செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7097 topics in this forum
-
(வத்துகாமம் நிருபர்) கேகாலை, புலத்கொஹுபிட்டிய பிரதேசத்தில் தேங்காய் தலையில் விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, உயிரிழந்தவர் சம்பவத்தன்று தனது வீட்டிற்கு அருகில் உள்ள தென்னை மரத்திலிருந்து தேங்காய்கள் விழுந்திருப்பதை அவதானித்துள்ள நிலையில் அதனைச் சேகரித்துக் கொண்டிருந்துள்ளார். இதன்போது தென்னை மரத்திலிருந்த குரங்கு ஒன்று தேங்காய் பறித்துக்கொண்டிருந்துள்ள நிலையில் குரங்கு பறித்த தேங்காய் உயிரிழந்தவரின் தலையில் விழுந்துள்ளது. இதனையடுத்து காயமடைந்தவர் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஏ.ஜி.ஜயசேன என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்…
-
- 0 replies
- 462 views
-
-
குரங்குகளின் கர்ப்பத்தைத் தடுக்க லூப் கருத்தடைகளை பயன்படுத்த நடவடிக்கை பேராதனைப் பல்கலைக்கழக கால்நடை மருத்துவப் பிரிவும் பேராதனை போதனா வைத்தியசாலையும் இணைந்து குரங்குகளின் கர்ப்பத்தைத் தடுப்பதற்காக ‘லூப் கருத்தடை’ எனப்படும் கருப்பையக சாதனத்தை (IUD) அறிமுகப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழக கால்நடை மருத்துவ அறிவியல் துறை பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்துள்ளார்.. IUD என்பது T-வடிவ பிளாஸ்டிக் துண்டு ஆகும், இது கர்ப்பத்தைத் தடுக்க கருப்பையில் வைக்கப்படுகிறது. பெண் குரங்குகளுக்குள் IUD ஐச் செருகுவதற்கான சாத்தியமான வழியைக் கண்டறிய ஒரு சோதனை நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். “குரங்குகளின் கருப்பையின் அளவு மற்றும் கருப்பை வாயில் …
-
- 2 replies
- 459 views
-
-
குரங்குகளின் நடவடிக்கையால்... கிளிநொச்சியில், குளவி கொட்டுக்கு இலக்காகிய... 25 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி! கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) குளவி கொட்டுக்கு இலக்காகிய 25 மாணவர்கள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 11 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று பகல் 1.30 மணியளவில் குரங்குகளின் நடவடிக்கையால் குளவி கூடு கலைந்துள்ளது. இதன் காரணமாக பாடசாலையை விட்டு வெளியேறுகின்ற நேரத்தில் பல மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இதனையடுத்து, அவர்கள் சமூர்த்தி திணைக்களப் பணிப்பாளரின் வாகனத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்…
-
- 0 replies
- 142 views
-
-
அமெரிக்காவின் தேசிய விலங்கியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும்,உரங்குட்டான் என்றழைக்கப்படும். மனிதக் குரங்குகளுக்கு, ஐ பாட் வழங்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தும் இவ்வகை குரங்குகள், விதவிதமான ஒலிகளை இசைத்து மகிழ்கின்றன.இதுகுறித்து, விலங்கியல் பூங்காவின் பாதுகாவலர்பெக்கி மிலன்ஸ்கி கூறியதாவது:மனிதக் குரங்குகளுக்கு வழங்கப்படும் உணவு முறைகளும், அவற்றிற்கு அளிக்கப்படும் பொம்மைகள், மற்றவர்களுடன் பழகும் விதம் ஆகியவற்றை முற்றிலுமாக மாற்றியுள்ளோம். ஐ பாட் கொடுத்துள்ளதன் மூலம், மனிதக் குரங்குகள் பார்வை ஒருமுகப்படுவதுடன், அவற்றின் தொடுதிறன் மற்றும் கேட்கும் திறன் ஆகியவற்றை அதிகரித்துள்ளோம். மனிதக் குரங்குகள், ஐ பாடை பயன்படுத்தும் போது, ஆப்ஸ் என்ற, மென்பொருளைப் பயன்படுத்தி…
-
- 5 replies
- 823 views
-
-
பயிர்செய்கைகளை நாசம் செய்யும் குரங்குகளை பிடித்து கொடுத்தால் ஒரு குரங்குக்கு 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை வழங்கப்படும் என்று அறிவியுங்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட எம்.பி சுஜித் சஞ்சய பெரேரா அரசுக்கு ஆலோசனை வழங்கினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (12) இடம்பெற்ற 2025 வரவு- செலவுத் திட்டத்தின் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலைஆலோசனை வழங்கிய அவர் மேலும் பேசுகையில், காட்டு விலங்குகளினால் பயிர்ச்செய்கைகளுக்கு ஏற்படும் பாதிப்பு நாளாந்தம் தீவிரமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். குரங்குகள் வருடாந்தம் 90 மில்லியன் அளவிலான தேங்காய்களை நாசம் செய்வதாக விவசாயத்துறை அமைச்சு குறிப…
-
-
- 2 replies
- 265 views
- 1 follower
-
-
குரங்குப் பணியாளர்களால் சரியும் தாய்லாந்து சந்தை: இலங்கைக்கு சாதகமா? குரங்குகளை வேலைக்குப் பயன்படுத்துவதால் உலகின் முக்கிய தென்னை சார் உற்பத்தி விநியோகஸ்த்தரான தாய்லாந்திடமிருந்து உற்பத்திகளைக் கொள்வனவு செய்வதை பெரும்பாலான சர்வதேச நிறுவனங்கள் தவிர்த்து வரும் நிலையில் , தனது தென்னை சார் உற்பத்தி ஏற்றுமதியை விரிவுபடுத்தக் கூடிய சந்தர்ப்பத்தை இலங்கை பெற முடியும். PETA அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளைத் தொடர்ந்து, வோல்மார்ட், கோஸ்ட்கோ, டார்கட் அன்ட் க்ரோகர் போன்ற உலகின் முக்கிய விற்பனையாளர்கள், வலுக்கட்டாயமாக குரங்குகளைப் பணியமர்த்துவதாக குற்றஞ்சாட்டப்பட்ட தாய்லாந்தைச் சேர்ந்த சில விநியோகஸ்தர்களிடமிருந்து தேங்காய்பால் உள்ளிட்ட தென்னை சார்ந்த உற்பத்திகளை…
-
- 0 replies
- 243 views
-
-
அனுராதபுரத்திற்கு விஜயம் செய்த சீன சுற்றுலாப்பயணி ஒருவரின் பணப்பையை அபயகிரி சேத்தியா அருகே குரங்கு ஒன்று எடுத்துச் சென்ற போது அவருக்கு அதிர்ச்சியான அனுபவம் ஏற்பட்டது. 50,000 ரூபா பணம் மற்றும் அவரது பாஸ்போர்ட் உள்ளிட்ட பல ஆவணங்கள் அந்த பையினுள் இருந்தன. 48 வயதான சீன சுற்றுலாப் பயணி யுவான் ஷுவாய் மேலும் இருவருடன் அனுராதபுரத்திற்கு விஜயம் செய்திருந்த போது இந்த சம்பவத்தை எதிர்கொண்டார். பையை அபயகிரி கோவில் வாசலில் வைத்துவிட்டு சிறிது நேரத்தில் சேத்தியா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை புகைப்படம் எடுத்துவிட்டு திரும்பிய போது பையை காணவில்லை. இது தொடர்பில் அனுராதபுரம் சுற்றுலா பொலிஸில் முறைப்பாடு செய்த பின் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்தார்கள். குரங்கு ஒன்று பைய…
-
- 2 replies
- 418 views
-
-
குரங்கை வைத்து பேருந்தை ஓட்டிய சாரதி – அதிர்ச்சியடைந்த பயணிகள்! இந்தியாவில் குரங்கை வைத்து பேருந்தை ஓட்டிய சாரதியை பணியிடை நீக்கம் செய்த சம்பவமானது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. பிரகாஷ் என்ற நபர், கர்நாடக மாநிலம் தவங்கரேயில் அரசுக்கு சொந்தமான பேருந்தின் ஓட்டுனராக பணியாற்றி வருகின்றார். இவர் குரங்கை ஒன்றை வளர்த்து வரும் நிலையில், அந்த குரங்கை வீட்டு வேலைகள் செய்யவும், தனக்கு உதவி செய்யவும் பல்வேறு பயிற்சி வழங்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பணிக்குவரும் போதும் அந்த குரங்கை அவ்வப்போது அழைத்து வந்துள்ளார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு பேருந்தின் ஸ்டியரிங் வீல்லின் மீது குரங்கை அமர வைத்து பேருந்தை ஓட்டியுள்ளார். இதன் ப…
-
- 1 reply
- 579 views
-
-
இந்தியாவை சேர்ந்த யூசுப் (38) என்பவர் தனது மனைவி சாராவுடன் (33) பிரிட்டனின் கார்டிப் என்னுமிடத்தில் வசித்து வருகின்றார். இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை கற்கச் சொல்லி மனைவி சாரா தனது மகனை அடித்து வந்திருக்கிறார். குரானை மனப்பாடம் செய்ய இயாலாமல் தவித்த யாசின் மீது கோபமடைந்த சாரா கடந்த 2010-ம் ஆண்டு மிருகத்தனமாக அடித்து இருக்கிறார். இதில் யாசின் இறந்து போயிருக்கிறான். பிறகு யாசின் உடலை மறைக்க எண்ணை ஊற்றி எரித்து புதைத்து இருக்கிறார். இந்த செய்தி காவல் துறையினருக்கு தெரியவர சாரா மீது கார்டிப் கிரௌன் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கோபம் தாங்காமல் குச்சியால் அவனது முதுகில் ஒரு நாயை அடிப்பது போன்று அடித்தேன். இதில் அவன் இறந்துவிட்டான் என்று தீவிர விசாரணை…
-
- 2 replies
- 445 views
-
-
குருநாகல் எரிவாயு விற்பனை நிலையத்தில் தீ விபத்து-நால்வர் உயிரிழப்பு! குருநாகல் வெஹெர பிரதேசத்தில் எரிவாயு விற்பனை நிலையமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு 11 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிவாயு குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1427845
-
- 1 reply
- 137 views
-
-
இந்தியாவில் உள்ள கேரளா மாநிலத்தில் இருக்கும் குருவாயூரப்பன் கிருஷ்ணர் ஆலயத்தில் சடங்கு செய்து தமிழர்களைக் கொன்ற மற்றும் கொல்கின்ற பாவம் தீர்க்கும் சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. (2007/8) செய்த செய்யப்போற பாவங்களுக்கு சனிபகவானிடம் தமிழ்நாட்டில் வைத்துப் பரிகாரம் தேடும் ரணில் விக்கிரமசிங்கா. (ஒரு பக்கம் கலைஞர் ரணிலுக்கு கறுப்புப் பூனைகளும் கொடுத்துக் கொண்டு இன்னொரு பக்கம் சுனாமி காலத்து உழுத்துப் போன அரசியையும் ஈழத்தமிழர்களுக்கு பொதி செய்கிறார்..ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ம்..!)(2008) கொழும்பில் பெளத்த பிக்குகள் தகர்த்த கோவில் சிலைகள்.(2008) கிளிநொச்சியில் முருகன் கோவில் மீது குண்டு வீசிய மகிந்தவின் படைகள். இத்…
-
- 5 replies
- 2.1k views
-
-
சின்னஞ்சிறு குருவி கட்டிய கூடு கலைந்துவிடாமல் இருக்க ஒட்டுமொத்த கிராமத்தினரின் ஒத்துழைப்புடன் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே மறவமங்கலத்தை அடுத்தது பொத்தக்குடி குக்கிராமம். 50 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு சில தெருக்களின் மின்விளக்குகளை ஒளிரவிடும் சுவிட்ச், அங்குள்ள ஒரு மின்கம்பத்தில் பொருத்தி இருந்த பெட்டியின் உள்ளே உள்ளது. மாலையில் சுவிட்ச் போடுவார்கள். விடிந்ததும் ‘ஓப்’ செய்துவிடுவார்கள். கடந்த ஒரு மாதமாக யாரும் சுவிட்ச் போடுவதில்லை. காரணம் சின்னஞ்சிறு குருவிக்கூடு. சுவிட்ச் அமைந்துள்ள பெட்டிக்குள் தஞ்சம் அடைந்திருந்தது, சின்னஞ்சிறு குருவி. அந்த பெட்டிக்குள் முதலில் விருந்தினர் போல் சென்று வந்த அ…
-
- 0 replies
- 581 views
-
-
குரோஷிய ஜனாதிபதி கொலின்டாவுடன் போஸ் கொடுத்தபோது மனித உரிமைகள் குழு தலைவரின் காற்சட்டை கழன்று விழுந்தது குரோஷியாவின் பிரபல மனித உரிமைகள் குழுவின் தலைவர் அந்நாட்டின் ஜனாதிபதி சகிதம் ஊடகவியலாளர்களுக்கு போஸ் கொடுத்துக்கொண்டிருந்தபோது, மேற்படி மனித உரிமைகள் குழுவின் தலைவரின் காற்சட்டை கழன்று விழுந்த சம்பவம் நேற்றுமுன் முன்தினம் இடம்பெற்றது. நேற்றையதினம் அனுஷ்டிக்கப்பட்ட சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, குரோஷியாவின் ஸக்ரெப் நகரில் நடைபெற்ற வைபவமொன்றில் மனித உரிமைகளுக்கான குரோஷிய ஹெல்சிங்கி குழுவின் தலைவர் ஐவன் ஸ்வானிமிர் சிகெக் பங்குபற்றினார். …
-
- 0 replies
- 318 views
-
-
வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கெதிராக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா இனவாதமாக பேசும் நிலையை ஏற்படுத்தியவர்கள் தமிழ் கூட்டமைப்பினரே என ஐக்கிய காங்கிரஸ் கட்சி தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, வடமாகாணத்தில் பௌத்த மதஸ்தலங்களுக்கு சேதம் ஏற்படுத்தினால் அங்குள்ளோரின் தலைகளை களனிக்கு கொண்டு வருவேன் என மேர்வின் கூறியது மிக கடுமையான தவிர்க்க வேண்டிய வார்த்தையாக இருப்பினும் அவரது சமூக அக்கறை என்று பார்க்கும் போது இந்நிலைக்கு அவரை ஆக்கிய தமிழ் அரசியல்வாதிகளே பொறுப்பேற்க வேண்டும். கோட்டாபய ராஜபக்ஷ நாசமாக்கிய நாட்டை ஜனாதி…
-
- 1 reply
- 359 views
-
-
குறி சொன்னபோது கீழே விழுந்து பூசாரி பலி! கோவையில் உள்ள கோயிலொன்றில் பக்தர்களுக்குக் குறி சொல்லிக் கொண்டிருந்தபோது, 20 அடி உயர மரத்திலிருந்து தவறிக் கீழே விழுந்த பூசாரி உயிரிழந்தார். கோவை பேரூரை அடுத்த சுண்டக்காமுத்தூர் பகுதியில் உள்ளது ஸ்ரீ அய்யாசாமி கோயில். மிகவும் பழமையான இந்த கோயிலில் அமாவாசை, பெளர்ணமி உள்ளிட்ட நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். ஆண்டுதோறும் மகா சிவராத்திரியை முன்னிட்டு இரவு பூஜைகள் நடைபெறும். இந்த கோயிலில் அய்யாசாமி என்பவர் பூசாரியாகப் பணியாற்றி வந்தார். இவர் சிவராத்திரியன்று நள்ளிரவில் மைதானத்தில் அமைக்கப்பட்ட 20 அடி உயர மரத்தின் மீது அமர்ந்து கொண்டு குறி சொல்வார். கடந்த 4ஆம் தேதியன்று அது போன்று பூஜை செய்யப்பட்ட மரத்தின் மீது …
-
- 1 reply
- 2.4k views
-
-
-
11 JUL, 2024 | 12:19 PM பிபிசியின் ஊடகவியலாளர் (வர்ணணையாளர்) ஒருவரின் மனைவியும் இரண்டு மகள்களும் குறுக்கு வில்லைப் பயன்படுத்தி கொல்லப்பட்ட சம்பவம் பிரிட்டனில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹேர்ட்போர்சையரில் உள்ள புசே என்ற பகுதியில் அவர்களது வீட்டிற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிபிசியின் ஊடகவியலாளர் ஜோன் ஹன்ட் தனது வீட்டிற்கு சென்றவேளை தனது மனைவியும் இரண்டு பிள்ளைகளும் தாக்குதலில் காயமடைந்த நிலையில் உயிருக்காக போராடிக்கொண்டிருந்ததை அவதானித்துள்ளார். அவர்கள் காயங்கள் காரணமாக உயிரிழந்துள்ளனர். அவர்கள் குறுக்கு வில் தாக்குதலினால் கொல்லப்பட்டிருக்கலாம் என பொல…
-
- 0 replies
- 254 views
- 1 follower
-
-
குறுஞ்செய்திகளை அலட்சியம் செய்த கணவனை விவாகரத்து செய்த மனைவி! படத்தின் காப்புரிமைREUTERS உங்கள் வாழ்க்கைத்துணையின் குறுஞ்செய்திகளை அலட்சியப்படுத்துபவரா நீங்கள்? எச்சரிக்கை! அது நீதிமன்றத்தில் உங்களுக்கு எதிரான சாட்சியாக மாறலாம். தான் அனுப்பிய குறுஞ்செய்திகளை கணவன் படிக்காததை ஆதாரமாக காட்டி, கணவன் தன்னை உதாசீனப்படுத்தனார் என்பதை நிரூபித்து விவாகரத்து பெற்றார் தாய்வானைச் சேர்ந்த ஒரு பெண். குறுஞ்செய்திகளை கணவர் திறந்து பார்த்ததை 'லைன்' செயலி காட்டினாலும், அவர் பதில் அனுப்பவில்லை என்பதையும் காட்டிக் கொடுத்துவிட்டது. மனைவிடம் கணவர் அலட்சியமாக நடந்துகொண்டதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விவாகத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். …
-
- 0 replies
- 223 views
-
-
ஐரோப்பாவில் மிகவும் குறைந்த வயதில் கொரோனா நோய்த் தொற்றால் இறந்த முதல் பெண்ணாக பிரான்சைச் சேர்ந்த பதினாறு வயதான Julie (16) அறியப்பட்டிருக்கிறாள். “உடல் ரீதியாக Julie எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் இருந்தாள். முதலில் சாதாரண இருமல்தான் அவளிடம் இருந்தது. கடந்த வார இறுதியில் அவளின் நிலைமை மோசமடைந்ததால் திங்கட்கிழமை (23.03.2020) அவளை மருத்துவரிடம் அழைத்துச் சென்றோம். மருத்துவரின் ஆலோசனையின்படி அவளை பாரிஸுக்கு அருகாமையில் உள்ள Longjumeau நகர மருத்துவமனையில் சேர்த்தோம். அவளது நிலை மோசமாக இருந்ததால் அவளை உடனடியாக Paris நகரத்தில் உள்ள Necker வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றார்கள். அங்கு வைத்தியர்கள் மேற்கொண்ட அதீத முயற்சி பலனளிக்காமல் Julie புதன்கிழமை இரவு மரணமடைந்து விட்டாள். …
-
- 0 replies
- 291 views
-
-
குறைந்த விலைக்கு பாலை விற்று விட்டு அதிகூடிய விலைக்கு பால்மாவை நுகரும் மக்கள் குறைந்த விலைக்கு பாலை விற்று விட்டு அதிகூடிய விலைக்கு பால்மாவை நுகரும் மக்கள் வடமாகாணத்திலிருந்து பல்லாயிரம் லீற்றர் கணக்கான பாலை நாளாந்தம் ஏற்றி தென்னிலங்கைக்கு அனுப்புகிறோம். அதிலும் வன்னி பெருநிலப்பரப்பில் இருந்து தான் அதிகளவு பால் செல்கிறது. மறுபுறம் வன்னிப் பெருநிலப்பரப்பில் தான் போசாக்கு குறைபாட்டால் பாதிக்கப்பட்ட அதிகளவு குழந்தைகள் இருக்கிறார்கள். குறைந்த விலைக்கு பாலை விற்று விட்டு அதி கூடிய விலைக்கு பால்மா பைக்கற்றுக்களை வாங்கி நுகர்கிறோம். தமிழ்நாட்டில் பாலை அரச நிறுவனமான ஆவினும் ஏனைய தனியார் நிறுவனங்களும் காலை 6 மணிக்கு முன்னமே மக்களின் வீட்டு வாசல்களில் சேர்க்கும் வே…
-
- 1 reply
- 677 views
-
-
குறைபாடுடைய மாணவர்களுக்குள் மலர்ந்த காதல்: மனதை வருடும் காட்சி (வீடியோ இணைப்பு) [ புதன்கிழமை, 27 மே 2015, 02:25.26 பி.ப GMT ] நியூயோர்க்கில் டவுண் சிண்ட்ரோம் என்ற குறைபாடுடைய இளம் காதலர்கள் டேட்டிங் செல்லும் வீடியோ இணையதளத்தில் வெகுவாக பரவி வருகிறது. தட்டையான முகம், சரிவான நெற்றி, கண்கள் மேல்நோக்கிச் சாய்ந்திருத்தல், தட்டையான சிறிய மூக்கு போன்ற அடையாளங்களுடன் இருப்பவர்கள் டவுண் சிண்ட்ரோம் குறைபாடுடையவர் ஆவர். மேலும், தலை, காது, வாய் போன்ற உறுப்புகள் வழக்கத்தைவிட சிறிதாக இருக்கும். காதுகள் வளைந்தும், நாக்கு துருத்திக்கொண்டும் காணப்படும். "டவுன் சிண்ட்ரோம்" குறைபாடுள்ள குழந்தைகளின் அறிவுத்திறன் மற்ற குழந்தைகளைப்போல் முறையாக வளர்ச்சியடைவதில்லை. …
-
- 0 replies
- 377 views
-
-
குலுக்கலில் பரிசு விழுந்திருப்பதாக கூறி ரூ.14 லட்சம் மோசடி - அர்ச்சகரை ஏமாற்றிய மூவர் கைது பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் கோவில்பட்டி அருகே குலுக்கல் முறையில் பைக், கார் பரிசு என ஆசை காட்டி கோவில் அர்ச்சகரிடம் 14 லட்ச ரூபாய் மோசடி செய்த கும்பலில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூரணி பகுதியைச் சேர்ந்த ராமசாமி மகன் ராமசுந்தரம் (40) என்பவர் கோவில்பட்டியில் உள்ள 4 கோவில்களில் அர்ச்சகராக இருந்து வருகிறார். அவர் துபாயிலும் பணிபுரிந்துள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு இலுப்பையூரனி பகுதிக்கு ஆம்னி வேனில் வந்த நபர்கள் கு…
-
- 0 replies
- 555 views
- 1 follower
-
-
-மு.இராமச்சந்திரன் டிக்கோயா, சாஞ்சிமலை தோட்ட முகாமையாளரின் பங்களாவில் வளர்க்கப்பட்ட கோவேறு கழுதை, குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் பலியாகியுள்ளதாக அந்த தோட்டத்தின் முகாமையாளர் தெரிவித்தார். இதேவேளை, குளவி கொட்டியதால் பாதிக்கப்பட்ட முகாமையாளரின் சாரதி, சமையற்காரர் மற்றும் காவலாளி உட்பட நான்கு பேரே குளவி கொட்டுக்கு இலக்காகி டிக்கோயா போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குளவி கொட்டுக்கு இலக்காகிய கோவேறு கழுதை பங்களாவை விட்டு வெளியில் ஓடியுள்ளது. அந்த கழுதை நேற்றுவரை பங்களாவுக்கு திரும்பவில்லை. இந்நிலையிலேயே அந்த கோவேறு கழுதை இறந்துகிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது என்றும் முகாமையாளர் தெரிவித்தார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/…
-
- 1 reply
- 579 views
-
-
குளிக்காமல் 50 ஆண்டுகளுக்கு மேல் இருந்த இரான் தாத்தா அமோ ஹாஜி 94 வயதில் மரணம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP ''உலகிலேயே அழுக்கான மனிதர்'' என்று ஊடகங்களால் கூறப்பட்ட ஓர் இரானிய தாத்தா தமது 94 வயதில் மரணமடைந்துள்ளார். பல்லாண்டுகளாக குளிக்காமல் இருந்த இவர் குளித்த சில மாதங்களிலேயே இறந்துள்ளார். மனிதர்கள் யாருடனும் தொடர்பில் இல்லாமல் தனியாக வசித்து வந்த அமோ ஹாஜி எனும் இவர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக குளிக்காமல் இருந்தார். குளிப்பது தமது உடல்நலத்தை பாதிக்கும் என்று அமோ ஹாஜி கருதியதால், அதைத் தொடர்ந்து தவிர்த்து வந்தார். இரானின் ஃபார்ஸ் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்த அமோ …
-
- 2 replies
- 262 views
- 1 follower
-
-
குளிப்பதற்கு ஒரு ஆடை . Saturday, 27 September, 2008 01:42 PM . சிட்னி, செப். 27: வீட்டில் இருக்கும் போது, வெளியே செல்லும் போது, அலுவலகம் செல்லும் போது, விருந்துக்கு செல்லும் போது என ஒவ்வொரு தருணத்திற்கும் ஏற்ற பிரத்தேக ஆடைகள் இருப்பது போல, சிட்னியில் குளிப்பதற்கு என்று ஒரு ஆடையை அறிமுகம் செய்துள்ளனர். . ஆஸ்திரேலிய நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த ஆடையை அணிந்து கொண்டு குளிக்கலாமாம். பின்னர் இந்த ஆடையை உலர்த்தி காயவைத்து அப்படியே பயன்படுத்தலாமாம். ஆடையை தனியே துவைக்க வேண்டிய அவசியமில்லை. பரபரப்பாக இயங்கி கொண்டு இருக்கும் பிரபலங்கள் அணிந்து கொள்ள வசதியாக இந்த ஆடையை அறிமுகம் செய்துள்ளனராம். malaisudar.com
-
- 15 replies
- 3k views
-