செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7087 topics in this forum
-
ஒபாமாவிற்கே சவால் விட்ட மகிந்தவின் வட்டச் செயலாளர்…. July 19, 20159:22 am சில தினங்களின் முன்னர் அநுராதபுரத்தில் ஆரம்பித்த மகிந்தவ ஆதரவு அணியின் முதலாவது பிரசார கூட்டத்தில் உள்ளூரில் உள்ள எதிரணியினர் தொடக்கம் அமெரிக்காவிலுள்ள பராக் ஒபாமா வரை அனைவரிற்கும் சாவல் விடுத்த சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. மகிந்தவின் வெற்றியை ரணில் மட்டுமல்ல ஒபாமா கூட தடுக்க முடியாதென கூறி கிச்சுகிச்சு மூட்டியுள்ளார் உதய கம்மன்பில. அங்கு உரையாற்றிய கம்மன்பில – ‘ஜனாதிபதியின் உடலில் பச்சை இரத்தம்தான் ஓடுகிறதென்ற சந்தேகம் கடந்த ஜனவரியிலேயே எனக்கு ஏற்பட்டு விட்டது. அது அண்மைய உரையின் மூலம் உறுதியாகிவிட்டது. ஜனாதிபதியின் உரையுடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பினர் ஓரணிக்கு வந்துவிட்டனர். எம்ம…
-
- 1 reply
- 228 views
-
-
உலக முழுதும் பரவி வரும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த கொரோனா நோய்த் தொற்றால் பல தொழில்களும் முடங்கிப்போய் உள்ளது. கடந்த சில நாட்களாக வெளிநாடுகளில் படமாக்கப்பட வேண்டிய பல படங்களின் படப்பிடிப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பல ஹாலிவுட் படங்களில் ரிலீஸ் தேதிகள் தள்ளிப்போய் இருக்கின்றன. இதன் உச்சமாக கொரோனா வைரஸ் அச்சம் காரணமாகக் கேரளாவில் திரைப்படங்களின் ரிலீஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் வாரங்களில் திரைப்படங்கள் எதுவும் வெளியாகாது எனவும் மேலும் மார்ச் 31ம் தேதி வரை திரையரங்குகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க இந்திய …
-
- 1 reply
- 766 views
-
-
சிங்கப்பூரிலிருந்து ஷாங்காய் சென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அதன் இரு என்ஜின்களும் தற்காலிகமாக செயலிழந்தது. எனினும் விமானியின் சாமர்த்தியமான செயல்பாட்டால் பயணிகள் அனைவரும் பத்திரமாக ஷாங்காய் வந்து சேர்ந்தனர். ஏர் பஸ் ஏ.330-300 என்ற அந்த விமானம் கடந்த சனிக்கிழமையன்று சாங்கி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு வானில் பறந்துகொண்டிருந்தது. ஏறத்தாழ 3.5 மணி நேரம் வானில் பயணித்த நிலையில், மோசமான வானிலை காரணமாக திடீரென விமானத்தின் இரு என்ஜின்களும் மின்சக்தியை இழந்தன. அப்போது விமானம் 39000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. எனினும் செயல்பாட்டு வழிமுறைகளை திறமையாக கையாண்ட விமானி, விரைவில் இரு என்ஜின்களையும் வழக்கமான செயல்பாட்டுக்கு கொண்டுவந்…
-
- 1 reply
- 310 views
-
-
சஹாரா பாலைவனத்தில் 50 ஆண்டுகளின் பின் வெள்ளம்! October 12, 2024 ஆப்பிரிக்க கண்டத்தில் மொராக்கோவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள சஹாரா பாலைவனத்தில் அண்மையில் அங்கு பெய்த திடீர் மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது, இந்த திடீர் கனமழையால் சஹாரா பாலைவனத்தில் உள்ள இரிக்கி என்ற வறண்ட ஏரியில் நீர் நிரம்பியுள்ளது. திடீர் மழை வெள்ளத்தால் நிரம்பிய இரிக்கி ஏரியின் காட்சிகளை நாசா வெளியிட்டுள்ளது. தலைநகர் ரபாட்டாவில் இருந்து 450 கிமீ தொலைவில் உள்ள டாகோயுனைட் கிராமத்தில் பெய்த கனமழையால் இந்த வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அங்கு 24 மணி நேரத்தில் 100 மி.மீ மழைப் பொழிவு பதிவாக…
-
- 1 reply
- 482 views
-
-
ஈராக்கில் பெண்களின் திருமண வயதெல்லையை 9 ஆகக் குறைக்கத் தீர்மானம்! ஈராக்கில் பெண்களின் திருமண வயதெல்லையை 18 இலிருந்து 9 ஆகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் பெண்கள் அமைப்பினர், சமூக அமைப்பனர் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றன. மேற்காசிய நாடான ஈராக் நாடாளுமன்றத்தில், ஷியா முஸ்லீம் பழமைவாத குழுவினர் பெரும்பான்மை வகிக்கின்றனர். முகமது ஷியா அல் சுடானி பிரதமராக உள்ள அந்த நாட்டில், பெண்களுக்கான திருமண வயது வரம்பு 18 ஆக உள்ளது. கடந்த 1950 ஆம் ஆண்டில் குழந்தை திருமணம் அங்கு தடை செய்யப்பட்டாலும், 28 வீத பெண்கள் 18 வயதுக்கு முன்பாகவே திருமணம் செய்து கொள்வதாக 2023 ஆம் ஆண்டுக்கான ஐ.நா., ஆய…
-
- 1 reply
- 377 views
- 1 follower
-
-
டைட்டானிக் கப்பலின் 5000 பொருட்கள் ஏலம் நியூயார்க்: உலகின் பிரம்மாண்டமான சொகுசுக்கப்பலான டைட்டானிக் கப்பலில் இருந்த அரிய பொருட்கள் ஏலம் விடப்பட உள்ளது. அட்லாண்டிக் கடலில் மூழ்கியதன் நூறு ஆண்டு நிறைவு அனுஷ்டிக்கும் விதமாக இந்த ஏலம் நடைபெற உள்ளது. இங்கிலாந்தின் சவுத்தம்ப்டான் பகுதியில் இருந்து கடந்த 1912ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி டைட்டானிக் சொகுசு கப்பல் நியூயார்க் நோக்கி தனது பயணத்தை துவக்கியது. உலகிலேயே அப்போது மிகப்பெரிய சொகுசு கப்பல் இதுதான். கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை பல தனியார் நிறுவனங்கள் ஆய்வு செய்தன. அதில் இருந்து பல அரிய பொருட்களை மீட்டு வந்தன. இந்நிலையில், கப்பலில் கிடைத்த மிகச்சிறிய ஹேர்பின் முதல் கப்பலின் உடைந்த இரும்பு பாகங்கள் வரை 5,000 அரிய ப…
-
- 1 reply
- 561 views
-
-
தாய்லாந்தின் கான்சானபுரி மாகாணத்திலுள்ள சர்ச்சைக்குரிய புத்த கோவிலிருந்து 137 புலிகளை அகற்றிவிட டஜன்கணக்கான அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இந்த புலி கோவிலிலுள்ள புலிகளை பிடிப்பதற்கு மயக்க ஊசிகளை துப்பாக்கியில் வைத்து பயன்படுத்த கால்நடை மருத்துவர்கள் தயாராகி வருகிறார்கள்.அவற்றை பிடித்து அருகிலுள்ள வனவிலங்கு சரணாலயத்தில் விடவுள்ளனர்.கூண்டிலிருக்கும் புலிகளோடு புகைப்பட எடுத்துக்கொள்ளவும், அவைகளைக் கயிற்றால் கட்டி அவைகளுடன் சுற்றுலாப் பயணிகள் நடக்கவும் அனுமதித்ததன் மூலம் ஆண்டுக்கு ஐந்து மில்லியன் அமெரிக்க டாலருக்கு மேலான வருமானத்தை இந்த கோவில் ஈட்டி வந்தது. விலங்குகளின் பாகங்களை கடத்துவதாகவும், புலிகளை பிரம்பால் அடித்தும், குறுகிய சங்க…
-
- 1 reply
- 488 views
-
-
அஷ்வினி சிவலிங்கம் வயலில் ஏர் கலப்பையை விட்டுவிட்டு சேற்றில் `கிகி சேலஞ்ச்’ செய்து உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டனர் நம் இந்திய விவசாய இளைஞர்கள். ஓடும் காரிலிருந்து இறங்கி, Kiki, do you love me? Are you riding? என்ற வரிகளைப் பாடிக்கொண்டே சாலையில் நடனம் ஆடும் `விபரீதம்’ தான் `கிகி சேலஞ்ச்’. கனடாவின் பிரபல `ராப்’ பாடகர் டிரேக் கிரஹாமின் `In My Feelings' பாடலை வைத்துத்தான் இந்த விபரீத சேலஞ்ச் தொடங்கியது. இதை ஆரம்பித்தவர் அமெரிக்க காமெடி நடிகர் ஷிக்கி.உலகம் முழுவதும் வைரலான இந்த `கிகி சேலஞ்ச்’. இந்தியாவுக்குள்ளும் ஊடுருவியது. கடந்த சில வாரங்களாக இந்தியர்களும் கிகி சேலஞ்ச் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். `கிகி சேலஞ…
-
- 1 reply
- 512 views
-
-
-
- 1 reply
- 326 views
-
-
இந்தியாவில் விரைவில் பீர் விலை தாறுமாறாக உயரும்.. என்ன காரணம் தெரியுமா..?! வெயில் காலம் நெருங்கி வரும் வேளையில் இந்தியாவில் அனைத்து மாநிலத்திலும் பீர் விற்பனை அதிகரிக்கும் நிலையில், பீர் நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை அதிகரிப்பதில் புதிய தடையை எதிர்கொண்டு உள்ளது. இதற்குக் காரணம் ரஷ்யா - உக்ரைன் போர் பதற்றம் தான் என்றால் உங்களால் நம்ப முடியுமா.. ஆனால் அதுதான் உண்மை. விளாடிமிர் புடின் தலைமையிலான ரஷ்யா ஏற்கனவே உக்ரைன் நாட்டின் இரு பகுதிகளை எவ்விதமான போர் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தாமல் கைப்பற்றியுள்ள நிலையில், மீண்டும் போரை தொடுத்துள்ளது பார்லி உற்பத்தி உலகின் டாப் 5 பார்லி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நாடுகளில் உக்ரைன் முக்கிய இடத்தை வகி…
-
- 1 reply
- 345 views
-
-
நாகரீகம், விஞ்ஞான வளர்ச்சி என்ற பெயரில் மனித இனம் பல்வேறு துறைகளில் புதுப்புது வளர்ச்சியை அடைந்து வந்துள்ளது. ஏன் இன்னும் பல அபரிமிதமான வளர்ச்சியையும் சமூகம் காணப்போகிறது. இதில் ஒரு பாதகமான செயல்பாடு எதுவென்றால் ஒவ்வொரு பொருட்களின் கண்டுபிடிப்புகளுக்குப் பின்பும், அப்பொருளின் பயன்பாட்டுக்குப் பின்பும் ஒரு தீய விளைவை மனித இனம் இந்த பூமிக்குக் கொடுத்துக் கொண்டே வந்திருக்கிறது என்றால் அது மிகையாகாது. அந்த வகையில் இன்று நாம் நெகிழி என்று தமிழில் அழைக்கப்படும் பிளாஸ்டிக் இல்லாத தினசரி வாழ்க்கையை மக்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு இதனைப் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இதனை எதிர்த்து உலகெங்கும் ஒரு எதிர்ப்புக்குரல் ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. “பிளாஸ்டிக்கை ஒழிப்போம்” என்ற…
-
- 1 reply
- 11.3k views
-
-
நன்றி: http://www.bbc.co.uk...gazine-17429786
-
- 1 reply
- 743 views
-
-
உலக சாதனை படைத்த பூசணிக்காய் படகு! (வீடியோ) அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தைச் சேர்ந்த கேரி கிறிஸ்டென்சன் என்பவர் இராட்சத பூசனிக்காய் படகில் பயணம் செய்து உலக சாதனை படைத்துள்ளார். 46 வயதான அவர் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் தனது தோட்டத்தில் இராட்சத பூசணிக்காய்களை வளர்த்து வருகிறார். அதன்படி இந்த ஆண்டு சுமார் 500 கிலோ எடை கொண்ட பூசணிக்காய் ஒன்றை வளர்த்த அவர் கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் குறித்த பூசனியை படகாக மாற்றியுள்ளார். அதன் பின்னர் குறித்த படகினைப் பயன்படுத்தி கொலம்பியா ஆற்றில் சுமார் 73 கிலோ மீட்டர் தூரம் பயணித்துள்ளார். அதன்படி போன்வில்லே நகரில் இருந்து வான்கூவர் வரை 73 கிலோ மீற்றர் தூரத்துக்கு அவர் அந்த படகில் பயணித்துள்ளார். 26 மணி நேர…
-
-
- 1 reply
- 160 views
- 1 follower
-
-
13 APR, 2025 | 10:38 AM யாழ். ஆலடி உடுவில் மானிப்பாய் பகுதியில் பிறந்து இருபத்தியொரு நாட்களேயான பெண் சிசுவொன்று எறும்புக் கடிக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளது. மேற்குறித்த பகுதியைச் சேர்ந்த தம்பதியினருக்கு கடந்த 22 ஆம் திகதி பெண் சிசு பிறந்துள்ளது. குறித்த சிசுவிற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் எறும்பு கடித்த நிலையில் அதனை பெற்றோர் கவனிக்காமல் விட்டதன் காரணமாக சனிக்கிழமை (12) அதிகாலை பால் குடித்த சிசு மயக்கமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர். அங்கு சிசு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. உடற்கூற்று பரிசோதனையில், எறும்பு கடித்ததன் காரணமாக கிருமி தொற்று ஏற்பட்டு உடற்கூறுகளின் செல்கள் செயலிழந்தமையால் மரணம் சம்பவித்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. https:/…
-
- 1 reply
- 189 views
- 1 follower
-
-
டெல்டா எயார்லைன்ஸ் நிறுவன விமானமொன்றை முதல் தடவையாக கறுப்பின பெண்கள் இருவர் இணைந்து செலுத்தினர் அமெரிக்காவின் டெல்டா எயார்லைன்ஸ் நிறுவனத்தின் விமானமொன்றில் முதல் தடவையாக கறுப்பின பெண்கள் இருவர் தலைமை விமானியாகவும் துணை விமானியாகவும் பணியாற்றி புதிய வரலாறு படைத்துள்ளனர். ஸ்டெபானி ஜோன்சன் எனும் தலைமை விமானியும், டோன் குக் எனும் துணை விமானியுமே இப் பெண்களாவர். கடந்த ஞாயிறன்று இவர்கள் முதல் தடவையாக இணைந்து விமானமொன்றை செலுத்தினர். டெல்டா எயார்லைன்ஸ் விமானமொன்றை கறுப்பினப் பெண்கள் இருவர் செலுத்திச் சென்றமை இதுவே முதல் தடவையாகும் http://metronews.lk/?p=2900
-
- 1 reply
- 220 views
-
-
சீனாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 11 வயது சிறுவன், மருத்துவமனையில் சிகிச்சைக்கு பலனின்று இறந்தவுடன் அந்த சிறுவனுக்கு அந்த மருத்துவமனையில் இருந்த டாக்டர்கள் அனைவரும் சிறுவனது இறந்த உடலுக்கு முன் நின்று தலை வணங்கினர். குறித்த சிறுவன் இறப்பதற்கு முன் தனது உடலில் உள்ள அனைத்து பாகங்களையும் தானமாக கொடுத்து அதன்மூலம் பல உயிர்கள் வாழ்வதற்கு காரணமாக இருந்தமையினாலேயே டாக்டர்கள் தலைவணங்கி மரியாதை செய்துள்ளனர். சீனாவில் உள்ள சென்லேன் என்ற பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுவன் லியாங் யாவோயி புற்று நோயால் பாதிக்கப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் கடந்த ஜூன மாதம் 6ஆம் திகதி அனுமதிக்கப்பட்டான். அவனுடைய உடல் நிலையை ஆய்வு செய்த டாக்டர்கள், நோய் மிகவும் முற்றிவிட்டதாகவும்,…
-
- 1 reply
- 444 views
-
-
யுஎஸ்- ரெக்சசில் ஜோன் மில்க்கோவிஷ் என்பவர் 1968-ல் தனது தோட்டத்தை மீளமைப்பு செய்ய ஆரம்பித்த போது தனது வீட்டை 50,000 பியர் குவளைகளை கொண்டு அமைத்தார். 10-வருடங்களிற்கு முன்னர் ஒரு இலாப நோக்கற்ற உள் ஊர் அமைப்பொன்று இதனை புனரமைத்தது. இந்த வீடு தற்சமயம் பொதுமக்களிற்காக திறந்து வைக்கப்பட்டு ஹியுஸ்ரனின் மிகவும் வழக்கத்திற்கு மாறான சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் ஒரு இடமாக வந்துள்ளது. ஹியுஸ்ரனில் ஒரு சாதாரண வீதியில் அமைந்துள்ள இந்த வீடு ஒரு அசாதாரண வீடாக எழுந்து நிற்கின்றது. வீட்டின் சுவர்களிற்கு 18-மாதங்களிற்கும் மேலாக பியர் குவளைகளை வெட்டியதாக திரு.மில்க்கோவிஷ் தெரிவித்தார். தான் தன் மனைவி மேரி மற்றும் அவர்களது நண்பர்கள் குடித்த பியர் கான்களையே பாவித்ததாகவும் கூறினார். …
-
- 1 reply
- 398 views
-
-
மாறும் மென்பானங்கள் புற்றுநோய் வர காரணமாக இருக்கக்கூடும் எனக்கருத்தப்படுவது -கார்சிநோஜன் - 4-methylimidazole, also known as 4-MI or 4-MEI . இது மென்பானங்களான கோலாக்களில் காணப்படுவதாக குற்றச்சாட்டப்பட்டு வருகின்றது. இப்பொழுது மென்பானங்களுக்கு ஒரு வித மண்ணிறத்தை தரும் இந்த பொருளுக்கு பதிலாக வேறு பொருளை அறிமுகப்படுத்த உள்ளார்கள். இதனால் மென்பானங்களின் நிறமோ இல்லை சுவையோ பாதிக்கப்படமாட்டாது எனக்கூறப்படுகின்றது. Coke changes colour process to avoid being slapped with cancer sticker http://www.thestar.c...-cancer-sticker
-
- 1 reply
- 512 views
-
-
பொருளாதார வசதிகளில் பின் தங்கியிருக்கும் குடும்பங்களில் உள்ள பிள்ளைகளை மகிழ்விப்பதற்காக வருடம் தோறும் கிறி்ஸ்மஸ் பண்டிகையின் போது அவர்களுக்கு விருப்பமான பொருட்களை அனுப்பி வைப்பது தான் Santa Claus & Co. KG Factory. யேர்மனியில் Aachen நகரில் இருக்கும் இந்த நிறுவனம் 1000 சதுர மீற்றர் பரப்பளவிலான ஒரு ஹோலில் பிள்ளைகளுக்கான பல பொருட்களை சேகரித்து வைத்திருக்கிறது. வருடம் தோறும் கிறிஸ்மஸ் நேரத்தில் சிறுவர் சிறுமிகள் தங்களுக்கு விருப்பமானவற்றை பட்டியலிட்டு அந்த நிறுவனத்து அனுப்பி வைப்பார்கள். Santa Claus & Co நிறுவனத்தினரும் தங்களால் முடிந்தளவு அந்தப் பிள்ளைகளின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வார்கள். பிள்ளைகளும் தங்களுக்கு கிறிஸ்மஸ் தாத்தாதான் பரிசுகளை அனுப்பி …
-
- 1 reply
- 244 views
-
-
இந்நாட்டின் போக்குவரத்துத் துறையில் அதிவேகப் பாதைகள் இணைந்த பின்னர் அத்துறை மிகவும் வளர்ச்சியடைந்துள்ளதை காணக் கூடியதாகவுள்ளது. கொழும்பு நகரை மையமாகக் கொண்டு தூண்களின் மேல் விரியும் பாதை தொகுதியொன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலைமையில் இலங்கையின் பிரதான நகரமான கொழும்பு நகரில் முன்னைய காலங்களில் மேற்கொள்ளப்பட்ட போக்குவரத்து முறைகள் பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். கொழும்பு நகரில் இற்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பிரதான போக்குவரத்து ஊடகம் குதிரை வண்டியாகும். அதன் பாவனை பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கும் பிரபுக்களுக்கும் உரிய ஒன்றாகவே காணப்பட்டது. இந்த வண்டிகளில் கட்டப்பட்ட குதிரைகளின் எண்ணிக்கை ஒவ்வொரு சமூக மட்டத்தினருக்கும் மாறுபட்டுக் க…
-
- 1 reply
- 542 views
-
-
உடல் நிறை அதிகரித்ததால் கொலைக் குற்றவாளி விடுதலை! உடல் நிறை அதிகரித்ததால் கொலைக் குற்றவாளி ஒருவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சம்பவம் இத்தாலியில் இடம்பெற்றுள்ளது. திமித்ரி ஃபிரிகேனோ என்பவரே கடந்த 2017 ஆம் ஆண்டு தனது காதலியை 57 முறைகள் கத்தியால் குத்தி கொலை செய்த குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சிறையில் இருந்தபோது அவரது உடல் எடை நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அந்தவகையில் ஆரம்பத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு 120 கிலோவாக இருந்த திமித்ரியின் உடல் எடை கடந்த ஒரே ஆண்டில் 200 கிலோகிராமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் உடல் எடையை குறை…
-
- 1 reply
- 361 views
-
-
இப்போதைய நியூசிலாந்து பகுதியில் 1 கோடியே 90 லட்சம் ஆண்டுகளுக்கு முன் கிளியின் உயரம் மனிதனின் உயரத்தில் பாதி இருந்தது என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும் என்கிறது ஓர் ஆய்வு. அந்த காலக்கட்டத்தில் கிளி ஒரு மீட்டர் உயரத்தில் இருந்திருக்கிறது. அதாவது மூன்று அடி மூன்று அங்குலம் உயரத்தில் இருந்திருக்கிறது. நியூசிலாந்தின் தெற்கு ஒடாகோ பகுதியில், பல மில்லியன் ஆண்டுளுக்கு முன்பு வாழ்ந்த அந்தக் கிளியின் சிதிலங்கள் கிடைத்துள்ளன. இந்தக் கிளியின் எடையை கருத்தில் கொண்டால், இந்த கிளி மாமிச உண்ணியாகவும், பறக்கும் திறனற்றதாகவும் இருந்திருக்கிறது. இந்தப் பறவை குறித்த ஆய்வின் முடிவானது பயாலஜி லெட்டர்ஸ் எனும் அறிவியல் சஞ்சிகையில் பிரசுரமாகி உள்ளது. ஏழு கிலோ எடைக்கு …
-
- 1 reply
- 829 views
-
-
அநாதையான முதியவருக்கு இறுதிக்கிரியை நடத்திய இளைஞர்கள் -குணசேகரன் சுரேன் இணுவில் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் வசித்து வந்த முதியவர் ஒருவரின் இறுதிக்கிரியைகளை, அந்த பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) நடத்தியுள்ளனர். புலோலியூரைச் சேர்ந்த மேற்படி முதியவர், கடந்த 20 வருடங்களாக இணுவில் கந்தசுவாமி ஆலயத்தில் வசித்து வந்துள்ளார். அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் அவரை, அடியவர் என புனைப்பெயர் கொண்டு அழைத்து வந்தனர். அவருக்கு தேவையான உடை மற்றும் உணவுகளை இளைஞர்கள் சுழற்சி முறையில் வழங்கி வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் நோய் வாய்ப்பட்ட முதியவரை, இளைஞர்கள் ஒன…
-
- 1 reply
- 361 views
-
-
நாய்க் கடிக்கு இலக்கான சிறுவனும் பெண்ணும் பலி! நாய் கடிக்கு இலக்கான சிறுவன் (15-வயது) ஒருவனும் தாய் (39-வயது) ஒருவரும் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாத காரணத்தினால் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் – சங்கரத்தை, வட்டுக்கோட்டையை சேர்ந்த தவச்செல்வன் தர்சன் என்ற சிறுவன் சில வாரங்களுக்கு முன்னர் நாய்க்கடிக்கு இலக்காகியுள்ளான். எனினும் அது தொடர்பில் சிறுவன் தமது வீட்டில் தெரிவிக்கவோ தடுப்பூசி போடவோ இல்லை. இந்நிலையில் நேற்று (22) இரவு சிறுவன் பதட்டமாகவும் பயமாகவும் உள்ளது என்றும் சுவாச பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இன்று (23) அதிகாலை உயிரிழந்துள்ளான். இதேவேளை மன்னார் – தா…
-
- 1 reply
- 575 views
-
-
வட அமெரிக்கா பூராகவும் நகர்ப்புற மற்றும் கிராமபுற பகுதிகளிலும் சப்பாத்து மரங்கள் பரவலாக காணப்படுகின்றன.தற்சமயம் இப்போக்கு ஐரோப்பிய நாடுகளிலம் பரவி வருகின்றதென கூறப்படுகின்றது.குறைந்தது நூறு ஆண்டுகளிற்கு மேலாக சப்பாத்து மரங்கள் என அழைக்கப்படும் இவை பழக்கத்தில் இருந்து வருகின்றன. இவை நிலைத்து நிற்பதற்கு பல கோட்பாடுகள் உள்ளன.சோடி சப்பாத்துக்களை மரத்தில் எறிவதை சிலர் நம்புகின்றனர். சில சந்தர்ப்பங்களில் மேல்நிலையில் உள்ள மின் கம்பிகள் மீதும் எறிகின்றனர். சேவையில் இருந்து விலகும் போது போர்வீரர்கள் தங்கள் சப்பாத்துக்களை மின்கம்பிகள் மேல் வீசி சென்றனர் என்றும் இதிலிருந்து இந்த முறை ஆரம்பித்ததெனவும் கூறப்படுகின்றது. தங்கள் சேவைக்காலம் முடிவடைகின்றதன் அடையாளமாக அவர்களது முகாம்களிற்…
-
- 1 reply
- 287 views
-