று ஜனாதிபதியின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்ச அரசினால் உருவாக்கப்பட்ட பிள்ளையான் என்ற கிழக்கு முதலமைசர் தொடர்ந்து அரசியலில் நிலைக்கும் நோக்கோடு அரச எதிர்ப்பு அரசியல் நாடகத்தை ஆரம்பித்துள்ளார். பல குற்றச் செயல்களின் சூத்திரதாரி எனக் குற்றம் சுமத்தப்பட்ட பிள்ளையான், கடந்தவாரம் சுவிஸ் நாட்ட்டில் செங்களான் பகுதியில் பிரான்ஸ் மற்றும் ஏனைய நாடுகளிலிருந்து சென்ற ஆதரவாளர்களோடு ஒ…
-
- 4 replies
- 651 views
-
-
உலகின் அதி உயர குழந்தை : வயது இரண்டரை, உயரம் 4 அடி 5அங்குலம்! (படங்கள் இணைப்பு) உலகின் உயரமான குழந்தையாக இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் மீரட் மாவட்டத்தைச் சேர்ந்த கரன் சிங் கருதப்படுகின்றார். இரண்டரை வயதான இக்குழந்தையின் தற்போதைய உயரம் 4 அடி 5 அங்குலங்கள். 7 அடி 2 அங்குலமான இவரது தாயார் ஆசியாவின் உயரமான பெண்மணியென்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் ஒரு கூடைப்பந்து வீராங்கனையாவர். இதே வயதையொத்த குழந்தைகளைவிட இவர் சுமார் 2 மடங்கு உயரமாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பிறக்கும் போதே இக்குழந்தை 2 அடி உயரம் இருந்ததாகவும், தன்னை விட உயரமாக, தன் மகன் வளர்வான் எனவும் கரனின் தாயார் தெரிவித்துள்ளார். கர…
-
- 3 replies
- 651 views
-
-
2024இல் பல நாடுகளில் பெரிய அளவில் சுனாமி, நிலநடுக்கம் ஏற்பட போகிறது என்று பாபா வங்கா கணித்து இருக்கிறாராம்! அவரின் கணிப்பில் அடுத்தடுத்து 2 முக்கியமான சம்பவங்கள் நடந்து உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 2024இல் என்னென்ன நடக்கும் என்றும் பாபா வங்கா தனது கணிப்பில் எழுதி வைத்து இருக்கிறாராம். அதன்படி 2024இல் இந்தியாவின் வெப்பநிலை 50 டிகிரி செல்ஸியஸ் வரை உயரும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் வெப்பநிலை காரணமாக அதிக அளவில் வெட்டுக்கிளிகள் வந்து தாக்கும் என்றும் இதனால் பயிர்கள் மொத்தமாக சேதம் அடைந்து மக்கள் பஞ்சத்தால் அழிய போகிறார்கள் என்று இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொந்த நாட்டுக்காரரின் கையால் ஒரு பெரிய ரஷிய தலைவர், கொலை செய்யப்படுவார்.…
-
- 1 reply
- 650 views
- 1 follower
-
-
இஸ்லாமிய நாடான.. ஜோடானின் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் விவாத அரங்கில் இருந்த இரு தரப்பு அரசியல்வாதிகள்.. விவாதம் முற்றி நடுவரையும் மேசை கதிரைகளையும்.. இடித்துத் தள்ளிக் கொண்டு.. "சூ" தாக்குதல் நடத்திக் கொண்டதோடு.. துப்பாக்கிச் சண்டையில் ஈடுபடும் அளவிற்கு.. போனதை இங்கு காணலாம். Gun brandished during live Jordanian TV debate http://www.bbc.co.uk...e-east-18756726 அண்மையில் மேற்குலக (ஐரோப்பா) தமிழர் புலம்பெயர் நாடுகளில் ஒளிபரப்பாகும்.. ஈழத்தமிழர்கள் நடத்தும்.. தீபம் தொலைக்காட்சியிலும் ஒரு ஒட்டுக்குழு சார்ப்பு.. சிறீலங்கா சிங்கள அரசு சார்ப்பு.. லண்டன் வாழ் ரமிழ் பெண்மணி (சோத்து ஆன்ரி ) ஒருவர் விவாத அரங்கில்.. இவ்வாறு மிக மோசமாக நடந்து கொண்டமை குறிப்பிடத்தக்க…
-
- 4 replies
- 650 views
-
-
மஹிந்தவிற்கு பிரதமர் பதவி இல்லை கோட்டா தப்பியோட்டம் August 14, 20151:05 pm நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், முன்னாள் பாதூகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல தயாராக இருப்பதாக ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. எவன்கார்ட் ஆயுத விற்பனைத் தொடர்பில் முன்னாள் பாதூகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, உள்ளிட்ட மூவருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த தடையினை காலி நீதிமன்றம் நேற்று ஒரு மாதகாலத்திற்கு நீக்கியுள்ள நிலையில் அவர் தப்பிச் செல்ல முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நடைபெறவுள்ள தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தோல்வி ஊர்ஜிதமாகியுள்ளதுடன், மஹிந்தவிற்கு பிரதமர் பத…
-
- 0 replies
- 650 views
-
-
கடந்த வெள்ளிக்கிழமை 23.06.2023 யேர்மனி முனிச் நகரில் இருந்து சோபியா (பல்கேரியா)வுக்கு லுஃப்தான்சா விமானம் ஒன்று புறப்படத் தயாரக இருந்தது. திடீரென 27 வயது நிரம்பிய பெண் பயணி ஒருவர் தனது உடைகளைக் களைந்து விட்டு பெரும் சத்தமாகக் கூச்சல் போட ஆரம்பித்தாள். நிலமையைச் சீராக்க விமானத்துக்குள் பொலிஸார் வரவழைக்கப் பட்டனர். அவர்கள் எவ்வளவோ முயன்றும் அவளுக்கு உடையை அணிவிக்கவோ, அவளைச் சமாதானப் படுத்தவோ முடியவில்லை. இதற்கிடையில் அவளது நிர்வாண மேனியை போர்வை கொண்டு மூடி விட எத்தனித்த ஒரு பொலிஸின் இடது கையின் முன்பக்கத்தில் கடித்து காயத்தையும் ஏற்படுத்தியிருந்தாள். நீண்ட போராட்டங்களுக்குப் பின்னர் விமானத்தை விட்டு வெளியே கொண்டு வரப்பட்ட பல்கேரியாவைச் சேர்ந்த அந்தப் பெண் மருத்…
-
- 5 replies
- 649 views
-